சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

30 April 2010

யார் Best..??

அது ஒரு Pet Shop..
Pet வாங்க வந்த
ஒரு Customer 3 கிளி
அங்கே இருக்கறதை
பார்க்கிறார்..

மூணுமே பார்க்கிறதுக்கு
ஒரே மாதிரி இருந்தாலும்
Rate மட்டும் வேற வேற..,

கஸ்டமர் : இந்த முதல் கிளி எவ்ளோ..?

கடைக்காரர் : 1000 ரூபாங்க..,
இது நல்லா பேசும்.,
நல்லா பாடும்...

கஸ்டமர் : இந்த ரெண்டாவது கிளி..?

கடைக்காரர் : 3000 ரூபாங்க..,
இதுவும் பேசும், பாடும்.,
கம்பியூட்டர் கூட Work பண்ணும்..

கஸ்டமர் : இந்த மூணாவது கிளி..?

கடைக்காரர் : 5000 ரூபாங்க..,
ஆனா., இந்த கிளி என்ன
பண்ணும்னு எனக்கு தெரியாது.

கஸ்டமர் : அப்புறம் எதுக்கு 5000 ரூபா..?

கடைக்காரர் : அந்த ரெண்டு கிளியும்
இதை " பாஸ்" -னு கூப்பிடுதே..

கஸ்டமர் அந்த கிளியவே வாங்கிட்டு
போயிடறார்..

இதை பார்த்திட்டு இருந்த ஒரு மைனா
அந்த ரெண்டு கிளிகளை பார்த்து..

மைனா : அவர் தான் உங்க பாஸா..?

2 கிளிகள் : இல்ல..,

மைனா : பின்ன..?

2 கிளிகள் : அவன் பேரு பாஸ்கர்.
நாங்க செல்லமா " பாஸ்னு "
கூப்பிடுவோம்..


ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( அருண், திருச்சி )
IPL - சசி தரூர்..?

இப்பல்லாம்
விளையாட்டு அரசியலா போச்சு.,
அரசியல் விளையாட்டா போச்சு..!!

இன்று ஒரு தகவல் :
---------------------

எல்லா Boss-ம் அறிவாளியாதான்
இருப்பாங்கன்னு தப்பு கணக்கு
போடக்கூடாது..!!
.
.

28 April 2010

இது எப்படி இருக்கு..??" Come On எல்லாரும் நோட்டை
எடுத்து Table மேல வைங்க...! "

இதை சொல்லிகிட்டே தான்
எங்க Maths Master பிரபாகரன்
Class-ல Enter-ரே ஆவாரு..

Class-ல அவரு கணக்கு
போட்டு தள்ளுனாரா.?
இல்ல
எங்கள போட்டு
தள்ளுனாரான்னு கடைசி
வரைக்கும் புரியல.

எப்படியோ நாங்களும்
பிளஸ் 1 அவர்கிட்ட
கஷ்டப்பட்டு படிச்சிட்டோம்..

பிளஸ் 1 ரிசல்ட் வந்தது..

நானும்., என் Friend ஜெகனும்
Maths-ல பார்டர் பாஸ்
ஆயிருந்தோம்...
அதனால எங்களுக்கு ஒரே
Shock..!

இருக்காதா பின்ன.,
எழுதினதே 30 மார்க்குக்கு
தானே..!

அப்புறம்தான் தெரிஞ்சது
எல்லாம் எங்க Principal
புண்ணியம்.

நானும்., அவனும் Discuss
பண்ணினோம்..

நான் : இப்படியே போனா
பிளஸ் 2-ல தேறமாட்டோம்டா..
வேற யாராவது நல்ல Master-ஆ
பார்த்து Tution சேரணும்..

ஜெகன் : ராசிபுரம் SRV School-ல
பிளஸ் 2 Maths-க்கு
ஒரு மாசம் Coaching
தர்றாங்களாம்..
Fees 1000 ரூபா போலாமா..?

நான் : ராசிபுரமா..?
35 கிலோ மீட்டர் வருமேடா..
ரொம்ப தூரம்ல..

ஜெகன் : பிளஸ் 2-ல பாஸ்
ஆக வேணாமா..?

சரின்னு ஒரு மனசா
நாங்க ரெண்டு பேரும்
அங்கே போயி சேர்ந்தோம்..

First Day Class..

" Come On எல்லாரும் நோட்டை
எடுத்து Table மேல வைங்க...! "
சொல்லிட்டே அங்கே Class
எடுக்க வந்தது சாட்சாத் எங்க
Maths Master பிரபாகரனே தான்..!!


ஹாய் வெங்கட் :
-------------------

( ரகு, மும்பை )
கோழி First-ஆ., முட்டை First-ஆ..?

கோழி First., முட்டை Next.

( என் இலையில ரெண்டையும்
வெச்சா எதை நான் முதல்ல
சாப்பிடுவேன்னு தானே கேட்டீங்க..?!! )

இன்று ஒரு தகவல் :
---------------------

நமக்கு ஒரு விஷயம்
பிடிக்கலைன்னா
அதுக்கு ஒரு காரணம் இருக்கும்.,

நமக்கு ஒரு விஷயம் பிடிச்சா..
அதுக்கு ஏதாவது ஒரு காரணத்தை
நாமே கண்டுபிடிப்போம்..!
.
.

