சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

20 October 2010

ஐ..! ' மெட்ராஸ் ஐ '..!!

என்கிட்ட 2 கூலிங் கிளாஸ் இருக்கு..,
ரெண்டுமே Rayban.. ஆனா
நான் அதை Use பண்றதே இல்ல..

( தங்கச்சிலைக்கு எதுக்கு
வெள்ளி கொலுசு..?!! )

" மெட்ராஸ் ஐ " வந்ததால வேற
வழி இல்லாம என் Rayban Glass-ஐ
போட்டுக்க வேண்டியதா போச்சு..

எனக்கு " மெட்ராஸ் ஐ"-ன்னு தெரிஞ்சதும்..,
என்னை சுத்தி இருந்தவங்க எல்லாம்
எப்படி பீலீங் ஆனாங்க தெரியுமா..?

இதோ அவங்க பீலிங் ........


" வீட்டுக்கு உள்ளகூட கூலிங்கிளாஸோட
தான் சுத்தறியாமா..?!! என்ன எதாவது
தெலுங்கு படத்துல ஹூரோவா Commit ஆகிட்டியா..? "

- நண்பன் சுரேஷ்
---------------------------------------------------------

" எனக்கு ' மெட்ராஸ் ஐ-டா ' ..! "

" ' டெல்லி ஐ ' ., ' லண்டன் ஐ '.,
' நியூயார்க் ஐ '-ன்னு மேன்மேலும்
வளர என் Advance வாழ்த்துக்கள்..!! "

- நண்பன் ஜெகன்..
---------------------------------------------------------

" என்ன மெட்ராஸா..? "

" ஆமா..!! "

" அப்ப முதல்ல இடத்தை காலி பண்ணு.,
நாங்க வெளியூர்காரங்ககிட்ட எல்லாம்
பேச்சு வெச்சிக்கிறதில்ல.. "

- நண்பன் சண்முகம்
---------------------------------------------------------

" கூலிங்கிளாஸ் சூப்பரா இருக்கு..!! "

" Thanks..!! "

" Unfortunately உனக்கு சூட் ஆகலை.."

- நண்பன் சரவணன்
---------------------------------------------------------

" சேலம்ல இருந்துட்டு ' மெட்ராஸ் ஐ '-ன்னு
சொல்லி சென்னை மேல ஏன் பழி போடறீங்க..? "

( Facebook-ல் VKS தலைவி அனு)
---------------------------------------------------------

" என்ன சார் திடீர்னு ' மெட்ராஸ் ஐ '-ன்னு
சொல்லிட்டீங்க..? எனக்கு வேற
ஆயுதபூஜைக்கு 3 நாள் லீவ் விட்டுட்டாங்க..
நான் அதுக்கு சந்தோஷப்படறதா..?
இல்ல இதுக்கு சந்தோஷப்படறதா..? "

( போனில் பெ.சொ.வி )
---------------------------------------------------------

" கண்கெட்ட பிறகு சூர்யநமஸ்காரமான்னு

கேப்பாங்க..!! ஆனா இங்கே சூரியனுக்கே
கண்ணு கெட்டு போச்சே..!!
ஹா., ஹா., ஹா..!! "

( சிரிப்பு போலீஸ் Blog-ல் - ரமேஷ் )
---------------------------------------------------------

" Computer முன்னால உக்கார்ந்து

Work பண்ணினா கண்ணு வலிக்குது..!!

அப்ப நின்னுகிட்டு Try பண்ணி பாருங்க தல..! "

( டெரரின் Smart ஐடியா )
---------------------------------------------------------

டிஸ்கி : மேல Photo-ல கூலிங்கிளாஸ்
போட்டுட்டு இருக்கறது நான் இல்லபா....!!

ஹி., ஹி., ஹி..!!
.
.

58 Comments:

Chitra said...

