சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

30 July 2010

வெச்ச குறி..!!


அப்போ நான் 9th Std.

வேற ஒரு School-ல
Drawing Competition...

அதுல கலந்துக்க
எங்க School-ல இருந்து
10 பேரை கூட்டிட்டு போனாங்க..

அதுல
9th Std A - சுதா.,
9th Std B - நான்.,

எங்களுக்கு படம் வரைய
குடுத்த Title..

" Violence and Non- Violence "

எனக்கு பக்னு ஆயிடுச்சு..

" Violence " - இதுக்கு முன்னாடி
இந்த வார்த்தையை நான்
கேள்விபட்டதே இல்லை..

இதுக்கு என்ன Meaning..?

மத்த பசங்க எல்லாம் வரைய
ஆரம்பிச்சுட்டாங்க..

எங்க English மிஸ் மேல
எனக்கு கோபம் கோபமா வந்தது..

பின்ன., நானும் ஒழுங்காதானே
Fees கட்டினேன்..!!?

எனக்கு மட்டும் Violence-ன்னு
ஒரு வார்த்தை English-ல
இருக்குன்னு சொல்லி தரலையே..
ஏன்..?
ஏன்..?? ஏன்..???

சரி.., பக்கத்தில யார்கிட்டயாவது
கேட்கலாம்னு பார்த்தா..
பக்கத்தில இந்த சுதா பொண்ணு..

அந்த பொண்ணு சும்மாவே
நம்மள மதிக்காது..
இந்த Doubt வேற கேட்டா
அவ்ளோதான்.

எல்லாம் நம்மள விட
20 மார்க் கூட எடுக்குற திமிர்...
( ஒவ்வொரு பாடத்திலயும்..)

முன்னாடி பெஞ்ச்ல இருந்தவன்கிட்ட
இந்த தலைப்புக்கு என்ன
அர்த்தம்னு கேட்டேன்...

" அஹிம்சையும் , தீவிரவாதமும்னு "
சொல்லிட்டு...

என்னை கேவலமா ஒரு லுக்
வேற விட்டான்...

( இந்த சின்ன விஷயத்துக்கு
ஏன்டா இப்படி தீவிரவாதி
மாதிரியே முறைக்குற..??!! )

அப்புறம் என் கற்பனை குதிரையை
தட்டி விட்டேன் பாருங்க...

காந்தி தாத்தா ஒரு புறாவை
பறக்க விடற மாதிரியும்..,

ஒரு வேடன் ஒரு புறாவை
அம்பு விட குறி பார்க்குற
மாதிரியும் ஒரே பக்கத்தில
ரெண்டு படம் போட்டேன்..

படம் சூப்பரா வந்திருந்தது..
Prize Guarantee-ன்னு மனசுல
நினைச்சுக்கிட்டேன்..

ஆனா Result வந்தப்போ
எனக்கு Prize கிடைக்கலை..
ரொம்பவே Feel ஆயிட்டேன்..

அப்போ என் Friend மணி
சொன்ன ஆறுதல் வார்த்தை
இருக்கே..

துவண்டு போயிருந்த என்னை
தூக்கி நிறுத்தின வார்த்தை அது...

" ரொம்ப Feel பண்ணாதடா...
சுதாவுக்கும் Prize கிடைக்கலை...!! "

" என்னாது.., சுதாவுக்கும் Prize
இல்லையா..?
ஆஹா
.. கேட்கவே எவ்ளோ
சந்தோஷமா இருக்கு...!! "


பின் குறிப்பு :

Prize வாங்க நான் வெச்ச குறி
எப்படி சொதப்பிச்சின்னா...

படமெல்லாம் நல்லா தான்
வரைஞ்சிருந்தேன்.. - ஆனா
Title-ஐ தான் மாத்தி எழுதிட்டு
வந்திட்டேன்..

காந்தி தாத்தாவுக்கு - Violence

வேடனுக்கு - Non- Violence

( காந்தி தாத்தா மன்னிக்க.. )

அது என் தப்பில்லைங்க..

Violence and Non- Violence-க்கு
Meaning கேட்டப்ப அந்த லூசுப்பய

" அஹிம்சையும் , தீவிரவாதமும்னு "
தானே சொன்னான்..

நான் என்ன பண்றது..??
.
.

36 Comments:

ஆதவா said...

எனக்கும் ஓவியத்தில் ஆர்வமுண்டு. சுமாரா கிறுக்குவேன்.
என் அப்பா ஒரு ஓவியர்தான்.

