சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

27 February 2010

வாசகர்களை Comment எழுத வைப்பது எப்படி..?

ஐயோ பாவம்.,
உங்களுக்கும் இது தெரியாதா,,?
சரி வாங்க சேர்ந்தே யோசிப்போம்...

1. Comment எழுதி., ஓட்டு போடுற
வாசகர்களுக்கு பரிசு குடுக்கலாம்..
எவ்வளவு குடுக்கலாம்கிறது
உங்க Choice..
( இப்பல்லாம் ஓட்டுக்கு Rate ஏறிபோயிடுச்சி
அதையும் மனசுல வைங்க..)

2. சிறந்த Comment எழுதும் வாசகர்களை
குலுக்கல் முறையில தேரிந்தேடுத்து
Singapore Tour கூட்டிட்டு போகலாம்..
( 5 Days & 4 Nights )

3. தொடர்ந்து Comment எழுதும்
வாசகர்களுக்கு நேரு Stadium-ல
பாராட்டு விழா எடுக்கலாம்.

4. அதை விட முக்கியம்..,
நாம நல்ல பதிவா எழுதணும்..,
அப்ப அவங்களே Comment எழுதுவாங்க..

பின் குறிப்பு:
சரி வந்தது வந்தீங்க..
ஒரு Comment எழுதிட்டு போங்களேன்..
.
.

" நச்...! "டிஸ்கி : இது தல பத்தின
பதிவு இல்ல..,
தலைக்கு கிடைச்சதை
பத்தின பதிவு..!

விகடன் படிச்சிட்டிருந்த
என் மனைவி கேட்டாங்க...

மனைவி : ஏங்க.., உங்க Blog-ம் இப்படி
விகடன் வரவேற்பறையில வருமா..?

நான் : இதென்ன பிரமாதம்.,
நான் School-ல படிக்கும் போதே
விகடன்ல நிறைய எழுதியிருக்கேன்..
ஆனா., எங்க அப்பா திட்டினாருன்னு
விட்டுட்டேன்..

மனைவி : ஏன் திட்டினாரு..?

நான் : பின்ன.., புது Book-ல பேனாவ வெச்சி
கண்டபடி கிறுக்கினா, பார்த்திட்டு சும்மாவா
இருப்பாங்க..?!

என் மனைவி முறைச்சாங்க..!

அப்புறம் என்ன நடந்து இருக்கும்னு
புரியாதவங்க...,
முதல் வரி + தலைப்பு
சேர்த்து படிச்சி புரிஞ்சிக்கோங்க..!

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா..!
.
.

26 February 2010

Ice வெச்சா தப்பா..??!
10 -வது படிக்கும் போது
எங்களுக்கு ஒரு புது தமிழ் Miss
வந்தாங்க.,

அவங்கள பொறுத்தவரைக்கும்
"திருக்குறள் தான் வேதம்
திருவள்ளுவர்தான் கடவுள்.,"

அவங்களுக்கு Ice வெச்சா
பரிட்சையில நிறைய மார்க்
வாங்கலாம்ன்னு என் Friend
ஐடியா சொன்னான்.

சரி Ice வெக்கிறது எப்படி..?

Answer Paper - பிள்ளையார் சுழி
போடறதுக்கு பதிலா..

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு " -ன்னு
எழுதலாம்னு முடிவாச்சு..!

அப்படியே எழுதினோம்..!

என்ன ஆச்சரியம்..!
அதுவரைக்கும் 70 மார்க்
தாண்டாத நான்
80 மார்க் எடுத்திருந்தேன்.,

சுபம்...

Wait.., Wait..,

" அகற முதல எலுத்தெள்ளாம் ஆதி
பகவான் முதற்றெ உலகு " -ன்னு
எழுதி வெச்சிருந்த என் Friend
என்ன ஆயிருப்பான்னு நினைக்கறீங்க...?


திருவள்ளுவரே அவனை மன்னிச்சாலும்.,
எங்க தமிழ் Miss மன்னிக்கிறதா இல்ல..!

பின்னி எடுத்துட்டாங்கல்ல..!

" சிங்கத்து குகைக்குள்ளயே வந்து
சிறு நரி Film காட்டலாமா..? "
.
.

25 February 2010

கடிச்சா வலிக்குமா..?

* சென்னையில இருந்து லண்டனுக்கு
எவ்வளோ தூரம்..?

** ரொம்ப தூரம்........,

* முட்டை போடாத பறவை எது..?

** ஆண் பறவை.

* ராத்திரியில சூரியன் எங்கே போகுது..?

** எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை..

* பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..?

** Mrs.பில் கேட்ஸ்

* வருஷத்துல எந்த மாசத்துல
28 நாள் இருக்கு..?

** எல்லா மாசத்துலயும் தான்..

* 1984-ல நம்ம Prime Minister பெயர் என்ன.?

