சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

11 March 2011

புரியாத புதிர்..!!இந்த உலகத்துல எனக்கு புரியாத
ஒரே ஒரு விஷயம் நடந்திருக்கு..!!

( " நடமாடும் என்சைக்ளோபீடியா.,
டான்ஸ் ஆடும் விக்கிபீடியா.. "
உங்களுக்கே தெரியாத ஒரு விஷயமான்னு
நீங்க ஆச்சரியப்படறது எனக்கு தெரியுது... )

என்ன பண்றது..?!
" டைனோசர்க்கும் அடி சறுக்கும்ல..!! "

சரி.. அந்த சந்தேகம் என்னான்னு
பாக்கறதுக்கு முன்னாடி ஒரு
சின்ன Flashback போலாம்...

எல்லோரும் அவங்கவங்க
சீட் பெல்டை நல்லா போட்டுக்கோங்கோ..

அப்ப நான் 10th படிச்சிட்டு இருந்தேன்..

நான் படிச்ச ஸ்கூல் இருக்கே..
அப்பப்பா.. ரொம்ப மோசம்..!!

அதை படிச்சிட்டு வா.!
இதை எழுதிட்டு வான்னு
தினமும் எதாவது சொல்லிட்டே
இருப்பாங்க..

அவங்க சொல்ற எதையுமே நான்
செய்ய மாட்டேன்.. ஆனாலும்
அவங்க திருந்தின பாடு இல்ல.

கிளாஸ்க்கு வெளியே நில்லு.,
இம்போசிஷன் எழுதிட்டு வா.,
உங்கப்பாவை கூட்டிட்டு வான்னு
தினமும் எனக்கு டார்ச்சர் குடுத்திட்டே
இருப்பாங்க..

சே...! இதெல்லாம் ஒரு ஸ்கூலான்னு
இருக்கும் எனக்கு..

பின்ன.,
சரஸ்வதி தேவியோட நேரடி அருள்
பெற்ற எனக்கே இந்த நிலைமைன்னா
VKS மாதிரியான மத்த மக்கு பசங்க
நிலைமையை நினைச்சு பாருங்க..

பாவம்ல..!!

ஒரு வழியா 10th Result-ம் வந்தது..

( என்னாது..? நான் 10th-ல எத்தனை
Mark-ஆ.? அதெல்லாம் இப்ப எதுக்கு..?
அது இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத
மேட்டர் ஆச்சே..!! )

சரி.., அதை தெரிஞ்சிக்க ஆர்வமா
இருக்கறவங்க இங்கே போயி
தெரிஞ்சிக்கோங்க..

( ஹலோ... ஹலோ... எங்கே எல்லாம்
பாதியிலயே ஓடறீங்க..?!
நடு வழியில லிங்க் குடுக்க கூடாதுன்னு
சொல்றது சரியாதான்பா இருக்கு.. )

+1-க்கு வேற நல்ல ஸ்கூலுக்கு
போலாம்னு முடிவு பண்ணிட்டு இருந்தேன்..

திடீர்னு என் வீட்டு முன்னாடி பெரிய க்யூ...

அத்தனையும் SALEM-ல இருக்குற
பெரிய ஸ்கூல் Principals, Correspondents..

அட.. அந்த க்யூல ஒரு வெள்ளக்காரர்
வேற இருந்தாரு.. ( ஆக்ஸ்போர்ட்
யுனிவர்சிட்டி பிரின்சிபாலாம்.! )

என்னை அவங்க யுனிவர்சிட்டியில
படிக்க சேர சொல்லி ஒரே டார்ச்சர்..

" +2 முடிக்காம நான் எப்படிங்க Degree
படிக்க முடியும்னு ஒரு லாஜிக்கான
கேள்வி கேட்டேன் பாருங்க... "

அப்படியே என் I.Q-வ பாத்து
ஆடிபோயிட்டாரு மனுஷன்..

அப்புறம் சுதாரிச்சிட்டு...

" வெங்கட்.. நீங்க யானைப்பால்..
சே.. ஞானப்பால் குடிச்சி வளர்ந்த
நவீன திருஞானசம்பந்தன்.. உங்க அறிவுக்கும்.,
திறமைக்கும் இப்பவே கூட நீங்க Phd
பண்ணலாம்ன்னு " சொன்னாரு..

இது மட்டுமா..? நாசால இருந்து கூட
ரெண்டு மூணு தடவை ராக்கெட்
விடறதை பத்தி சந்தேகம் கேட்டாங்கன்னு..
அதையும் தீர்த்து வெச்சிருக்கேன்..

இப்படி ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரின்சிபால்.,
நாசா விஞ்ஞானிங்க எல்லாம் பாத்து
ஆச்சரியப்பட்ட என் 7வது அறிவுக்கு
புரியாத அந்த ஒரே ஒரு Matter....

" இன்னிக்கு எனக்கு Wedding Anniversary-ங்கறதை
நீங்கல்லாம் எப்படிதான் கண்டுபிடிச்சீங்களோ..?!! "

அதான் எனக்கு விளங்கவேயில்ல..!!
( ஹி., ஹி., ஹி..! )
.
.

81 Comments:

மாலா ( Mrs.Venkat ) said...

எங்களுக்கு கூட தான் ஒரு புரியாத
விஷயம் இருக்கு. நீங்க எப்படி
10th Pass பண்ணுனீங்க..?

வெங்கட் said...

@ மாலா.,

// எங்களுக்கு கூட தான் ஒரு புரியாத
விஷயம் இருக்கு. நீங்க எப்படி
10th Pass பண்ணுனீங்க..? //

( Mind Voice.. )

நல்லவேளை நாம நம்ம
10th Mark Sheet-ஐ Bank Locker-ல
வெச்சு சாவியை தொலைச்சிட்டோம்..
இல்லன்னா நம்ம மானம் " Blog "
ஏறிடும் போல..

