சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

29 September 2010

காணவில்லை..!!?
இடம் : London போலீஸ் Station.,
Time : 11.AM

ஒரு பொண்ணு ரொம்ப பீலிங்கா
போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்றா..
நேரா Inspector-கிட்ட போறா..

பெண் : சார்.., சார்., என் Husband-ஐ
காலையில இருந்து காணோம்..

இன்ஸ் : பதட்டப்படாதீங்க.. பொறுமையா
என்ன நடந்ததுன்னு சொல்லுங்க..

பெண் : காலையில 6 மணிக்கு ஜாக்கிங்
போனார் சார்., இன்னும் வீட்டுக்கு வரல..

இன்ஸ் : அவரோட பெயர் என்ன..?

பெண் : மைக்கேல்

இன்ஸ் : என்ன வயசு..?

பெண் : ம்ம்..42.. இல்ல.., 40...
இல்ல 41 வெச்சுக்கலாம்..

இன்ஸ் : சரி அவரோட போட்டோ இருக்கா..?

பெண் : வீட்ல இருக்கே.. வர்ற அவசரத்தில
எடுத்திட்டு வரலை..

இன்ஸ் : சரி.. அவர் Height என்ன..?

பெண் : Height-ஆ..? சரியா கவனிச்சது இல்ல..

இன்ஸ் : என்ன Weight இருப்பாரு..?

பெண் : ம்ம்.. Weight..!!?
ரொம்ப ஒல்லியும் இல்ல.,
ரொம்ப குண்டும் இல்ல., நடுத்தரமா இருப்பார்..?

இன்ஸ் : அவர் Hair கலர்..?

பெண் : Hair Colour-ஐ அடிக்கடி Change பண்ணிப்பார்.
இப்ப Recent-ஆ என்ன கலர் போட்டிருந்தார்னு
சரியா ஞாபகம் இல்லையே..

இன்ஸ் : என்ன Dress போட்டு இருந்தார்..

பெண் : சரியா தெரியல சார்..
அனேகமா ஜாக்கிங் போறப்ப போடுற
T-Shirt & Trouser தான் போட்டு இருப்பார்..

இன்ஸ் : சரி அவர் காணாம போனப்ப
அவர் கூட யாராவது இருந்தாங்களா..?

பெண் : ஆமாம் சார்.. கூட கெவின் இருந்தான்..

இன்ஸ் : அது யாரு கெவின்..?

பெண் : அது என் செல்ல Labrador நாய்குட்டி சார்.,
கருப்பு கலர்., ஒன்றை வயசு., உயரம் 30 Inches.,
சரியா குரைக்காது., ரொம்ப சாது.,
அது கழுத்துல ஒரு Golden Chain இருக்கும்,
அதுக்கு Non-Veg ரொம்ப பிடிக்கும்.,
நான் சாப்பாடு போட்டாத்தான் சாப்பிடும்..
அதோட வலது கால்ல ஒரு நகம்
உடைஞ்சி போயி இருக்கும்.,

இப்படி அழுதுட்டே அந்த பொண்ணு
சொல்லவும்..

இன்ஸ் : சரி ஒரு Complaint எழுதி
குடுத்துட்டு போங்க.. சீக்கிரமே
உங்க நாயை கண்டுபிடிச்சிடறோம்..

பெண் : அப்ப என் Husband..?

இன்ஸ் : மேடம்.., அவரு காணாமல்லா
போயிருக்க மாட்டார்.. அனேகமா
வீட்டை விட்டு ஓடி போயிருப்பார்னு
நினைக்கிறேன்....


டிஸ்கி : என்னதான் சொல்லுங்க..
Husband மேல அக்கறையா இருக்கறதுல
நம்ம பொண்ணுங்க மாதிரி இருக்க இந்த
English -கார பொண்ணுங்களால முடியாது..
.

.

24 September 2010

நண்பேன்டா...!!
டிஸ்கி : இது பாஸ் ( எ ) பாஸ்கரன் பட
விமர்சனம் அல்ல..

என் Friend ஒரு Share Broking Office
நடத்திட்டு இருக்கான்..
அவனுக்கு நானும் ஒரு Client..

ஒரு நாள் அவன்  Office-ல உக்கார்ந்து
" 30 நாள்ல நம்ம இந்தியாவை
வல்லரசாக்கறது எப்படி..? " ன்னு
சீரியஸா Discuss பண்ணிட்டு இருந்தோம்..

அப்ப அவனுக்கு ஒரு போன் கால்
வந்தது..

அவனும் " ஓ.கே சார்னு.,
ஆகட்டும் சார்னு " ரொம்ப பவ்யமா
பேசினான்..

