சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

03 October 2010

அனு பிறந்தநாள் ( ஒரு விளம்பரம் )..!!
இடம் : அனு வீடு

( அனுவும்., அனு கணவரும்..)

அனு : ஏங்க எனக்கு எதாவது போன் வந்ததா..?

கணவர் : ஆமா.., இந்த மாச போன் பில் கட்ட
சொல்லி போன் வந்தது..

அனு : விளையாடாதீங்க.. எனக்கு Birthday Wish
பண்ணி யாராவது போன் பண்ணினாங்களா..?

கணவர் : இப்ப விளையாடறது நானா..? நீயா.?
போன வருஷமே நான் மட்டும் தானே
Birthday Wish பண்ணினேன்..

அனு : அது போன வருஷம்., நான் சொல்றது
இந்த வருஷம்..

கணவர் : ( இந்த பஞ்ச் டயலாக்குக்கு
ஒண்ணும் குறைச்சல் இல்ல..)
இந்த வருஷம் மட்டும் என்ன Special..?

அனு : போன வருஷம் என் Birthday யாருக்கும்
தெரியாது.. அதனால யாரும் Wish பண்ணலை..

கணவர் : இந்த வருஷம் மட்டும் எப்படி தெரியும்..?

அனு : அதான் சொந்த காசை செலவு பண்ணி
ஊர் பூரா எனக்கு Birthday-ன்னு Poster அடிச்சி
ஒட்ட சொல்லி இருக்கேனே..

கணவர் : A/c-ல 20,000 குறையும் போதே
நினைச்சேன்.. இப்படி தான் எதாவது வெட்டி
செலவு ஆயிருக்கும்னு..

அனு : இதெல்லாம் ஒரு விளம்பரம்ங்க..

கணவர் : சரி Poster அடிச்சி ஒட்டினது யாரு..?

அனு : ரசிகன்..

கணவர் : என்ன..? அனு ரசிகனா..?
அது உன்னை புகழ்ந்து Comment போட
நீ Create பண்ணின Fake ID இல்ல..?

அனு : அது வேற.. இவரு ரசிகன்.. VKS Member..
எங்க கட்சியிலயே இவர் தான் புத்திசாலி..

கணவர் : ஓஹோ..?!!

அனு : சரி., சரி., போன் வந்தா
Attend பண்ணுங்க.. இதோ வந்துடறேன்..

( அனு வீட்டிற்கு உள்ளே போகிறார்.. )

அப்போ நான் அனு வீட்டிற்கு போகிறேன்..

கணவர் : வாங்க வெங்கட்.. எப்படி இருக்கீங்க..?

வெங்கட் : Fine.. அனு இருக்காங்களா..?
Birthday Wish பண்ணனும்..

கணவர் : அப்பாடா.. 3 மணி நேரமா
ஒருத்தரும் Wish பண்ணலையேன்னு
பீலிங்ல இருந்தாங்க.. இருங்க கூப்பிடறேன்..

( அனு வருகிறார்.. )

நான் : Happy Birthday-ங்க..

அனு : எதிர்கட்சியா இருந்தாலும்.,
வாழ்த்து சொன்னதுக்கு நன்றி..

நான் : அப்புறம் உங்க Birthday Poster
மாதிரி ஒரு Poster நான் பாத்ததே இல்ல..

அனு : அப்படியா..? அது ரசிகன் Design பண்ணினது..
நானே இன்னும் பார்க்கலை..

நான் : இதோ நானே கையோட ஒண்ணு
கொண்டு வந்து இருக்கேன் பாருங்க..அனு : ஐ...!! சூப்பரா இருக்குல்ல..!!??
.
.

86 Comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

தங்கத் தலைவி,
எங்கள்
சங்கத் தலைவி,
வாழ்க, வாழ்க!
(மேடம், இன்னும் டீ வரல!)

Shalini(Me The First) said...

ஹா ஹா ஹா ஹா ஹா

வாழ்க VKS Members!

ஒரு தலைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி சொந்த செலவில் போஸ்டர் அடிக்கக் கூட தெரியாத VKS வாழ்க வளமுடன்(சொந்தமா சிந்திக்கத்தான் தெரியாதுன்னா செலவழிக்கவுமா?!)
அனு உங்களை போன பதிவில் வாழ்த்திட்டேன் இருந்தாலும் once more சொல்றேன்
May this year be your best ever.

I hope all your birthday dreams and wishes come true.

Not just a year older, but a year better.

Here's to ...

Shalini(Me The First) said...

//தங்கத் தலைவி,
எங்கள்
சங்கத் தலைவி,
வாழ்க, வாழ்க!
(மேடம், இன்னும் டீ வரல!)

//

அட நீங்க வேற, அவங்களே 20,000 போன வருத்தத்துல இருக்காங்களாம், நீங்க வேணா ஒரு பூஸ்ட் வாங்கி அவங்களுக்கு குடுங்க

எஸ்.கே said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ரசிகன் said...

@anu..
ஆல் போல் தழைத்து
அருகு போல் வேரோடி
மூங்கில் போல் சூழ்ந்து
கவலையின்றி கலாய்த்து
முடிவின்றி வாழ வேண்டுகிறேன்...