மாலா ( Mrs.Venkat ) said...

@ வெங்கட்

// சே. இதெல்லாம் ஒரு ஸ்கூல்லான்னு
இருக்கும் எனக்கு.. //

அதுக்கு என்ன பண்றது? நீங்கல்லாம் ஒரு
ஸ்டுடென்டான்னு கூட த்தான் இருந்திருக்கும்
அவங்களுக்கு..!!

மாணவன் said...

எங்களுக்கும் புரியாத புதிராத்தான் இருக்கு...

:)

வெங்கட் said...

@ மாலா.,

// அதுக்கு என்ன பண்றது? நீங்கல்லாம் ஒரு
ஸ்டுடென்டான்னு கூட த்தான் இருந்திருக்கும்
அவங்களுக்கு..!! //

சே.. கொஞ்ச நேரம் System-ஐ Free-யா
விட்டுட்டு போறதுக்கில்ல.. வந்து
எதாவது கமெண்ட் போட்டுட்டு ஓடி
போயிடறாய்யா..

எனக்கு வர்ற கோவத்தை கஷ்டப்பட்டு
Control பண்ணிக்குறேன்..

கல்யாண நாளும் அதுவுமா போயி
அடி வாங்க வேணாமேன்னு தான்..
ஹி., ஹி., ஹி..!!

இம்சைஅரசன் பாபு.. said...

// இன்னிக்கு எனக்கு 3rd Anniversary-ங்கற
விஷயத்தை ( ஹி., ஹி., ஹி..! ) நீங்கல்லாம்
எப்படிதான் கண்டுபிடிச்சீங்களோ..?!! //

3rd or 30th Anniversary???உண்மைய சொல்லணும் ..சின்ன வயசு போட்டோவ போட்டு ஏமாத்த கூடாது ..ஹி ..ஹி ...

Jagan said...

Happy anniversary 11-3-11.

சி.பி.செந்தில்குமார் said...

>>>>" நடமாடும் என்சைக்ளோபீடியா.,
டான்ஸ் ஆடும் விக்கிபீடியா.. "

ஆஹா ,.. கலக்கல் கற்பனை நோட் பண்ணிக்கறேன்.. வெங்கட்

சி.பி.செந்தில்குமார் said...

>>>VKS மாதிரியான மத்த மக்கு பசங்க
நிலைமையை நினைச்சு பாருங்க..


இது சும்மா காமெடிக்காக எழுதுனது.. யாராவது சீரியஸா எடுத்துக்கிட்டு வெங்கட் கிட்டே சண்டைக்கு போகாதீங்க.. ப்ளீஸ்

சி.பி.செந்தில்குமார் said...

>>சரி.., அதை தெரிஞ்சிக்க ஆர்வமா
இருக்கறவங்க இங்கே போயி
தெரிஞ்சிக்கோங்க..

சமீப காலமா வெங்கட் தன்னோட ஒவ்வொரு பதிவுலயும் அவரது முன் தின பதிவுகளின் லிங்க் கொடுக்கும் உத்தி புதிய பதிவர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று.. வெல்டன் வெங்கட்.. ( நிஜமாத்தான்)

சி.பி.செந்தில்குமார் said...

?>>>>அட.. அந்த க்யூல


>>>அப்படியே என் I.Q-வ பாத்து
ஆடிபோயிட்டாரு மனுஷன்..


கியூ., ஐ கியூ ஆஹா.. வெங்கட் பிளாக் படிச்சா நிறைய ஐடியா கிடைக்கும் போல இருக்கே .. இதையும் நோட் பண்ணீக்கோடா சி பி..

சி.பி.செந்தில்குமார் said...

>>>
" இன்னிக்கு எனக்கு Anniversary-ங்கற
விஷயத்தை நீங்கல்லாம் எப்படிதான்
கண்டுபிடிச்சீங்களோ..?!! "

ஹா ஹா இதானா மேட்டரு.. வெங்கட் ... கை குடுங்க.. வாழ்த்துக்கள்.. உங்களுக்கும் ஒருத்தர் பொண்ணு கொடுத்தாரே.. அவருக்கும் நன்றிகள் .. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>> பரவால்ல.. 17 கமெண்ட் போட்டதுல வெங்கட் 5 செலக்ட் பண்ணீட்டார்..நான் வளர்ந்துட்டேன் போல.. முதல்ல எல்லாம் 28 கமெண்ட் போட்டாத்தான் 2 போடுவார்..இவருக்கு விகடன் எவ்வளவோ தேவல.. 10 ஜோக் அனுப்புனா ஒண்ணு போட்டுடறாங்க..ஒரு வேளை விகடனை விட குவாலிட்டியா எழுதனுமோ?#டவுட்டு

royal ranger said...

فالثوككال سوننينجا

ヴァlテュっかl

वाल्ठूक्कल सोन्नेंगा

والتهوککال سونننگا

валтхуккал сонненга

அட , வாழ்த்துக்கள் சொன்னேங்னா

மைந்தன் சிவா said...

//" +2 முடிக்காம நான் எப்படிங்க Degree
படிக்க முடியும்னு ஒரு லாஜிக்கான
கேள்வி கேட்டேன் பாருங்க... "

அப்படியே என் I.Q-வ பாத்து
ஆடிபோயிட்டாரு மனுஷ//

அறிவாளி ஞான பண்டிதர்னு அப்பவே புரிஞ்சிருக்கும் பாருங்க!!ஹிஹி

மைந்தன் சிவா said...

