சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

27 August 2010

உள்குத்து...!!!டிஸ்கி : இந்த பதிவு
அனைத்துலக கணவர்களின் சார்பாக..,

" மனைவி எது செஞ்சாலும்
அதுல ஒரு அர்த்தம் இருக்கும்..!! "
இப்படின்னு ஒரு பெரியவர்
சொல்லி இருக்காரு.. -

அது சரி..., ஆனா..,
அதுல ஒரு உள்குத்தும்
இருக்குமோன்னு நான்
சந்தேகப்படறேன்..

1. Function-க்கு கிளம்பறப்ப
எவ்ளோ அழகான Dress-ஐ
நாம போட்டு இருந்தாலும்..

' இது நல்லாவே இல்லைங்கன்னு '
சொல்லி...., நம்ம பீரோல இருந்து
வேற Dress-ஐ அவங்களே Select
பண்ணி தர்றாங்களே...

அது...

** நாம அழகா தெரியவா..?

இல்ல

** நம்மகூட வரும்போது அவங்க
Better-ஆ தெரியவா..??


2. நாம எவ்ளோ சொல்லியும்
கேட்காம.., " சுறா ", " அசல் "
இந்த மாதிரி படத்துக்கு நம்மள
கூட்டிட்டு போக சொல்றாங்களே..

அது..

** படத்தை பார்க்கவா..?!!

இல்ல

** படத்தை பார்க்க முடியாம.,
நாம படற அவஸ்தையை பார்க்கவா..?!


3. பசங்களுக்கு " Homework " சொல்லி
தர சொல்றாங்களே..

அது...

** பசங்க Homework முடிக்கவா..?

இல்ல

** பசங்ககிட்ட நம்ம Image-ஐ
முடிக்கவா..??


4. 'அடுப்புல பால் வெச்சிருக்கேன்
ஒரு நிமிஷம் பார்த்துக்கோங்கன்னு '
அப்பப்ப ஒரு பெரிய வேலை
நமக்கு தர்றாங்களே...

அது..

** பால் பொங்காம இருக்கவா..?

இல்ல

** பால் பொங்கின அப்புறம்
நம்மள பொங்கவா..??


5. ' 2 நாள் எங்க அம்மா வீட்ல
இருந்துட்டு வர்றேன்னு ' போனா..
அங்கேயிருந்து ஒரு நாளைக்கு
3 - 4 தடவை நமக்கு போன்
பண்றாங்களே..

அதுக்கு காரணம்...

** நம்ம மேல உள்ள அன்பா..?

இல்ல

** நம்ம மேல உள்ள நம்பிக்கையா..??
.
.

38 Comments:

DrPKandaswamyPhD said...

எல்லாத்துலயும் உள்குத்து இருக்கு நண்பா, பாத்து சூதானமா நடந்துக்க, எடக்கு மடக்கா எதாச்சும் பண்ணி மாட்டீக்காத.

சிங்கக்குட்டி said...

:-) ஹ ஹ ஹ...

Jey said...

same blood!!!, super...:)

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

உள்குத்தெல்லாம் சூப்பர்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

சேலம் தேவா said...

எல்லாத்துலயும் 2வது ஒரு option சொல்லியிருக்கீங்க பாருங்க!!அதெல்லாம்
தான் original...ரொம்ப அனுபவிச்சு(!!??) எழுதியிருக்கீங்க போல...

Chitra said...

ம்ம்ம்ம்....... முதலில் answer A என்று நினைத்தேன்..... அப்புறம், B கூட நல்ல சாய்ஸ் ஆகத்தான் தெரியுது.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

ரொம்ப பொங்கி இருக்கீங்க.......

S.M.Raj said...

அனுபவம் பேசுது ....

அருண் பிரசாத் said...

என்னதான் இருந்தாலும் ஒரு கல்யாணமானவரின் கஷ்டம், இன்னோரு கல்யாணமானவருக்குதான் தெரியும்

(சும்மா follow up -காக)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இப்படி ஒரு போஸ்ட் போட்டிருக்கீங்களே,

* உங்க அனுபவத்தை சொன்னீங்களா?

அல்லது

** எங்க கஷ்டத்தை கிண்டல் பண்ணினீங்களா?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மூணு மணி நேரத்தில் 21 வோட்டு விழுந்திருக்கு?

சரிதான், ரொம்ப பேர் பாதிக்கப் பட்டிருக்காங்க, போலிருக்கு!

T. Arun Chakaravarthy said...

Super!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதுக்குதான் இந்த மாதிரி வயசானவங்க (வெங்கட், JEY ,அருண்) ப்ளாக் பக்கம் வரக் கூடாதுன்னு சொல்றது.

அருண் பிரசாத் said...