" கூலிங்கிளாஸ் சூப்பரா இருக்கு..!! "

" Thanks..!! "

" Unfortunately உனக்கு சூட் ஆகலை.."

- நண்பன் சரவணன்


.....அப்படி போடு அருவாளை!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

தனக்கு வந்த துன்பத்தை கூட சந்தோஷமா எழுதற ஒரு பக்குவம் இருக்கே, அட, அட, ..............சூப்பர் வெங்கட்!

இப்படிக்கு பிறர் துன்பத்தையும் தன்னுடைய துன்பம்போல் இன்பம்போல் நினைப்போர் சங்கம்.

அருண் பிரசாத் said...

யாருக்கோ வாழ்வு வந்த அர்த்த ராத்திரிலயும் குடை பிடிப்பானு கேள்விபட்டு இருக்கேன்....

கூலிங்கிளாசும் போடுவான்னு இப்போதான் பார்கிறேன்

VKS LEADER said...

வெங்கட்,

நல்லாத்தான் சொல்லுறீங்க‌...

//தங்கச்சிலைக்கு எதுக்கு
வெள்ளி கொலுசு..?!! //

கூலிங் கிளாஸ் விக்கிர‌வ‌ன் கிட்ட கூட‌
1000 கூலிங் கிளாஸ் இருக்கும்...
அதுக்காக‌ அவன் கிளாஸ் போடனும்னு
இருக்கா என்ன?
எதுக்கு பெருமைக்கு
எருமை மேய்க்கிற வேல...

உண்மைய சொல்லு ம‌க்கா
ரெண்டுமே சுட்டுட்டு வந்ததூண்ணூ.

நானும் VKS தான் அப்பு...
எப்புடி ஆப்பு

ப.செல்வக்குமார் said...

முதலமைச்சர் அலுவலகம் சென்னை :
" ரெடி ஆகிட்டீங்களா..? , ஏன்னா இது ரொம்ப முக்கியமான விஷயம்., இன்னும் மூணு இல்ல நாலு நாளைக்கு நாம இல்ல இந்த உலகமே இருட்டுலதான் இருக்கப்போகுது.., நம்ம வெங்கட் சாருக்கு மெட்ராஸ் ஐ வந்ததால அவரால சூரியனுக்கு டார்ச் அடிச்சு வழி சொல்ல முடியாது. அப்படி வழி சொல்லலைனா அதால பூமிக்கு மேல வந்து நமக்கெல்லாம் வெளிச்சம் தராது, இதனால பழ பிரச்சினைகள் வரும் . சொ அவருக்கு வந்திருக்கிற இந்த பிரச்சினைய எவ்வளவு சீக்கிரம் குணப்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குணப்படுதியாகனும் .. அதுக்கு எல்லோரும் உங்க ஐடியாவ சொல்லுங்க.."

" சார் , மெட்ராஸ் அப்படிங்கிற பேர அகராதில இருந்து எடுத்திட்டா போயடும்ல.., எப்படி என்னோட ஐடியா..? "

அனு said...

//சேலம்ல இருந்துட்டு ' மெட்ராஸ் ஐ '-ன்னு
சொல்லி சென்னை மேல ஏன் பழி போடறீங்க..?//

இது சரியில்ல! நான் சொன்னத நீங்க ரொம்ப exaggerate பண்ணி போட்டிருக்கீங்க!!
[ அந்த question mark-க்கு முன்னாடி இருக்குற ரெண்டு புள்ளி நான் வைக்கல ;-) ]

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அவனனவன் பதிவு போடுறதுக்கு ரூம் போட்டு யோசிக்கிறோம். இங்க என்னடான்னா கமெண்ட்ஸ் எல்லாத்தையும் சேர்த்து ஒரு பதிவா போட்டிருக்காரே. சொந்தமா யோசிங்கப்பா. கண்ணுவலிதான வந்தது. மூளை பத்திரமா இருக்குல்ல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தங்கச்சிலைக்கு எதுக்கு
வெள்ளி கொலுசு..?!!//

பாத்து வடிவேலை உரசி பாத்தா மாதிரி எவனாவது செங்களோட வரப்போறான்

அருண் பிரசாத் said...

