சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

07 November 2010

சிநேகா..., இது உண்மையா..?
























டிஸ்கி : இது கிசு கிசு அல்ல..

லீவ் நாள்னு சொல்லி
ஹாயா Tv பாத்துட்டு இருந்தேன்..

சன் Tv-ல " வாழ்வை மாற்றலாம் வாங்க "
நிகழ்ச்சி ஓடிட்டு இருந்தது..

அதுல கலந்துகிட்டவங்க..
சிநேகாவும் & அவங்க அக்காவும்

அதுல சிநேகாகிட்ட ஒரு கேள்வி
கேட்டாங்க..

அது ரொம்ப Tough Question..
( நானா இருந்தா ' Pass ' சொல்லி இருப்பேன்..)

அந்த கேள்வி என்னான்னா..

" நீங்க அதிக தடவை பார்த்த
T.ராஜேந்தர் படம் எது..? "

சிநேகா : " வீராச்சாமி..!! "

இந்த பதிலை கேட்டதுல இருந்து
எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா
வருது..

சிநேகா..! உங்களுக்கு மனசாட்சியே
இல்லையா..?! தமிழ்நாட்டு மக்களை
பத்தி கொஞ்சமாவது சிந்திச்சி பார்த்தீங்களா..?!!

ஒருவேளை இந்த நிகழ்ச்சியை தலைவரு ( ?! )
பாத்துட்டு., புல்லரிச்சி போயி..,
புதுபடம் எதாவது ஆரம்பிச்சுட்டார்னா..??

ஐயோ..!! தூங்கிட்டு இருக்கிற சிங்கத்தை
சொறிஞ்சி விட்டா.. அது கடிச்சி.,
குதறாம விடாதே..!!

' சுறா ' கடிச்ச கடியே இன்னும்
ஆறலை..!!

அவ்வ்வ்வ்வ்வ்...........

டிஸ்கி : நீங்கல்லாம் இந்த சரித்திர புகழ்
வாய்ந்த நிகழ்ச்சியை பாக்காம தப்பிச்சி
இருந்தீங்கன்னா... விட்டுடுவோமா..
அதான் Posting-ஆ போட்டேன்..

" யான் பெற்ற துன்பம்
பெறுக இவ்வையகம்..!! "

அப்பாடா.. இப்பதான் நிம்மதியா இருக்கு.!!

ஹி., ஹி., ஹி..!!
.
.

49 Comments:

கலாநேசன் said...

நானும் அந்தக் கொடுமையை பார்த்தேன். அநேகமாய் சிநேகா சொன்ன ஒரே பதில் இதுதான்.

வெங்கட் said...

@ கலாநேசன்.,

// நானும் அந்தக் கொடுமையை
பார்த்தேன். //

அப்படியா..? நமக்கும் துணைக்கு
ஆள் இருக்குப்பா..

அப்புறம் " அந்த படம் ஏன் பிடிக்கும்னு "
கேட்டதுக்கு கூட

" அந்த படத்துல காஸ்டியூம்ஸ்
எல்லாம் சூப்பரா இருக்கும்னு "
சொன்னாங்களே..

அது T.R காஸ்டியூமை சொன்னாங்களா.?
இல்ல மும்தாஜ் காஸ்டியூமையா..?
அது எனக்கு சரியா புரியலை..

தமிழ் வினை said...

அவங்களுகு வேற படத்துப் பேரு தெரிஞ்சிருக்காதுன்னு நினைக்கறேன். ஏன்னா எல்லாப் பேரும் ரொம்ப நீளமா இருக்கும். அதில்லாம் இதுதான் தலைவரோட கடைசி(யாக் வெளியான)படம்.
//புதுபடம் எதாவது ஆரம்பிச்சுட்டார்னா..??// உங்கள் ஆசை கட்டாயமா நிறைவேறும். அவரோட அடுத்த படத்துப் பேரு "ஒரு தலைக் காதல்"

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நாங்கல்லாம் அந்த நிகழ்ச்சியை பாக்கலை. ஏன்னா VKS-னா value -வைக் keduththukkaatha sangam. எப்புடீ?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

பின்னாடியே வேற ஒரு கேள்விக்கு தான் விரும்பிப் படிக்கற ப்ளாக் கோகுலத்தில் சூரியன் அப்படின்னு சொல்லலையே? அந்த மட்டும் எங்களுக்கு சந்தோசம்!

வெங்கட் said...

