சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

28 June 2010

ATM - அமெரிக்காவுல இப்படிதானாம்..!!















டிஸ்கி : Imported from America..

ஒரு Bank புதுசா ஒரு
Drive-in ATM Open பண்றாங்க..

ஆனா ஆரம்பத்தில மக்கள்
அதை Use பண்ண கொஞ்சம்
ரொம்ப சிரமப்படறாங்க..,

So., அந்த Bank-காரங்க ஒரு மாசம்
Close-ஆ Watch பண்ணி.,
அதை எப்படி Use பண்ணனும்னு
Instructions எழுதி வெக்கிறாங்க..

For Men :

1. ATM-கிட்ட Car-ஐ ஓட்டிட்டு வாங்க..

2. கார் Window-ஐ கீழே இறக்குங்க..

3. ATM-ல Card-ஐ Insert பண்ணி.,
PIN நம்பரை Enter பண்ணுங்க..

4. Amount எவ்ளோன்னு Enter பண்ணுங்க..

5. Machine-ல இருந்து Card, Cash, Receipt
எடுத்துக்கோங்க..

6. கார் Window-ஐ ஏத்திக்கோங்க..

7. காரை Start பண்ணி கிளம்புங்க..

For Women :

1. ATM-கிட்ட Car-ஐ ஓட்டிட்டு வாங்க..

2. ப்ளீஸ் கொஞ்சம் Reverse வாங்க..

3. Safety-க்கு Hand Brake போட்டுக்கோங்க..

4. " அப்புறம் பேசறேன்னு " சொல்லி
Cell Phone-ஐ கட் பண்ணுங்க..

5. Hand Bag எங்கே இருக்குன்னு தேடுங்க..

6. அதுல இருக்கிற Makeup Things-ஐ எல்லாம்
வெளியே எடுத்துட்டு., ATM Card-ஐ கண்டுபிடிங்க..

7. Card-ஐ ATM-ல Insert பண்ணுங்க..

8. கதவு திறந்து முயற்சி பண்ணுங்க..,
Machine தூரமா இருக்குல்ல..

9. Card-ஐ நேரா திருப்பி வெச்சி மறுபடியும்
Insert பண்ணுங்க..

10. Handbag-ல இருக்கிற உங்க டைரிய
தேடி எடுங்க..

11. அந்த டைரில கடைசி பக்கத்தில எழுதி
வெச்சிருக்கிற PIN Number-ஐ பாருங்க..

12. PIN நம்பரை Enter பண்ணுங்க..

13. Cancel பண்ணுங்க., Correct-ஆ மறுபடியும்
Enter பண்ணுங்க..

14. Amount எவ்ளோன்னு Enter பண்ணுங்க..

15. Car கண்ணாடியில Lips Stick-ஐ சரி பண்ணிக்கோங்க...

16. ATM-ல இருந்து Cash, Receipt எடுத்துக்கோங்க..

17. Cash-ஐ Handbag-ல வைங்க..

18. Makeup-ஐ ஒரு தடவை Check பண்ணிக்கோங்க..

19. காரை Start பண்ணி ரெண்டு அடி முன்னாடி விடுங்க..

20. Reverse வாங்க..

21. ATM Machine-ல இருந்து Card-ஐ எடுங்க.

22. உங்களுக்கு பின்னாடி வெறுத்து போயி
நிக்கிற அந்த ஆளை கேவலமா ஒரு Look விடுங்க..

23. Cell Phone-ஐ Redial பண்ணி பேச்சை
Continue பண்ணுங்க..

24. ம்ம்.. வந்த வேலை Easy-ஆ முடிஞ்சது.,
இப்ப நீங்க கிளம்புங்க..

25. 2 Kms போனவுடனே மறக்காம
Hand Brake Release பண்ணிக்கோங்க..


PIN குறிப்பு :

என்ன துணிச்சல் இருந்தா பொண்ணுங்கள
இப்படி கிண்டல் பண்ணுவாங்க
இந்த Americans..

