சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

31 May 2010

நாங்களும் Book படிப்போம்ல..!!















நான் இன்னிக்கு ஒரு
Book Review எழுத போறேன்.
அதுவும் ஒரு English Book..

என்ன கொடுமை சரவணா இது..?

பயப்படாதீங்க...,
Dictionary பக்கத்தில வெச்சிட்டு
அப்படியே மெதுவா எழுத்து
கூட்டி தான் படிச்சேன்..

" Freedom " by Renu Sharma
( Ratna Sagar Publications )

இந்த Book-ஐ பார்த்தவுடனே
படிக்கணும்னு தோணும்..
காரணம் அட்டையில இருக்கிற
அந்த குழந்தை படம்..

ஆஹா.. என்ன அழகு..!!

இந்த Book-ல மொத்தம்
8 Short Stories..

முதல் கதை :
ஒரு டீச்சர், ஆறு Students-ஐ
சுத்தி நடக்குது..

யாருக்குமே அடங்காம
இருக்கறாங்க 6 Students,

அவங்களை தன் வழிக்கு
கொண்டு வர அந்த டீச்சர்
எவ்ளோ கஷ்டப்படறாங்கன்னு
ரொம்ப நகைச்சுவையா
சொல்லி இருக்காங்க..

அதுக்காக அந்த டீச்சர் போடுற
ஒவ்வொரு திட்டமும் சபாஷ்
போட வெக்குது..

இது ஒரு ஹாஸ்யமான.,
சுவாரஸ்யமான கதை

இந்த கதை முடிஞ்ச உடனே
அடுத்த பக்கத்தை திருப்பினா..

Meanings - 6
Fill in the Blanks - 5
Question and Answer - 5

இதெல்லாம் வேற இருக்கு..

ஹி., ஹி., ஹி..,
இது என் பையனோட
3rd Std English Book..

நான் தான் முன்னமே
English Book-ன்னு சொன்னேன்ல..

ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( G.K. கௌதம் )
Love-ல ஜெயிக்க என்ன பண்ணனும்..?

முதல்ல Love பண்ணனும்..

பல பேர் அதைகூட ஒழுங்கா
பண்ணாம.,
" எனக்கு Love Failure -ன்னு "
சொல்றாங்க..

இன்று ஒரு தகவல் :
---------------------

English ஒரு Funny Language..

" Queue " - இதை க்யூன்னு
சொல்லுவாங்க..

அதுல கடைசி நாலு எழுத்தை
எடுத்திட்டாலும்., அப்பயும்
அதை ( Q ) க்யூன்னுதான்
சொல்லுவாங்க..
.
.

28 May 2010

ஹூம்ம்.. இவன் என் நண்பன்..!!
























என் Friend ஒரு Medical Shop
வெச்சி இருக்கான்
Daily Evening அவன் கடையில
நான் ஆஜர் ஆயிடுவேன்..

Atleast ஒரு அரை மணி
நேரமாவது பேசிட்டு இருப்போம்..

அவனுக்கும் எனக்கும் ஒரு
பொது எதிரி உண்டு..

அந்த எதிரி எங்ககூட
படிச்சவன்.. - ஆனா
சரியான காரியவாதி..

So., அவன்கிட்ட நான்
சுத்தமாவே பேச்சு
வெச்சிக்கிறதில்ல..,

என் Friend மட்டும்
அப்பப்ப அவன்கிட்ட பேசுவான்..

நேத்து..,
எங்க எதிரி பைக்ல போனான்..

அப்ப என் Friend..

Friend : அங்கே போறான் பாருடா..
அவன் தான் என் Best Friend..!

நான் : அப்ப நானு..

Friend : உன்னைவிட அவன்
எவ்ளவோ தேவலை..! "

நான் : அடப்பாவி.., எப்படிடா சொல்ற..?

Friend : 1. அவன் Blog எழுதறதில்ல..,
2. என் Blog-ஐ படிச்சியான்னு.,
தினமும் என்னை தொந்தரவும்
பண்றதில்ல..!!

" கால் வெக்கிற இடமெல்லாம்
கண்ணி வெடி வெக்கறாங்களே..!!! "


ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( நிர்மலா )
" Fire Service " - அவங்க என்ன
Fire-ஆ Supply பண்றாங்க..?
தண்ணி தானே கொண்டு வர்றாங்க.!
அப்ப ஏன் Fire Service-ன்னு பேர்..?

என்னாது Fire Service-ஐ
Water Service-ன்னு மாத்தணுமா..?
அப்புறம் பொம்பளைங்க
குடத்தோட வந்து வண்டியை
மறிச்சிட்டாங்கன்னா..?!

இங்கிலீஸ்காரன் எவ்ளோ
பெரிய அறிவாளி பாருங்க..
இதையெல்லாம் அப்பவே சிந்திச்சி
அப்படி பேரு வெச்சி இருக்கான்..


இன்று ஒரு தகவல் :
---------------------

Life-ல ஜெயிக்க ரெண்டே ரெண்டு
Rules தான் இருக்கு..

1. உங்களுக்கு தெரிஞ்சதை எல்லாம்
எல்லோர்கிட்டேயும் சொல்லிட்டு
இருக்காதீங்க..!