அப்பவே எனக்கு தெரியும்.,
Head Office-ல இருந்துதான் யாரோ
பேசறாங்கன்னு..

பேசி முடிச்சிட்டு.. என்னை பார்த்து..,

" Head Office-ல இருந்து இப்ப இங்கே
வர்றாங்களாம்.., முதல்ல நீ கிளம்பு..!! "

" நானும் ஒரு முக்கியமான Client..!!
என்னை எதுக்கு கிளம்ப சொல்ற..? "

" வர்றவங்ககிட்ட எதாவது போட்டு
குடுத்திட்டீன்னா..?!! "

" என்னை பார்த்து இப்படி சொல்லிட்டியே..!!
நான் உன் நண்பேன்டா.. "

" ம்ம்.. அதுதான்டா பயமே..!! "

" You Don't Worry..!! வர்றவங்ககிட்ட
உன்னை பத்தி பெருமையா
நாலு வார்த்தை சொல்லிட்டு
கிளம்பிக்கிறேன்..!! "

Head Office-ல இருந்து ரெண்டு பேர்
வந்திருந்தாங்க.. அவங்ககிட்ட என்னை
Intro பண்ணி வெச்சான் என் Friend..

" எங்க கம்பெனி சர்வீஸ் எப்படி இருக்கு.? "

" ரொம்ப நல்லா இருக்குங்க.. " ( ஒண்ணு )

" Statements எல்லாம் Correct-ஆ வந்துடுதா..? "

" அதெல்லாம் Perfect-ஆ வந்துடுது சார்..!! " ( ரெண்டு )

" எங்க Company News Letter வருதா.? "

" 5-ம் தேதிக்குள்ள வந்துடுதுங்க..!! " ( மூணு )

" எங்க சர்வீஸ் Improve பண்ண
எதாவது Suggestions இருக்கா..? "

" இப்ப நீங்க குடுக்கற சர்வீஸே
ரொம்ப நல்லா இருக்குங்க.. "  ( நாலு )

வந்தவங்களுக்கு முழு திருப்தி.
என் Friend முகத்திலயும் சந்தோஷம்..

" எதாவது குறை இருந்தாலும் சொல்லுங்க.. "

" அப்படி ஒண்ணும் இல்லைங்க..
ஆனா ஒரு சின்ன Doubt..."

" என்ன Doubt..?!! "

" அதோ அந்த சுவத்துல ஒரு பொட்டி
ரொம்ப நாளா மாட்டி வெச்சிருக்கே..
அது எதுக்குங்க..? "

இப்படி சொல்லி நான் கை காட்டினது.....

6 மாசத்துக்கு முன்னாடி Repair ஆகி
இன்னும் சர்வீஸே பண்ணாம
இருந்த Samsung Split AC..!!

( AC சர்வீஸ் பண்ணறதுக்குன்னு
3 மாசத்துக்கு முன்னாடியே
Head Office-ல இருந்து Rs 4000-க்கு Cheque
வந்த விஷயம் தான் எனக்கு தெரியுமே..!! )

ஹி., ஹி., ஹி..!!

நாங்கல்லாம்
சொன்னதையும் செய்வோம்..,
சொல்லாததையும் செய்வோம்ல..!!
.
.

20 September 2010

" தீயா " வேலை செய்யணும்ல...!!
என் பையனுக்கு
Quarterly Exams Start ஆயிடிச்சி..

எனக்கு தலைவலி Start ஆயிடிச்சி..

Book-ஐ எடுத்து வெச்சு..,
" வாடா படிக்கலாம்னு "
சொன்னா போதும்..

கையில சிக்கவே மாட்டான்.
சிட்டா பறந்துடுவான்..
எங்கே இருக்கான்னே தெரியாது..

அப்புறம்.., Searching Starts..,

பக்கத்து வீட்ல இருக்கானா..?
எதிர் வீட்ல இருக்கானான்னு
தேடி பிடிச்சி இழுத்துட்டு வரணும்..

அப்பல்லாம் நான் அவனை
கொடுமை படுத்த கூட்டிட்டு
போற மாதிரியே சோகமா வருவான்..

பார்கறவங்க எல்லாம் மனசுக்குள்ள
என்னை திட்டிப்பாங்க..

இந்த சின்ன வயசுல
இப்படி படிப்பு மேல Interest இல்லாம
இருக்கானேன்னு நான் ப்லீங் ஆகறது
அவங்களுக்கு எங்கே தெரிய போகுது..?!!

இப்படி ஓடி., தேடி., பிடிச்சி
அவனை படிக்க உக்கார
வெக்கிறதுக்குள்ளயே
போதும் போதும்னு ஆயிடும்....!!

