சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

05 November 2010

லைட்டா சிரிங்க - 2

No : 1 ( ஹோட்டலில் )

" ஒரு காபி எவ்ளோ..? "

" அஞ்சு ரூபா.. "

" எதிர் கடையில 50 பைசான்னு
போட்டு இருக்கே..?!! "

" டேய் லூசு.., அது ஜெராக்ஸ் காப்பிடா..!! "

* * * * * * * * * * * * * * * * * *

No : 2

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு
ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை
கொடுக்கணும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு..

* * * * * * * * * * * * * * * * * *

No : 3
( கல்யாண மண்டபம்.. )

"வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?
பொண்ணு வீட்டுக்காரரா..? "

" ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!"


* * * * * * * * * * * * * * * * * *

No : 4 ( Exam Question Paper... )

Sum :
Prove that LHS = RHS

( 2a+3b) X ( 10x+4y)=(9x+6)

ஒரு பையன் இதை எப்படி
Prove பண்ணினான்னா...

Ans :
( 2a+3b) X ( 10x+4y) = (9x+6)

(( 2a+3b) X ( 10x+4y)) X 0 = (9x+6) X 0

0 = 0

Hence Proved LHS = RHS


டிஸ்கி : லைட்டா சிரிங்க - 1 படிக்க Click Here
.
.

56 Comments:

Sunitha said...

very funny.

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

அருண் பிரசாத் said...

சரி சரி, சிரிச்சிடறேன் அதுக்காக லைட்டா சிரிங்க - 3 போட்டுடாதீங்க....

மீ பாவம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//( Exam Question Paper... )

Sum :
Prove that LHS = RHS

( 2a+3b) X ( 10x+4y)=(9x+6)

ஒரு பையன் இதை எப்படி
Prove பண்ணினான்னா...//

இன்னுமா உங்க பையன் உங்களை நம்பி ஹோமே வொர்க் பண்றான். ஹிஹி

Arun Prasath said...

// 0 = 0 //
நம்ம சொந்தகார பயலா இருப்பானோ?

இம்சைஅரசன் பாபு.. said...

ha ha

சௌந்தர் said...

இந்த பதிவிலே சிரித்து விட்டேன் இதன் அடுத்த பாகம் போடாதீங்க இதுவே சூப்பர்...

Chitra said...

( 2a+3b) X ( 10x+4y) = (9x+6)

(( 2a+3b) X ( 10x+4y)) X 0 = (9x+6) X 0

0 = 0

Hence Proved LHS = RHS

....இவர் கிட்ட கணக்கு படிக்காமல் போயிட்டேனே! ஹா,ஹா,ஹா,ஹா....

Shalini(Me The First) said...

@வெங்கட்

//
Ans :
( 2a+3b) X ( 10x+4y) = (9x+6)

(( 2a+3b) X ( 10x+4y)) X 0 = (9x+6) X 0

0 = 0

Hence Proved LHS = RHS //

செம ஐடியா பாஸ்!
இந்த டைம் மீ தான் யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட்

டிஸ்கி:யாராச்சும் ஏதாச்சும் அபசகுகுனமா சொன்னீங்க அப்புறம் நம்ம போலீஸ ஜோக் சொல்ல சொல்லிடுவன்
இல்ல நம்ம “mr.sun`snetway” போடுற டீய குடிக்க சொல்லிடுவன்
be carsful...!

ஆமா எங்கே பெ.சொ.வி?

Shalini(Me The First) said...

@ அருண்

//
சரி சரி, சிரிச்சிடறேன் அதுக்காக லைட்டா சிரிங்க - 3 போட்டுடாதீங்க....

மீ பாவம்..//

ஆமா ஆமா அப்புறம் மொரிசியஸ்ல சுனாமி வந்துடும்

@ரமேஷ்

/இன்னுமா உங்க பையன் உங்களை நம்பி ஹோமே வொர்க் பண்றான். ஹிஹி//

பின்ன உங்களை நம்பி கோட்ட விட சொல்றீங்களா?!

ப.செல்வக்குமார் said...

VAS ல சொல்லுற ஜோக் கேட்டுட்டு சிரிச்ச டீ வாங்கித்தர மாட்டேன் அப்படின்னு உங்க தலைவி சொல்லிருக்காங்களா ..?

ப.செல்வக்குமார் said...