@venkat
போன பதிவுல போட்ட கமெண்ட்தான் .. இங்க போட்டிருக்க வேண்டியது. அவசரப்பட்டு அங்க போட்டுட்டேன்.. அதனால Repeattuறேன்... காந்தி Birthdayக்கு பதிவு போட்டவரு அனு Birthdayக்கும் போடுவீங்கன்னு யோசிச்சிருக்கனும்..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//A/c-ல 20,000 குறையும் போதே
நினைச்சேன்.. இப்படி தான் எதாவது வெட்டி
செலவு ஆயிருக்கும்னு..
//

போஸ்டருக்கே இருபதாயிரமா? அப்ப இந்த போஸ்டிங்குக்கு எவ்வளவு வாங்கினீங்க, வெங்கட்?

சி.பி.செந்தில்குமார் said...

செம நக்கலான பதிவு வாத்தியாரே,தூள்

ரசிகன் said...

ந‌ல்ல‌ ம‌ன‌சு உள்ள‌ இருந்தா நாம் தான் க‌ட‌வுள்னு க‌ம‌ல் க‌ருத்து சொல்லி இருக்கார்..
நான் க‌ட‌வுள்னு பாலா படமே எடுத்திருக்கார்..
பிறந்த நாளில் கடவுளோட ஆசி வேணும்ல..
அதான் எங்களை நாங்களே வாழ்த்தி சின்னதா ஒரு போஸ்ட‌ர் அடிச்சோம்..
National award இல்லாட்டாலும் ஒரு state or filmfare award கிடைக்காதா என்ன‌..?

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு
//இப்படிக்கு.,
நானே தான் ( அனு )//

ஏங்க இந்த விளம்பரம்??? சரி விடுங்க!!


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் திருமதி.அனு அவர்களே...

TERROR-PANDIYAN(VAS) said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை

//(மேடம், இன்னும் டீ வரல!)//

PSV ஒரு டீக்கு இப்படி உயிர் கொடுத்து கத்தனுமா?? வாங்க நாங்க அதை இலவசமா தருகிறோம்...

TERROR-PANDIYAN(VAS) said...

@Shalini

//once more சொல்றேன்
May this year be your best ever.

I hope all your birthday dreams and wishes come true.

Not just a year older, but a year better.

Here's to ...//

ஷாலினி... என்னாது இது?? அனுவுக்கு இங்கிலிஷ் புரியாது சொல்லி இருக்கோம் இல்ல?? இப்பொ வந்து Wish u the same சொல்லுவாங்க பாருங்க......

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//போன பதிவுல போட்ட கமெண்ட்தான் .. //

அட விடுங்க இதுக்கு எல்லாம் விளக்கம் சொல்லிட்டு.... VKS ல ஒரே கமெண்ட் பத்து பதிவுக்கு போடரது புதுசா?? என்ன்ன்ன மத்தவங்க எல்லாம் ரிப்பீட்ட்ட்ட்ட்டு சொல்லுவாங்க நீங்க காபி & பேஸ்ட் பண்ணி இருக்கிங்க... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//அதான் எங்களை நாங்களே வாழ்த்தி சின்னதா ஒரு போஸ்ட‌ர் அடிச்சோம்..//

உங்க தலைவி சின்னதா அடிக்க சொன்னது வாஸ்தவம் தான் அதுக்காக பிட் நோட்டீஸ் அடிச்சிட்டு தலைவிகிட்ட போஸ்டர் அடிச்சேன் சொல்லி 20,000 கணக்கு காட்டரது ரொம்ப ஓவர்...

GSV said...

@anu,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

Madhavan said...

" இன்று பிறந்தநாள் காணும் அனு.,
பல்லாண்டு., பல்லாண்டு.,
பலகோடி நூறாண்டு வாழ வேண்டும்
என்று 'வாழ்த்திக் கொள்கிறேன்'!!"

இந்தமாதிரி எழுதினதுக்கபுறம் 'கையெழுத்து' தேவையில்லையே...
-------------..
'அனு'வப் பத்தி ஒரு தியரியே இருக்கு.... see the following link....
http://en.wikipedia.org/wiki/Atomic_theory

அருண் பிரசாத் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனு!


இது VAS தலைவர் வெங்கட்டின் திட்டமிட்ட சதி. ரமெஷ்க்கு பிறந்த நாள்னு நாங்க அவருக்கு சொல்லி நல்ல ஒரு பெருமையா பதிவு போட சொன்னோம்....

ஆனா தலைவி பிறந்தநாளை எங்களுக்கு சொல்லி இருந்தா நாங்களும் அவங்கள புகழ்ந்து (?!) ஒரு பதிவு போட்டு இருப்போம்ல...

சரி விடுங்க, ஷாலினி உங்க பிறந்தநாள் என்னைக்குனு சொல்லிட்டு போங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தங்கத் தலைவி,
எங்கள்
சங்கத் தலைவி,
வாழ்க, வாழ்க!

அனு said...

ஆஹா.. நான் வெளியில போய்ட்டு வர்ற சைக்கிள் கேப்-ல என்னைப் பத்தி எதோ பதிவு போட்டிருக்கீங்க போல..
இருங்க படிச்சுட்டு வர்றேண் :)

அனு said...

@all

வாழ்த்து சொன்ன எல்லோருக்கும் நன்றி!!!

இவ்வளவு பேர் என் மேல் வைத்திருக்கும் அன்பை நினைக்கும் போது ஒரே புல்லரிக்குது.. (நல்ல வேளை ஆடு மாடுகள் எதுவும் பக்கத்தில இல்ல..)

Anonymous said...

எதிர்க்கட்சிகள் இல்லாதவிடத்தில் ஆளும் கட்சியினர் ஆட்டம் போடுவர் என பல்லாண்டுகளிற்கு முன்னரே தெரிந்து அருமையாய் பெருமையாய் ஆளுமையாய் ஓருவரை ஈன்று எமக்கு கொடுத்த "அனு"வின் பெற்றோர்க்கு நன்றி.
எதிர்க்கட்சி தலைவியை எதிரியாக கருதாமல் "அனு"வின் பறந்த நாளையொட்டி சிறப்புப்பதிவிட்ட வெங்கட்டிற்கும் நன்றி.

