சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

30 November 2010

பீ கேர்புல்..!!

நேத்து Evening..
என் Room-ல ஹாயா உக்காந்துட்டு

" மயங்கினேன்.,
சொல்ல தயங்கினேன்.,
உன்னை விரும்பினேன் உயிரே..!! "

இந்த பாட்டை ஜாலியா பாடிட்டு
இருந்தேன்..

அப்ப ரூமுக்குள்ள வந்த என் மனைவி..

" என்ன பாட்டெல்லாம் பலமா
இருக்கு..? "

" உன்னை நினைச்சேன்.. பாட்டு
தானா வருது....!! "

( எப்படி " ICE " வெச்சேன் கவனிச்சீங்களா..?!! )

இதை கேட்டு என் Wife என்னை
டெரரா ஒரு லுக் விட்டாங்க..

" ஏன்..? என்ன ஆச்சு..?
ஏன் அப்படி முறைக்கிற..? "

" என்னை நினைச்சா பாடுனீங்க..? "

" பிராமிஸா உன்னை நினைச்சி தான்..!! "

" மயங்கினேன்., தயங்கினேன்.,
விரும்பினேன்.. என்னா இது..?

எல்லாமே Past Tense..!! அப்ப
Present Tense-ல ஒண்ணும் இல்லையா..?!"

( ஆஹா.. நம்மள அடிக்கணும்னு முடிவு
பண்ணிட்டா எப்படி எல்லாம் குத்தம்
கண்டுபிடிக்கறாங்கடா சாமி..!!
அவ்வ்வ்வ்வ்வ்........!!!! )

டிஸ்கி : இந்த Post-க்கு ரஜினி சார் படம்
எதுக்குனு தானே பாக்குறீங்க..?

எல்லாம் ஒரு விளம்பரம் தான்.,
ரஜினி சாருக்கு..!!

ஹி., ஹி., ஹி..!!
( அடங்க மாட்டோம்ல... )
.
.

27 November 2010

நொந்தலாலா..!!
டிஸ்கி : இது " நந்தலாலா " பட விமர்சனம் அல்ல..

அப்படியே கீழே இருக்கிற Exam Paper-ஐ
கொஞ்சம் நல்லா பாருங்க..

இது 3வது படிக்கிற என் பையனோட
Maths Exam Paper..

இந்த சின்னஞ்சிறு குழந்தைகளை
இயல்பாய் இருக்க விடாமல்.,
இயந்திரமாய் மாற்ற துடிக்கும்
இந்த கல்வி முறை..

எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது..??

ரொம்ப பாவம் குழந்தைகள்...!!

" புத்தகங்களே சமத்தாக
இருங்கள்..!!
எங்கள் குழந்தைகளை
கிழித்து விடாதீர்கள்..!! "

- கவிக்கோ அப்துல் ரஹ்மான்.
.
.

25 November 2010

லிவிங்க் டுகெதர் ( 25 + )என்ன அப்படி பார்க்கறீங்க..?

என்கிட்ட இருந்து இப்படி
ஒரு பதிவை நீங்க எல்லாம்
எதிர்பாக்கலை தானே..?!!

என்ன பண்றது..?

* வீதியில நடக்க முடியல.,

* நாலு பேர் கிட்ட Chat
பண்ண முடியல..

* டீக்கடைக்கு போயி
ஒரு டீ கூட குடிக்க முடியல..

" லிவிங் டுகெதர் " பத்தி பதிவு போடாத
நீயெல்லாம் ஒரு பதிவரான்னு..?
நல்லா நாக்கை பிடுங்கிக்கிற
மாதிரி கேக்கறாங்க..!!

" லிவிங் டுகெதர் " பத்தி
நம்ம கருத்தை தெரிஞ்சிகிட்டு.,
அதுபடி Follow பண்ண ஒரு
2 கோடி பேர் ஒத்தைக்கால்ல
நிக்கறதா வேற ஒரு தகவல்..

இளைய பாரதமே நம்ம நம்பி
இருக்கும் போது அதுக்கு
சரியான பாதையை காட்டுறது
நம்ம கடமையாச்சே..!!