அதே மாதிரி என்னதான் தாஜா
பண்ணி படிக்க உக்கார வெச்சாலும்...

" அப்பா..! தண்ணி வேணும்..! "

" அப்பா..! பசிக்குது..! "

" அப்பா..! ஒண்ணுக்கு வருது..! "

இப்படி ஏதாச்சும் சொல்லுவான்..

இது கூட பரவாயில்ல..

" அப்பா.. தூக்கம் வருதுன்னு..! "
சொல்லுவான் Evening 6 மணிக்கு..

நான் பொறுமையா Advise பண்ணுவேன்..

"கண்ணா.., நல்லா படிச்சா தான்
பெரியவனாகி Doctor, Engineer,
Auditor இப்படி எதாவது ஒரு
நல்ல வேலைக்கு போக முடியும்..!!

இது போட்டி நிறைஞ்ச உலகம்டா..!!
நாம " தீயா " வேலை செய்யணும்ன்னு "
சொல்லிட்டு இருந்தா..

நான் யாருக்கோ சொல்ற மாதிரி..,
அவன் எங்கேயோ பராக்கு
பாத்துட்டு இருப்பான்..

எனக்கு Tension ஆகும்.. - ஆனா
கோவப்பட்டா காரியம்
கெட்டு போயிடுமே...!!

அதனால சிரிச்சிட்டே
அவனை பக்கத்தில உக்கார வெச்சி
சொல்லி குடுக்க ஆரம்பிப்பேன்..

" A., B., C., D.... "

பின்ன., என் சின்ன பையன்
Pre-KG Quarterly Exam-ல
நல்ல மார்க் வாங்க வேண்டாமா..?!!

டிஸ்கி : பாடம் சொல்லிகுடுக்கற மாதிரி
வேற Photo கிடைக்கலை.. அதான்
ஒரு Buildup-ஆ இருக்கட்டுமேன்னு..

ஹி., ஹி., ஹி..!!
.
.

17 September 2010

காதல் சொல்ல சில Tips ( லேடீஸ் Spl )..!!போன பதிவுல பசங்களுக்கு
காதலை சொல்ல Tips தந்தாச்சு..!!

அப்ப அதே மாதிரி Tips
பொண்ணுகளுக்கு தரணுமே..!!

தருவோம்ல...,
அது நம்ம கடமையாச்சே..!!

சரி உங்க காதலை எப்படி சுருக்கமா.,
Different-ஆ உங்க ஆளுக்கு
புரிய வைக்கிறதுன்னு பார்க்கலாம்..


1. உங்களை கட்டிக்க போற பொண்ணு
ரொம்ப Lucky..!!

நான்கூட ரொம்ப Lucky-யான
பொண்ணுன்னு எங்க வீட்ல
அடிக்கடி சொல்லுவாங்க..


2. எனக்கு நடிகர் சூர்யாவை
ரொம்ப பிடிக்கும்.. ஆனா
அதெல்லாம் உங்களை
Meet பண்றதுக்கு முன்னால...!!


3. நீங்களும் Blue Shirt.,
நானும் Blue Chudithar.,
நம்மள பாக்கறவங்க
சரியான Match-ன்னு சொல்லுவாங்கல்ல..!!


4. இந்த Alphapet-ல ஏன் " I " & " U "
வேற வேற இடத்துல இருக்கு..?

" I " & " U " எப்பவும் சேர்ந்தே இருந்தா
நல்லா இருக்கும்ல..!!


5. உங்களோட Favourite Food எது..?

சமைச்சு பழகிக்கலாம்னு தான்..!!


( இப்படியெல்லாம் சொல்ல
தயக்கமா இருக்கா.? Don't Worry..!!
அப்ப Simple-ஆ ஒரு ஐடியா சொல்றேன்... )

உங்க ஆள் வராத அன்னிக்கு
அவரோட Friends-கிட்ட போயி...,

6. " ரமேஷ் அண்ணா..!! இன்னிக்கு
ஏன் அவரு வரலை..? "

" அருண் அண்ணா..!! அவருக்கு
உடம்பு எதாவது சரியில்லையா..?! "

இப்படி வார்த்தைக்கு வார்த்தை
அவரோட Friends-ஐ அண்ணா
போட்டு பேசுங்க அது போதும்..

உங்க Love-ஐ அவர்கிட்ட
உங்க அண்ணங்க புரிய வெச்சிடுவாங்க..

இன்று ஒரு தகவல் :
--------------------------

" காதல் " கனவு மாதிரி
சிலருக்கு பலிக்கும்.,
சிலருக்கு வலிக்கும்..!!
.
.