//( ஹலோ... ஹலோ... எங்கே எல்லாம்
பாதியிலயே ஓடறீங்க..?!
நடு வழியில லிங்க் குடுக்க கூடாதுன்னு
சொல்றது சரியாதான்பா இருக்கு.. )//

ஹிஹி அப்பிடியே போயிடுரான்கப்பா!!
இலியானா ஸ்பெசல் மொக்ஸ்!!
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_11.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

புரியாத புதிர்..!!//

நீங்க ஒரு பதிவர் அப்டிங்கிரததான சொன்னீங்க?

royal ranger said...

@ venkat

//இந்த உலகத்துல எனக்கு புரியாத
ஒரே ஒரு விஷயம் நடந்திருக்கு..!!//

நீங்களாச்சும் பரவாயில்ல பாஸ்
எனக்கு உலகமே புரிய மாட்டேன்குது

samhitha said...

venkat wishes to u!!!

//கல்யாண நாளும் அதுவுமா போயி
அடி வாங்க வேணாமேன்னு தான்..//
அவ்ளோ பயமா? :D

//" டைனோசர்க்கும் அடி சறுக்கும்ல.!//

neenga dinosaur-a venkat ;)

chance less!!mind blowing!! outrageous!!
செம காமெடியா இருக்கு!! :D

// நாசால இருந்து கூட
ரெண்டு மூணு தடவை ராக்கெட்
விடறதை பத்தி சந்தேகம் கேட்டாங்கன்னு..
அதையும் தீர்த்து வெச்சிருக்கேன்..
//

அது கடல்ல விழுந்து, உங்கள துரத்தி துரத்தி அடிச்சத சொல்லாம விட்டுடீங்க!!
சொன்னா முழுசா சொல்லணும்!!

//அட.. அந்த க்யூல ஒரு வெள்ளக்காரர்
வேற இருந்தாரு.. ( ஆக்ஸ்போர்ட்
யுனிவர்சிட்டி பிரின்சிபாலாம்.! )
//
எழுந்திரிங்க வெங்கட் எப்போ பாரு இதே கனவு!! ;)

//டான்ஸ் ஆடும் விக்கிபீடியா.//
ஓகே வெங்கட் ஒரு சின்ன டான்ஸ் ஆடுங்க!!
பார்த்துட்டே போறோம்!! ;)

Mohamed Faaique said...

வாழ்த்துக்கள் தல...

Krishna said...

Vaazhthukkal


sagipputhanmaiyin uthaaranamaana thangachiku

Speed Master said...

வாழ்த்துக்கள்


விரைவில் விக்கிலிக்ஸ் மூலம் உங்கள் மார்க்சீட் வெளியிடப்படும்

Suresh Kumar M said...

"நாசா"ன்னா "நாசாமானி போனியா தெரு (Nesamani Ponnaiya Theru)"ல வருதே அந்த "நாசா"வா?... ;)

கல்யாண நாள் வாழ்த்துக்கள். 16 பெற்று பெரு வாழ்வு வாழ்க...

Mohamed Faaique said...

@ வெங்கட்,

//அப்ப நான் 10th படிச்சிட்டு இருந்தேன்.. //

இப்பவும் அவ்வளவுதானே படிச்சிருக்கீங்க...

// எல்லோரும் அவங்கவங்க
சீட் பெல்டை நல்லா போட்டுக்கோங்கோ.. //

உங்க flashback கேக்குரதுக்கு முன்னாடி
இது கட்டாயம் தேவை. யாரும் ஓடிட கூடாதுல்ல.

// நான் படிச்ச ஸ்கூல் இருக்கே..
அப்பப்பா.. ரொம்ப மோசம்..!! //

நீங்க படிச்ச ஸ்கூல் ஆச்சே

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

"புரியாத புதிர்" நன்ரு!

Mohamed Faaique said...

@ வெங்கட்,

///கிளாஸ்க்கு வெளியே நில்லு ///

ஆசிரியர் வரும் போது, நீங்க கிளாஸ்குள்ள
எப்பவாவது இருந்திருகீங்களா....?

//ஹலோ... ஹலோ... எங்கே எல்லாம்
பாதியிலயே ஓடறீங்க..?! ///

உங்க தன்னம்பிக்கைய பாராட்டுரேன்.
பாதிவரை யாரவது படிச்சிருப்பாங்கனு
நம்பினீங்களே!!!

///என்னை அவங்க யுனிவர்சிட்டியில
படிக்க சேர சொல்லி ஒரே டார்ச்சர் ///

பாஸ் என்கிர பாஸ்கரன் படத்துல
மக்கு பசங்கள கூப்பிட்டு கிளாஸ்
எடுத்து பாஸ் பண்ண வைப்பாங்களே....
அது மாதிரியா....

Mohamed Faaique said...

@ வெங்கட்,

///" +2 முடிக்காம நான் எப்படிங்க Degree
படிக்க முடியும்னு ஒரு லாஜிக்கான
கேள்வி கேட்டேன் பாருங்க... ///

நானும் ஒரு லாஜிக்கான கேள்வி
கேக்குறேன் “10த் பாஸ் ஆகாமல்
+2 படிக்க முடியுமா?

///நாசால இருந்து கூட
ரெண்டு மூணு தடவை ராக்கெட்
விடறதை பத்தி சந்தேகம் கேட்டாங்கன்னு..///

நீங்க க்லாஸ் ரூம்’ல பண்ணின மேட்டர்
அமெரிக்கா வர famous ஆகிடுச்சா?

Madhavan Srinivasagopalan said...

சுத்தி.. சுத்தி.. சொன்னது.. இதுதானா..?
சுதந்திர இழப்பு தின வாழ்த்துக்கள்

Mohamed Faaique said...

