சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

28 November 2011

மாஸ்டர் ப்ளான்..!!

என் டேபிள் மேல ஒரு Bag
இருந்தது.. அதை பார்த்த என் Wife...

" என்னங்க இது Bag..? "

" அதெல்லாம் மாஸ்டர் பிளான்..
சொன்னா உனக்கு புரியாது..! "

" மாஸ்டர் பிளானா..?! அப்ப அது
நீங்க போட்டதா இருக்காதே..
கரெக்ட்டா..?!! "

" நீ ஒரு ஜீனியஸ்கிட்ட பேசிட்டு
இருக்கேன்னு அடிக்கடி மறந்துடற..! "

" ஹி.,ஹி., முதல்ல உங்க ப்ளான்
என்னான்னு சொல்லுங்க.. அப்புறம்
நீங்க ஜீனியஸா இல்ல ஜீனியஸ்க்கு
எதிர்வீட்டுக்காரரான்னு பார்க்கலாம்..!  "

" என் Friend ரவியோட பொண்ணு
' ஹோலி கிராஸ்ல ' 2nd Std
படிக்கிறால்ல.."

" ஆமாம்..! "

" அவ வீட்ல கூட இங்கிலீஷ்ல தான்
பேசறாளாம்.. "

" சரி.. அதுல என்ன பிரச்னை..? "

" நம்ம ஆளுக்கு தான் இங்கிலீஷ்
சரளமா பேச வராதே.. "

" அட.. என்னமோ நீங்க தினமும்
இங்கிலீஷ்ல எட்டு பாட்டு எழுதற
மாதிரி பேசறீங்க.. இங்கேயும் அதே
கதை தானே..?! "

" ஹி., ஹி., ஹி.. இருக்கலாம்.. ஆனா
இன்னும் ஒரு மாசம் கழிச்சி இப்படி
எல்லாம் நீ எங்களை கிண்டல்
பண்ண முடியாது.. "

" ஏன் ரெண்டு பேரும் எதாவது
ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்
போக போறீங்களா..?! "

" சே., சே., அதெல்லாம் கஷ்டம்..
நாங்க வேற ஒரு ஈஸியான
மாஸ்டர் ப்ளான் வெச்சி இருக்கோம்ல.. "

" அட அது என்னான்னு தான்
சொல்லுங்களேன்.. "

" அந்த Bag-ஐ திறந்து பாரு..
உனக்கே புரியும்..! "

பையை திறந்து பார்த்த
என் Wife ஆச்சரியத்தோட...



" என்ன இது... எல்லாம் இங்கிலீஷ் பட
DVD-யா இருக்கு..! "

" ம்ம்.. தினமும் ஒரு இங்கிலீஷ் படம்
பாக்கறது., ஒரு மாசத்துல சரளமா
இங்கிலீஷ் பேசறது.. இதான் எங்க ப்ளான்..!!
எப்பூடி..?! "

" அது சரி.., அதுக்கு எதுக்கு தமிழ்ல டப்
பண்ணின இங்கிலீஷ் பட DVD-ஐ வாங்கிட்டு
வந்து இருக்கீங்க..? "

" Oh My God..! அவ்வ்வ்வ்வ்..!! "

( யானைக்கும் அடி சறுக்கும்னு
சொல்றது எம்புட்டு கரெக்ட்டு..! )
.
.

22 November 2011

7-ஆம் அறிவு vs வேலாயுதம்

இல்ல நான் தெரியாமத்தான் கேக்கறேன்..
எங்க டாக்குடரு விஜயை பாத்தா
உங்க எல்லாருக்கும் " கைப்புள்ள "
கணக்கா தெரியுதா..?

ஆனா, ஊனா அவர் நடிக்கிற படத்தை..
( சரி., சரி... இருக்குற படத்தை.. )
கிண்டல் பண்றீங்க..?!!

இப்ப லேட்டஸ்ட்டா வேற
வேலாயுதம் படமும், 7-ஆம் அறிவு
படமும் ஒரே கதை தான்னு
சில பேர் கதை கட்டி விடறாங்க..

இதையெல்லாம் கேக்கும் போது
எனக்கு செம டென்ஷன் ஆகுது..







பின்ன தெலுங்கு, மலையாளம்,
இந்தி, ஹாலிவுட், அசஸின்கிரீட்-னு
அவர் ரேஞ்ச் எங்கேயோ போயிட்டு
இருக்கு போது..

இந்த மாதிரி ஒரு தமிழ்படத்தை.,
( அதுவும் வேற ஒருத்தர் நடிச்ச படத்தை )
காப்பி அடிச்சார்னு சொல்றது
சின்னப்புள்ள தனமால்ல இருக்கு..


இந்த 10 வித்தியாசங்களை படிங்க..
அப்ப புரியும் " வேலாயுதம் " எவ்ளோ
வித்தியாசமானவன்னு...

ஏழாம் அறிவு
வேலாயுதம்
1. வில்லன் சீனால இருந்து கிளம்பி வருவான்..

வில்லன் ஆப்கான்ல இருந்து கிளம்பி வருவான்..
2. Bio Weapon Use பண்ணி மக்களை கொல்லுவாங்க.

2. குண்டு வெச்சி மக்களை கொல்லுவாங்க.

3. முதல்ல சென்னைலதான் ஆரம்பிப்பாங்க..
3. இங்கேயும் சென்னை தான்.. ஆனா ஏரியா வேற

4. இதுல ஹீரோ சர்க்கஸ்காரர்

4. இதுல ஹீரோ பால்காரர்
5. இதுல ஸ்ருதி ஒரு Scientist.

5. இதுல ஜெனி ஒரு Reporter.
6. ஸ்ருதிதான் சூர்யாவுக்கு
' போதிதர்மர் ' யார்னு புரிய வெப்பாங்க.
6. ஜெனிதான் விஜய்க்கு
' வேலாயுதம் ' யார்னு புரிய வெப்பாங்க.
7. Senior Scientist ஒருத்தர் லஞ்சம் வாங்கிட்டு இந்தியா அழிக்க உதவி பண்ணுவாரு 7. உள்துறை மந்திரி லஞ்சம் வாங்கிட்டு இந்தியா அழிக்க உதவி பண்ணுவாரு.
8.லஞ்சம் 300 கோடி

8. லஞ்சம் 5000 கோடி

9. சூர்யா ஒரு சீன்ல ஸ்ருதியை யானை மேல கூட்டிட்டு போவாரு 9.விஜய் ஒரு சீன்ல ஜெனியை குதிரை மேல கூட்டிட்டு போவாரு
10.கடைசி Fight-ல சூர்யா சட்டை பட்டனை கழட்டி விட்டுட்டு சண்டை போடுவாரு..
10.கடைசி Fight-ல விஜய்
சட்டையையே கழட்டிட்டு
சண்டை போடுவாரு..

































இப்ப சொல்லுங்க.. இது ரெண்டும்
ஒரே கதையா..?!!!
( என்னாது கொஞ்சம் அப்படி தான்
தெரியுதா..? )

சரி இருங்க... நான் முக்கியமான
ஒரு வித்யாசம் சொல்றேன்..

வேலாயுதம் படத்துல விஜய்க்கு
மாமா பொண்ணு இருக்காங்க..

7-ஆம் அறிவுல சூர்யாவுக்கு
மாமா பொண்ணு இருக்காங்களா..?!
இருக்காங்களா..?! இருக்காங்களா..?!

எப்பூடி..?!!
.
.

11 November 2011

சுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 5

டிஸ்கி : 4-ஆம் வகுப்பு படிக்கும் என் மகன்
பள்ளி சுதந்திர தின விழாவில் பேசியது.!

தலைப்பு : ஜாதிகள் இல்லையடி பாப்பா..!



செட்டியாரு., ரெட்டியாரு., முதலியாரு.,
கோனாரு., நாடாரு., கவுண்டரு.,
ஐயரு., தேவரு., மறவரு, குறவரு.,
கோடா., இடிகா...

உஸ்ஸப்பா..! இப்பவே கண்ணை கட்டுதே..!

இது மாதிரி இந்தியால 28,000 ஜாதிகள்
இருக்கு..

ஜாதீ - அதுலயே ஒரு " தீ " இருக்கு.
நல்லா நோட் பண்ணுங்க..

