சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

21 June 2010

சூப்பர் சிங்கர்..!!
பாட்டு பாடறதுன்னா எனக்கு
அல்வா சாப்பிடற மாதிரி..

எவ்ளோ கஷ்டமான
பாட்டா இருந்தாலும்
சும்மா பிச்சி உதறிடுவேன்..

இது எனக்கு பூமாதேவி - Sorry.,
ஸ்ரீ தேவி - மறுபடியும் Sorry.,
ஆங்.. கலைவாணி கொடுத்த வரம்.

எனக்குள்ள ஒளிஞ்சிட்டு இருந்த
சங்கீத திறமைய என் பாட்டிதான்
முதல்ல கண்டுபிடிச்சாங்களாம்..

மூணு வயசுலயே இங்கிலீஷ்
பாட்டெல்லாம் அருமையா
பாடுவேனாம்..

Baa baa Black Sheep...,
Twinkle Twinkle Little Star...!!

நான் குழந்தையா இருந்தப்ப
" இசை மேதை "
பாலமுரளி கிருஷ்ணா சார்
"அட.., இந்த குழந்தை பார்த்தா
ஞானப்பால் குடிச்சி வளர்ந்த
குழந்தை மாதிரி தெரியுதேன்னு..!! "
சொன்னாராம்..

எங்க ஊரை சுத்தி பாட்டு Competition
எங்கே நடந்தாலும் நான் பெயர்
குடுத்துடுவேன்..

அப்புறம் அவங்க Competition-ஐ
Cancel பண்ணிடுவாங்க..

நான் பாடப்போறேன்னு தெரிஞ்சா
கூட்டம் அலை மோதும்ல...,
அவங்களால சமாளிக்க முடியாது..

A.R.ரஹ்மான் Music-ல
ஒரே ஒரு பாட்டாவது
நான் பாடணும்கறதுதான்..,
A.R.ரஹ்மானோட லட்சியம்..

ஆனா அதுக்கு சான்ஸ்
ரொம்ப கம்மி..,

இவ்ளோ திறமையிருந்தும்
S.P.B., யேசுதாஸ் வரிசையில
நான் ஏன் சினிமாதுறைக்கு
வரலை தெரியுமா..?

" வெங்கட்., எனக்கு போட்டியா
வந்துடாதீங்கன்னு "
ஹரிஹரன் என்னை கெஞ்சி
கேட்டுக்கிட்டாரே..!!

என் Range-க்கு இல்லைன்னாலும்
அவரும் நல்லாத்தானே பாடுறார்..
அதான் விட்டுகொடுத்துட்டேன்..

இந்த விஷயத்தில என் Wife-க்கு
ஒரே ஒரு சந்தேகம்தான்..

ஹரிஹரன் சுயநலத்தில
அப்படி கேட்டாரா..?
இல்ல
பொது நலத்தில அப்படி
கேட்டாரான்னு..?

ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( மாலா )
பதிவு போடுறவங்கள " பதிவர்னு "
சொல்றோம்.. அப்ப இங்கிலீஸ்ல
Post போடுறவங்களை
Poster-ன்னு ஏன் சொல்றதில்ல..?

உங்க லாஜிக் தப்பு.. இப்ப..,
பேப்பர் போடுறவன் பேப்பர்காரன்.
பால் போடுறவன் பால்காரன்.,
தபால் போடுறவன் தபால்காரன் - அப்ப
பிச்சை போடுறவன் பிச்சைக்காரனா..???


இன்று ஒரு தகவல் :
---------------------

நேத்து Evening ஜாலியா
" காதலின் தீபமொன்று.. "
பாட்டு பாடிட்டு இருந்தேன்..
அப்ப என் Wife..

" ஏங்க.. பாடறதை கொஞ்சம் நிறுத்தறீங்களா..! "

" ஏன்..? உனக்கு இந்த பாட்டு பிடிக்காதா..? "

" ரொம்ப பிடிக்கும்.. அதனால தான்......... "
.
.

44 Comments:

Chitra said...

உங்க லாஜிக் தப்பு.. இப்ப..,
பேப்பர் போடுறவன் பேப்பர்காரன்.
பால் போடுறவன் பால்காரன்.,
தபால் போடுறவன் தபால்காரன் - அப்ப
பிச்சை போடுறவன் பிச்சைக்காரனா..???