14 September 2010

காதல் சொல்ல சில Tips..!!

"காதல்ங்கறது பக்கம் பக்கமா
பேசறது இல்ல.., பக்குவமா பேசறது.. "
இது நாகேஷ் ஒரு படத்தில சொன்னது..

உண்மைதான்..
So., காதலை எப்படி சுருக்கமா.,
Different-ஆ சொல்றதுன்னு பார்க்கலாம்..1. நேத்து இருந்து என் பேனாவும்.,
என் இதயமும் Missing.,

ஒருவேளை அது உங்ககிட்ட இருந்தா...,
என் பேனாவை மட்டும் திருப்பி
கொடுத்திடுங்க ப்ளீஸ்.,


2. Excuse Me., கொஞ்சம் தண்ணி
கிடைக்குமா..?

உங்க அழகுல நான் மயங்கிட்டேன்..
அதான் முகத்தில தெளிச்சி
மயக்கம் தெளிச்சிக்கலாம்னு...


3. உங்களுக்கு கால் வலிக்கவே
இல்லையா..?

சதா என் மனசுல வட்டமடிச்சிட்டே
இருக்கீங்களே..!!


4. நேத்து உங்களை
Beauty Parlour-ல பாத்துட்டு
ஆச்சரியப்பட்டேன்..

" தேவதைகளுக்கே " Make-up
போடற Beauty Parlour-ஆ அது..!!?


5. உங்களுக்கு ' கண்டதும் காதல்' ங்கிற
Concept-ல நம்பிக்கை இருக்கா..?

இல்ல

இன்னொரு தடவை நான் உங்களை
Plan பண்ணி Meet பண்ணனுமா..??!!


6. நல்லவேளை உங்களை பார்த்தேன்..

இல்லன்னா " அனுஷ்கா " தான்
அழகுன்னு தப்பாயில்ல
நினைச்சிட்டு இருந்திருப்பேன்..!!


டிஸ்கி 1 : இதை Use பண்ணி
யாராவது., யார்கிட்டயாவது போயி
காதலை சொல்றேன்னு சொல்லி
அடியோ., உதையோ வாங்கிட்டு வந்தா
அதுக்கு கம்பேனி பொறுப்பில்ல..

டிஸ்கி 2 : Point No. 6 முதல்ல
Comment Section-ல தான் எழுதினேன்..
எனக்கு ரொம்ப பிடிச்சதால அதை
இங்கே Post-லயும் சேர்த்துட்டேன்..
.
.

11 September 2010

விநாயகரும் நானும் ( மலரும் நினைவுகள் )" பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா - கணேசா..,
நீ மனசு வெச்சா நானும் ஹீரோ-பா..!! "

விநாயகர் எனக்கு கடவுள் மட்டுமல்ல.,
அவர் என் குரு., என் Friend..

என்னோட 1st Birthday-க்கு எங்க அம்மா
என்னை விநாயகர் கோயிலுக்கு
கூட்டிட்டு போயி என் பேர்ல அர்ச்சனை
பண்ணினாங்களாம்..

அப்ப ஆரம்பிச்சது எனக்கு., விநாயகருக்குமான
பாச பிணைப்பு..

அதே மாதிரி நான் ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்ப
தினமும் எங்க வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற
விநாயகர் கோயிலுக்கு போறது வழக்கம்....

என் Side-ல எப்பவும் ஏகப்பட்ட கோரிக்கைகள்
இருக்கும்..

ஒருவேளை என்னை பார்த்தா
அப்பல்லாம் விநாயகர் Tension கூட
ஆகியிருக்கலாம்..

யார் கண்டா.??!!

நான் : விநாயகா... எனக்கு இன்னிக்கு Exam..!

விநா : ஓ.. இது தான் Matter-ஆ..?!! அதான்
இன்னிக்கு நீ 10 நிமிஷம் முன்னாடியே
வந்தியா..?

நான் : அதுவும் Maths Exam..!!

விநா : நீ ரெண்டு ஊதுபத்தி கொண்டு
வரும்போதே நினைச்சேன்.. இதுல
எதோ வில்லங்கம் இருக்குன்னு..!!

நான் : உனக்கே நல்லா தெரியும்..!
நான் அதிகம் ஆசைபடமாட்டேன்னு..
இன்னிக்கு Exam-ல எனக்கு
50 Mark வந்தா போதும்..

விநா : 50 Mark-ஆ..? உனக்கு தெரிஞ்சதை
எல்லாமே Question Paper-ல குடுத்தா கூட
மொத்தமே 34 மார்க் தானே வரும்..

