சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

28 February 2011

சொல்லத்தான் நினைக்கிறேன்..!
























டிஸ்கி : காலேஜ் படிக்கிறப்ப எழுதினது.
இது கவிதையா.? கதையா..? இல்ல
ரெண்டுமே இல்லையான்னு எல்லாம்
எனக்கு தெரியாது.. படிச்சிட்டு நீங்களே
ஒரு முடிவுக்கு வாங்க..

ஏதேதோ பேச வேண்டும் என்பது
ஆறு மாத திட்டம்..

பாட்டுப்போட்டியில் முதல் பரிசு.,
கணக்கில் 200 / 200 மார்க் எடுத்தது
இதை எல்லாம் சொல்ல வேண்டும்..

மனதில் நேற்று
நான்கு முறை ஒத்திகையும்
திருப்தியில்லாது போனதால்
இப்போது ஐந்தாவது முறை
- மணி பதினொன்று..

என் மனசுக்கு பிடிச்ச அந்த
மெரூன் கலர் தாவணி

நேற்றே எடுத்து வைத்தாயிற்று..

நாளைக்கு மட்டும் அக்காவின்
Perfume மற்றும் Lipstick அவளுக்கு
தெரியாமல் ஒரு முறை., ஒரே முறை..

" தூங்கவில்லையா இன்னும்..? "
- அம்மாவின் குரல்..

" விடிந்திருக்குமே..!! "
என் Titan-ஐ ஒரு முறை
டார்ச் அடித்து பார்த்தேன்
2 மணி காட்டியது..

" நின்றுவிட்டதா.?! " - உற்றுப்பார்த்தேன்
ஓடிக்கொண்டு தான் இருந்தது..

இரவென்பது 24 மணி நேரமா.?!

அதிகாலை 5 மணி..
இந்த பக்கத்து வீட்டு தூங்குமூஞ்சி சேவல்
எப்பொழுது கூவும்..?

இந்த சூரியனாவது தாமதிக்காமல்
உதிக்குமா.?

மணி ஏழு.. நான் ரெடி..!!
பின்னலிட்ட ரெட்டை ஜடையை.,
நெத்திசுட்டியை எல்லாம் ஒருமுறை
சரிபாத்துக்கொண்டேன்.

எந்த பொட்டு வைக்கலாம்..?
பட்டிமன்றம் நடத்த இப்போது
நேரமில்லை..

வெகு நேரம் கண்ணாடி முன்
நின்றால் அம்மா சந்தேகப்படுவார்கள்..

இன்னும் சில மணிகளில்
என்னவரை சந்திக்க போகிறேன்..

கற்பனை செய்தது நனவாகும் சமயம்
இதயம் இரட்டிப்பாய் துடித்தது..

மாமாவின் வீடு..

அத்தான் நண்பரோடு
பேசிக்கொண்டிருந்தார்.

சிரிக்கும் பொழுது
என்னவர் எத்தனை அழகு..?

என்னை பார்த்ததும்..,
சிரித்துக்கொண்டே என்னருகில் வந்தவர்..

" உன் அக்கா சௌக்கியமா..? "
ஆர்வமாய் கேட்ட பொழுது
ஊமையாகிப் போனேன்..!

- கவி இளவரசு வெங்கட் .
.

25 February 2011

அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ..?











போன Saturday ( Feb 19th )
எங்க சின்ன பையன் ஸ்கூல்ல
Annual Day Function..

நாங்க வீட்ல இருந்து கிளம்ப
10 நிமிஷம் லேட்டாயிடுச்சு.

அதனால என் Wife-க்கு
என் மேல லேசா கோபம்..

அங்கே ஸ்கூலுக்கு போனா...

மேடையில White & White-ல
நிறைய பேர் உக்காந்து இருந்தாங்க..

இதென்ன அரசியல் கட்சி மீட்டிங்கா..?
இல்ல ஸ்கூல் Function-ஆ..?