//
டிஸ்கி:யாராச்சும் ஏதாச்சும் அபசகுகுனமா சொன்னீங்க அப்புறம் நம்ம போலீஸ ஜோக் சொல்ல சொல்லிடுவன்
இல்ல நம்ம “mr.sun`snetway” போடுற டீய குடிக்க சொல்லிடுவன்
be carsful...!//

வேண்டாம்க ., வேற என தண்டனை வேணா கொடுங்க .. சுறா படத்த பாத்து தடவ பார்க்க சொல்லுங்க பார்க்கிறேன் . ஆனா போலீசுகாரர மட்டும் ஜோக் சொல்ல சொல்லிராதீங்க ..

அதே மாதிரி அருண் அண்ணனோட டீய குடிக்கிறதுக்கு டி.ஆர் படம் வீராசாமி பார்த்துக்குவேன்..

பிரியமுடன் ரமேஷ் said...

என்ன எல்லாறும் பார்ட் 3 வந்திடுமோன்னு மிரண்டு போயி சிரிக்கறாங்க...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

முதல் ஜோக், உங்க தெரு டீக்கடை மாஸ்டர் சொல்லிட்டாரு.
அந்த கடைசி ஜோக் ஏற்கெனவே, உங்க பேப்பர திருத்தின டீச்சர் சொல்லிட்டாங்க!

சொந்த அனுபவத்தை எல்லாம் ஜோக்னு சொல்லி தப்பிக்கப் பாக்காதீங்க, வெங்கட்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Shalini
//ஆமா எங்கே பெ.சொ.வி?//

நான் இங்கதான் இருக்கேன். உங்களைத் தான் காணோம். நீங்க அரியர் எக்ஸாம் எல்லாம் நல்லா எழுதினீங்களா?

Madhavan said...

LHS = RHS iff, L=R

Madhavan said...

//ஆமா எங்கே பெ.சொ.வி?//


இதுக்குப் பேருதான் சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கிறதா ?

Shalini(Me The First) said...

@பெ.சொ.வி
//
நான் இங்கதான் இருக்கேன். உங்களைத் தான் காணோம். நீங்க அரியர் எக்ஸாம் எல்லாம் நல்லா எழுதினீங்களா?//

அரியர் எக்ஸாம் எழுதுற ஆளா இருந்தா உங்களை மாதிரி எக்ஸாம் டைம்லயும் டெய்லி அட்டெண்டன்ஸ் குடுத்துர்ப்பன் அது சரி இந்த டைமாச்சும் க்ளியர் பண்ணீடுவீங்களா?

@ மாதவன்
//இதுக்குப் பேருதான் சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கிறதா ?//

இல்லீங்க இதுக்கு பேரு ஆட்ட வெட்ரதுக்கு தண்ணி தெளிக்கிறது :)

மங்குனி அமைசர் said...

" டேய் லூசு.., அது ஜெராக்ஸ் காப்பிடா..!! "///

அப்ப நாலஞ்சு பேர் போனா , ஒரு காப்பி 5 ரூபாயிக்கு வாங்கிட்டு மீதிய எதித்த கடைல ஜெராக்ஸ் எடுத்துக்கலாம்

மங்குனி அமைசர் said...

0 = 0 "///

எங்க கிட்டேவா???? நாங்க குழந்தையா இருக்கச்சே புரூப் பண்ணியது . ஹி.ஹி.ஹி........... இன்னும் இந்த மாதிரி ஏகப்பட்ட புரூப் இருக்கு வேணுமா ?

Madhavan said...

நாங்கலாம் பதிவுக்கே பதிவு போடுவோமில்லை .. இங்கிட்டு வந்துதான் பாருங்களேன் அந்த கூத்தை..

மங்குனி அமைசர் said...

நாளுமே நல்ல ஜோக்ஸ் வெங்கட் ..............

TERROR-PANDIYAN(VAS) said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை

//நீங்க அரியர் எக்ஸாம் எல்லாம் நல்லா எழுதினீங்களா?//

ஹலோ!! VKSல மட்டும்தான் எக்ஸாம் எழுதாமலே பெயில் ஆகி ஆரம்பத்துலே அரியர்ஸ் எக்ஸாம் போவிங்க. நாங்க எல்லாம் வாத்தியாருக்கே பாடம் எடுக்கரவங்க.... :)))

TERROR-PANDIYAN(VAS) said...