....... புல்லரிச்சு போச்சு..... என்னே ஒரு விளக்கம்!

உங்கள் பாடும் திறன் பற்றி - கடைசியா, உங்கள் wife சொன்ன கமென்ட் ல தெரிஞ்சிக்கிட்டோம்..... ஹரிஹரன் சார் நிச்சயமா பொது நலன் கருதி தான் சொல்லி இருப்பார். ஹா,ஹா,ஹா,ஹா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//" ஏங்க.. பாடறதை கொஞ்சம் நிறுத்தறீங்களா..! "

" ஏன்..? உனக்கு இந்த பாட்டு பிடிக்காதா..? "

" ரொம்ப பிடிக்கும்.. அதனால தான்......... "//

அதான் கரெக்ட். உங்க மனைவி உங்களை பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க

சி. கருணாகரசு said...

என் Range-க்கு இல்லைன்னாலும்
அவரும் நல்லாத்தானே பாடுறார்..
அதான் விட்டுகொடுத்துட்டேன்..//

தப்பித்ட்தோம்!

கிருஷ்குமார் said...

//பதிவு போடுறவங்கள " பதிவர்னு "
சொல்றோம்.. அப்ப இங்கிலீஸ்ல
Post போடுறவங்களை
Poster-ன்னு ஏன் சொல்றதில்ல..?//
Blog ---> Blogger ?
பதிவு போடறவங்கள பத்தி பதில் சொல்றதுக்கு முன்னாடி முதல்ல மொக்க போடறத நிறுத்துங்க.. :))

Madhavan said...

//ஹரிஹரன் சுயநலத்தில
அப்படி கேட்டாரா..?
இல்ல
பொது நலத்தில அப்படி
கேட்டாரான்னு..?//

No doubt, your wife knows very well abt. you.

மங்குனி அமைச்சர் said...

எல்லாம் சரி , ஒரு பாட்டு பாடுங்க வெங்கட்
(நாங்கல்லாம் சிங்கத்தோட குகைலே சைக்கில் ஒட்னவிங்க )

meenamuthu said...

வெங்க...ட்! எப்ப்டீப்பா இப்ப்டி...!

அட அட அட... :))

அருண் பிரசாத் said...

ஹரிஹரன் கெஞ்சி கேட்ட விசயம் ஜேசுதாசு, SPB, AR ரஹ்மானுக்கு தெரியுமா?

சே! இந்த ஹரிஹரனால இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய ”நோ’பல்’” பரிசு கிடைக்காமல் போய்டுச்சே.

ரசிகன் said...

என்ன இது..
ஒரு பதிவில ஒருத்தரதான் கேவலப்படுத்துவீங்க...
ஆனா இதுல‌
பாலமுரளி கிருஷ்ணா , A.R.ரஹ்மான்,S.P.B., யேசுதாஸ்,
ஹரிஹரன்னு Total Music Familyயையும் Damage பண்ணி இருகீங்களே.. இது அடுக்குமா..???

பூமாதேவி உங்களுக்கு எதுக்கு வரம் குடுக்கணும்...
உங்க மனைவிக்கும், எங்களுக்கும் தான்,
அள்ளி அள்ளி குடுக்கணும்...

ஜெய்லானி said...

//" ஏன்..? உனக்கு இந்த பாட்டு பிடிக்காதா..? "

" ரொம்ப பிடிக்கும்.. அதனால தான்......... "//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//A.R.ரஹ்மான் Music-ல
ஒரே ஒரு பாட்டாவது
நான் பாடணும்கறதுதான்..,
A.R.ரஹ்மானோட லட்சியம்..
//

உண்மதான.....அவருக்கும் திருஷ்டி பொட்டுன்னு ஒன்னு வேணாமா?

//இது எனக்கு பூமாதேவி - Sorry.,
ஸ்ரீ தேவி - மறுபடியும் Sorry//

அப்புறம், இந்த பூமாதேவி, ஸ்ரீதேவி இவங்கல்லாம் யாருன்னு உங்க மனைவிகிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கலாமா?