அப்ப எங்க பக்கத்து ஊர் பஞ்சாயத்து
தலைவர் பேச ஆரம்பிச்சாரு..

" இங்கே சிறப்பு விருந்தினராக வந்திருக்கும்.,
விநாயகா மிஷன்ஸ் நிறுவனத்தில்
தன் சிறப்பான பணியை 15 ஆண்டுகாலமாய்
வழங்கி கொண்டிருக்கும்.. உயர் திரு....... "

நான் என் Wife-கிட்ட..

" இவரு பேசி முடிக்கறதுக்குள்ள
நான் போயி ஒரு டீ குடிச்சிட்டு வந்துடறேன்.. "

" சீக்கிரம் வந்துடுங்க.. Function ஆரம்பிச்சுட
போறாங்க..!! "

" ஓ.கே.. ஓ,கே..!! "

நான் போயி Quick-ஆ ஒரு " டீ " குடிச்சிட்டு
வர்றதுக்குள்ள 5 நிமிஷம் ஆயிடுச்சு.. !!

" வருங்காலத்தில்.. ஜனாதிபதியாகவோ.,
பிரதமராகவோ., முதல்வராகவோ... "

இன்னும் அவரே தான் பேசிட்டு இருந்தார்..

என் Wife-கிட்ட கேட்டேன்..

" இன்னுமா இவரு பேசி முடிக்கலை..? "

" அவரு இன்னும் ' வணக்கமே ' சொல்லி
முடிக்கலைங்க..! "

" என்னாது..? இன்னும் " வணக்கமே "
முடியலையா..? ஆ...!! "

( ........... டாக்டராகவோ., விஞ்ஞானியாகவோ
வர கூடிய மாணவர்களுக்கும் என் அன்பு
கலந்த வணக்கம்..!! )

அட பாவி..!!
அவ்ளோ பெரிய அப்பாடக்கராய்யா நீ..?

எனக்கு செம டென்ஷன்..
மறுபடியும் நான் எந்திரிச்சேன்..

" எங்கே போறீங்க..? "

" நான் போயி " சுறா " பட DVD
யார்கிட்டயாவது கடன் வாங்கியாவது
பார்க்கறேன்..!!"

" அட., உக்காருங்க.. கொஞ்சம்
நேரத்துல முடிச்சிடுவாரு..!! "

" யாரை.., நம்மளயா..?! "

ஆனா மனுஷன் எதை பத்தியும்
கவலைபடாம பேசினாரு., பேசினாரு.,
பேசிட்டே இருந்தாரு..

( " எலேய்.. நிறுத்துலே..! இன்னும்
கொஞ்சம் நேரம் பேசுனே..
அப்புறம் கொலை கேஸுல
உள்ளே போயிடுவ..!! " )

நல்லவேளை இவரு MLA ஆகலை..

பின்ன இவரு சட்டசபைல போயி
200 பேருக்கு வணக்கம் வெச்சு பேச
ஆரம்பிக்கறதுக்குள்ள அடுத்த
தேர்தலே வந்துடும்...!!
.
.

23 February 2011

ஹாய் சச்சின்..!!

















சச்சினுக்கு எப்பவும் என்மேல
தனி அன்பு..!!

" உன்னை பாத்தா என் தம்பி மாதிரி
இருக்குடா" ன்னு அடிக்கடி சொல்லுவாரு..!!

( ஆரம்பிச்சுட்டான்யா..!! )

" உஷ்..!! குறுக்க குறுக்க பேசக்கூடாது..
அப்புறம் ( கதை ) மறந்துடும்ல..! "

இருங்க.., ஒரு Flash back சொல்றேன்..!!

Year : 2000

அப்ப எனக்கு MCA Semester Exams
நடந்துட்டு இருந்தது..

அன்னிக்குன்னு பாத்து Ind vs Pak
Oneday Match வேற,,

Match : 9 மணிக்கு.,
Exam : 10 மணிக்கு

எனக்கு செம பீலீங்கா போச்சு..

