சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

30 October 2013

தீபா ' வலி ' பர்சேஸ் - 2

டிஸ்கி : இது போன போஸ்டோட 
தொடர்ச்சி...

நானும் என் Wife-ம் " சென்னை சிஸ்க்ஸ் "
உள்ளே போனோம்..

அரைமணி நேரத்துல ஒருவழியா
ஒரு சேலை செலக்ட் பண்ணிட்டாங்க..

900 ரூபா..

" ஒண்ணு போதுமா..? "

" இல்ல இன்னொண்ணு எடுக்கணும்ங்க..!! "

" சரி எடுத்துக்க,,,, "

" அப்ப வாங்க வேற கடைக்கு போலாம்..! "

" ஒரு சேலைக்காக வேற கடை போகணுமா..?
இங்கேயே எடுத்துக்க..!! "

இதை கேட்டதும் என் Wife ஷாக் ஆகிட்டாங்க...

" ஆமா.. இப்ப எதுக்கு நீ இப்படி ஷாக்
ஆகுற..? "

" பின்ன...?! என்னாங்க இது கெட்ட பழக்கம்..?
ஒரே கடையில ரெண்டு சேலை எடுக்கறது..?!! "

" அடிப்பாவி... இதெல்லாம் இப்ப கெட்ட
பழக்கமா...?!! "

" இல்லியா பின்ன..? அப்ப எப்படி மத்த
கடையை எல்லாம் சுத்தி பார்க்குறதாம்..? "

" அதெல்லாம் முடியாது இங்கேயே எடு...!! "

" அப்படின்னா எனக்கு அந்த சேலையை
வாங்கி குடுங்க.. "

ஒரு சேலையை கையை காட்டினாங்க...

நானும் அதை உத்து பார்த்தேன்...

அடங்கொன்னியா... என்னடா இது
இத்தனை சைபர் போட்டு இருக்குது..
எனக்கு வேற ரெண்டு லட்சத்துக்கு மேல
எண்ண தெரியாதே..






அப்படியே சிரிச்சிகிட்டே
( வழிஞ்சிகிட்டேன்னு வெச்சிக்கலாம்.. )

" ஹி., ஹி., என்ன நிர்மலா இதை போய்
கேக்கற..? கொஞ்சம் காஸ்ட்லியா பாரும்மா...!! "

" ம்ம்க்கும்... இந்த டயலாக்குக்கு ஒண்ணும்
கொறைச்சல் இல்ல.... "

" ஹி., ஹி., ஹி...!! "

( நான் என் பர்ஸ்சை தொட்டு பாத்துகிட்டேன்..
அதுல இருந்த 2,147 ரூபா அப்படியே தான்
இருந்தது.. )

.
.

29 October 2013

தீபா ' வலி ' பர்சேஸ் - 1


தீபாவளி பர்சேஸ் போலாம்னு
ஒரு வாரமா என் Wife கேட்டுட்டே
இருந்தாங்க...

ஆனா.. நானு...

" வர்ற திங்கக்கிழமை போலாம்..!! "

" ஏங்க தீபாவளி வாரம்... கூட்டமா
இருக்கும்.. "

" ஆங்.. இங்கே தான் சாதாரண
மக்களின் சிந்தனையும்., ஒரு
தொழிலதிபர் சிந்தனையும் மாறுபடுது..!! "

" தொழில் அதிபரா..? யாரு..? "

" ஹி., ஹி., ஹி... நான் தான்...! "

" அடடா.. இந்த தொழில் அதிபர்கள்
தொல்லை தாங்கலப்பா.. வர வர
பஞ்சு மிட்டாய் விக்கிறவங்க எல்லாம்... "

" ஸ்டாப்., ஸ்டாப்...!! "

" சரி உங்க தொழில் அதிபர் சிந்தனை
என்ன சொல்லுது..?! "

" அதாவது... சன்டேவுக்கு அப்புறம்
மன்டே....!!! "

" வாவ்.. வாவ்... வாவ் இதை நீங்களே
கண்டுபிடிச்சீங்களா..? எப்படி முடியுது
உங்களால..? "

" உஷ்... குறுக்க குறுக்க பேசாகூடாது..
சொல்றதை கேளு..!! "

" சரி சொல்லுங்க...! "

" சன்டேலயே எல்லோரும் பர்சேஸ்
வந்துட்டு போயிடுவாங்க.. அப்புறம்
மன்டேல கடை காத்து வாங்கும்.. "

என் இந்த ஐடியாவ கேட்டு

" உங்களுக்கு மட்டும் எப்படிங்க இந்த 
மாதிரி ஐடியா எல்லாம் தோணுது? "னு
என் Wife அவங்க மனசுல நினைச்சது
எனக்கு வெளில கேட்டுச்சு....

ம்ம்ம்.. என்ன பண்றது..? நானெல்லாம்
பொறந்ததுல இருந்தே அப்படி...!!

அப்புறம் ஒரு வழியா... நேத்து தான்
" சென்னை சில்க்ஸ் " போனோம்...

அங்கே என்னடான்னா...

செம, செம, செம கூட்டம்...