அதான் சரின்னு நானும் இந்த
பதிவை எழுதிட்டேன்..

" லிவிங் டுகெதர்" இது நல்ல விஷயம்.

சொல்ல போனா நாம எல்லோருமே
அதை Follow பண்ணனும்..

ஏன்னா.. அந்த காலம் மாதிரி
இப்ப இல்ல..

இப்பல்லாம் ஆண்களுக்கு சமமா
பெண்களும் நல்லா படிச்சிருக்காங்க.,
வேலைக்கும் போக ஆரம்பிச்சுட்டாங்க..

So., கணவன் மனைவிக்குள்ள
சண்டைகள்., EGO Problem
இதெல்லாம் இப்ப ரொம்ப சகஜம்..

அதுக்காக கோவிச்சுக்கிட்டு.,
சண்டை போட்டுகிட்டு..,

" உங்க அப்பா வீட்டுக்கு போ " ன்னு
Husband சொல்றதும்..,

" நான் தனியா ஹாஸ்டல்ல போயி
தங்கிக்கிறேன்னு ., " Wife சொல்றதும்
இப்ப ரொம்ப அதிகமாகிட்டு வருது..!!

Arranged Marriage-ஆ இருந்தாலும் சரி.,
Love Marriage-ஆ இருந்தாலும் சரி.,

இந்த மாதிரி சின்ன சண்டைகளுக்காக
கணவனும், மனைவியும்
தனித்தனியா வாழறது..,
கோர்ட்., கேஸ்னு போறது..
இதெல்லாம் நல்லதா..?!!

யோசிங்க..!! யோசிங்க..!!

அதனால.., கணவன் - மனைவி
ரெண்டு பேரும் மனசுவிட்டு
அவங்க பிரச்சினைகளை பேசி.,
ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து.,
ஒரே வீட்ல சந்தோஷமா
" லிவிங் டுகெதரா " இருங்க..

அது எல்லோருக்குமே நல்லது..!!

( என்ன நான் சரியா சொல்றேனா..?!! )

டிஸ்கி : இது திருமணம் ஆனவர்களுக்காக
எழுதப்பட்ட பதிவு. இந்தியரின் சராசரி
திருமண வயசு 25..

அதான் இந்த Post Title-ல 25+.

ஹி., ஹி., ஹி..!!
.
.

22 November 2010

2G - பிரதமர் வெளியிடும் அதிர்ச்சி தகவல்..!!
டிஸ்கி : இது சீரியஸ் அரசியல் பதிவு அல்ல..
ஒரு ' சிரி' யஸ் பதிவு..!!

Flash News : Parliament வாசல்.
நமது பிரதமர் மன்மோகன் சிங்
அவர்களை நிருபர்கள் படை சூழ்கிறது...

" 2G பத்தி வாயே திறக்க
மாட்டேங்குறீங்களே.. ஏன்..? "

" அது வந்து.. அது வந்து..!! "

" ஒரு பிரதமரா இருந்துகிட்டு
இப்படி மௌனமா இருந்தா
என்ன சார் அர்த்தம்..? "

நமது பிரதமர் தர்மசங்கடத்தில்
நெளிகிறார்.. ஆனாலும் நிருபர்கள்
அவரை விடுவதாய் இல்லை..

கொக்கி பிடி கேள்விகளால்
மடக்குகிறார்கள்..

" 2G பத்தி உங்களுக்கு என்ன தெரியுமோ
அதை மக்களுக்கு சொல்லுங்க.."

" சரி சொல்றேன்... எழுதிக்கோங்க..

எனக்கு தெரிஞ்ச 2G..

ஒண்ணு Capital ' G '
இன்னொன்னு Small ' g '.. "

நிருபர் படை Shock ஆகிறது..

" என்ன சார் ஜோக் அடிக்கிறீங்க..!! "

" நான் என்ன பண்றது..?
எழுதி குடுத்த டயலாக்கை
தானே சொல்ல முடியும்..?!! "

" அப்ப Parliament-லயும் இதை தான்
சொல்ல போறீங்களா..? "

" No., No., அங்கே உண்மையை
தான் சொல்ல போறேன்.. "

" அதென்ன உண்மை..? "

" எனக்கு தெரிஞ்ச 2G..

