சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

25 December 2010

யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்..!!

மெட்ராஸை சுத்தி பாக்க போறேன்..,
மெரினாவில் வீடு வாங்க போறேன்..

இது தானே ரிப்பன் பில்டிங் பாரு..
இதுக்கு எங்க கட்சி பேர் வைக்க
சொல்ல போறேன்..!!












என்ன பாக்கறீங்க.?!!
பெயர் எல்லாம் மாத்துவாங்களான்னா..?

அதான் முன்னமே ஒரு தடவை
மெட்ராஸை சென்னைன்னு
மாத்துனாங்கல்ல..

அது மாதிரி தான் இதுவும்..

ஏன் முறைக்கிறீங்க..?

அது ஒண்ணும் நான் சொல்லி
மாத்தலை..
( சும்மா., எதுக்கு எடுத்தாலும்
ஒரு அப்பாவியையே
சந்தேகப்பட்டுகிட்டு..!! )

சரி சரி.. மேட்டர்க்கு வர்றேன்..
நம்ம Blog 6 நாள் லீவ்..
( Dec 26 - Dec 31 )

@ VKS.,

நம்ம Blog 6 நாளைக்கு லீவ்..

போயி நல்லா ரெஸ்ட் எடுங்க..
( அடி வாங்கி., வாங்கி Tired-ஆ
இருப்பீங்கல்ல... )

அதை விட்டுட்டு ஆளில்லாத ஏரியான்னு
இங்கே வந்து எதாவது ஆட்டம் போட்டீங்க..
அப்புறம் உங்களை நானே நினைச்சா கூட
காப்பாத்த முடியாது..

Be Careful..!!
.
.

23 December 2010

ஷாக் ட்ரீட்மெண்ட்..!!

















நேத்து காலை : 9.30 AM

அப்ப நான் ரொம்ப Busy-யா
இருந்தேன்..
( ஹி., ஹி.,ஹி.. சாப்பிட்டுட்டு
இருந்தேன்.. )

அப்ப எங்க கடை பையன்
பதட்டமா ஓடி வந்தான்..

" அண்ணே... உங்கள தேடி
போலீஸ் வந்திருக்கு.."

எனக்கு பக்-னு இருந்தது..

( ஆஹா.. நாம தான் யாருக்கும் தெரியற
மாதிரி எந்த தப்பும் பண்ணலையே..?!! )

சரின்னு அவசர அவசரமா சாப்பிட்டுட்டு
கடைக்கு போனா.. அங்கே நாலு
Lady போலீஸ் கடை வாசல்ல
நின்னுட்டு இருந்தாங்க..

( நம்மள தேடி நாலு போலீஸ்..!!
அவ்ளோ பெரிய ரவுடியா நாம..?? )

நான் அவங்க பக்கத்துல போயி..

" ஐயோ.. நான் இல்ல.. நான் இல்ல.."

" இல்ல.. நீயேதான்.., நீயேதான் "

எங்கேயோ கேட்ட குரல்..!!
சொன்னது யார்ரான்னு பாத்தா..
அட என் College Mate ரேணுகா..

" ஹாய்..ரேணு நீயா..? என்ன இவ்ளோ
தூரம்..? "

" உன்னை அரஸ்ட் பண்ணலாம்னு
தான்..!! "

" அரெஸ்டா..? எதுக்கு..? "

" நான் காலேஜ் படிச்சப்ப.. என்னை
நீ கலாட்டா பண்ணுனேயில்ல
அதுக்கு தான்.. "

" என்னது.. காலேஜா..? நான் காலேஜ்ல
படிக்கவே இல்ல.. இந்த கேஸ் செல்லாது.,
செல்லாது..! "

" நீ படிச்சேன்னு நான் சொல்லவே
இல்லயே..!! நான் காலேஜ் படிச்சப்பன்னு
தான் சொன்னேன்.. "

" சரி., சரி... பப்ளிக்.பப்ளிக்.."

Actually அவங்க வந்தது எங்க
கடையில Sarees எடுக்க..