இதையெல்லாம் பார்த்திட்டு வெங்கட்
சும்மா இருப்பான்னு நினைச்சாங்களா..??!!

ஐ.நா.சபையில சொல்லி OBAMA மேல
ஈவ் டீசிங் கேஸ் போடலாமா..??














.
.

24 June 2010

யதார்த்தம்..!!!



















Early Morning 5 மணிக்கு எந்திரிச்சி.,
Refresh பண்ணிட்டு.,
கொஞ்ச நேரம் Walking & Exercise
முடிச்சிட்டு வீட்டுக்கு
வந்தா மணி 6.10.

Wife குடுக்கிற ஒரு Cup Coffee-ஐ
வாங்கிட்டு Morning News Paper-ஐ
ஒரு Look விட்டுட்டு திரும்பினா
மணி 6.30.

Laptop-ஐ எடுத்து.,
என் Blog-ஐ Open பண்ணி
Comments எதாவது வந்திருந்தா
Reply பண்ணிட்டு.,

Chat-ல யாராவது இருந்தா
ஒரு 10 Minutes பேசிட்டு.,
Time -பாத்தா மணி 7.30

ஓ.. குழந்தைங்களுக்கு வேற
School -க்கு Time ஆச்சே..!!.
Wife Lunch Prepare பண்ணிட்டு
இருப்பாங்க..

குழந்தைங்களுக்கு Uniform போட்டு.,
School Bag-ல - Book., Note., Pencil Box
எல்லாம் எடுத்து வச்சு.,
Shoe Polish போட்டு., மாட்டி விட்டு
School Bus-ல ஏத்தி விட்டுட்டு
வந்தா மணி 8.10.

அவசர அவசரமா Shaving.,
குளியல் முடிச்சி Ready ஆகி
Breakfast-அ Very Fast-ஆ முடிச்சி.,
Bus Stop-க்கு ஓடினா...

Thank God.. நான் போக வேண்டிய
Bus அப்பதான் வரும்..

Bus-ல ஏறி., Ticket வாங்கி.,
Seat கிடைச்சா உக்கார்ந்துட்டு.,
இல்லைன்னா Standing-லயே
போயி Office வாசல்ல இறங்கி..,
உள்ளே போகும் போது
10 Minutes Late ஆகியிருக்கும்..

Boss-கிட்ட சின்ன Excuse கேட்டுட்டு.,
நேத்து Pending வெச்ச Work-ஐ
எல்லாம் முடிச்சிட்டு நிமிர்ந்தா
Lunch Break..

Canteen-ல ஒரு Meals Order
பண்ணி சாப்பிட்டுட்டு வந்து.,
Work-ஐ மறுபடியும் Continue
பண்ண வேண்டியது தான்..

Evening 6.30-க்கு வீட்டுக்கு வந்தா
ரொம்ப Tired-ஆ இருக்கும்..

அப்படியே ஹாயா Chair-ல
உக்கார்ந்திட்டு.,
Tv Remote-ஐ தேடி எடுத்து.,
Tv-ஐ ON பண்ணினா...

" செம்மொழி., செம்மொழின்னு
ஓடிட்டு இருக்கு..!! "

சூன் 23 - சூன் 28 வரை இப்படிதானாம்..
அதென்ன சூன்..? 'ஆனி ' சொல்லலாமே..!! )

என் மனசுல ஒரு சின்ன கேள்வி..

" செம்மொழி " - தமிழ்..,
சரி.., ஆனா...
இப்ப நம்மொழி தமிழா..??!!


ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( என் மனைவி )
ஒரு நாள் முழுக்க English கலக்காம
உங்களால பேச முடியுமா..?

Oh Sure..!!

இன்று ஒரு தகவல் :
---------------------

மூணு சினிமா தயாரிப்பாளர்களோட
சினிமா Companies பெயர் இது...

