சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

26 January 2015

முயற்சி திருவினையாக்கும்..!!

இது குடியரசு தின விழா பேச்சு போட்டியில்
என் மகன் சூர்யா பேசியது..

தலைப்பு :  " முயற்சி திருவினையாக்கும்..!! "வெற்றிக்கனிகள் கொட்டிக் கிடப்பதில்லை.,
சற்று எட்டித்தான் பறிக்க வேண்டும்...

அதுக்கு பெயர் தான் முயற்சி..!

ஹிஸ்டரி புக்கை புரட்டி பாத்தா..
கஜினி முகமது 16 தடவை தோத்து
போனான்னு எழுதியிருக்கும்...

ஆனா...

அவன் 16 தடவை முயற்சி பண்ணி,
17வது தடவை ஜெயிச்சாங்கிறது தான்
நாம இங்கே நோட் பண்ண வேண்டிய
மேட்டரு.. ...

இப்ப கூட்டி கழிச்சி பாருங்க.,
கணக்கு சரியா வரும்..!!

" வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா..
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா...!! "

இதுக்கு உதாரணம் சொல்லணும்னா..
தாமஸ் ஆல்வா எடிசன்...

அவர் பல்ப்பை எரிய வெக்கிற ஆராய்ச்சி
பண்ணிட்டு இருந்தப்ப.. 1000 தடவை.,
1000 உலோகங்களை பயன்படுத்தி
பார்த்தும் பல்பை எரிய வெக்க முடியல..

அதை பத்தி அவர்கிட்ட ஒரு ரிப்போர்டர்..

" 1000 தடவை முயற்சி பண்ணியும்
ஒண்ணுமே கண்டுபிடிக்கலையே.. இது
உங்களுக்கு வருத்தமா இல்லையா.? " னு
கேட்டாரு...

அப்ப எடிசன்...

" இல்லியே... நான் தான் எந்த எந்த
உலோகத்தை பயன்படுத்தினா பல்ப்
எரியாதுன்னு கண்டுபிடிச்சி இருக்கேனே" னு
சொன்னாரு..

அதுக்கு அப்புறம் விடாமுயற்சியோட
ஆராய்ச்சி பண்ணி பல்பை எரிய வெச்சாரு...

அதுமட்டுமா..

பல்ப், சினிமா., ஸ்பீக்கர்னு 1093 பொருளை
கண்டுபிடிச்சாரு...

இதே மாதிரி தான்..

ரைட் ப்ரதர்ஸ் ஏரோபிளேன் கண்டுபிடிச்சப்ப.,
அது நியூஸ் பேப்பர்ல ஒரு சின்ன பெட்டி
செய்தியாதான் வந்தது....

கிரஹாம் பெல் டெலிபோன் கண்டுபிடிச்சப்ப..
" இதையெல்லாம் யார் யூஸ் பண்ண
போறா.? " னு அவரை கிண்டல் பண்ணினாங்க..

ஆனா.. அவங்க அதையெல்லாம் கண்டுக்காம
முயற்சி செஞ்சி அதுல வெற்றி அடைஞ்சாங்க..

இதை தான்..

" முயற்சி பண்றவன் சிக்ஸர் அடிக்கறான்..,
வேடிக்கை பார்க்கறவன் லெக்சர் அடிக்கறான்னு "
சொல்லுவாங்க..

இவ்ளோ ஏன்...

நம்ம காந்திஜி மட்டும் வக்கீல் தொழில்
செஞ்சிட்டு சந்தோஷமா இருந்திருந்தா...
நாம இன்னிக்கு சந்தோஷமா இருந்து
இருக்க முடியுமா..?!

நமது சுதந்திரம் காந்தியின் விடா முயற்சி...

அதனால தான் சொல்றாங்க..

மூச்சு விடறவன் எல்லாம் மனுஷன்
இல்ல..,
முயற்சி செய்யறவன் மட்டும் தான்
மனுஷன்னு..

சுற்றும் வரை பூமி.,
சுடும் வரை நெருப்பு.,
போராடும் வரை மனிதன்..
நீ மனிதன்...

போராடு... வெற்றி பெறும்வரை போராடு..!!

நன்றி..!!

பின் டிஸ்கி : முதல் பரிசு..!!!

22 January 2015

லைட்டா கை குளுக்கினப்ப...போன வாரம் எனக்கு லைட்டா கை
சுளுக்கிடுச்சி..

( ஓவரா இலக்கிய பணி ஆத்திட்டோமோ..?!! )

பிஸியோதெரபிஸ்ட்கிட்ட போனேன்..

" பயப்பட ஒண்ணுமில்ல.. ஒருவாரம்
ட்ரீட்மெண்ட்க்கு வாங்க சரியா போயிடும்னு "
சொன்னாரு..

சரினு நானும் 2 நாள் போனேன்..

கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட் தெரிஞ்சது..
இருந்தாலும் வலி இருந்தது..

3-வது நாள் போனப்ப..

என் ப்ரெண்ட் சரவணன் பைக்ல இருந்து
கீழே விழுந்து.. கை வலிக்குதுனு அங்கே
வந்திருந்தான்..

அவனுக்கும் அதே ஒரு வாரம் ட்ரீட்மெண்ட்னு
சொல்லிட்டாரு நம்ம பிஸியோ..

4-வது நாள் போனா..

நம்ம சரவணன் சும்மா ஜம்னு இருந்தான்..