1. //Function-க்கு கிளம்பறப்ப
எவ்ளோ அழகான Dress-ஐ
நாம போட்டு இருந்தாலும்//

அப்ப பார்த்தாலும் Blue color dress போட்டா வேற என்ன செய்வாங்க

2. // " சுறா ", " அசல் "
இந்த மாதிரி படத்துக்கு நம்மள
கூட்டிட்டு போக சொல்றாங்களே//

வீட்டுல நீங்க போடுற மொக்கைக்கு இது எவ்வளோ மேல்னு கூட்டிட்டு போய் இருப்பாங்களோ?

3. //பசங்களுக்கு " Homework " சொல்லி
தர சொல்றாங்களே//
இன்னொரு முறை நாங்களாம் படிக்கறப்போ, அப்படி படிச்சோம், இப்படி படிச்சோம்னு சொல்ல கூடாது இல்ல

4. //'அடுப்புல பால் வெச்சிருக்கேன்
ஒரு நிமிஷம் பார்த்துக்கோங்கன்னு '
அப்பப்ப ஒரு பெரிய வேலை
நமக்கு தர்றாங்களே.//
அப்ப சமையல் நீங்க செய்யலையா? உங்க மிஸஸ் கூட கொஞ்சம் பேசனுமே!

5. // 2 நாள் எங்க அம்மா வீட்ல
இருந்துட்டு வர்றேன்னு ' போனா..
அங்கேயிருந்து ஒரு நாளைக்கு
3 - 4 தடவை நமக்கு போன்
பண்றாங்களே//
உங்கள பத்தி ந்ல்லா தெரிஞ்சி வச்சிருக்காங்க.

சாம்பாருக்கு உப்பு போடனுமா? சுடுதண்ணி அடுப்புலதான் காயவெக்கனுமா? பையனுக்கு என்ன கலர்(?!) யூனிபார்ம் போடனும்னு நீங்க பதிலுக்கு 10 முறை கால் பண்ணுறத ஏன் சொல்லலை?

அருண் பிரசாத் said...

@ ரமெஷ்
//இதுக்குதான் இந்த மாதிரி வயசானவங்க (வெங்கட், JEY ,அருண்) ப்ளாக் பக்கம் வரக் கூடாதுன்னு சொல்றது//
இதுக்கு தான் ஒழுங்கா படிச்சி காலேஜ் போகனும்னு சொல்லுறது. பாருங்க, யாரும் பொன்னு குடுக்க மாட்டேங்கறாங்கன்றத எவ்வளவு டீசண்டா சொல்லுறாரு

Yoga.s said...

why are you not ask these questions to your wife?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Arun & Ramesh
ஹலோ, நமக்குள்ளேயே கலாய்ச்சா அது நம்ம சங்கத்துக்குத் தான் கேவலம், என்ன இது சின்னபுள்ளத் தனமா இருக்கு?

TERROR-PANDIYAN(VAS) said...

தல எப்பவும் போல பதிவு நல்ல சிரிப்புபுபுபு....

பதிவுலகில் பாபு said...

நல்லாயிருக்கு.. :-)))))))..

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண் & ரமேஷ்

என்ன இது? நீங்களே உங்கள கலாய்ச்சா அப்புறம் நாங்க என்ன செய்ரது? போ போய் இரண்டு பேரும் பெஞ்சி மேல ஏறி நில்லு...

அருண் பிரசாத் said...

@ Terror & பெ.சொ.வி
//நமக்குள்ளேயே கலாய்ச்சா அது நம்ம சங்கத்துக்குத் தான் கேவலம்//

ஹி ஹி ஹி, வெங்கட் அவரையே அவர் கலாய்சிக்கும்போது, நாம்ம சங்க ஆளுங்க நமக்குள்ளே கலாய்ச்சா தப்பில்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என்ன இது? நீங்களே உங்கள கலாய்ச்சா அப்புறம் நாங்க என்ன செய்ரது? போ போய் இரண்டு பேரும் பெஞ்சி மேல ஏறி நில்லு...///

பங்காளிகளுக்குள்ள ஆயிரம் இருக்கும். யாருப்பா அது இடைல...இடைல யாராவது வந்தா சும்மா இருக்க மாட்டோம்.

TERROR-PANDIYAN(VAS) said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//@ Arun & Ramesh
ஹலோ, நமக்குள்ளேயே கலாய்ச்சா அது நம்ம சங்கத்துக்குத் தான் கேவலம், என்ன இது சின்னபுள்ளத் தனமா இருக்கு? //

தல சீக்கிரம் சமாதானம் பண்ணி வைங்க...ஏற்கனவே ரசிகன் வருவது இல்லை. தலைவி வாரத்துகு 6 நாள் லீவ்.. இருக்கது 3 பேர் அதுல இரண்டு பேர் அடிச்சிடா நீங்க தனியா என்ன செய்விங்க பாவம்.... பயமா இருக்காத

ஜில்தண்ணி - யோகேஷ் said...

அதுக்குத்தான் இந்த கல்யாணம் ஆன பெருசுங்க ப்ளாக் பக்கம் வரக்கூடாதுன்னு சொன்னேன்

இப்ப குத்துடே கொடையுதேன்னா என்னா பண்றது,எனக்குத்தான் :)

ப.செல்வக்குமார் said...