உங்களது அந்த ஓவியத்தை எங்களுக்குக் காண்பிக்கலாமே..

ப.செல்வக்குமார் said...

மாபெரும் தேர்தலுக்குப் பின்னர் இன்று எனது முடிவினை அறிவிக்கின்றேன்..!! ஆம் .. அமைதி.. அமைதி ..!! சற்று பொறுமையாக இருங்கள் .. நமது TERROR அவர்களின் இந்த அறிவுரையினை அடுத்து (செல்வா!!! அன்பா தராங்க சொல்லி அசிட் குடிச்சிடாத) நான் VAS இல் சேர்ந்து விடுவது என்று முடிவெடுத்துள்ளேன் ..!! ஆகையினால் பதிவுலகில் இதுவரை நிகழ்ந்து வந்து பரபரப்பு குறைய வாய்ப்புள்ளது ..!!

Thenral said...

Aahaa!asathiyirukka vendiya chancea miss panniteengale!Paravailla intha anubavam blog ezhudha udhavudhulla santhoshapattukkonga (sudhavukku vera prize kidikkalanguradhu bonus dane!)

Chitra said...

நல்ல வேளை - ஒரு பக்கம், புறா கறியும் - அடுத்த பக்கம், புறா விடு தூதும் வரையலியே ..... !!!!! :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

kadaisiyaa neenga 9th std thaan padichchirukkeengannu therinju pochchu. hahaaa

Manish said...

Latest Update :

ஒரு 5 வருஷம் முன்னாடி வெங்கட் எங்கிட்ட சொன்னது.

சுதாவை ஒரு ஹாஸ்பிடல்ல ட்யூட்டி டாக்டரா பார்த்தாகவும்,
ரெண்டு பேரும் தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கல.
ஒரு வார்த்தை கூட பேசிக்கலைன்னு சொன்னான்.

ஒரு வேளை ரெண்டு பேரும் பேசியிருந்தா
எப்படி இருக்கும்?

வெங்கட் : நீதான் இங்கே டாக்டரா இருப்பேன்னு தெரிஞ்சிருந்தா,
இந்த ஹாஸ்பிடல் பக்கமே வந்திருக்க மாட்டேன்.

சுதா : நீயெல்லாம் பேஷண்டா வருவேன்னு தெரிஞ்சிருந்தா
நான் டாக்டருக்கே படிச்சிருக்க மாட்டேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

@Manish
//சுதா : நீயெல்லாம் பேஷண்டா வருவேன்னு தெரிஞ்சிருந்தா
நான் டாக்டருக்கே படிச்சிருக்க மாட்டேன்.//

தொடர்ச்சி...

வெங்கட் : என்?

சுதா : ஒரு மூளை இருக்கவனுக்கே என்னால வைத்தியம் பாக்க முடியல... உனக்கு உடம்பு எல்லாம் மூளை.

அருண் பிரசாத் said...

சுதா எங்கிருந்தாலும் உடனே வந்து VKS ல் சேருமாறு கேட்டுகொள்கிறோம்.

வெங்கட் said...

@ ஆதவா.,

// உங்களது அந்த ஓவியத்தை
எங்களுக்குக் காண்பிக்கலாமே.. //

அந்த ஓவியத்தை Competition-ல
குடுத்திட்டேனே..

அந்த வயசுல நிறைய படம்
வரைஞ்சி இருந்தாலும்..,
புதுசா ஒரு படம் வரைஞ்ச
முடிச்ச உடனே அதுக்கு முன்னாடி
வரைஞ்ச படம் எல்லாம் சுமாரா
இருக்கற மாதிரி தோணும்..

அதனால Latest படம் மட்டும் வெச்சிட்டு
பழசையெல்லாம் யாருக்காவது Gift
பண்ணிடுவேன்..

College போனதுக்கு அப்புறம்
வரையறது இல்ல.. So இப்போ
எங்கிட்ட ஒண்ணு ரெண்டு
படம் மட்டும் தான் இருக்கு..

வெங்கட் said...

@ செல்வா.,

// நான் VAS இல் சேர்ந்து விடுவது என்று முடிவெடுத்துள்ளேன் ..!! //

Welcome to VAS..

நம்ம கட்சியோட ரொம்ப
முக்கியமான Rules சொல்லுறேன்
கேட்டுக்கோங்க..

1. VKS சங்கத் தலைவி அனுவை
ஓவரா கலாய்க்க கூடாது..

அப்புறம் அவங்க என் கையை
காலா நினைச்சிகிட்டு அழுவாங்க..

