சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

30 May 2011

வூடு கட்டி அடிக்கறதுன்னா இதானா..?!


போன வாரம் ஒரு நாள் நைட்.,

எங்க வீட்டு வராண்டாவுல
என் ரெண்டு வாலு பசங்களும்
இங்கிட்டும்., அங்கிட்டும் தாவி தாவி
விளையாடிட்டு இருந்தாங்க..

நான் மட்டும் ஒரு ஓரமா உக்காந்து
ஒரு படுபயங்கரமான யோசனையில
இருந்தேன்..

ஏன்னா அடுத்த நாள்
என் சின்ன பையனுக்கு
LKG-ல சேர Entrance Exam..

அதை நினைக்கும் போதே
எனக்கு ஒரே டென்ஷனா இருந்தது..
( ஹி., ஹி..! Interview-ல என்னைய
எதாவது கேள்வி கேட்டுட்டா..!! )

60 நாள் லீவ்ல Pre KG-ல படிச்சதை
எல்லாம் மறந்து இருப்பானோ..?!
எதுக்கும் ஒரு சின்ன டெஸ்ட்
வெச்சு பார்க்கலாமா..?!

" கோகுல்.. இங்கே வா..! "

" என்னாப்பா..? "

( எங்க வீட்டு முன்னாடி நின்னுட்டு
இருந்த ஒரு நாயை காட்டி.. )

" கோகுல்.., அது என்ன ..? "

" ம்ம்.. நாய்பா.. "

" நாய்தான்.., அதை இங்கிலீஸ்ல
எப்படி சொல்லுவ..! "

" ம்ம்.., இங்கிலீஸ் நாய்..! "

சொல்லிட்டு.., அவன் மறுபடியும்
தாவ ஓடிட்டான்..

நான் ஷாக் ஆகி.. பக்கத்துல
இருந்த என் பெரிய பையன் கிட்ட..

" சூர்யா.. எனக்கு ஒரு டவுட்டு.. "

" என்னப்பா..? "

" இவன் போன ஜென்மத்துல
குரங்கா இருந்திருப்பானோ..?! "

" ஹா., ஹா., ஹா...!
அப்பா.. எனக்கு ஒரு டவுட்டு..! "

" என்ன..? "

" அப்பவும் இவனுக்கு நீங்க தான்
அப்பாவா இருந்து இருப்பீங்களோ..?! "

" அடிங்..! "

டிஸ்கி : இன்னிக்கு இந்த பதிவுக்காக
கூகுள்ல படம் தேடிட்டு இருந்தேன்..
அப்போ என் மனைவி..

" மாலா.. இந்த படம் போடவா..?! "

" ஐயே.. இது வேணாம்க.. இதுல
Father அழகாவே இல்ல..! "

" ஹி.,ஹி.,ஹி..!! "

" ரொம்ப வழியாதீங்க.. Atleast பதிவுக்கு
போடற படத்துலயாவது Father அழகா
இருக்கட்டுமேன்னு சொன்னேன்..! "

" கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......! "
.
.

27 May 2011

எங்கிட்ட மோதாதே..!!
நேத்து எனக்கும்.,
என் Friend சுரேஷ்க்கும்
ஒரு சின்ன கருத்து மோதல்..!

கடைசி வரைக்கும் நான் சொன்னதை
அவன் ஒத்துக்கவே இல்ல..!

எனக்கு கோவம் வந்தது.. ஆனா
Control பண்ணிகிட்டேன்..
( அப்புறம் அவனுக்கும் கோவம்
வருமே.. ஹி., ஹி., ஹி... )

நான் கொஞ்சம் பொறுமையா
சொல்லி பார்த்தேன்..