மரத்துக்கு தீ பிடிச்சா - அது
காட்டையே அழிச்சிடும்..
மனுஷனுக்கு ஜாதீ பிடிச்சா - அது
நாட்டையே அழிச்சிடும்..

அந்த காலத்துல நம்மகிட்ட ஒத்துமை
இல்ல.. அதனால தான் இங்கிலீஷ்காரங்க
நம்மள 200 வருஷம் அடிமையா வெச்சி
இருந்தாங்க..

அப்ப அவங்க வெறும் 30 லட்சம்.
நம்ம ஆளுங்க 30 கோடி.

ஆனா 30 லட்சம் பேர் சேர்ந்து
30 கோடி பேரை அடிமையா வெச்சி
இருந்தாங்க..

என்ன கொடுமை சார் இது..?!!

இப்ப புரியுதா...

புலிக்கு முன்னாடி ஓடற மானும்.,
ஒத்துமையா இல்லாத நாடும்
நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல..!

அந்த காலத்துல ஜாதி கொடுமை
எப்படி இருந்துச்சுன்னு ஒரு சின்ன
உதாரணம்...

Dr.அம்பேத்கர் - அவர் ஒரு தாழ்த்தப்பட்ட
ஜாதியை சேர்ந்தவர்.

அவர் ஸ்கூல்ல படிக்கும் போது.,
எல்லா பசங்களும் பெஞ்ச்ல தான்
உக்காருவாங்க.. ஆனா அவரை மட்டும்
கீழே தான் உக்கார வெப்பாங்க.

அவர்கூட யாரும் பேச மாட்டாங்க.,
பழக மாட்டாங்க..

ஒருநாள் அம்பேத்கரோட கை
பக்கத்துல இருந்த பையனோட
டிபன் பாக்ஸ் மேல பட்டுடுச்சி..

அதுக்கு அந்த பையன்.. டிபன் பாக்ஸ்
" தீட்டு " ஆயிடிச்சின்னு சொல்லி
அதுல இருந்த சாப்பாட்டை எல்லாம்
கீழே கொண்டு போயி கொட்டிட்டான்..

ஆனா.. யார் கைபட்டா தீட்டுன்னு
சொன்னாங்களோ.. அவர் தான்
பின்னாளில் இந்தியாவின் சட்டத்தையே 
தீட்டு தீட்டுன்னு தீட்டினார் என்பது வரலாறு..!

இது மாதிரி பல நிகழ்வுகளை
பாத்துட்டுட்டு தான் பாரதி
Feel பண்ணி பாடினார்.....
" வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறமாகும்

சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ் சாந்தின் நிறமொரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் அவை
யாவும் ஒரே தரமன்றோ
இந்த நிறம் சிறிதென்றும் இஃது
ஏற்றமென்றும் சொல்லலாமோ..! "

எந்த சாதியா இருந்தாலும்..
நாமெல்லாம் ஒரே மனிதஜாதின்னு
பாரதி அழுத்தமா சொன்னாரு.

சரி.. இன்னைக்கு " ஜாதி காய்ச்சல் "
எப்படி இருக்குன்னு பார்க்கலாம்..

கொஞ்சம் குறைஞ்சி இருக்கு..
ஆனா இன்னும் குணமாகலை..

" ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு "
பாடினாரு பாரதி..

ஆனா அவர் பெயர்ல இருக்குற
யுனிவர்சிட்டில சேரணும்னா கூட
ஜாதி சர்டிபிகேட் கேக்கறாங்க..

இப்ப மட்டும் பாரதி இருந்தார்னா..
இதை பாத்து நொந்து நூடுல்ஸ்
ஆகியிருப்பார்..

அவர் என்ன மேற்கோளுக்காவா
எழுதினார்..?!
குறிக்கோளுக்கல்லவா எழுதினார்..

இலங்கையை ஆண்ட ராவணன் தான்
ஆண்டவனையே சோதிச்சான்..
பத்து தலை இருந்தும் கூட
தப்பு தப்பா யோசிச்சான்னு சொல்லுவாங்க..