2. அருண் நம்ம Spy-ங்கிற விஷயத்தை
யார், எப்படி மிரட்டி கேட்டாலும்
சொல்ல கூடாது..

3. முக்கியமா... என்னை பாராட்டுறதுல
கஞ்சத்தனம் இருக்க கூடாது..

மீதியை என் தளபதி டெரர் சொல்லுவார்..

அருண் பிரசாத் said...

//அந்த ஓவியத்தை Competition-ல
குடுத்திட்டேனே..//

அவங்க அதை எந்த கடைல பேரிச்சம்பழத்துக்கு கொடுத்தாங்கன்னு தெரியுமா?

//முடிச்ச உடனே அதுக்கு முன்னாடி
வரைஞ்ச படம் எல்லாம் சுமாரா
இருக்கற மாதிரி தோணும்..//

இந்த படமே சுமார் தான் அப்போ போன படம். அவ்வ்வ்வ்வ்வ்வ்

//அதனால Latest படம் மட்டும் வெச்சிட்டு
பழசையெல்லாம் யாருக்காவது Gift
பண்ணிடுவேன்.//

Gift ஆ குடுத்தாலும் வாங்க யார் வருவா?

//College போனதுக்கு அப்புறம்
வரையறது இல்ல.//

ரமெஷ் 9 வது தான் படிச்சிருக்கீங்கனு சொன்னவுடனே College னு போட்டா நம்பிடுவோமா?

அருண் பிரசாத் said...

@ செல்வா

//Welcome to VAS..

நம்ம கட்சியோட ரொம்ப
முக்கியமான Rules சொல்லுறேன்
கேட்டுக்கோங்க..//

Rules நாங்க தான் சொல்வோம்

1) எவ்வளவு கலாய்ச்சாலும் வலிக்காத மாதிரியே நடிக்கனும்

2) எவ்வளவு தொப்பி வாங்கினாலும், தொடச்சி போட்டுட்டு மறுபடியும் பதிவு, Sorry, கமெண்ட் போடனும்

3) நீங்க VKS ஆளுனு, இந்த Terror, Mani மாதிரி உளற கூடாது.

kartin said...

salambal!!
u got a gr8 flair for writing :)

அக்பர் said...

நீங்கள் சொன்ன ஓவியம் அருமை. பேரை மாத்திட்டிங்களே பாஸ்.

அந்த சுதாவோட உங்கள் சண்டையையும் விரைவில் எதிர்பார்க்கிறோம். :)

அனு said...

வெங்கட்டுக்கு prize கிடைக்காததற்கான காரணம்.. (Behind the scenes)

டீச்சர்: என்ன வரைஞ்சிருக்கே??

வெங்: காந்தி தாத்தாவும் புறாவும், அந்த புறாவை குறி பாக்குற வேடனும்..

டீச்: இதுல காந்தி தாத்தா எங்க இருக்கார்??

வெங்: புறா தான் பறந்துடுச்சுல்ல.. அதான், காந்தி தாத்தா வீட்டுக்கு கிளம்பிட்டார்

டீச்: அப்போ, வேடன் எங்க போனாரு??

வெங்: புறாவுக்கு தெரியாம மறைஞ்சு நிக்குறார்.. அதான், drawingல தெரியல..

டீச்: அட்லீஸ்ட், இதுல புறாவாவது எங்க இருக்குன்னு சொல்லு..

வெங்: actually, புறாவும் வெள்ளைக் கலர், பேப்பரும் வெள்ளைக் கலர்.. அதான் தெரியல மிஸ்.. ஹிஹி..

டீச்: வெத்து பேப்பர குடுத்துட்டு இவ்வளவு பில்ட் அப்-பா??

அதுக்கப்புறம் non-violenceஸ விட்டுட்டு அந்த மிஸ் 'நான் violent'டா ஆகிவிட்டதாக காற்று வழி செய்தி...

வெங்கட் said...

@ தென்றல்.,

// sudhavukku vera prize
kidikkalanguradhu bonus dane! //

ஹி., ஹி., ஹி..

அந்த வயசுல அப்படி தான்
இருந்தேன்..
அது தப்பா., ரைட்டா தெரியல..

வெங்கட் said...

@ தென்றல்.,

// ஒரு பக்கம், புறா கறியும்.,
அடுத்த பக்கம், புறா விடு தூதும் வரையலியே //

அதானே... இந்த ஐடியா அப்ப
தோணாம போச்சே..