26 April 2010

கிரிக்கெட்ல நம்மள நல்லா ஏமாத்தறாங்கப்பா..!கிரிக்கெட்ல நம்மள நல்லா
ஏமாத்தறாங்கப்பா..

எப்படி தெரியுமா..!!

1. கையில Ball-ஐ வெச்சுகிட்டே
No Ball-ன்னு சொல்வாங்க.,

2. ஒரு Over-க்கு ஆறு Ball-ன்னு
சொல்வாங்க., ஆனா ஒரு Ball தான்
இருக்கும்.

3. All Out-ன்னு சொல்லுவாங்க..,
ஆனா 10 பேர் தான் Out ஆகி
இருப்பாங்க..

4.அம்பயர் ஒரு கைய தூக்கினா
ஒரு Batsman அவுட்..,
ரெண்டு கையயும் தூக்கினா Six..
( லாஜிக் இடிக்குதே..!! )

5. Goal Keeper-ன்னா கோல் விழாம
தடுக்கணும்.. அப்ப..,
Wicket Keeper விக்கெட் விழாம
தடுக்கணும் தானே...!
ஆனா அவரே ஏன் Out பண்ணுறாரு..?


ஹாய் வெங்கட் :
-------------------

(அனு)
அக்டோபர் புரட்சி எந்த மாதம்
கொண்டாடப்படுது..?

புரட்(டா)சி மாசம்.

இன்று ஒரு தகவல் :
---------------------

யார் சொன்னது
ஏழை நாடென்று..,
பிறகெப்படி
2000 கோடிக்கு ஊழல்..??!!

பின் குறிப்பு :
இது 10 வருஷம் முன்னாடி
எழுதினது.,
அப்ப 1000 கோடின்னு எழுதி
இருந்தேன்..

ஹி.. ஹி.., இப்ப தான்
நாம Develop ஆயிட்டோமே..!!
.
.

24 April 2010

Wife கேட்ட கேள்வி..!!


நேத்து Night மணி 7.50.

Tv-ல ஒரு Quiz Programme
நேரடி ஒளிபரப்பு
ஓடிட்டு இருந்தது..

நான் 20 நிமிஷமா
அந்த Programme-ல கலந்துக்க
போன் Try பண்ணிட்டு
இருந்தேன்..
But லைன் கிடைக்கல..

அப்போ என் மனைவி
சாப்பிட கூப்பிட்டாங்க..

நான் : கொஞ்சம் Wait பண்ணு..
போன் Try பண்ணிட்டு
இருக்கேன்ல..,

மனைவி : சாப்பிட்டுட்டு போயி
அப்புறமா தான் Try
பண்ணுங்களேன்..

நான் : அதுக்குள்ள Programme
முடிஞ்சிடுமே..!!

மனைவி : எப்படியும் லைன்
கிடைக்க போறதில்ல., அதை
8 மணிக்கு பண்ணினா என்ன..?
8.30 மணிக்கு பண்ணினா என்ன..?ஹாய் வெங்கட் :
-------------------

(சுதா, Malaysia )
" வாழ்க்கை '-ன்னா என்ன..?

அது சிவாஜி - அம்பிகா
நடிச்ச படம்..!


இன்று ஒரு தகவல் :
---------------------

உங்க Lover உங்களுக்கு
அனுப்பற Romantic Msg
எல்லாம் பார்த்து
சந்தோஷப்படறீங்களா..?

STOP..!!

அவங்களுக்கு அதை யார்
அனுப்பி இருப்பாங்கன்னு
யோசிச்சி பார்த்தீங்களா..?

( நாராயணா..! நாராயணா..! )
.
.

22 April 2010

PART - 2


சின்ன வயசுல நான் நிறைய
குறும்பு பண்ணுவேன்..

அப்பல்லாம்
நிறைய திட்டு விழும்..,
துரத்தி துரத்தி அடிப்பாங்க..!

ஒரு தடவை
சைக்கிள்ல Wheeling பண்ணி
கிழே விழுந்து
முட்டிய பேத்துகிட்டேன்..,

அப்ப எங்க
அப்பாவும்., அம்மாவும்
என்னை வீடு கட்டி
அடிச்சாங்க..!

இப்ப நாலு நாள் முன்னாடி
என் மகன் சைக்கிள்ல
கையை விட்டுட்டு ஓட்டி
கீழே விழுந்தான்.
மூக்கு உடைச்சிக்கிட்டான்..

அவனையும் எங்க
அப்பா., அம்மா
திட்டினாங்க..,

அதை கேட்டு
நான் Shock ஆயிட்டேன்..

எப்படி திட்டினாங்க தெரியுமா..?

" உங்கப்பன் சரியில்ல..,
நீ மட்டும் எப்படி இருப்ப..? "

என்னை விட்டுடுங்க..
முடியல..
வலிக்குது..!


ஹாய் வெங்கட் :
-------------------

( திருடா.Com )
ஏதாவது பிளான் பண்ணினா
அதை "Master பிளான்"
சொல்கிறோமே..
"Teacher பிளான்னு" ஏன்
சொல்வதில்லை..?

Plan கண்டிப்பா ஜெயிக்கும்னா
Teacher பிளான்னு வெச்சி
இருப்பாங்க..
Plan சொதப்பினா..?
Master தானே எவ்ளோ
அடிச்சாலும் தாங்குவார்..!