ஒண்ணு சோனியா-G
இன்னொன்னு ராகுல்-G "

" இதுக்கு நீங்க பேசாமலே
இருந்து இருக்கலாம்...!! "
.
.

19 November 2010

அரசியல் ஆத்திச்சூடி..!!

ரிச்சந்திரன் மாதிரி ஆக்ட் குடு.,

னவரை சுருட்டு.,

லவசம் குடு.,

யையும் கட்சியில் சேர்.,

ண்மையை மறை.,

ழலை உலகமயமாக்கு.,

திர்கட்சி மீது பழி போடு.,

ட்டிக்கு போட்டி அறிக்கை விடு.,

ந்து காலேஜாவது கட்டு.,

பாமாவுக்கு விருந்து வை.,

டி ஓடி துட்டு சேர்.,

ஓளவை சொல் கேக்காதே.,

( Last but not Least.. )

க்கு தப்பாய் மாட்டிக்காதே..!!

டிஸ்கி : என் Blog பத்தி யாராவது
" ஆத்திச்சூடி " எழுதுனீங்க...,
பிச்சிபுடுவேன் பிச்சி..!!

---------------------------------------------

( Mind Voice.. )

கொஞ்சம் கூட நம்ம மேல
பயமே இல்லையே..!!

சொன்ன பேச்சை கேக்காம
Comment Section-ல 9 ஆத்திச்சூடி
எழுதி வெச்சிருக்காங்களே...!
.
.

16 November 2010

பீ ஹாப்பி..!!

10th Result வந்திருந்த சமயம்..

நானும், என் Friend Mani-யும்
10th Pass ஆயிட்டோம்..,

( நாங்களே ஒருதடவை எங்களை
கிள்ளி பாத்துகிட்டோம்.. )

அப்பல்லாம் ஸ்கூலுக்கு போயி
Marksheet-ஐ வாங்கினாதான்
Marks Detail தெரியும்..

Mark Sheet-ஐ வாங்கினா..
அவன் Maths-ல 58%.. நான் 62%..
ஒரே குஷி எங்களுக்கு..

நான் : டேய் நீயும் Pass., நானும் Pass.
எப்படிடா..?

மணி : ஒருவேளை Valuation
சரியில்லயோ என்னமோ..?!!

நான் : ஹி., ஹி., ஹி..!!

இப்படி நாங்க சந்தோஷமா
சிரிச்சிட்டு இருந்தோம்..

கொஞ்சம் தள்ளி எங்க Classmate சுதா
அழுதுட்டு இருந்தாங்க..

மணி : Maths-ல Centum வரலையாம்..
4 மார்க் கம்மியா போச்சாம்...!!

நான் : டேய்.., இதெல்லாம் Too Much-ஆ
இருக்கேடா..

மணி : உன் Friend தானே..! போயி ரெண்டு
வார்த்தை ஆறுதலா சொல்லிட்டு
வாயேன்..

நான் : ஏன்டா இந்த கொலைவெறி..?!!
நான் அசிங்கப்படறதை பாக்க
அவ்ளோ ஆசையா உனக்கு..??

மணி : ஹி., ஹி., ஹி..!!
சரி நீ +1 எங்கே சேர போற..?

நான் : நல்ல School-ஆ பாத்து சேரப்போறேன்..

மணி : நல்ல School-ஆ..? அது எந்த School..?

நான் : இந்த சுதா பொண்ணு எந்த School-ல
சேரலையோ., அதெல்லாமே நல்ல
School தான்டா!!

( இதனால் தாங்கள் கூற வரும்
கருத்து என்னவோ..?? )

Wait.., Wait.. என்ன அவசரம்..?!!

இவ்ளோ சொல்லிட்டு அதை சொல்லாம
உங்கள விட்டுடுவோமா..?!!

கருத்து : சந்தோஷம்கிறது Mark-ல இல்ல.,
மனசுல இருக்கு..!!

டிஸ்கி 1 : இப்ப அந்த சுதா பொண்ணு
டாக்டர் ஆகி கஷ்டப்பட்டுட்டு இருக்கு..
ஆனா நாங்க Blog எழுதிட்டு / படிச்சிட்டு
சந்தோஷமா இருக்கோம்..