" தம்பி.. நீ ஒரு எழுத்தாளர்கிட்ட
பேசிட்டு இருக்கேங்கறதை ஞாபகம்
வெச்சுக்க..! "

" எழுத்தாளரா..? யாருங்ணா அது..? "

" ஹி., ஹி., ஹி..! நான் தான்..! "

" என்னடா இது.. தமிழுக்கு வந்த
சோதனை..? "

" ஹே.. என்ன கிண்டலா.. நான் பிளாக்ல
எழுதறதை தினமும் 1000 பேர் படிக்கிறாங்க
தெரியுமா..? "

" 1000 பேர் படிச்சா.. நீ பெரிய பிஸ்தா..? "

" இல்லையா பின்ன..? "

" அப்படி பார்த்தா.. ' ஆனந்த பவன் '
ஹோட்டல் சப்ளையர் முருகன்
இன்றைய ஸ்பெஷல்னு எழுதறதை
தினமும் 5000 பேர் படிக்கிறாங்க..
அதுக்காக.? "

" டேய்ய்ய்.. வேணாம்...! என்னை
கடுப்பு ஏத்தாதே.. நான் கராத்தேல
Black Belt தெரியும்ல..! "

" ஹி., ஹி., ஹி..! எங்கே அந்த
Black Belt-ஐ கொஞ்சம் காட்டு
நானும் பார்க்கறேன்..! "

இப்படி சொல்லிட்டு என் பக்கத்துல
வந்தவன் என் சட்டையை காலரை
தூக்கி.. எதையோ பார்த்தான்..

" டேய்.., என் சட்டை காலர்ல
என்னடா இருக்கு..? விட்றா.. "

" இல்ல.. உங்களுக்கெல்லாம் Belt
கழுத்துல தானே கட்டுவாங்க..
அதான் இருக்கான்னு தேடுறேன்..! "

" பிளடி இடியட்.., நான் சென்ஸ்..,
கன்ட்ரீ ப்ரூட்..  "
.
.

23 May 2011

புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் )


இப்ப தலைமை செயலகம் மறுபடியும்
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே போயிடுச்சு.

அதனால 1200 கோடி ரூபாய் செலவுல
கட்டின புதிய சட்டசபை கட்டிடம்
வீணா போகுதேன்னு நிறைய பேர்
பீல் பண்றாங்க..

Don't Worry..! அப்படி எல்லாம்
வீணா போக விட்டுடுவோமா..?!

அந்த கட்டிடத்தை எப்படி எல்லாம்
Use பண்ணிக்கலாம்னு " அம்மா" வுக்கு
சில டிப்ஸ்...


1. அதை Shopping Mall-ஆ மாத்தி
வாடகைக்கு விடலாம்.. அதனால
Govt-க்கு Extra வருமானம்.

2. தமிழ்நாட்ல இருக்கிற ஜோசியக்காரங்க,
வாஸ்து நிபுணர்கள், நியூமரலாஜி.,
ஜெம்மாலஜி, ஓலைசுவடி படிக்கிறவங்கன்னு
எல்லோரையும் மொத்தமா அள்ளிட்டு 
வந்து இங்கே குந்த வெச்சி  ஒரு
" ஜோசிய நகரம் " உருவாக்கலாம்.!

3. சினிமா ஸ்டுடியோவா மாத்தி
ஷூட்டிங்குக்கு வாடகைக்கு விடலாம்,
அப்படியே " ஜாக்பாட் " நிகழ்ச்சிக்கும்
அங்கேயே ஒரு செட் போட்டுக்கலாம்..!

4. அரசே இங்கே சொந்தமா ஒரு மதுபான
தயாரிப்பு கம்பெனி ஆரம்பிச்சு., டாஸ்மார்க்கு
சப்ளை பண்ணலாம்., இதனால அரசுக்கு
வருமானம் கூட வாய்ப்பு இருக்கு.

5. Building-ஐ Full-ஆ AC பண்ணி.,
கோயில் யானைகளுக்கு Relax Camp
இனிமே இங்கேயே நடத்தலாம்.

6. கல்யாண மண்டபமா மாத்தலாம்.
108.,1008-ன்னு மெகா இலவச திருமணங்கள்
நடத்த வசதியா இருக்கும்..!

7. Building-க்கு உள்ளே., வெளியேன்னு
சுத்தி சுத்தி குழி வெட்டி., ஒரு மெகா
" மழை நீர் சேகரிப்பு மையமா "  இதை
மாத்திடலாம்..!