@Madhavan

//இதுக்குப் பேருதான் சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கிறதா ?//

நாங்க எல்லாம் ஆப்ரிக்கா காட்டுக்கு போய் அணக்கோண்டவ அதட்டி அட்டெண்டன்ஸ் எடுக்கரவங்க அடுத்த தெரு போய் ஐஸ் வாங்க தான பயந்துடுவோம்..

மங்குனி அமைசர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@Madhavan

//இதுக்குப் பேருதான் சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கிறதா ?//

நாங்க எல்லாம் ஆப்ரிக்கா காட்டுக்கு போய் அணக்கோண்டவ அதட்டி அட்டெண்டன்ஸ் எடுக்கரவங்க அடுத்த தெரு போய் ஐஸ் வாங்க தான பயந்துடுவோம்.. ////

வெங்கட் கிட்ட சொன்னா அவரு ஜெராக்ஸ் எடுத்து தருவாரு

புதிய மனிதா. said...

அருமை ..

மாதேவி said...

:))

Dhosai said...

andha paiyan super'ave calculation easy'ah pottan. but neenga dhan thappa pottenga....

சி.பி.செந்தில்குமார் said...

சாரி வெங்கட்,என்னால லைட்டா சிரிக்க முடியாது,தெரியாது.டார்க்காதான் சிரிப்பேன்,ஓக்கேவா?

அன்னு said...

எல்லா ஜோக்குமே வித்தியாசமானவை. கலக்குங்க:)

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு வேடிக்கை முரண் பார்த்தீங்களா>?சினிமால 2ம் பாகம் படம் எடுத்தா அது முதல் பாகம் போல் எடுபடாது.ஆனா உங்க முதல் பாகம் இண்ட்லில 7 ஓட்டும் 2ம் பாகம் 35 ஓட்டும் வாங்கி இருக்கு,கலக்கல்

சி.பி.செந்தில்குமார் said...

விசிட்டர்ஸ் டுடே 400 பேர்,ஹிட்ஸ் 970, ஆன்லைன்ல 7 பேரு

அடேங்கப்பா,நீங்க 3ம் கோணத்துல பின்னூட்டத்துல ஒரு வாரத்துக்கும் சேத்து எனக்கு 500 ஹிட்ஸ் வந்தா போதும்னு கதை விட்டீங்களே?

இப்போ என்ன சொல்றீங்க?

arunrajamani said...

LHS = RHS wonderful!!!!

GSV said...

//செம ஐடியா பாஸ்!
இந்த டைம் மீ தான் யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட்
//

haaa haa... illa World firsta vanthirukkanume...

வெங்கட் said...

@ சுனிதா.,

ரொம்ப Thanks..
உங்க Blog ரொம்ப சூப்பர்ங்க..

Spoken English கத்துக்க நினைக்கிறவங்க
இவங்க Blog ஒரு வரப்பிரசாதம்..!!

தொடரட்டும் உங்கள் பணி..!!

Gopi Ramamoorthy said...

முடியல

அந்தக் கடைசிக் கணக்கு, அதுக்கு மாதவனின் எதிர்வினை, முடியல சாமி முடியல

philosophy prabhakaran said...

சொப்பர்... இரண்டாவது ஜோக் அருமையிலும் அருமை...

என்னது நானு யாரா? said...

கணக்கு விஷயம் உண்மையாலுமே சூப்பரு தல! தீபாவளி வாழ்த்துக்கள்!

வெங்கட் said...

@ அருண்.,

// மீ பாவம்... //

Don't Worry அருண்..!!

யார் வந்து என்னை கத்தி முனையில
நிக்க வெச்சு கேட்டாலும்..,
அந்த Sum-ஐ Prove பண்ணின பையன்
நீங்க தான்கிற உண்மையை மட்டும்
சொல்லவே மாட்டேன்..

வெங்கட் said...

@ ரமேஷ்.,


// இன்னுமா உங்க பையன் உங்களை
நம்பி ஹோமே வொர்க் பண்றான். //

நான் அவங்கிட்ட சொல்லி இருக்கேன்..

நல்லா படிக்கணும்., இல்லைன்னா
நீயும் இந்த " ரமேஷ் மாமா மாதிரி
ஆயிடுவே "-ன்னு

பயபுள்ள மிரண்டுட்டான்ல..
இப்பல்லாம் ஒழுங்கா படிக்கிறான்..

ரமேசு.. நீங்க அப்படியே இந்தியா
முழுக்க ஒரு பாத யாத்திரை
வந்தீங்கன்னா எல்லா புள்ளங்களும்
உங்களை பாத்து., பயந்து ஒழுங்கா
படிக்க ஆரம்பிச்சிக்கும்..

