சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

28 July 2011

ஒரு பிளாக்கரின் பீலிங்..!!


காலத்தின் ஓட்டத்தில்
காணாமல் போய்விடுவேன் என
சினிமாவையும்.,
கிரிக்கெட்டையும்
தள்ளி வைத்தேன்..

பொழுதை வீணாய்
போக்க வேண்டாமென
என் Twitter-யும்.,
Facebook-யும் Open
செய்வதில்லை..

நண்பர்களின் Buzz-ஐ கூட
Unfollow செய்தேன்..
மற்றவரை Follow செய்வது
தப்பென்று நினைத்து..

இப்பொழுதெல்லாம்
மௌனமாக இருக்கவே
விழைகிறேன்..
அதிகம் Chat செய்துவிட்டேன்
என நினைக்கையில்..

இன்னும் தொங்கி கிடப்பது
என் Blog..

அதையும் மறந்தால் தான்
உருப்படுவேன் எனில்..

விட்டுவிடுங்கள்...
நான் உருப்படாதவனாகவே
இருந்துவிட்டு போகிறேன்..!!

ஹி., ஹி., ஹி......!!

- கவி இளவரசு வெங்கட்
.
.

25 July 2011

ஐ.. பிஸ்கோத்து..!!

















என் Friend ஜெகன் பெங்களூர்ல
இருந்து ஒரு வார லீவ்ல நேத்து
தான் ஊருக்கு வந்து இருக்கான்..

பாத்து ஆறு மாசம் ஆச்சேன்னு
அவனை பாக்க Evening அவங்க
வீட்டுக்கு போயிருந்தேன்..

அப்ப அவங்க வீட்ல ஒரு தட்ல
Biscuits கொண்டு வந்து வெச்சாங்க..
அந்த Biscuit பார்க்கவே புது மாதிரி
இருந்தது... ஒரு Biscuit எடுத்து சாப்பிட்டு
பார்த்தேன்.. ரொம்ப டேஸ்டா இருந்தது..

" என்ன Biscuit இது..? "

" இது Imported.. Made in Denmark..! "

" ஓ.. I Like Denmark..! "

" Biscuit-ஐ பாத்ததும் உனக்கு
Denmark பிடிக்குதா..? "

" ஹேய்.. எனக்கு பிடிச்ச ஒரே
Foreign Country டென்மார்க் தான்..
தெரியுமா..?! "

" அப்படியா..? டென்மார்க் எங்கே
கண்ணா இருக்கு..? "

" ஹி., ஹி.!! உலக மேப்ல...
ஒரு ஓரமா.... ! "

" அடிங்.... "

5 நிமிஷம் ஆகியிருக்கும்..

ஜெகன் பேசிட்டே Biscuit சாப்பிட்டுட்டு
இருந்தான்..

நான் Biscuit சாப்பிட்டுட்டே பேசிட்டு
இருந்தேன்..

( ரெண்டும் ஒண்ணுதனேன்னு
அப்பாவி மாதிரி கேக்கறவங்களுக்கு...

அவன் சாப்பிட்டது - 2 பிஸ்கட்
நான் சாப்பிட்டது - 5 பிஸ்கட்

இப்ப புரியுதா Difference..! )

திடீர்னு தட்டு காலி ஆகிட்டு
இருக்கறதை பார்த்த ஜெகன்..
ஷாக் ஆகிட்டான்..

" டேய்.. அந்த பிஸ்கட்டை அதிகமா
சாப்பிடாதே..! "

" ஏன்டா..?! "

" வயிறு எரியும்..! "

" அடப்பாவி..! முதல்லயே சொல்லாம்ல..
நான் வேற 5 பிஸ்கட் சாப்பிட்டுடேனே.!
இப்ப என்ன பண்றது..? "

" டேய்.. நான் வயிறு எரியும்னு சொன்னது
உனக்கில்ல., எனக்கு..! "

" என்ரா சொல்ற..? "

" ஒரு பிஸ்கட் 15 ரூபாடா..! "

" அட நாயே..!! "
.
.

21 July 2011

இன்டர்வியூ சமாளிபிகேஷன்..!


















( இவனை என்ன பண்ணலாம்.?! )

நீங்க ஒரு Interview-க்கு போய்..
அங்கே உங்களுக்கு தெரியாத
கேள்வி கேட்டா... நீங்க என்ன
பண்ணுவீங்க..

" தெரியாதுன்னு " சொல்வீங்க..!
அப்படிதானே..?!

இனிமே அப்படி சொல்லாம
அதை சமாளிக்கறது எப்படின்னு
தான் இன்னிக்கு பார்க்கபோறோம்..