டிஸ்கி 2 : நானும்., சுதாவும் Drawing Competition-ல
கலந்துகிட்ட அழகை படிக்க ஆசைப்படறவங்க..
Click Here..
.
.

13 November 2010

காபி வித் அனு...!!இடம் : விஜய் Tv Studio..,

தமிழ்மணம் Top 20 பதிவர்கள் லிஸ்ட்ல
நமக்கு 8வது இடம் கிடைச்சாதால
' காபி வித் அனு ' நிகழ்ச்சியில கலந்துக்க
கூப்பிட்டு இருந்தாங்க..

நடு டிஸ்கி : இங்கே ' அனு ' என்பது
VKS தலைவலி ( Sorry ) தலைவி அனுவை
குறிக்கவில்லை.. அனுஹாசன் அவர்களை
குறிக்கிறது..

அந்த நிகழ்ச்சியில் இருந்து சில துளிகள்..

நான் : எனக்கு முன்னாடி இருக்குற
7 பேரை நிகழ்ச்சிக்கு கூப்பிடாம
என்னை கூப்பிட்டு இருக்கீங்களே.. ஏன்..?
TRP Rating Increase பண்றதுக்கு தானே..?

அனு : ரொம்ப ஓவரா போகுதே உங்க
கற்பனை..?அவங்கல்லாம் நிகழ்ச்சிக்காக
போன் பண்ணி Appointment கேட்டப்ப..
" Busy "-ன்னு சொல்லிட்டாங்க.. நீங்க
ஒருத்தர் மட்டும் தான்...

நான் : போதும்., போதும்.. இதுக்கு மேல
ஒண்ணும் சொல்ல வேணாம்..
.
அனு : ஓ.கே.. வாங்க Take போயிடலாம்..

நான் : ம்ம்.. ஓ.கே..

அனு : இப்போ நீங்க பிரபல பதிவர்
ஆயிட்டீங்க.. எப்படி சார் Feel பண்றீங்க..?

" இதுக்காக அவர் ஏன் பீல் பண்ணனும்..?
தமிழ் மக்கள் தானே பீல் பண்ணனும்..!! "

நான் : ஏய்.. யாரு அது....?

" ஹி., ஹி., ஹி..!! நான் தாங்க..
கேமராமேன்.. "

நான் : உனக்கு நேரம் சரியில்லைன்னு
நினைக்கிறேன்..

" எனக்கு மட்டுமா நேரம் சரியில்ல.,
விஜய் டி.வி-க்கு கூடத் தான் நேரம் சரியில்ல.."

நான் : சரி., உன்னை நான் அப்புறமா
கவனிச்சுக்கறேன்.. அனு நீங்க
கேள்வியை Continue பண்ணுங்க..

அனு : எப்படி சார் கொஞ்சம் கூட
" பந்தா " இல்லாம இருக்கீங்க..??

நான் : இந்த " பந்தா "., " விளம்பரம் "
இந்த வார்த்தைக்கு எல்லாம் என்ன
அர்த்தம்னே எனக்கு தெரியாது..
நீங்க முதல்ல என் Profile-ஐ படிங்க..

அனு : அப்ப இந்த Minmini.com,
Tamilblogger.com இதெல்லாம் என்ன..?

நான் : உங்களை Profile மட்டும்
தானே படிக்க சொன்னேன்..
Info Board எல்லாம் ஏன் படிக்கிறீங்க..?
ஆமா.., நீங்க ஏன் VKS தலைவி அனு
மாதிரியே பேசறீங்க..?

அனு : ஹி., ஹி., ஹி..!! பெயர் ராசியோ
என்னவோ..!! ஆமா Top 20 பதிவர்கள் List-ல
உங்க பெயரை பாத்ததும்..
உங்களுக்கு எப்படி இருந்தது..?

நான் : பெருசா ஒண்ணும் சந்தோஷப்படலை..

ஆனா ரமேஷ் Blog-ம்., பெ.சொ.வி Blog-ம்
அந்த லிஸ்ட்ல இல்ல.. அதுக்கு தான்
நான் உருண்டு., புரண்டு சந்தோஷப்பட்டேன்..