@ தமிழ்வினை.,

// உங்கள் ஆசை கட்டாயமா நிறைவேறும்.
அவரோட அடுத்த படத்துப் பேரு
"ஒரு தலைக் காதல்" //

ஆஹா.. விட மாட்டார் போல
இருக்கே.., பேசாம படம் ரிலீஸ்
ஆகறப்ப வடநாட்டு பக்கம் " எஸ் "
ஆயிட வேண்டியது தான்.

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// நாங்கல்லாம் அந்த நிகழ்ச்சியை பாக்கலை. //

நிகழ்ச்சியை பார்க்கலைன்னா என்ன..?
"ஒரு தலைக் காதல்" படம்
மட்டும் ரிலீஸ் ஆகட்டும்..

உங்க சங்கத்துல எல்லோரையும்
துப்பாக்கி முனையில குண்டுகட்டா
தூக்கிட்டு போயி " First Day., First Show "
பாக்க வெச்சிடறோம்..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//உங்க சங்கத்துல எல்லோரையும்
துப்பாக்கி முனையில குண்டுகட்டா
தூக்கிட்டு போயி " First Day., First Show "
பாக்க வெச்சிடறோம்..
//

அப்பிடியே செய்ங்க. அதோட, நாங்க போற இடம் தெரியக் கூடாது இல்ல, அதுனால எங்க கண்களைக் கட்டிக் கூட்டிட்டுப் போய் அப்படியே திருப்பி கூட்டிட்டு வந்துடுங்க. (சினிமா தியேட்டர் உள்ளேயும் தான்)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//சன் Tv-ல " வாழ்வை மாற்றலாம் வாங்க "
நிகழ்ச்சி ஓடிட்டு இருந்தது..//

சரியா பாத்தீங்களா, நிகழ்ச்சியோட பேரு "வாழ்வை முடிசுகலாம் வாங்க" இல்லையே!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// எங்க கண்களைக் கட்டிக் கூட்டிட்டுப் போய்
அப்படியே திருப்பி கூட்டிட்டு வந்துடுங்க.
(சினிமா தியேட்டர் உள்ளேயும் தான்) //

ரொம்ப புத்திசாலிதனமா பேசறதா
நினைப்போ...!!

கண்ணை கட்டிட்டா போதுமா..?
அப்பக்கூட காது Open-ல தாங்க
இருக்கு.. T.R டயலாக்கை கேட்டு
உங்க காதுல ரத்தம் வரும்ல..
அந்த சந்தோஷம் போதும் எங்களுக்கு..

எஸ்.கே said...

எங்களுக்காக அந்த நிகழ்ச்சியை பார்த்து எங்களுக்கு தகவல் சொல்லும் நீங்கள் வாழ்க! வாழ்க!
ஆமா, அந்த நிகழ்ச்சி என்றைக்கு எத்தனை மணிக்கு போட்டாங்க?

philosophy prabhakaran said...

வீராசாமி போல ஒரு முழுநீள நகைச்சுவை திரைப்படம் வராதா என்று நாங்களெல்லாம் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்...

என்னது நானு யாரா? said...

உங்க தலை எழுத்து அப்படி! இந்த மாதிரி நிகழ்ச்சியெல்லாம் பார்க்கணும்னு இருக்கு! நான் டீவியில்லாத இடத்தில இருக்கேன். அதனால நான் எஸ் ஆயிட்டேன்.

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// ஆமா, அந்த நிகழ்ச்சி என்றைக்கு
எத்தனை மணிக்கு போட்டாங்க? //

இந்த நிகழ்ச்சி Sunday போட்டாங்க..,
Time சரியா தெரியல..

அப்ப நான் Cricket தான் பாத்துட்டு
இருந்தேன்.. Over Break-ல சானல்
மாத்தும் போதும் இந்த கொடுமையை
பாக்க வேண்டியதா போச்சு..

வெங்கட் said...

@ பிரபாகரன்.,

// வீராசாமி போல ஒரு முழுநீள நகைச்சுவை
திரைப்படம் வராதா என்று நாங்களெல்லாம்
ஏங்கிக் கொண்டிருக்கிறோம்... //

ஹா., ஹா., ஹா..! உண்மைதான்..!!

" உன்னை காதலிக்க 1000 பேர் இருப்பாங்க "
இந்த Song அந்த படத்துல Highlight..

வெங்கட் said...