மற்றும் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் "அனு"வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அனு said...

//அது உன்னை புகழ்ந்து Comment போட
நீ Create பண்ணின Fake ID இல்ல..?//

ஓ.. அது வேற யாரோட Fake ID-யா?? இவ்வளவு நாள் நீங்க தான் அதுன்னு நினைச்சுட்டு இருந்தேன்..

கொஞ்சம் விட்டா ரசிகன், அனு ரசிகன், அனு ரசிகன் ரசிகன், ஜனா, மாலா, ஜெகன் எல்லாமே நான் தான்னு சொல்லுவீங்க போல..

//அது ரசிகன் Design பண்ணினது..
நானே இன்னும் பார்க்கலை.//
//இப்படிக்கு.,
நானே தான் ( அனு )//

ஆமாங்க.. எங்க கட்சியில நீ வேற நான் வேறன்னு யாரையும் நினைக்கிறதே இல்ல.. எல்லோரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு.. பாத்து கத்துக்கோங்க..

அனு said...

@ பெ.சொ.வி
//(மேடம், இன்னும் டீ வரல!)//

T

நல்லா பாருங்க.. இப்போ வந்திருச்சு..

அனு said...

@Shalini

//ஒரு தலைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி சொந்த செலவில் போஸ்டர் அடிக்கக் கூட தெரியாத VKS வாழ்க //

எங்க கட்சி அக்கவுண்ட் உங்களை மாதிரி காலியாவா இருக்கு, சொந்த காசை எடுத்து செலவு பண்ண.. World Bank-க்கே கடன் குடுக்குற அளவுக்கு சேர்த்து வச்சிருக்கோம்ல.. அதுல இருந்து செலவு பண்ணினோம்..

//Not just a year older, but a year better//

நானே ஒரு வயசு கூடுதேன்னு ஃபீலிங்க்ஸ்ல இருக்கேன்.. நீங்க வேற நியாபக படுத்துறீங்களா? VAS-னு prove பண்ணிட்டீங்க.. :-P

அனு said...

@எஸ்.கே

ரொம்ப தாங்க்ஸ்-ங்க..

ஹாலி பாலி சைட்-ல இருந்த உங்க லிங்க் வந்து பாத்ததிலிருந்து உங்க பதிவுகளை தொடர்ந்து ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்.. உங்க பதிவைப் பாத்ததில இருந்து தான் எனக்கு ஃப்ளாஷ் மேல ஆர்வம் வந்திருக்கு.. நன்றி.

அனு said...

@ரசிகன்

நானும் போன பதிவுலயே பதில் போட்டேன்.. அதை வெங்கட் கலாய்ச்சுட்டார்.. அதுக்கான பதிலை இங்க போட்டுட்றேன்..

போன ஜன்மத்தில நீங்க ஒரு பெரிய புலவரா இருந்திருப்பீங்க.. அதனால தான் இந்த ஜன்மத்தில இவ்வளவு நல்ல கவிஞரா இருக்கீங்க-ன்னு சொல்ல வந்தேன் :)

அனு said...

@பெ.சொ.வி
//போஸ்டிங்குக்கு எவ்வளவு வாங்கினீங்க, வெங்கட்?//

இன்னைக்கு நம்ம கட்சி அக்கவுண்ட்ல 50000/- அதிகமாகியிருக்கே, கவனிக்கலயா?? வெங்கட் தான் அதைக் கொடுத்தார்..

என் பெயரை யூஸ் பண்ணி அவரோட ப்ளாக்-கை விளம்பர படுத்துவதற்காக..

அனு said...

@சி.பி.செந்தில்குமார்
//செம நக்கலான பதிவு //

அப்படியே எனக்கும் விஷ் பண்ணியிருந்தா நல்லாயிருக்கும்..

ஹீரோவை விட்டுட்டு வில்லனுக்கு வாழ்த்து சொல்லிட்டு போறீங்களே...

அனு said...

@ரசிகன்

//அதான் எங்களை நாங்களே வாழ்த்தி சின்னதா ஒரு போஸ்ட‌ர் அடிச்சோம்..//

நண்பேன்டா!!

அனு said...

@Terror

//ஏங்க இந்த விளம்பரம்???//

நன்றி டெரர்.. தலைவர்னாலும் இப்படி தட்டிக் கேக்குறிங்க பாருங்க.. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

//வாங்க நாங்க அதை இலவசமா தருகிறோம்//

அது சரி.. உங்களுக்கு தானே எங்க எது இலவசமா கிடைக்கும்னு தெரியும்.. நாங்கல்லாம் சொந்த காசு செலவு பண்ணி சாப்பிடுறவங்க..

//அனுவுக்கு இங்கிலிஷ் புரியாது சொல்லி இருக்கோம் //

ஆமாங்க.. உங்க இங்கிலிஷ் எனக்கு மட்டுமில்ல, இந்த உலகத்திலயே உங்களைத் தவிர யாருக்காவது புரிஞ்சிருக்கா?? எலியோட Pant தான் elephant-டான்னு கேட்ட ஆளு தானே நீங்க..

அனு said...

@டெரர் again

//நீங்க காபி & பேஸ்ட் பண்ணி இருக்கிங்க//

நாங்க இன்னைக்கு ஒரு வார்த்தை நாளைக்கு ஒரு வார்த்தை பேசுறது இல்ல.. எப்பவுமே ஒரே வார்த்தை தான்..