அது மாதிரி.. படிச்சவங்களே ஜாதி கட்சி
ஆரம்பிச்சு.. நம்மள ஒத்துமையா
இருக்கவிடாம பண்றாங்களே..
இது நியாயமா..?!!

உலகத்துக்கே திருக்குறள்கிற
பொதுமறையை தந்த நாம..
ஜாதீங்கற விஷசெடியை
வளர்ப்பது சரியா..?!

கடைசியா ஒரு பஞ்ச் டயலாக்
சொல்றேன். நல்லா நோட்
பண்ணிக்கோங்க..

ஆம்லட் போடணும்னா முட்டையை
உடைக்கணும்..
நாம ஒத்துமையா இருக்கணும்னா
ஜாதியை அழிக்கணும்..

நன்றி..!


டிஸ்கி : மேலும் சில பேச்சுப் போட்டிகள்..


பேச்சுப்போட்டி - 6
.
.

08 November 2011

ஆசை., தோசை., மீசை..!!!

ஒருநாள் நான் என் மீசையை
லைட்டா ட்ரிம் பண்ணி இருந்தேன்..

என் Friend ஜெகன் வீட்டுக்கு
போயிருந்தப்ப அதை பாத்த அவன்..

" இப்ப உனக்கு 2 வயசு கம்மியான
மாதிரி இருக்குடான்-"னு சொன்னான்..!

" ஓ... Only 29..?? வாவ்..!! "

உடனே அவங்க வீட்டில இருந்த
சிஸ்ஸரை எடுத்து மீசையை
இன்னும் கொஞ்சம் ட்ரிம் பண்ணிட்டு..,
அவனை பாத்து கேட்டேன்...

" இப்ப..? "

" 3 வயசு கம்மி ஆன மாதிரி
இருக்கு...? "

" ஓ... வாவ்.. அப்ப 24...!! "

( 2 + 3= 5. அப்ப 29 - 5 = 24..
கணக்கு சரியா வருதுல்ல..!! )

கொஞ்ச நாள் இப்படியே போயிட்டு
இருந்தது.. ஆனா எனக்கு Bore அடிக்க
ஆரம்பிச்சது..

இதென்னா Instalment விளையாட்டு..?
டக்னு ஒரு நாள் மீசையை Shave
பண்ணிட்டேன்..!

திடீர்னு என்னை மீசையில்லாம
பாத்த என் Wife ஷாக் ஆகிட்டாங்க..

( விட்றா.., விட்றா.. ஓவர் நைட்ல
ஒருத்தன் ஷாகித் கபூர் கணக்கா
மாறி நின்னா யாருக்குதான் ஷாக்கா
இருக்காது..?!! )


( சைடு ஆங்கிளில்.. என்னை போலவே
இருக்கும் ஷாகித் கபூர் இவர்தான்.. )

அன்னிக்கு நான் Bank-க்கு போயிட்டு
வந்துட்டு இருக்கும் போது..

வழியில ஒரு தாத்தா என்கிட்ட
லிப்ட் கேட்டாரு..

" தம்பி.. பஸ் ஸ்டேண்ட் பக்கம்
என்னை கொண்டு போயி விடறியா..? "

( அது வேற ரூட் ஆச்சே..!!! )

" சரி உக்காருங்க தாத்தா " -ன்னு..
அவருக்கு லிப்ட் குடுத்தேன்..!

( என் " நல்ல உள்ளத்தை" பத்தி
இதுவரை நோட் பண்ணாதவங்க..
இப்பவாச்சும் பண்ணவும்..! )

அந்த தாத்தா " நான் யார் பையன் "-னு
விசாரிச்சாரு.. நானும் சொன்னேன்...

" ஓ. சின்ராஜ் மகனா நீ.? "

" ஆமாம் தாத்தா...! "

" ஆமா.. நீங்க ரெண்டு பேருல்ல...
அது உன் அண்ணனா..? தம்பியா..? "

" தம்பி..! "

அதுக்கு அப்புறம் அந்த தாத்தா
ஒரு கேள்வி கேட்டார் பாருங்க..
நான் ஆடி போயிட்டேன்...