மக்களே VKS தலைவி அனுவின் பதிவு பரிசல்காரன் தளத்தில் வந்துள்ளது....

இங்க போய் பாருங்க

கம் ஆன், காமினி - சவால் சிறுகதை BY அனு

http://www.parisalkaaran.com/2010/10/by.html

நாகராஜசோழன் MA said...

//( தங்கச்சிலைக்கு எதுக்கு
வெள்ளி கொலுசு..?!! )//

தங்கச்சிக்கு வெள்ளி கொலுசு தானே போடுவாங்க.

Madhavan said...

எங்களுக்கு போன மாசமே மெட்ராஸ் ஐ வந்துட்டு போயிடிச்சு..
அதப் போயி ஒரு(ரெண்டு பதிவு இல்லா.. ஆமா) மேட்டரா எழுதி.... என்னவோ போங்க சார்..

ரசிகன் said...

//என்கிட்ட 2 கூலிங் கிளாஸ் இருக்கு..,

ரெண்டு கண்ணு இருக்கறதால ரெண்டு கூலிங் கிளாஸ் வேணும்னு நினைச்சு வாங்கிட்டீங்கதானே... ஹையோ! ஹையோ !!... ;-)

ரசிகன் said...

//தங்கச்சிலைக்கு எதுக்கு
வெள்ளி கொலுசு..?!!

Example சொல்லும்போது பொருத்தமா சொல்லணும்....
Look at this...

உடைஞ்ச சிலைக்கு எதுக்கு
உட்லேண்ட்ஸ் ஷூ..?!!

ரசிகன் said...

//மேல Photo-ல கூலிங்கிளாஸ்
போட்டுட்டு இருக்கறது நான் இல்லபா....!!

கூலிங் கிளாஸ் அம்சமா சூட் ஆகும் போதே எங்களுக்குத் தெரியாதா... இதை எதுக்கு டிஸ்கி போட்டு சொல்லணும்..?

வெங்கட் said...

@ VKS.,

இந்த தடவை VKS-ஐ உடைக்கிறோம்..
Open Challenge..!!

அருண் பிரசாத் said...

@ வெங்கட்
//இந்த தடவை VKS-ஐ உடைக்கிறோம்..
Open Challenge..!!//

முதல்ல உங்க VASல இருக்கற கருப்பு ஆட்டை கண்டு பிடுங்க அப்புறம் உடைக்கலாம்

மேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெங்கட் said... @ VKS.,

இந்த தடவை VKS-ஐ உடைக்கிறோம்..
Open Challenge..!!//

VKS அப்டின்னு ஏதாச்சும் கண்ணாடி வந்திருக்கா என்ன?

சேலம் தேவா said...

"அப்ப நின்னுகிட்டு Try பண்ணி பாருங்க தல..! "

எப்படிதான் டெரருக்கு இந்த மாதிரி ஸ்மார்ட்டான ஐடியா எல்லாம் வருது..!!

ப.செல்வக்குமார் said...

//VKS அப்டின்னு ஏதாச்சும் கண்ணாடி வந்திருக்கா என்ன?
//

என்ன கொடுமை இங்க நடக்குது .. தல அவுங்க கட்சிப் பேரே அவருக்குத் தெரியல ..இந்தக் கட்சியப் போய் ஒடிச்சு நம்ம லெவல நாம எதுக்கு குறைச்சிக்கனும் ..?

ப.செல்வக்குமார் said...