Thanks 2 தமிழ்மணம்..!!

அனு : ஆமா 1st Rank பக்கம் தான்னு
போட்டு இருக்கீங்களே..? இது
கொஞ்சம் ஓவரா இல்ல..

நான் : ஏன் அப்படி சொல்றீங்க..?

அனு : அதான் மங்குனி 2வது இடத்துல
இருக்காரே அவரை உங்களால
Overtake பண்ண முடியுமா..?

நான் : இதென்னங்க பிஸ்கோத்து மேட்டரு..

நாளைக்கே " ரஜினி தான் சூப்பர் ஸ்டாரா..? "

* " ஆமாம்" என்பவர்கள் " பாசிடிவ் "
ஓட்டு போடுங்க.

* " இல்லை" என்பவர்கள் " நெகடிவ் "
ஓட்டு போடுங்க

இப்படி கால்ல விழாத குறையா கெஞ்சி
ஒரு பதிவு போட்டா போதும்..

அதுல ஒரு 1500 ஓட்டு அள்ளிடலாம்..

அப்புறம் அடுத்த வாரம் நாம தான் No.1

அனு : கலக்குங்க வெங்கட்..

-----------------------------------------------

டிஸ்கி : மீதியை விஜய் Tvல இன்னிக்கு ( Sat )
நைட் 9 மணிக்கு பாருங்க..
.
.

10 November 2010

ச்சோ.. ஸ்வீட்..!!


ஒரு நாள் என் Wife.,
என்கிட்ட...

" ஏங்க.. உங்க பீரோவுல ஸ்வீட்
எதாவது வெச்சிருக்கீங்களா..? "

" ஏன்..? "

" இங்கே பாருங்க.. உங்க பீரோவுக்குள்ள
நிறைய எறும்பு போகுது..!! "

" எறும்பு தானே..!! அதுக்கு ஏன் இப்படி
பதறுற..? "

" ம்ம்.. நாளைக்கு Shirt போடுபோது
எறும்பு கடிக்கும்ல.. அப்ப தெரியும்
பதறுறது யாருன்னு.. "

ஒரு Sec யோசிச்சேன்..

" ஓ மை காட்..!! இந்த விஷயம்
எறும்புகளுக்கு எப்படி தெரிஞ்சது..?
சரி சரி சீக்கிரம் என் பீரோவை
Open பண்ணு... "

" ம்ம்.. பண்ணிட்டேன்.. "

" அப்படியே அந்த Locker-ஐ Open பண்ணு.. "

" ம்ம்.. அதையும் Open பண்ணிட்டேன்.."

" ஓ.கே. அங்கே என் Passport Size Photo
ரெண்டு இருக்கும்., எடுத்து வெளியே
வெச்சிடு..!! "

" ???!! "
.
.

07 November 2010

சிநேகா..., இது உண்மையா..?
டிஸ்கி : இது கிசு கிசு அல்ல..

லீவ் நாள்னு சொல்லி
ஹாயா Tv பாத்துட்டு இருந்தேன்..

சன் Tv-ல " வாழ்வை மாற்றலாம் வாங்க "
நிகழ்ச்சி ஓடிட்டு இருந்தது..

அதுல கலந்துகிட்டவங்க..
சிநேகாவும் & அவங்க அக்காவும்

அதுல சிநேகாகிட்ட ஒரு கேள்வி
கேட்டாங்க..

அது ரொம்ப Tough Question..
( நானா இருந்தா ' Pass ' சொல்லி இருப்பேன்..)

அந்த கேள்வி என்னான்னா..

" நீங்க அதிக தடவை பார்த்த
T.ராஜேந்தர் படம் எது..? "

சிநேகா : " வீராச்சாமி..!! "

இந்த பதிலை கேட்டதுல இருந்து
எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா
வருது..

சிநேகா..! உங்களுக்கு மனசாட்சியே
இல்லையா..?! தமிழ்நாட்டு மக்களை
பத்தி கொஞ்சமாவது சிந்திச்சி பார்த்தீங்களா..?!!