ஹி ஹி .. எனக்கு அவ்வளவு அனுபவம் பத்தாதுங்க ..

அனு said...

இதுக்கு எதிர் கமெண்ட் போடாட்டி நம்ம image என்ன ஆகுறது??

எந்த functionக்கு கிளம்பினாலும் அதே Blue Shirt & Navy Blue Pantஐயே போடுறீங்களே, அது...
அதுல நீங்க நல்லா இருக்கீங்கன்றதுக்காகவா?
இல்ல
அதுல மட்டும் தான் நீங்க நல்லா இருக்கீங்கன்றதுக்காகவா??
--------------------------------------------------------
என்னவோ Bush பேரன் மாதிரி எப்பவும் BBC, Star, NGC இந்த மாதிரியே பாக்குறீங்களே, அது...
அதுல வர்ற Scenesஅ பாக்கவா?
இல்ல
நீங்க விடுற Sceneஅ காட்டவா??
--------------------------------------------------------
'அவனெல்லாம் எங்க படிச்சான்.. என்னைப் பாத்து காப்பி அடிச்சே பெரிய ஆளாகிட்டான்'னு சொல்றதெல்லாம்...
உண்மையான மேட்டரா?
இல்ல
நீங்க விடுற பீட்டரா??
--------------------------------------------------------
எத்தனை தடவை பாத்துக்க சொன்னாலும், எல்லா தடவையும் பாலை பொங்க விடுறீங்களே, அது...
பாலை கவனிக்காததாலயா?
இல்ல
பக்கத்து வீட்டு ஜன்னலை கவனிச்சதாலயா??
--------------------------------------------------------
நீங்க இல்லாதப்போ உங்க ஃப்ரெண்ட்ஸ்-க்கு ஃபோன் பண்ணிக் கேட்டா, ஒரே சமயத்துல பத்து பேர் வீட்லயும் இருக்குறீங்களே, அது...
சித்து வேலையா?
இல்ல
உங்க வெத்து வேலையா??

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஊர்ல எல்லாரும் ஒரே மாதிரியா இருக்காங்க..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ TERROR
//தலைவி வாரத்துகு 6 நாள் லீவ்.. //

தலைவி கமெண்ட் பாத்தீங்களா? இப்படி ஒரு கமென்ட் போட்டா எத்தனை நாள் வேணும்னாலும் லீவ் எடுக்கலாம், புரியுதா?

வெங்கட் said...

@ To All.,

இந்த பதிவுக்கு Comment போட்ட
எல்லோருக்கும் Thanks..,


" திஸ் ஈஸ் ஓபினிங்..
யூ ஸி எண்டிங்....!! "
( ரஜினி Style-ல் படிக்கவும்.. )

அனு said...

@பெ.சொ.வி

//தலைவி கமெண்ட் பாத்தீங்களா? இப்படி ஒரு கமென்ட் போட்டா எத்தனை நாள் வேணும்னாலும் லீவ் எடுக்கலாம், புரியுதா?//

என்ன இருந்தாலும் நம்ம கட்சிகாரங்க கட்சிகாரங்க தான்.. என்ன ஆனாலும் விட்டுக் கொடுக்கறதில்ல..

@டெரர்

இப்பவாவது எங்க ஒற்றுமைய புரிஞ்சுக்கிட்டீங்களா??
ஆமா, வெளியூர் ப்ளாக்ல wantedஆ போய் அடி வாங்கிட்டு வந்த அதே டெரரா நீங்க??

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு
//@டெரர்

இப்பவாவது எங்க ஒற்றுமைய புரிஞ்சுக்கிட்டீங்களா??
ஆமா, வெளியூர் ப்ளாக்ல wantedஆ போய் அடி வாங்கிட்டு வந்த அதே டெரரா நீங்க??//

ஆமங்க.. VASக்கு தில்லும் லொள்ளும் அதிகம்னு சொல்லி தெரியனுமா? நாங்க எல்லாம் சுனாமில பல் துலக்கி, எரிமலை குழம்புல குளிச்சி, சூரியனுக்கு போய் தலை காய வைக்கரவங்க...

Anonymous said...

@அருண்
// சாம்பாருக்கு உப்பு போடனுமா? சுடுதண்ணி அடுப்புலதான் காயவெக்கனுமா? பையனுக்கு என்ன கலர்(?!) யூனிபார்ம் போடனும்னு...

உங்க comments சூப்பர்.

Mohamed Faaique said...

நல்லாயிருக்கு தல...

Maduraimohan said...

super :)

RVS said...

பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமில்லையோ... ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்

santhosh said...

ஏனுங்க நீங்க சொல்றத பாத்தா அடிக்கடி வாங்குன அனுபதுல பேசுற மரியே தெரியுதுங்களே உண்மைங்களா...???

வழிப்போக்கன் said...

நியாயமான டவுட்டு.

ராஜா said...

எப்படி வெங்கட் அண்ணே பெரிய ஆளுண்ணே நீங்க...