அடுத்த வாரம் எதோ Function வருதாம்..
அதுக்கு ஒரே கலர்ல 40 Sarees கேட்டாங்க..

ஆனா எங்ககிட்ட ஒரே கலர்ல
40 Sarees இல்ல..

" வெங்கட்.. ஒரு Help பண்ண முடியுமா.? "

" என்ன ரேணு.., I.G ஆகணுமா.? நான்
வேணா ஒரு Recommendation Letter தரவா..? "

ரேணு முறைச்சாங்க..

" வேற எதாவது தெரிஞ்ச துணிகடை
இருந்தா காட்டு.. "

சரி வாங்கன்னு நான் முன்னாடி
பைக்ல கிளம்பவும்.. அவங்க நாலு
பேரும் 2 ஸ்கூட்டியில வந்தாங்க..

துணிக்கடைக்கு போற வழியில
தான் என் Friend சுரேஷ் Medical Shop..
கரெக்டா அப்ப சுரேஷூம் வெளியே
நின்னுட்டு இருந்தான்..

அட இவனை கொஞ்சம் கலாய்க்கலாமே..!!

சரின்னு வண்டியை அவன் பக்கத்துல
போயி Slow பண்ணி.. அவனை கை காட்டி..

" மேடம்.. நீங்க தேடிட்டு வந்த
ஆளு இவரு தான்..!! "

" ஓ.. இவர்தானா அது..? நாங்க திரும்பி
வர வரைக்கும் கடையிலயே இருக்கணும்..
உங்ககிட்ட ஒரு Enquiry இருக்கு.. "
இப்படி ரேணு மிரட்டவும்..

சுரேஷ் கொஞ்சம் பயந்துட்டான்..

நான் ரேணுவை பாத்து...

" என்ன மேடம் நீங்க..
சும்மா வளவளன்னு பேசிட்டு இருக்கீங்க..?
வந்தோமா..,'டக்' னு எண்கவுண்டர்
பண்ணுனோமான்னு இல்லாமா..."

சுரேஷ் என்னை பாத்து..

" ஏன்ன்ன்ன்..? எதுக்குடா இந்த கொலைவெறி..?!! "

" வாங்கின பணத்தையும்.,
வாங்கின பல்பையும் எப்பவும்
வட்டியோட திருப்பி குடுத்துதான்
நமக்கு பழக்கம்..!! "

ஹா., ஹா., ஹா..!!
( வில்லன் சிரிப்பு..! )
.
.

19 December 2010

சிம்.., சிம்.., புது சிம்..!!!
















நானும் என் Friend சுரேஷூம்
Videocon Sim வாங்கலாம்னு
Videocon Showroom போனோம்..

Videocon-ல எக்கச்சக்க Offers..

( * Rs 65 RC-க்கு - Rs 105 Talktime..

* Rs 149 RC-க்கு - Daily 30 Mins Free to any Network
+ 30 Mins Free to any Videocon / 30 Days


* Rs 399 RC-க்கு - 3000 Mins Free to any Network
including Landline / 30 Days )

நாங்க ஆளுக்கொரு நம்பர் Choose
பண்ணிட்டோம்..

அங்கே இருந்த பொண்ணு
எங்க நம்பரை Activate பண்ண
இன்னும் 2 மணி நேரம் ஆகும்னு
சொல்லிட்டு எங்க Application-ஐ Fill
பண்ண ஆரம்பிச்சாங்க..

முதல்ல சுரேஷ்க்கு..,
அப்புறம் எனக்கு..

எனக்கு Fill பண்ணும் போது..
Name கேட்டாங்க - சொன்னேன்.
Address கேட்டாங்க - சொன்னேன்.

அப்புறம்..... இன்னொரு கேள்வி
கேட்டாங்க பாருங்க..