8. வண்டலூர் Zoo-வை கொண்டு வந்து
இங்கே Set பண்ணிடலாம்.. பாவம்
மிருகங்களுக்கும் ஒரு மாற்றம் வேணும்...!
( அடுத்ததா அவிங்க ஆட்சிக்கு வந்தா..
Zoo இருந்த இடத்துலயா சட்டசபையை
வெப்பாங்க.. செக் வெச்சோம்ல..! )

9. கண்ணகி சிலை., இன்னும் இது மாதிரி
வாஸ்து படி சரிவராத சிலையெல்லாம்
தூக்கிட்டு வந்து இங்கே வெச்சி ஒரு
" மியூசியம் " நடத்தலாம்..

Last But Not Least..

10. ஜெயிலா கூட மாத்திடலாம்.,
உள்ளே பிடிச்சி போட வேண்டியவங்க
லிஸ்ட் பெருசா இருந்தா., அதுக்கு இந்த
இடம் தான் வசதியா இருக்கும்..

டிஸ்கி : ஆனா எக்காரணம் கொண்டும்
இதை " VAS Head Office-ஆ " வெச்சிக்கோங்கன்னு
எங்களை Compel பண்ணாதீங்க..!

இந்த சின்ன இடமெல்லாம் எங்களுக்கு
தோதுபட்டு வராது..
.
.

20 May 2011

ஆண்களே உஷார்..!!

" எங்கெங்கு காணினும் சக்தியடா..! "
பாரதி பாடின மாதிரி..

இன்னிக்கு இந்தியாவுல பார்த்தீங்கன்னா
ஆட்சி., அதிகாரம் ரெண்டும் பெண்கள்கிட்ட
தான் இருக்கு..!

( South-ல ' அம்மா ' ஜெயலலிதா )

( East-ல ' அக்கா ' மம்தா பானர்ஜி )

( North-ல ' சகோதரி ' மாயாவதி )

( Capital-ல ' ஆன்டி ' ஷீலா தீட்சித் )

( Centre-ல ' மேடம் ' சோனியா )

( ராஷ்ட்ரபதிபவன்ல ' பாட்டிமா ' பிரதீபா பாட்டில் )

( Parliment-ல ' சபாநாயகர் ' மீரா குமார் )

( Parliment-ல ' எதிர்கட்சி தலைவர் '
சுஷ்மா சுவராஜ் )

ஆஹா.. வீட்ல தான் " மனைவி ஆட்சி "
நடக்குதுன்னா.. நாட்லயும் பெண்கள்
ஆட்சி தானா..?

( தலைவரே " அப்ப நாமெல்லாம் ஆணா பொறந்து
வீணா போயிட்டோமா..?! "

" அவனே இந்த லிஸ்ட்ல கனிமொழியையும்,
நீரா ராடியாவையும் சேர்க்காம விட்டானேன்னு
நான் சந்தோஷப்பட்டுட்டு இருக்கேன். நீ வேற..! " )
.
.

16 May 2011

ஐ மீன்..! வாட் ஐ மீன்..!
நேத்து என் Friend மணி 
எனக்கு போன் பண்ணி..

" எங்க அண்ணன் வீட்ல ஒரு Fish Tank
சும்மா இருந்துச்சி., அதை எம் பொண்ணு
எடுத்துட்டு வந்துட்டா..! "

" சரி., அதனால என்ன..? "

" அதுல மீன் வளர்க்கணும்னு
ஆசைப்படறா..! "

" பின்ன அதுல மானா வளர்க்க முடியும்.?
மீன் தான் வளர்க்க முடியும்...! "

( " ஹா., ஹா.,ஹா..! " - நான் தான்
சிரிச்சேன்..  நல்ல ஜோக்னா என்னால
சிரிப்பை Control பண்ண முடியாது..! )

" டேய்.., அந்த Fish Tank-ல எந்த Fish-ஐ 
வளர்க்கறதுன்னு எனக்கு ஒண்ணும்
தெரியாதுடா.? "

" அட., இது ரொம்ப சிம்பிள் மேட்டர்..
நான் வேணா வந்து உனக்கு நல்ல Fish
செலக்ட் பண்ணி தரவா..? "

" உனக்கு எப்படிடா இதெல்லாம் தெரியும்.?
உங்க வீட்ல தான் Fish Tank இல்லையே.! "

" எங்க வீட்ல தாஜ் மஹால் கூட தான் இல்ல.,
ஆனா எனக்கு தாஜ் மஹால் பத்தி தெரியும்ல
அது மாதிரி தான்டா இதுவும்.. எல்லாம் G.K. ! "

" சரி., சரி..! நாளைக்கு சேலம் போலாமா..? "

" ம்ம்.., வர்றப்ப உன் Fish Tank அளவு
எடுத்துட்டு வந்துடு.."