//முதல்ல உங்க VASல இருக்கற கருப்பு ஆட்டை கண்டு பிடுங்க அப்புறம் உடைக்கலாம்

மேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ....//

அது சரி ., இதே மாதிரி அவுங்களுக்கு சப்போர்ட் பன்னுரமாதிரியே கமெண்ட் போடுங்க .. அப்பத்தான் நீங்க VKSல இருக்குற கருப்பு ஆடு அப்படின்னு அவுங்களுக்கு தெரியாது .. So Stay Connected.!!

சௌந்தர் said...

டிஸ்கி : மேல Photo-ல கூலிங்கிளாஸ்
போட்டுட்டு இருக்கறது நான் இல்லபா....!!

ஹி., ஹி., ஹி..!!////

நான் கூட நீங்க தான் நினைத்து படித்து கொண்டு வந்தேன்
.

இம்சைஅரசன் பாபு.. said...

வெங்கட் நேத்து என் போட்டோ ஒன்னு வேணும்னு கேட்ட நான் கொடுத்தேன் .என் போட்டோ வ இப்படி போட்டுடியே .சரி எனக்கு வெக்கம் வெக்கமாக வருது ......போ வெங்கட் உன் கூட சண்டை

எஸ்.கே said...

உங்க மேல கண்ணுபட்டுருக்குங்க அதான் கண் வலி!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ரசிகன் said...
//என்கிட்ட 2 கூலிங் கிளாஸ் இருக்கு..,

ரெண்டு கண்ணு இருக்கறதால ரெண்டு கூலிங் கிளாஸ் வேணும்னு நினைச்சு வாங்கிட்டீங்கதானே... ஹையோ! ஹையோ !!... ;-)

//

Super!

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//யாருக்கோ வாழ்வு வந்த அர்த்த ராத்திரிலயும் குடை பிடிப்பானு கேள்விபட்டு இருக்கேன்....//

ஆமாம் அருண் உங்க ஊர்ல அர்த்த ராத்திரில நல்லா மழை பெய்தால் குடை பிடிக்க மாட்டிங்களா??

(ரெய்ன் கோட் போடுவேன் சொல்லகூடாது.. இது பழமொழி.. அப்பொ ரெய்ன் கோட்டு இல்லை... :) )

TERROR-PANDIYAN(VAS) said...

@VKS LEADER


//கூலிங் கிளாஸ் விக்கிர‌வ‌ன் கிட்ட கூட‌
1000 கூலிங் கிளாஸ் இருக்கும்...
அதுக்காக‌ அவன் கிளாஸ் போடனும்னு
இருக்கா என்ன?//

கடைக்காறன் போடற கிளாஸ்க்கும் , ஷாருக்கான் போடற கிளாஸ்க்கும் வித்தியாசம் இருக்கு அப்பு. நீங்க போட்ட கடைகாரன் போடர மாதிரி உங்களுக்கு விளம்பரம்... நாங்க போட்ட ஷாருக் போடற மாதிரி கிளாஸுக்கு விளம்பரம்.

//எதுக்கு பெருமைக்கு
எருமை மேய்க்கிற வேல... //

பெருமைக்கு எருமை மேய்க்கலாம்
ஆன எருமை பெருமையா மேயகூடாது!!
அடிச்சி சூப் வச்சிடுவோம்!!

//நானும் VKS தான் அப்பு...//

அப்பொ அனு இனி லீடர் இல்லையா?? இரண்டு கோஷ்டியா??

//எப்புடி ஆப்பு//

அடுத்தவனுக்கு வைக்கரேன் சொல்லி ஆப்ப செட் பண்ணி அது மேல ஜம்ப் பண்ணி உக்காந்த நீங்கதான் சொல்லனும் ஆப்பு எப்படினு... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//சேலம்ல இருந்துட்டு ' மெட்ராஸ் ஐ '-ன்னு
சொல்லி சென்னை மேல ஏன் பழி போடறீங்க.//

அப்பொ கஷ்மிர் ஆப்பிள் கர்நாடகா வந்தா கமர்கட்டுனு சொல்லுவிங்களா??
கும்பகோணம் வெற்றிலை குளுமணாலி போனா குல்பி ஜஸ் சொல்லுவிங்களா?
பெங்களுர் தக்காளி மும்பை வந்தா முட்டை கோஸ்னா கூப்பிடுவிங்களா?? ஒருஜினல் பெயர் எல்லாம் மாத்த கூடாது VKS தலைவி... :))

அனு said...