அப்புறம் வருங்காலத்துல
உங்களுக்கு " பாரத் ரத்னா "
அவார்டெல்லாம் குடுப்பாங்க..

வெங்கட் said...

@ Arun Prasath.,

// நம்ம சொந்தகார பயலா இருப்பானோ? //

அப்ப நம்ம அருண் உங்களுக்கு
சொந்தமா..? சொல்லவே இல்ல..?!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// இந்த டைம் மீ தான் யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் //

" இந்த தடவையும் நான் தான்
Captain-ன்னு " M.S Dhoni சொல்ற
மாதிரி இருக்கு..

உங்க திறமைக்கு " யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் "
எல்லாம் ஒரு கப் Tea குடிக்கிற மாதிரி..
( இது அருண் போட்றா Tea இல்ல..
வேற நல்ல Tea )

All the Best for ur EXAMS..!!

வெங்கட் said...

@ செல்வா.,

// VAS ல சொல்லுற ஜோக் கேட்டுட்டு சிரிச்ச டீ
வாங்கித்தர மாட்டேன் அப்படின்னு உங்க தலைவி
சொல்லிருக்காங்களா ..? //

அது ஒண்ணுமில்ல..

அவங்க ( VKS ) இன்னிக்கு தானே
இந்த ஜோக்கை படிச்சி இருக்காங்க..
படிச்ச உடனே அவங்களுக்கு ஜோக்
புரிஞ்சிடுமா..? மெதுவா நாளைக்கு சிரிப்பாங்க..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெங்கட் said...

அவங்க ( VKS ) இன்னிக்கு தானே
இந்த ஜோக்கை படிச்சி இருக்காங்க..
படிச்ச உடனே அவங்களுக்கு ஜோக்
புரிஞ்சிடுமா..? மெதுவா நாளைக்கு சிரிப்பாங்க..!!///

என்னது இதெல்லாம் ஜோக்கா? இது ஜோக் அப்டின்னா சிபிசெந்தில்குமார் எழுதுறதுக்கு பேர் என்னவோ. செந்தில் சார் இங்க வாங்க. உங்களை வெங்கட் எப்படி அசிங்க படுத்திருக்காரு பாருங்க.(நாராயணா நாராயணா)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெங்கட் said...@ ரமேஷ்.,
நல்லா படிக்கணும்., இல்லைன்னா
நீயும் இந்த " ரமேஷ் மாமா மாதிரி
ஆயிடுவே "-ன்னு

பயபுள்ள மிரண்டுட்டான்ல..
இப்பல்லாம் ஒழுங்கா படிக்கிறான்..//

சரிதான். ரமேஷ் மாமா மாதிரி புத்திசாலி ஆகிறதுக்கு இன்னும் நிறைய படிக்கணும். அதுக்கு a,b,c,d யே பரவா இல்லைன்னு நினைச்சிருப்பான்..

வெங்கட் said...

@ பிரியமுடன் ரமேஷ்.,

// என்ன எல்லாறும் பார்ட் 3 வந்திடுமோன்னு
மிரண்டு போயி சிரிக்கறாங்க... //

நான் எங்கே பிரபல பதிவர்
ஆயிடுவேனோன்னு இவிங்க
எல்லோருக்கும் என்மேல
பொறாமை., பொறாமை..!!

" ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
( கோகுலத்தில் ) சூரியன் மறைவதில்லை..!! "

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// முதல் ஜோக், உங்க தெரு டீக்கடை
மாஸ்டர் சொல்லிட்டாரு. //

ஆமா., ஆமா.. அவர் உங்ககிட்ட
சொன்னதை தானே நான் இங்கே
ஜோக்கா போட்டு இருக்கேன்..

சரி.., 50 பைசாவுக்கு தர்றது
ஜெராக்ஸ் காப்பின்னு இப்பவாவது
தெரிஞ்சிக்கிட்டீங்களா..?!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// @ மாதவன் Said.,
இதுக்குப் பேருதான் சொந்த செலவுல
சூனியம் வெச்சுக்கிறதா ? //

// இல்லீங்க இதுக்கு பேரு ஆட்ட
வெட்ரதுக்கு தண்ணி தெளிக்கிறது :) //

ஆட்டை வெட்டியாச்சு..!!
ஹி., ஹி., ஹி...!!

வெங்கட் said...

