சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

27 March 2010

லைட்டா சிரிங்க - 1( படித்ததில் பிடித்தது... )

No: 1

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?

அவர் : தெரியுது...

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

* * * * * * * * * * * * * *

No : 2 ( கட்சி ஆபீஸ்.. )

தொண்டர் 1 : நம்ம தலைவர் தன்னோட
எல்லா சொத்தையும் கட்சிக்கே எழுதி
வெச்சிட்டாரு..!

தொண்டர் 2 : சந்தோஷமான விஷயம்
தானே..!

தொண்டர் 1 : அட போப்பா..,
கட்சியை அவரோட மகனுக்கு
எழுதி வெச்சிட்டாரு..!!

* * * * * * * * * * * * * *

No : 3

நிருபர் : நடிக்க வரலைன்னா என்ன
பண்ணியிருப்பீங்க..?

நடிகை : Doctor ஆயிருப்பேன்..

நிருபர் : அதான் நடிக்கவே வரலைல்ல.,
போயி Doctor ஆக வேண்டியது தானே..?!

* * * * * * * * * * * * * *

No : 4

( Exam ஆரம்பிக்கும் முன்... )

மாணவன் : டீச்சர் ஒர் Doubt...

டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும்
அரை மணி நேரம்தான் இருக்கு..,
இப்ப போயி என்னடா Doubt..?

மாணவன் : இன்னிக்கு என்ன Exam..?

* * * * * * * * * * * * * *
No: 5

மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..

அப்பா : Very Good.., பொண்ணுங்க
இப்படிதான் இருக்கணும்..,
எந்த துறையைல சாதிக்க போற..

மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு
பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்..

* * * * * * * * * * * * * *

No : 6

நண்பன் 1 : காலையில உங்க வீட்டுக்கு
வந்து இருந்தேன்.., உங்க அப்பாகிட்ட
நீ எங்கேன்னு கேட்டதுக்கு.,
" அந்த மாடு எங்கயாச்சும் ஊர் மேய
போயிருக்கும்னு " சொன்னார்டா..!

நண்பன் 2 : என்கிட்ட
" அந்த எருமை வந்துட்டு போச்சுன்னு "
சொன்னாரு.., அது உன்னைத் தானா..!!
.
.

16 Comments:

ரசிகன் said...

என்னது.. இத படிச்சிட்டு லேசா சிரிக்கறதா?.. நல்ல வேளை இன்னைக்கு எங்க Office leave. கண்ட நேரத்துல உங்க jokes நியாபகம் வந்து கெக்கெ பிக்கெனு சிரிச்சிட்டு , சுத்தி முத்தி பார்க்க வேண்டியதில்ல‌

ரவிசாந் said...

காமடி சூப்பரா இருக்கு அண்ணா. வாழ்த்துக்கள்.

jana said...

எல்லா Jokeம் நல்லா இருக்கு...

எனக்கு ஒரு Joke ஞாபகம் வருது...

Patient : Doctor எனக்கு என்ன problemனு கொஞ்சம் diagnose பண்ணமுடியுமா?
Doctor: கொஞ்சமும் தாமதிக்காமல் " உங்களுக்கு கண் பார்வை சரியில்லைன்னு நினைக்கிறேன்."
Patient : எப்படி அவ்வளவு உறுதியா சொல்லுரீங்க...
Doctor: இது "Veterinary Hospital"

சிரிப்பு வரலென்னாலும் தயவு செய்து சிரிங்க...

வெங்கட் said...

ரசிகன்..,
ஓ.. அப்படியா..!
ரொம்ப சந்தோஷம்..
இப்ப வீட்ல இருக்கிறவங்க
தப்பா நினைச்சுக்க போறங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

No 6 joke la nanban 2 neengathaanaa?

Hahaa

ரசிகன் said...

Dont Worry.. வீட்டுல யாராவது நல்லா நினைச்சிருந்தா தானே, இப்போ தப்பா நினைக்க...

ஹா.. ஹா.. ஹா... இது Janaக்கு... (ஒருத்தரோட விருப்பத்தை நிறைவேற்றின புண்ணியம் கிடைக்கும்ல. அதுக்காக சிரிச்சதா நினைக்ககூடாது)

Dr.P.Kandaswamy said...

அந்தக்குழந்தையின் புன்முறுவல்தான் உங்க ஜோக்குகளுக்கு சர்டிபிகேட்.

jana said...

ரொம்ப நன்றி ரசிகன்...
எனக்காக ஒருத்தர் சிரிச்சிட்டிங்க...
இது போதும் எனக்கு...
ஒரு பளாக் போடலாம்...
வெங்கட் உனக்கு போட்டியா
"ராத்திரியில் சூரியன்" என் தலைப்பு...

எப்பிடி...!

வெங்கட் said...

ரவி..,
ரொம்ப நன்றி..!

வெங்கட் said...

ஜனா..,
இது சூப்பர்..,
Thanks..,
நல்ல ஜோக்கை இங்கே
எழுதினதுக்கு..,
மற்றவர்களும் Try பண்ணலாமே..!

வெங்கட் said...

ரமேஷ்..,
ஒன்னும் தெரியாத மாதிரி
கேட்கறத பாரு..
திட்டினதே உங்க அப்பா தானே..!!!

வெங்கட் said...

ரசிகன்..,
இதை நானே சொல்லியிருப்பேன்..
ஆனா உங்க வாயில இருந்தே
உண்மைய வரவழைக்கத்தான்
இந்த Technique-ஐ Use பண்ணினேன்..
Work Out ஆயிடிச்சி..!!

வெங்கட் said...

டாக்டர் சார்..,
ரொம்ப நன்றிங்க..,
நீங்க அடிக்கடி இங்கே வர்றதே
எனக்கு பெரிய சந்தோஷமுங்க..

வெங்கட் said...

ஜனா..,
நாம எப்பவும்
" இணைந்த கைகள் "

ஒரே Team-ல ரெண்டு பேரு
Batting பண்ணினா அதுக்கு பேரு
Partnership., போட்டி இல்ல..
இன்னோரு தரம் அப்படி
சொல்லாதே..!

cheena (சீனா) said...

வெங்கட்டு - நீ ஜனாவப் பாக்கப் போனியா - அப்பா அவங்கப்பா இபாடிச் சொன்னாரா - சரி சரி - ஏன்னா எனக்கு யாரு எருமன்னு தெரியணூம்

Ananthi said...

ஹா ஹா ஹா..

எல்லா ஜோக்ஸ்ம் சூப்பர்...! :-))))

அதுலயும் அந்த ஆக்சிடன்ட் ஜோக்... செம செம..!!

(இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன்)