//VKS LEADER said...//

இது யாருங்க புதுசா, எனக்கே தெரியாம?? பதவி வேணும்னா கேட்டு வாங்கிக்கோங்க.. தாராளமா தர்றேன்.. அதுக்காக, இப்படியா குழப்பம் பண்ணிகிட்டு??

(இது கட்டாயமா VAS சதி தான்!!)

//எதுக்கு பெருமைக்கு
எருமை மேய்க்கிற வேல... //

இது எனக்கு பிடிச்சிருக்கு :)

அனு said...

@ரசிகன்

//ரெண்டு கண்ணு இருக்கறதால ரெண்டு கூலிங் கிளாஸ் வேணும்னு நினைச்சு வாங்கிட்டீங்கதானே.//

//உடைஞ்ச சிலைக்கு எதுக்கு
உட்லேண்ட்ஸ் ஷூ..?!//

சூப்பரப்பு.. கலக்கிட்டீங்க போங்க..

philosophy prabhakaran said...

// " Computer முன்னால உக்கார்ந்து
Work பண்ணினா கண்ணு வலிக்குது..!!

அப்ப நின்னுகிட்டு Try பண்ணி பாருங்க தல..! "

( டெரரின் Smart ஐடியா ) //

செம டெரர் தான்...

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// இப்படிக்கு பிறர் துன்பத்தையும் தன்னுடைய
துன்பம்போல் ( இன்பம்போல் ) நினைப்போர் சங்கம். //

பிள்ளையார்பட்டி கணேசா..!
நானும் நாலு நாள் கஷ்டப்பட்டுட்டேன்..
இனிமே என்னையும் சந்தோஷமா
வெச்சிக்கப்பா..

பெ.சொ.விக்கு கூடிய சீக்கிரமே
மெட்ராஸ் ஐ வர அருள் புரிவாயாக..!!

" யான் பெற்ற துன்பம்..
பெறுக பெ.சொ.வி மட்டும்..!! "

வெங்கட் said...

@ VKS Leader.,

// நானும் VKS தான் அப்பு...
எப்புடி ஆப்பு //

ஹி., ஹி., ஹி..!!

சூப்பரப்பு..!!

ஆனா எனக்கென்னவோ இந்த ஆப்பு
அனுவுக்கு வெச்ச மாதிரியே இருக்கு..!!

வெங்கட் said...

@ அனு.,

// இது சரியில்ல! நான் சொன்னத நீங்க
ரொம்ப exaggerate பண்ணி போட்டிருக்கீங்க!! //

சரிங்க..
இனிமே நடந்ததை நடந்த மாதிரியே
சொல்லிடறேன்....!!

பரிசல்காரன் பிளாக்ல ' அனு 'ங்கிற பேர்ல
வந்திருக்கிற சவால் சிறுகதை இவங்க
எழுதினது தான் ( இவங்க கணவர் சொல்ல சொல்ல.. )

இது ஓ.கே தானே..?!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// அவனனவன் பதிவு போடுறதுக்கு
ரூம் போட்டு யோசிக்கிறோம்.
இங்க என்னடான்னா கமெண்ட்ஸ்
எல்லாத்தையும் சேர்த்து ஒரு பதிவா
போட்டிருக்காரே. சொந்தமா யோசிங்கப்பா. //

Comments வெச்சி கூட ஒரு பதிவு
போடலாம்கிற ஐடியா நான்
சொந்தமா யோசிச்சது தான்..

ஹி., ஹி., ஹி...!!