// பிட் நோட்டீஸ் அடிச்சிட்டு தலைவிகிட்ட போஸ்டர் அடிச்சேன் சொல்லி 20,000 கணக்கு காட்டரது ரொம்ப ஓவர்//

Robot மாதிரி ஒரே நேரத்தில உலகம் முழுக்க ரிலீஸ் பண்ண வேணாமா..அதான் Just ஒரு 20000 டாலர்ஸ் செலவு பண்ண வேண்டியதா போச்சு..

அனு said...

@GSV

நன்றிங்க.. நீங்களும் நம்மளை மாதிரி தான் போல.. கமெண்ட் மட்டும் போடுறத சொன்னேன்..

ஓ.. ஊரும் நம்ம பக்கம் தானா.. :)

அனு said...

@Madhavan

//இந்தமாதிரி எழுதினதுக்கபுறம் 'கையெழுத்து' தேவையில்லையே//

அதனால தாங்க கையெழுத்து போடல.. வெறுமனே பேரு மட்டும் போட்டோம் :) :)

//'அனு'வப் பத்தி ஒரு தியரியே இருக்கு.... see the following link....//

முதல் முறையா ஆனைக்கும் அடி சறுக்கியிருக்கு.. அது 'அணு'வை பற்றிய தியரி.. 'அனு'வைப் பற்றிய details இங்க கிடைக்கும் :-P

அனு said...

@அருண் பிரசாத்

நன்றிங்க அருண்..

//ஆனா தலைவி பிறந்தநாளை எங்களுக்கு சொல்லி இருந்தா நாங்களும் அவங்கள புகழ்ந்து (?!) ஒரு பதிவு போட்டு இருப்போம்ல...//

ஹிஹி.. தன் ப்ளாக்-க்கு மட்டுமே விளம்பரம் கிடைக்கனும்னு ஆசைப்பட்டு மறைச்சுட்டாரு போல ;)

நல்ல வேளை, ஒரு Biodataல இருந்து தப்பிச்சிட்டேன் :)

(@Arun: Actually,இன்னைக்கு காலைல நான் போட்ட கமெண்ட் வச்சு தான் அவருக்கே தெரிஞ்சிருக்கும்..
@Venkat: Facebook FV விளையாடுறதுக்கு மட்டும் இல்ல :) )

அனு said...

@ரமேஷ்

//சங்கத் தலைவி,
வாழ்க, வாழ்க!//

நன்றி ரமேஷ்..

கல்லாவுல 1000 குறையுதுன்னு சொன்னாங்களே.. அது இது தானா?

அனு said...

@Barathy

நன்றிங்க..

//ஆளுமையாய் ஓருவரை ஈன்று எமக்கு கொடுத்த "அனு"வின் பெற்றோர்க்கு நன்றி//

இந்த திருக்குறளை எல்லாம் என்னை நினைத்து தான் திருவள்ளுவர் எழுதியிருப்பாரோ?? ஹிஹி.. #டவுட்டு

"மகன(ள்) தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்(ள்) தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்"

"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை(ள)ச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"

Madhavan said...

//@ பெ.சொ.வி
//(மேடம், இன்னும் டீ வரல!)//

T

நல்லா பாருங்க.. இப்போ வந்திருச்சு..//

I object this same side "GOAL"..

வெங்கட் said...

@ அனு.,

என்ன எல்லோருக்கும் Thanks சொல்லியாச்சா..?!!

உங்களுக்கு இன்னிக்கு Birthday..
So., உங்களை நான் கலாய்க்கறதா இல்ல..

இன்னிக்கு ஒரு நாளைக்கு
சந்தோஷமா இருங்க..
போங்க.. போங்க..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// காந்தி Birthdayக்கு பதிவு போட்டவரு
அனு Birthdayக்கும் போடுவீங்கன்னு
யோசிச்சிருக்கனும்.. //

நான் எங்கேங்க பதிவு போட்டேன்..
பதிவு போட வைக்கப்பட்டேன்..

அப்படியே போன பதிவுல
அனு எழுதிய Comment-ஐ
ஒரு லுக் விடுங்க..

// அனு said...

Grandpa-க்கு Belated B'day wish சொன்னீங்களே..
உங்க தலைவிக்கு B'day Wish சொன்னீங்களா??
இப்படிக்கு,
வலிய போய் வாழ்த்துக்கள் வாங்குவோர் சங்கம்.. //

அதே மாதிரி
கெஞ்சி கேட்டு பதிவு போட வைப்போர் சங்கம்னு
ஒண்ணு இருக்கு.. தெரிஞ்சிக்கோங்க..

TERROR-PANDIYAN(VAS) said...

@ Barathy
//எதிர்க்கட்சிகள் இல்லாதவிடத்தில் ஆளும் கட்சியினர் ஆட்டம் போடுவர் என பல்லாண்டுகளிற்கு முன்னரே தெரிந்து அருமையாய் பெருமையாய் ஆளுமையாய் ஓருவரை ஈன்று எமக்கு கொடுத்த "அனு"வின் பெற்றோர்க்கு நன்றி//

ரைட்டு பாரதி!! தண்ணி குடிச்சிட்டு போய் லைன்ல நில்லுங்க... ஏற்க்கனவே ரமேஷ், அருண், பெ.சொ.வி, ரசிகன் எல்லாம் நிக்கறாங்க பாருங்க... எதுக்கா?? அதான்பா அனு டீ வாங்கி தராங்கலாம். அனுவா?? அவங்க வெங்கட்கிட்ட டீ காசு கடன் வங்க போய் இருக்காங்க... :))

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// போஸ்டருக்கே இருபதாயிரமா?
அப்ப இந்த போஸ்டிங்குக்கு எவ்வளவு
வாங்கினீங்க, வெங்கட்? //

காசெல்லாம் வாங்கலை..