2.......................................................
.
.

26 May 2010

மேட்ச் Fixing..!!



















அப்போ நான் MCA 3rd Year
படிச்சிட்டு இருந்தேன்..,

இப்ப மாதிரியே அப்பவும்
நடிகர் மாதவனும், நானும்
ஒரே சாயல்ல தான் இருப்போம்..

சரி. சரி.. Matter-க்கு வர்றேன்..

என் Friend--க்கு கல்யாணம்.
பொண்ணு From பெங்களூர்..

So., கல்யாணம் பெங்களூர்ல..

அந்த கல்யாணத்துக்கு
பொண்ணோட Friends
நிறைய பேர் வந்திருந்தாங்க..

அப்ப.,
என் Friend-டோட அக்கா
என்னை கைகாட்டி
ஒரு Aunty-கிட்ட எதோ பேசினாங்க.

அவங்களும் பக்கத்தில இருந்த
இன்னொரு Aunty-கிட்ட
என்னை கை காட்டி பேசினாங்க..

என்ன விஷயமா இருக்கும்..??
எனக்கு சஸ்பென்ஸ் தாங்கலை..

அக்காவே என்னை கூப்பிட்டாங்க..
போனேன்..

" என்னக்கா நடக்குது இங்கே..? "

" ம்ம். உனக்கு பொண்ணு
பார்த்திட்டு இருக்கேன்.. "

" அப்படியா..!! என் Range-க்கு
இந்த மண்டபத்துல எந்த
பொண்ணும் இல்லையே..!! "

" ஆமாண்டா.. எல்லா பொண்ணும்
நல்லா படிச்சிருக்கு.,
அழகா வேற இருக்கு.. "

" ?????.......!! ""

என்ன ஒரு வில்லத்தனம்..?!!

பின்குறிப்பு :
மூணு Guest Rooms சாவி
என்கிட்ட இருந்தது..
அவங்க என்னை தேடினது அதுக்குதான்.


ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------
( ஜெகன் )
சூடு கண்ட பூனை அடுப்படி
ஏறாது தானே..?
( இந்த கேள்வி உங்க போன Posting
பத்தி இல்ல..)


யார் சொன்னா..?
ஆறட்டும்னு Wait பண்ணும்..
( இந்த பதிலும் என் போன Posting
பத்தி இல்ல..)

இன்று ஒரு தகவல் :
---------------------

எல்லோருக்கும் ஒரு அட்வைஸ்..

" யார் சொல்ற அட்வைஸையும்
கேக்காதீங்க..!! "
.
.

24 May 2010

Cutting சிக்கன்..!!


















Variety-ஆ எழுதுடான்னு
என் Friend சொன்னான்..
அதுக்கு தான்..

இன்னிக்கு ஒரு சிக்கன் Variety..

சமையல் குறிப்பு எழுதற
அளவுக்கு அனுபவம்
இருக்குமான்னு தானே
யோசிக்கறீங்க..?

College படிக்கும் போது
எத்தனை தடவை
Maggi Noodles சமைச்சிருப்பேன்..!!

இன்னிக்கு என் மனைவியின்
டைரி குறிப்புல இருந்து
ஒரு சிக்கன் வெரைட்டி
சொல்ல போறேன்..

அட.., இதுல சிக்கனை பத்தி
மட்டும் 10 வெரைட்டி இருக்கே..
எல்லாமே நல்லாவே இருக்கு..
எதை எழுதறது..?

Confusing...

பேசாம எல்லா வெரைட்டில
இருந்தும் ஒவ்வோரு வரி
Cut பண்ணி எழுதிட்டா..?

" Cutting Chicken..!! " - ரெடி..!!

அட Tension ஆகாதீங்க..
பொறுமை., பொறுமை..

இங்கே எனக்கு பிடிச்ச
ஒரு தத்துவம் சொல்றேன்
கேட்டுக்கோங்க..

" பித்தளை பாத்திரத்தை
திருடி., - அதை வித்து.,
பேரிச்சம்பழம் வாங்கறதுக்கு...

பேசாம பேரிச்சம்பழத்தையே
திருடலாம்கிறேன்.. "

அந்த மாதிரி.,
நான் எதையாவது சொல்லி.,
நீங்க எதாவது பண்ணி.,
எதுக்கு இந்த Risk..?

கடைக்கு போனோமா..,
ஆர்டர் பண்ணுனோமா.,
சாப்பிட்டோமான்னு இருக்கனும்..

என்ன நான் சொல்லுறது..?

இன்னுமா இந்த ஊர்
என்னை நம்புது..??!

ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------
( முருகன் )
மனைவிகிட்ட நல்ல பேர் வாங்க
ஏதாவது வழி இருக்கா..?

ரெண்டு வழி இருக்கு..
ஆனா.. Unfortunately
ரெண்டுமே Work Out ஆகாது..

இன்று ஒரு தகவல் :
---------------------

நடிகர் சூர்யா பிளஸ் 2 -ல
எடுத்த மார்க் 872..
( Afterall என்னை விட
_ _ _ மார்க் தான் அதிகம். )
வெரி Bad-ங்க நீங்க...!!
.
.