நான் : நான் மட்டும் இந்த தடவை
பாஸாயிட்டா.., உனக்கு ரெண்டு
தேங்காய் உடைக்கிறேன்..!!

விநா : நான் உன் மண்டைய உடைக்கிறேன்..
புக்கை எடுத்து வெச்சி ஒழுங்கா படிக்கறதில்ல..,
தேங்கா உடைக்கிறானாம்.., தேங்கா..!!

இதே மாதிரி +2 Pubilc Exam-ல ஒரு கோரிக்கை
வெச்சேன்..

நான் : விநாயகா.. இன்னிக்கு எனக்கு
+2 Chemistry Pubilc Exam..

விநா : ம்ம்.. ஆரம்பி.., நான் காதை மூடிக்கிறேன்..

நான் : இன்னிக்கு நான் இவ்ளோ மார்க் வேணும்.,
அவ்ளோ மார்க் வேணும்னு கேக்க போறதில்ல..

விநா : அட.., திருந்திட்டியா..??

நான் : இன்னிக்கி Exam-க்கு Question Paper Out
ஆயிடிச்சி.., நான் எப்படியும் 90% Mark எடுத்திடுவேன்..

விநா : ??!!

நான் : Out ஆன அதே Question Paper  தான்
இன்னிக்கு Exam-க்கு வரணும்..
மாத்திட போறாங்க.. பார்த்துக்க..

விநா : அதானே.. திருந்திட்டியோன்னு நினைச்சேன்..?!!

நான் கோரிக்கை வெச்ச மாதிரியே..
அதே Question Paper தான் Exam-க்கு வந்தது..
எனக்கும் 90% மேல மார்க் Guarantee..

ஆனா Question Paper Out ஆன மேட்டரை
தினகரன் பேப்பர் புட்டு புட்டு வெச்சதால.

ரெண்டே நாள்ல அந்த Exam-ஐ செல்லாதுன்னு
சொல்லி Re Exam Announce பண்ணிட்டாங்க..

இந்த சாமிங்ககிட்ட வரம் கேக்கும் போது
நாம தான் உஷாரா கேக்கணும்....

இல்லைன்னா... இப்படித்தான்..

வரம் கிடைக்கும்...
ஆனா கிடைக்காது..
.
.

10 September 2010

வாழ்த்த வருகிறேன்..!!??எல்லோருக்கும் இனிய ரம்ஜான்
வாழ்த்துக்கள்..

ரம்ஜான் Spl Posting எதுவும் போடலியான்னு
கேக்காதீங்க..நானே ஒரு குழப்பத்தில
இருக்கேன்..

எனக்கு 3 முஸ்லீம் Friends இருக்கானுங்க..

இன்னிக்கு அவங்க வீட்ல எல்லாம்
ரம்ஜான் Spl பிரியாணி கமகமக்கும்..
சுவை சுவைக்கும்..

அந்த பிரியாணி இருக்கே.. ஆஹா
அது தனி Taste ..

அதெல்லாம் சாப்பிட்டு பார்த்தவங்களுக்கு தான்
தெரியும்..

ம்ம்.. எனக்கு நல்லா தெரியும்..!!

ஏன் அப்படி பார்க்கறீங்க..?! இதை பத்தி
நம்ம சங்ககால இலக்கியத்துலயே
சொல்லி இருக்கு தெரியும்ல....!

" முகநக நட்பது நட்பன்று, ரம்ஜானுக்கு
பிரியாணிதரும் அகமது நட்பே நட்பு..!!

ஹி., ஹி., ஹி... சரி மேட்டர்க்கு வரேன்..
என் குழப்பம் என்னான்னா..

இப்ப நானு.. அன்வர், நியாஸ், நசீர்..
இதுல யார் வீட்டுக்கு போறது..?!!

" ஏன்னா எவனாவது ஒருத்தன் கூப்பிட்டு
இருந்தான்னா பரவாயில்ல... அவன் வீட்டுக்கு
மட்டும் போயிட்டு வந்திடலாம்...

இங்கே தான் மூனுபேரும் கூப்பிடலியே...

அதான் யார் வீட்டுக்கு போறதுனு
ஒரே கன்பியூசன்..?!! "

ஹி., ஹி., ஹி...!!!

என்ன பண்ணலாம்..??!!

சரி நமக்கு பிரியாணியா முக்கியம்..?!
வாழ்த்தறது தான் முக்கியம்..

So., 3 பேர் வீட்டுக்கும் ஒரு நடை போயி..,
" ரம்ஜான் வாழ்த்து " சொல்லிட்டு வந்திடலாம்..

எத்தனை மணிக்கு போலாம்..??