** Dr.மன்மோகன் சிங் ( 1984 -லயும் அவர் பெயர்
அதுதானே )

* இந்தியாவுக்கும்., இலங்கைக்கும்
என்ன வித்தியாசம்..?

** இந்தியா Map-ல இலங்கை இருக்கும்.,
ஆனா..,
இலங்கை Map-ல இந்தியா இருக்காது..

* ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து
இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..?

** ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருப்பீங்க..,
உங்களுக்கு தான் German பாஷை சுத்தமா தெரியாதே..!


பின் குறிப்பு : இதுக்கே வலிச்சா எப்படி..?
காலேஜ் போனப்ப எழுதி வெச்ச ஒரு
நோட்டு இப்பதானே கிடைச்சி இருக்கு..!
நாங்கல்லாம் காலேஜ் நோட்டுல
பாடத்தையா எழுதினோம்..!?
.
.

24 February 2010

செல்ல குழந்தையும் - ஒரு நல்ல பெயரும்..!


ஒரு குழந்தைக்கு நல்ல பெயர்
Choose பண்றது இருக்கே.., - அது
சந்திரமண்டலத்துக்கு ராக்கெட்
விடறத விட கஷ்டம்..,

குழந்தை பிறந்த உடனே நீங்களும் Internet.,
அந்த Book., இந்த Book- ன்னு எங்கெல்லாமோ
தேடி ஒரு பெயர் Choose பணணி வெச்சிருப்பீங்க..

அதுவரைக்கும் OK..,

அதைவிட்டுட்டு பார்க்கிறவங்கிட்ட எல்லாம்
" நல்ல பெயரா சொல்லுங்கன்னு " கேட்டீங்க..
நீங்க அவ்வளவுதான்..

முதல்ல நாம என்ன பெயர் Choose பண்ணி
இருக்கோம்னு கேட்பாங்க..,
நாமளும் சொல்லுவோம்..!

உடனே அந்த பெயருக்கு Numerology, Biology,
Zoology இதெல்லாம் சரியில்லைன்னு சொல்லிட்டு.,
அந்த பெயர்ல வீணாபோனவன் எவனாவது
இருப்பான்., அவனை உதாரணம் வேற
சொல்லுவாங்க..

நமக்கு மனசு கெட்டு போயிடும்..,

ஏதோ ஒரு Tv-ல வர்ற ஒரு நியூமராலஜிகாரங்கிட்ட
போயி நிப்போம்..

அவரும் 5000 ரூபா வாங்கிட்டு.,
ரெண்டு A., மூணு E., நாலு H வர்ற மாதிரி
ஒரு பெயரை Select பண்ணி குடுப்பாரு..
சமயதுல " Z "., " X " இதெல்லாம் கூட
வரும்..

அந்த பெயர் வீட்டு பெரியவங்களுக்கு
பிடிக்காது.., அப்புறம் இருக்கவே இருக்கு
தாத்தா., பாட்டி பெயரோ இல்ல
குலதெய்வம் பெயரோ..!

இனிமே.,
குழந்தைக்கு பெயரை Parents மட்டும்
Select பண்ணுங்க..

அதை விட்டுட்டு வேற யாரையாவது
Idea கேட்டீங்க.., அப்புறம் நீங்களும்
இதே மாதிரி ஒரு பதிவு எழுதுவீங்க..!

பீ கேர்புல்..!!
.
.

23 February 2010

அத்தை பொண்ணுங்க 3 பேரு..!


என் Friend ரவிக்கு 3 அத்தைகள்.,
ஆளுக்கு ஒரு பொண்ணு.,
So., 3 அத்தை பொண்ணுங்க..!

அந்த மூணு பேருக்கும்
ரவியை கட்டிக்கணும்னு ஆசை..
அவங்களுக்குள்ள ஒரு
போட்டின்னே சொல்லலாம்..!

நம்ம ஆளுக்கு ஒரு குழப்பம
யாரை கட்டிக்கிறதுன்னு..!

அவனோட அக்கா கல்யாணத்துக்கு
நான் போயிருந்தேன்.,
அவங்க 3 பேரும் வந்திருந்தாங்க..

அதுல ஒரு அத்தை பொண்ணு " பிரியா "
மட்டும் எனக்கு ஓரளவுக்கு பழக்கம்.,
அந்த பொண்ணுகிட்ட விளையாட்டா..,

" பிரியா.., நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..!
அப்படின்னு ரவி சொல்ல சொன்னான்னு.. "
சொல்லிட்டேன்.

அந்த பொண்ணு சிரிச்சிகிட்டே போயிடுச்சி..!

பக்கத்துல இருந்த ரவிதான்
டென்ஷன் ஆயிட்டான்..