இது தான் கடைசி.. இனிமே.
" என் Birthday-க்கு ஒரு Posting போடுங்கன்னு "
என்னை கெஞ்சி., கெஞ்சி டார்ச்சர் பண்ற
வேலையெல்லாம் வெச்சிக்க கூடாதுன்னு
ஒரு சத்தியம் மட்டும் வாங்கினேன்..

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு
//ஆமாங்க.. எங்க கட்சியில நீ வேற நான் வேறன்னு யாரையும் நினைக்கிறதே இல்ல.. எல்லோரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு.. பாத்து கத்துக்கோங்க..//

இந்த விஷயத்துல எல்லாம் ஒத்துமையா தான் இருக்கிங்க. ஆன ஒரு டீ ஆர்டர் பண்ணிட்டு ஐந்து பேரும் அடிச்சிகிறிங்க. VKS ஆபிஸ்ல டீ கொடுக்கற பையன் சொன்னான். அதுக்கு வேற இன்னும் காசு கொடுக்கலையாம் இல்ல...

TERROR-PANDIYAN(VAS) said...

@பெ.சொ.வி

//T

நல்லா பாருங்க.. இப்போ வந்திருச்சு..//

அப்பவே சொன்னேன் உங்க தலைவி கிட்ட காசு இல்லைனு கேட்டிங்கள? இப்பொ பாருங்க எப்படி சமாளிக்கறாங்க...

அனு said...

@Madhavan

//I object this same side "GOAL"//

எங்களுக்கு தெரியாம பெ.சொ.வி கட்சி ஆரம்பிச்சிட்டாரோ??

Actually, நானும் பெ.சொ.வி மாதிரியே யோசிச்சு பார்த்தேன்.. அதோட எஃபெக்ட் தான் அது..

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//போன ஜன்மத்தில நீங்க ஒரு பெரிய புலவரா இருந்திருப்பீங்க.. அதனால தான் இந்த ஜன்மத்தில இவ்வளவு நல்ல கவிஞரா இருக்கீங்க-ன்னு சொல்ல வந்தேன் :)//

என்னனனனாது கவிதையா?? தல நான் கிளம்பறேன். கவிதை சொல்லி அவரு கலாய்ச்சி இருக்காரு அதுக்கு இவங்க நன்றி சொல்ராங்க. மேடம் நீங்க ஆலமரம் மாதிரி குண்டா, அருகம்புல் மாதிரி இடத்த அடச்சிட்டு, மூங்கில் மாதிரி ஒசரமா இருக்கிங்களாம்...

அனு said...

@Venkat

//உங்களை நான் கலாய்க்கறதா இல்ல..//

//அதே மாதிரி கெஞ்சி கேட்டு பதிவு போட வைப்போர் சங்கம்னு ஒண்ணு இருக்கு//

நீங்க எவ்வளவு நல்லவரு...

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//என் பெயரை யூஸ் பண்ணி அவரோட ப்ளாக்-கை விளம்பர படுத்துவதற்காக..//

ஆமாம். போனா போகட்டும் சொல்லி உங்களுக்கு பதிவு போட்ட... அதுக்கு Google எங்களுக்கு அபராதம் போட்டாங்க. அதை கட்டிடுங்க சொல்லி கொடுத்த காசு அது.

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு
//தலைவர்னாலும் இப்படி தட்டிக் கேக்குறிங்க பாருங்க.. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு//

ஆமாம் தல நமக்கு எதுக்கு இந்த விளம்பரம்? கேட்டா இது ப்ளாக் வர கூட்டத்த குறைக்க போட்ட விளம்பரம் சொல்ரிங்க...

அனு said...

@டெரர்

//ஆன ஒரு டீ ஆர்டர் பண்ணிட்டு ஐந்து பேரும் அடிச்சிகிறிங்க//

//VKS ஆபிஸ்ல டீ கொடுக்கற பையன் சொன்னான்//

ஒரு டீ வேணும்னா கேக்க வேண்டியது தானே.. எதுக்கு இப்படி சுத்தி வளைச்சு அதுலயே வந்து நிக்குறீங்க..

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//அது சரி.. உங்களுக்கு தானே எங்க எது இலவசமா கிடைக்கும்னு தெரியும்.. நாங்கல்லாம் சொந்த காசு செலவு பண்ணி சாப்பிடுறவங்க..//

சொல்றிங்கலே தவற பார்ஸ் வெளியவே எடுக்க மாட்டறிங்களே... அங்க பாருங்க ரமேசு நீங்க டீ வாங்கி கொடுப்பிங்க சொல்லி நம்பி..... காலை இருந்து கத்தி மயக்கமே போட்டு விழுந்துடாரு...

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//ஆமாங்க.. உங்க இங்கிலிஷ் எனக்கு மட்டுமில்ல, இந்த உலகத்திலயே உங்களைத் தவிர யாருக்காவது புரிஞ்சிருக்கா?? எலியோட Pant தான் elephant-டான்னு கேட்ட ஆளு தானே நீங்க..//

ஓ!!! அப்பொ பக்கத்து பொஞ்சில இருந்து எழுந்து டீச்ச்ர் டீச்ச்ர் Big Elephant சொன்ன பெருச்சாளி போடற Phant ரைட்டா டீச்சர் கேட்டது நீங்க தான?