" அடடா.., நம்மால இன்னிக்கு Exam-க்கு
போக முடியாதேன்னு தான்..!! "
( ஹி., ஹி., ஹி..!! )

ஆனா பாருங்க.. அன்னிக்கு Match-ல
சச்சின் 3rd Over-லயே அவுட்..

( ம்ம்.. எல்லாம் நான் Exam-க்கு போகணும்கற
நல்ல எண்ணத்துல தான்.. )

அப்புறம்.. நான் மனசை தேத்திட்டு
Exam-க்கு போனேன்.. ஆனா
அதுல ஒரு Beauty என்னான்னா..

அன்னிக்கு
மேட்ச்ல சச்சின் எடுத்தது 15 ரன்
Exam-ல நான் எடுத்ததும் 15 மார்க்..
எப்புடி எங்க Friendship..?

சரி., நம்ம Friend சச்சினை பத்தி
நாமே புகழ்ந்துட்டு இருந்தா எப்படி..

இவிங்க எல்லாம் என்ன சொல்லியிருக்காங்க
கொஞ்சம் பாருங்க..

" If I’ve to bowl to Sachin, I’ll bowl with
my Helmet on.
He hits the ball so hard..! "
- Dennis Lillee

" I have seen God.
He bats at Number 4 for India "

- Mathew Hayden

" We did not lose to a team called India...
We lost to a man called Sachin "
- Mark Taylor

Technically, you can't fault Sachin.
Seam or Spin, Fast or Slow nothing is a problem.
- Geoffrey Boycott

" There are 2 kind of batsmen in the world.
One Sachin Tendulkar. Two all the others."
- Andy Flower


" If Sachin plays well.. India sleeps well "
- Harsha Bhogle

" He can play that Leg Glance with
a Walking Stick also..! "
- Waqar Younis

" What we ( Zimbabwe ) need is 10 Tendulkars."
- Paul Strang


" During our team meetings, we often speak about
the importance of the first 12 balls to Tendulkar.
If you get him then you can thank your stars,
otherwise it could mean that tough times lie ahead."
- Allan Donald


" I never get tired during umpiring
whenever Sachin is on crease "
- Rudy Kortzen

" You get him out and half the battle is Won "
- Ranatunga

" His mind is like a computer. He stores
data on bowlers and knows where they are
going to pitch the ball."
- Navjot Sidhu


" In an over I can bowl six different balls.
But then Sachin looks at me as if to say
'Can you bowl me another one?' "
- Adam Hollioke

" He is 99.5 per cent perfect.
I’d pay to see him "

- Viv Richards.


" I want my son to become
Sachin Tendulkar. "
- Brian Lara

" I see myself when Sachin is Batting.."
- Don Bradman


Last But Not Least :
" Commit all your crimes when Sachin is batting.
They will go unnoticed. Because even
the God is watching his Batting..! "
- Placard


@ கிரிக்கெட் ரசிகர்களுக்கு..

கவலையேபடாதீங்க.. இந்த தடவை
World Cup நமக்கு தான்.

எல்லா அம்பயரையும் கரெக்ட்
பண்ணியாச்சுல்ல..!! ஹி., ஹி., ஹி..!!
.
.

22 February 2011

" உலக கோப்பை சவால் " - Points Table


" உலக கோப்பை சவால் " - பரிசு போட்டி..!
Point's Table :

After Match No. 15





L.K 9
Zero to Infinity 8
Sankavi 8
Vino ( வினோ ) 8
RajaGopal 7
Ligori 8
S.K 10
Soundar 6
Lekha 6
Ravikumar 7
Uma 6
T-Mart 12
Pannikutti 6
Jayachandran 9
Anu 7
Rajesh 8
Selva 8
Bahurudeen 9
Ramesh 7
Vigneswaran 8
Nedun 7
S.Maharajan 5
Bharathy 10
Madhavan 7
Jeevabala 7
Hajaa Mohaidin 7
Janarthanan 8
Aru (Su) vai-raj 9
Sasi 12
Prabu 9
Niran 8
Ragothman 7
Pranav 13
Karthikumar 7
Chandra 9
Ashok Palani 8
Imsai Babu 9
Rasigan 7
Royal Ranger 8
Navsaath 8
Sen 22 8
Vimalraj 7
Raji 7
Sirpi 6
Subamenu 8
Sabapathi 8
Vanthiyadevan 7
Dhayalan 6
Naveen Kumar 11
Aathava 6
Vinu 11
Anima 8