// மூளை பத்திரமா இருக்குல்ல? //

இருக்கு ரமேஷீ..!!

" உங்க பேனா பத்திரமா இருக்கா..? "

( ம்ம்...! யார்கிட்ட எது இருக்கோ..,
அதைபத்தி தானே விசாரிக்க முடியும்.?!! )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பரிசல்காரன் பிளாக்ல ' அனு 'ங்கிற பேர்ல
வந்திருக்கிற சவால் சிறுகதை இவங்க
எழுதினது தான் ( இவங்க கணவர் சொல்ல சொல்ல.. )

இது ஓ.கே தானே..?!!//

எப்படி வெங்கட்? ஜனாவோ இல்லை உங்க மனைவியோ சொல்ல சொல்ல நீங்க பதிவு எழுதுற மாதிரியா?

வெங்கட் said...

@ ரசிகன்.,

// ரெண்டு கண்ணு இருக்கறதால ரெண்டு
கூலிங் கிளாஸ் வேணும்னு நினைச்சு
வாங்கிட்டீங்கதானே... //

போன வாரம் உங்க வீட்டுக்கு வந்தப்ப
" ஒத்தை ஆள் இருக்குற வீட்ல
எதுக்குடா ரெண்டு T.V-ன்னு நினைச்சேன்.. "

ஓ.. இதான் மேட்டரா..?
ரைட்டு...!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ venkat
//
போன வாரம் உங்க வீட்டுக்கு வந்தப்ப
" ஒத்தை ஆள் இருக்குற வீட்ல
எதுக்குடா ரெண்டு T.V-ன்னு நினைச்சேன்.. "

ஓ.. இதான் மேட்டரா..?
ரைட்டு...!!//

சரி, வெங்கட், அதை எல்லாம் விடுங்க, நீங்க ரெண்டு செல் வச்சிருக்கறது, ரெண்டு காத்து இருக்குங்கறதாலயா?

ப.செல்வக்குமார் said...

//சரி, வெங்கட், அதை எல்லாம் விடுங்க, நீங்க ரெண்டு செல் வச்சிருக்கறது, ரெண்டு காத்து இருக்குங்கறதாலயா?
//

அதுக்கு இல்லைங்க ., ஒண்ணு எங்களுக்குள்ள (VAS) பேசிக்கறதுக்காக .,
இன்னொரு போன்ல வைரஸ் Protection எல்லாம் போட்டு வச்சிருக்காரு..
அந்த நம்பர் தான் உங்ககிட்ட அதாவது VKS காரங்க கிட்ட கொடுத்திருக்காரு ..
ஏன்னா எங்கள நீங்க ஒண்ணும் பண்ண முடியாது .. பட் போன் ஏதாவது ஆகிடும்ல.. அதான் ..!!

மங்குனி அமைசர் said...

Rayban Glass-ஐ///

கொஞ்சமாவது காம்சென்ஸ் இருக்கா வெங்கட் உங்களுக்கு , இப்படி ரேபான் கிளாசை நீங்க எடுத்து போட்டுகிட்டா , பாவம் அப்புறம் ரேபான் அவசரத்துக்கு என்ன செய்வார் ?

வெங்கட் said...

@ ரசிகன்.,

// உடைஞ்ச சிலைக்கு எதுக்கு
உட்லேண்ட்ஸ் ஷூ..?!! //

அப்போ உடையாத சிலைக்கு
உட்லேண்ட்ஸ் ஷூ போடுவாங்களா
உங்க ஊர்ல..?!!!

சுத்த லூசு பசங்க ஊரா இருக்கு..!!

வெங்கட் said...

@ மாதவன்.,

// எங்களுக்கு போன மாசமே
மெட்ராஸ் ஐ வந்துட்டு போயிடிச்சு.. //

இதை இப்படி சொல்லக்கூடாது..

இப்படி சொல்லணும்..