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//நாங்க இன்னைக்கு ஒரு வார்த்தை நாளைக்கு ஒரு வார்த்தை பேசுறது இல்ல.. எப்பவுமே ஒரே வார்த்தை தான்..//

அதுக்காக பொங்கல், தீபாவளி, கார்த்திகை எந்த பண்டிகை வந்தாலும் உங்க VKSல Happy Birth Day சொல்றது ரொம்ப ஓவர்....

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//"மகன(ள்) தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்(ள்) தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்"

"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை(ள)ச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"//

டீச்சர் : திருக்குறள் மொத்தம் எத்தனை?

ரமேஷ் : 1330 டீச்சர்

டீச்ச்ர் : உனக்கு எத்தனை வாட்டி சொன்னாலும் புரியாதா?? 3 வருஷமா LKGல படிக்கிற அனு இரண்டு திருக்குறள் Misuse பண்ணிட்டாங்க. அதனால திருவள்ளுவர் அதை Delete பண்ணிட்டு புது சி.டி அனுப்பி இருக்காரு. இனி 1328 தான். புரிஞ்சிதா??

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//ஒரு டீ வேணும்னா கேக்க வேண்டியது தானே.. எதுக்கு இப்படி சுத்தி வளைச்சு அதுலயே வந்து நிக்குறீங்க..//

ஆமாம் உயிர் போக கத்திட்டு டீ கேக்கற உங்க கட்சி ஆளுக்கே T அப்படினு பல்பு தறிங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

அட!!!! பிறந்த நாள் முடிஞ்சி போச்சா?? இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!

(இது அடுத்த வருஷம் கலாய்க்க அட்வான்ஸ்... :)) )

வெங்கட் said...

@ அனு.,

// நீங்க எவ்வளவு நல்லவரு...//

ஹி., ஹி., ஹி..!!

நான் மட்டும் தான் உங்களை
கலாய்க்க மாட்டேன்னு சொன்னேன்..
VAS Members-ஐ கலாய்க்க
மாட்டாங்கன்னு சொல்லலியே..!!

GSV said...

எங்கள் தலைவியின் பிறந்த நாளை 15 நாட்கள் கொண்டாட திட்டமிட்டு நேற்று இரவு முதல் கொண்டாடிக்கொண்டு இருக்கும் டெல்லி அரசுக்கு எங்களது மனம் மகிழ்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இவன்
VKS

வெங்கட் said...

@ GSV.,

// எங்கள் தலைவியின் பிறந்த நாளை 15 நாட்கள்
கொண்டாட திட்டமிட்டு நேற்று இரவு முதல்
கொண்டாடிக்கொண்டு இருக்கும் டெல்லி அரசுக்கு
எங்களது மனம் மகிழ்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். //

ஓ.. அதானா மேட்டரு..?!!
இப்ப தான் புரியுது..

Foreign Players எல்லாம் ஏன்
போட்டியே வேணாம்னு ஓடறாங்கன்னு..

உள்நாட்டு., வெளிநாட்டு Media காரங்க
எல்லாம் ஏன் இதை பத்தி இப்படி
கிழி., கிழின்னு கிழிக்கறாங்கன்னு...

வெங்கட் said...

@ ரசிகன்.,

// ந‌ல்ல‌ ம‌ன‌சு உள்ள‌ இருந்தா
நாம் தான் க‌ட‌வுள்னு க‌ம‌ல்
க‌ருத்து சொல்லி இருக்கார்.. //

பொதுவா கமல் பேசினாலே புரியாது..
இதுல கருத்து வேறயா..?!!

// நான் க‌ட‌வுள்னு பாலா படமே எடுத்திருக்கார்.. //

சுத்தம்.. இதுக்கு கமல் சொன்ன கருத்தே
எனக்கு நல்லா புரியும்..!!

// பிறந்த நாளில் கடவுளோட ஆசி வேணும்ல..
அதான் எங்களை நாங்களே வாழ்த்தி சின்னதா
ஒரு போஸ்ட‌ர் அடிச்சோம்..
National award இல்லாட்டாலும் ஒரு
state or filmfare award கிடைக்காதா என்ன‌..? //

உஸ்ஸப்பா.. இப்ப எனக்கு பாலா படமே
நல்லா புரியும்..!!

வெங்கட் said...

@ அனு.,

உங்களை பத்தி எப்ப Posting போட்டாலும்..,
ஏழு Fake ID-ல இருந்து ஓட்டு போடுவீங்களே..
எங்கே இந்த தடவை காணோம்..?!!

Shalini(Me The First) said...

@டெரர்
//
ஷாலினி... என்னாது இது?? அனுவுக்கு இங்கிலிஷ் புரியாது சொல்லி இருக்கோம் இல்ல?? இப்பொ வந்து Wish u the same சொல்லுவாங்க பாருங்க..//
அட ஆமாம் சீனியர், நானும் என்னாடா இது சம்பந்தமே இல்லாம மெயில் அனுப்பியிருக்காங்களேன்னு யோசிச்சேன்


@அனு
/எங்க கட்சி அக்கவுண்ட் உங்களை மாதிரி காலியாவா இருக்கு, ..//

அள்ளி அள்ளி கொடுக்குற அக்கவுண்ட் அப்படி தான் இருக்கும்


@அருண்
/ஆனா தலைவி பிறந்தநாளை எங்களுக்கு சொல்லி இருந்தா நாங்களும் அவங்கள புகழ்ந்து (?!) ஒரு பதிவு போட்டு இருப்போம்ல...
//
தலைவி பிறந்த நாள் கூட தெரியாத தொண்டேன்டா!