" அது எதுக்கு..? "

" Tank Size-க்கு தகுந்த மாதிரி தான்டா
Fish வாங்கணும் வெண்ணை..! "

" ஓ.கே.. Done..! "

அடுத்த நாள்..
சேலம் " எட்வர்டு அக்வேரியம் "

அங்கே கலர் கலரா நிறைய மீன்கள்
இருந்துச்சு.. எல்லாத்தையும் ஒரு ரவுண்ட்
வேடிக்கை பாத்துட்டு இருந்தோம்..

அப்ப கடைக்காரர் என் பக்கத்துல வந்து..

" சார் உங்களுக்கு என்ன மீன் வேணும்.? "

" இந்த வஞ்ஜிரம் மீனு இருக்கா..? "

" என்னாது வஞ்ஜிரமா..? "

" அதான் சார்.., முள்ளே இல்லாம
இருக்குமே.. அந்த மீனு..! "

கடைக்காரரு ஷாக் ஆயிட்டாரு..!

" இல்லையா.. அப்ப இந்த நெத்திலி.,
கட்லா, ரோகு.. இதாவது இருக்கா..? "

இப்ப என் Friend டென்ஷன் ஆயிட்டான்..

" டேய்.. அடங்குடா..! இதென்ன
மீன் மார்கெட்டா..? வஞ்ஜிரம்,
கட்லான்னு கேட்டுட்டு இருக்கே..?! "

" மீன் விக்கிற இடம் மீன் மார்கெட்
தானேடா.?! " ( லாஜிக் )

" டேய்ய்ய்ய்ய்...! இது அக்வேரியம்..! "

" ஹி., ஹி., ஹி..!! அதே தான்
நான் தமிழ்ல சொல்றேன்.,
நீ இங்கிலீஸ்ல சொல்ற..! "

( Stop.! Stop.! Stop.! இப்ப நான் என்ன
தப்பா சொல்லிபுட்டேன்...? 

எதுக்கு எல்லோரும் என்னைய
கொலை வெறியோட பார்க்கறீங்க..!? )
.
.

11 May 2011

வாவ்.. என்ன ஒரு ஐடியா..!

உஷான்னு எனக்கு ஒரு Friend..

ரொம்ப வருஷம் கழிச்சி அன்னிக்கு
ஒரு கல்யாணத்துல உஷாவை
பார்த்தேன்..

என்னை பாத்தும்., என்கிட்ட ஒரு வார்த்தை
கூட பேசல.. எனக்கு ரொம்ப பீலிங்கா போச்சு..

எனக்கு எப்ப இப்படி பீலீங் ஆனாலும்
நானே போயி பேசிடுவேன்..

" ஹாய்..!  "

" நீங்க யாரு..? "

" என்னாது நான் யாரா..? என்னை தெரியல..? "

" ம்ஹூம்.. தெரியலையே..! "

" நான் தான் உன் சீனியர்.. ! "

" சீனியரா..? நான் Women's காலேஜ்லல்ல
படிச்சேன்..! "

" நான் கூட அங்க தான்.. சே..! இல்ல..
நாம கம்பியூட்டர் சென்டர்ல
ஒண்ணா படிச்சோமே.. "

" நான் கம்பியூட்டர் சென்டர் போனதே
இல்லையே..! "

" அட.., உன் உரிமையை நிலை நாட்ட கூட
நான் ஐடியா குடுத்தேனே...!! "

" என்ன ஐடியா..? எந்த உரிமை..? "

" நீங்க ஐடியா குடுத்தது எனக்கு..
அவ என்னோட அக்கா உமா..! " -
இப்படி பின்னாடி இருந்து வந்தது
உஷாவின் குரல்..