@ என்னது நானு யாரா.,

// உங்க தலை எழுத்து அப்படி!
நான் எஸ் ஆயிட்டேன். //

அப்போ ' எஸ் ' ஆனா என்ன..?
அதான் இப்போ இங்கே வந்து
மாட்டிகிட்டீங்கல்ல..

உங்க தலையெழுத்து அப்படி..!!

ஹி., ஹி., ஹி..!!

சி.பி.செந்தில்குமார் said...

யோவ் யாருய்யா அது மிட்நைட்ல பதிவு போடறது?

சி.பி.செந்தில்குமார் said...

>>>MinMini.com பார்த்தீங்களா..?
அங்கே நமக்கு தான் முதல் சீட்
அதுவும் Free சீட்.,

ஹை.., நம்ம Blog இங்கே
List-ல இருக்கே...
www.TamilBlogger.com

ஹை.., ஹை.., இங்கேயும்
இருக்கே http://Blogs.thakaval.net

News படிக்க.. --> www.nTamil.com
ஆத்தாடி எம்புட்டு News..!!

.>>>

எதுக்கு இந்த விளம்பரம்?

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

வீராசாமி போல ஒரு முழுநீள நகைச்சுவை திரைப்படம் வராதா என்று நாங்களெல்லாம் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்...

யோவ் பிரபாகரா இந்த ஒரு கமெண்ட்டுக்காகவே உம்ம பிளாக்ல வந்து மைனஸ் ஓட்டு போடப்போறேன்

இம்சைஅரசன் பாபு.. said...

இதுக்கு தன வெங்கட் தலை தலையாய் அடிச்சி T .V பக்கம் போகாதே ன்னு ரெண்டு பதிவு போட்டேன் கேட்டிங்களா.....சரி என்ன செய்ய விதி வலியது ............

Madhavan said...

டிஸ்கிய படிச்சவுடன் தொனியவை : இதுக்கு சினேகா பேட்டியே தேவலாம்..

ரசிகன் said...

cini industryக்கு வந்ததுக்கு அப்புறம், ஒரு படம் எப்படி எல்லாம் இருக்கணும்னு மட்டும் தெரிஞ்சிகிட்டா பத்தாது.. எப்படியெல்லாம் இருக்கக்கூடாதுன்னும் தெரிஞ்சிக்கணும்..

சினேகா fieldக்கு வந்ததுக்கு அப்புறம் வந்த இந்த படத்தை வேற வழி இல்லாம ஒரே தடவை பார்த்திருப்பாங்க.. அப்போ..அதிக தடவை பார்த்த ப‌ட‌ம் இதுதானே..
(இதுக்கு முன்னாடி வந்த எந்த படமும் பார்த்திருக்க மாட்டாங்க.. தெரியாத்தனமா அறியாப்புள்ள இதை பார்த்திருக்கும்..)

ரசிகன் said...

//சிநேகா..! உங்களுக்கு மனசாட்சியே
இல்லையா..?!

ம்ம்ம்... , க‌ண்ணு முன்னாடி 189 பேர் இருக்கோம்... பாவ‌ம் சினேகாவை ம‌ட்டும் ஏன் திட்டுறீங்க‌...

ரசிகன் said...

//" அந்த படத்துல காஸ்டியூம்ஸ்
எல்லாம் சூப்பரா இருக்கும்னு "
சொன்னாங்களே..

Title போட்டப்ப T.R பேர் போடாம வந்த ஒரே category, காஸ்டியூம்ஸ் ஆ இருந்திருக்கும்.. Obviously she had no other choice.

Mohamed Faaique said...

அந்த மாதிரி நிகழ்ச்சியெல்லாம் "யாவரும் நலம்" படத்துல வர்றது போல உங்க மாதிரி ஆளுங்க டிவி'ல மாத்திரம் ஓடுறதுங்க.... அது ஒரு v.k.s தயாரிப்பாக கூட இருக்கலாம்.

வெங்கட் said...

@ சி.பி.செந்தில்.,

// யோவ் யாருய்யா அது மிட்நைட்ல
பதிவு போடறது? //

ஹி., ஹி., ஹி..

நம்ம ஆளுங்க எல்லாம் தீபாவளி லீவ்
முடிஞ்சி இன்னிக்கு ஆளுக்கு ஒரு பதிவை
போட்டு Non Stop-ஆ தாக்கிட்டே இருப்பாங்க..

இந்த Traffic-ல நாமலும் பதிவு போட
வேணாமே., கொஞ்சம் முன்னாடி
போடலாமேன்னு போட்டேன்.