அதை பாத்துட்டு என் Wife என்னை
கேவலமா ஒரு லுக் விட்டுட்டு...

" என்னமோ பெருசா கூட்டமே
இருக்காதுன்னு சொன்னீங்க...?

" இப்பத்தான் எனக்கு ஒரு விஷயம்
புரிஞ்சது..!!! “

" என்ன..? " 

“ ஹி., ஹி., ஹி...., சேலத்துல நிறைய 
தொழில் அதிபர்கள் இருக்காங்கன்னு..."

" நான் கூட ' நீங்க ஒரு லூசு '-னு 
புரிஞ்சிடுச்சோன்னு நெனைச்சேன்...!! “

" கிர்ர்ர்ர்ர்ர்.......!!
.
.

18 October 2013

அஞ்சாறு பேருக்கு நல்லதுன்னா...


நேத்து மதியம்
என் ஆயிரக்கணக்கான ரசிகைகள்ல (?! )
ஒருத்தங்க கேட்டாங்க....

" வெங்கட்.. நீங்க இதுவரை சூசைட்
பண்ணிக்க போற யாரையாச்சும்
தடுத்து இருக்கீங்களா..? "

" தடுத்து இருக்கீங்களாவா...?! அஞ்சாறு
பேரை காப்பாத்தி இருக்கேங்க..! "

" வாவ்.. அஞ்சாறு பேரா..?! "

" ஆமா.. நானெல்லாம் இதை ஒரு
பொதுசேவையாவே பண்ணிட்டு
வர்றேன்னா.. பாருங்களேன்...!! "

" நிசமாத்தான் சொல்றீங்களா..?! எப்பவும்
போல இதுவும் பொய் சொல்லலையே..! "

" பொய்யா... அது எப்படி இருக்கும்..
கருப்பா..? சிகப்பா..?!! "

" ஹா.., ஹா.., நீங்க தான் Mr.அரிச்சந்திரன்
ஆச்சே...!! "

" ம்ம்.. நம்புனா சரி..!! "

" ஆமா என்ன சொல்லி அவங்களை
கேன்வாஸ் பண்ணுவீங்க.. கஷ்டமா
இருக்குமே..! "

" கஷ்டமா.. அதெல்லாம் ஒண்ணுமில்ல
சும்மா நாலு வார்த்தை சொல்லுவேன்..
உடனே மனசு மாறிடுவாங்க..! "

" அப்படி என்னங்க சொல்லுவீங்க..?! "

" சரி., சரி.. இனிமே போஸ்டிங் போடலை
போதுமா..? " இதான் சொல்லுவேன்..

" ஹா., ஹா., ஹா..!!! "
.
.

09 October 2013

யார் அந்த போதி தர்மன்..?!!


டிஸ்கி : இது எதோ ஆராய்ச்சி கட்டுரை
போலன்னு நினைச்சி இங்கே வந்திருந்தீங்கன்னா...
சாரி... உங்களுக்காக நான் அனுதாபம் தான்
படமுடியும்..

பின்ன..

" சரவண பவன்ல சிக்கன் 65-ஆ கிடைக்கும்.?! "

ஒ.கே மேட்டர்க்கு போலாம்....

7-ஆம் அறிவு படம் ரிலீஸ் ஆகியிருந்த
சமயம்.. நான் தியேட்டர்ல உக்காந்து
படம் பாத்துட்டு இருக்கேன்..

போதிதர்மன்., DNA., பரம்பரை ஜீன்-னு
படம் ஓடிட்டு இருந்தது...

எனக்கோ தப்பிதவறி Zoology லேப்க்கு
எதுனா வந்துட்டோமோனு  ஒரு மாதிரி
பயமா இருந்துச்சு...

அப்பத்தான் அது நடந்தது.....

ஹி., ஹி., ஹி... ஒன்னுமில்ல...
Interval விட்டானுவ..

10 நிமிஷம் நிம்மதியா இருக்கலாம்..

சரி போர் அடிக்குதேனு என் மொபைலை
எடுத்து பாத்தேன்... ஒரு மிஸ்டு கால்
இருந்தது..

என் ப்ரண்டு மணிதான் கூப்பிட்டு இருந்தான்..
சரி அவனையாவது10 நிமிஷம் லந்து
பண்ணலாம்னு கூப்பிட்டேன்..

" ஹலோ.. மணி..! "

" சொல்லுடா.. "

" உனக்கு ஒரு ரகசியம் சொல்லவா.? "

" சொல்லு.. "

" போதிதர்மன் DNA-வோட என் DNA
99% ஒத்து போகுது.. "

" நிசமாவாடா...?!!!!! "

" ஆமாண்டா... ஆனா இந்த மேட்டரை
வெளில லீக் பண்ணிடாதே..!! "

" சொல்லமாட்டேனே... அப்புறம்
A.R முருகதாஸ் மாட்டிப்பாரு....! "

" ஏதுக்கு..?! "

" பின்ன.., போதிதர்மன் பெரிய அறிவாளின்னு
பொய் சொல்லி இருக்கார்ல.. அதுக்கு தான்..!! "

" அட நாயே...!!! "