@ மங்குனி.,

// அப்ப நாலஞ்சு பேர் போனா ,
ஒரு காப்பி 5 ரூபாயிக்கு வாங்கிட்டு
மீதிய எதித்த கடைல ஜெராக்ஸ் எடுத்துக்கலாம் //

ஜெராக்ஸ் எடுத்துட்டு வந்து
அந்த ஹோட்டலுக்கு முன்னாடியே
உக்கார்ந்து ஒரு காபி 2.50 ரூபாய்ன்னு
விக்கலாம்.. எப்புடி..?!!

வெங்கட் said...

@ மாதவன்.,

// நாங்கலாம் பதிவுக்கே பதிவு போடுவோமில்லை.. //

ஒத்துக்கறேன்.. நீங்க ஒரு
பிரபல Blogger-ன்னு ஒத்துக்கறேன்..

இப்ப போறேன்..
திரும்பி.............,

திரும்பி வரமாட்டேன்னு
சொல்ல வந்தேன்..

வெங்கட் said...

@ டெரர்.,

// நாங்க எல்லாம் ஆப்ரிக்கா காட்டுக்கு
போய் அணக்கோண்டவ அதட்டி
அட்டெண்டன்ஸ் எடுக்கரவங்க //

பொழுது போகலைன்னா.,
சிங்கத்தை கூட்டிட்டி சினிமாவுக்கு
போவோமே.. அதை சொல்லலை..!!!

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெங்கட் said...

அவங்க ( VKS ) இன்னிக்கு தானே
இந்த ஜோக்கை படிச்சி இருக்காங்க..
படிச்ச உடனே அவங்களுக்கு ஜோக்
புரிஞ்சிடுமா..? மெதுவா நாளைக்கு சிரிப்பாங்க..!!///

என்னது இதெல்லாம் ஜோக்கா? இது ஜோக் அப்டின்னா சிபிசெந்தில்குமார் எழுதுறதுக்கு பேர் என்னவோ. செந்தில் சார் இங்க வாங்க. உங்களை வெங்கட் எப்படி அசிங்க படுத்திருக்காரு பாருங்க.(நாராயணா நாராயணா)


yoov rameresh யோவ் ரமேஷ்,இந்த கோர்த்து விடற வேலையை நீங்க இன்னும் விடலையா?

ப.செல்வக்குமார் said...

//என்னது இதெல்லாம் ஜோக்கா? இது ஜோக் அப்டின்னா சிபிசெந்தில்குமார் எழுதுறதுக்கு பேர் என்னவோ. செந்தில் சார் இங்க வாங்க. உங்களை வெங்கட் எப்படி அசிங்க படுத்திருக்காரு பாருங்க.(நாராயணா நாராயணா)
///

ஜோக் பத்தி நீங்க பேசாதீங்க . அன்னிக்கு ஒரு தடவ எங்கிட்ட போன் பண்ணி சிபிசெந்தில் ப்ளாக் பாரு செம காமெடி அப்படின்னு சொன்னீங்க .. நானும் பார்த்தேன் .. ஆனா அது இரண்டுநாள் முன்னாடி போட்ட பதிவா இருந்துச்சு .. அதுக்கு இரண்டு நாளுக்கு அப்புறம் சிரிச்சிட்டு இப்போ வந்து இந்த பில்ட் அப் ..!

வெங்கட் said...

@ சி.பி.செந்தில்.,

// நீங்க 3ம் கோணத்துல பின்னூட்டத்துல
ஒரு வாரத்துக்கும் சேத்து எனக்கு 500 ஹிட்ஸ்
வந்தா போதும்னு கதை விட்டீங்களே?
இப்போ என்ன சொல்றீங்க? //

ஹி., ஹி., ஹி..!!

அதுக்கு பேரு தன்னடக்கமுங்க..

ஏன்னா நமக்கு இந்த விளம்பரம்
பிடிக்காதுங்க..

Gayathri said...

haahaa sama comedy sirichu vaayelam vali.epdi ipdilaam thonuthu..super post thanks a lot

Anonymous said...

உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்

Anonymous said...

டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க…!
சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?

@@@@@@@@@@

வாடிக்கையாளர் ஒருவர் சர்தார்ஜியின் கடையில்
“சீக்கிரம் ஒரு பேக் கொடுங்க. ரயிலைப் பிடிக்கணும்”
“ஐயோ, அவ்வளவு பெரிய பேக் நம்மகிட்ட இல்லைங்க