கலாநிதி மாறன் - Sun Pictures

உதயநிதி ஸ்டாலின் - Red Giant Movies

தயாநிதி அழகிரி - Cloud Nine Movies

அப்படியே " ஊருக்கு உபதேசம்னு "
யாராவது ஒரு Company ஆரம்பிச்சா
நல்லா இருக்கும்..!!

ஹி., ஹி., ஹி..!
.
.

21 June 2010

சூப்பர் சிங்கர்..!!




















பாட்டு பாடறதுன்னா எனக்கு
அல்வா சாப்பிடற மாதிரி..

எவ்ளோ கஷ்டமான
பாட்டா இருந்தாலும்
சும்மா பிச்சி உதறிடுவேன்..

இது எனக்கு பூமாதேவி - Sorry.,
ஸ்ரீ தேவி - மறுபடியும் Sorry.,
ஆங்.. கலைவாணி கொடுத்த வரம்.

எனக்குள்ள ஒளிஞ்சிட்டு இருந்த
சங்கீத திறமைய என் பாட்டிதான்
முதல்ல கண்டுபிடிச்சாங்களாம்..

மூணு வயசுலயே இங்கிலீஷ்
பாட்டெல்லாம் அருமையா
பாடுவேனாம்..

Baa baa Black Sheep...,
Twinkle Twinkle Little Star...!!

நான் குழந்தையா இருந்தப்ப
" இசை மேதை "
பாலமுரளி கிருஷ்ணா சார்
"அட.., இந்த குழந்தை பார்த்தா
ஞானப்பால் குடிச்சி வளர்ந்த
குழந்தை மாதிரி தெரியுதேன்னு..!! "
சொன்னாராம்..

எங்க ஊரை சுத்தி பாட்டு Competition
எங்கே நடந்தாலும் நான் பெயர்
குடுத்துடுவேன்..

அப்புறம் அவங்க Competition-ஐ
Cancel பண்ணிடுவாங்க..

நான் பாடப்போறேன்னு தெரிஞ்சா
கூட்டம் அலை மோதும்ல...,
அவங்களால சமாளிக்க முடியாது..

A.R.ரஹ்மான் Music-ல
ஒரே ஒரு பாட்டாவது
நான் பாடணும்கறதுதான்..,
A.R.ரஹ்மானோட லட்சியம்..

ஆனா அதுக்கு சான்ஸ்
ரொம்ப கம்மி..,

இவ்ளோ திறமையிருந்தும்
S.P.B., யேசுதாஸ் வரிசையில
நான் ஏன் சினிமாதுறைக்கு
வரலை தெரியுமா..?

" வெங்கட்., எனக்கு போட்டியா
வந்துடாதீங்கன்னு "
ஹரிஹரன் என்னை கெஞ்சி
கேட்டுக்கிட்டாரே..!!

என் Range-க்கு இல்லைன்னாலும்
அவரும் நல்லாத்தானே பாடுறார்..
அதான் விட்டுகொடுத்துட்டேன்..

இந்த விஷயத்தில என் Wife-க்கு
ஒரே ஒரு சந்தேகம்தான்..

ஹரிஹரன் சுயநலத்தில
அப்படி கேட்டாரா..?
இல்ல
பொது நலத்தில அப்படி
கேட்டாரான்னு..?

ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( மாலா )
பதிவு போடுறவங்கள " பதிவர்னு "
சொல்றோம்.. அப்ப இங்கிலீஸ்ல
Post போடுறவங்களை
Poster-ன்னு ஏன் சொல்றதில்ல..?

உங்க லாஜிக் தப்பு.. இப்ப..,
பேப்பர் போடுறவன் பேப்பர்காரன்.
பால் போடுறவன் பால்காரன்.,
தபால் போடுறவன் தபால்காரன் - அப்ப
பிச்சை போடுறவன் பிச்சைக்காரனா..???


இன்று ஒரு தகவல் :
---------------------

நேத்து Evening ஜாலியா
" காதலின் தீபமொன்று.. "
பாட்டு பாடிட்டு இருந்தேன்..
அப்ப என் Wife..