21 May 2010

ஒரு கிக் ( Kick ) பதிவு..!!






















ஒரு நாள்
நானும் என் பையனும்
பைக்ல போயிட்டு இருந்தோம்..

அப்போ ஒரு " நல்ல குடிமகன் "
எங்க வண்டில வந்து
விழுந்திருப்பாரு.,
Sudden Brake.. Just Escape..

ஆனா எனக்கு மனசு
பட படன்னு ஆயிடிச்சி..,

அப்ப என் பையன்..

" ஏம்பா அவரு அப்படி
தள்ளாடிட்டே வர்றாரு..? "

" அவரு குடிச்சிருக்காரு.. அதான் "

" என்ன குடிச்சிருக்காரு..? "

சின்ன பையனா இருக்கானே
என்ன சொல்றதுன்னு
ஒரு நிமிஷம் யோசிச்சேன்..

சரி உண்மையவே சொல்லலாம்..
நல்லது., கெட்டதை அவனே
முடிவு பண்ணிக்கட்டும்..

" அவரு Whisky, Brandy இந்த மாதிரி
ஏதோ ஒண்ணு குடிச்சிருக்காரு.. "

" அது குடிச்சா என்ன ஆகும்..? "

" ரொம்ப Danger..! உயிருக்கே ஆபத்தாயிடும்..! "

" அப்ப ஏன்பா கடையில எல்லாம் அதை
விக்கறாங்க..? "

" அது வந்து.., அது வந்து...!! "
( என்னால பதில் சொல்ல முடியால... )

இந்த கடையை நடத்துறதே
Government தான்னு இதுவரைக்கும்
அவனுக்கு தெரியாது..

" சின்னபுள்ளங்க கேள்வி எப்பவுமே
சின்னபுள்ளதனமா இருக்காது..!! "

ம்ம்.. எனக்கும் ஒரு சின்ன Doubt..

வள்ளுவர் தானே கள்ளுண்ணாமை
பத்தி பாடினவரு..,

மதுவிற்பனைக்கு
Yearly Target Fix பண்ணிட்டு.,
எப்படிப்பா இவங்க
அவர் சிலைக்கு
மாலை போடுறாங்க..??

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..!!
அப்படித்தானே..!!


ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( பால கண்ணன் )
நீங்க " ஹாய் வெங்கட் " Start
பண்ணி இருக்கிறதை பத்தி
" ஹாய் மதனுக்கு " தெரியுமா.?

அவருக்கு தெரியாது..,
நான் சொல்லலை..
Ego Problem..


இன்று ஒரு தகவல் :
---------------------

ஒரு காலத்தில
பள்ளிக்கூடங்கள் அரசிடம் இருந்தது..
மதுக்கடைகள் தனியாரிடம் இருந்தது.,
இப்போ.. அது மாறி இருக்கு..
.
.

18 May 2010

எல்லாம் ஒரு விளம்பரம் தான்..!!



















Tv-ல வர்ற விளம்பரங்களை
நல்லா கவனிச்சி பார்த்தா
ஒரு ஒத்துமை இருக்கிறது புரியும்..

75% விளம்பரம் லூசுதனாமா
தான் இருக்கும்..
அதை சொல்ல வரலை...

அதாவது Different Company-ஆ
இருந்தாலும் அவங்க Concept
மட்டும் ஒரே மாதிரி தான் இருக்கும்..

For Example..

Cool Drinks விளம்பரம் :
இந்த விளம்பரத்துல நல்லா சர்க்கஸ்
பண்ணி காட்டுவாங்க..
மலை மேல இருந்து Jump.,
கட்டடம் கட்டடமா Jump.,
பைக் சேஸிங்., கார் சேஸிங்..,

ஒரு பாட்டில் Cool Drinks குடிக்க
இவ்ளோ Risk எடுக்கணுமா..??
Too Much-ஆ இருக்கே.?!
10 ரூபா குடுத்து பக்கத்து கடையில
வாங்கி குடிக்கமாட்டாங்க..?

Soap விளம்பரம் :

எந்த Soap விளம்பரம் பாத்தாலும்
பொண்ணுகளுக்கு தான்..
அப்ப ஆம்பளைங்க எல்லாம்
குளிக்க மாட்டாங்களா..? - இல்ல..,
Soap Use பண்ண மாட்டாங்களா..?

ஒண்ணே ஒண்ணு.,
கண்ணே கண்ணுன்னு
நமக்குன்னு ஒரு Soap இருந்திச்சி
அதாங்க Lifebuoy Soap..
இப்பல்லாம் அதிலயும்
பொண்ணுகதான் வர்றாங்க..

Beauty Cream விளம்பரம் :
இதை ஒரு வாரம் Use பண்ணினா
போதும்., அழகாயிடுவாங்க.,
தன்னம்பிக்கை வந்திடும்..
உடனே பெரிய பெரிய கம்பெனியில
வேலை கிடைக்கும் ( +2 Fail ஆயிருந்தாகூட )
பெரிய ஸ்டார் ஆயிடலாம்..