கஷ்டப்பட்டு காந்தி தாத்தா.,
வேடன் இதெல்லாம் வரைஞ்சதுக்கு
Simple-ஆ நீங்க சொன்ன மாதியே
வரைஞ்சி இருக்கலாம்...

எப்படியும் Prize கிடைக்க
போறதில்லை..

வெங்கட் said...

@ மணி.,

// Latest Update //

You Too....

9th Chemistry Exam-ல என்னை பார்த்து
காப்பி அடிச்சி 40 மார்க் வாங்கினியே..
அந்த நன்றி கூட மறந்துட்டியா..??!!

அருண் பிரசாத் said...

//9th Chemistry Exam-ல என்னை பார்த்து
காப்பி அடிச்சி 40 மார்க் வாங்கினியே..
அந்த நன்றி கூட மறந்துட்டியா..??!!//

சொந்தமா எழுதி இருந்தா 90 மார்க் வந்திருக்கும்

அனு said...

//காப்பி அடிச்சி 40 மார்க் வாங்கினியே..
அந்த நன்றி கூட மறந்துட்டியா..?//

40 மார்க்-க்கு அவர் சொந்தமாவும் 60 மார்க்-க்கு உங்கக்கிட்ட காபி அடிச்சும் எழுதினாராமே??

வெங்கட் said...

@ டெரர்.,

// சுதா : ஒரு மூளை இருக்கவனுக்கே
என்னால வைத்தியம் பாக்க முடியல...
உனக்கு உடம்பு எல்லாம் மூளை. //

ஆஹா., புல்லரிக்குதே..,

இதையெல்லாம் சேர்த்து எழுத
தஞ்சாவூர் கல்வெட்ல இடம்
இருக்குமா..??!!

வெங்கட் said...

@ அருண் & அக்பர்.,

// சுதா எங்கிருந்தாலும் உடனே வந்து
VKS ல் சேருமாறு கேட்டுகொள்கிறோம். //

// அந்த சுதாவோட உங்கள் சண்டையையும்
விரைவில் எதிர்பார்க்கிறோம். //

நீங்க எதிர்பார்க்கறது நடக்காது..,

ஏன்னா..
சுதா நம்ம Blog படிக்க
சான்ஸே இல்ல..

அவங்கதான் என்கூட
போட்டி போட பயந்துட்டு
டாக்டர் ஆயிட்டாங்களே...!!

வெங்கட் said...

@ அருண்.,

நான் என்ன சொன்னேன்..

// மீதியை என் தளபதி டெரர் சொல்லுவார்.. //

ஆனா நீங்க இப்படி சொல்றீங்க..

// Rules நாங்க தான் சொல்வோம் //

இப்படியெல்லாம் உளறிட்டே இருந்தா..
அங்கே ( VKS ) இருக்கிறவங்களுக்கு
என் ரகசிய தளபதி அருண் தான்னு
தெரிஞ்சி போயிடாதா..??!!

கொஞ்சம் அடக்கி வாசிங்க..

வெங்கட் said...

@ அனு.,

இடம் : School.,

Class : சொல்ல மாட்டேன்..
அப்புறம் அனு எது வரைக்கும்
படிச்சிருக்காங்கன்னு உங்களுக்கு
தெரிஞ்சி போயிடும்..

( Exam Hall.. )

டீச்சர் : எல்லோருக்கும்
Question Paper & Answer Sheet வந்தா..?

அனு : மிஸ்.. எனக்கு வரல..

டீச்சர் பக்கத்தில வந்து பார்க்கறாங்க..

டீச்சர் : எல்லாம் சரியா தானே இருக்கு..?

அனு : இல்ல மிஸ்.., இங்கே பாருங்க
Question Paper-ல இவ்ளோ
Questions இருக்கு.. - ஆனா

Answer Sheet-ல ஒரு Answer கூட
இல்லையே.. வெறும் வெள்ளை
பேப்பரால்ல இருக்கு..!!!

வெங்கட் said...

@ அருண்.,

// சொந்தமா எழுதி இருந்தா
90 மார்க் வந்திருக்கும் //

அட ஆமா..,

அவன் எல்லா Subject-லயும்
சேர்த்து Total Mark 90 தான்
எடுப்பான்னு உங்களுக்கு
எப்படி தெரியும்..??

Mohamed Faaique said...