" ஏங்க.. பாடறதை கொஞ்சம் நிறுத்தறீங்களா..! "

" ஏன்..? உனக்கு இந்த பாட்டு பிடிக்காதா..? "

" ரொம்ப பிடிக்கும்.. அதனால தான்......... "
.
.

19 June 2010

இப்படி பேசணும்லே English..!!!
























டிஸ்கி :
1. இது எனக்கு Mail-ல வந்தது..
ரொம்ப ரசிச்சேன்..,
இதை பல பேர் ஏற்கனவே
படிச்சி இருக்கலாம்.. இதை
படிக்காத சில பேருக்காக இப்போ ..

2. இந்த Mr.X - நான் இல்லப்பா..

Mr.X runs a college which is reputed for
its student placements,discipline and good facilities.

# Mr.X @ the ground :

All of you stand in a straight circle...

The girl with the mirror please comes her…
( Means: girl with specs please come here ).


# Mr.X to a boy, angrily :

I talk, he talk, why you middle middle talk..?


# Mr.X while punishing students :

You, rotate the ground four times…!!

You, go and understand the tree…!!

You three of you stand together separately...!!

Both of u three get out of the class...!!

Why are you late.. - say YES or NO …..(?)


# Mr.X @ his best inside the Class room :

Open the doors of the window.,
Let the Air Force come in.

Cut an apple into two halves.,
I will take the bigger half.

Shhh…, Quiet boys…,
the principal JUST PASSED AWAY in the corridor

You, meet me behind the class..
(Meaning AFTER the class..)

Girl Girl talk.., Boy Boy talk., But no Boy Girl talk..

Take 5 cm wire of any length….


# Mr.X @ college day :

“ This college strict u the worry no ….
U get good marks, I the happy.,
tomorrow u get good job, Mr.X the happy,
tomorrow u marry I the enjoy”


# Mr.X @ Fresh years day :

No ragging this college..,
Anybody rag we arrest the police..(?)


# Mr.X about his family :

I have two daughters. Both of them are girls...(?)


# Mr.X @ his Best :

Mr.X had once gone to a film with his wife.
By chance, he happened to see one of his Student
at the theatre, though the boy did not see them.

So the next day @ College (to that boy)..
“ Yesterday I saw you WITH MY WIFE
@ the Cinema Theatre.. (?!) ”
.
.

17 June 2010

கிளி பேச்சு கேட்கவா..!!?























அது ஒரு ஏல கம்பெனி..,

அன்னிக்கு ஏலம் ஒரு
அழகான கிளி..

இந்த கிளி பேசும்., பாடும்.,
புத்திசாலி கிளின்னு வேற
எழுதி வெச்சிருந்தாங்க..

அதை பார்த்த ஒருத்தனுக்கு
ஆசை வந்துடுச்சி..

எவ்ளோ செலவானாலும் சரி
இந்த கிளியை வாங்கிடணும்னு
முடிவு பண்ணி ஏலத்துல
கலந்துக்கறான்..

ஆனா ஏலத்துல பயங்கர போட்டி.,

இவன் எவ்வளவுக்கு கேட்டாலும்
அதைவிட அதிகமா ஏலம்
கேட்டுட்டே இருக்காங்க..

இவனும் விடறதா இல்ல..
நூறு ரூபாய்க்கு ஆரம்பிச்ச ஏலம்
10,000 ரூபாய்க்கு வந்து முடிஞ்சது..

இவன் ஜெயிச்சி கிளியை
கையில வாங்கிடறான்..

ஆனாலும் அவனுக்கு ஒரு சந்தேகம்.,
கடைக்காரன்கிட்ட கேட்கறான்..

" ரொம்ப அதிக விலை கொடுத்து
இந்த கிளியை வாங்கிட்டேன்..
இது பேசுமா..? "

அப்ப அந்த கிளி சொல்லுது..