// எதுக்கு இந்த விளம்பரம்? //

அது விளம்பரம்தான்..
Minmini.Com-க்கும்.,
Tamilblogger.Com-க்கும்

// யோவ் பிரபாகரா இந்த ஒரு
கமெண்ட்டுக்காகவே உம்ம பிளாக்ல
வந்து மைனஸ் ஓட்டு போடப்போறேன் //

என்னமோ மொக்கை படத்தையே
பாக்காத மாதிரி பில் டப் குடுக்கறீங்க..
ஊர்ல எந்த மொக்கை படம் ரிலீஸானாலும்
1st Ticket உங்களுக்கு தான்னு கேள்விப்ப்ட்டேன்..

Chitra said...

ஒருவேளை இந்த நிகழ்ச்சியை
T.R பாத்துட்டு., புல்லரிச்சி போயி..,
புதுபடம் எதாவது ஆரம்பிச்சுட்டார்னா..??

ஐயோ..!! தூங்கிட்டு இருக்கிற சிங்கத்தை
சொறிஞ்சி விட்டா.. அது கடிச்சி.,
குதறாம விடாதே..!!


.......தீபாவளி முடிஞ்சப்புறம், அணுகுண்டு வெடி போடுறீங்க!

அருண் பிரசாத் said...

@ Madhavan
// டிஸ்கிய படிச்சவுடன் தொனியவை : இதுக்கு சினேகா பேட்டியே தேவலாம்.. //
அப்போ வெங்கட் போஸ்ட் வீராசாமி படத்தை விட படு மொக்கைனு சொல்லுறீங்களா?

மங்குனி அமைச்சர் said...

சிநேகா : " வீராச்சாமி..!! "/////

நடிகை சிநேகா தற்கொலை முயற்சி ????

ப.செல்வக்குமார் said...

எங்க தல போன் போட்டு சொன்னார் , நீ அந்த நிகழ்ச்சிய பார்த்திடாத அப்படின்னு அதனால நல்ல வேளை நான் தப்பிச்சேன் ..!!

basheer said...

சும்மா குறை சொல்ல கூடாது.
எனக்கு ரொம்ப மூட் அவுட் ஆன நேரத்துல வாய் விட்டு சிரிக்க
இன்று வரை ராசேந்தர் படங்களே உதவி வருகின்றன.

dineshkumar said...

சினேகாவுக்கு படம் ஒன்னும் இல்லை போல அதான்..........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அதுல கலந்துகிட்டவங்க..
சிநேகாவும் & அவங்க அக்காவும்

அதுல சிநேகாகிட்ட ஒரு கேள்வி
கேட்டாங்க..

அது ரொம்ப Tough Question..
( நானா இருந்தா ' Pass ' சொல்லி இருப்பேன்..)

அந்த கேள்வி என்னான்னா..

" நீங்க அதிக தடவை படிக்கிற
தமிழ் ப்ளாக் எது..? "

சிநேகா : " கோகுலத்தில் சூரியன்..!! "

இந்த பதிலை கேட்டதுல இருந்து
எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா
வருது..

சிநேகா..! உங்களுக்கு மனசாட்சியே
இல்லையா..?! தமிழ்நாட்டு மக்களை
பத்தி கொஞ்சமாவது சிந்திச்சி பார்த்தீங்களா..?!!

ஒருவேளை இந்த நிகழ்ச்சியை
வெங்கட் பாத்துட்டு., புல்லரிச்சி போயி..,
இன்னும் மொக்கையா எதாவது எழுத ஆரம்பிச்சுட்டார்னா..??

ஐயோ..!! தூங்கிட்டு இருக்கிற சிங்கத்தை
சொறிஞ்சி விட்டா.. அது கடிச்சி.,
குதறாம விடாதே..!!

'லைட்டா சிரிங்க - 2 ' கடிச்ச கடியே இன்னும்
ஆறலை..!!

அவ்வ்வ்வ்வ்வ்...........

" யான் பெற்ற துன்பம்
பெறுக இவ்வையகம்..!! "

அப்பாடா.. இப்பதான் நிம்மதியா இருக்கு.!!

ஹி., ஹி., ஹி..!!

Madhavan said...

//அருண் பிரசாத் said..."