இன்று ஒரு தகவல் :
---------------------

கோழி கூவுதுன்னு
சொன்னாலும்.,
உண்மையில கூவுறது
சேவலுங்கோ..!
.
.

20 April 2010

Exam கீதாசாரம்எது நடந்ததோ
அது நன்றாகவே நடக்கவில்லை
( ஆறு Paper-ல அரியர் )

எது நடக்கிறதோ
அதுவும் நன்றாகவே நடக்கவில்லை
( இன்னிக்கும் Question Paper கஷ்டம் )

எது நடக்க இருக்கிறதோ
அதுவும் நன்றாகவே நடக்காது
( நாமதான் படிக்க மாட்டோமே )

உன்னுடையது எதை நீ இழந்தாய்..?
( Marks எல்லாம் டீச்சர்து..,
அதை நாம கேட்க கூடாது )

எதற்காக நீ அழுகிறாய்..?
( சும்மா சீன் காட்டத்தானே..? )

எதை நீ படித்தாய்
அது மறப்பதற்கு.,

எதை நீ கவனித்தாய்
அது புரியாமல் போவதற்கு..,

எதை நீ எழுதினாய்
Pass ஆவதற்கு..?ஹாய் வெங்கட் :
-------------------

( அனு )
நாம தலைகீழா நின்னு
யோகா பண்றோம்.
அப்போ, வௌவால் எப்படி
யோகா பண்ணும்..? ( நேரா நின்னா.?)

அதென்ன Blog-ஆ வெச்சிருக்கு.,
டென்ஷன் ஆகி யோகா Class
போறதுக்கு..?!


இன்று ஒரு தகவல் :
---------------------

எனக்கு ஒரு கோடி ரூபாய்
கிடைக்க போவுது.
So., Blog எழுதறதை
நிறுத்திடலாம்னு இருக்கேன்..

பின்லேடனை பிடிச்சா
ஒரு கோடி குடுக்கறாங்களாம்..!!
எனக்கு பின்லேடனை
" ரொம்ப பிடிக்கும்..!! "
.
.

18 April 2010

Control பண்ணுங்கப்பா...!!


போன வாரம் ISHA Yoga
( 7 Days Class ) போயிருந்தேன்...

முதல் நாள் :
எங்க குரு மனசை பத்தி
Class எடுத்திட்டு இருந்தார்..

நம்ம உடம்பை Control
பண்றதை விட.,
மனசை Control பண்றது
கஷ்டம்..

ஏன்னா நம்ம மனசு
சாமி கும்பிடும் போது
வெளியில விட்ட
செருப்பை நினைக்கும்..

விரதம் இருக்கும் போதுதான்
சிக்கனை நினைக்கும்..

இதுக்கு எங்க குரு சொன்ன
ஒரு உதாரணம்..

நீங்க ஒரு காரை Start பண்றீங்க..
ஆனா அந்த கார்

Right-ல திருப்பினா - Left-ல போகுது.,
Left-ல திருப்பினா - Right-ல போகுது.,

Gear-ஐ
முன்னாடி போட்டா - பின்னாடி போகுது..,
பின்னாடி போட்டா - முன்னாடி போகுது..,

அப்ப நீங்க என்ன
பண்ணுவீங்கன்னு கேட்டார்..

மெக்கானிக்கிட்ட விடுவேன்னு
ஒருத்தரும்..,

காரை விட்டு இறங்கிடுவேன்னு
இன்னொருத்தரும் சொன்னாங்க..

ஆனா குருவோ..,

" Brake போட்டு காரை
முதல்ல நிறுத்தணும்..! "
அதுதான் நீங்க உடனடியா
செய்யவேண்டியதுன்னு
சொன்னார்..

அப்ப என் பக்கத்துல
இருந்தவர் என்கிட்ட
கிசுசிசுன்னு ஒன்னு கேட்டார்..

நான் Puncture ஆயிட்டேன்..

அது என்னான்னா...

"அந்த கார்ல Brake மட்டும்
ஒழுங்கா வேலை
செய்யுமா சார்..? "

எல்லாரும் முதல்ல வாயை
Control பண்ணுங்கப்பா.,
அப்புறம் மனசை
Control பண்ணிக்கலாம்..!

" முடியல..!!!! "ஹாய் வெங்கட் :
-------------------

( கண்மணி, மலேசியா )
நீங்க ஏன் சினிமாவுல Hero-ஆ
நடிக்ககூடாது..?

இது கேள்வி மாதிரி தெரியலையே.,
" ஆப்பு " மாதிரியில்ல இருக்கு..
( ஆமா., Bollywood-லயா.,
Hollywood-லயா..?? )

இன்று ஒரு தகவல் :
---------------------

வாய்ப்பு இருக்கறவங்க
கண்டிப்பா ISHA Class
பண்ணுங்க..,

ஏழு நாள் Class பண்ணினதுல
என் முதுகுவலி எங்கே..?
Its Gone..!
போயே போச்சி..!
.
.

16 April 2010

NCC மாஸ்டர்..!NCC Parade நடக்குது..,

NCC Master Commands
குடுத்திட்டு இருக்கார்..