" ஏய்.. லூசு..!! இவ்ளோ நேரம்
உனக்கு போட்டியா ஏலம் கேட்டது
யார்னு நினைச்சே..? "

ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

(ரமேஷ்)
மூட்டைப்பூச்சி எத்தனை கிலோ
மூட்டை தூக்கும்..?

வரிக்குதிரை எவ்ளோ வரி
கட்டுமோ அவ்ளோ..

இன்று ஒரு தகவல் :
---------------------

நாம நிதானமா வருத்தப்படறதெல்லாம்
அவசரத்துல எடுத்த முடிவுக்காதான்
இருக்கும்..!!
.
.

14 June 2010

மன்னிச்சுக்கோங்க ஜி...!



















நேத்து ஒரு SMS படிச்சேன்..

யாரோ நிக்க வெச்சு கன்னத்துல
பளார்., பளார்னு அறையிற
மாதிரியே இருந்தது..

அது ஜோக்கை பத்தின SMS.,
ஆனா ஜோக்கான SMS இல்ல..

நாம நிறைய சர்தார்ஜி ஜோக்ஸ்
படிச்சிருக்கோம்., சிரிச்சிருக்கோம்.,
மத்தவங்களுக்கு Forward-ம்
பண்ணி இருக்கோம்..

ஆனா ஒரு தடவை கூட
சர்த்தார்ஜிகளை இப்படி கிண்டல்
பண்றது சரியான்னு யோசிச்சி
இருக்க மாட்டோம்...

Actualy இந்த சர்தார்ஜி ஜோக்ஸ்
ஆரம்பிச்சி வெச்சதே
இங்கிலீஸ்காரங்க தான்..

சுதந்திர போராட்ட காலத்தில
இங்கிலீஸ்காரங்களுக்கு
பெரிய தலைவலியே
சர்தார்ஜிஸ் ( பஞ்சாப் மக்கள்) தான்..

அவங்கதான் எல்லா
போராட்டங்கள்லயும்
முழு மூச்சா கலந்துகிட்டாங்க..
ஆக்ரோஷமா போராடினாங்க..

உதாரணத்துக்கு..,

விடுதலை போராட்டத்தை ஒடுக்க
பிரிட்டிஷ் அரசு கொடூரமான
அடக்குமுறை சட்டத்தை
பஞ்சாப் சட்டசபையில
நிறைவேற்றியது.

அதை எதிர்த்து சட்டமன்றத்தில்
குண்டு போட்ட மாவீரன் பகத்சிங்..

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு
உத்தரவிட்ட " Michael O'Dwyer -ஐ "
21 வருஷம் Wait பண்ணி.,
லண்டனுக்கே போயி சுட்ட
உத்தம்சிங்..

இவங்கல்லாம் சர்தார்ஜிங்க
வீரத்துக்கு ஒரு சின்ன Sample...

சுருக்கமா சொல்லணும்னா..,
இங்கிலீஸ்காரனோட
கோபத்தின் வெளிப்பாடு - ஜாலியன் வாலாபாக்
இயலாமையின் வெளிப்பாடு - சர்தார்ஜி ஜோக்ஸ்

இன்னிக்கும் நம்ம
இந்திய ராணுவ வீரர்கள்ல
அதிகபடியானவங்க சர்தார்ஜிங்க தான்..

இப்படி தேசபற்று மிக்கவங்களை
"முட்டாள்னு " நாம சொல்றது சரியா..??

இப்ப நான் புரிஞ்சிக்கிட்டேன்..
" Singh iz King "


ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( கீர்த்தி )
School, College-ல எல்லாம் பியூன்
கொண்டு வர்ற " Circular " Notice
ஏன் Rectangular Paper-ல இருக்கு..?

அதுல இருக்கிற Matter
நாலா பக்கமும் போய் சேரணுமில்ல..
அதுக்குதான்..

இன்று ஒரு தகவல் :
---------------------

கஷ்ட்டப்பட்டு வேலை பண்ணுங்க..,
பணக்காரங்க எல்லாம் உங்களை
நம்பிதான் இருக்காங்க...!!
.
.