Bike விளம்பரம் :
Bike-ன்னா ரோட்ல ஓட்டுறதுதானே.,
ஆனா விளம்பரத்தில மட்டும்
ரோட்டை தவிர எல்லா இடத்திலயும்
ஓட்டுறாங்களே ஏன்.?

Health Drinks விளம்பரம் :
Daily இதை ஒரு Cup குழந்தைங்க
குடிச்சா போதும்..
கிளாஸ்ல 1st Mark எடுப்பாங்க.,
Sports-ல மெடல் வாங்குவாங்க..

So., சத்துணவுல முட்டை கூடவே
இந்த Health Drinks-ஐயும் ஒரு Cup
குழந்தைகளுக்கு தரலாமே..
எல்லா குழந்தைகளும் புத்திசாலி
ஆயிட்டா சந்தோஷம் தானே..!

Deodorant விளம்பரங்கள் ( AXE, SetWet ) :
இதை பத்தி நான் என்ன சொல்றது..?
இந்த விளம்பரம் வந்தா
நான் கண்ணை மூடிக்குவேன்..
அவ்வளவுதான்..

ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( ஹாசினி )
டோனியை கேப்டன்ல இருந்து
தூக்க போறாங்களாமே..?

அப்படியா..!!?? பண்ணட்டும்..
But One Condition.,
என்னை கேப்டனா இருக்க
சொல்லக்கூடாது..!
நான் ரொம்ப Busy.,
என் பையனுக்கு Homework எல்லாம்
வேற எழுதி குடுக்கணும்..


இன்று ஒரு தகவல் :
---------------------

இப்ப வர்ற Close Up விளம்பரம்
ரொம்ப மோசம்..
சின்ன குழந்தைங்க அதை பார்த்தா
மனசு கெட்டு போயிடுவாங்கல்ல..
( இங்கே சின்ன குழந்தைன்னு
சொன்னது என்னைதான்பா..! )
.
.

16 May 2010

எங்கே எனது கவிதை..?!!













எனக்கு கருத்துள்ள கவிதை
எழுத வராதுன்னு நேத்து
ரசிகன் கிண்டல் பண்ணிட்டார்..

இலக்கிய வட்டாரம்
இந்த கிண்டலை கேள்விபட்டா
கொந்தளிச்சி போயிடுமே..!!

நான் காலேஜ் படிக்கும் போது
எனக்கு கவிதை அருவி
மாதிரி கொட்டும்..
அதை நான் என் டைரில
பிடிச்சி வெச்சுப்பேன்..

அதையெல்லாம் வரிசையா
எழுதி தள்ளிடலாம்னு முடிவு
பண்ணி என் கவிதை
டைரிய தேடிட்டு இருந்தேன்..

என் கெட்ட நேரமோ.. இல்ல..,
உங்க நல்ல நேரமோ தெரியலை
அந்த டைரி கண்ணுல சிக்கவேயில்ல..

( ஒருவேளை இன்னிக்கும்
நீங்க தப்பிச்சிகுவீங்களோ..?! )

விடக்கூடாது..
இதென்ன கெட்ட பழக்கம்..?
அதான் நடுவில ஒரு நாள்
லீவ் விடறேன்ல..

அன்னிக்கு மட்டும் சந்தோஷமா
இருந்தா போதாதா..?! - அப்புறம்
வாழ்க்கையில கஷ்டம்னா
என்னான்னு தெரியாமலே
போயிடுமே..

ஆங்.. கிடைச்சிடுச்சி...
என் பீரோ மேல இருந்த
ஒரு சூட்கேஸ்ல இருந்தது...

இடைபட்ட நேரத்துல வீடு
கொஞ்சம் அலங்கோலம்..

புதையல் கிடைச்சிருக்குல்ல
இது கூட ஆகலைன்னா எப்புடி..?

இதை பார்த்த என் Wife.

" ஏங்க இப்படி குப்பைய கிளறிட்டு
இருக்கீங்க..! "

என் கவிதை = குப்பையா..?

இதுக்கு ரசிகனே பரவாயில்ல
போல இருக்கே..

நான் டென்ஷன் ஆயிட்டேன்.,
So.., என் டைரிலஇருந்த
கவிதைகளை நான் இங்கே
எழுத போறதில்ல..

( என்ன சிரிப்பு..!? )

ஒருவேளை
என் Wife-வோட Statement-ஐ
நான் Confirm பண்ணின
மாதிரி ஆயிடிச்சின்னா..!!??

ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( கீர்த்தி, லண்டன்ல இருந்து 60 மைல் தள்ளி )
"நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா..,
எதுவுமே தப்பில்ல" ஒத்துக்கறேன்
நாலு பேருக்கு எதுவும் நடக்கலைன்னா..,
எல்லாமே தப்புதானே..?

இதுக்கு நான் " ஆமாம்னு " பதில்
சொன்னா.. உடனே
" Blog எழுதறதை நிறுத்துங்கன்னு "
சொல்லுவீங்க..
எனக்கு தெரியும்லே உங்கள பத்தி..


இன்று ஒரு தகவல் :
---------------------

இன்னிக்கு அட்சய திருதியை.
நகை வாங்கினா ரொம்ப நல்லது..

( நகை கடைகாரங்களுக்கா..? )
.
.

14 May 2010

டோனிக்கு கண்டனம்..!! சரியா.? தப்பா.?
















( அட.., இது Mineral Water-ங்க..! )

T20 World Cup கிரிக்கெட்ல
இந்தியாவின் தோல்விக்கு
IPL Party-யே காரணம் - டோனி.

டோனியின் கருத்துக்கு
BCCI கண்டனம்..

தோல்விக்கு என்ன காரணம்னு
கேட்கறாங்கபா..!
( உண்மையான ) காரணத்தை சொன்னா
கண்டனம் தெரிவிக்கறாங்க..

பின்ன..,
ரெண்டு அம்பயரும் கருப்பு சட்டை
போட்டிருந்தாங்க..,
அதான் சகுனமே சரியில்லன்னா
சொல்ல முடியும்..??!!

என்னாப்பா இது..?

என்னமோ இவங்க No.1 டீமை
செலக்ட் பண்ணின மாதிரியும்..,
World Cup Just-ல மிஸ்ஸான
மாதிரியும்..
எதுக்கு இந்த பில்ட்-அப்..?

இந்த தோல்வி எதிர்பாராத
தோல்வியெல்லாம் இல்லயே..
90% ரசிகர்கள் இதை எதிர்பார்த்தாங்க..

நம்ம Team-ஐ ஒரு லுக் விடுங்க..

அவசிமான சில பேரு
Team-ல இல்லவே இல்ல..
Team-ல இருந்த சில பேரு
அவசியமான்னே தெரியல..

அப்படியே IPL Data-வையும்
ஒரு லுக் லுக்குங்க..

( Player - Match - Runs - Avg - Highest )

சச்சின் - 15 - 618 - 47.54 - 89
ரெய்னா - 16 - 520 - 47.27 - 83
கங்குலி - 14 - 493 - 37.92 - 88
விஜய் - 15 - 458 - 35.23 - 127
SS.திவாரி - 16 - 419 - 29.93 - 61
ரோஹித் - 16 - 404 - 28.86 - 73
NV. ஓஜா - 14 - 377 - 31.42 - 94
உத்தப்பா - 14 - 374 - 31.17 - 68

List-ல யுவராஜ் எங்கேன்னு
தானே தேடறீங்க..!
ஆனாலும் உங்களுக்கு
ரொம்பத்தான் அவசரம்..!!

பத்ரிநாத், சேவாக், ராயுடு, Y.பதான்,
கோலி, தோனி, கார்த்திக், கம்பிர்,
இர்பான், டிராவிட் இவங்கல்லாம்
முன்னே இருக்காங்கல்ல..

யுவராஜ் - 14 - 255 - 21.25 - 43

இப்ப பவுலிங்..
(Player - Match - Wickets - Avg )

P.ஓஜா - 16 - 21 - 20.43
மிஸ்ரா - 14 - 17 - 21.35
ஹர்பஜன் - 15 - 17 - 22.18
சாவ்லா - 14 - 12 - 30.58

இதை பத்தியும் நான் ஏதாவது
சொல்லணுமா..?
வேணாம்...!

இர்பான் பதான்னு ஒருத்தர்
இருக்கார் தெரியுமா..??
அவர் Stats-ஐ பாருங்க..

Batting - M 14 - R 276 - Avg 34.5 - H 60
Bowling - M 14 - W 15 - Avg 28.4

ஒரு சந்தேகம்..
ரவீந்த்ர ஜடேஜாவை ஏன்
ஆல் ரவுண்டர்னு சொல்லுறாங்க..?
( ஒருவேளை Ground- ஐ சுத்தி சுத்தி
ஓடுவாரோ..)

IPL-ல டாப் Batsman - சச்சின்
டாப் Bowler - P.ஓஜா
டாப் ஆல்ரவுண்டர் - இர்பான்

சச்சின் அவராவே போகல..
ஓஜாவையும், இர்பானையும்
இவங்க போக விடல..

இந்த லட்சணத்துல World Cup
வாங்கிட்டு வரலைன்னு
டோனி மேல கோவம் வேற..

So.., டோனிக்கு கண்டனம்
தெரிவிச்சது
" செல்லாது.., செல்லாது..!! "

ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( பிரபு )
ரவிசாஸ்திரி எல்லாம் டோனிய
திட்றாரே..? என்ன கொடுமை பாஸ் இது..?

விடுங்க பாஸ்..
" முடிஞ்சவங்க சிக்ஸர் அடிக்கறாங்க..
முடியாதவங்க லெக்சர் அடிக்கறாங்க.."
All in the Game..

இன்று ஒரு தகவல் :
---------------------

பவுன்சரால் பட்டபுண் உள்ளாறும் ஆறாதே
பவுலர் மேலுள்ள வெறுப்பு
.
.

12 May 2010

Homework - தாங்க முடியல ..!!
























" Madam.., வர வர Homework அதிகமா
குடுக்கறீங்க.. என் பையனால முடியல..! "

ஒவ்வொரு Teachers - Parents Meeting-லயும்.,
என் பையனோட Class Teacher கிட்ட
இப்படி தான் தவறாம சொல்லுவேன்..