" போன மாசம் பதிவு போட கிடைச்ச
ஒரு நல்ல Chance-ஐ நான் மிஸ் பண்ணிட்டேன்..!! "

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ அருண்.,

// மக்களே VKS தலைவி அனுவின்
பதிவு பரிசல்காரன் தளத்தில் வந்துள்ளது.... //

அந்த கதைக்கு Proof பார்த்து.,
Spelling Mistakes எல்லாம் திருத்தி
குடுத்ததே நாம தானுங்கோ..!!

ஆனாலும் இத்தனை Spelling Mistakes
வரக்கூடாது சாமி..!!

வெங்கட் said...

@ அருண்.,

// மேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ.... //

அப்படியே கருப்பு ஆடு கத்தற
மாதிரியே இருக்கே...

VKS உங்களுக்கு எதாவது
சந்தேகம் வந்ததா..?

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// VKS அப்டின்னு ஏதாச்சும் கண்ணாடி
வந்திருக்கா என்ன? //

ஆமா ரமேஷு..
அது புது கருப்பு கலர் கூலிங்கிளாஸ்.

ஒண்ணு வாங்கி மாட்டிக்கோங்க..
அப்படியே கமல் மாதிரி இருப்பீங்க..

" ராஜ பார்வை " கமல்..

வெங்கட் said...

@ பாபு.,
/// என் போட்டோ வ இப்படி போட்டுடியே.
சரி எனக்கு வெக்கம் வெக்கமாக வருது //

ஹலோ.. அந்த போட்டோல
இருக்கிறவரு ஆர்யா..
நீ யார்யா..??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெங்கட் said...

@ அருண்.,

// மக்களே VKS தலைவி அனுவின்
பதிவு பரிசல்காரன் தளத்தில் வந்துள்ளது.... //

அந்த கதைக்கு Proof பார்த்து.,
Spelling Mistakes எல்லாம் திருத்தி
குடுத்ததே நாம தானுங்கோ..!!

ஆனாலும் இத்தனை Spelling Mistakes
வரக்கூடாது சாமி..!!//


பரிசல்காரன் கிட்ட "Proof Reader" ரா எப்போ சேந்தீங்க?

வெங்கட் said...

@ அனு.,

// பதவி வேணும்னா கேட்டு வாங்கிக்கோங்க..
தாராளமா தர்றேன்.. //

வருங்கால VKS தலைவர் அருண்
வாழ்க., வாழ்க..

அருண்..!! நீங்க போட்ட திட்டம்
Perfect-ஆ வேலை செஞ்சிடுச்சி போல..

// (இது கட்டாயமா VAS சதி தான்!!) //

ஹா., ஹா., ஹா..
( வில்லன் சிரிப்பு... )

அருண் பிரசாத் said...

//வெங்கட் said...

@ அருண்.,

// மக்களே VKS தலைவி அனுவின்
பதிவு பரிசல்காரன் தளத்தில் வந்துள்ளது.... //

அந்த கதைக்கு Proof பார்த்து.,
Spelling Mistakes எல்லாம் திருத்தி
குடுத்ததே நாம தானுங்கோ..!!

ஆனாலும் இத்தனை Spelling Mistakes
வரக்கூடாது சாமி..!!//

அட, Spelling mistakes லாம் ஒரு மேட்டரா? உங்க மொக்கையே நாங்க மன்னிச்சிவிடுறப்போ இதெல்லாம் மேட்டரே இல்லை

கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தா போதும்...

அனு said...

@வெங்கட்

//இந்த தடவை VKS-ஐ உடைக்கிறோம்..
Open Challenge..!!//

VKSன்னு போடாம V K S ன்னு போட்டு காமெடி பண்ணப் போறீங்க.. அதான??

அனு said...

me the 50th!!!

அனு said...