11 June 2010

தில்லாலங்கடி..!!
























எங்க காலேஜ்
Speech Competition-க்கு நான்
Prepare பண்ணிட்டு இருந்தேன்..

அப்போ எங்க Class பசங்க
என்னை ரவுண்ட் பண்ணிட்டாங்க..

" மேடைக்கு போனோமா..,
Topic-ஐ பேசினோமான்னு
இருக்கணும்.., அதை விட்டுட்டு
Prize வாங்கறதுக்காக
உன் தில்லாலங்கடி வேலைய
அங்கே போயும் காட்டினே..
பிச்சிபுடுவோம் பிச்சி..!! "

ஏன் இந்த கொலைவெறி..?

ஏன்னா எல்லோரும் வணக்கம்
சொல்லிட்டு தான் Matter-ஐ
ஆரம்பிப்பாங்க..

நான் தான் வணக்கத்திலயே
Matter வெச்சி இருப்பேனனே..!!

ஹா., ஹா.., ஹா.. ( வில்லன் சிரிப்பு )
இந்த மிரட்டலுக்கு எல்லாமா
நான் பயப்படுவேன்..

ஊதி அணைக்கறதுக்கு
நான் ஒண்ணும் தீக்குச்சியில்ல - " எரிமலை "

அன்னிக்கு நான் மேடையில
இப்படிதான் பேச ஆரம்பிச்சேன்...

இங்கே Super Star போல் உட்கார்ந்து
இருக்கும் Chief Guest அவர்களே..!!

இந்தியாவின் ஜனாதிபதியாககூட
வர தகுதி உடைய Principal Sir அவர்களே...!!

Computer புயல்., இந்தியாவின் Bill Gates
எங்கள் தங்கம் H.O.D Sir அவர்களே..!!

Windows என்ன ஜுஜுபி.,
அதை விட சிறப்பான Doors-சே
Develop செய்யும் திறமைமிக்க ஆசிரியர்களே...!!

மற்றும்

என் ரசிகர்களே..,
என் ரத்தத்தின் ரத்தங்களே..!!

நீதி : யார் என்ன சொன்னா என்ன..?!
நமக்கு எப்பவும் Target தான் முக்கியம்..
அதை அடையறதுக்கு இப்படி தில்லாலங்கடி
வேலை பண்ணுறது தப்பே இல்ல...

ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( அருண் பிரசாத் )
" கோகுலத்தில் சூரியன்னு "
ஏன் ப்ளாக் பெயர் வெச்சிருக்கீங்க..?
குமுதத்தில் நிலா.,
ஆனந்த விகடனில் நட்சத்திரம்.,
நக்கீரனில் செவ்வாய் கிரகம்னு வெச்சிருக்கலாம்ல.?

ஏன் இந்த குங்குமம்., கல்கண்டு.,
ஜூனியர் விகடன், கிரைம் நாவல்
இதையெல்லாம் விட்டுட்டீங்க..?

கோகுல் & சூர்யா ரெண்டும்
என் பசங்க பேரு..

இன்று ஒரு தகவல் :
---------------------

Stage-ல யார் வேணா பேசலாம் - ஆனா..,
Coma Stage-ல யாருமே பேச முடியாது..!!
.
.

08 June 2010

ஸ்கூல்னாலே டென்ஷன்தானா..?!?
























அது எங்க வீட்டுக்கு
பக்கத்தில இருக்கிற ஸ்கூல்..,

என் சின்ன பையனை
Pre KG-ல Admission பண்ண
அங்கே போயிருந்தேன்.

அங்கே Admission பண்ணிட்டு
இருந்த Madam என்னை
கொஞ்சம் Wait பண்ணுங்கன்னு
சொன்னாங்க.

( ஒருவேளை நம்ம Blog பத்தி
பாராட்டறதுக்கா இருக்குமோ..!! )

ஒரு மணிநேரம் ஆச்சு..
எனக்கு பின்னாடி வந்தவங்க
எல்லாம் Admission பண்ணிட்டு
போறாங்க.. ஆனா என்னை
கூப்பிடற மாதிரி தெரியல.,

அப்புறம் நானே போயி..