அது Very Simple..

" If You can't Convience them..
Then.. Try to Confuse Them..! "

இப்ப உதாரணத்துக்கு.

Question No.1 :

" அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..? "

" அலக்சாண்டர் குதிரை பேரா..?

அவர்கிட்ட மூணு குதிரை இருந்தது..
நீங்க எந்த குதிரை பெயரை கேக்கறீங்க..?!

கருப்பா., வால் குட்டையா இருந்ததே
அதுவா..?

வெள்ளை கலர்ல மூக்குல மட்டும்
கருப்பு புள்ளி இருந்ததே அதுவா..?

இல்ல சிகப்பா.. உசரமா இருந்ததே
அந்த குதிரை பேரா..?

( எதோ ஒரு குதிரை பேரு சொல்லுன்னு
சொன்னா.. நாமளும் நமக்கு பிடிச்ச எதோ
பெயரை சொல்லிட வெண்டியது தானே..! )

Question No.2 :

" பூமி சூரியனை சுத்துதுன்னு முதல்ல
கண்டுபிடிச்சவர் யாரு..? "

அதை முதன் முதல்ல கண்டுபிடிச்சி
சொன்னவரு கிரேக்க மேதை
" ஆல்பர்டோ பெர்ணாண்டஸ் " .

Unfortunately அவரு பூமி Clock Wise-ல
சுத்துதுன்னு சொல்லிட்டாரு..

??!!?

Question No 3 :

" உப்பு சத்யாகிரகத்துல தீவிரமா ஈடுபட்ட
தமிழக சுதந்திர போராட்ட வீரர் யார்..? "

" அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்..! "

( அதான் ரஜினி சாரே சொல்லி இருக்கார்ல.. )

Question No 4 :

" தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்..? "

" நேத்திக்கா.? இன்னைக்கா.? இப்பவா..? "

-------------------------------------------------------------------

இப்படிதான் இன்டர்வியூல கேக்கற
கேள்விக்கு.. டக் டக்னு பதில்
சொல்லணும்.. புரியுதுங்களா.?!

பின்ன.., அவங்க மட்டும் நமக்கு
தெரியாத கேள்வியை கேக்கலாம்..
நாம மட்டும் அவங்களுக்கு தெரியாத
பதிலை சொல்ல கூடாதா..?!
.
.

19 July 2011

சப்பாத்தி கல்லும், சாணக்கிய தந்திரமும்.!

















எங்க வீட்டு Kitchen-ஐ ஆல்டர் பண்ணிட்டு
இருக்கோம்.. Kitchen Slab-காக எடுத்துட்டு
வந்த கிரானைட் கல்லுல 2 அடி மிச்சமாயிடுச்சு..

அதை என்ன பண்ணலாம்னு நானும்.,
என் Wife-ம் Discuss பண்ணிட்டிருந்தோம்..
( இதெல்லாம் சும்மா Formality.. எப்படியும்
கடைசில நான் சொல்றது தான் நடக்காது..! )

" ஏங்க... வீட்டுக்கு வெளியில இருக்குற
Steps-க்கு போடலாமாங்க..? "

" வேணாம்.. ஈரமா இருந்தா வழுக்கி
விட்டுடும்..! "

" டைனிங் ஹால்ல ஒரு Slab போட்டுக்கலாம்ங்க..?
ஊறுகா பாட்டில் எல்லாம் வைக்க வசதியா
இருக்கும்.! "

" வேணாம்.. டைனிங் ஹால் ஏற்கனவே
ரொம்ப சின்னதா இருக்கு.. அப்புறம்
இடைஞ்சலா போயிடும்..! "

" சப்பாத்தி கல்லாவது பண்ணலாம்க...! "

" வேணாம்.. Next..? "

" சப்பாத்தி நல்லா வரும்க..! "

" அதான் வேணாம்னு சொல்றேன்ல..! "

இதை பாத்துட்டு கிரானைட் ஒட்டி
குடுக்க வந்தவன்..

" சார்..அதான் மேடம் ஆசைப்படறாங்கல்ல..
சப்பாத்தி கல்லே செஞ்சி குடுங்க..! "

( டேய்.... சப்பாத்தி கல்லு
Wood-ல பாத்து இருப்ப..,
Steel-ல பாத்து இருப்ப.,
Stainless Steel-ல பாத்து இருப்ப...
எங்கயாவது கிரானைட்ல பாத்து இருக்கியா..?
அதுவும் கறுப்பு கிரானைட்ல பாத்து இருக்கியா..?