//எங்க ஊரை சுத்தி பாட்டு Competition
எங்கே நடந்தாலும் நான் பெயர்
குடுத்துடுவேன்..

அப்புறம் அவங்க Competition-ஐ
Cancel பண்ணிடுவாங்க..

நான் பாடப்போறேன்னு தெரிஞ்சா
கூட்டம் அலை மோதும்ல...,
அவங்களால சமாளிக்க முடியாது//

அந்த சமயத்துல அக்கம்பக்கத்துல இருக்கற கடைலலாம் அழுகின முட்டை அதிகம் விக்குமே, அதை சொல்ல மறந்துட்டீங்களே!

//" வெங்கட்., எனக்கு போட்டியா
வந்துடாதீங்கன்னு "
ஹரிஹரன் என்னை கெஞ்சி
கேட்டுக்கிட்டாரே..!!//

முடியாதுன்னு சொல்ல நினைச்ச அந்த சமயத்துல திடீர்னு முழிப்பு வந்துச்சே, அதை சொல்லாம விட்டுட்டீங்க?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

எங்க வீட்டிலையும் ஒரு சூப்பர் சிங்கர்
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
தையல் மெஷின் இருக்குன்னு சொல்ல வந்தேன்!

Sen22 said...

//" ஏங்க.. பாடறதை கொஞ்சம் நிறுத்தறீங்களா..! "

" ஏன்..? உனக்கு இந்த பாட்டு பிடிக்காதா..? "

" ரொம்ப பிடிக்கும்.. அதனால தான்......... "//


Jaadi-ku yetha Moodi..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அருண் பிரசாத் said...
ஹரிஹரன் கெஞ்சி கேட்ட விசயம் ஜேசுதாசு, SPB, AR ரஹ்மானுக்கு தெரியுமா?
//

முதல்ல இந்த விஷயம் ஹரிஹரனுக்கு தெரியுமான்னு கேளுங்க, அருண்!

அனு said...

//பாட்டு பாடறதுன்னா எனக்கு
அல்வா சாப்பிடற மாதிரி..//

அதைக் கேக்குறவங்களுக்கு தான் ஆமணக்கு சாப்பிடற மாதிரி..

//எவ்ளோ கஷ்டமான
பாட்டா இருந்தாலும்
சும்மா பிச்சி உதறிடுவேன்..//

கடிச்சு குதறிடுவேன்னு சொல்லுங்க..

//சங்கீத திறமைய என் பாட்டிதான்
முதல்ல கண்டுபிடிச்சாங்களாம்..//

பாவம் பாட்டி.. அதுக்கு அடுத்த நாள் அவங்க ஊரை விட்டே போய்ட்டாங்களே.. அதை சொல்லவே இல்ல?

//அப்புறம் அவங்க Competition-ஐ
Cancel பண்ணிடுவாங்க..//

இது ஏன்னு நான் சொல்லி தான் தெரியனுமா??

//ஹரிஹரன் என்னை கெஞ்சி
கேட்டுக்கிட்டாரே..!!//

எது? ஹரிஹரன் கூட டுயட் பாட உங்களைக் கூப்பிட்டாங்களே.. அதை சொல்றீங்களா??

-----------------------------

ஹிஹி.. அப்போ cook பண்றவர் cooker-ஆ??

-----------------------------

எனக்கு கூட தான் ப்ளாக் படிக்குறது பிடிக்கும்... ஹூம்....

அனு said...

@பெ.சொ.வி

ஏங்க இப்படி?? வெங்கட்-டோட திறமையை பாராட்டாம இப்படி கலாய்க்குறீங்களே??

டிஸ்கி:

நான் எழுத நினைச்சதை எல்லாம் நீங்களே எழுதி என்னை dummy-யா ஆக்குன கடுப்புல போட்டது.. [நல்லா இருக்கு :) கலக்குங்க..]

Anonymous said...

"Madavan" mathiri Irukinga...
"Hariharan" Mathiri Paduringa....
Vannathasan mathiri Aluthuvinga pola........Ennum Evalavu...
............
............
Narayana....Intha "Singathuku" konjam Milk kuduppa.... Mudiyala lightla siripu varuthu......

Anonymous said...