////இன்னிக்கு எனக்கு Wedding Anniversary-ங்கற
விஷயத்தை நீங்கல்லாம் எப்படிதான்
கண்டுபிடிச்சீங்களோ..?!! "

அதான் எனக்கு விளங்கவேயில்ல..!! ////

"நான் படிச்ச ஸ்கூல் இருக்கே..
அப்பப்பா.. ரொம்ப மோசம்..!!" repeatttuu

///சரஸ்வதி தேவியோட நேரடி அருள்
பெற்ற எனக்கே இந்த நிலைமைன்னா ////

மத்தவங்களுக்கு அருள் Fax’லயா வரும்?

எஸ்.கே said...

HAPPY ANNIVERSARY!
இன்றுபோல் என்றும் இனிமையாக வாழ்க!

(ஆசிர்வாதம் வாங்கிட்டீங்களா?:-)))

எஸ்.கே said...

//நாசால இருந்து கூட
ரெண்டு மூணு தடவை ராக்கெட்
விடறதை பத்தி சந்தேகம் கேட்டாங்கன்னு..
அதையும் தீர்த்து வெச்சிருக்கேன்..//

நாசாவிலும் தீபாவளி ராக்கெட் விடுவாங்களா?!

வெங்கட் said...

@ இம்சை பாபு.,

// 3rd or 30th Anniversary??? உண்மைய
சொல்லணும் சின்ன வயசு போட்டோவ
போட்டு ஏமாத்த கூடாது //

கில்லாடிங்க நீங்க..
ஆமா எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க..?
போன வாரம் தான் 30th Anniversary
என் Parents-க்கு..

அதே மாதிரி பதிவுல இருக்கறது
என் சின்ன வயசு ( 4 வருஷம் முன்னால
எடுத்த ) போட்டோன்னு கரெக்டா
கண்டுபிடிச்சிட்டீங்களே..!!

டிஸ்கி : அது 4வருஷமா or 40 வருஷமான்னு
யாராச்சும் கமெண்ட் போட்டா.. அது Reject
செய்யப்படும்..!!

எஸ்.கே said...

//அப்படியே என் I.Q-வ பாத்து
ஆடிபோயிட்டாரு மனுஷன்..//

I.Q-னா Idea Quantity-ஆ?

Sen22 said...

Vazthukkal...

வெங்கட் said...

@ சி.பி.,

// ஆஹா ,.. கலக்கல் கற்பனை
நோட் பண்ணிக்கறேன்.. //

// வெங்கட் பிளாக் படிச்சா நிறைய
ஐடியா கிடைக்கும் போல இருக்கே ..
இதையும் நோட் பண்ணீக்கோடா //

சினிமாவுக்கு போனா டயலாக்
நோட் பண்றீங்க..

உங்க பிளாக்ல ஹிட்ஸ்
நோட் பண்றீங்க..

மத்தவங்க பிளாக்ல Points
நோட் பண்றீங்க..

எங்கே போனாலும் இப்படி எதையாவது
நோட் பண்ணிட்டே இருக்கறதால..

இன்று முதல் நீங்க
சி.பி.நோட்குமார் என்று எல்லோராலும்
அன்போடு அழைக்கப்படுவீர்கள்..!!

*இதை எல்லோரும் நோட் பண்ணுங்கப்பா..

வெங்கட் said...

@ சி.பி.,

// இது சும்மா காமெடிக்காக எழுதுனது..
யாராவது சீரியஸா எடுத்துக்கிட்டு
வெங்கட் கிட்டே சண்டைக்கு போகாதீங்க.. ப்ளீஸ் //

ஹலோ.. யார்ப்பா அது..
யுத்த பூமில வந்து மிட்டாய் கேக்கறது..?!

ஓ.. நம்ம சி.பி.யா..? அவரு எப்பவுமே
இப்படிதான் சம்பந்தம் இல்லாம
எதாவது பேசுவாரு..!!

சரி சரி.. அவரை ரிலீஸ் பண்ணுங்க..
அவரு ஒரு காமெடி பீசு..

ராஜி said...

ஏன்? ஏன்? ஏன்? ஏன் இந்த வீண் விளம்பரம்.எதாவது திட்டலாமினு பார்த்தால் இன்று உங்கள் மண நாள், அதனால் அதெல்லம் அப்பாலிக்கா..,பிளாக் கும், கமெண்டும் போல, திரட்டிகளும், வோட் பட்டனும் போல, என்றும் இணைபிரியாமல் வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்

vinu said...

hpy wedding anniversary

வெங்கட் said...

@ சி.பி.,

// பரவால்ல.. 17 கமெண்ட் போட்டதுல
வெங்கட் 5 செலக்ட் பண்ணீட்டார்..
நான் வளர்ந்துட்டேன் போல.. //

இனிமே இவர் கமெண்ட் வந்தா
Direct-ஆ Spam-க்கு போற மாதிரி
Set பண்ண எதாவது வழி இருக்கா..?

முடியல..!!

வெங்கட் said...

@ Royal Ranger.,

// ヴァlテュっかl., वाल्ठूक्कल सोन्नेंगा
والتهوککال سونننگا ., валтхуккал сонненга
அட , வாழ்த்துக்கள் சொன்னேங்னா //

ड्फ्ट्र्गब्ज ल्पैऊय ह्फ्डकहयगफ

ഘാജൈഇഉബ്൜ പോയുഐഅഫ

హ్జ్శస్య్వ్డ్ఫ్డస'అ ఊజ్న్జ సన్మా ఓపఅస

уккв лтхуне нга калн нскку

அட , நன்றிகள் சொன்னேங்க...