ஹி., ஹி.. உஷாவும், உமாவும்
Twins அதான் கொஞ்சம் Confusion..!!

இப்ப உமாவுக்கு அது என்ன ஐடியான்னு
தெரிஞ்சிக்க ஆர்வம்..

அது என்னான்னா.. ( Flash Back..)

உஷா எனக்கு காலேஜ்ல ஜூனியர்.,
ஆனா கம்பியூட்டர் சென்டர்ல
எனக்கு C++ Batch Mate..

( என் கூட படிக்காம இருந்திருந்தா
ஒருவேளை அவங்க C++ இன்னும்
நல்லா படிச்சிருக்கலாம்.. ஹி., ஹி..
நான் அவ்ளோ Fast.. )

Basic-ஆ உஷா ரொம்ப அப்பாவி..

C++ க்கு அப்புறம் C - - , C xx
எல்லாம் இருக்குன்னு சொல்லி
இருந்தேன். அதையும் உண்மைன்னு
நம்பினாங்கன்னா பாருங்க..

ஒரு நாள்.

உஷாவுக்கு ஒரு அக்கா இருக்கறதும்.,
இவங்க ரெண்டு பேரும் Twins-னு
எனக்கு தெரிய வந்தது..

அப்ப நான் கேட்டேன்..

" உங்க ரெண்டு பேர்ல யார் முதல்ல
பிறந்தது..? "

" அவ தான்., அரை மணி நேரம்
கழிச்சு நான் பிறந்தேன்..! "

" ஆஹா..,உன்னை ஏமாத்திட்டாங்க
உஷா..!! ஏமாத்திட்டாங்க..! "

" ஏமாத்திட்டாங்களா..? என்ன சொல்றீங்க..? "

" ஆமா Twins பொறுத்தவரை முதல்ல
பிறக்கறவங்க தங்கச்சி., ரெண்டாவதா
பிறக்கறவங்க தான் அக்கா..!! "

" நிஜமாவா சொல்றீங்க..?  "

" ஆமா..! உனக்கு இந்த ஆஸ்திரேலியா
கிரிக்கெட் Players Steve Waugh &
Mark Waugh தெரியும்ல..? "

" தெரியும்..! "

" ம்ம்.. அதுல முதல்ல பிறந்தவரு
Steve.. ஆனா Steve-ஐ எல்லோரும்
தம்பின்னு தான் சொல்லுவாங்க..
Mark தான் அண்ணன்..! "

" ஓ..அப்படியா..? "

" என்ன இவ்ளோ சாதாரணமா கேக்கற.?
பொறுத்தது போதும்.. பொங்கி எழு..! "

" இப்ப நான் என்ன பண்ணனும்..? "

" வீட்டுக்கு போன உடனே எல்லோர்கிட்டேயும்
' இன்னைல இருந்து நான் தான் அக்கான்னு '
Strict-ஆ சொல்லிடு...! "

" இவ்ளோ வருஷம் கழிச்சி சொல்லி
என்ன ஆக போகுது..? "

" அதுக்காக உன் உரிமையை
விட்டுக்கொடுக்கலாமா..? "

" அப்படிங்கறீங்க..?! சரி..,
சொல்லி பார்க்குறேன்..! "

அடுத்த நாள் Class-ல..

" என்ன வீட்ல சொல்லியாச்சா..? "

" சொன்னேன்.. ஆனா எல்லோரும்
என்னை ஒரு மாதிரி பார்க்குறாங்க..! "

" பார்ப்பாங்கல்ல.. பின்ன உரிமையை
மீட்கறதுன்னா சும்மாவா..? "

" ஆமா.. அப்ப இருந்து உரிமை.,
உரிமைன்னு சொல்றீங்களே..
அது என்ன உரிமை..! "

" ஹி., ஹி., அக்காவா இருக்கறவங்களுக்கு
தானே முதல்ல கல்யாணம் பண்ணி வெப்பாங்க..! "

" அடப்பாவி.. அப்ப எங்க வீட்ல நான்
கல்யாணத்துக்கு அவசரப்படறேன்னு
நினைச்சு தான் கிண்டலா பாத்தாங்களா..?! "

" ஹி., ஹி., அதே அதே..!! "

டிஸ்கி : உமாவுக்கு கல்யாணம் ஆகி
3 வருஷம் கழிச்சு தான் உஷாவுக்கு
கல்யாணம் ஆச்சாம்..!!
.
.