" சார் உங்களுக்கு கல்யாணம்
ஆயிடுச்சா..? "

" ஹி., ஹி., ஹி.. ஏங்க என்னை
பாத்தா கல்யாணம் ஆகாத
சின்ன பையன் மாதிரியா தெரியுது..? "

அவங்களும் லைட்டா சிரிச்சிச்சிட்டு..
" Married "-ன்னு டிக் பண்ணிட்டு
அவங்க டேபிள்க்கு போயிட்டாங்க..

எனக்கோ செம சந்தோஷம்..!!

இந்த சந்தோஷத்தை கொண்டாடணுமே..!!

பக்கத்தில நின்னுட்டு இருந்த
சுரேஷை கொஞ்சம் வெறுப்பேத்தினா
என்னன்னு தோணிச்சு..

உடனே அவன் பக்கம் பந்தாவா
திரும்பி.....

" அந்த பொண்ணு என்னை பாத்து
கல்யாணம் ஆயிடுச்சான்னு..? "
கேட்டாங்க கவனிச்சல்ல..

" கவனிச்சேன்., கவனிச்சேன்...!!
உனக்கெல்லாம் எங்கே கல்யாணம்
ஆகப்போகுதுன்னு சந்தேகத்துல
கேட்டாங்களோ என்னவோ..?!! "

" ஏன்டா.. ஏன்ன்ன்ன்ன் இந்த
கொலைவெறி.....??!! "

( கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......)
.
.

15 December 2010

நம்ம வழி.., குறுக்கு வழி..!?!
























அப்போ நான் MCA Final Year ல
Project பண்றதுக்காக சென்னை
போனேன்..

அப்ப சென்னையில எனக்கு
தெரிஞ்சவங்க ரெண்டே பேர்தான்.

ஒண்ணு - ராதிகா ( என் Friend )
இன்னொன்னு - ரஜினிகாந்த் ( சூப்பர்ஸ்டார் )

( என்ன முறைக்கிறீங்க..?
மாதவன்., A.R.ரஹ்மான் எல்லாம்
சென்னை போயி தான் பழக்கம் )

ராதிகா அப்ப " அண்ணா யுனிவர்சிட்டியில "
M.Sc படிச்சிட்டு இருந்தாங்க..
அவங்க செம Brilliant..!!

அண்ணா யுனிவர்சிட்டி - செம Brilliant.,
அப்புறம் எப்படி எனக்கு Friend-ன்னு
தானே யோசிக்கறீங்க..?!!

நாங்க ரெண்டு பேரும் சேலம்ல
ஒரே Computer Centre-ல தான்
V.B Class போனோம்..
அப்ப Friend ஆகிட்டோம்..!!

அப்பல்லாம் Computer Class-ல
அவங்களோட பல Doubts-ஐ
நான் தான் Clear பண்ணியிருக்கேன்..
( உஷ்ஷ்..!! என்ன அங்கே சிரிப்பு சத்தம்..)

" இன்னிக்கு ஏன் V.B Class எடுக்கற
சார் வரலை..? "

" எந்த கடையில Tea நல்லா இருக்கும்..? "

" கீதாலயா தியேட்டர்ல மேட்னி ஷோ.
எத்தனை மணிக்கு போடுவாங்க..? "

இப்படி பல பல Doubts.

ஹி., ஹி., ஹி..!!

நான் சென்னை வந்ததுக்கு அப்புறம்
வாரம் ஒரு தடவை எங்க மேன்சஷன்க்கு
போன் பண்ணி என்கிட்ட பேசுவாங்க..

அப்படித்தான் ஒரு தடவை
அண்ணா யுனிவர்சிட்டியில
எதோ Function-ன்னு Invite பண்ணினாங்க..

ஆனா நான் வரலைன்னு சொல்லிட்டேன்..
( டிக்கெட் விலை 200 ரூபாயாம்ல..!! )

அப்புறம் நீங்க Function-க்கு வந்தா போதும்..
உங்களுக்கு நானே டிக்கெட் எடுத்தர்றேன்னு
சொன்னாங்க.