" Madam என்ன Problem..? "

" உங்க Family-ல எல்லாரும்
குழந்தைகளை இங்கே LKG
வரைக்கும் தான் படிக்க வெக்கறீங்க..
அப்புறம் வேற School மாத்திடறீங்க..! "

" ஆமா.. அதனால என்ன..? "

" அதனால ஆயிரம் ரூபா Donation
குடுங்க அப்பதான் உங்களுக்கு
சீட் தருவோம்னு.." சொல்லிட்டாங்க..

எனக்கும் அந்த Madam-க்கும்
பெரிய Arguement நடந்தது..

நானும் Donation தர மாதிரி இல்ல.
அவங்களும் சீட் தர மாதிரி இல்ல..

Donation கேட்டது தப்பில்ல..,
ஆனா அதுக்கு அவங்க
சொன்ன காரணமும்,
கேட்ட விதமும் தான் தப்பு.

எனக்கு சரியான கோவம்..

கோகுலத்தில சூரியன்
Blog Owner-க்கே இந்த
நிலைமைன்னா..?!!
அப்பாவி ஜனங்க எல்லாம்
என்ன பாடு படுவாங்க..??

இந்த பிரச்சினைய
இப்படியே விடக்கூடாது..

நேரா Principal ரூமுக்கு
போனேன்..

அவர் நல்ல மனுஷன்..
இந்த பிரச்சினைய கேட்டு
அவர் டென்ஷன் ஆயிட்டாரு..

உடனே அந்த Madam-க்கு
போன் பண்ணி சீட் குடுக்க
சொல்லிட்டாரு...

என்கிட்ட திரும்பி...
" நீங்க ஒண்ணும் மனசுல
வெச்சுக்காதீங்க சார்.. உங்க
Son-ஐ Special-ஆ கவனிக்க
சொல்றேன்..!! " சொன்னார்

நானும் சந்தோஷமா Admission
பண்ணிட்டு வெளிய வந்தேன்..

அங்கே Admission-க்கு
என் Friend நின்னு இருந்தான்..

ஆஹா நம்ம வெற்றியை
கொண்டாட ஒரு ஆள் சிக்கிட்டான்ல..

அவன்கிட்ட எல்லாத்தையும்
சொன்னேன்.. கேட்டுகிட்டான்..
அப்புறம்..

Friend : உன்கிட்ட ரவுசு பண்ணின
அந்த மேடம் யார் தெரியுமா..?

நான் : தெரியாதே..

Friend : அவங்கதான் Principal சாரேட Wife..

நான் : ஆ...! அட கடவுளே..!!
என் பையனை வேற
Special-ஆ கவனிப்பாங்கன்னு
Principal சொன்னாரே..!!

நிஜமாலுமே " Special-ஆ "
கவனிச்சிடுவாங்களோ..?!

ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( கவிதா )
உங்க Answer Paper-ல கூட 3 புள்ளி,
3 கேள்விக்குறி, 4 ஆச்சரியக்குறி
எல்லாம் போட்டு தான் எழுதுவீங்களா..?

என்ன இப்படி கேட்டுட்டீங்க..?
ஒரு தடவை எங்க மேடம்
என்னை கூப்பிட்டு...

" இந்த புள்ளி, கேள்விக்குறி,
ஆச்சரியக்குறி எல்லாம் ஓ.கே..
அப்படியே நாலு வரி எதையாவது
எழுதி வைடான்னு திட்டினாங்க..!! "

இன்று ஒரு தகவல் :
---------------------

நீங்க உங்கள மாதிரி இருங்க..
மத்தவங்க மாதிரி இருக்க
மத்தவங்க இருக்காங்க..
.
.

03 June 2010

ஆஹா., நாமளும் Century போட்டுடோம்ல..!!