தூக்கி அடிச்சா ஒன்ரை கிலோ வெயிட்டுடா..

என் நிலைமை புரியாம படுத்தாதே )

என் Wife என்கிட்ட ரகசியமா..
" நீங்க எதுக்கோ பயப்படற மாதிரி தெரியுதே..! "

" ஹி., ஹி., ஹி... இல்லையே..! "
( அவ்ளோ வீக்காவா இருக்கோம்..?! )

" சரி., உன் ஆட்டோகிராப் இந்த பேப்பர்ல
போட்டு குடேன்னு " சொல்லி ஒரு வெத்து
ஸ்டாம்ப் பேப்பர்ல என் Wife -கிட்ட
ஒரு கையெழுத்து வாங்கிட்டு
சப்பாத்தி கல்லு செஞ்சி தர சொல்லிட்டேன்..

அப்புறமா அதுல " இந்த சப்பாத்தி கல்லுல
என் Husband-ஐ அடிக்க மாட்டேன்னு "
நானே Fill பண்ணிகிட்டேன்..

நாங்கல்லாம் சாணக்கியனுக்கே ஐடியா
சொல்றவங்க.. எங்ககிட்டயேவா..?!!

சப்பாத்தி கல்லு செஞ்சி வந்தது..
அதை தூக்கி பாத்த என் Wife...

" ரொம்ப வெயிட்டா இருக்குங்க..! "

" அப்பாடி...! இதை உன்னால தூக்க
முடியாது., தூக்கினாலும் அடிக்க
முடியாது.. Thank God..! "

" இதை தூக்க முடியலைன்னா என்ன..
சப்பாத்தி கட்டையை ஈஸியா தூக்க
முடியும்ல...! "

" அடிப்பாவி...! "
( நமக்கு இன்னும் பயிற்சி தேவையோ..?!! )
.
.

11 July 2011

எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!
























அனைத்துலக அப்பாவி கணவர்கள்
சார்பாக.. சில அப்பாவி கேள்விகள்..

கேள்வி No 1 :

கிட்டதட்ட 3 மணி நேரம்.,
259 புடவையை பாத்து.
அதுல இருந்து ஒரு புடவையை
Select பண்ணி எடுத்துட்டு வந்தாலும்...
வீட்டுக்கு வந்து..

" ஏங்க.. இந்த புடவை எனக்கு நல்லா
இருக்கான்னு " சந்தேகமா கேக்கறீங்களே..

இது உங்களுக்கே ஓவரா தெரியல.!?

கேள்வி No 2 :

நாங்க சீரியஸா கிரிக்கெட் மேட்ச்
பாத்துட்டு இருக்கும் போது..
" எப்ப பாரு இந்த கிரிக்கெட் தானா..?!
உங்களுக்கு Bore அடிக்காதுன்னு "
கேட்டுட்டு.. Remote-ஐ பிடுங்கி..

1032 வது தடவையா பார்க்குற
" முன்பே வா.. என் அன்பே வா..! "
Song-ஐ முதல் தடவை பார்க்குற
மாதிரி சீன் போடறீங்களே..

யப்பா.. இது உலக மகா நடிப்புடா சாமி..!

கேள்வி No 3 :

நகைகடைக்கு போனா...

" வனிதாவோட அக்காகிட்ட இருக்குற
நெக்லஸ் இந்த டிசைன் தான்..! "

துணிக்கடையில..

" ராணிகிட்ட இதே பார்டர்., இதே
டிசைன்ல லெவண்டர் கலர் Saree
ஒண்ணு இருக்கு..! "

இப்படி எல்லாத்தையும் ஞாபகம்
வெச்சி சொல்ற நீங்க... ரசத்துல
உப்பு போட மட்டும் மறந்துடறீங்களே..

ஏன்..?

கேள்வி No 4 :

எங்க பெரியம்மாவோட நாத்தனாரோட
கொழுந்தனாரோட சகலையோட
அக்கா பையனுக்கு கல்யாணமாம்..
நாம ரெண்டு பேரும் அவசியம்
போகணும்னு சொல்ற நீங்க..

3 வருஷம் கூட படிச்ச எங்க பிரண்டு
கல்யாணத்துக்கு கிளம்பும்போது
மட்டும்...

" ஏங்க நாம அவசியம் உங்க பிரண்டு
கல்யாணத்துக்கு போகணுமான்னு.? "
கேக்கறீங்களே..

இது நியாயமா..?!


கேள்வி No 5 :

இந்த செல்போன் வாங்கி 4 வருஷமாச்சு.,
Latest செல்போன் ஒண்ணு வாங்கலாம்னு
நாங்க சொன்னா..

" சும்மா பணத்தை கண்டபடி
Waste பண்ணாதீங்கன்னு.! "
எங்களுக்கு Advise பண்ணிட்டு..

" என் பட்டுசீலை ஜாக்கெட்டுக்கு
எம்ராய்டரி டிசைன் போட்டுக்கறேன்.
இதான்ங்க இப்ப Fashion-னு " சொல்லி
எம்ராய்டரிக்கு 1000 ரூபா செலவு
பண்றீங்களே..

உங்களுக்கு எங்களை எல்லாம் பாத்தா
பாவமா இல்ல..?!!

டிஸ்கி :
" மஞ்ச கயித்தை கையில கட்னா காப்பு.,
கழுத்துல கட்னா ஆப்புன்னு "
சும்மாவா சொன்னாங்க.?!!
.
.

07 July 2011

இது எந்த ஊரு Dictionary..?? Part - 2





















* Gift : நமக்கு திருப்பி குடுக்கறவங்களுக்கு
நாம தர்றது..

* Offer : ரெண்டு Waste பொருளை
ஒரே நேரத்துல விக்கறது

* லீவ் நாள் : ஆபீஸ்க்கு போகாம.,
வீட்ல இருந்துகிட்டு Wife சொல்ற
வேலைகளை செய்யற நாள்.

* அட்வைஸ் : நம்மளால Follow பண்ண
முடியாதை எல்லாம் அடுத்தவங்களுக்கு
சொல்றது..!

* Professor : நாம இன்னிக்கு கிளாஸ்ல
தெரிஞ்சிக்கிட்டதை., நேத்து நைட்டே
படிச்சி தெரிஞ்சிக்கிட்டவரு..

* ஓவர் ஸ்பீடு : நம்மளை ஓவர் டேக்
பண்ணி போறவங்க போற ஸ்பீட்

டிஸ்கி : " இது எந்த ஊரு Dictionary..?? Part - 1 "
படிக்க இங்கே க்ளிக்..

( " உஸ்ஸப்பா...! பழைய பதிவு ஒண்ண
படிக்க வெக்க எவ்வளவு மெனக்கெட
வேண்டி இருக்கு...? "
டைலாக் உபயம் : பன்னிகுட்டி ராம்ஸ். )
.
.

04 July 2011

Google-க்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு..?!!

 
வர வர இந்த கூகுள்காரனுக்கு
திமிர் அதிகமாயிட்டே இருக்கு..

ரெண்டு நாள் முன்னாடி எல்லா
Blog-லயும்  Problem இருந்தது.. ஆனா
அதை கூகுள் கண்டுக்கலை.. உடனடியா
சரி பண்ண எந்த Step-ம் எடுக்கலை..

பல பிளாக் ஓனர்ஸ்க்கு இது தெரியும்..
ஆனாலும் " இந்த பூனைக்கு யார்ரா
மணி கட்டறதுன்னு " பயந்துட்டு
அமைதியா இருந்துட்டாங்க...

ஆனா என்னால எல்லாம் அப்படி
இருக்க முடியாது..

" நாங்கல்லாம் புலிக்கே நெயில் பாலீஷ்
போடறவங்க...! "

வந்த கோவத்துல உடனே கூகுளை
செமையா திட்டி ஒரு Mail போட்டேன்
பாருங்க..

அவங்க பதறிட்டு அன்னிக்கு நைட்டே
Problem-ஐ சரி பண்ணிட்டாங்க..

ம்ம்.. அந்த பயம் இருக்கோணும்..!

அந்த மெயில் இதோ....


Hi Gokul.. sorry.. Google,

I ' Gokulathil suriyan ' Blog owner Venkat..
Two days my blog No Working,
No Commenting, No Voting..

This do.. Problem., That do.. Problem..
All do Problemo Problem..

First, I think.. I grow, You Jealous
and do Sadhi.. I angry a lot..

Then I talk other Blog owners..
find all same Problem..
So, Coming angry I control..

You Idiot.. Why No steps u take..?

You think ..You Big Appatakkar..??
You think Nobody ask..??

I here.. I ask.. Keep Mind..!!

Respectfully You problem solve now..
Else, I bad angry..

Once I angry, I dont know what do..
Then i no porumai asking.. only Attacking..

So You go and do the Problem right...

With Love.,
Venkat

டிஸ்கி : இப்பவாச்சும் நான் " Oxford University-ல "
தான் படிச்சேங்கறதை நம்பறீங்களா..?
.
.