12 மணி..??!!

வேணாம்., வேணாம்...

12.30 மணி ( அது தான் Timing Correct-ஆ
இருக்கும்..!! )
.

.

08 September 2010

Plan பண்ணி பண்ணுவோம்ல..!!

இவரு யாருன்னு தெரியுதா..?
நல்லா உத்து பாருங்க..

Lord லபக்தாஸ் மாதிரி
ஒரு Look..,
கையில இருக்கிற அந்த
திருட்டு Watch.,
Friend-கிட்ட ஆட்டைய
போட்ட Belt..
ஓசி T.Shirt.,

இப்ப தெரியுதா..?

ஆங்..,  இவர் தான்
நம்ம திருட்டு போலீஸ் ( Sorry..,  )
லூஸ் போலீஸ்., ( மறுபடியும் Sorry.. )
சிரிப்பு போலீஸ்.,

அதாங்க
ரமேஷ் - ரொம்ப நல்லவன் ( சத்தியமா )
இப்படி பொய் சத்தியம் பண்ணுவாரே..
அவரே தான்.. இவரு..

இவருக்கு இன்னிக்கு Birthday..

இன்னிக்கு இவருக்கு
எதாவது பண்ணனும்..
இல்ல
இவரையாச்சும் எதாவது
பண்ணனும்..

என்ன பண்ணலாம்..?!!
( Thinking.............. )

ஐடியா No.1:
ஒரு Birthday Cake பார்சல் அனுப்பலாமா..?

( என்னாத்துக்கு..?? சிங்கப்பூர்ல இருந்து
வரும் போது நமக்கு 10 பைசா மிட்டாய்
வாங்கிட்டு வந்தாரா..? இல்லையே...
அப்புறம் என்னாத்துக்கு Birthday Cake..? )

ஐடியா Dropped..

ஐடியா No. 2 :
புகழ்ந்து ஒரு கவிதை எழுதலாமா..?

( கவிதை எழுதறதே கஷ்டம்..,
அதுல இவரை புகழ்ந்து வேற..
என்ன கொடுமை இது..?? )

அண்ணனுக்கு தம்பி நீ.,
தம்பிக்கு அண்ணன் நீ.,

அண்ணன் தம்பி இருவருக்கும்
ஆங்கிலத்தில் பிரதர் நீ.,

( வாவ்.. வாவ்.. வாவ் )

சினி க்விஸ் மன்னன் நீ..,
அழகு பெண்களின் சித்தாப்பு நீ.,

பதிவுலக சாத்தான் நீ..!
( ஹி.,ஹி., ஹி.., அவசரத்துல
உண்மைய உளறிட்டேன்..
இதோ Correct பண்ணிடறேன்.. )


பதிவுலக சுல்தான் நீ..!

ஐய்யோ.. கண்ணு இருட்டு கட்டுதே..,
மயக்கம் மயக்கமா வருதே..

( எனக்கு எப்பவும் ஓவரா பொய்
சொன்னா இப்படி தான் ஆகும்.. )

ஐடியா Dropped..

ஐடியா No. 3 :
கதை மாதிரி எதாவது எழுதிடலாமா..??!!

வேணாம்..!! வேணாம்..!!
பூச்சாண்டி கதைன்னு
குழந்தைங்க எல்லாம் பயந்துக்கும்..
( குழந்தைங்க மட்டுமா..??!! )

ஐடியா Dropped..

ஐடியா No.4 :
ஒரு Call or  SMS பண்ணி
வாழ்த்து சொல்லிடலாமா..?

Call பண்ணினா - 1 ரூபா.,
SMS பண்ணினா - 50 பைசா.,

இவ்ளோ செலவு பண்ணி
இவருக்கு வாழ்த்து சொல்லணுமா..??

ஐடியா Dropped..

ஐடியா No.5 :
சரி ஒரு பதிவு போடலாம்..
அதான் செலவில்லாத வழி..!!

" Happy Birthday to RAMESH "

எல்லோரும் இப்படியே சும்மா
வேடிக்கை பார்த்திட்டு இருந்தா எப்படி..??

ம்ம்.. Start பண்ணுங்க..,

வந்து வாய்க்கு வந்த மாதிரி
ரமேஷை வாழ்த்த ஆரம்பிங்க...

டிஸ்கி :
நம்மள மாதிரியே
ரமேஷை ( வாழ்த்தி பதிவு ) போட்டு தள்ள
Plan பண்ணியவர்கள்..

.

.

06 September 2010

விஜய்க்கு ஒரு ஐடியா..!!

நேத்து காலை : 8 மணி..
என் மொபைல் Ring அடிச்சது.,
எடுத்து பேசினா.. லைன்ல
நம்ம இளைய தளபதி விஜய்..