" என்னடா.. ட்ரீட்மெண்ட் முடிஞ்சதா.? "

" இல்ல மச்சி..  சரியா போச்சு..!! "

" என்ன..? ஒரே நாள்லயா..? "

" ஆமா..!! "

( அப்ப நான் மட்டும் தான் இளிச்சவாயா..?!! )

எனக்கு இப்ப பிசியோதெரப்பிஸ்ட் மேல
பயங்கர கோவம்..

அதே கோவத்தோட அவர் ரூம்க்கு போனேன்..

போயி.....

" சார். இதெல்லாம் ரொம்ப அநியாயம்..
எவ்ளோ செலவானாலும் சரி..

அவனையும் ஒரு வாரம் வர்ற மாதிரி
பண்ணிவிடுங்க..!! "

# ஹி., ஹி.. யாம் பெற்ற...
.
.

16 January 2015

சேசிங்..!!!


நானும்., என் Wife-ம் பேக்கரில நின்னுட்டு
இருந்தோம்..

அப்பதான் அவன் எங்களை பைக்ல
கிராஸ் பண்ணி போனான்..

இவன்.. இவன்... ஆ.. அவனேதான்..?!!

" நிர்மலா... நிர்மலா... சீக்கிரம் வண்டில
ஏறு.. "

" ஏங்க என்ன ஆச்சு..?! "

" அதோ... அவனை பிடிக்கணும்..!! "

" யாருங்க அது..? "

" நீ ஏறு சொல்றேன்.. "

அப்புறம் ஒரு 2 கி.மீ பைக் சேஸ்...

டக்னு அவன் பைக் முன்னால போயி
என் வண்டியை குறுக்குல நிறுத்தினேன்..

என்னை பாத்ததும் ஒரு செகண்ட் ஷாக்
ஆகிட்டான்.. அப்புறம் சுதாரிச்சிட்டு
என்னை பாத்து...

" அண்ணே எப்படி இருக்கீங்க..? "

" டேய்.. இந்த டகால்டி வேலை எல்லாம்
என்கிட்ட வேணாம்... "

" நான் என்னணே பண்ணினேன்..? "

" ஏன்டா.. 3 மாசமா என் போஸ்ட்டுக்கு
லைக்கே போடல..?!!

( பின்னாடி " த்தூ "-னு ஒரு சவுண்ட் கேட்டுச்சு..
ஆனா.. நான் திரும்பவே இல்லையே..
ஹி., ஹி., ஹி...!!! )

# ஃபேஸ்புக் ரைட்டரா இருக்கறது
ரொம்ப குஷ்டமப்பா.. சே.., கஷ்டமப்பா..!!
.
.

13 January 2015

வெயிட் மிஷின்..!!


இடம் : ஹோட்டல் மயூரா, திருப்பதி..

காலைல டிபன் முடிச்சிட்டு வெளியே
வந்தோம்..

அப்ப என் சின்ன பையன் கோகுல்
அங்கே இருந்த வெயிட் மிஷின்ல
ஓடி போயி ஏறி நின்னுகிட்டான்...

" அப்பா.. அஞ்சு ரூபா குடுங்க வெயிட்
பார்க்கணும்.. "

" நம்ம வீட்லயே வெயிட் மிஷின் இருக்குது.,
அதை விட்டுட்டு இங்க வந்து யாராவது
வெயிட் பார்ப்பாங்களா..? "

" நம்ம வீட்ல இட்லி கூடத்தான் இருக்கு..,
அப்புறம் ஏன்பா இங்கே வந்து இட்லி
சாப்பிடறோம்..?!! "

# தட் ஙே மொமண்ட்...
.
.

05 January 2015

அதெல்லாம் ஒரு கலை..!!!


நேத்து என் ப்ரெண்ட் அருண்கிட்ட
போன்ல பேசிட்டு இருந்தேன்..

அப்ப அவன் மொபைல் சார்ஜ்
கம்மியாதான் இருந்தது..

உடனே அவன் பக்கத்துல இருந்த
அவன் Wife-கிட்ட...

" தீபா... என் சார்ஜர் மாடில இருக்கு..
போயி எடுத்துட்டு வா.. "

அதுக்கு அவன் Wife..

" இப்போதைக்கு மாடிக்கு போற ஐடியா
இல்ல.. நீங்களே போயி எடுத்துக்கோங்க.. "

இந்த Conversation எனக்கு கேட்டது..

என்கிட்ட புலம்பினான்..

" சே.. இவங்ககிட்ட எப்படி வேலை
வாங்கறதுனே தெரியல.. "

" ஹி., ஹி., ஹி.., அதெல்லாம் ஒரு கலை...
போன வாரம்  எங்க வீட்ல இதே
சிட்சுவேஷன்.. "

" அப்படியா... சரி  நீ எப்படி உன் Wife-கிட்ட
இந்த வேலைய சொன்னே..? "

" நிர்மலா.... நீ மாடிக்கு போகவே கூடாது...
போனாலும்... என் சார்ஜர் எடுத்துட்டு
வரக்கூடாது... அப்புறம் எனக்கு
கெட்ட கோவம் வரும்..!!! "

" ஓஹோ.. இதான் டெக்னிக்கா... இரு
டிரை பண்றேனு " சொல்லிட்டு போனான்...

ஒரு நிமிஷம் கழிச்சி வந்து..

" மச்சி.... " நச் "-னு நடுமண்டையில
கொட்டிட்டாடா...!!! "

" ஹி., ஹி., ஹி... சேம் பின்ச்...!! "

" அடப்பாவி... ஏன்டா  சொல்லல..? "

" நான் என்ன பண்ணினேனு தானே
கேட்டே.. பதிலுக்கு என் Wife என்ன
பண்ணினானு நீ கேக்கவே இல்லியே..!!! "

கிர்ர்ர்ர்...!!!
.
.