Venkat - 8





Match Results :








1.S.A Vs W.I -S.A








2.Aus Vs N.Z - Aus







3.S.L Vs Pak - Pak







4. Ind Vs Eng - Tie







5.Ban Vs W.I - W.I







6.S.L Vs Aus - Abandon







7.Eng Vs S.A - Eng







8.Ken Vs Can - Can







9.Pak Vs N.Z - N.Z







10.Ind Vs S.A - S.A







11.Eng Vs W.I - Eng







12.S.L Vs N.Z - N.Z







13.Ire Vs Ned - Ire







14.Aus Vs Pak - Pak







15.Ind Vs W.I -

Ind


21 February 2011

" உலக கோப்பை சவால் " - பரிசு போட்டி..!





















இது கிரிக்கெட் ரசிகர்களுக்காக
VAS & VKS இணைந்து வழங்கும்
மாபெரும் ( மாசிறும்.?! ) பரிசுப்போட்டி..!!

உலக கோப்பை ஆரம்பிச்சாச்சுல்ல

முதல்ல இந்த பரிசு போட்டியை
VAS மட்டும் தான் நடத்தறதா இருந்தது..
ஆனா VKS-ம் சேர்த்துக்க 2 காரணம்

1. இதுல VKS ரொம்ப ஆர்வமா இருந்தாங்க.

2. எங்களை விட அதிகமா பரிசு Sponser
பண்றேன்னு வேற சொன்னாங்க.
( So., மனசை கல்லாக்கிட்டு., வேற வழியில்லாம
அவங்கள சேர்த்துக்க வேண்டியதா போச்சு.!! )

போட்டி என்னான்னா..

உலககோப்பை லீக் ரவுண்ட்ல ஒரளவு
சமபலம் பொருந்திய Teams மோதும்
15 Matches இங்கே கொடுத்து இருக்கோம்..

இந்த Matches-ல யார் Win பண்ணுவான்னு
நீங்க கணிச்சு எங்களுக்கு கமெண்ட்ல
போடணும் அவ்ளோ தான்..

நீங்க கணிக்க வேண்டிய Matches..

1. Feb 24 - South Africa Vs West Indies

2. Feb 25 - Australia Vs New Zealand

3. Feb 26 - Sri Lanka Vs Pakistan

4. Feb 27 - India Vs England

5. Mar 04 - Bangladesh Vs West Indies

6. Mar 05 - Sri Lanka Vs Australia

7. Mar 06 - England Vs South Africa

8. Mar 07 - Kenya Vs Canada

9. Mar 08 - Pakistan Vs New Zealand

10. Mar 12 - India Vs South Africa

11. Mar 17 - England Vs West Indies

12. Mar 18 - Sri Lanka Vs New Zealand

13. Mar 18 - Ireland Vs Netherland

14. Mar 19 - Australia Vs Pakistan

15. Mar 20 - India Vs West Indies


விதிமுறைகள் :

1. ஒரு சரியான விடைக்கு ஒரு Point.
So., அதிக Points எடுத்தவர் Winner..

2. Winner-க்கு Rs 1000 மதிப்புள்ள
ஒரு Surprise Gift VAS & VKS
சார்பா வழங்கப்படும்...!!
( பரிசு மதிப்பு அதிகமாகவும்
வாய்ப்பு உண்டு..! )

3. ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சமமான
Points எடுத்து இருந்தா.. Prize பகிர்ந்து
அளிக்க படும் ( or ) Winner குலுக்கல்
முறையில் Select செய்யப்படுவார்..