" ஏன்டா அப்படி சொன்ன..? "

" சும்மா விளையாட்டுக்கு.., "

" எதுல விளையாடுறதுன்னு இல்லையா..? "

" Sorry-டா., நான் வேணா ப்ரியாகிட்ட
மன்னிப்பு கேட்டுட்டு வந்துடட்டுமா..? "

" அதெல்லாம் ஒன்னும் வேணாம்...
நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு..! "

" டென்ஷன் ஆகாதடா.. நான் பண்ணின
தப்பை நானே சரி பண்ணிடறேன்.."

"அப்படீங்கற..!! "

" ஆமா.. நான் போயி ப்ரியாகிட்ட Sorry
சொல்லட்டுமா..?!!

" Sorry எல்லாம் வேணாம்.. நான் சொல்ற
மாதிரி செய்யி போதும்.....! "

" என்ன சொல்லு.. "

" மத்த ரெண்டு பேர்கிட்டயும் போயி.."

" ம்ம்.. "

 " நீங்களும் அழகா இருக்கீங்கன்னு
சொல்லிட்டு வா..! "

" ?!!!?!?!?!!?! "

எனக்கு சிரிக்கிறதா..,
அழுவறதான்னே தெரியல..!
.
.

22 February 2010

சொந்தம்னா இப்படி..!நானும்., என் நண்பர்களும்
ஒரு Computer Centre-க்கு
Coaching Class
போயிட்டு இருந்தோம்..

அங்கே படிக்க ஒரு பொண்ணு வரும்.
அந்த பொண்ணு யார்கிட்டயும் லேசுல
பேசாது.. ( அழகா இருக்காங்களாம்..! )

எங்க Junior பையன் ஒருத்தனும்
அங்கே Coaching வந்திட்டு இருந்தான்..,
அந்த பொண்ணு அவனோட
சொந்தக்கார பொண்ணுன்னு
அடிக்கடி சொல்லுவான்..,

கொஞ்ச நாள் கழிச்சி தான் தெரிஞ்சது
அவன் யாரோ.,
அந்த பொண்ணு யாரோ..,
சொந்தம்லாம் இல்லைன்னு..

எங்க Friends கடுப்பாயிட்டாங்க..,
அவனை கூப்பிட்டு
எப்படிடா சொந்தம்னு விசாரிச்சா
அவன் சொன்ன பதில்..

" எங்க அப்பாவும் Indian.,
அவங்க அப்பாவும் Indian..!
அப்ப நாங்க சொந்தம் தானே..? "

Shock ஆயிட்டோம்..

இப்பவும் அவனை பார்த்தா..,
" டேய் Indian.! இங்க வாடான்னு
தான் கூப்பிடுவோம்..! "

என்ன இருந்தாலும்
History-ல நின்னுட்டான்ல..!
.
.

20 February 2010

முதலில்..,அண்டை
நாடுகளுடன்
நல்லுறவா..?
அதை
அப்புறம்
பார்க்கலாம்..!
முதலில்

எங்கள்
மாநிலங்களுக்கு
இடையே
சண்டைகள்
ஓயட்டும்
..!
.
.19 February 2010

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!


1. யாராவது Time கேட்டா..,
செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க..
( கையில Watch கட்டி இருந்தாலும் )

2. எந்த புத்தகத்தோட அட்டையில
அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்.,
பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..

3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம்
கையில எடுத்தா.., தூக்கி போட்டு
Catch பிடிப்பாங்க..!
( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )

4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா.,
8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க..
" அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..! "
இந்த டயலாக் சொல்லுவாங்க..

5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா.,
Wife Phone பண்ணி கூப்பிடற
வரைக்கும் வர மாட்டாங்க ..!

6. " உன்னாலே., உன்னாலே..! " இந்த படம்
இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!

7. Tv- கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும்
அமைதியா பார்க்க மாட்டாங்க..,
" ஏன்டா Leg Side-Ball போடுற "
இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க
.

8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா.,
மறந்துட்டு வந்துடுவாங்க..
(கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி
சமாளிச்சிடுவாங்க.. - அது வேற விஷயம்.. )

9. திடீர்ன்னு Walking., Exercise,Yoga
பண்ண ஆரம்பிப்பாங்க..
எல்லாம் 4 நாளைக்கு தான்..

10. குழந்தைகளுக்கு Homework
சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..!
( குழந்தைகளாவது நல்லா
படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..! )

பின் குறிப்பு :
இதுல குறைஞ்சது 5 விஷயமாவது
உங்களுக்கு ஒத்து வரலையின்னா..,
ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்கன்னு
அர்த்தம்..

உடனே நல்ல
டாக்டரா போயி
பார்க்கிறது
Better.
.
.

18 February 2010

தேவையா இந்த விளம்பரம்.??!!

.

என் Friend-க்கு அவங்க வீட்டுல
ஒரு பொண்ணு பார்த்திருந்தாங்க.
ரெண்டு பேர் வீட்டுலயும் OK.,

ஆனா., என் Friend-க்கு மட்டும் Not OK..

அவன்கிட்ட சம்மதம் வாங்கற
பொறுப்பு என்கிட்டே வந்தது..

எப்படியோ பேசி சரிகட்டி.,
பொண்ணு பார்க்க கூட்டிட்டு போயி.,
பொண்ணுகிட்ட பேச வெச்சி.,
ஒரு வழியா OK வாங்கியாச்சு..

கல்யாண மண்டபத்துல....,

" டேய்.. இந்த கல்யாணம் நடக்கவே
நான்தான் காரணம்..! அதை
மனசுல வெச்சுக்கோ..! "
இப்படி ரெண்டு மூணு தடவை
மாப்பிள்ளைகிட்ட சொன்னேன்.

அப்ப என்கூட வந்த இன்னொரு நண்பன்
என் காதை கடிச்சான்..,

" டேய்..! உனக்கு பொது அறிவு கம்மியா..?
இல்ல.., பொதுவாவே அறிவு கம்மியா..? "

" ஏன்டா ..? "

" நாளைக்கு அவனுக்கும்.,
அவன் Wife-க்கும் ஏதாவது சண்டை வந்தா..,
முதல் அடி உனக்கு தான் தெரியுமுல்ல..? "

" ஐயோ சாமி..!!
இதை நான் யோசிக்கவே இல்லையே..! "

மீனே மசாலாவ தடவிக்கிட்டு.,
எண்ணையில குதிக்குதுன்னு
சொல்லுவாங்களே.
.!  - அது இதுதானா..?
.
.

17 February 2010

சிட்டுகுருவி..!


சிட்டுகுருவி

பார்க்க ஆசைப்பட்ட
குட்டி மகனுக்கு
Internet- ல்
அதை காட்டினேன்.,
வேறென்ன
செய்ய முடியும்
நகரத்து
அபார்ட்மென்ட்

அப்பாக்கள்
..?!


பின்
குறிப்பு :
இன்னும் சில வருஷங்கள் போனால்.,
எல்லோரும் Internet-ல் மட்டுமே
சிட்டுக்குருவியை பார்க்க முடியும்.

முன்னயெல்லாம் நம்ம வீடுல
சிட்டுக்குருவி கூடு கட்டும்..,
அது மனுஷனை எவ்வளோ
நம்பிச்சீங்கறதுக்கு அதுவே சாட்சி..

இப்போ.,
நம்ம வீடே சிட்டுக்குருவி கூடு
மாதிரி தானே இருக்கு..,
சிட்டுக்குருவிக்கு ஏது இடம்..??

பாவம் சிட்டுக்குருவி..!
.
.

16 February 2010

ஒரு கணவனின் டைரி குறிப்பு..!!!

ஒவ்வொரு புருஷனும்
தவிர்க்க நினைக்கிற - ஆனா
தவிர்க்கவே முடியாத விஷயம்
என்ன தெரியுமா..?

மனைவியோட சொந்தக்காரங்க
கல்யாணம்..!

" நான் வரலை.,
நீ மட்டும் போயிட்டு வான்னு..! "
சொன்னாலும்., விடமாட்டாங்க.

என்னமோ., நாம வரலைன்னா
மாப்பிள்ளை தாலியே
கட்டமாட்டேன்னு
ஒத்தை கால்ல நிக்கிற மாதிரி..!

( நாம என்ன அய்யரா..? )

அங்க கல்யாணத்துக்கு போனதும்
" அக்கா., மாமா., அத்தைன்னு..! "
கும்பலா கூடி கும்மி அடிக்க
இவங்க போயிடுவாங்க.

நம்ம நிலைமை..?

சட்டசபைக்கு போன
சுயேச்சை MLA மாதிரி
ஒரு ஓரமாதான் இருக்கணும்..!

இது கூட பரவாயில்லை..!

சின்ன குழந்தைங்களை
கூட்டிட்டு போயிட்டா.,
இன்னும் Super..!

அதை பார்த்துக்க ( மேய்க்க )
சொல்லி நம்மகிட்ட விட்டுட்டு
போயிடுவாங்க..!

வீட்டுல இருந்திருந்தாலாவது
Tv-ல பழைய Cricket Match Highlights
பார்த்துட்டு இருந்திருக்கலாம்..,

இதுக்கு என்னதான் வழி..?

எனக்கு தெரிஞ்சி ஒரே வழி தான்
இருக்கு..!!

அது........,

ஒன்னு., ரெண்டு சகலை
இருக்கிற வீடா பார்த்து
பொண்ணு கட்டிக்கோங்க..!

" சகலை உடையான்..,
கல்யாணத்துக்கு அஞ்சான்..! "


டிஸ்கி : " சூப்பர் கம்பெனி " பதிவுக்கு
திரும்பி செல்ல க்ளிக் Here..
.
.

15 February 2010

செய்திதாள்கள் செய்வது சரியா..?நேத்து காதலர் தினம்.,

Beach., Park., Cinema
எங்க பார்த்தாலும்
காதலர்களா தான்
இருந்திருப்பாங்க..!

அதை News போடறோம்னு
அவங்களுக்கு தெரியாம
படம் பிடிச்சி.,
இன்னிக்கு Paper-ல
போட்டு இருக்காங்க..!
இல்ல..,இல்ல
போட்டு குடுத்து இருக்காங்க..!

இன்னிக்கு எத்தனை பேர்
வீட்டுல பூகம்பம் வெடிச்சிதோ..?

இனிமேலாவது
இதையெல்லாம் புரிஞ்சி
பத்திரிக்கைகாரங்க நடந்துக்கணும்..!
.
.

எதிர்பார்ப்பு..!

பாலுக்கு - பசு.,
காவலுக்கு - நாய்.,
எலிபிடிக்க - பூனை,
விருந்து வைக்க - கோழி.,
வாஸ்துக்கு - வண்ண மீன்.,
எதிர்பார்ப்பின்றி
எதையுமே
செய்வதில்லை நாம்.,
இந்த கவிதை
உட்பட..!
.
.

14 February 2010

இது யூத் மேட்டரு..!!

உங்களுக்கு எப்பவும் இளமையா
இருக்கணும்னு ஆசையா..?

அப்ப., நான் சொல்லற 4 வழிகளை
Follow பண்ணினுங்க அது போதும்..


1. சரியான தூக்கம் :
தினமும் 8 மணி நேரம் தூங்குங்க..

2. சரியான உணவு :
கண்டதை சாப்பிடாதீங்க.,
நல்ல உணவை மட்டும் சாப்பிடுங்க..

3. சரியான Friends :
நல்ல ஆளுங்களை மட்டும் Friends-ஆ
வெச்சுக்கோங்க..!

And... the Last but not Least..,

4. தப்பான வயசு :
உங்க வயசை யார் கேட்டாலும்.,
தப்பி தவறி கூட உண்மையான வயசை
மட்டும் சொல்லிபுடாதீங்க..
(கொஞ்சம் குறைச்சி சொல்லுங்க..! )


ஹி., ஹி., ஹி..,

என்னாது என் வயசு என்னாவா..?

இந்த சித்திரை வந்தா
27 முடிஞ்சி 24 Start ஆகுது..

என்ன Matter OK தானே..?!!
.
.

11 February 2010

திகில் பாடம்..!எனக்கு அடிக்கடி வர்ற கனவு
என்ன தெரியுமா..?

+2 கணக்கு பரிட்சை..!

அதுல எனக்கு புரியாத விஷயமே..,

அது ஏன் கணக்கு பரிட்சைக்கு
முந்தின நாள் நான் தமிழை
படிச்சிட்டு போறேன்..?

இப்பகூட எங்க Maths Master
என் கனவுல வந்தா.,
எந்திரிச்சி., நெத்தியில
விபூதி வெச்சிகிட்டு தான்
தூங்குவேன்..!

அல்ஜீப்ரா., தேற்றம்.,
அணிகள்., அணிக்கோவைகள்.,
வகைகெழு., தொகைக்கெழு.,
லாகரிதம்., நிகழ்தகவு.,
திரிகோணமிதி ( அதை போட்டு மிதி )

[ Algebra, Theorem,
Matrix, Calculus,
Logarithm, Probability,
Trigonometry ]

உஷ்ஷப்பா., இப்பவே கண்ண கட்டுதே..?!

எத்தனை., எத்தனை Formula.,
என்னை இருக்க விடலையே Normala..!

இதுல ஏதாவது.,
நம்ம வாழ்க்கையில
எங்கயாவது Use ஆவுதா..?

பின்ன ஏன்..?
ஒரு குழந்தைய ( அட நம்மளதாம்பா..!)
இப்படி டார்ச்சர் பண்ணினீங்க..?

இதெல்லாம் கணக்குல
இருக்குங்கறதுக்காக
நாம படிக்கணுமா.?

Rocket விடக்கூடத்தான்
ஏதாவது கணக்கு இருக்கும்..,
அதையெல்லாம்கூட படிக்க
சொல்லுவாங்களோ..?!
.
.

என்ன கொடுமை சரவணன் இது..?!!

கொடுமை No.1:
-------------------
சிலர் கேட்கிறாங்க...
" நீங்க எழுதி இருக்கிறதை படிச்சா
சிரிப்பே வரலைன்னு..! "

என்ன பண்ண..?
ஆங்.. idea...!

வேணும்ன்னா இன்னொரு தடவை
சிரிச்சிட்டே படிச்சி பாருங்களேன்..!

கொடுமை No 2:
-------------------
100 பேர் நம்ம இடுகையை படிச்சா.,
5 பேர் தான் Comment எழுதறாங்க..

அதுல 1 Comment தான் நம்மள
புகழ்ந்து இருக்கு..

அதையும் பிரசுரிக்காதீங்கன்னு
கெஞ்சி கேட்டுக்கறாங்க..

என்ன பண்ண..?!?

கொடுமை No.3
------------------
என் நண்பன் Phone பண்ணி திட்டறான்..
" வர வர நீ மொக்கையா எழுதறேன்னு..! "

எனக்கு பயங்கர கோபம்..
பின்ன..,
நான் ஆரம்பத்துல இருந்தே
அப்படி தானே எழுதிட்டு இருக்கேன்..

என்ன பண்ண..?
.
.

பாட்டு ஆராய்ச்சி...!எத்தனையோ
பாடல்களை
நாம ரசிச்சாகூட
ஒரு சில பாட்டு மட்டும்
நமக்கு ரொம்ப பிடிக்கும்...

அந்த பாட்டை எப்ப கேட்டாலும்
நம்ம மனசு சந்தோஷப்படும்..

அதுக்கு என்ன காரணம்..?

அந்த பாட்டோட இசையா..?
பாடல் வரிகளா..?
பாடகரின் குரலா..?

இல்ல..

அதையும் தாண்டி
ஒரு விஷயம் இருக்கு..

12 வருஷமா ஆராய்ச்சி பண்ணி
கண்டுபிடிச்ச அந்த விஷயத்தை
நான் இப்ப சொல்லப்போறேன்...

ஒரு பாட்டு நம்ம மனசுக்கு
நெருக்கமா வர காரணம்..,

அந்த
பாட்டை நாம
முதல் முறையோ.,
( அல்லது )
அடிக்கடியோ
கேட்ட சூழல்..

அதாவது..

சந்தோஷமான சூழ்நிலையில்
ஒரு பாட்டை கேட்கும் போது
அந்த சந்தோஷம் அந்த பாட்டோடு
Link ஆயிடுது..

மறுபடி அந்த பாட்டை
நாம
எப்ப கேட்டாலும்
அந்த Link வேலை செஞ்சி
நமக்கு " ஜில்லுன்னு "
ஒரு சந்தோஷத்தை குடுக்குது...

உங்களுக்கும் இது Workout
ஆகுதா சொல்லுங்க..

நான் இதுக்கு Copy Right வாங்கணும்..

வருங்காலத்துல
நான் Nobel Prize வாங்கினா..?!!
அந்த பெருமையெல்லாம்
உங்களுக்கு
தானே..!
.
.

10 February 2010

ஒரு பொண்ணு சிரிச்சா..!?நானும்., என் நண்பன் விமலும்
College வராண்டாவில் நடந்து
வந்திட்டு இருந்தோம்..

அப்போ எங்களுக்கு கொஞ்சம்
முன்னாடி 4 பொண்ணுங்க
நின்னு பேசிட்டு இருந்தாங்க..
அவங்க எங்க Juniors...

அதுல ஒரு பொண்ணு
விமலை பார்த்து சிரிச்சாங்க..

அதை நானும் பார்த்திட்டேன்..
அவனும் பார்த்திட்டான்..,

அதுக்கு அப்புறம் நடந்தது தான்
இது...

" அந்த பச்சை கலர் சுடிதார் போட்ட
பொண்ணு என்ன பார்த்து சிரிக்குதுடா..! "

" சரி அதுக்கு என்ன..? "

" என்னடா.. சாதாரணமா சொல்லுற..? "

" பின்ன உன்னை பார்த்து ஊரே
கைகொட்டி சிரிக்குது., அந்த பொண்ணு
சிரிக்க கூடாதா..? "

( அதுக்கு அப்புறம் அவன் எனக்கு
அன்பாய் கொடுத்த பரிசில்
என் உடம்பெல்லாம் வலித்தது.. )

பின் குறிப்பு :
கடந்த " இந்த இடுகையை படிக்காதீங்க "
இடுகையை படித்தவர்கள்
இதுவரை - 586 பேர்
.
.

09 February 2010

இந்த பதிவை படிக்காதீங்க...!!

ஏன்..? எதுக்குன்னு
கேள்வி எல்லாம் கேட்காதீங்க..

இந்த பதிவை படிக்காதீங்க..
அவ்ளோ தான்..

அட., நான் தான் சொல்றேன்ல..
இந்த பதிவை படிக்காதீங்கன்னு..

தலைப்பை ஒரு தடவை
நல்லா பாருங்க..

" இந்த பதிவை படிக்காதீங்க...!! "


ஆனா எவ்ளோ சொன்னாலும்
கேக்காம இப்ப நீங்க இதை
படிச்சிட்டு இருக்கீங்க..!!

அப்ப சரி...
Start Counting.....,

"ஒரு விஷயத்தை செய்யாதேன்னு
சொன்னாலும்.,
அதை செஞ்சு பார்க்கிறதுதான்
மனித இயல்பு..! "

இந்த உண்மையை
உலகத்துக்கு உணர்த்தவே
யாம் இந்த பதிவை எழுதினோம்..!

ஹா.., ஹா.., ஹா...!

பின்குறிப்பு : இதை எத்தனை பேர்
படிச்சாங்கன்னு அடுத்த பதிவுல
சொல்லுறேன்...
.
.

07 February 2010

உட்கார்ந்து யோசிப்போம்ல..!
B.Com படிக்கும் போது நடந்தது..

Economics Class...

" மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும்
பாதிப்புகள் " பத்தி Class நடந்துகிட்டு இருந்தது...

எங்க Professor ஒவ்வொருத்தரா எழுப்பி
ஒரு பாதிப்பை சொல்ல சொன்னார்..

" உணவு பற்றாக்குறை..! "

" இடப் பற்றாக்குறை..! "

" வேலை இல்லா திண்டாட்டம்..! "

இப்படி ஆளாளுக்கு ஒன்னு சொல்லிட்டு
இருந்தாங்க.. நம்ம முறை வந்தது...,

நான் எந்திரிச்சேன்..

மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும்
மிக பெரிய பாதிப்பு.....

" மீண்டும் மக்கள் தொகை பெருக்கம்னு..! "
சொன்னேன்..

எங்க Professor ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டாரு..!

இத்தனை வருஷ Service- ல இப்படி ஒரு பதில்
யாருமே சொன்னது இல்லையாம்..!!

# நாங்கல்லாம் உட்கார்ந்து யோசிப்போம்ல..!!!
.
.

ஹார்லிக்ஸ் Vs காம்ப்ளான்
Horlicks ( 500 கிராம் ) - Rs 125
Complan ( 500 கிராம் ) - Rs 175

ஏதோ மளிகை கடை List-ன்னு
நினைச்சிக்காதீங்க..!

6 மாசத்துக்கு முந்தி
Horlicks தேவையில்லாம
Complan -ஐ வம்புக்கு இழுத்துச்சி..

" விலை கம்மியா Horlicks கிடைக்கும்
போது அதிக விலை கொடுத்து Complan
ஏன் வாங்கணும்..? " - இது Horlicks விளம்பரம்..

" தகரத்தோட விலையில தங்கம்
கிடைக்காது.. குழந்தைங்க ஆரோக்கியத்தில
Risk எடுக்கணுமா..? " - இது Complan பதிலடி.

இது நமக்கு தெரிஞ்சது தான்..
இப்போ விஷயம் என்னான்னா..

Horlicks - Pro Height -ன்னு
புது பானம் அறிமுகப்படுத்தி இருக்கு..
Complan மாதிரியே இதுல 23 Vitamins.

விலை..?
அதிகமில்லை 400 கிராம் - Rs 200
( அப்போ 500 கிராம் - Rs 250 )

Complan - விலை அதிகம்னு
சொன்ன Horlicks.,

இப்போ..,
அதைவிட 75 ரூபாய் அதிகத்துல
அதே மாதிரி ஒரு பானம்
கொண்டுவர்றது யாரை நம்பி..?

இதுல என்ன சந்தேகம்..?
நம்மள நம்பித்தான்...

திரிஷா சொன்னாங்கன்னு
" Vivel Soap " வாங்குன
ஆளுங்களாச்சே நாம..!

இனிமேலாவது உஷாரா
இருக்கணும்பா...,

நம்மள மாதிரி குழந்தை பசங்கள
இவிங்க ஏமாத்திபுடுவாங்க..!
.
.

05 February 2010

நண்பனுக்கு வந்த மர்ம Call..!


ஒரு நாள் என் ப்ரெண்ட் பாலு
ஆபிசுல இருக்கும் போது அவனுக்கு
ஒரு போன் வந்தது...

Display -ல தெரிஞ்சது புது Number..
எடுத்து பேசினான்..

" ஹலோ...! "

" ஹலோ.. உங்க ஆபிசுல A.C Work பண்ணுதா.? "

" பண்ணுதே.. ! "

" Computer Work பண்ணுதா.? "

" ம்ம்.. பண்ணுதே..! "

" Fan..?? "

" அதுவும் Work பண்ணுதே..!! "

" அப்ப உங்க ஆபீஸ்ல எல்லாம் கரெக்ட்டா
Work பண்ணுது.. நீங்க மட்டும் தான்
வெட்டியா Phone பேசிட்டு இருக்கீங்க..
போயி Work பண்ணுங்க சார்...! "

" ?!!?!?!!?! "

பின் குறிப்பு : இன்னும் அந்த ஆள்
யாருன்னே கண்டுபிடிக்க முடியல..