விஜய் : ஹாய் வெங்கட்..!!

நான் : ஹாய் விஜய்..!! என்ன திடீர்னு..??

விஜய் : உங்க Blog-ல எந்திரன் படத்துக்கு
Publicity பண்ணி குடுத்தீங்களே..

நான் : ஆமா.., அது ரஜினி சாருக்காக..

விஜய் : அதே மாதிரி என் அடுத்த படம்
" காவல்காரனுக்கும் " ஒரு Publicity Post
போடுங்களேன்..

நான் : என்னான்னு..?

விஜய் : " காவல்காரன் " படம் நல்லா
வந்திருக்கு.. அதுல விஜய் நல்லா
நடிச்சிருக்கார்னு...

நான் : " நல்லா நடிச்சிருக்காரா..?? "
இது உங்களுக்கே கொஞ்சம்
ஓவரா தெரியல..??
நல்லா " நடந்திருக்கார்னு " வேணா
எழுதறேன்..

விஜய் : ஹி., ஹி.,.., சரி நான் நடிச்சதுலயே
உங்களுக்கு ரொம்ப பிடிச்ச படம் எது..?

நான் : " நான் சிகப்பு மனிதன் "( !!! )

அதுல " காந்தி தேசமே " பாட்ல.,
ஒரே ஒரு சீன்ல., இந்தியா கொடியை
கையில பிடிச்சிட்டு ஆட்டுவீங்க பாருங்க..
ரியலி சூப்பர்... I like that Movie..

விஜய் : ஹி., ஹி. ஹி.. !!
ஆமா என் படத்தை எல்லாம் நீங்க
திருட்டு DVD-ல தான் பார்க்கறீங்களாமே..!!
எனக்கு ஒரே Feeling-ஆ இருக்கு..!!

நான் : No Feeling.. சந்தோஷப்படுங்க..!!
அதுலயாவது பார்க்கறேனே..!!

விஜய் : நான் கடைசியா நடிச்ச
4 - 5 படமும் சரியா ஓடல..
அதான் ஏன்னு எனக்கு தெரியல..

நான் : அதுக்கு முன்னாடி 2 படம்
ஓடிச்சே.. அதுதான் ஏன்னு எனக்கு புரியல..

விஜய் : கண்ணு வெக்காதீங்க வெங்கட்..!!
வர வர இந்த சூர்யா., ஆர்யா எல்லாம்
கலக்குறாங்க.., எனக்கு கலக்கமா இருக்கு..?
நான் என்ன பண்ணறது..?

நான் : நீங்க வேணா உங்க பேர
மாத்தி வெச்சுக்கோங்க..
சூர்யா., ஆர்யா., மாதிரி " வீர்யா "
சூப்பரா இருக்குல்ல..!!

விஜய் : விளையாடாதீங்க..!!
சூர்யா மாதிரி விளம்பரத்துல நடிச்சு.,
மக்கள் மனசுல இடம் பிடிக்கலாம்னு
ஒரு விளம்பரத்துல வர்றேனே.. எப்புடி..??

நான் : சுத்தம்....!! பொதுவா
உங்க படத்துல தான் லாஜிக் இருக்காது..
இப்ப விளம்பரத்துலயுமா..??

ஆமா அது உங்களுக்கு விளம்பரமா..?
இல்ல அந்த நகைகடைக்கு ( Jos Alukaas )
விளம்பரமா..??

விஜய் : எனக்கெதுக்கு விளம்பரம்..?
அதான் ராகுல் காந்தியே என்னை
பார்த்து பயப்படறாருல்ல..!!

நான் : இது எப்ப இருந்து..?

விஜய் : பின்ன., என்னை கட்சியில
சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாரே..

நான் : ஹி., ஹி., ஹி..!! நான் கூடத்தான்
உங்களை VAS-ல சேர்த்துக்க மாட்டேன்..
அதுக்காக..

விஜய் : சரி., சரி.., என்னை கலாய்ச்சது
போதும்.. என் படம் சூப்பர் ஹிட்டாக
எதாவது நல்ல ஐடியா குடுங்க..

நான் : ம்ம்.. சரி.. 10 மணிக்கு உங்களை
வீட்ல வந்து மீட் பண்றேன்..
அப்ப பேசிக்கலாம்..

( டொக்.. )

Time : 10 மணி
இடம் : விஜய் வீடு..,

( நான் உள்ளே போன உடனே.,
விஜயோட P.A ஓடி வர்றார்... )

P.A : வாங்க சார்., இப்படி உக்காருங்க..,

நான் : விஜய் இல்லயா..?