அப்ப 2 டிக்கெட்டா எடுத்துடுங்கன்னு
சொல்லிட்டேன்.. ( எனக்கு ஒண்ணு ,
என் Friend விஜய்க்கு ஒண்ணு )

நானும் விஜய்யும் ( விஜி )
அங்கே போனா...

" தேவா ஆர்கெஸ்ட்ரா "..,
ஆட்டம் ., பாட்டம்னு Function களைகட்டிச்சு.

Function முடிஞ்சி வரும்போது
என் Friend விஜி..

" நாமளும் நல்லா படிச்சி,
நல்ல மார்க் எடுத்திருக்கலாமோ.. "

" எதுக்கு..? "

" இங்கே சீட் கிடைச்சி இருக்கும்..
நாமளும் இந்த மாதிரி Function-ஐ
எல்லாம் ஜாலியா என்ஜாய் பண்ணி
இருக்கலாம்ல..!! "

நான் அவனை ஒரு லுக் விட்டுட்டு
சொன்னேன்..

" டேய் லூசு..!! அதுக்கு எதுக்குடா
கஷ்டப்பட்டு நல்லா படிக்கணும்..?
நல்லா படிக்கிற புள்ளங்களை
Friend பிடிச்சா போதாதா.?!! "

ஹி., ஹி., ஹி..!!
எப்புடீ..?
.
.

11 December 2010

Mobile-ல தமிழ் Blogs-ஐ படிப்பது எப்படி.?
















இன்னிக்கு எனக்கு
ஒரு ஆச்சரியம்..,
ஒரு அதிர்ச்சி..

மொபைல் மூலமா
தமிழ் Blogs-ஐ எப்படி படிக்கறதுன்னு
பிரபல பதிவர் மங்குனி அமைச்சருக்கு
தெரியல.. - இது எனக்கு ஆச்சரியம்..

ஆனா எப்படி படிக்கணும்னு
பிராப்ள பதிவர் சிரிப்பு போலீஸ்க்கு
தெரிஞ்சி இருக்கு - இது எனக்கு அதிர்ச்சி..

( என்ன கொடுமை இது..?!! )

அதான் இது பத்தி இன்னும் தெரியாத
சில பேருக்காக இந்த Post..

1. முதல்ல GPRS Support பண்ற
Mobile வேணும்..

( * GPRS [ General Packet Radio Service. ] is a
packet oriented mobile data service on the
2G and 3G cellular communication systems )

2. அந்த Mobile-க்கு GPRS Activate பண்ண
Customer Care-க்கு ஒரு Call பண்ணினா
அவங்க GPRS Settings அனுப்பிடுவாங்க..
நீங்க அதை உங்க Mobile-ல Save பண்ணுங்க
போதும்..

3. Mobile Net-க்கு தனி Recharges இருக்கு..
Daily Pack - Rs 5.,
3 Days Pack - Rs 15,
Monthly Pack - Rs 98.. இப்படி..
எது தேவையோ அதை Recharge
பண்ணிக்கோங்க.

4. இப்ப Mobile மூலமா Websites பாக்க
நமக்கு ஒரு நல்ல Browser வேணும்..
அதுக்கு Opera Mini Browser ரொம்பவே Best..

5. ஒருவேளை Opera Mini Browser
உங்க மொபைல்ல இல்லைன்னா..
இங்கே போயி Download பண்ணிக்கோங்க.

நான் Use பண்றது Opera Mini 4.2.

6. Net Connect ஆகும்போது
தமிழ் எழுத்துக்களை படிக்க
Opera Mini Browser open பண்ணி
Address Bar-ல opera:config -ன்னு
டைப் பண்ணி Net Connect பண்ணுங்க.

7. அதுல Use Bitmap Fonts for Complex Scripts- ன்னு
கடைசில ஒண்ணு வரும்.. அதை " YES " -ன்னு
Change பண்ணிடுங்க..

அவ்ளோ தான்.. So Simple..!!