@டெரர்

//ஒருஜினல் பெயர் எல்லாம் மாத்த கூடாது VKS தலைவி..//

இதை நீங்களா சொல்றீங்க, அடிமைப் பாண்டியன் சார்?? :)

அனு said...

//ஆனா எனக்கென்னவோ இந்த ஆப்பு
அனுவுக்கு வெச்ச மாதிரியே இருக்கு..!!//

அந்த கமெண்ட்ட போட்டதே நான் தான்.. இது கூட தெரியாம, என்ன சின்னபுள்ள தனமா..

(ஸ்ஸ்ஸப்பா.. ஒரு வழியா தப்பிச்சாச்சு..
அந்த கமெண்ட் போட்டது யாரா இருந்தாலும் ஒரிஜினல் பெயரில் வரவும்)

அனு said...

//சவால் சிறுகதை இவங்க
எழுதினது தான் ( இவங்க கணவர் சொல்ல சொல்ல.. )//

ஆமா, நான் பேப்பர்ல எழுதி வச்சிருந்தத அவர் சொல்ல சொல்ல நான் அப்படியே சிஸ்டம்ல எழுதினேன்.. கரெக்ட்டா சொல்லிட்டீங்களே..

அனு said...

//அந்த கதைக்கு Proof பார்த்து.,
Spelling Mistakes எல்லாம் திருத்தி
குடுத்ததே நாம தானுங்கோ..!!//

உங்க கிட்ட படிக்க குடுத்தது தப்பா போச்சு.. திருத்துறேன் பேர்வழின்னு எல்லா spellingஐயும் மாத்தி வச்சிருந்தீங்க..

அதை திருத்துறதுக்குள்ள எனக்கு அந்த கதையே மறந்து போய்ட்டதால, வேற கதை அனுப்பி வச்சேன்..

Madhavan said...

//இதை இப்படி சொல்லக்கூடாது..

இப்படி சொல்லணும்..

" போன மாசம் பதிவு போட கிடைச்ச
ஒரு நல்ல Chance-ஐ நான் மிஸ் பண்ணிட்டேன்..!!//

noted..

பிரவின்குமார் said...

ஹி., ஹி., ஹி.. பதிவு ரசிக்கும்படியாய் உள்ளது.
கலக்குங்க.. நண்பரே!!

ரசிகன் said...

@வெங்க‌ட்
// உடைஞ்ச சிலைக்கு எதுக்கு
உட்லேண்ட்ஸ் ஷூ..?!! //

அப்போ உடையாத சிலைக்கு
உட்லேண்ட்ஸ் ஷூ போடுவாங்களா //

அதேதாங்க‌ நானும் சொல்றேன்...
உருப்ப‌டியான‌ சிலைக்கே உட்லேண்ட்ஸ் ஷூ தேவையில்லை..
அப்ப‌ உடைஞ்ச‌ சிலைக்கு சுத்த‌மா தேவையே இல்ல‌..
அந்த‌ மாதிரி.. உங்க‌ளுக்கு கூலிங்கிளாஸ் தேவையே இல்ல‌..
இப்பொ detailedaa புரியுதா...?
(எப்ப‌டியோ... உங்க‌ளை த‌ங்க‌ச்சிலைக்கு ப‌திலா உடைஞ்ச‌ சிலைக்கு compare ப‌ண்ற‌துதான் ultimate aimனு வெளிப்ப‌டையா சொன்னாதான் விடுவீங்க‌ போல‌... )

ரசிகன் said...

@ அனு..

//கம் ஆன், காமினி - சவால் சிறுகதை BY அனு

Uptodate technologyஐயும் அழகு தமிழையும் கலந்து கதை எழுதுற தலைவர் சுஜாதாவோட இடம் இப்போ காலியா தான் இருக்கு... கொஞ்சம் பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணி Regulara serviceக்கு விட்டா உங்க வண்டி பட்டைய கிளப்பும்... I thoroughly enjoyed reading it. Great start.