P.A. : மாடில இருக்கார் சார்..
Opening Song போட்டாதான் வருவாரு..
இதோ போட்டு விடறேன்..

( நான் அங்கே இருந்த Sofa-ல உக்கார்றேன்..
P.A, Music Player-ல் பாட்டை ஓட விடறார்... )

"ஏய்.. ராமா., ராமா., ராமா., ராமா
ராமன் கிட்ட வில்லை ( Villai ) கேட்டேன்..,

பீமா., பீமா., பீமா., பீமா.,
பீமங்கிட்ட கதையை ( Gathaiyai ) கேட்டேன்..,

முருகு., முருகு., முருகு., முருகு.,
முருகங்கிட்ட மயிலை கேட்டேன்..

ஈசன்., ஈசன்., ஈசன்., ஈசன்.,
ஈசங்கிட்ட மலையை கேட்டேன்.. "

விஜய் சிரித்தபடியே என்னை
நோக்கி கை அசைத்தபடியே வர்றார்..

நான் : இந்த பில்டப்புக்கு ஒண்ணும்
குறைச்சல் இல்ல.. இத்தனை பேர்கிட்ட
எதேதோ கேட்டீங்களே.. டைரக்டர்கிட்ட
ஒழுங்கா கதையை கேட்டீங்களா..??

விஜய் : ?!?!?!....

பின் டிஸ்கி :
ஒருவேளை நான் அஜித் ரசிகனோன்னு
யாராச்சும் சந்தேகப்பட்டா இங்கிட்டு போயி
பார்த்து Doubt-ஐ Clear பண்ணிக்கோங்க..
.
.

03 September 2010

கவிதை மழை..!!!
டிஸ்கி : எதுக்கும் ஒரு குடை
ரெடியா வெச்சுக்கோங்க..
நனைஞ்சிடப் போறீங்க..!!

நான், சுரேஷ், சரவணன்
மூணு பேரும் ஜாலியா
பேசிட்டு இருந்தோம்..

அப்ப அங்கே வந்த
எங்க Friend கம்பன்...

" சே.. வர வர என் பையனோட
தமிழ் மிஸ் தொல்லை
தாங்கலைப்பா..!! "

" ஏன்..? என்ன பண்ணினாங்க..? "

" எங்கயாவது படிச்சி / கேட்டு
ஒரு 4 வரி கவிதை எழுதிட்டு
வர சொல்லி இருக்காங்க..!! "

" சரி..!! "

" கவிதை எழுதி குடுப்பான்னு
என் பையன் என்னை டார்ச்சர்
பண்றான்.. "

" இது சப்ப மேட்டரு..,
குமுதம், ஆனந்த விகடனை
பார்த்து எழுதி குடுத்துடு..!! "

" ம்ம்.. Try பண்ணினேன்..
ஒண்ணும் மனசுக்கு பிடிக்கலை.."

" சரி.. இப்ப என்ன பண்ண போற..?! "

நீங்கல்லாம் ஆளுக்கு
ஒரு கவிதை சொல்லுங்க..
எதாவது தேறுதான்னு பார்க்கலாம்..

" கவிதையா..? நாங்களா..?

( ம்ம்.. உன் தலைவிதி அப்படி இருந்தா
நாங்க என்ன பண்ண முடியும்..?!! )

" சுரேஷு.., முதல்ல நீ சொல்லேன்..!! "

" என்னாது நானா..?!!
சரி., சரி நோட் பண்ணிக்கோ... "

" கவிதைக்கும்., கழுதைக்கும்
ரொம்ப தூரம்.. - ஆனா
எனக்கும்., கழுதைக்கும்
ரொம்ப பக்கம்..!! "

" போடா வெண்ணை..!! "

" வெங்கட்..!! நீயாவது நல்லதா
படிப்பு., ஸ்கூல் சம்பந்தமா
ஒரு கவிதை சொல்லேன்.. "

( படிப்பு, ஸ்கூல் சம்பந்தமாவா..??!!
ம்ம்... இதோ.... )

" நான் ஸ்கூலுக்கு போக
ஆரம்பித்தேன்..
ஒழுங்காய் படிக்க
ஆரம்பித்தார் என் அப்பா..!! "

( என்னையும் முறைச்சிட்டு.. )

சரவணா.. நீயாவது உருப்படியா
ஒரு கவிதை சொல்லுடா..

சரவணன்., அவனை கேவலமா
ஒரு Look விட்டுட்டு சொன்னான்...

" வைத்த பெயரோ
கம்பன்..,
வக்கில்லை
நாலு வரி கவிதைக்கு..!! "
.
.