
இடம் : விஜய் Tv Studio..,
தமிழ்மணம் Top 20 பதிவர்கள் லிஸ்ட்ல
நமக்கு 8வது இடம் கிடைச்சாதால
' காபி வித் அனு ' நிகழ்ச்சியில கலந்துக்க
கூப்பிட்டு இருந்தாங்க..
நடு டிஸ்கி : இங்கே ' அனு ' என்பது
VKS தலைவலி ( Sorry ) தலைவி அனுவை
குறிக்கவில்லை.. அனுஹாசன் அவர்களை
குறிக்கிறது..
அந்த நிகழ்ச்சியில் இருந்து சில துளிகள்..
நான் : எனக்கு முன்னாடி இருக்குற
7 பேரை நிகழ்ச்சிக்கு கூப்பிடாம
என்னை கூப்பிட்டு இருக்கீங்களே.. ஏன்..?
TRP Rating Increase பண்றதுக்கு தானே..?
அனு : ரொம்ப ஓவரா போகுதே உங்க
கற்பனை..?அவங்கல்லாம் நிகழ்ச்சிக்காக
போன் பண்ணி Appointment கேட்டப்ப..
" Busy "-ன்னு சொல்லிட்டாங்க.. நீங்க
ஒருத்தர் மட்டும் தான்...
நான் : போதும்., போதும்.. இதுக்கு மேல
ஒண்ணும் சொல்ல வேணாம்..
.
அனு : ஓ.கே.. வாங்க Take போயிடலாம்..
நான் : ம்ம்.. ஓ.கே..
அனு : இப்போ நீங்க பிரபல பதிவர்
ஆயிட்டீங்க.. எப்படி சார் Feel பண்றீங்க..?
" இதுக்காக அவர் ஏன் பீல் பண்ணனும்..?
தமிழ் மக்கள் தானே பீல் பண்ணனும்..!! "
நான் : ஏய்.. யாரு அது....?
" ஹி., ஹி., ஹி..!! நான் தாங்க..
கேமராமேன்.. "
நான் : உனக்கு நேரம் சரியில்லைன்னு
நினைக்கிறேன்..
" எனக்கு மட்டுமா நேரம் சரியில்ல.,
விஜய் டி.வி-க்கு கூடத் தான் நேரம் சரியில்ல.."
நான் : சரி., உன்னை நான் அப்புறமா
கவனிச்சுக்கறேன்.. அனு நீங்க
கேள்வியை Continue பண்ணுங்க..
அனு : எப்படி சார் கொஞ்சம் கூட
" பந்தா " இல்லாம இருக்கீங்க..??
நான் : இந்த " பந்தா "., " விளம்பரம் "
இந்த வார்த்தைக்கு எல்லாம் என்ன
அர்த்தம்னே எனக்கு தெரியாது..
நீங்க முதல்ல என் Profile-ஐ படிங்க..
அனு : அப்ப இந்த
Minmini.com,Tamilblogger.com இதெல்லாம் என்ன..?
நான் : உங்களை Profile மட்டும்
தானே படிக்க சொன்னேன்..
Info Board எல்லாம் ஏன் படிக்கிறீங்க..?
ஆமா.., நீங்க ஏன் VKS தலைவி அனு
மாதிரியே பேசறீங்க..?
அனு : ஹி., ஹி., ஹி..!! பெயர் ராசியோ
என்னவோ..!! ஆமா Top 20 பதிவர்கள் List-ல
உங்க பெயரை பாத்ததும்..
உங்களுக்கு எப்படி இருந்தது..?
நான் : பெருசா ஒண்ணும் சந்தோஷப்படலை..
ஆனா ரமேஷ் Blog-ம்., பெ.சொ.வி Blog-ம்
அந்த லிஸ்ட்ல இல்ல.. அதுக்கு தான்
நான் உருண்டு., புரண்டு சந்தோஷப்பட்டேன்..
Thanks 2 தமிழ்மணம்..!!
அனு : ஆமா 1st Rank பக்கம் தான்னு
போட்டு இருக்கீங்களே..? இது
கொஞ்சம் ஓவரா இல்ல..
நான் : ஏன் அப்படி சொல்றீங்க..?
அனு : அதான் மங்குனி 2வது இடத்துல
இருக்காரே அவரை உங்களால
Overtake பண்ண முடியுமா..?
நான் : இதென்னங்க பிஸ்கோத்து மேட்டரு..
நாளைக்கே " ரஜினி தான் சூப்பர் ஸ்டாரா..? "
* " ஆமாம்" என்பவர்கள் " பாசிடிவ் "
ஓட்டு போடுங்க.
* " இல்லை" என்பவர்கள் " நெகடிவ் "
ஓட்டு போடுங்க
இப்படி கால்ல விழாத குறையா கெஞ்சி
ஒரு பதிவு போட்டா போதும்..
அதுல ஒரு 1500 ஓட்டு அள்ளிடலாம்..
அப்புறம் அடுத்த வாரம் நாம தான் No.1
அனு : கலக்குங்க வெங்கட்..
-----------------------------------------------
டிஸ்கி : மீதியை விஜய் Tvல இன்னிக்கு ( Sat )
நைட் 9 மணிக்கு பாருங்க..
.
.