Radha said...

மார்ச் பதினொன்றில்
மணம் புரிந்த
மனங்கள் என்றும்
மகிழம்பூவாய் மணக்க - பிறை
மதி சூடிய பித்தன் தன்
மதியை பறித்த
மாதங்கி அருள்வாள்.
~
அன்புடன்,
ராதா
[புதுக்கவிதை(!?) எழுத சான்ஸ் கெடைச்சா விடறது இல்ல. :-)]

ராஜி said...

இந்நாளில் எல்லா
இன்பமும் ஒருசேரப்
பெற்று இவ்வுலகில்
இவரன்றோ தம்பதியர்
என் பலரும்
இயம்பும்படி
எடுத்துக்காட்டாய்
எளிமையாய் வாழ்வீர்
இறைவனி ஆசிகளுடன்
இறை அருளும்
பெற்று புது பாதையில்
புது பயணம்
துவங்க வாழ்த்துக்கள்
ராஜி
>>>>>>>>>>>>>>>>>>

ராஜி said...

மாலா ( Mrs.Venkat ) said...

எங்களுக்கு கூட தான் ஒரு புரியாத
விஷயம் இருக்கு. நீங்க எப்படி
10th Pass பண்ணுனீங்க..?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.
அவங்களுக்கே புரிய‌லைனா??!!!
அப்ப எங்க கதி???

karthikkumar said...

@ வெங்கட்

ஓ.. நம்ம சி.பி.யா..? அவரு எப்பவுமே
இப்படிதான் சம்பந்தம் இல்லாம
எதாவது பேசுவாரு..////

சரி விடுங்க விடுங்க நீங்க எழுதுற பதிவுக்கெல்லாம் கமென்ட் போடறதே பெரிய விஷயம்....:))

karthikkumar said...

மண நாள் வாழ்த்துகள்.........:))

பெரிய ஸ்கூல் Principal said...

//திடீர்னு என் வீட்டு முன்னாடி பெரிய க்யூ..//

எட்டாவது முறையா நீங்க பத்தாங்க்ளாஸ் எழுதும் போது, ரிசல்ட் வருதுன்னு தெரிஞ்ச உடனே ஊருல இருக்கிற நியூஸ்பேப்பரை எல்லாம் வாங்கி யாருக்கும் தெரியாம வீட்டுக்குள்ள ஒளிச்சு வச்சது நீங்க தானே?

அப்புறம் எங்க ஸ்கூல் பசங்க ரிசல்ட் எல்லாம் எப்படி பார்க்கிறது. அதான் உங்க வீட்டுக்கு வர வேண்டியதா போச்சு..

பெரிய ஸ்கூல் Correspondent said...

எல்லாம் சொன்னீங்க.. உங்க ரிசல்ட்ட பாத்த அப்புறம் உங்க வீட்ல உங்களுக்கு தீபாவளி கொண்டாடினாங்களே.. அந்த பிட்ட காணும்?? சிறப்பு பதிவா போட போறீங்களா??

ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரின்சிபால் said...

இந்த மார்க் வாங்குறதுக்கு மாடு (Ox) மேய்க்க போகலாம்னு சொன்னேன்.. அதை வச்சா இவ்வளவு பில்ட்-அப்??
ஒரு வேளை மாட்டு வண்டிய தான் Oxfordனு நினைச்சுட்டீங்களோ??

நாசா விஞ்ஞானி said...

//நாசால இருந்து கூட
ரெண்டு மூணு தடவை ராக்கெட்
விடறதை பத்தி சந்தேகம் கேட்டாங்கன்னு//

நீங்க விடுற பேப்பர் ராக்கெட் பின்னாடி பெஞ்சுல விழுது.. நீங்க விடுற தீபாவளி ராக்கெட் பக்கத்து வீட்டு கூரையில போய் விழுது..

ஸோ, எதையெல்லாம் செய்யக்கூடாது தெரிஞ்சுக்க தான் உங்களை கேள்வி கேட்டது..

அனு said...

//" இன்னிக்கு எனக்கு Wedding Anniversary-ங்கறதை
நீங்கல்லாம் எப்படிதான் கண்டுபிடிச்சீங்களோ..?!! "//

BBCயில, Star Newsல, Sun TVயில, Jaya TVயில, தினத்தந்தியில், தினகரன்ல.. இப்படி எதுலயுமே சொல்லல..

நாலு நாளைக்கு முன்னாடி உங்க பதிவுல நீங்க தான் சொன்னீங்க.. உங்களை சொல்லி குத்தமில்ல.. உங்களை மாதிரி வயசானவங்களுக்கு ஞாபக மறதி வர்றது சகஜம் தான்.. :)

உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் என் உள்ளம் கனிந்த திருமண தின நல்வாழ்த்துக்கள்!!!

பாஸ்கர் said...

Wish You Happy Anniversary!!!

தல,

"நான் படிச்ச ஸ்கூல் இருக்கே.. அப்பப்பா.. ரொம்ப மோசம்..!!"

இந்த வாக்கியத்தில் சொற்பிழை உள்ளது.

"நான் போன ஸ்கூல் இருக்கே.. அப்பப்பா.. ரொம்ப மோசம்..!!"

என்று தானே இருக்கவேண்டும்

பார்க்க:

http://gokulathilsuriyan.blogspot.com/2010/12/blog-post_23.html

"இப்பவும் சொல்றேன்.. நான் தினமும்
காலேஜ் போவேன்..ஆனா அங்கே
படிச்சதே இல்ல.."

