சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

22 May 2014

ஞாபகம் வருதே.., ஞாபகம் வருதே..!!!


இன்னிக்கு என் ஸ்கூல் ப்ரெண்டு பத்ரி
Whatsapp-ல 5th Std படிச்சப்ப எடுத்த ஸ்கூல்
க்ரூப் போட்டோவை ஸ்கேன் பண்ணி
அனுப்பினான்..

என்கிட்ட அந்த போட்டோ இல்ல...
பாத்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது..

" மச்சி.. அந்த ரெண்டாவது வரிசையில
ஏழாவதா நிக்கறது நம்ம சுதா தானே..? "

" ம்ம்.. ஆமாம்...! "

" அப்ப 3வது வரிசையில 10வது நிக்கறது..
அது R.உஷாவா..? "

" அப்படித்தான் நினைக்கிறேன்..! "

" ஓ.கே அப்புறம் அதே வரிசையில 14வதா
நிக்கறது S.உஷா... கரெக்டா...?! "

" சரியா தெரியல..."

ரெண்டு நிமிஷம் போட்டோவை பாத்துட்டு....

" ஆமா மச்சி... இந்த போட்டோல நீ எங்கே
இருக்கேனு " கேட்டேனா...

காறி துப்பிட்டு போய்ட்டான்..

# அப்படி என்ன நான் தப்பா கேட்டுட்டேன்
மக்கழே..?!!

:) :)
.
.

14 May 2014

ஒரே ஒரு நாள் லீவ் ப்ளீஸ்..!!!


அன்னிக்கு எங்க சித்தப்பா பொண்ணுக்கு
நிச்சயதார்த்தம்..

அப்ப என் பையன் 2nd Std படிச்சிட்டு இருந்தான்..

" அவன் லீவ் போட்டுக்கட்டும்..! " - இது நான்...

" பங்சன் 5 மணிக்கு தானே, கல்யாணத்துக்கு
மூணு நாள் லீவ் போட வேண்டி இருக்கும்..
அதனால அவன் ஸ்கூலுக்கு போகட்டும்..! "
- இது என் Wife...

அந்த ஸ்கூல்., லீவ் விஷயத்துல ரொம்ப ஸ்டிரிக்ட்.,
அதனால எதாவது சொல்வாங்களோனு
என் Wife யோசிச்சாங்க..

அப்ப எனக்கு டக்னு ஒரு ஐடியா...

" ஏன் நிர்மலா... உன் ப்ரெண்ட் பிரியா
அங்கே தானே டீச்சரா இருக்காங்க..
லீவ் போட்டுக்கலாமானு ஒரு வார்த்தை
கேட்டு பாரேன்..! "

" நீங்களே கேளுங்க..!! "

சரினு நானும் என் Wife மொபைல் எடுத்து
பிரியா நம்பர்க்கு டயல் பண்ணினேன்..

" ஹலோ.. பிரியாவா..? "

" ஆமா...! "

" நான் நிர்மலாவோட ஹஸ்பெண்ட் வெங்கட்
பேசறேன்..! "

" தெரியுது சொல்லுங்க சார்...!! "

" என் தங்கச்சிக்கு இன்னிக்கு நிச்சயதார்த்தம்..
என் பையனை லீவ் போட்டுக்க சொல்லலாமா.? "

" வீட்ல விஷேசம்னா போட்டுக்க வேண்டியது
தானே..!! "

" அதுக்கில்ல... ஸ்கூல்ல எதாவது
சொல்லுவாங்களோனு.? "

" எத்தனாவது படிக்கறான்..?! "

" 2nd Std..!! "

" அப்ப தாராளமா போட்டுக்குங்க..!! "

" தேங்க்ஸ்ங்க...!! "

பையனை அன்னிக்கு லீவ் போட வெச்சாச்சு...!

அப்புறம் மதியம் 12 மணி வாக்குல
பட்டு சேலை ஜாக்கெட்க்கு டிசைன் போட
குடுத்து இருந்தாங்க... அதை வாங்கலாம்னு
டைலர் கடைக்கு போனோம்..!!!

அங்கே இருந்த லேடி டைலர்கிட்ட
என் Wife...

" ஜாக்கெட் ரெடி ஆகிடுச்சா...?! "

" ஆகிடுச்சுக்கா.. இந்தாங்க...!! "

வாங்கிட்டு பணம் குடுத்தோம்..

" அப்புறம்க்கா.. பையனை இன்னிக்கு
லீவ் போட வெச்சிட்டீங்களா..? "

எங்களுக்கு ஆச்சரியம்... உடனே நானு..

" ஆமா.. இந்த மேட்டர் உங்களுக்கு
எப்படி தெரியும்..?!! "

" காலைல எனக்கு தானே சார் போன்
பண்ணி ஐடியா கேட்டீங்க..?! "

" என்னாது... ஐடியா கேட்டேனா....?!!! "

( ஆஹா... Teacher பிரியாவுக்கு போனை
போடறதுக்கு பதிலா Tailor பிரியாவுக்கு
போனை போட்டுட்டோம் போல இருக்கே..!!! )

ஹி., ஹி., ஹி.. அது வந்து....!!!
ஹி., ஹி.., ஹி...
.
.

11 May 2014

ஒரிஜினல் Vs டூப்ளிகெட்


EL PASO...!!!

1997-ல இதை என் நண்பன் ஜனா தான்
எனக்கு Introduce பண்ணினான்..

அப்பல்லாம் தினமும் EL PASO தான்..

வாசனை ரொம்ப மைல்ட்டா இருக்கும்..
ரொம்ப உற்சாகமா பீல் பண்ணுவோம்..

2001-க்கு அப்புறம் எனக்கு எங்கேயும்
ஒரிஜினல் EL PASOகிடைக்கல..

பெங்களூர், சென்னைல கூட வாங்கிட்டேன்..
அச்சு அசலா ஒரிஜினல் மாதிரியே இருக்கும்...
யூஸ் பண்ணினாதான் டூப்ளிகெட்னு தெரியும்..

சரி வேற ப்ராண்ட் மாத்திக்கலாம்னு பாத்தா
எதுவும் எனக்கு செட் ஆகல.. தலைவலி
பிடிச்சிக்கும்..

அப்புறம் அதை எடுத்து கரப்பான் பூச்சிக்கு
அடிப்பேன்.. சும்மா சொல்லகூடாது..
நிஜமான கரப்பான்பூச்சி மருந்தை விட
இதுங்க சூப்பாரா வேலை செய்யும்..

ஆனா நான் இந்த AXE, SetWet இதெல்லாம்
டிரை பண்ணதே இல்ல...

அதை யூஸ் பண்ணினா பொண்ணுங்க
வேற பின்னாடியே வருவாங்களாமாம்..
எதுக்கு ரிஸ்க்கு..?!!!

சரி மேட்டர்க்கு வர்றேன்...

13 வருஷம் கழிச்சி நேத்து எனக்கு
ஒரிஜினல் EL PASO கிடைச்சிடுச்சு..

Thanks to Flipkart..!!

உய்.. உய்ய்ய்...!!!!

டிஸ்கி : இது ஒரிஜினல்னு எப்படி
கண்டுபிடிச்சேனு கேப்பீங்களே...

தெரியும்..!!!

அதான்.. " ORIGINAL PRODUCT " தெளிவா
மேலயே எழுதி இருக்கான்ல...!!

ஹி., ஹி., ஹி..!!!
.
.

06 May 2014

தொழில் ரகசியம்..


ஒரு தொழில் ரகசியம் சொல்லட்டா..

எங்களுக்கு வெங்காய கலர் சேலைக்கு
ஆர்டர் வந்தா பிங்க், சிகப்பு, பீட்ரூட்,
மெரூன், ரோஸ்னு எந்த கலர் கையில
ஸ்டாக் இருக்கோ அதை போட்டுடுவோம்..

ஏன்னா வெங்காய கலர்னு எக்ஸாக்டா
ஒரு கலர் கிடையாது..

ஒருவேளை கடைக்காரங்க கேட்டா..

" நீங்க வேணா ஒரு வெங்காயத்தை
பக்கத்துல வெச்சி பாருங்க.. அந்த
கலர் தான் இதுன்னு " சொல்லி
சமாளிப்போம்...

ஒரு தடவை அப்படித்தான் எங்க
கடை பையன் வந்து கேட்டான்...

" அண்ணே.. அந்த திருச்சி கடைக்காரரு
வெங்காய சருகு கலர்ல 20 சேலை
கேட்டாரே... அந்த கலர் இல்லைண்ணே. "

" இல்லன்னா என்னடா ஸ்டாக் இருக்கற
கலரை பேக் பண்ணி அனுப்பு... "

" சரிண்ணேன்னு " போயிட்டான்...

அப்புறம் ரெண்டு நாள் கழிச்சி
அந்த திருச்சி கடைக்காரரு போன்
பண்ணினாரு...

" வெங்காய சருகு கலர் அனுப்ப சொன்னா..
நீ என்ன அனுப்பி இருக்க..?!! "

" அண்ணே.. அது வெங்காய சருகு தான்..
நீங்க வேணா ஒரு வெங்காயத்தை....

" யோவ்.. எந்த ஊர்லயா வெங்காயம்.,
கிளிபச்சை கலர்ல இருக்கு..? "

( அடப்பாவி... கிளிப்பச்சை கலராடா
போட்ட..?!! சொல்லவேயில்ல..
சரி சமாளிப்போம்....!! )

" ஹி., ஹி., அண்ணே.. உங்களுக்கு
விஷயமே தெரியாதா.. அமெரிக்காவுல
எல்லாம்............. "

" அடேய்ய்ய்ய்ய்ய்......!!! கலர் கலரா ரீல்
சுத்தறதுனு கேள்விப்பட்டு இருக்கேன்..
இதானா அது...?!! "

" ஹி., ஹி., ஹி...!!! "
.
.