@ Madhavan
(by quoting) டிஸ்கிய படிச்சவுடன் தொனியவை : இதுக்கு சினேகா பேட்டியே தேவலாம்..
அப்போ வெங்கட் போஸ்ட் வீராசாமி படத்தை விட படு மொக்கைனு சொல்லுறீங்களா?" //

அந்த புரோகுராம நா பாக்காம தப்பிச்சாலும், வெங்கட்டு டார்ச்(சர்) லைட்டு போட்டு காண்பிச்சிட்டாரே..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டிவி பாக்காம நிம்மதியா இருக்கோம், அது புடிக்கலியா உங்களுக்கு?

Siva said...

நாந்தான் பாக்கலியே.

வெங்கட் said...

@ பாபு.,

// இதுக்கு தன வெங்கட் தலை தலையாய்
அடிச்சி T .V பக்கம் போகாதேன்னு ரெண்டு
பதிவு போட்டேன் கேட்டிங்களா //

நான் Promise-ஆ T.v பக்கம்
போகவே இல்லை..

இந்த நிகழ்ச்சி T.v-ல ஓடிட்டு
இருந்தப்ப கூட எனக்கு., T.V-க்கும்
10 அடி Distance இருந்ததுப்பா..

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ ரசிகன் said...

// Cini Industry-க்கு வந்ததுக்கு அப்புறம், ஒரு படம்
எப்படி எல்லாம் இருக்கணும்னு மட்டும்
தெரிஞ்சிகிட்டா பத்தாது.. எப்படியெல்லாம்
இருக்கக்கூடாதுன்னும் தெரிஞ்சிக்கணும்.. //

புரியுது..!! புரியுது..!! சுருக்கமா சொன்னா..

நான் Blog எழுத வந்த புதுசுல
VKS-காரங்க Blog-ஐ போயி பாத்து..,
Blog-ன்னா எப்படி எல்லாம் இருக்ககூடாதுன்னு
தெரிஞ்சிக்கிட்ட மாதிரி..

// க‌ண்ணு முன்னாடி 189 பேர் இருக்கோம்.,
பாவ‌ம் சினேகாவை ம‌ட்டும் ஏன் திட்டுறீங்க‌. //

ஏன்னா.. அவங்க திருந்தறதுக்கு
வாய்ப்பு இருக்கு..!!

// Title போட்டப்ப T.R பேர் போடாம வந்த
ஒரே category, காஸ்டியூம்ஸ் ஆ இருந்திருக்கும்.. //

ஹா., ஹா., ஹா..!!

அது கூட " உஷா ராஜேந்தர்னு " போட்டு
இருக்கும்னு நினைக்கிறேன்..

வெங்கட் said...

@ Mohamed Faaique.,

// அது ஒரு V.K.S தயாரிப்பாக கூட இருக்கலாம். //

ஓ.. அப்படியும் இருக்குமோ..?!!
நிகழ்ச்சி படு மொக்கையா
இருக்கும் போதே சந்தேகப்பட்டேன்..

@ ரமேசு.,

சின்ன Doubt..,
இந்த மொக்கை நிகழ்ச்சியை தயாரிக்க
தான் சிங்கப்பூர் போனீங்களா..?

அதான் இந்த நிகழ்ச்சி Telecast ஆன
அன்னிக்கே சிங்கப்பூர்ல இருந்து
உங்களை துரத்திட்டாங்களா..??!!

பட்டாபட்டி.. said...

வீராசாமி, அது ஒரு கற்கால காவியம்..
ஒவ்வோரு வீட்டிலேயும் இருக்க வேண்டிய முக்கிய ஆவணம் அது..

( மனுசனுக்கு தன்னம்பிக்கைய ஊட்ட்ட்ட்ட்டும் படம் சார்.. வாழனுமுனு வெறிய கொண்டுவரும் மகா படம் சார் இது..இதை சினேகா வாயால(?) கேட்டதும்.தமிழக மக்கள் புளங்காகிதம் அடைசிருப்பாங்களே...ஹி..ஹி)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
வீராசாமி, அது ஒரு கற்கால காவியம்..
ஒவ்வோரு வீட்டிலேயும் இருக்க வேண்டிய முக்கிய ஆவணம் அது..

( மனுசனுக்கு தன்னம்பிக்கைய ஊட்ட்ட்ட்ட்டும் படம் சார்.. வாழனுமுனு வெறிய கொண்டுவரும் மகா படம் சார் இது..இதை சினேகா வாயால(?) கேட்டதும்.தமிழக மக்கள் புளங்காகிதம் அடைசிருப்பாங்களே...ஹி..ஹி)///

இல்லியா பின்னே, தங்கத்தாரகை சினேகா ஒரு வார்த்த சொல்லிருச்சுங்கறதுக்காக சரவணா ஸ்டோருல போயி கியூவுல நின்னவிங்க நாங்க..!