(நாங்களும் லிங்க் கொடுப்போமில்ல!!!)

samhitha said...

venkat
உங்கள கலாய்கிரதுக்கு எவ்ளோ பேர் wanteda வராங்க!!!
பார்க்கவே கண் கொள்ளா காட்சியா இருக்கு !!//இனிமே இவர் கமெண்ட் வந்தா
Direct-ஆ Spam-க்கு போற மாதிரி
Set பண்ண எதாவது வழி இருக்கா..?

முடியல..!!//

உங்களாலயா முடியல!!
நம்பவே முடியல!!

suthan said...

HAPPY ANNIVERSARY!

Raj said...

வாழ்த்துக்கள் வெங்கட்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

வாழ்த்துகள், வெங்கட்!
(கல்யாண நாள்னு சொல்லிட்டா கலாய்க்க மாட்டாங்கன்னு இப்படி ஒரு பதிவு போட்டுட்டீங்களா? ஓகே, அதுனால, இந்தப் பதிவுல மட்டும் நோ கலாய்ப்பு!)

Anonymous said...

Happy Anniversary!!!!

Shalini(Me The First) said...

”இறைவன் உங்கள் இருவரையும் நலவான விஷயங்களில் ஒன்று சேர்த்து வைப்பானாக! உங்கள் இருவருக்கும் அபிவிருத்தி செய்வானாக!”
:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said...

@ சி.பி.,

// பரவால்ல.. 17 கமெண்ட் போட்டதுல
வெங்கட் 5 செலக்ட் பண்ணீட்டார்..
நான் வளர்ந்துட்டேன் போல.. //

இனிமே இவர் கமெண்ட் வந்தா
Direct-ஆ Spam-க்கு போற மாதிரி
Set பண்ண எதாவது வழி இருக்கா..?

முடியல..!!///


இனிமே வெங்கட் பதிவு போட்டா

Dashboard-ல இருந்து

Direct-ஆ Spam-க்கு போற மாதிரி
Set பண்ண எதாவது வழி இருக்கா..?

முடியல..!!

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// அவ்ளோ பயமா? :D //

இதுக்கு பேரு பயமில்ல..
முன் எச்சரிக்கை.. ஹி., ஹி.,
( சமாளிப்போம்ல..!! )

// neenga dinosaur-a venkat ;) //

கொஞ்சம் விட்டா ஜுராசிக் பார்க்ல
நடிச்ச டைனோசர் நீங்களான்னு
கேப்பீங்க போல.. :)

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// வெங்கட் Said.,

நாசால இருந்து கூட ரெண்டு மூணு
தடவை ராக்கெட் விடறதை பத்தி சந்தேகம்
கேட்டாங்கன்னு. அதையும் தீர்த்து வெச்சிருக்கேன்.. //

// அது கடல்ல விழுந்து, //

Yes., Yes.., என் ஐடியா கேட்டு அமெரிக்கா
விட்ட ராக்கெட் கடல்ல தான் விழுந்தது..

இங்க தான் நீங்க நல்லா யோசிச்சு பாக்கணும்..

நான் ஏன் வேணும்னே அப்படி ஒரு
தப்பான ஐடியா குடுத்தேன்..?

ஹி., ஹி., ஹி..!! அதெல்லாம் வெளியே
சொல்லக்கூடாது.. ராணுவ ரகசியம்..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// வெங்கட் Said.,
புரியாத புதிர்..!! //

// ரமேஷ் Said..,
நீங்க ஒரு பதிவர் அப்டிங்கிரததான
சொன்னீங்க? //

இல்ல.. நீங்க ஒரு மனிதர்ங்கறதை
தான் அப்படி சொன்னேன்..!!

வெங்கட் said...

@ Speed Master.,

// விரைவில் விக்கிலிக்ஸ் மூலம்
உங்கள் மார்க்சீட் வெளியிடப்படும் //

அந்த வேலைய சீக்கிரம் பண்ணுங்க..

அப்பவாச்சும் நான் 10th வரை
படிச்சிருக்கேன்னு மக்கள்
நம்பறாங்களான்னு பார்ப்போம்..!!

வெங்கட் said...

@ Mohamed.,

// வெங்கட் Said..,
நாசால இருந்து கூட
ரெண்டு மூணு தடவை ராக்கெட்
விடறதை பத்தி சந்தேகம் கேட்டாங்கன்னு.. //

// Mohamed Said..,
நீங்க க்லாஸ் ரூம்’ல பண்ணின மேட்டர்
அமெரிக்கா வர famous ஆகிடுச்சா? //

க்ளாஸ் ரூம்ல ராக்கெட் விடறது
ரொம்ப சாதாரணமான மேட்டர் தான்.
But அதை யார் விட்டாங்க அதான்
மேட்டர்..

For Example

நியூட்டன் முன்னாடி மரத்தில இருந்து
ஒரு ஆப்பிள் விழுந்தது.. அவரும்
அதை வெச்சு " புவியீர்ப்பு விசையை "
கண்டுபிடிச்சாரு..!!

ஏன்.. இதுக்கும் முன்னாடி மரத்தில
இருந்து ஆப்பிளே விழுந்தது இல்லையா..?
இல்ல அதை யாருமே பாத்ததில்லையா..?

So., விஷயம் சாதாரணமா இருந்தாலும்
அதை செய்யறது யார்கறது தான்
முக்கியம்..!!

உஸ்ஸப்பா.. சோடா ப்ளீஸ்..!!

வெங்கட் said...

@ Mohamed.,

// நானும் ஒரு லாஜிக்கான கேள்வி
கேக்குறேன் “10த் பாஸ் ஆகாமல்
+2 படிக்க முடியுமா? //

முடியுமே..!! சந்தேகமா இருந்தா
ரமேஷை கேட்டு பாருங்க.. அவர்
அப்படிதான் படிச்சாரு..!!