8. இப்ப நீங்க உங்க மொபைல் வழியா
* தமிழ் பதிவு / தமிழ் மெயில் எல்லாம் படிக்கலாம்.,
* Comments படிக்கலாம்.,
* Comments Publish / Reject பண்ணலாம்.,
* எத்தனை Votes வந்திருக்குன்னு பாக்கலாம்.,
* Visiters Stats பாக்கலாம்.

But தமிழ்ல எதுவும் எழுத முடியாது.
English-ல வேணா எழுதிக்கலாம்..

Enjoy Mobile தமிழ் Browsing.....!!

:-)
.
.

09 December 2010

கணக்குல புலி..!!



















நேத்து எங்க பையன் ஸ்கூல்ல
Science Exhibition..

Parents-ஐயும் Invite பண்ணி
இருந்தாங்க..நாங்க போகும்
போது மதியம் 3 மணி ஆகிடுச்சி..

Exhibition-ஐ ஒரு ரவுண்ட்
வரும்போது ஒரு இடத்துல
ஒரு Puzzle வெச்சிருந்தாங்க..


பக்கத்துல ஒரு நோட் இருந்தது..
ஆனா ஒண்ணுமே எழுதாம இருந்தது..
ஓ.. அப்ப யாருமே Prove பண்ண Try
பண்ணல போல..

சரி.. நாம Try பண்ணலாமே...
உடனே என்னோட 7-வது அறிவு
வேலை செய்ய ஆரம்பிச்சது..

ஆமா இதுக்கு எந்த Formula
Suit ஆகும்..?!!

டக்.,டக்.,டக்.,டக்.,டக்.,டக்.,டக்.,டக்.,
( ஹி., ஹி., ஹி.. Mathematics-ல
இருக்கிற எல்லா Formula-வும்
என் Mind-ல ஓடுது..!! )

அந்த நோட்டை எடுத்து
நான் எழுத ஆரம்பிச்சேன்..

Sum : 2 / 10 = 2

2 = T W O , 10 = T E N

So., ( T W O ) / ( T E N ) = ( W O ) / ( E N )
( " T " Cancelled )

According to Alphabetic order

W + O = 23 + 15 = 38

E + N = 5 + 14 = 19

So., 38 / 19 = 2

Hence 2 / 10 = 2 is Proved..

நான் இதை Solve பண்ணினதை
பாத்ததும் அங்கே இருந்த
Maths மிஸ்க்கு ஆனந்த அதிர்ச்சி.

ஓடிவந்து என்கிட்ட ஒரு Autograph
வாங்கிட்டாங்க.

" Great சார்..!! இந்த Sum-ஐ யாராலயும்
Solve பண்ண முடியாதுன்னு நினைச்சிட்டு
இருந்தேன். "

" அதுல ஒரு சின்ன Correction மிஸ்..
' வெங்கட் தவிர வேற யாராலயும்...' "

" உண்மைதான் சார்., காலையில இருந்து
எத்தனையோ பேர் இதை பாத்தாங்க..
ஆனா ஒருத்தரும் Solve பண்ணலை
நீங்க மட்டும் தான் பண்ணியிருக்கீங்க..!! "

" விடுங்க மிஸ்.. இந்த உலகத்துல
ஒரு நியூட்டன்., ஒரு ஐன்ஸ்டீன்.,
ஒரு வெங்கட். "

நான் இந்த Problem-ஐ Solve பண்ணின
மேட்டர் ஸ்கூல் முழுக்க மெதுவா
பரவ ஆரம்பிச்சது..

சரின்னு நாங்க உடனே கிளம்பிட்டோம்..
( ஆட்டோகிராப் வாங்க மக்கள் கூட்டம்
சேர்ந்துட்டா Traffic Jam ஆகிடும்ல.. )

ஆனா நான் அந்த Sum-ஐ Prove
பண்ணினதை என் மனைவியால
நம்பவே முடியல.. வர்ற வழியில
என் மனைவி என்னிடம்.....

" உண்மையை சொல்லுங்க.. அந்த
Sum-ஐ எப்படிங்க Prove பண்ணுனீங்க..?!! "

" ஹி., ஹி., ஹி..!! அந்த Sum பத்தின
SMS எனக்கும் வந்துச்சில்ல..!!! "
.
.