4. கணிப்பு Comment-போடுவோர்.,
அவர்கள் Mail ID-ஐ அடுத்த Comment-ஆக
அவசியம் போடவும்., ( கணிப்பு Comment
மட்டும் Publish செய்யப்படும்.. )

5. இந்தியாவுக்குள் மட்டுமே Prize அனுப்படும்.
வெளிநாட்டில் இருப்பவர் வெற்றி பெற்றால்
அவர் சுட்டிகாட்டும் இந்தியாவில் இருக்கும்
நபருக்கு பரிசு அனுப்படும்.!!

6. Last Date : FEB 24 , மதியம் 12 மணி.

7. 15 கணிப்பையும் ஒரே Comment-ல்
போட வேண்டும்..

8. ஒரு ID-க்கு ஒரு கணிப்பு மட்டுமே
ஏற்றுக்கொள்ளப்படும். ( ஒரு கணிப்புக்கு
மேல் அனுப்பினால்.. கடைசியாக வரும்
கணிப்பை எடுத்துக்கொள்வோம் )

9. Anony Comment ஏற்றுக்கொள்ளபடாது.

10. போட்டியில் VAS & VKS சேர்ந்தவர்களும்
கலந்து கொள்ளலாம்.

11. இந்த பதிவில் கும்மி Avoid செய்யவும்.
வேறு சந்தேகங்கள் இருப்பின் கேட்கலாம்.
.
.

17 February 2011

வாவ்.. What a Confidence..!!

















ஏரோப்ளேன் கம்பெனி ஒண்ணு
ஒரு காலேஜ் புரோபசர்களுக்கு
இலவச விமான பயணத்துக்கு
அரேஞ்ஜ் பண்ணியிருந்தது..

நிறைய Professor-களுக்கு
அது முதல் விமான பயணம்.

So., பல கற்பனைகளோட
அவங்க Plane-ல ஏறி உக்காந்து
இருக்க..

" Welcome to All..! "
( உஷ்..!!! கேப்டன் மைக்ல பேசறாரு..!! )

" உங்களுக்கெல்லாம் இந்த Trip
ஒரு த்ரில் அனுபவமா இருக்க போகுது..! "

( அப்படியா..?!! )

" ம்ம்.. இப்ப நான் உங்களுக்கு
ஒரு Surprise Matter சொல்ல போறேன்..

அது என்னான்னா........

இந்த Plane............

முழுக்க முழுக்க......

உங்க Students தயாரிப்பு..!! "

( ஆ...!!!! ) இதை கேட்டதும்..
எல்லா Professors-ம் ஆடி போயிட்டாங்க..!!

அடிச்சி பிடிச்சு ஒரே ஓட்டமா
Plane-ல இருந்து இறங்கி ஓடிட்டாங்க..

இவ்ளோ களோபரத்துலயும்
ஒரே ஒருத்தர் மட்டும்
கொஞ்சமும் அலட்டிக்கல..
தன் சீட்டை விட்டும் நகரல,,

அவரை பாத்து கேப்டனுக்கு ஆச்சரியம்..

" சார்.., நீங்க..? "

" நான் அந்த காலேஜ் பிரின்சிபால்..!! "

" உங்க Students தயாரிச்ச Plane-ல
பறக்க உங்களுக்கு பயமா
இல்லையா சார்..? "

" இல்லையே..!! "

" உங்க Students திறமை மேல
அவ்ளோ Confident-ஆ சார்..?! "

" மண்ணாங்கட்டி..!! எங்க Students
தயாரிச்சா..... முதல்ல Plane ஸ்டார்டே
ஆகாதே..!! "

" ??!! "

Wow..

What a Principal..!!

What a Confidence..!!
.
.

14 February 2011

மன்மதன் அம்பு -------->




















டிஸ்கி : இது " மன்மதன் அம்பு "
பட விமர்சனம் அல்ல..

இந்த " வேலண்டைன்ஸ் டே "
ஏன் தான் வருதோ..?!!

படா பேஜா......ரா இருக்குப்பா..!!

காலையில இருந்து என் மொபைல்
விடாம Ring அடிச்சிட்டே இருக்கு..

நானும் பேசிப் பேசி Tired ஆயிட்டேன்..

இப்ப கூட என் மொபைலை எடுத்து
பார்த்தா..

@ அனுஷ்கா 5 Missed Calls...

@ தமன்னா 7 Missed Calls...

@ த்ரிஷா 12 Missed Calls...

@ அஞ்சலி 6 Missed Calls...

@ சிநேகா 4 Missed Calls...

Wait.., Wait.., Wait....!!

இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு
எல்லோரும் என்னைய முறைக்கிறீங்க..??

அவரசப்பட்டு " உங்க வீட்டு புள்ளயை "
சந்தேகப்படாதீங்க..

சொல்ல வர்றதை முழுசா கேளுங்க..

இவங்களுக்கெல்லாம் காலையில
நம்ம சிரிப்பு போலீஸ் போன் பண்ணி..

" I Love You "-ன்னு சொல்லி
மிரட்டி இருக்காரு..!!

அதுல பதறி போன இவங்கெல்லாம்
அதை பத்தி Complaint பண்ணத்தான்
எனக்கு போன் பண்ணினாங்க..

என்னங்க ரமேஷு இது...?

இது உங்களுக்கே நியாயமா..?
தர்மமா..? அடுக்குமா..?

பின்ன " கோவை சரளா " கிட்ட
இருந்தும்ல 8 Missed Calls இருக்கு..!!
.
.

11 February 2011

" ஹலோ., நான்...... "

நேத்து நானும் என் Wife-ம்
கோவை போயிருந்தோம்..

போன வேலை சீக்கிரமா முடிஞ்சதால
எங்களுக்கு 2 மணி நேரம் Free Time
இருந்தது..

சரின்னு எங்க Family Restaurant
போனோம்..

ஹி., ஹி.., ஹி.. KFC-தான்

( Bad Donkey.. Small Wall..!! )

( எப்புடி..? KFC Owner கணக்கா போஸ் குடுக்கறேனா..?!! )

அங்கே இருக்கும் போது அருண்கிட்ட
இருந்து போன் வந்தது..

" ஹலோ வெங்கட்... எங்கே இருக்கீங்க..? "

" KFC-ல "

" என்னாது KFC-யா..? இதோ உடனே
வந்துட்டேன்....!! "

( ஆஹா.. உளறிட்டோமோ...!! )

" ஹலோ..நாங்க அங்கே இல்ல..
வெளியே.. வந்து.. ஹலோ.. ஹலோ..!! "

போனை கட் பண்ணிட்டாரு..!!
மறுபடியும் அவர் Mobile-க்கு
Try பண்ணினா..

" Switch Off-ன்னு " வந்தது..

( ஆஹா.. ஒரு முடிவோட தான்யா
இருக்காங்க...!! )

அடுத்த 5 Mins-ல Mr.& Mrs அருண்
KFC-ல ஆஜர்..!!

அப்புறம் உள்ளே போயி.,
சாப்பிட்டே பேசிட்டு இருந்தோம்..
( வேற வழி..?!! )

அப்ப அருண் ஒரு பிரபல பதிவர்
போன் நம்பர் குடுத்தாரு..

( ஹலோ.... யார்ப்பா அது..?
அந்த " பிரபல பதிவர் " நம்ம
சிரிப்பு போலீஸ் ரமேஷ் தானேன்னு
கேக்கறது..?!!

Google-காரன் இதை கேள்விப்பட்டா
Blog Service-ஐயே இழுத்து மூடிட்டு
போயிடுவான்... Be Careful..!!

அருண் குடுத்தது நிஜமாலுமே
ஒரு பிரபல பதிவர் நம்பர்.. )

நான் உடனே அந்த பதிவர்க்கு போன்
பண்ணினேன்..

" ஹலோ.. பதிவர் Mr.X தானே..? "

" ஆமா.. "

" நான் கோகுலத்தில் சூரியன் பேசறேன்.. "

இதை கேட்டதும் கூட இருந்த
3 பேரும் விழுந்து விழுந்து
சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க..

ஏன்..? என்ன ஆச்சு..? இப்ப எதுக்கு
சிரிக்கறீங்க..?

" கோகுலத்தில் சூரியன்னு " Intro
பண்ணிகிட்டீங்கல்ல அதுக்கு தான்
சிரிச்சோம்னு சொன்னாங்க..

இதை கேட்டதும் எனக்கும் சிரிப்பு
தாங்கலை...

" பின்ன நமக்கே இந்த நிலைமைன்னா
பன்னிகுட்டின்னு ஒருத்தர் இருக்காரே..
அவரு என்ன சொல்லி Intro பண்ணிப்பாரு..?? "

ஹா., ஹா., ஹா..!!
.
.

08 February 2011

சூப்பர் கம்பெனி...!!

















நேத்து காலையில என் Wife
அவங்க தம்பி கல்யாணத்துக்கு
கிளம்பிட்டு இருந்தாங்க..

நான் கொஞ்சம் பீலிங்கா இருந்தேன்..
ஏன்னா.., அதுக்கு ஒரு Flashback இருக்கு..
அதை தெரிஞ்சிக்க க்ளிக் Here..

நான் பீலிங்கா இருந்ததை பார்த்த
என் Wife என்கிட்ட..

" ஏங்க ஒரு மாதிரி இருக்கீங்க..?
கல்யாணத்துக்கு போகணும்ல..
சீக்கிரம் எந்திச்சி ரெடி ஆவுங்க... "

" உன் தம்பி கல்யாணத்துக்கு
வர்றதுல எனக்கு 2 கவலை...!! "

" உங்களுக்கு என்ன கவலை..? "

" என் சகலை வேற ஊர்ல இல்லையாம்..
கல்யாணத்துல எனக்கு யார் கம்பெனி
குடுப்பா..? "

" கவலைப்படாதீங்க.. எங்க அண்ணன்
இருக்கான்.. அவன் கம்பெனி குடுப்பான்..!! "

" ம்ஹூம்... என் ரெண்டாவது கவலையே
அதானே..!! "

என் Wife கோபத்துல முறைச்சாங்க..

பார்ரா..! இவங்க அண்ணன் தம்பிகளை
கிண்டல் பண்ணினா மட்டும் என்னாமா
கோவம் வருதுன்னு..

ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது
மனைவியை கோபப்படுத்தி பாக்குற
சந்தோஷம் இருக்கே..

அதெல்லாம் அனுபவிச்சு பாக்கணும்..!!
ஹி., ஹி..!!

கொஞ்சம் நேரத்துல என் Wife-க்கு
ஒரு போன் வந்தது..

போன் பேசிட்டே என் Wife
என்கிட்ட..

" எங்க அண்ணன் தான் போன்
பண்ணி இருக்கான்..!! "

" என்ன சொல்றான்..? "

" நீங்க கல்யாணத்துக்கு வந்து
உங்க Blog பத்தி பேசறதா இருந்தா
அவன் கல்யாணத்துக்கே வரலையாம்.. !! "

" அடப்பாவிகளா.......! "

டிஸ்கி : என்ன பார்க்குறீங்க..?
இந்த பதிவுல இருக்கறது
நம்ம Friend கல்யாண போட்டோ..!!

அடங்க மாட்டோம்ல...
ஹி., ஹி., ஹி..!!
.
.

05 February 2011

ரொம்ப முக்கியம்..!! ( 18+ )




















டிஸ்கி 1 : இந்த பதிவு காலத்தின் கட்டாயம்..!!

டிஸ்கி 2 : இதை படிச்சிட்டு என்னை திட்டி
கமெண்ட் போடுற வேலையெல்லாம்
வெச்சுக்க கூடாது.. இந்த பிளாக்ல
Moderation இருக்கு..

டிஸ்கி 3 : இந்த பதிவு 18 வயசுக்கு
குறைவா உள்ளவங்க படிக்க வேணாம்..

So., 18 வயசுக்கு மேல உள்ளவங்க மட்டும்
Continue...

.
.
.
.
.

" Election வரப்போகுது.. எல்லோரும்
தவறாம ஓட்டு போடுங்க..!! "

பொதுநலன் கருதி வெளியிடுவோர்.
கோகுலத்தில் சூரியன்.


நம்ம பிரதமரே க்யூல நின்னு ஓட்டு
போடும் போது.., நாம ஓட்டு போடாம
இருக்கலாமா..?!!

யோசிங்க.. நல்லா யோசிங்க..!!

பின் டிஸ்கி : இது எங்களுக்கு தெரியாதான்னு
யாரும் உடனே பொங்கிடாதீங்க...

1000 பேர் படிக்கிற பதிவுக்கு கூட
அதிகபட்சமா 40 வோட்டு தான் விழுது..
அதான் பதிவர்கள் கிட்ட வோட்டு போடும்
பழக்கம் கம்மியா இருக்கோன்னு......

ஹி., ஹி., ஹி..!!
.
.

03 February 2011

மறக்க முடியாத சென்னை - 2















சென்னை போன முதல் நாள்
Evening சிரிப்பு போலீஸ் ரமேஷ்
வந்து என்னை Meet பண்ணினாரு..!!

அன்னிக்கு நைட் நானும்., அவரும்
Dinner-க்கு KFC போனோம்..

அப்ப என் பர்ஸ்ல எல்லாமே
500 ரூபா நோட்டா தான் இருந்தது..

சரி பரவாயில்லைன்னு ஒரு 500 ரூபாயை 
ரமேஷ்கிட்ட குடுத்து..

2 சிக்கன் + 2 Veg பர்க்கர் ( Rs 149 )
வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன்..

ஆனா அவர் போயி..
5 சிக்கன்., 2 சிக்கன் பர்க்கர்.,
2 பெப்ஸி வாங்கிட்டு வந்துட்டாரு..

Bill Amount Rs 510..

எனக்கு செம ஷாக்..

" என்னங்க இவ்ளோ வாங்கிட்டு
வந்துட்டீங்க..? "

" Bill அதிகமா போயிடுச்சின்னு Feel
பண்ணாதீங்க வெங்கட்.. நாம Share
பண்ணிக்கலாம்..! "

" அப்படியா..!! அப்ப ஓ.கே..!! "
( எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்தது..)

சாப்பிட்டு முடிச்சிட்டு KFC-ஐ விட்டு
வெளியே வந்துட்டோம்.. ஆனா
ரமேஷ் பணம் எதுவும் எனக்கு தர
மாதிரி தெரியல..

பொறுத்து பொறுத்து பாத்து தாங்காம
நானே அவர்கிட்ட கேட்டுட்டேன்..,

" Bill-ஐ Share பண்ணிக்கலாம்னு
சொன்னீங்கல்ல..? "

" ஆமாம்..!! "

" அப்ப பணத்தை எடுங்க..!! "


" என்னாது.. பணமா..? நல்லா பாருங்க
வெங்கட்.. Bill Amount 510 ரூபா..,
நீங்க 500 ரூபா குடுத்தீங்க..
நான் 10 ரூபா குடுத்தேன்.
நீங்க ஒரு நோட்டு, நான் ஒரு நோட்டு
கணக்கு சரியா போச்சில்ல.. "


" ங்கொய்யாலே.. உங்க ஊர்ல
இதுக்கு பேருதான் Sharing-ஆ..?? "
.
.