வெங்கட் said...

என் Wedding Anniversary-க்கு இங்கே
வாழ்த்து சொன்னவங்களுக்கும்.,
மெயில்லயும்., போன்லயும் வாழ்த்து
சொன்ன அந்த 2,67, 941 பேருக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணன் 10த் பாஸ் பண்ணிட்டாருடோய்..... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா நீங்க 10த் பாஸ் பண்ணதுக்கும், உங்க வெடிங் டேவுக்கும் என்ன சம்பந்தம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கு வெளங்கிருச்சுங்க.....

வெங்கட் said...

@ ராதா & ராஜி.,

நீங்க ரெண்டு பேரும் எழுதின
கவிதை சூப்பர்..

இன்னும் கூட கொஞ்சம்
வெங்கட் நல்லவரு., வல்லவரு.,
நாலும் தெரிஞ்சவருன்னு
ரெண்டு மூணு மேட்டர் சேர்த்து
இருந்தா டாப் கிளாஸா இருந்து இருக்கும்..!!

வெங்கட் said...

@ கார்த்தி.,

// சரி விடுங்க விடுங்க நீங்க எழுதுற
பதிவுக்கெல்லாம் கமென்ட் போடறதே
பெரிய விஷயம்....:)) //

" ஓ..!! "

என்ன பார்க்கறீங்க..?!!
நீங்க எழுதற கமெண்டுக்கெல்லாம்
இந்த Reply போடறதே பெரிய விஷயம்.. :)

வெங்கட் said...

@ பெரிய ஸ்கூல் பிரின்சிபால்.,

// ரிசல்ட் வருதுன்னு தெரிஞ்ச உடனே
ஊருல இருக்கிற நியூஸ்பேப்பரை எல்லாம்
வாங்கி யாருக்கும் தெரியாம வீட்டுக்குள்ள
ஒளிச்சு வச்சது நீங்க தானே? //

இது கொஞ்சம் Too Much..!!

10th Exam-ல முதல் மாணவன் வெங்கட்னு
என் பேரு., போட்டோ எல்லாம் வந்துச்சேன்னு
நாலு பேப்பர் வாங்கி வெச்சேன்..
அதை போயி இப்படி சொல்றீங்க..?!!

// அப்புறம் எங்க ஸ்கூல் பசங்க ரிசல்ட்
எல்லாம் எப்படி பார்க்கிறது. அதான் உங்க
வீட்டுக்கு வர வேண்டியதா போச்சு.. //

என்னமோ 1200 ஸ்டூடண்ட்ஸ் படிச்ச
மாதிரி பில் டப்பா சொல்றீங்க..

10th Exam எழுதினதே ரெண்டே பேரு..
ஒண்ணு நானு, இன்னொன்னு அனு.

அந்த Result பார்க்க எதுக்கு என் வீடு
வரைக்கும் வரணும்..? Result தான்
ஊருக்கே தெரியுமே..

நான் : State First..
அனு : வழக்கம் போல 12வது தடவையா... Fail..

ரசிகன் said...

ம்ம் ஏன் நிறுத்திட்டீங்க... க‌ரைபுர‌ண்டு ஓடும் க‌ப்ஸா வெள்ள‌த்தில் தொபுக்க‌டீர்னு குதிக்க‌ ஓடோடி வ‌ந்த
எங்க‌ள‌ ஏமாத்திடாதீங்க‌...

சாக்ர‌டீஸ் ச‌ந்தேக‌ம் கேக்க‌ கூப்டாக‌
கார்ல் மார்க்ஸ் க‌ம்யூனிச‌ம் பேச‌ கூப்டாக‌...
ஷெல்லி க‌வித‌ சொல்லி த‌ர‌ கேட்டாக‌
சாய்னா ச‌ர்வீஸ் க‌த்துத‌ர‌ கூப்டாக...

ஆனா உண்மை என்னன்னா,

ம‌னைவி ம‌சாலா அரைச்சு த‌ர‌ கூப்டாக‌ ...
நண்பர்கள் நடுவுல உக்காத்தி நக்கலடிக்க கூப்டாக..
ஊரும் உறவும் உதைக்கறதுக்கு தேடறாங்க...

வெங்கட் said...

@ ஆக்ஸ் பிரின்சி.,

// இந்த மார்க் வாங்குறதுக்கு மாடு (Ox)
மேய்க்க போகலாம்னு சொன்னேன்..
அதை வச்சா இவ்வளவு பில்ட்-அப்??
ஒரு வேளை மாட்டு வண்டிய தான்
Oxfordனு நினைச்சுட்டீங்களோ?? //

" எங்க பிரின்சிபால் பாடம் எடுத்தா
ஆக்ஸா பிளேடுல அறுக்கற மாதிரி
இருக்கும்..! " இது தான் பசங்க உங்கள
பத்தி அடிக்கிற கமெண்ட்..

அதான் பசங்க உங்கள " ஆக்ஸ் பிரின்சின்னு "
Nick Name வெச்சு கூப்பிடுவாங்க..

அதை தான் நீங்க ஆக்ஸ்போர்ட்
யுனிவர்சிட்டி பிரின்சிபால் ரேஞ்சுக்கு
பீல் பண்ணி இருக்கீங்களா..?

அடங்குங்க சார்..!!
ஹி., ஹி., ஹி..!!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

திருமண நாள் வாழ்த்துக்கள்,...வெங்கட் &திருமதி வெங்கட்...

mnamslr said...