( ரொம்ப முக்கியம்..!? )
.
.

03 February 2010

இது ஜுஜுபி மேட்டரு..!


இன்னிக்கு கள்ள நோட்டு அடிக்கறது..
சே.. கள்ள நோட்டை கண்டுபிடிக்கறது
எப்படின்னு சொல்லி தர போறேன்..

கள்ள
நோட்டை கண்டுபிடிக்க
பல வழிகள் இருக்கு..,

ஆனா., இப்ப நான் சொல்லபோற
வழிதான் ரொம்ப Easy
-யான வழி.
Machine அது., இதெல்லாம் எதுவும்
வேணாம்..

ஆனா., இந்த Technique
இந்திய ரூபாய்க்கு
மட்டும் தான் Workout -ஆகும்.
வெளிநாட்டு நண்பர்கள் மன்னிக்க..

சரி வாங்க Trainning -க்கு போகலாம்.,

* 5 ரூபாயோ ., 1000 ரூபாயோ ஏதோ ஒன்னு
எடுத்துக்குங்க..

* அதை நாலா மடிச்சிக்குங்க..,

* கீழே வெச்சி நோட்டு மேல
ரெண்டு குத்து குத்துங்க..,

* திருப்பி வெச்சி அதே மாதிரி
அந்த பக்கமும் ரெண்டு குத்து குத்துங்க..,

* போதும்., இப்ப நோட்டை எடுத்து
பிரிச்சி பாருங்க..,

* காந்தி தாத்தா கண்ணாடி
உடைஞ்சி
இருக்கா..? - அப்ப அது கள்ள நோட்டு..

* உடையலையா..? - சந்தோஷம்.,
அது நல்ல நோட்டு தான்.

டிஸ்கி : இதே மாதிரி " கறுப்பு பணத்தை "
கண்டுபிடிக்கவும் ஒரு Simple Technique
இருக்கு.. அதை இன்னொரு நாள்.,
இன்னொரு பதிவுல சொல்லி தர்றேன்.....!

( நாங்கல்லாம் ஊருக்குள்ள பல பேருக்கு
Idea சொல்லுறவங்க...! )
.
.

01 February 2010

திருமண வாழ்த்து

..

Friend கல்யாணம்னா
எல்லா Friends -ம் சேர்ந்து
வாழ்த்து Card அடிக்கிறதும்.,

அதுல சாக்லட் பின் பண்ணி
கல்யாணத்துக்கு வர்றவங்களுக்கு
கொடுக்கிறதும்.,

அதை வாங்கினவங்க
சாக்லட்டை மட்டும் சாப்பிட்டுட்டு.,
வாழ்த்தை கீழே போட்டுடறதும்.,

அந்த வாழ்த்து எல்லோர் கால்லேயும்
மிதிபடறதும்.,

சாதரணமா எல்லா
கல்யாணத்துலயும் நடக்குது..,

ஆனா., எங்க Friend கல்யாணத்துல
அப்படி நடக்கக்கூடாதுன்னு
முடிவு பண்ணினோம்..

இனிப்பை விட.,
இனிப்பான வாழ்த்து அடிச்சா..!
அப்படி உருவானதுதான் இந்த வாழ்த்து..

**********************************************

நண்பா..,

இன்னிக்கு
உனக்கு கண்ணாலம்.,
ஜோடி
பொருத்தம்
Super மெய்யாலும்.,

கண்ணாலத்துக்கு பின்னாலும்.,
அன்பா இருக்கணும் எந்நாளும்.,

புதுசா எதை நீ செஞ்சாலும்.,
வீட்ல கேட்டுக்க பெரும்பாலும்.,

16 பெத்துக்க பெரியவங்க சொன்னாலும்.,
முக்கோணத்தை
மறந்துடாதே ஒரு நாளும்..

**********************************************

தங்காச்சி.,

சிக்கனமா குடும்பம் நடத்தணும்.,
சிரிச்சிக்கிட்டே எப்பவும் இருக்கணும்.

மாமியார் மெச்ச நடக்கணும்.,
மாமனாருக்கு மகளா இருக்கணும்.

சீரியல் பார்க்கிறதை தவிர்க்கணும்.,
சின்சியரா நியூஸ் மட்டும் பார்க்கணும்.

விட்டு கொடுத்து போகணும்.,
தட்டி கொடுத்து வாழணும்.

***********************************************

சொன்னா நம்ப மாட்டீங்க..,
கல்யாணத்துக்கு வந்தவங்கள்ல

90% பேர் திருமண வாழ்த்தை கையோட
வீட்டுக்கு எடுத்திட்டு போயிட்டாங்க..
.
.