77 followers... but avg..40 comments.. Periya alutha... Ana Nalla tha Eluthuriya makka..i will come here twice in a week...


All the best... "Venkat"

வெங்கட் said...

@ சித்ரா..!!

// புல்லரிச்சு போச்சு.....
என்னே ஒரு விளக்கம்..! //

ஹா., ஹா., ஹா..!!
இதுக்கே புல்லரிச்சி போயிட்டீங்களா..?!
இதெல்லாம் எங்களுக்கு
Single ' டீ ' சாப்பிடற மாதிரி..

வெங்கட் said...

@ கிருஷ்குமார்.,

// Blog ---> Blogger ?
பதிவு போடறவங்கள பத்தி பதில்
சொல்றதுக்கு முன்னாடி முதல்ல
மொக்க போடறத நிறுத்துங்க.. //

ஹலோ யாருப்பா அது..?
ஊருக்கு புதுசா...?
யாராவது வந்து இவருக்கு
நம்ம Rules & Regulations எடுத்து
சொல்லுங்கப்பா..!!

வெங்கட் said...

@ மங்குனி.,

// நாங்கல்லாம் சிங்கத்தோட
குகைலே சைக்கில் ஒட்னவிங்க.. //

அப்படியா..?!
நான் பார்க்கவேயில்லையே..!!

ஒரு வேளை நானும்., சிங்கமும்
அப்போ Walking போயிருப்போம்..

வெங்கட் said...

@ மீனா முத்து.,

// வெங்க...ட்! எப்ப்டீப்பா இப்ப்டி...!
அட அட அட... :)) //

நீங்க என்னை ரொம்ப புகழாறீங்க..!!

ஆஹா.., என்னை கலாய்க்காம
ஒரு Comment படிக்க எவ்ளோ
சந்தோஷமா இருக்கு..!!!

வெங்கட் said...

@ அருண்..,

// சே! இந்த ஹரிஹரனால இந்தியாவுக்கு
கிடைக்க வேண்டிய ”நோ’பல்’” பரிசு
கிடைக்காமல் போய்டுச்சே... //

இதுக்கா சின்ன குழந்தை மாதிரி
Feel பண்ணுவீங்க..??
நம்மகிட்ட தான் எகப்பட்ட
திறமை இருக்கே..

ஏதோ ஒண்ணை Use பண்ணி.,
ஏதோ ஒரு அவார்டை வாங்கி
உங்க கையில குடுத்திடறேன்
போதுமா..??

ஆமா இந்த " ஆஸ்கார் அவார்ட் "
நம்ம " ஆஸ்கார் ரவிச்சந்திரன் "
Recommend பண்ணினா குடுத்துடுவாங்கல்ல..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// பாலமுரளி கிருஷ்ணா , A.R.ரஹ்மான்,
S.P.B., யேசுதாஸ், ஹரிஹரன்னு
Total Music Family-யையும் Damage பண்ணி
இருகீங்களே.. இது அடுக்குமா..??? //

இது எங்க Family Matter..,
நீங்க ஏன் Tension ஆகறீங்க..?

A.R.ரஹ்மான் " ஆஸ்கார் அவார்ட் "
வாங்கிட்டு மேடைய விட்டு கீழே
வந்த உடனே யாருக்கு போன்
பண்ணினார்னு தெரியுமா..??

சரி விடுங்க..
நான் அதை சொன்னா
நீங்க விளம்பரம்னு சொல்லுவீங்க..

அருண் பிரசாத் said...

யப்பா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா சாமி.

//ஏதோ ஒரு அவார்டை வாங்கி
உங்க கையில குடுத்திடறேன்
போதுமா..?? //

அவார்டு கொடுத்தா ஓகே. வேற எதாவது கொடுத்தா?

நான் சொன்னது NOBLE பரிசு இல்லை NO பல் பரிசு.

வெங்கட் said...

@ பெ.சொ.வி..,

// இந்த பூமாதேவி, ஸ்ரீதேவி இவங்கல்லாம்
யாருன்னு உங்க மனைவிகிட்டே கேட்டுத்
தெரிஞ்சுக்கலாமா? //

உங்க கேள்வில இருந்தே
பூமாதேவி., ஸ்ரீதேவி இவங்க ரெண்டு
பேரை மட்டும் தான் உங்களுக்கு தெரியலை..