அட்டேன்ன்ஷன்..,

ஸ்டாண்டர்ர்டீஸ்..,

Right Turn.,

Left Turn.,

About Turn.,

இப்படி ரெண்டு மூணு தடவை..,

ஒரு பையன் மட்டும்
Line-ல இருந்து வெளியே
வந்துட்டான்....

நேரா Master-கிட்ட போனான்..

" எந்த பக்கம் திரும்பி
நிக்கறதுன்னு சீக்கிரம்
ஒரு முடிவுக்கு வாங்க சார்..! "ஹாய் வெங்கட் :
-------------------

( மாலா )
அண்ணன் பெண்டாட்டிய
அண்ணின்னு சொன்னா,
தம்பி பெண்டாட்டிய
என்ன சொல்றது..? தண்ணின்னா..?


இதென்ன வம்பா இருக்கு..??
இப்ப
காதலிக்கிற பொண்ண காதலின்னு
சொல்றோம். - ஆனா..,
கல்யாணம் பண்ணிக்க போற
பொண்ண கல்யாணின்னா
சொல்றோம்..?

இன்று ஒரு தகவல் :
---------------------

1 மே., 2 மே., 3 மே., 4 மே

என்ன பார்க்கறீங்க...?
அப்புறம் நான் ஒண்ணு" மே "'
எழுதலைன்னு
சொல்லக்கூடாதுல்ல..
.
.

14 April 2010

ஹாய் வெங்கட்

( ரசிகன் )
ஆழம் தெரியாமல் காலை விடுதல்
என்றால் என்ன.?

இந்த மாதிரி கேள்வி கேட்டு என்னை
சீண்டி பார்க்கறது..


( கண்மணி., மலேசியா )
உங்கள யாராவது திட்டினால்
உங்க பதில் என்ன..?

ஹி.., ஹி..,ஹி.., ( மனைவி திட்டினா )

ஐய்யோ..,
அது நான் இல்லீங்க..! ( மத்தவங்க திட்டினா )( சே.ரா.பாலா )
" கேள்வின்னா " என்ன..?

பொதுவா நாங்க பதில் என்னான்னு
தெரியாம தான் முழிப்போம்..
நீங்க என்னடான்னா கேள்வியே
என்னான்னு தெரியாம முழிக்கறீங்க..!


( அனாமிகா துவாரகன்., ஆஸ்திரேலியா
http://reap-and-quip.blogspot.com )
நானும்., சுனாமிகாவும் சேர்ந்து உங்க
வீட்டுக்கு வந்தா நீங்க என்ன பண்ணுவீங்க..?

நான் உங்களை
கேள்விதானே அனுப்ப சொன்னேன்..
இது மாதிரி மிரட்டல் அனுப்பினா எப்படி..?


( வடிவேலன் ஆர்.
http://www.gouthaminfotech.com )
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..
நீங்கள் எழுதற பதிவு எல்லாம் கவிதை
மாதிரி ஒன்னுக்கு கீழ ஒன்னா இருக்கு
என்ன காரணம்..?

இதுக்கு போயி உண்மை தெரிஞ்சாகணும்
ரேஞ்சுக்கு ஏன் Feel பண்ணுறீங்க..!
அப்படி எழுதலைன்னா பதிவு
ரெண்டே வரியில முடிஞ்சிடும்..!!


( அனு )
தியேட்டர்ல ரெண்டு பக்கமும்
Arm Rest இருக்கும்.. அதுல
எது நம்மளோடதுன்னு எப்படி
கண்டுபிடிக்கறது..?

ரெண்டுமே நம்மளது இல்லீங்க..,
தியேட்டர்காரங்களுது..!


(தினேஷ் பாபு.க.நா )
தயிர்ல போட்ட தயிர் வடை,
போடலைன்னா மெது வடை,
ஓட்டை இருந்தா அது ஓட்டை வடை....
இத பத்தி உங்களோட கருத்து என்ன ?

தம்பி..! இவ்ளோ ஆராய்ச்சி பண்ணினா
வடை ஊசி போயிடும்..
அப்புறம் Feel பண்ணுவீங்க
" ஆஹா.., வடை போச்சே..! "


( தேஜு )
Confidence , Over Confidence என்ன
வித்தியாசம்..?

" Over "


( ரமேஷ்
http://sirippupolice.blogspot.com )
யானைக்கும் அடி சறுக்கும்னு
சொல்லுறாங்களே..,
அது எத்தனை அடி சறுக்கும்..?

யானை ஆணா..? பெண்ணா..?
வயசு என்ன..?,Weight எவ்வளவு..?
இதெல்லாம் சொல்லணும்ல..
ஒவ்வொன்னுக்கும் ஒரு
Formula இருக்கு..


( சுசித்ரா )
Stadium-ல நாம உக்கார்ற இடத்துக்கு
ஏன் " Stand "-ன்னு பேரு..?

Stadium-ல நீங்க Stand-ல
உக்காருவீங்களா..?
நாங்கல்லாம் Seat-ல தான்பா
உக்காருவோம்..!


பின் குறிப்பு :
கேள்வி அனுப்பின எல்லோருக்கும்

நன்றி..! இந்த பகுதியை தொடர்வதா.?
வேண்டாமான்னு நீங்க தான்
முடிவு பண்ணனும்..!