பாஸ்கர் said...

அருமை அண்ணன் வெங்கட்டிற்கு,

T.R. பதிவு மிகவும் அருமை. ஒருவேளை சினேகா, T. R. படத்தில் நடிக்க போறார் போல. சிலர் ராமநாராயணன், T.R. படங்களில் நடித்து விட்டு தான் fieldஐ விட்டு விலகுவார்கள். உதாரணம் கௌதமி, ரோஜா etc.......

நாஞ்சில் மனோ said...

//சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்//
ippo santhoshamthaane:]

ராஜி said...

ஹை. நானும் பார்க்கல

வெங்கட் said...

@ மங்குனி அமைச்சர்.,

// நடிகை சிநேகா தற்கொலை முயற்சி ???? //

ஆ.. அப்படியா..?!! ' வீராச்சாமி ' படத்தை
பாத்துட்டு., நேத்து Tv- ல வந்தப்ப கூட
நல்லாதானே இருந்தாங்க..

ஒருவேளை இன்னிக்கு நம்ம அருண் Blog
பக்கம் எதாச்சும் போயி இருப்பாங்களோ..?!!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// " நீங்க அதிக தடவை படிக்கிற
தமிழ் ப்ளாக் எது..? "
சிநேகா : " கோகுலத்தில் சூரியன்..!! " //

போங்க சிநேகா.. நீங்க ரொம்ப மோசம்..!!

இந்த விஷயத்தை வெளியே
சொல்லாதீங்கன்னு எவ்ளோ
சொல்லி வெச்சி இருந்தேன்..
இப்படி ரகசியத்தை உடைச்சிட்டீங்களே..?!!

பாருங்க நம்ம Blog-ஐ Regular-ஆ
படிக்கிற அனுஷ்கா., தமனா.,
அசின்., ஸ்ரேயா., திரிஷா
இவங்கல்லாம் இப்படியா இதை
வெளியில சொல்லிட்டு இருக்காங்க..?!

வெங்கட் said...

@ மாதவன்.,

// அந்த புரோகுராம நா பாக்காம
தப்பிச்சாலும், வெங்கட்டு டார்ச்(சர்)
லைட்டு போட்டு காண்பிச்சிட்டாரே.. //

@ பன்னிக்குட்டி ராம்சாமி.,

// டிவி பாக்காம நிம்மதியா இருக்கோம்,
அது புடிக்கலியா உங்களுக்கு? //


அப்பாடா.., நாம பதிவு போட்ட
நோக்கம் நிறைவேறிடிச்சி..

நாங்க மட்டும் இந்த Program
பாத்துட்டு தூக்கம் வராம
கஷ்டப்படுவோமாம்.

இவிங்கல்லாம் நிம்மதியா இருப்பீங்களாம்..?

இதென்ன் நியாயம்..?!!

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ பட்டாபட்டி.,

// வீராசாமி, அது ஒரு கற்கால காவியம்..
ஒவ்வோரு வீட்டிலேயும் இருக்க வேண்டிய
முக்கிய ஆவணம் அது.. //

உண்மை., உண்மை..!!

" வீராச்சாமி " ரிலீஸ் சமயத்துல தான்
சூப்பர் ஸ்டார் படம் " சிவாஜி"-யும்
ரிலீஸ் ஆகறதா இருந்தது..

ஆனா T.R படத்துக்கூட போட்டி போட
பயந்துகிட்டு சங்கர் சாரும்., ரஜினி சாரும்
" சிவாஜி " படத்தை ரெண்டு மாசம்
கழிச்சி ரிலீஸ் பண்ணினாங்கன்னு ஒரு
நியூஸ் இருக்கு..!!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி ராமசாமி.,

// தங்கத்தாரகை சினேகா ஒரு வார்த்த
சொல்லிருச்சுங்கறதுக்காக சரவணா
ஸ்டோருல போயி கியூவுல நின்னவிங்க நாங்க. //

அது சரி..!! ஆனா இனிமே கியூவுல
நிக்கும் போது பின்னாடி நிக்கறவங்க
காலை மிதிக்காதீங்க..

அன்னிக்கு மிதிச்சதே
" ரொம்ப வலிக்குது "