@rasigan

//
சாய்னா ச‌ர்வீஸ் க‌த்துத‌ர‌ கூப்டாக...
ம‌னைவி ம‌சாலா அரைச்சு த‌ர‌ கூப்டாக‌ ...
நண்பர்கள் நடுவுல உக்காத்தி நக்கலடிக்க கூப்டாக..
ஊரும் உறவும் உதைக்கறதுக்கு தேடறாங்க...//

உங்க கற்பனை இருக்கே!!
அபாரம்!!
ஒரு சின்ன தப்பு

ஊரும் உறவும் கதைக்கறதுக்கு தேடறாங்க.
இதுல இருந்து என்ன தெரியுது
உலகமே எங்க பாஸ தேடுது!!
அவர் ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா னு தெரியுது!!
நீங்க கூட அவர் கிட்ட தான் கமெண்ட் போட கத்துகிட்டீங்க அப்டின்ர உண்மைய மட்டும் சொல்ல மாட்டேன்குறீங்க !!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ வெங்கட்

//ड्फ्ट्र्गब्ज ल्पैऊय ह्फ्डकहयगफ

ഘാജൈഇഉബ്൜ പോയുഐഅഫ

హ్జ్శస్య్వ్డ్ఫ్డస'అ ఊజ్న్జ సన్మా ఓపఅస

уккв лтхуне нга калн нскку

அட , நன்றிகள் சொன்னேங்க..//

நீங்க தமிழ்ல எழுதினா போதும் வெங்கட், அதுவே மத்த மொழில எழுதின மாதிரிதான் இருக்கு, புரிய மாட்டேங்குது! :)

ரசிகன் said...

@mnamslr

//உலகமே எங்க பாஸ தேடுது!!
அவர் ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா னு தெரியுது!!//

BSA SLR ன்ற பேர்ல சைக்கிள் விடறாங்க தெரியும்
அது யாருங்க புதுசா? mnamslrன்ற பேர்ல கரடி விடறது..??

//நீங்க கூட அவர் கிட்ட தான் கமெண்ட் போட கத்துகிட்டீங்க அப்டின்ர உண்மைய மட்டும் சொல்ல மாட்டேன்குறீங்க !!//
என் கமெண்ட் மொக்கையா இருக்குன்னு ஃபீல் பண்ணிணீங்கன்னா கச்சா முச்சான்னு திட்டுங்க, வாங்கிகிடறேன்..
அதுக்காக இப்படிஎல்லாம் என்ன கேவல படுத்துனீங்கன்னா காஃப்பிக்கும் டிபனுக்கும் நடுவில் உண்ணாவிரதம் இருந்து என் எதிர்ப்பை பதிவு செய்வேன்...

mnamslr said...

//அது யாருங்க புதுசா?கரடி விடறது..??//
ரொம்ப காமெடி நீங்க!!
எல்லோருமே உங்க இனம்னு நெனச்சிடுறதா? ;)

//என் கமெண்ட் மொக்கையா இருக்குன்னு ஃபீல் பண்ணிணீங்கன்னா கச்சா முச்சான்னு திட்டுங்க//

நீங்க ஏன் உங்க கண்ண செக்அப் பண்ண கூடாது??
//உங்க கற்பனை இருக்கே!!
அபாரம்!!//
இதுக்கு பேரு உங்க ஊர்ல திட்டுறதா?? :|
நிஜமாவே நல்ல இருந்ததுங்க!!

//காஃப்பிக்கும் டிபனுக்கும் நடுவில் உண்ணாவிரதம் இருந்து என் எதிர்ப்பை பதிவு செய்வேன்...//

ஹா ஹா ஹா VKS ஏன் இப்டி காமெடி பீஸா இருக்கீங்க!!

எப்போ பாரு VAS கிட்ட ஓசி பிரியாணி வாங்கி சாப்பிடுறது!! அப்புறம் டயட்னு சொல்லிட்டு காஃப்பிக்கும் டிபனுக்கும் நடுவில் விரதம் இருக்கறேன்னு சீன் போடுறது!!
இதே வேலையா போச்சு ;)
(ஜஸ்ட் கிட்டிங் :))

வெங்கட் said...

@ ரசிகன்.,

// சாக்ர‌டீஸ் ச‌ந்தேக‌ம் கேக்க‌ கூப்டாக‌
கார்ல் மார்க்ஸ் க‌ம்யூனிச‌ம் பேச‌ கூப்டாக‌...
ஷெல்லி க‌வித‌ சொல்லி த‌ர‌ கேட்டாக‌
சாய்னா ச‌ர்வீஸ் க‌த்துத‌ர‌ கூப்டாக... //

என்ன இருந்தாலும் இந்த VKS காரங்க
பொறாமை பிடிச்சவங்கப்பா..

பாருங்க பாதியை மறைச்சிட்டாங்க..

சேவாக் சிக்சர் அடிக்க கத்து தர கூப்பிட்டாக.,
P.C ஸ்ரீராம் போட்டோ பிடிக்க கத்து தர கூப்பிட்டாக.,
பிரிட்னி ஸ்பியர்ஸ் பாட்டு சொல்லி தர கூப்பிட்டாக.,
அப்புறம்..

மீதிய அப்புறம் சொல்றேன்.
கை வலிக்குது.. டைப் அடிச்சு, அடிச்சு..

Anonymous said...

எப்பவும் சில பேர் மட்டும் நல்ல மதிப்பெண் வாங்குவது இன்னும் புரியாத புதிரா இருக்கு

வெங்கட் said...

@ mnamslr.,

// ஹா ஹா ஹா VKS ஏன் இப்டி காமெடி
பீஸா இருக்கீங்க!! //

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

VKS காமெடி பீஸ் இல்ல.. டம்மி பீஸ்..!!

அதென்ன mnamslr..?
டைப் பண்ண சிரமமா இருக்குபா..!!