இது என் 100-வது Posting..

ஒரு புதுமையான,
Different-ஆனா,
அதிரடியான Posting-ஐ
எதிர்பார்த்தீங்களாக்கும்...!

நான் தான் சொல்றேன்னா
நீங்களாவது
யோசிக்க வேணாம்..?!

99 Posting-ல முடியாதது.,
100-வது Posting-ல மட்டும்
இவனால எப்படி முடியும்..?!!

ஒண்ணா இருந்தா என்ன..,
நூறா இருந்தா என்ன..?

நம்ம வழி எப்பவும்
அதே குறுக்கு வழி தான்..!!

For Eg..
இப்ப சைக்கிள் ஓட்ட
கத்துக்கறோம்.,

கத்துகிட்டு 100 நாள்
ஆயிடிச்சீங்கறதுக்காக
ஸ்பெஷலா தலைகீழாவா
ஓட்ட முடியும்..?

ஹி., ஹி.., ஹி.

FAQ :
--------

1. " நான் மாதவன் சாயல்ல இருக்கேன்னு "
நீங்களே அடிக்கடி சொல்லிக்கறீங்களே.
இது உங்களுக்கே ஓவரா தெரியல..?

I Strongly Object this..

" நான் மாதவன் சாயல்ல இருக்கேன்னு "
சொன்னதே கிடையாது..

" மாதவன் என் சாயல்ல இருப்பார்னு "
வேணா சொல்லி இருக்கேன்..

ஹி., ஹி.,ஹி..!

காந்தியை சுட்டது கோட்சே ன்னு
சொல்லலாம் - ஆனா
கோட்சே சுட்டது காந்தியை ன்னு
சொல்லக்கூடாது..!!

Check பண்ண
இங்கே Click பண்ணுங்க..


2. எதாவது உருப்படியா.,
Informative-ஆ எழுதலாம்ல..?

நான் என்ன வெச்சிகிட்டாங்க
வஞ்சனை பண்றேன்..?!


3. நீங்களும் மத்த Bloggers மாதிரி
கார சாரமா எதாவது எழுதலாமே..?

இவ்ளோ தானே உங்க ஆசை..
எழுதிட்டா போச்சு..

மிளகா பஜ்ஜி., இஞ்சி மரப்பா.,
பச்சை மிளகா., வர மிளகா.,
சில்லி சிக்கன்., மிளகு.,

இந்த காரம் போதும்களா..??


4. உங்களுக்கு 63 Followers இருக்காங்க.,
ஆனா Vote மட்டும் 10 தான் விழுவுது..
ஏன்..? ( இத்தனைக்கும் நானே
ரெண்டு Votes போடறேன்.. )

ஹி., ஹி., ஹி..!
Same Pinch..
யாரப்பா மீதி அந்த 6 நல்லவங்க..!


5. எப்படிங்க உங்களால தொடர்ச்சியா
100 ___________ Posting போட முடிஞ்சது..?
( மொக்கை, சூப்பர் )

ஹா., ஹா., ஹா..,

இது என் 100-வது Posting..
So., இன்னிக்கு பஞ்ச்
டயலாக் English-ல..

" Extraordinary has always
been Ordinary for me..!! "


இன்று ஒரு தகவல் :
---------------------

உங்களை எல்லாம் பார்த்தா
எனக்கு பாவமா இருக்கு..

So., Next Posting கொஞ்சம் லீவ்
விட்டு போடலாம்னு இருக்கேன்..

எவ்ளோ நாள் லீவ் வேணும்..?
3, 7 , 10 ( or ) 30..?
சரி Poll-ல Vote போட்டு
நீங்களே Decide பண்ணிக்கோங்க..

ஆனா.,
ஒரு மாசத்துக்கு மேல லீவ் கேட்டு
யாரும் எங்கிட்ட வராதீங்க..

அவ்ளோ நாள் உங்களை
சந்தோஷமா இருக்க விட
கம்பேனி Rules-ல இடமில்ல..
.
.