இன்று ஒரு தகவல் :

இன்னிக்கு தமிழ் வருஷம்
" விக்ருதி " பிறக்குது..,


தமிழ் வருஷங்களை 60-ஆ
பிரிச்சி வெச்சிருக்காங்க..- ஆனா.,
அந்த 60 வருஷத்தோட பெயர்ல
ஒன்னுகூட தமிழ் பெயர் கிடையாது..
எல்லாமே வடமொழி பெயர்..
.
.

12 April 2010

சுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 2

இரண்டாம் வகுப்பு படிக்கும்
என் மகன் பள்ளி ஆண்டுவிழாவில் 
பேசியது..

தலைப்பு : தேச ஒற்றுமையில்
குழந்தைகளின் பங்கு..

( இந்த தலைப்பே எனக்கு கொஞ்சம் Confusion.,
Atleast மாணவர்களின் பங்குன்னாவது
கொடுத்து இருக்கலாம்..! )

O.K Speech-க்கு போலாம்...

" எல்லாரும் நல்லவங்கள
பார்க்க தான் ஆசைப்படறாங்க..,
நல்லவங்களா வாழ ஆசைப்படல.. "
அதுதான் இப்ப பிரச்சினையே..!

நம்ம நாடு ஒத்துமையா இருக்கா..?
இருக்குகுகுகு....,
ஆனா இல்ல்ல்ல...

நம்ம நாடு மத்த நாடுங்க மாதிரி
யுத்த பூமியா இல்ல.. - ஆனாலும்
காஷ்மீர்., குஜராத்., காவேரி
இந்த மாதிரி பிரச்சினைங்க
எல்லாம் இருக்கு..!

" மீனுன்னா முள்ளு இருக்கும் - அதையே
பாத்துட்டு இருந்தா மீனை எப்ப சாப்பிடறது..?
நாடுன்ன பிரச்சினை இருக்கும் - அதை பத்தியே
பேசிட்டு இருந்தா எப்ப சரி பண்றது..? "

அதை சரி பண்ண நம்மள மாதிரி
குழந்தைகளால முடியுமா..?

" முடியும்..! "

காந்திஜி கூட குழந்தையாத்தான் இருந்தாரு..,
அப்புறமா தான் மகாத்மாவா ஆனாரு..!

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி-ன்னு
அப்பவே MGR சொல்லிட்டாரு...

நம்ம நாட்ல குழந்தைங்க கொஞ்சம்
பேருதான்..

ஆனா..,
எண்ணிக்கை தான் முக்கியம்னா.,
தேசிய விலங்கா புலி இருக்க முடியாது
எலி தான் இருக்கும்..!

குழந்தைங்க.., நல்ல குழந்தைங்களா
மாறுறது School-ல தான்..

நமக்கு..,
கடவுள் கொடுத்த Gift - நம்ம Parents.,
Gift-ஆ வந்த கடவுள் - நம்ம Teachers..!

" அன்னையும்., பிதாவும் முன்னறி தெய்வம்..! "

" ஒன்றே குலம்., ஒருவனே தேவன்..! "

" சாதிகள் இல்லையடி பாப்பா...! "

" இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்..! "

இதையெல்லாம் அவங்க தான் நமக்கு
சொல்லி தர்றாங்க..!

நல்ல மாணவன் தான்
நல்ல குடிமகனா வரமுடியும்..!

Teachers மட்டும் இல்லைன்னா
நம்ம நிலைமை என்ன ஆயிருக்கும்...?

" Building Strong.., Basement Weak "

நம்ம நாடு ஒத்துமையா இருக்க
ஒரே வழி..,

படிச்சி முடிச்சிட்டாலும்.,
School-ல கத்துகிட்டதை என்னிக்குமே
மறக்க கூடாது..

" Aeroplane மேல வந்திடுச்சீன்னு
Engine-ஐ OFF பண்ணலாமா..? "

இதை தான் திருவள்ளூவர்..

" கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக " - ன்னு
சொல்லுறாரு..

நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்..
Punch Dialogue எல்லாம் கடைசில
தான் சொல்லணும்..

நாங்க நினைச்சா...
இந்த தேச ஒத்துமைக்கு மட்டுமில்ல..,
உலக ஒத்துமைக்கே பாடுபடுவோம்..

" எவ்வள்வோ பண்ணிட்டோம்..!
இதை பண்ண மாட்டோமா...??!! "

பின் குறிப்பு :
பேசிய பிறகு..,

சீனியர் Students சாக்லேட் வாங்கி 
தர்றாங்க.., 
Teachers-லாம் முத்தம் குடுக்கறாங்க 
( என் பையனுக்கு ).., - ஆனா..,
Prize மட்டும் 2nd Prize தான்
தர்றாங்க...


டிஸ்கி : மேலும் சில பேச்சு போட்டிகள்..


பேச்சுப்போட்டி - 1
பேச்சுப்போட்டி - 3
பேச்சுப்போட்டி - 4
பேச்சுப்போட்டி - 5
பேச்சுப்போட்டி - 6
.
.

10 April 2010

Just-ல மிஸ்ஸு..!!
உலக கோப்பை கிரிக்கெட்
India-ல நடந்துகிட்டு
இருந்த சமயம்..,

எங்க காலேஜ் Ground-ல
எங்க ஜுனியர்ஸ் கிரிக்கெட்
ஆடிட்டு இருந்தாங்க..!

