சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

18 March 2013

சொல்லவே இல்ல....?!!!

அடுத்த மாசம் எங்க ஊர்ல பண்டிகை..
அதுக்காக துணி எடுக்க போனோம். 

கிட்டதட்ட ரெண்டு வருஷமாவே 
என் Wife " ரோஹிணி சில்க்ஸ் " தவிர 
வேற எங்கேயும் Sarees எடுக்கறது இல்ல.. 

இங்கே தான் விலை ரொம்ப கம்மியாம்.

( வேற கடையில 1500 ரூபாய்க்கு விக்கிற 
சேலை.. இங்கே வெறும் 1490 மட்டுமே... )

நேத்து ரோஹிணி சில்க்ஸ்ல்...

நான் போனதும் ஓரமா ஒரு பெஞ்ச்ல 
உக்காந்துகிட்டேன்... 

" ஏங்க.. உள்ளே வரலையா..? "

" இல்லம்மா... நீ போயி பாரு...! "

நான் டேபிள்ல இருந்த ஒரு கேட்லாக்கை 
எடுத்து பொம்மை பார்க்க ஆரம்பிச்சேன்....

" சரி.. அதுல எதாவது நல்லா இருக்கான்னு 
பாத்துகிட்டு இருங்க.. வந்துடறேன்..! "

என் Wife Sarees பார்க்க போயிட்டாங்க..
ஒரு 20 நிமிஷம் கழிச்சி வந்தாங்க...
கையில ஒரு Saree கூட இல்ல...

" இன்னும் ரெண்டு நாள்ல புது Stock
வருதாம்.. அப்ப வரலாம்க..! "

" ம்ம்.. சரி...! "

" இந்த கேட்லாக் பாத்தீங்களே.. இதுல
எதாவது நல்லா இருக்கா..? "

" ஒண்ணு., ரெண்டு ஓ.கே.. "

" எங்கே குடுங்க பார்க்கலாம்...! "

அந்த கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க,,

" ஏங்க... இந்த 17-ம் பக்கம் பாருங்க...
இது நல்லா இல்ல...? "

" ம்ஹூம்... நல்லா இல்ல..! "

" இந்த 32-ம் பக்கம்... இது எப்படி..? "

" சுமார் தான்....! "

கொஞ்ச நேரம் கழிச்சி..

" இந்த 59-ம் பக்கம் பாருங்க.. "

" ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை..
மூக்கு சப்பையா இருக்கு..! "

" என்னாது மூக்கு சப்பையா இருக்கா..? "

என் Wife முகத்துல ஒரு தீப்பொறி
தெரிஞ்சது..

" அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல
இருந்த பொண்ணுங்களதான் பாத்துட்டு
இருந்தீங்க..?? சேலையை பார்க்கல...?! "

" சேலையைதான் பார்க்கணுமா...?
அதை நீ சொல்லவே இல்ல.. அவ்வ்வ்..!! "
.
.

12 March 2013

தெய்வமே...! நீங்க எங்கேயோ போயிட்டீங்க...!!

நாங்க புதுசா 2 ஜரிகை மிஷின் 
வாங்கினோம்.. அதை மெயிண்டெய்ன் 
பண்ணிக்கறது என் பொறுப்பு..


அதுல எனக்கு ஒரு பிரச்னை...

அந்த மிஷினை ஓட்றவன் ஒரு 
நார்த் இந்தியன்.

அவனுக்கு ஹிந்தி மட்டும் தான் தெரியும்..

ஆனா 15 மொழியில சரளமா எழுத., 
படிக்க தெரிஞ்ச எனக்கு அந்த பாழாபோன 
ஹிந்தி மட்டும் தான் தகராறு.. 

ஆரம்பத்துல அவன்கிட்ட கம்யூனிகேட் 
பண்ண கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. 
ஆனா போக போக சரியா போச்சு.. 
( ஹி., ஹி., அவன் தமிழ் கத்துகிட்டான்.. )

ஒரு நாள் Evening... நானும் , 
என் அசிஸ்டெண்ட் பிரபுவும் 
Factory-க்கு போனோம்... 

Factory கதவு திறந்து இருந்தது., 
மிஷின் ஓடிட்டு இருந்தது, ஆனா 
அவனை காணோம்..