08 May 2011

ஒரு மழை நாளில்..!!

( படித்ததில் பிடித்தது )


மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்..

" குடை எடுத்துட்டுப்
போக வேண்டியது தானே..! "
என்றான் அண்ணன்.

" எங்கேயாச்சும் ஒதுங்கி
நிக்க வேண்டியது தானே..! "
என்றாள் அக்கா..

" சளி பிடிச்சுகிட்டு
செலவு வைக்கப்போற பாரு..! "
என்றார் அப்பா..

தன் முந்தானையால்
என் தலையை துவட்டிக் கொண்டே
திட்டினாள் அம்மா..
என்னையல்ல.,
மழையை..!!

---------------------------------------------------------

" அனைத்து அம்மாக்களுக்கும்
என் மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்..! "
.
.

04 May 2011

உள்ளத்தில் நல்ல உள்ளம்.! ( ஹி., ஹி..! )நேத்து எங்க ஊர்ல
" Salem Rotary Club " சார்பா
ஸ்கூல் பிள்ளைகளுக்கு
ஒரு Drawing Competition நடந்தது..

என் பையனும் அதுல கலந்துக்கணும்னு
ஆசைப்பட்டான்னு கூட்டிட்டு
போயிருந்தேன்..

மொத்தம் 83 குழந்தைங்க
Competition-ல கலந்துகிட்டாங்க..
( ஹி., ஹி..! கணக்குல கரெக்ட்டா
இருப்போம்ல..! )

அங்கே ஒரு Sir-ம், ஒரு Madam-ம்
இருந்தாங்க.. அவங்க தான் எல்லா
வேலையையும் பாத்துகிட்டாங்க.

Competition 1 மணி நேரம்.,
சரின்னு அங்கேயே Wait
பண்ணி., பசங்க வரையறதை
வேடிக்கை பாத்துட்டு இருந்தேன்..!

அப்ப திடீர்னு அந்த Madam.,
பக்கத்துல இருந்த Sir-கிட்ட
என்னை கை காட்டி எதோ சொன்னாங்க.,
அவரும் " சரின்னு " தலையை ஆட்டினாரு,,!

எனக்கு ஒரே Confusion.!
" ஒரு வேளை நம்மள Judge-ஆ
இருக்க கேக்க போறாங்களோ..?!! "

கொஞ்ச நேரத்துல அந்த Madam
என்கிட்ட வந்து...

" சார்,,,, ஒரு சின்ன உதவி.? "

" தயங்காம கேளுங்க..! தினமும்
ரெண்டு பேருக்காவது உதவி
பண்ணலைன்னா எனக்கு நைட்டு
தூக்கமே வராது..! "

" ஓ., அப்படியா.!! "

" ம்ம்.. சரி., உங்களுக்கு நான் என்ன
உதவி பண்ணணும்..? "

" போட்டி முடிஞ்சதும்., எல்லா
பசங்களுக்கும் Participation Certificate
குடுக்கணும் சார்..! "

( ஆஹா.., நம்மள Chief Guest-ஆ
இருக்க கூப்பிடறாங்க போல.. )

" ஓ.., பசங்களுக்கு நான் Certificate
குடுக்கணுமா.?! "

" இல்ல சார்.. அது Chief Guest குடுப்பாரு..!!
நீங்க வந்து அந்த Certificates எழுதி
குடுங்க சார்,.! "

( அடப்பாவிகளா.. கடைசில என்னை
Cheap Guest ஆக்கிட்டீங்களே..! )

டிஸ்கி : என் பையனுக்கு " ஆறுதல் பரிசு "
கிடைச்சது..ஆனா 83 Certificates எழுதின
எனக்கு அது கூட கிடைக்கலை.. ம்ஹூம்..!!!

Mind Voice : ( விட்றா., விட்றா..
நாளைக்கு இதெல்லாம் உன் சரித்திரத்துல
வரும்., பசங்க எல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க..!! )
.
.