//சரி விடுங்க, ஷாலினி உங்க பிறந்தநாள் என்னைக்குனு சொல்லிட்டு போங்க//
ஏன் கேக் வாங்கி அனுப்புரீங்களா?

Sen22 said...

Belated Happy birthday wishes to Anu....

ப.செல்வக்குமார் said...

அனு அக்காவிற்கு என் வாழ்த்துக்கள்.!
உங்கள் கனவுகளும் இலட்சியங்களும் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்.!

ப.செல்வக்குமார் said...

நீங்க எதிர்க்கட்சியா இருந்தாலும் நாங்க வாழ்த்து சொல்லுவோம்..!
ஏன்னா VAS அப்படின்னாவே நல்லவங்க அப்படின்னு அர்த்தம்..!

ப.செல்வக்குமார் said...

/// GSV said...
எங்கள் தலைவியின் பிறந்த நாளை 15 நாட்கள் கொண்டாட திட்டமிட்டு நேற்று இரவு முதல் கொண்டாடிக்கொண்டு இருக்கும் டெல்லி அரசுக்கு எங்களது மனம் மகிழ்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இவன்
VKS //

அட கொடுமையே ..? காமன்வெல்த் கேம்ஸ் பத்தி கூட தெரியாம இருக்கீங்களே ..? எப்படித்தான் கட்சி நடத்தப் போறீங்களோ ..?!?

வெங்கட் said...

@ அனு.,

// உங்களை பத்தி எப்ப Posting போட்டாலும்..,
ஏழு Fake ID-ல இருந்து ஓட்டு போடுவீங்களே..
எங்கே இந்த தடவை காணோம்..?!! //

1., 2., 3., 4., 5., 6..
ஒண்ணு குறையுதே..

ஆங்.. வந்துடுச்சு.. Vote Number 7..

நீங்க கணக்குல கில்லாடிங்க..

அனு said...

@வெங்கட்

//ஆங்.. வந்துடுச்சு.. Vote Number 7..
நீங்க கணக்குல கில்லாடிங்க//

நல்லா பாருங்க.. இப்போ 8 தெரியும் :)

அனு said...

@GSV

//இரவு முதல் கொண்டாடிக்கொண்டு இருக்கும் டெல்லி அரசுக்கு எங்களது மனம் மகிழ்ந்த நன்றி//

ஓ..என் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுக்க போற்ம்னு சொன்னீங்களே.. அது இது தானா.. ரொம்ப நன்றிங்க..

அனு said...

@Sen22

Thanks a ton-nga..

அனு said...

@ப.செல்வக்குமார்

//அனு அக்காவிற்கு என் வாழ்த்துக்கள்.!//

ரொம்ப நன்றி தம்பி..

//நீங்க எதிர்க்கட்சியா இருந்தாலும் நாங்க வாழ்த்து சொல்லுவோம்..!//

அப்போ தானே கட்சி மாறும் போது வசதியா இருக்கும்..

//காமன்வெல்த் கேம்ஸ் பத்தி கூட தெரியாம இருக்கீங்களே ..//

காம்ன்வெல்த் கேம்ஸ்-ஸே என் பிறந்த நாளை சிறப்பிக்க தான் வச்சாங்க. இந்த GK கூடத் தெரியாம எப்படி தான் இந்த நாட்டில இருக்கீங்களோ..

அனு said...

@டெரர்

நிஜமாவே சொல்றேங்க.. நீங்க கும்மில PhD வாங்கலாம்.. ராத்திரி ஒரு மணிக்கு பேய் கூட தூங்கிட்டு இருக்கும்.. அந்த டைம்லயும் அசராம கும்மி அடிக்குறீங்க பாருங்க. நீங்க ரியலி க்ரேட்-ங்க..

GSV said...

"CWG" எங்கள் தலைவியின் பிறந்தநாளை முனிட்டு "VKS" நடத்தும் விளையாட்டு போட்டிகள் என்பதை கூட தெரியாமல் கட்சி னதும் "VAS" சை பார்த்து பாவமாக இருக்குறது எங்கலுக்கு....

GSV said...

//Foreign Players எல்லாம் ஏன்
போட்டியே வேணாம்னு ஓடறாங்கன்னு..

உள்நாட்டு., வெளிநாட்டு Media காரங்க
எல்லாம் ஏன் இதை பத்தி இப்படி
கிழி., கிழின்னு கிழிக்கறாங்கன்னு.//


இவை அனைத்தும் "VAS " சதி வேலைதான் என தெரிந்தும் .... தலைவியின் கட்டளையின் பேரில் அமைதி காது வந்தோம் ஹா ஹா ஹா ஹா ஹா ....

வெங்கட் said...

@ GSV.,

// "CWG" எங்கள் தலைவியின் பிறந்தநாளை
முனிட்டு "VKS" நடத்தும் விளையாட்டு போட்டிகள்
என்பதை கூட தெரியாமல் //

ஹி., ஹி., ஹி..!!

இதுக்கு பேரு தான் வஞ்சப் புகழ்ச்சி..

இனிமே CWG-க்காக யாரும்
கல்மாடியை திட்ட வேணாம்..
அனுவையே திட்டலாம்னு
சொல்ல வர்றீங்க..

ஓ.கே. ரைட்டு..

வெங்கட் said...