கலைவாணி யார்னு தெரிஞ்சியிருக்கு..
So.., இதே கேள்வியை கலைவாணிகிட்ட
கேளுங்க.. அவங்க பதில் சொல்லுவாங்க..

// அந்த சமயத்துல அக்கம்பக்கத்துல இருக்கற
கடைலலாம் அழுகின முட்டை அதிகம் விக்குமே,
அதை சொல்ல மறந்துட்டீங்களே! //

கரெக்ட்... பின்ன Competition-ஐ Cancel
பண்ணிட்டா என் ரசிகர்கள் சும்மாவா
இருப்பாங்க.. Organiser-ஐ ஒரு வழி
பண்ணிடுவாங்கல்ல..

// முடியாதுன்னு சொல்ல நினைச்ச
அந்த சமயத்துல திடீர்னு முழிப்பு
வந்துச்சே, அதை சொல்லாம விட்டுட்டீங்க? //

முழிப்பா..? No Chance..
அதெல்லாம் நைட்ல காண்ற
கனவுக்கு மட்டும் தான் வரும்..
இது வேற மாதிரி..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//முழிப்பா..? No Chance..
அதெல்லாம் நைட்ல காண்ற
கனவுக்கு மட்டும் தான் வரும்..
இது வேற மாதிரி//

மொத்தத்துல கனவுன்னு ஒத்துக்கிட்டீங்க.....அதுதான் வேணும்! (கனவு வேணும்னு சொல்லலை, அதை ஒத்துக்கிட்டதை சொன்னேன்)

வெங்கட் said...

@ அனு.,

( அனு எனக்கு போன் பண்றாங்க.. )

அனு : A.R.ரஹ்மான் உங்களுக்கு Friend தானே..?

நான் : ஆமா.. அதுக்கு என்னங்க..?

அனு : அவர் Music-ல நான் ஒரு பாட்டு பாடணும்.

நான் : இவ்ளோதானே..!! என்கிட்ட ஒரு CD இருக்கு..,

அனு : சரி...,

நான் : Full-ஆ அவர் Music தான்..
போட்டுவிட்டுட்டு., உங்க இஷ்டத்துக்கு
பாடுங்களேன்..

அனு : விளையாடாதீங்க.. பாடறதுக்கு
ஒரு சான்ஸ் வாங்கி குடுங்கன்னா..

நான் : இப்பதான் A.R.ரஹ்மான் எனக்கு
Friend-ன்னு சொன்னேன்..
Enemy ஆக்கிடுவீங்க போல இருக்கே..

அனு : அதெல்லாம் எனக்கு தெரியாது..
எனக்கு பாட சான்ஸ் வாங்கி தர்றீங்க..

டொக்...

( to be continued.... )

வெங்கட் said...

Next day....

( A.R.ரஹ்மானுக்கு நான் போன் பண்றேன்....)

நான் : ஹாய் திலீப்..!
( நான் அவரை செல்லமா
அப்படித்தான் கூப்பிடுவேன்..)

A.R : ஹாய் வெங்கி..!
( அவர் என்னை செல்லமா
அப்படித்தான் கூப்பிடுவார்..)

நான் : " அனுன்னு " எனக்கு ஒரு Friend..
பாடறதுக்கு ஒரு சான்ஸ் குடுங்களேன்..

A.R : ம்ம்.., அவங்களுக்கு எது நல்லா வரும்..?

நான் : நல்லா கலாய்ப்பாங்க.,
சூப்பரா மொக்கை போடுவாங்க..,

A.R : அட.., நான் கேட்டது Music-ல..

நான் : அது தெரியாதே..!
நீங்களே ஒரு Voice Test வெச்சி
முடிவு பண்ணிக்கோங்க..

A.R : அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..
எந்த மாதிரி மொக்கை Voice-ஆ இருந்தாலும்
நான் எடிட்டிங்ல பார்த்துக்கறேன்..
நாளைக்கு வந்து என்னை பார்க்க சொல்லு..


( to be continued.... )

வெங்கட் said...

Next day....