( இந்த Meeting மாசம் ஒரு தடவை
நடக்கும்..! )

நான் அந்த Teacher-கிட்ட சொன்னது
உண்மைதான்..

என் பையன் Homework பண்ண 6 மணிக்கு
எடுத்து வெச்சா.. முடிக்க 9.30 மணி வரை
ஆகுது..

No விளையாட்டு.,
No கார்ட்டூன்..,

நானும் Complaint பண்ணி பண்ணி
சலிச்சி போயிட்டேன்..

அப்பதான் எனக்கு அந்த தகவல் தெரிஞ்சது..

1st Rank வாங்கற பையனுக்கு Homework
முழுசும் அவங்க அப்பாதான் எழுதி
தர்றார்னு..

அப்புறம்தான் நானே யோசிச்சி
ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சேன்..

முதல்ல Homework-ன்னா என்ன..?

வீட்டு வேலை தானே..!!

அப்ப அதை வீட்ல இருக்கிற யார்
வேணாலும் செய்யலாம்ல..!!

( ஆஹா.. என்ன ஒரு சிந்தனை..!! )

அதனால நானும் என் Wife-ம் ஒரு
Agreement போட்டுகிட்டோம்..

Homework எழுதறது - என் பொறுப்பு.,
( Maths தவிர )

பாடம் சொல்லி தர்றது - அவங்க பொறுப்பு..

( ஹி., ஹி., நான் சொல்லி குடுத்தா அவன்
Fail ஆயிடுவான்..)

இந்த Method-க்கு நல்ல Result.. அடுத்த
Exam-லயே என் பையன்கிட்ட
நல்ல முன்னேற்றம்..

அடுத்த Teachers - Parents Meeting...

இந்த தடவை நானு அதே Class Teacher கிட்ட...

" Madam.., வர வர Homework அதிகமா
குடுக்கறீங்க.. என்னால முடியல..! "

ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( சரவணன்.B.S )
நீங்க வெளியே கிளம்பும் போது
பூனை குறுக்க போனா என்ன பண்ணுவீங்க..?


பூனை குறுக்க போனா எலிதான்
பயப்படணும்..,
புலி எதுக்குலே பயப்படணும்..?

இன்று ஒரு தகவல் :
---------------------

" தந்தை மகற்காற்றும் உதவி விடுமுறையில்
சந்தோஷ டூர் கூட்டிச்செலல் "
.
.

10 May 2010

மாயவலை..!!















( படித்ததில் பிடித்தது...! )

பக்கத்து வீட்டுக்காரன்
பெயர் தெரியாவிட்டாலும்
அமெரிக்க நண்பனின்
காலை டிபன் பற்றி
விசாரிக்க வசதியிருக்கிறது..!

வாசலில் கதறும்
பிச்சைக்காரனிடம்
இறுகும் மனம்.,
இ-மெயிலில் தெரியும்
சோமாலியா மக்களுக்காய்
இளகுகிறது..!!

சகோதரனிடம் விளையாட
சண்டையிடும் சிறுவனால்.,
முகம் தெரியாத
யாரோ ஒருவருடன்
இன்டர்நெட்டில்
விளையாட முடிகிறது..!!

கடவுளே..!!
தூரங்களை
அருகில் கொண்டுவரும்
மாயையில்.,
கொஞ்சம் கொஞ்சமாக
தொலைந்து போய்விடுவானோ
மனிதன்..??!!


ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

(மேனகா மணிவண்னன்., மல்லசமுத்திரம் )
அண்ணா., நீங்க நல்லவரா.? கெட்டவரா.?

என் Friend மணிவண்ணனை
உங்களுக்கு கல்யாணம் பண்ணி
வெச்சிட்டேங்கறதுக்காக
என்னை பார்த்து இப்படியெல்லாமா
கேள்வி கேக்கறது..?


இன்று ஒரு தகவல் :

---------------------

கோவப்படறது ரொம்ப ஈஸி..,
ஆனா..,
சரியான காரணத்துக்காக.,
சரியான ஆள் மேல.,
சரியான நேரத்துல கோவப்படுறது..
அவ்வளவு ஈஸியில்ல..
.
.

08 May 2010

ஆட்டோகிராஃப் ( இது கொஞ்சம் ஸ்பெஷல் )













ரொம்ப நாள் கழிச்சி
என் காலேஜ் Friend கிச்சாவை
ஒரு கல்யாணத்துல பார்த்தேன்..

கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்.
அப்போ நான்....

" என் ஆட்டோகிராப் நோட்ல
நீ எழுதி குடுத்தது தான்
ரொம்ப ஸ்பெஷல்..! "

" அப்படியா..!! "

" எனக்கு எப்பவாவது மனசு
கஷ்டமா இருந்தா.., அதை எடுத்து
ஒரு தடவை பார்ப்பேன்..
உடனே மனசு லேசாயிடும்.. "

" அப்படி என்னடா நான்
எழுதி குடுத்தேன்..? "

" அதை நான் படிக்க மாட்டேனே.. "

" பின்ன..? "

" எடுத்து சும்மா பார்ப்பேன்..,"

" பார்த்து....!! "

" இந்த கையெழுத்தை விடவா
நம்ம தலையெழுத்து மோசமா
இருக்க போவுதுன்னு நினைச்சுக்குவேன்..
உடனே மனசு Recharge ஆயிடும்..! "

அதுக்கு அப்புறம் அங்கே
என்ன நடந்திருக்கும்னு தான்
உங்களுக்கே தெரியுமே..!!


ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் ) -----------------------------------
( ரங்கநாதன் , சென்னை )
வரப்போற சட்டசபை Election-ல சரத்குமார் கட்சியும், கார்த்திக் கட்சியும் கூட்டணி வெச்சுகிட்டா எத்தனை இடதுத்துல ஜெயிப்பாங்க..?


குறைஞ்சது 22 இடத்துலயாவது
ஜெயிப்பாங்க..

( ஏன் நீங்க மட்டும் தான் காமெடி
பண்ணுவீங்களா..?
நாங்களும் பண்ணுவோம்ல..!! )


இன்று ஒரு தகவல் : ---------------------
தமிழ்நாட்டில் இன்னும்
ஓரிரு வருஷங்களில்
மின்சார பற்றாக்குறையே இருக்காது
- அமைச்சர் துரைமுருகன்

( ஹி., ஹி., ஹி.. )
.
.

06 May 2010

சீரியல் கில்லர்ஸ்...!!



















டிஸ்கி : இது ஒரு டெரர் பதிவு.,
பயந்த சுபாவம் உள்ளவங்க
படிக்க வேணாம்..

மெகா சீரியல்னா வெறும்
அழுவறது மட்டுமில்லைங்க.,

இப்பல்லாம் Trend மாறிடுச்சி..

எல்லா சீரியல்லயும்
குத்து, வெட்டு, அருவா,
துப்பாக்கி, கொலைன்னு
பக்கா Action தான்..

அதுவும் யாரையாவது
பழிவாங்கறதுக்கு Technic
யோசிப்பாங்க பாருங்க..
வித்தியாசமா இருக்கும்..

உதாரணதுக்கு ஒண்ணு

நல்லபாம்பை விட்டு
ஒருத்தரை கடிக்க வெக்கணும்..
அதுக்கு ஒரு ஐடியா...,

அவரோட ஒரு துணியை
நல்லபாம்புகிட்ட போட்டுட்டா
போதும்..
அது மோப்பம் பிடிச்சிட்டு
போய் அவங்களை Correct-ஆ
கடிச்சிடும்..

இதுவரைக்கும் யாருக்குமே
தெரியாத.., ஏன்.,
நல்லபாம்புக்கு கூட தெரியாத
இந்த விஷயத்தை உலகத்துக்கு
சொல்லி குடுத்தது
" தங்கம் " சீரியல் ( சன் Tv )

ஏம்பா..,
National Geography.,
Discovery Channel.,
இதையெல்லாம்
நோட் பண்ணுங்கப்பா., நோட் பண்ணுங்கப்பா.,
பின்றாங்கப்பா...!

Last But Not Least..

" அவனை நான் உயிரோட விட
மாட்டேன்..! "
இந்த டயலாக் எல்லா
சீரியல்லயும் வருது..

ஒருவேளை நம்மளத்தான்
சொல்லுறாங்களோ..??!!


ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( அருள்.APJ )
தங்கத்துக்கும்., சொக்கதங்கத்துக்கும்
என்னங்க வித்தியாசம்..?

தங்கம் - சின்னதிரை மெகா கொடுமை

சொக்கத்தங்கம் - பெரியதிரை மகா கொடுமை


இன்று ஒரு தகவல் :
---------------------

மெகா சீரியல்ஸ் பார்த்திட்டே
சாப்பிடாதீங்க..

ஏன்னா..,
துன்பம் வரும்போது சிரிங்கன்னு
தான் சொல்லியிருக்காங்க.,
சாப்பிடுங்கன்னு சொல்லலையே..!
.
.

04 May 2010

நானும் என் விசிறிகளும் ( இது " த்ரீ மச் " )


















நான் Blog எழுத ஆரம்பிச்சதுக்கு
பிறகு போன வாரம் தான்
ஒரு Function-க்கு போனேன்..

அங்கே...

1.அவ்ளோ கூட்டத்திலயும்
நாலு பேர் என்னை
அடையாளம் கண்டுகிட்டாங்க..
( என் சகலை, மச்சான்,
மாமனார், மாமியார் )

2. ஒரு பொண்ணு எனக்கு
ரோஜா பூ குடுத்திச்சி..
( எனக்கு மட்டுமா குடுத்திச்சி.,
அங்கே இருந்த எல்லார்க்கும்
தான் குடுத்திச்சி..)