@ அனு.,

// காம்ன்வெல்த் கேம்ஸ்-ஸே என் பிறந்த நாளை
சிறப்பிக்க தான் வச்சாங்க. //

உங்ககிட்ட எனக்கு பிடிச்சதே இது தான்..

ஒரே வரியில காம்ன்வெல்த் கேம்ஸை
கேவலப்படுத்துனீங்க பாருங்க.. சூப்பர்ங்க..

வெங்கட் said...

@ அனு.,

// நிஜமாவே சொல்றேங்க.. நீங்க கும்மில PhD வாங்கலாம்..
நீங்க ரியலி க்ரேட்-ங்க.. //

ம்ம்.. அப்படித்தான் பாராட்டணும்..
அப்போ தானே VKS-ஐ கலைச்சிட்டு
எங்க கட்சியில ஐக்கியம் ஆகும்போது
வசதியா இருக்கும்..!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// அருண் Said..,
சரி விடுங்க, ஷாலினி உங்க பிறந்தநாள்
என்னைக்குனு சொல்லிட்டு போங்க //

// ஏன் கேக் வாங்கி அனுப்புரீங்களா? //

கேக்கா..? இவரா..?
காமெடி பண்ணாதீங்க..

ஏற்கனவே தலைவி பிறந்தநாளுக்கு
உண்டியல் குலுக்கி., வசூலான
72 ரூபாயையும் தூக்கிட்டு
அப்படியே " எஸ் " ஆனவரு இவரு..

இவராவது கேக் வாங்கி தர்றதாவது..?!!

ஏன் Mr.Arun.,

வருஷத்துல ஒரு நாள் உண்டியல்
குலுக்குனா போதாதா..?

சௌந்தர் said...

அனு : ஐ...!! சூப்பரா இருக்குல்ல..!!??////

அட நான் பொய் சொல்ல மாட்டேன் சரி இன்னைக்கு ஒரு நாள் சொல்றேன் ஆமா ஆமா

letter said...

hii anu
belated b'day wishes...
u r so swt anu chance less!!

may god shower his blessings to u, ur family and VKS too ;-)

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

rotfl venkat
wt a comedy sense u have man?
so swt of u .....
unga wife romba paavam!!
epdi samalikiraangalo ;-)

hav a gud day guys

வெங்கட் said...

@ letter.,

// hii anu
belated b'day wishes...
u r so swt anu chance less!!
may god shower his blessings to u,
ur family and VKS too ;-) //

கொஞ்சம் Wait பன்ணுங்க..
அனு எங்கே இருந்தாலும் ஓடி
வந்து Thanks சொல்லிடுவாங்க..

ரெண்டு நாளா இது தானே
அவங்க வேலையே..

இடம் : அனு Office..

( அனுவும்., அவங்க Boss-ம் )

அனு : Thanks Sir..

பாஸ் : எதுக்கும்மா Thanks..

அனு : எனக்கு Birthday Wish பண்ணினதுக்கு

பாஸ் : நான் எங்கேம்மா Wish பண்ணினேன்..

அனு : ஓ.. நீங்க இன்னும் Wish பண்ணலையா..?
சரி சார் அதை Advance Thanks-ஆ வெச்சுக்கோங்க..!!

பாஸ் : ??!!!?!!?!

வெங்கட் said...

@ letter.,

Lekha.. என்ன பெயரை மாத்திடீங்களா..?!!

// rotfl venkat
wt a comedy sense u have man?
so swt of u .....
unga wife romba paavam!!
epdi samalikiraangalo ;-) //

முடிவா என்னை பத்தி
என்ன சொல்ல வர்றீங்க..?

நான் Good Boy-ஆ..?
Very Very Good Boy-ஆ..??!

அனு said...

@சௌந்தர்

//அட நான் பொய் சொல்ல மாட்டேன் சரி இன்னைக்கு ஒரு நாள் சொல்றேன் ஆமா ஆமா
//

பாருங்க.. வெங்கட் உங்களைக் கூட பொய் சொல்ல வச்சுட்டாரு..

அனு said...

@letter

//hii anu
belated b'day wishes...//

Thanks a lot, letter (எங்க இருந்து தான் இந்த மாதிரி பேர் எல்லாம் பிடிக்குறாங்களோ!!)

//u r so swt anu chance less!!//
ரெண்டு நாளா எங்க வீட்டுல எறும்புத் தொல்லை தாங்கல.. இது தான் மேட்டரா??

பி.கு:
உங்களைப் பாத்தா ஏற்கனவே அறிமுகமான ஆள் மாதிரி தெரியுதே!! அவங்க தானே நீங்க??

அனு said...

@வெங்கட்
//அனு எங்கே இருந்தாலும் ஓடி
வந்து Thanks சொல்லிடுவாங்க.//

அதெல்லாம் basic courtesy. உங்களுக்கு எங்க தெரியப் போகுது...

சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க.. என்னோட பேரை வச்சே எவ்வளவு தான் விளம்பரம் பண்ணுவீங்க??

lekha said...

venkat ;-)
ha ha ha u hav got gud brain and gud memory too (applause to u) !!!

wt i m trying to say is u r so mischievous (arent u?) he he

##########

hi anuuu
adhu naaneeee :-)
ya anu its one of my nick
eppudiiiiiii?? ;-)

Anonymous said...

@ Lekha
ஏன் நீங்க போஸ்ட் வுமானாவா வேலை செய்கிறீர்கள்??

lekha said...

bharathy
enna idhu? asingama illaiya akka ku, raskal?
enna idhu chinna pulla thanama?

he he dont get angry adhu chumma lullulai ku ;-)

tats t meaning of my name !!