அனு போய் A.R.ரஹ்மானை பார்க்கறாங்க..

( to be continued.... )

வெங்கட் said...

Next day....

காலையில எல்லா News Paper-லயும்
தலைப்பு செய்தி....

" A.R.ரஹ்மான் இரவோடு இரவாக
இங்கிலாந்தில் செட்டில் ஆனார்..,
இந்தியா திரும்பி வர மறுப்பு..,
காரணம் என்ன..? "

உஷ்...!! காரணம் தெரிஞ்சவங்க
வெளியே சொல்லிடாதீங்க ப்ளீஸ்..

நம்ம அனு பாவம்..

THE END...

Prabu said...

//பாட்டு பாடறதுன்னா எனக்கு
அல்வா சாப்பிடற மாதிரி..

எவ்ளோ கஷ்டமான
பாட்டா இருந்தாலும்
சும்மா பிச்சி உதறிடுவேன்..//
உதற தான முடியும்...
பாடவா முடியும்..
ஆமா ஏன் அல்வா சாப்பிடறது மட்டும் தான் ஈஸியா? எனக்கு தோசை சாப்பிடறது கூட ஈஸிதான்,,,

வெங்கட் said...

@ அருண்.,

// நான் சொன்னது NOBLE பரிசு
இல்லை., NO பல் பரிசு. //

ஹி., ஹி., ஹி..!
அது " NOBLE " பரிசு இல்ல
" NOBEL " பரிசு..!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// மொத்தத்துல கனவுன்னு ஒத்துக்கிட்டீங்க.....
அதுதான் வேணும்! //

இது நல்லா இருக்கே..???!!
இது வேற மாதிரின்னு தான்
சொல்லி இருக்கேனே தவிர
கனவுன்னு இன்னும் ஒத்துக்கலையே...!!

இப்ப என்ன பண்ணுவீங்க..?
இப்ப என்ன பண்ணுவீங்க..?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//" A.R.ரஹ்மான் இரவோடு இரவாக
இங்கிலாந்தில் செட்டில் ஆனார்..,
இந்தியா திரும்பி வர மறுப்பு..,
காரணம் என்ன..? "

உஷ்...!! காரணம் தெரிஞ்சவங்க
வெளியே சொல்லிடாதீங்க ப்ளீஸ்.. //


சரி, அந்தக் காரணத்தை நான் சொல்லலை,
ஆனா அனு ஏன் வெங்கட்டுக்கு போன்
பண்ணினாங்க தெரியுமா..?

( நான் அனுவுக்கு போன் பண்றேன்.. )

நான் : நாந்தாங்க, பெயர் சொல்ல விருப்பமில்லை

அனு : சொல்லுங்க..

நான் : நான் உங்களுக்கு முன்னாடியே கமெண்ட்
போட்டுட்டேன்னு வருத்தமா இருக்கீங்களோ..?

அனு : ஆமா..

நான் : உங்க வருத்தத்துக்கு காரணமே, இந்த வெங்கட் தான்,
அவர்தான் இப்படி ஒரு பதிவைப் போட்டு என்னை உசுப்பி விட்டுட்டாரு.

அனு : அவர் எப்பவுமே இப்படித்தான மொக்கை போடுவார்..

நான் : உலகப் புகழ் ரஹ்மானை இழுத்தது என்னை ரொம்பவும் பாதிச்சுது.

அனு : ரஹ்மான் தான வருத்தப் படனும்,
நீங்க ஏன் கவலைப் படறீங்க?

நான் : உண்மைதான், எனக்கு ஒரு ஐடியா..

அனு : என்ன சொல்லுங்க,

நான் : வெங்கட்டுக்கு ஒரு போன் போட்டு ரஹ்மான் கிட்ட ஒரு சான்ஸ் வாங்கிக்
குடுக்க சொல்லுங்க

அனு : சரி, ரஹ்மான் எனக்கு சான்சே குடுத்துட்டா அவர்
இன்னும் Famous ஆயிடுவாரே.?

நான் : அங்கே போயி வெங்கட் குரல்ல பாடிக் காமிங்க,
அது போதும்.

அனு : ஆஹா.. இது சூப்பர் ஐடியாவா இருக்கே..!!