3.ரெண்டு பேர் என் Blog Address
எழுதி வாங்கிக்கிட்டாங்க..
( எங்கே வாங்கினாங்க..!
அவங்கள இழுத்து வெச்சி.,
எழுதி குடுக்கறதுக்குள்ள நான்
பட்ட கஷ்டம்..! அப்பப்பா...!! )

4.அங்கே ஒரு பொண்ணு
அடிக்கடி என்னை திரும்பி
பார்த்திட்டே இருந்தாங்க..
( என் Wife-தான் அது.,
நான் இருக்கேனா., இல்ல
Escape ஆயிட்டேனான்னு
ஒரு Checking. )

5.என்னை மட்டும் விருந்துல
Special-ஆ கவனிச்சாங்க..
( மத்தவங்க இலையில
2 இட்லி தான் இருந்திச்சி.,
எனக்கு மட்டும் 3 )

6.எப்படிங்க உங்களால முடியுதுன்னு
ஒருத்தர் கேட்டார்..
( ஏன்னா.., இன்னொரு இட்லி
கிடைக்குமான்னு அவர்கிட்டதான்
நான் கேட்டேன்..)

7.Function-ல இருக்கும் போதுகூட
என் ரசிகைகிட்ட இருந்து போன்..
( சார்., ICICI Bank-ல இருந்து பேசறோம்..,
பர்சனல் லோன் வேணுமா சார்..?)

8.ஒரு Couple என்கூட நின்னு
போட்டோ பிடிச்சிக்கிட்டாங்க..
( ஹி., ஹி.., மாப்பிள்ளையும்.,
பொண்ணும் தான் )


பின் குறிப்பு :
பொறுங்க..!! பொறுங்க..!!
வாழ்க்கையில Control தான்
ரொம்ப முக்கியம்..

பொங்கறதுக்கு முன்னாடி
Ctrl+A அடிச்சி மறுபடியும்
முதல்ல இருந்து பாருங்க..



ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( அருள்.APJ )
தண்ணில இருந்து கரண்ட் எடுக்கும்
போது., கரண்ட்ல இருந்து தண்ணி
எடுக்க முடியாதா..?

ஓ.. தாராளமா...
ஒரு கரண்ட் வயரை பிடிச்சி
Try பண்ணி பாருங்களேன்..
தண்ணி வருதோ இல்லையோ.,
Atleast ஜன்னியாவது வரும்..!!

" சிகரெட்ல இருந்து புகை வரும்.,
புகைல இருந்து சிகரெட் வருமா..?? "


இன்று ஒரு தகவல் :
---------------------

நீங்க எப்பவும் உண்மைய தான்
சொல்லணும்..,
அதுக்காக எல்லா உண்மையையும்
சொல்லிடக்கூடாது..!!!
.
.

02 May 2010

" சுறா " அசலா..?














டிஸ்கி 1 :
இது சுறா பட விமர்சனம் அல்ல.,

டிஸ்கி 2 :
நான் விஜய் ரசிகனும் இல்ல.,
அஜித் ரசிகனும் இல்ல..
Jackie Chan ரசிகன்.

விஜய் படம் ரிலீஸானாலும் சரி.,
அஜித் படம் ரிலீஸானாலும் சரி.,
கட்டாயம் அந்த படத்தை
நக்கல் பண்ணி நிறைய SMS
நமக்கு வரும்..

இந்த SMS எல்லாம்
அனுப்பறது யாரு..?

வேற யாரு...,
அவர் படம்னா., இவிங்க அனுப்புவாங்க.,
இவர் படம்னா., அவிங்க அனுப்புவாங்க.,

ரெண்டு பேரும் மாத்தி மாத்தி
உண்மைய தான் சொல்லுறாங்க..
இல்லைன்னு சொல்லல..

அதுக்காக படம் பார்க்கமலே
ஒரு முடிவுக்கு வந்திடறதா..?

"சுறா" ஹிட்டு இல்ல மச்சி - " அட்டு "

இப்படி ஒரு SMS
படம் ரிலீஸ் ஆகறதுக்கு
முன்னாடியே வந்தது..

என்னமோ " அசல் " ஆஸ்காருக்கு
Nominate ஆயிருக்கிற மாதிரியும்..,
" சுறா " மட்டும்தான் Waste-ங்கிற
மாதிரியும்.,

எதுக்கு இந்த
மானங்கெட்ட பொழைப்பு..?

கையில காசை வாங்கிட்டு.,
அவங்க நடிச்சிட்டு போயிடறாங்க..
நீங்க ஏன் கைகாசை செலவு
பண்ணி SMS அனுப்பி
எங்களை Tension பண்றீங்க..?

சண்டை கோழி மாதிரி இருந்த
இளய தளபதியும் - தலயுமே
இப்ப சமாதானமா
போயிட்டாங்கல்ல..

நீங்க எப்ப அடங்க போறீங்க..?


ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( கீர்த்தி, லண்டன்ல இருந்து 60 மைல் தள்ளி )
நான் தோற்கறதுக்காக முயற்சி
பண்ணி., அது நடந்தா..,
நான் தோத்துட்டேனா..?
ஜெயிச்சிட்டேனா..?

சபாஷ்.,
சரியான Time-ல
சரியான கேள்வி..,
இதை தான் English-ல
Match Fixing-ன்னு சொல்லுவாங்க..

( உங்க கேள்விக்கு நான் பதில்
சொல்லிட்டேனா..? இல்லையா..? )

இன்று ஒரு தகவல் :
---------------------

உங்க எதிரிகளுக்கு Respect குடுங்க.,
அவங்க தான் உங்க தப்பை
முதல்ல கண்டுபிடிக்கறாங்க..!
.
.