நானும்., என் Friend-ம்
ஓரமா உக்கார்ந்திட்டு
வேடிக்கை பார்த்திட்டு
இருந்தோம்..!

ஏன் தெரியுமா..?!!

Seniors-கூட விளையாடினா..,
பந்து பொறுக்கி போட சொல்லுவாங்க..!

Juniors-கூட விளையாடினா..,
பந்தாலயே போடுவாங்க..!
அதான்...!

அப்ப.., நான் என் Friend-கிட்ட..,

நான் : சே.., இப்படி ஆகும்னு
நான் எதிர்பார்க்கல...,
Just-ல மிஸ்ஸு..!

Friend : ஏன் என்ன ஆச்சு..?

நான் : அந்த விக்கெட் கீப்பருக்கு
பின்னாடி 4 அடி தள்ளி ஒரு
சின்ன குழி தெரியுதா..?

Friend : ஆமா.., தெரியுது..!

நான் : அந்த குழியை
சரி பண்ணுங்கன்னு.,
நம்ம Principal-கிட்ட
படிச்சி., படிச்சி சொன்னேன்..
மனுஷன் கேக்கலை..!

Friend : அதனால என்ன இப்போ..?

நான் : அதனால என்னவா..?
அந்த குழியாலதான்டா
இங்கே நடக்க இருந்த
இந்தியா - பாகிஸ்தான் Match-ஐ
கல்கத்தாவுக்கு மாத்திட்டாங்க..!!

Friend : ??!!!
.
.

ஹாய் மதன் - ஹாய் வெங்கட்

இதன் மூலம் எல்லார்க்கும்
சொல்லுறது என்னான்னா..,

" ஹாய் மதன் " மாதிரி
" ஹாய் வெங்கட் " - னு
ஒரு பகுதி ஆரம்பிக்கலாம்னு
இருக்கேன்..

அதுக்கு உங்க ஒத்துழைப்பு
தேவை..
கேள்விகள் நீங்க தான்
கேட்கணும்..!

ஒருத்தரே எத்தனை கேள்வி
வேணாலும் கேட்கலாம்..
என்னால பதில் சொல்ல
முடிஞ்சா அத்தனையும்
பதிவுல வரும் (உங்க பெயரோட )

கேள்வி எப்படி இருந்தாலும்.,
பதில் மொக்கயா தான்
இருக்க போவுது..
So., கேள்வியும் மொக்கயா
இருந்தா Better..!

எப்பவும் கேள்வி கேக்கறது Easy.,
பதில் சொல்லுறது தான் கஷ்டம்..,

கேள்விகளை என் E-Mail-க்கு
அனுப்புங்க..,
venkatappan311@gmail.com

பின் குறிப்பு :
குறைஞ்சது 5 கேள்வியாவது
வேணும் இந்த பகுதி Start பண்ண..,
.
.

08 April 2010

யார்ட்லி மேஜிக்..!!?நம்ம Friend-டோட அக்கா London-ல
இருந்து வந்து இருக்காங்க..

நம்ம Friend-க்கு ஒரே ஜாலி.,

ஒரு வாரமா ஐயா
Use பண்றதெல்லாம்
Yardley Soap., Yardley Powder.,
Yardley Perfune தான்..,

நேத்து நாங்க நாலு பேர்
பேசிட்டு இருக்கும் போது
ஐயா வந்தாரு..,

" டேய்.., எங்கிட்ட ஏதாவது
மாற்றம் தெரியுதா..? "

நாங்க அவனை உற்று பார்க்கிறோம்..,

" ஆமான்டா.., சும்மா தகதன்னு
MGR கலர்ல Shining-ஆ இருக்கே.. "

( மற்ற நண்பர்கள் " ஆமாம்னு "
ஜால்ரா போடுறாங்க..! )

" இருக்காதா பின்ன.., ஒரு வாரமா
Yardley Soap போட்டில்ல குளிக்கறேன்.."

" தப்பு மச்சி.. அதுக்கு காரணம்
Yardley Soap இல்ல..! "

" பின்ன..? "

" ஓ.சி சோப்புக்கு ஆசைப்பட்டு ஒரு வாரமா
Regular-ஆ குளிக்கிறயில்ல அதான்..! "

" அட நாய்ங்களா..?!! "

" ஹி., ஹி., ஹி....!! "


பின் குறிப்பு :
Blog-ல் ஏதாவது Informative-ஆ
எழுதுன்னு திட்டிக்கொண்டே
இருக்கும் Jana-வுக்காக..,

இன்று ஒரு தகவல் :
இன்னிக்கு வியாழக்கிழமை
ஏப்ரல் 8-ம் தேதி..!
.
.

06 April 2010

சின்ன மீனு..!!எங்க ஊர்ல திருவிழா..,

ஒரு கடையில்
நானும் என் மனைவியும்..,

" ஏங்க.., 60 ரூபா குடுத்திடுங்க..! "

" என்ன வாங்கின..? "

" பொட்டு வாங்கினேன்..! "

" ஒரு Packet பொட்டு 60 ரூபாயா..? "

" ஒரு Packet இல்லீங்க., ஒரு பொட்டு..! "

" என்னாது.., ஒரு பொட்டா..? உனக்கே
இது ஓவரா தெரியல..? "

" இந்த மாதிரி பொட்டுதாங்க Function-க்கு
போகும் போது வெச்சுக்க முடியும்..,
சேலைக்கு Match-ஆ வெச்சுக்கலாம்.. "

நான் அந்த பொட்டை பார்த்து...