06 December 2010

லைட்டா சிரிங்க - 3























( படித்ததில் பிடித்தது. )

No : 1

நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம
ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No: 2

உன் பேரு என்ன..?

" சௌமியா "

உங்க வீட்ல உன்னை எப்படி
கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 3 ( இண்டெர்வியூ.. )

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா " கோவா "

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 4

( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா
வாங்க கடைக்குச் போறான். )

கடைக்காரர் : சார் உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா...?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல
எங்க அம்மாவா என்னை பீட்ஸா
வாங்க அனுப்புவாங்க...!??

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 5

நடிகர் : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு
மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு
இருக்கேன்..

நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே
அது மக்களுக்கு பண்ற பொதுசேவை
தானே சார்..!!

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *

டிஸ்கி :
லைட்டா சிரிங்க - 1  
லைட்டா சிரிங்க -
.
.

02 December 2010

குரு - சிஷ்யன்..!!

















காலை : 10.மணி
Class : 11th Std

எங்க தமிழ் வாத்தியார் பெயர்
உமாபதி..

நானும்., என் Friend சக்தியும்
அவரை எதாவது எடக்கு., மடக்கா
கேட்டுட்டே இருப்போம். - அது
எங்க பழக்கம்..

அதுக்கு பதில் சொல்ல முடியாம
அவர் முழிப்பாரு - அது
அவர் வழக்கம்..!

அதனால அவருக்கு எங்களை
கண்டா கொ(ல்ல)ள்ள இஷ்டம்..!!

ஒரு நாள் Class-ல சக்தி..

" சார்... இங்கே பாருங்க சார்
கொடுமையை.. "

" என்னடா கொடுமை..? "

" பெரியவுக்கு - சின்ன ' ' வருது சார்.,
சிறியவுக்கு - பெரிய ' ' வருது சார்..
ஏன் சார் அப்படி..? "

" டேய் ஏன்டா படுத்துற..? பேசாம
உக்கார்றா..!! "

உடனே நான் எந்திரிச்சேன்..

" சார் அது கூட பரவாயில்ல.. இதை
பாருங்க சார் அதை விட பெரிய கொடுமை.. "

" நீ என்னடா சொல்ல போற..? "

" ரெண்டுக்கு 3 சுழி ' ண் ' வருது
மூன்றுக்கு 2 சுழி ' ன் ' வருது சார்..
ஏன் சார் அப்படி..? "

இப்படி அவர்கிட்ட நாங்க கேள்வி மேல
கேள்வி கேட்டு எங்க அறிவு தாகத்தை
தீர்த்துப்போம்..

போன வாரம் எங்க உமாபதி சாரை
பஸ் ஸ்டேண்ட்ல பார்த்தேன்..

அட., இவர் இன்னுமா VRS வாங்கிட்டு
கிராமத்துக்கு போயி செட்டில் ஆகலை..?
ரொம்ப தப்பாச்சே..!!

சரின்னு நேரா அவர் முன்னாடி போயி
நின்னேன்.. என்னை பாத்ததும்
ஒரு நிமிஷம் அவர் ஷாக் ஆயிட்டார்..

இந்த Reaction கூட இல்லைன்னா
அவர்கிட்ட நாங்க படிச்சி
என்ன பிரயோஜனம்..?

" சார்.., என்னை தெரியுதா..? "

" ம்ம்.. உன்னை மறக்க முடியுமாடா..? "

( அப்படியே கொஞ்சம் நேரம்
பேசிட்டு இருந்தோம்..)

திடீர்னு அவர் செல்போன் ரிங் அடிச்சது..
எடுத்து பேசினார்.. பேசி முடிச்சதும்..
நான் அவர்கிட்ட..

" சார் எனக்கு ஒரு டவுட்டு..? "

" என்ன..? "

" Sim Card-க்கு தமிழ்ல என்ன சார்..? "

" ?!!?!?!! "
.
.