இப்ப புரியுதா, அனு வெங்கட்டுக்கு
ஏன் போன் செஞ்சாங்கன்னு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ பெயர் சொல்ல விருப்பமில்லை
இனிமே வெங்கட் பாடறத நிப்பாட்டுறாரோ இல்லியோ அல்வா கொடுக்கிறத, ச்சீ சாப்பிடுரத நிறுத்திடுவார்

அனு said...

//இனிமே வெங்கட் பாடறத நிப்பாட்டுறாரோ இல்லியோ அல்வா கொடுக்கிறத, ச்சீ சாப்பிடுரத நிறுத்திடுவார்//

நம்ம எல்லோரோட ஆசையும் அதுதானே?? நடக்குதான்னு பொறுத்திருந்து பார்ப்போம்..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அனு said...
//இனிமே வெங்கட் பாடறத நிப்பாட்டுறாரோ இல்லியோ அல்வா கொடுக்கிறத, ச்சீ சாப்பிடுரத நிறுத்திடுவார்//

நம்ம எல்லோரோட ஆசையும் அதுதானே?? நடக்குதான்னு பொறுத்திருந்து பார்ப்போம்..
//

சாரி, என்னை பொறுத்தவரை வெங்கட் நிறைய அல்வா சாப்பிடனும் (அதாவது நாமதான் அவருக்கு நிறைய அல்வா கொடுக்கணும்)
ஸ்டார்ட் கும்மி

அனு said...

//சாரி, என்னை பொறுத்தவரை வெங்கட் நிறைய அல்வா சாப்பிடனும்//

இங்க அல்வா-ன்றது பாட்டு பாடுறது தானே? வெங்கட் பாடி கேட்டிருந்தீங்கன்னா இப்படி சொல்ல மாட்டீங்க.. (நான் கேட்டிருக்கேனான்னு சின்னபுள்ள தனமா கேக்கக்கூடாது.. நான் தான் இன்னும் உயிரோட இருக்கேனே)

வெங்கட் ஒரு பாட்டு hum பண்ணினதால தான் சென்னைல mildஆ நிலநடுக்கம் வந்ததாக தகவல்.. humming-க்கே இப்படினா அவர் பாடினா??

அருண் பிரசாத் said...

//" A.R.ரஹ்மான் இரவோடு இரவாக
இங்கிலாந்தில் செட்டில் ஆனார்..,
இந்தியா திரும்பி வர மறுப்பு..,
காரணம் என்ன..? " //

இந்த News வருவதற்கு முன் வந்த News,
” ஏ.ஆர்.ரஹ்மான் தற்கொலை முயற்சி”

கோகுலத்தில் சூரியனில் வெங்கட் “ A.R.ரஹ்மான் Music-ல
ஒரே ஒரு பாட்டாவது
நான் பாடணும்கறதுதான்..,
A.R.ரஹ்மானோட லட்சியம்..” என வெளியிட்டதால் இந்த முடிவை எடுத்தார். பின் அடுத்த வரியை அவர் மனைவி படித்து சொன்ன பிறகு தற்கொலை முடிவை கைவிட்டார்.

வெங்கட் said...

@ அனு & Co..,

இவிங்க ரவுசு தாங்கலையே..!!
World Bank-ல கடன் வாங்கியாவது
இந்த கட்சியை உடைச்சே ஆகணும்..

வெங்கட் Counting Starts..

( வேற எதுக்கு எல்லாம்
சதி திட்டம் தீட்டறதுக்கு தான்.. )

cheena (சீனா) said...

அடேயப்பா - 41 கமெண்ட்ஸ் - ம்ம்ம்ம்ம் - வெங்கட் பெரிய ஆளுப்பா நீ - சீக்கிரம் வந்துடு - நான் கூப்டுக்கிட்டே இருக்கேன் - ஆமா

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

சூப்பர் சிங்கர் - இன்று ஒரு தகவல் - கேள்வி பதில் - அத்தனையும் அருமை - நகைச்சுவை மிளிர்கிறது - பிச்சைக் காரன் பெயர்க் காரணம் சூப்பர்

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா

Anonymous said...

Good post and this enter helped me alot in my college assignement. Gratefulness you seeking your information.