" ஆமா தம்பி.. நீ என்ன படிக்கிற...?!! "

( அடங்கொன்னியா... மீசையை எடுத்ததும்..
ஸ்கூலு பையன் கணக்கா மாறிட்டோம்
போல இருக்கே..?! )

" படிச்சி முடிச்சிட்டேன் தாத்தா.! "
குஷியா சொன்னேன்.

( இம்புட்டு நாளா இந்த மீசைல தான்
நம்ம கிளாமர் ஒளிஞ்சிட்டு இருந்து
இருக்கு போல..! )

அப்படியே பேசிட்டே பஸ் ஸ்டேண்ட்
வரை வந்துட்டோம்..

" தாத்தா.. பஸ் ஸ்டேண்டு பக்கம்
வந்துட்டோம்.. உங்களை எங்கே
இறக்கி விடறது..? "

" ராஜன் ஆஸ்பத்திரில இறக்கி
விடுப்பா.. வர வர கண்ணு சரியா
தெரிய மாட்டேங்குது..! "

( அடப்பாவி தாத்தா... அப்ப இவ்ளோ
நேரம் குத்து மதிப்பா தான் பேசிட்டு
வந்தியா..?!!

அவ்வ்வ்வ்வ்...!!! )
.
.

03 November 2011

Facebook என்ன இளிச்சவாயா.?!














கொஞ்ச நாள் முன்னாடி ஒரு
ப்ளாக்ல ஒரு தத்துவம் படிச்சேன்..

" நன்றி - முகநூல் "-னு போட்டு
இருந்தது..

நானும் சரி முக நூல்னா. அது ஏதோ
அகநானூறு., புறநானூறு மாதிரி
சங்க இலக்கிய நூல் போலன்னு
கம்முன்னு விட்டுட்டேன்..

நேத்து தான் என் Friend ஜனா
சொன்னான்..

முகநூல் = Facebook-னு

அடப்பாவிகளா..

" Facebook is a Social Network..! "

அதாவது அது ஒரு சமூக தளம்..
Facebook-ங்கறது அதோட பெயர்..
பெயரை கூடவா மொழி பேப்பீங்க..?

புல்லரிக்குதுப்பா..!

அப்ப இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்
" Mr. Mark Butcher " -ஐ..

" திரு. மதிப்பெண் கறிக்கடைக்காரர் " னு
தான் சொல்லுவீங்களா...?!

நமக்கு இங்கிலீஷ்காரன் கண்டுபிடிச்ச
பொருள் வேணும்.. - ஆனா அதுக்கு
அவன் வெச்ச பேரு மட்டும் வேணாம்..!

என்னா நியாயம் சார் இது..?

இனிமேலாச்சும் யாரோ கண்டுபிடிச்ச
பொருளுக்கு தமிழ்ல பெயர் வெக்கறதை
விட்டுட்டு.. நாமளா எதாவது கண்டுபிடிச்சி..
அதுக்கு நல்ல தமிழ் பெயரா வெக்கலாம்..

அப்புறமா " நாங்க தமிழன் "னு..!
சட்டை காலரை தூக்கிவிட்டுக்கலாம்.
( ஆமா.. " காலர் "-க்கு தமிழ்ல என்ன..? )

இதுவரைக்கும் நிறைய பேர்
இது பத்தி தெரியாம " முகநூல்" னு
சொல்லியிருப்பீங்க..

பரவாயில்ல..!! இனிமே திருத்திக்கோங்க..!

ஆனா அதை விட்டுட்டு...

" நான் Facebook-ஐ முகநூல்னு தான்
சொல்லுவேன் " னு அடம்பிடிச்சீங்க..
அவ்ளோதான்...

பின்ன அதென்ன சார்.. Facebook
மட்டும்தான் இளிச்சவாயா..?

அப்ப இந்த ORKUT., GOOGLE., PICASA.,
TWITTER.,YAHOO., APPLE., iPhone., Sim Card
இதுக்கெல்லாம் தமிழ்ல என்னான்னு
சொல்லிட்டு போங்க.

ஆங்... மறந்துட்டேனே..
அப்படியே KARATE, Kung-Fu-க்கும்
என்னன்னு சொல்லிடுங்க..
( ஜப்பான், சைனீஸ் மொழி மட்டும்
விதிவிலக்கா என்ன..?!! )
.
.