" சரி, இந்த பொட்டு எந்த சேலைக்கு Match..? "

" ஓ.., அது இனிமே தானே எடுக்கணும்..!! "

ஐயோ சாமி.., பொட்டே 60 ரூபான்னா..,
Matching-ஆ சேலை எவ்ளோவுக்கு
எடுப்பாங்களோ..!!!

இதுக்கு பேருதாங்க..

சின்ன மீனை போட்டு.,
திமிங்கலத்தை பிடிக்கறது
( கரையில இருந்துகிட்டே )
.
.

05 April 2010

அனாமிகாவுக்கு ஒரு பேரு வைங்கோ..!!

நம்ம Blog படிக்கிற
எல்லோருக்கும் தெரியும்..
இங்கே ரெண்டு அனாமிகா
இருக்காங்க..

1. அனாமிகா துவாரகன்.,
2. அனாமிகா ( புனை பெயர் )

இவங்க ரெண்டு பேரும்
சிறப்பா, Interesting-ஆ
Comment போடுறவங்க..

ஆனா..,
யார் எந்த Comment
போட்டாங்கன்னு
பல பேருக்கு குழப்பம்.

( சில சமயம் எனக்கே கூட..! )

So.,
இந்த குழப்பத்தை தீர்க்க
நம்ம அனாமிகா..,
அவங்களுக்கு
ஒரு நல்ல பெயரா
Choose பண்ண சொல்லி
நம்ம வாசகர்கள்கிட்ட
கேட்டு இருக்காங்க..

நல்ல பெயரா சொல்றவங்களுக்கு
பரிசு $ 10,000 ( or ) Sweet ( அல்வா )
அனாமிகா கொடுப்பாங்க..!

அதுக்கும் முன்னாடி
இவங்க எழுதின Comments-ஐ
எல்லாம் படிச்சிடுங்க..

அப்பத்தான்
வெறி., வெறியா..
Sorry..,
வெரி Good-ஆ
ஒரு பேரு வெக்க முடியும்..!!

எங்கே ஒரு நல்ல பெயர்
சொல்லுங்க பார்க்கலாம்..!

பின் குறிப்பு :
அனாமிகா..,
நீங்க கில்லாடிங்க..!
எப்படியோ நினைச்சதை
சாதிச்சிட்டீங்க..!

அப்படியே இந்த பதிவுக்கு
வர்ற எல்லா Commets-க்கும்
நீங்களே பதில் போடுங்க..
.
.

04 April 2010

அடக்கி வாசிக்கணும்ல...!!
அப்போ எனக்கு பல்வலி..,
பல் டாக்டர்கிட்ட போனேன்..
டாக்டர் நம்ம சொந்தக்காரர்தான்..

" உனக்கு கடைசில ஒரு கடவாய் பல்லு
Cross-ஆ முளைக்குது.., அதை பிடுங்கணும். "

" வலிக்குமா டாக்டர்..? "

" லைட்டா..!! "

" லைட்டான்னா..? "

" பொறுத்துக்கிற அளவு.."

" வலிச்சா பல்ல கடிச்சிட்டு
பொறுத்துக்கலாம்..- ஆனா
பல்லு புடுங்கும் போதே வலிச்சா
என்ன பண்றது டாக்டர்..? "

"  நீ அடங்கவே மாட்டியா.? பல்லு
புடுங்கும் போது கூட பஞ்ச் டயலாக்கா..?  "

பின்னாடி திரும்பி..,

" நர்ஸ் இவன் ஜாஸ்தி பேசறான்..,
ஒரு ஊசி எடுங்க.. வாயிலயே
போடலாம்..!! "

" அவ்வ்வ்வ்வ்..!!!!"


பின் குறிப்பு :
நேத்து எனக்கு பல் டாக்டரை
ஞாபகப்படுத்திய அனாமிகா துவாரகனுக்கு
இந்த பதிவை Dedicate செய்யறேன்..
.
.

03 April 2010

" அங்காடி தெரு " - என் பார்வையில்..!

ரெண்டு நாள் முன்னாடி
" அங்காடி தெரு " படம்
போயிருந்தேன்..

" வெயில் " படம் குடுத்த
வசந்தபாலனோட படம்..!

கண்ணுக்கு குளுமையான
ஒளிப்பதிவு..,

இதமான பின்னணி இசை..,

" அவள் அப்படி ஒன்றும்
அழகில்லை..! "
எத்தனை முறை கேட்டாலும்
அலுக்காத பாடல்..,

நெத்தியடி வசனங்கள்..,

ஜவுளிகடையில் வேலை
செய்யும் பெண்கள்
"சில அத்துமீறல்களை "
அனுமதித்தால் மட்டுமே
தொடர்ந்து வேலை செய்ய
முடியும்.. - இது போன்ற
" கொடுமையான யதார்த்தங்கள்..! "

அஞ்சலியின் நடிப்பு.,
பாண்டியின் நகைச்சுவை..