ஒருவேளை இந்த நிகழ்ச்சியை தலைவரு ( ?! )
பாத்துட்டு., புல்லரிச்சி போயி..,
புதுபடம் எதாவது ஆரம்பிச்சுட்டார்னா..??

ஐயோ..!! தூங்கிட்டு இருக்கிற சிங்கத்தை
சொறிஞ்சி விட்டா.. அது கடிச்சி.,
குதறாம விடாதே..!!

' சுறா ' கடிச்ச கடியே இன்னும்
ஆறலை..!!

அவ்வ்வ்வ்வ்வ்...........

டிஸ்கி : நீங்கல்லாம் இந்த சரித்திர புகழ்
வாய்ந்த நிகழ்ச்சியை பாக்காம தப்பிச்சி
இருந்தீங்கன்னா... விட்டுடுவோமா..
அதான் Posting-ஆ போட்டேன்..

" யான் பெற்ற துன்பம்
பெறுக இவ்வையகம்..!! "

அப்பாடா.. இப்பதான் நிம்மதியா இருக்கு.!!

ஹி., ஹி., ஹி..!!
.
.

05 November 2010

லைட்டா சிரிங்க - 2

No : 1 ( ஹோட்டலில் )

" ஒரு காபி எவ்ளோ..? "

" அஞ்சு ரூபா.. "

" எதிர் கடையில 50 பைசான்னு
போட்டு இருக்கே..?!! "

" டேய் லூசு.., அது ஜெராக்ஸ் காப்பிடா..!! "

* * * * * * * * * * * * * * * * * *

No : 2

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு
ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை
கொடுக்கணும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு..

* * * * * * * * * * * * * * * * * *

No : 3
( கல்யாண மண்டபம்.. )

"வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?
பொண்ணு வீட்டுக்காரரா..? "

" ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!"


* * * * * * * * * * * * * * * * * *

No : 4 ( Exam Question Paper... )

Sum :
Prove that LHS = RHS

( 2a+3b) X ( 10x+4y)=(9x+6)

ஒரு பையன் இதை எப்படி
Prove பண்ணினான்னா...

Ans :
( 2a+3b) X ( 10x+4y) = (9x+6)

(( 2a+3b) X ( 10x+4y)) X 0 = (9x+6) X 0

0 = 0

Hence Proved LHS = RHS


டிஸ்கி : லைட்டா சிரிங்க - 1 படிக்க Click Here
.
.

04 November 2010

' தீபா ' வலி - தீபாவளி..!!

Time : 9.45 PM
என் Friend சுரேஷ் மெடிக்கல் Shop..

நானும்., சுரேஷூம் பேசிட்டு
இருந்தோம்..

அப்ப எங்க Friend ஸ்ரீராம் வந்தான்..

" என்னடா இந்நேரத்துல..? "

" டேய் சுரேஷ்..! ரெண்டு தலைவலி
மாத்திரை குடு..!! "

சுரேஷ் அவனை கேவலமா
ஒரு லுக் விட்டுட்டு கேட்டான்...

" ஏன்.. உன் Wife உன் தலையில
ரெண்டு கொட்டு கொட்டுனாங்களா..? "

" யாரை பாத்து என்ன கேள்வி கேக்குற..?
மாத்திரையே என் Wife-க்கு தான்..!!

தலைவலிக்கே
ஒரு தலைவலி
வந்ததே..!!! ( மூணு ஆச்சரியக்குறி )

கவிதை எப்புடி..? "

இப்ப சுரேஷ் அவனை படுகேவலமா
ஒரு லுக் விட்டுட்டு சொன்னான்..

" இப்பதான்டா தெரியுது.., உன் Wife-க்கு
ஏன் தலைவலி வந்ததுன்னு.. "

" ஏன்..? "

" நம்ம புருஷன் இப்படி வீணா
போயிட்டானேன்னு பீல் பண்ணி
சுவத்துல போயி முட்டிகிட்டு இருப்பாங்க..!! "

" ??!!??!!... "

டிஸ்கி : ஸ்ரீராம் Wife பேரு " தீபா "

* * * * * * * * * * * * * * * * *

எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..!!
.
.