நான் பிரபுவை குழப்பமா பாக்க...

" பாஸ்... அவன் டீ சாப்பிட போயி 
இருப்பான்னு நினைக்கிறேன்..! " 

" உள்ளே இருபதாயிர ரூபா Materials
இருக்கு.. இவனை நம்பி விட்டுட்டு போனா 
இப்படியா கதவை திறந்து வெச்சிட்டு போறது...? "

" நானும் நாலஞ்சு தடவை சொல்லி 
பாத்துட்டேன் பாஸ்.. மறுபடி மறுபடி 
இப்படிதான் பண்றான்...! "

" ஓஹோ... சரி அவனுக்கு போனை போடுங்க...! " 

பிரபு போனை போடவும்.... Factory-க்கு 
உள்ளே இருந்து ரிங்டோன் வந்தது..

" பாஸ்.. அவன் மொபைல் இங்கே தான் 
இருக்கு...! "

உடனே எனக்கு டக்னு ஒரு சூப்பர் ஐடியா (!?!)..

" பிரபு., அவன் மொபைலை எடுத்துகிட்டு 
உங்க வீட்டுக்கு போயிடுங்க...! சுவிட்ச் ஆப் 
பண்ணி வெச்சிக்கோங்க... ஒரு மணி நேரம் 
கழிச்சி அவன்கிட்ட குடுங்க.... "

" எதுக்கு பாஸ்..? " 

" இது நான் அவனுக்கு குடுக்கிற 
ஷாக் ட்ரீட்மெண்ட்... அப்புறம் பாருங்க 
ரிசல்ட்டை...! "

" புரியலையே...! "

" நம்ம Materials காணாம போனா 
அது அவனை பெருசா பாதிக்காது.. 
ஆனா.. அவன் மொபைல் காணோம்னா..?! "

இதை கேட்டு பிரபு புல்லரிச்சி போயிட்டார்..

( தெய்வமே...! நீங்க எங்கேயோ போயிட்டீங்க... )

நாங்க Plan பண்ணின மாதிரியே நடந்தது..

ஒரு வாரம் கழிச்சி. 

பிரபு Factory-ல இருந்து போன் பண்ணினார்.... 

" பாஸ்... உங்க ஷாக் ட்ரீட்மெண்ட் ரிசல்ட்
கிடைச்சிடுச்சு... "

" குட்.. குட்... இப்ப Factory கதவை பூட்டிட்டு
போயிருப்பானே...!?! "

" இல்ல பாஸ்.. கதவு திறந்துதான் இருக்கு..
ஆனா மொபைலை மட்டும் எடுத்துட்டுகிட்டு
போயிருக்கான்..! "

" ??!?!??!!?!? "
.
.

05 March 2013

" உங்க டூத்பேஸ்ட் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

" உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு
சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி
யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்...

அப்புறம்
" உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு
அனுஷ்கா கேட்டாங்க... அதனால அதையும்
வாங்கினேன்..

( ஹி., ஹி., அனுஷ்கா பீல் பண்ணினா
எனக்கு மனசு தாங்காதுல்ல... )

சரி மேட்டர்க்கு வருவோம்...

கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு
அது இருக்கா..? இது இருக்கான்னு
கேட்டாங்களே தவிர... அதுல நிக்கோடின்
இருக்குன்னு யாருமே சொல்லலை...

என்னாது நிக்கோடினா..?!!

( அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க 
கூட விட மாட்டீங்களா..?!!! )

DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research )
நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின் 
இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க.. 

( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும் )

Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி
24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 
7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது 
கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு.. 

ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின்
இருக்காம்.. ஆனா Colgate Herbal-ல
அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல
பல்லு விளக்கினா... அது 9 சிகரெட்
குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!

இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே 
வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு 
எதுவுமே தெரியாம பாத்துகிட்ட  நம்ம 
பத்திரிக்கை , டி.வி சேனல்களோட 
சேவையை எப்படிதான் பாராட்றது..?

" என்னங்க இது அநியாயமா இருக்கு..? 
நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு 
தானே கேக்க வர்றீங்க..? 

ம்ம்... என்னங்க பண்றது..? 

காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே 
சாராயம் விக்கிற நாடுங்க இது..

இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!


Sources :