அஞ்சலி : மேக்கப் போடாமலே
அழகா இருக்காங்க.,
நல்லா நடிக்கறாங்க..,
Hindi-க்கு Try பண்ணலாம்..
நடிக்க தெரிஞ்ச நடிகைக்கு
இங்கே யார் சான்ஸ் குடுப்பா..?

பாண்டி : " கனா காணும் காலங்கள் "
சீரியல்ல இருந்தே நான்
உங்க Fan..,
நீங்க ஒரு ரவுண்டு
வருவீங்க.., வாழ்த்துக்கள்..!

இப்படி படத்தில் நிறைய
Plus இருந்தாலும்..,
ஏனோ படம் என் மனசுக்கு
ஒட்டலை..

என்னை பொறுத்த வரை
" அங்காடி தெரு "
வெறும்
" சாதாரண தெரு..! "

பின் குறிப்பு :
இன்னிக்கு காலைல
என் மனைவி : ஏங்க..,
ஆனந்த விகடன்ல
" அங்காடி தெருக்கு " 47 மார்க்
குடுத்திருக்காங்க..!!!

எனக்கே ஆச்சரியமா தான்
இருந்தது..,
அட விமர்சனம் நல்லா
இருக்கே.. ( படத்தை விட )
.
.

கவிதை by கண்மணி
என் Friend கண்மணியின்
கவிதைகள் இவை..!

இவை " ஹாய் - ஹைகூ "
பதிவில் Comment Section-ல்
இவர் எழுதி இருக்க
வேண்டியவை..
ரொம்ப கூச்சப்பட்டார்..,

" சரி குடுங்கன்னு "
நான் அதை பிடுங்கி
பதிவாகவே இங்கே
போட்டுட்டேன்..

ஏன்..,
பெண்கள் " காதல் கவிதை "
எழுதக்கூடாதா..???

உன் வீட்டு தஞ்சாவூர்
பொம்மை மட்டும்
தலையை ஆட்டுவதற்கு
பதிலாக கண்ணடிக்கிறதே..!
அதற்கும்
உன் மேல் காதலா...!!

என் வானத்தில்
இரு சந்திரன்
ஒன்று மேலே
மற்றது என்னருகில்...!!

காற்றின் மேல்
எனக்கு தீரா கோபம்..!
ஐந்து அங்குல
இடைவெளியில்
நீ கொடுத்த முத்தத்தை
காற்று எனக்கு வேண்டும்
என்று கவர்ந்து சென்றது..!!

நீ
எனது
நடமாடும் உயிர்..!

ஒரு நாள்
உன்னுடன் பேசுகையில்
நகம் கடித்த போது..,
" நகத்தை கடிக்காதே..! " என்று
சட்., சட்.., என்று
விரலில் அடித்தாய்
அன்றிலிருந்து
இன்று வரை
நகம் கடிக்காமல்
பேசியதில்லை நான்...!!

பின் குறிப்பு :
"இங்கே விளம்பர செய்யாதீர்கள்னு "
ஒரு சுவத்தில எழுதி இருந்திச்சாம்..,
அதை பார்த்த ஒருத்தன்
ஒரு கரிதுண்டை எடுத்து
" சரின்னு " பெருசா
எழுதிட்டு போனானாம்..

அதே மாதிரி நம்மகிட்ட
ரெண்டு Sincere சிகாமணிகள்
இருக்காங்க..,
( ரமேஷ் & ரசிகன் )

நேத்து Leave-ன்னு Notice போட்டா
அதுக்கும் Comment அனுப்பறாங்கப்பா..!
உங்க கடமை உணர்ச்சிக்கு
ஒரு அளவே இல்லையா..??!!
.
.

01 April 2010

அலைபாயுதே - ( Behind the Scene )எனக்கு நிறைய Chat Friends.,
அதுல முக்கியமானவங்க
ரேணுகா From Denmark..

ஒரு தடவை..,

ரேணு : நீங்க எப்படி இருப்பீங்க..?
உங்க Photo ஒன்னு அனுப்புங்க..

நான் : " அலைபாயுதே"-ல மாதவன்
பார்த்திருக்கீங்கல்ல... அவரு
என் சாயல்ல தான் இருப்பாரு..

ரேணு : அப்ப சீக்கிரம் Photo Mail பண்ணுங்க..

Photo பார்த்திட்டு அவங்க அடிச்ச
Comment...

" வெங்கட்.., நீங்க மாதவனை விட அழகா
இருக்கீங்க.., பேசாம அலைபாயுதே-ல
நீங்களே Hero-வா நடிச்சி இருக்கலாம்..! "

இப்பதான் நான் ரொம்ப நாள் கட்டி காத்த
Secret-ஐ சொல்ல போறேன்..

Actually மணிரத்னம் சார் முதல்ல
என்னை தான் அலைபாயுதேல Hero-வா
நடிக்க கூப்பிட்டாரு..,

ஆனா நான் தான் " No " சொல்லிட்டேன்..

அதுக்கு ரெண்டு Reasons..

1. அப்ப எனக்கு MCA Final Exams
இருந்தது...,

2. ஷாலினிக்கு என்னை விட
ரெண்டு வயசு அதிகம்..

பின் குறிப்பு :
என்ன Tension ஆயிட்டீங்களா..?
இன்னிக்கு என்ன தேதி..?!!
.
.