"அதனால Latest படம் மட்டும் வெச்சிட்டு
பழசையெல்லாம் யாருக்காவது Gift
பண்ணிடுவேன்.". அது return வரும் பொது என்ன செய்வீங்க?

வெங்கட் said...

@ Mohamed.,

//அது return வரும் போது
என்ன செய்வீங்க? //

இப்படியெல்லாம் துருவி., துருவி
கேள்வி கேட்கப்படாது..
அப்புறம் உண்மை வெளியே
வந்துடும்..!!

அருண் பிரசாத் said...

// Rules நாங்க தான் சொல்வோம் //

VKS க்கும் நாங்கதான் Rules சொல்லுவோம், VAS க்கும் நாங்கதான் Rules சொல்லுவோம்.

பாவம், புதுசா உங்கள நம்பி உங்க கட்சில சேர்ந்திருக்காரு, தயாரா வரவேணாமா? அடிவாங்க.

அருண் பிரசாத் said...

//அனு எது வரைக்கும்
படிச்சிருக்காங்கன்னு உங்களுக்கு
தெரிஞ்சி போயிடும்.//

அப்போ School ளுக்கு போன அளவுக்கு படிச்சிருக்காங்களா அந்த வெள்ளக்கார பொண்ணு!

சந்ரு said...

நானும் அப்படித்தான் சில நேரங்களில் மாட்டிக்கிட்டு திண்டாடுவது

வெங்கட் said...

@ அருண்.,

// அப்போ School ளுக்கு போன
அளவுக்கு படிச்சிருக்காங்களா
அந்த வெள்ளக்கார பொண்ணு.! //

நல்லவேளை அது
Primary School-ன்னு நாம
இன்னும் சொல்லலை..!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//@ வெங்கட்

இதையெல்லாம் சேர்த்து எழுத
தஞ்சாவூர் கல்வெட்ல இடம்
இருக்குமா..??!!
//

யப்பா.....முடியலை........ரொம்ப ரவுசு பண்ணாதீங்கப்பு. அப்புறம், தஞ்சாவூர் கால் முளைச்சு அமெரிக்கா பக்கம் போய்டப் போவுது!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ப.செல்வக்குமார் said...
மாபெரும் தேர்தலுக்குப் பின்னர் இன்று எனது முடிவினை அறிவிக்கின்றேன்..!! நான் VAS இல் சேர்ந்து விடுவது என்று
முடிவெடுத்துள்ளேன் ..!!//

ஒரு சாதாரண மேட்டருக்கு இவ்ளோ யோசிச்சு அப்புறம் தப்பான முடிவு எடுத்துட்டீங்களே, உங்களுக்கு VAS தான் லாயக்கு. மேலும் பல பல்புகள் பெற வாழ்த்துகள்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//எங்க English மிஸ் மேல
எனக்கு கோபம் கோபமா வந்தது..

பின்ன., நானும் ஒழுங்காதானே
Fees கட்டினேன்..!!?

எனக்கு மட்டும் Violence-ன்னு
ஒரு வார்த்தை English-ல
இருக்குன்னு சொல்லி தரலையே - ஏன்..????//

என்னவோ அவங்க சொல்லித் தந்த மத்த வார்த்தைகள் எல்லாம் புரிஞ்ச மாதிரி இது மட்டும் தெரியலைன்னு film காட்டறீங்களே, பாஸ்! இந்த அப்ரோச் பிடிச்சிருக்கு!

ரசிகன் said...

//அப்போ நான் 9th STD..//
ம்ம்ம்.. 8th வரை யாரையும் fail
ஆக்க கூடாதுன்ற சட்டம் அப்பவே இருந்ததா??!!

//சுதா நம்ம Blog படிக்க
சான்ஸே இல்ல..
அவங்கதான்
டாக்டர் ஆயிட்டாங்களே...!!//

Medical councilல‌யே இந்த‌ முடிவ‌ எடுத்துட்டாங்க‌ளா?
இல்ல‌ உயிர‌ காப்பாத்த‌ற‌வ‌ங்க‌
உயிர‌ எடுக்க‌ற‌து பாவ‌ம்னு இந்த‌ முடிவா?

//எல்லாம் நம்மள விட
20 மார்க் கூட எடுக்குற திமிர்...

அட.. 9 thல 20 மார்க் எடுத்த
பொண்ணெல்லாம் டாக்டர் ஆக முடியுமா என்ன?
நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

ம்ம்ம் அது சரி - சுதா வெங்கட் - இருவரும் வாழ்க

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா