சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

13 October 2012

ஹலோ மிஸ்டர் அரிச்சந்திரன்..!

இன்னிக்கு என் Wife-க்கு Birthday.

அவங்களுக்கு இந்த வருஷ Birthday-க்கு
நான் வாங்கி குடுத்த தங்க மோதிரம்
இதுதான்..



அட என்னாத்துக்கு அப்படி உத்து
உத்து பார்க்கறீங்க...?

எங்க குலதெய்வம் மேல சத்தியமா
இது தங்க மோதிரம் தாங்க..

2.5 கிராம்.. ஒன்ன்ன்ன்பதாயிரம் ரூபா.
"தங்கமயில்"ல வாங்கினது.

பார்ரா.. மறுபடியும் டவுட்டா பார்க்கறாங்க..?

இருங்க பில்லை ஸ்கேன் பண்ணி
போடறேன்...

" மாலா.. அந்த பில்லை எடுத்துட்டு வா.. "

" எந்த பில்லுங்க..? "

" அதான் உன் பர்த்டேக்கு நான் வாங்கி
குடுத்தேனே.. தங்க மோதிரம்.. அந்த பில்.. "

" என்ன.. நீங்க வாங்கி குடுத்தீங்களா..? "

" இல்லையா பின்ன..? "

" ஏங்க இப்படி அநியாயத்துக்கு
பொய் சொல்றீங்க..? "

" என்னாது பொய்யா..? யாரை பாத்து
என்ன வார்த்தை சொல்லிட்டே மாலா..
அரிசந்திரனை பார்க்கணும்னு ஆசையாயிருந்தா
நான் கண்ணாடி எடுத்து பாத்துப்பேன்..
தெரியுமா..? "

" ம்க்கும்.. இதுக்கு ஒன்னும் கொறைச்சல்
இல்ல.. என் பழைய மோதிரத்தை போட்டுட்டு
தானே இதை வாங்கினோம்.. "

" ஆமா.. "

" பின்ன நீங்க வாங்கி குடுத்ததா சொல்றீங்க..? "

ஹி., ஹி., ஹி..! அது வந்து.. கடைக்காரரு
மோதிரத்தை Pack பண்ணி என்கிட்ட
குடுத்தாரா.. நான் அதை வாங்கி உன்கிட்ட
குடுத்தேனா.. அதான்....

நான் " வாங்கி., குடுத்த மோதிரம்.."

" கிர்ர்ர்ர்.... சரி., ஒரு நிமிஷம் கிச்சனுக்கு
வாங்க... பில்லு அங்கே தான் இருக்குது.. "

" நோ... அது மட்டும் நடக்காது..
அங்கே கரண்டி எல்லாம் இருக்குது....."

மீ எஸ்கேப்.....!!

டிஸ்கி : போன வருஷ பர்த்டே கொண்டாட்டம்
பார்க்க.. க்ளிக்..

17 September 2012

பச்சை கலரு ஜிங்குஜா....!!!

என் மச்சான் கல்யாணம்..
மண்டபம் களை கட்டி இருந்தது..

அப்ப என் சகலை என்கிட்ட..

" சகலை.. அந்த பொண்ணு யாரு..? "

" எந்த பொண்ணு..? "


" அதோ.. பச்சை கலர் சுடிதார் போட்டிருக்குல்ல
அந்த பொண்ணு..! "

" எதுக்கு கேக்கறீங்க..? "

" ஜெனரல் நாலேட்ஜ் வளர்த்துக்க தான்..! "

நான் அந்த பொண்ணை பாத்தேன்..

சினிமா நடிகை அஞ்சலி சாயல்ல
இருந்தது.. ( ஹி., ஹி., போட்டோவுக்காக
எப்படி லாஜிக்கா ஒரு வரி சேர்த்தேன்
பார்த்தீங்களா..? )

" அது யார்னு தெரியலையே..! "

" என்னா சகலை நீங்க... என்னை விட சீனியர்,
நம்ம சொந்தக்காரங்க யார் யார்னு தெரிஞ்சி
வெச்சிக்க வேணாமா..? "

" ஓ... அப்ப நீங்க சொந்தகாரங்களை
தெரிஞ்சிக்க தான் கேக்கறீங்க..?! "

" எக்ஸாக்ட்லி..! "

" அப்ப முன் வரிசையில் வெள்ளை சட்டை
போட்டுட்டு, ஒரு தாத்தா இருக்காரே..
அவர்ல இருந்து ஆரம்பிக்கலாம் வாங்க..! "

" விளையாடாதீங்க சகலை... சொல்லுங்க..! "

" நிஜமாலுமே தெரியலை.. ஒருவேளை
பொண்ணு வீட்டு சொந்தமா இருக்கும்..! "

" சான்ஸே இல்ல.. பொண்ணோட அண்ணனை
பிடிச்சி விசாரிச்சிட்டேன்.. அவங்க சைடு
இல்லன்னு சொல்லிட்டான்..! "

( ஆஹா.. ஒரு மார்க்கமாத்தான்யா இருக்காரு..! )

" சரி அப்ப உங்க Wife-கிட்ட கேளுங்க..! "

" அவ தெரிஞ்சாலும் சொல்ல மாட்டா.. "

" அப்ப என் Wife மாலாகிட்ட கேளுங்க..,
அவளுக்கு தெரியும்.. "

" சரி இருங்க.. கேட்டுட்டு வரேன்.. "

நானும் பாத்துட்டுடே இருந்தேன்..
என் Wife-கிட்ட போயி என்னமோ
ரகசியமா பேசினாப்ல..

கொஞ்ச நேரத்துல சந்தோஷமா வந்தாரு

" சக்ஸஸ்... கண்டுபிடிச்சிட்டேன்..! "

" ஆமா.. இவரு பெரிய எடிசனு...
கரண்ட் கண்டுபிடிச்சிட்டாரு..!! "

" எப்படியோ கண்டுபிடிச்சோம்ல..! "

" ஆமா என் பொண்டாட்டிக்கிட்ட போயி
என்னான்னு சொல்லி கேட்டீங்க..? "

" அந்த பச்சை கலர் சுடிதார் போட்ட
பொண்ணு யாருன்னு சகலை உங்ககிட்ட
கேக்க சொன்னார்னு சொன்னேன்..!! "

" அடப்பாவி மனுஷா..?!!! "

டிஸ்கி : எதோ என் பொண்டாட்டிக்கு
பப்ளிக்ல புருஷனை அடிக்கிற கெட்ட பழக்கம்
இல்லாததால அன்னிக்கு நான் தப்பிச்சேன்..
.
.

29 August 2012

தேங்காய் எடு.. திண்டாடு..!!

ராத்திரி 9 மணிக்கு கூட ரோட்ல தேங்காவை 
டமார், டமார்னு போட்டு உடைக்கறாங்க.. 
( பாவம் அவங்களுக்கு இப்பதான் மெசேஜ் 
வந்ததுச்சி போல..! )

என்ன புரியாம பார்க்கறீங்க...? 
ஓ..! உங்களுக்கு மேட்டரே தெரியாதா..?  

அட., கிருஷ்ணகிரில ஒரு குழந்தை பிறந்த 
அரைமணி நேரத்துல பேசிச்சாம்.. 

அதுவும் " 4000 குழந்தைகளை காவு 
வாங்குவேன்னு " சபதம் வேற போட்டுச்சாம்.. 
( பெரிய ரவுடி குழந்தையா இருக்குமோ..! )

அதுக்கு " வீட்ல இருக்குற குழந்தைளுக்கு 
திருஷ்டி கழிச்சி தேங்கா வெச்சி உடைக்கணும்..! " 
இதான் பரிகாரம்.




ஏன் சிரிக்கறீங்க..? நம்ப முடியலையா..? 

என்னா பாஸ் நீங்க.. 
" பிள்ளையார் சிலை பால் குடிக்குதுன்னு " 
சொன்னப்ப பால் டம்பளரை எடுத்துட்டு 
ஓடினோம்.. 

அப்ப உங்களுக்கு சிரிப்பு வரலை.. 

" அக்கா , தங்கச்சிகளுக்கு பச்சை கலர்ல 
சேலை எடுத்து தரணும்னு " சொன்னப்ப.. 
எடுத்து தந்தோமே.. 

அப்ப சிரிப்பு வரலை..

இப்ப மட்டும் உங்களுக்கு சிரிப்பு வருதாக்கும்..?!

ஆனா ஒண்ணு பாஸு.. 

நல்லவேளையா பரிகாரம் சொன்னவன் 
தேங்காயை உடைங்கன்னு மட்டும் சொன்னான்.. 

தப்பி தவறி அவங்க அவங்க புருஷன் 
தலையில உடைங்கன்னு சொல்லி இருந்தா 
என்ன ஆவறது..?!! 

அவ்வ்வ்..!!

டிஸ்கி 1 : இது நம்ம ப்ளாக் வெர்சன்.. 

டிஸ்கி 2 : கொஞ்சம் டெவலப் செய்து 
விகடனுக்கு எழுதியது படிக்க க்ளிக்.... 

நான் தான் அப்பவே சொன்னேன்ல.. 
.
.

28 August 2012

ரெடி., ஸ்டார்ட், ஆக்சன்..!!



நான் ப்ளாக் ஆரம்பிச்சப்ப எனக்கு 
இவ்ளோ பெரிய  ரீச் இருக்கும்னு 
நினைக்கவே இல்ல..

Lions Club-ல பேச கூப்பிட்டாங்க..

Shortfilm எடுக்கலாம் வாங்கன்னு 
ரெண்டு பேர் கூப்பிட்டாங்க...

சினிமாவுக்கு Screenplay எழுத 
ரெண்டு பேர் கூப்பிட்டாங்க...

ஆனா.. அவங்க அழைப்பை என்னால 
Use பண்ணிக்க முடியாம போச்சு..

சாரிபா...!!

ஆனா... 

இந்த வாரம் என் விகடன்-ல ( கோவை ) 
என் ப்ளாக் வந்ததை பாத்துட்டு, 
விகடன் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி...

" உங்க காமெடி நல்லா இருக்கு.., 
விகடனுக்கு ரெகுலரா எழுதி தர 
முடியுமா.? " ன்னு கேட்டாங்க.. 

நானும் " நீங்க நினைக்கிற மாதிரி நான் 
ஒண்ணும் பெரிய ஆள் இல்ல சார்..
நான் ஒரு டம்மி பீஸ்" னு சொன்னேன்..

( வெங்கி., பெரிய எழுத்தாளர் (?!) ஆனதும் 
உனக்கு தன்னடக்கம் தானா வந்துடுச்சிடோய்..! ) 

ஆனா அவங்க விடறதா இல்ல.. 

அப்புறம் நான் " ஓ.கே " சொல்லிட்டேன்..


( விகடன்ல எழுத சொல்லி கேட்டப்ப 
என் ரியாக்சன்..! )

இதுக்கு மட்டும் எப்படி " ஓ.கே "
சொன்னேன்னு பார்க்கறீங்களா..?!

" மாசம் ஒண்ணோ , ரெண்டோ 
எழுதி குடுத்தா கூட போதும் "னு 
அவங்க எனக்கு சுதந்திரம் குடுத்து 
இருக்காங்க...

அதே மாதிரி நானும் அவங்களுக்கு 
சுதந்திரம் குடுத்து இருக்கேன்..

" எழுதி அனுப்பற எல்லாத்தையும் 
போடணும்னு கட்டாயமில்ல.., உங்களுக்கு 
பிடிச்சதை மட்டும் போடுங்கன்னு... "

ஹி., ஹி., ஹி..., எங்கே போனாலும் 
அடங்க மாட்டோம்ல...!!
.
.

13 August 2012

என் ப்ளாக்கும் , என் விகடனும்..!!!




இந்த " என் விகடன் " இருக்குல்ல..
அட அதாங்க ஆனந்த விகடனோட
இணைப்பு...

அதுல வாரம் ஒரு ப்ளாக்கை
" வலையோசை " பகுதியில Intro
பண்ணிட்டு வர்றாங்க..

ஆனா அதுல இதுவரை என் ப்ளாக்
வரவே இல்ல..

இது என் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாவும்,
எனக்கு ஆச்சரியமாவும் இருக்கு..

பின்ன.., கொங்கு மண்டலத்துல
விரல் விட்டு எண்ணக்கூடிய
பிரபல பதிவர்கள்ல நானும் ஒருத்தன்ல...

அட.. இப்ப எதுக்கு மொறைக்கிறீங்க..?!

அவ்ளோ டவுட்டா இருந்தா
என் ப்ளாக்ல இருக்காங்களே
420 Followers அவங்ககிட்ட கேளுங்க...
அப்ப தெரியும்...

என்னாது கேட்டுடீங்களா...?!!

Follower-ஆ சேர சொல்லி நான்
கெஞ்சி , கதறினதை பத்தி யாரும்
எதுவும் உளறலையே..!! ( ஹப்பா..! )

சரி.. மேட்டர்க்கு வருவோம்..

ரெண்டு நாள் முன்னாடி தான்
என் Friend தம்பி ஆனந்த விகடன்ல
வேலையில இருக்காங்கிற மேட்டர்
எனக்கு தெரிஞ்சது.

உடனே அவனுக்கு போன் பண்ணி...

என் ப்ளாக் Details குடுத்து,
அதை பத்தி ஆஹா., ஓஹோன்னு
எடுத்து சொல்லி ' என் விகடன் 'ல
போட சொல்லி கேட்டோம்..

அவனும்..

" அவ்ளோ தானே.. அடுத்த வாரம்
போட்டுட்டா போச்சு..! "

" நிசமாவா..?! "

" ம்ம்.. இருங்க எதுக்கும் எடிட்டர்கிட்ட
ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்னு "
சொல்லிட்டு போனை வெச்சிட்டான்..

அப்பவே நான் " வலையோசை "ல
நம்ம ப்ளாக் வந்ததும், அதை பத்தி
எப்படி பதிவு போடறதுன்னு யோசிக்க
ஆரம்பிச்சிட்டேன்..

10 நிமிஷம் கழிச்சி அவனே கூப்பிட்டான்..

" ஹலோ வெங்கட் அண்ணா... "

" சொல்லு தம்பி... "

" எடிட்டர்கிட்ட பேசிட்டேன்.. "

( ஐ.. வொர்க் அவுட் ஆகிடுச்சி போல..)

" வர்ற வாரத்துல... "

" என் ப்ளாக்கை போட்டுடலாம்னு
சொல்லிட்டாரா..? "

" இல்ல..., வர்ற வாரத்துல இருந்து
' என் விகடன் ' புக்கை நிறுத்திடலாம்னு
சொல்லிட்டாரு.. "

அடப்பாவிகளா...?!!

( என்ன வாழ்க்கைடா இது..?!! )
.

.

03 August 2012

சுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 6

டிஸ்கி : என் மகன் 1st Std படிக்கும் போது 
ஸ்கூல் சுதந்திர தின விழாவில் பேசியது...

தலைப்பு : " நான் விரும்பும் தலைவர்.. "

நான் விரும்பும் தலைவர்..
அவர் குழந்தைகளின் ராஜா.,
இந்தியாவில் பூத்த ரோஜா..
அவர் தான் நம்ம நேரு மாமா...




எல்லோரும் பணக்காரர்களாக 
பிறப்பதில்லை..,
எல்லா பணக்காரங்களும் 
நேருவை போல இருப்பதில்லை..

நேரு லண்டனில் படித்தவர்.,
அவர் நெனச்சிருந்தா..

வக்கீல் தொழில் செஞ்சிகிட்டு 
வசதியா இருந்து இருக்கலாம்.. 

ஆனா.... 
அவர் நம்ம நாட்டு விடுதலைக்காக 
கஷ்டப்பட்டும் போராடினார்., 
இஷ்டப்பட்டும் போராடினார்..

அரண்மனை அறையிலே 
இருக்க வேண்டியவர் 
அகமத் சிறையிலே இருந்தார்..

மொத்தம் 3262 நாள் சிறையிலே 
கஷ்டப்பட்டார்.

கத்திக்கு பயப்படாத இங்கிலீஷ்காரன் 
அவர் புத்திக்கு பயப்பட்டான்...

சிங்கத்துக்கே தண்ணி காட்ன 
சிறுத்தைக் குட்டி நம்ம நேரு.. 

இந்தியா விடுதலை அடைந்ததும்
அவர் பிரதமர் ஆனார்..

இந்திய நாடு வளம் பெறவும்., 
இந்திய மக்கள் நலம் பெறவும் 
பல நல்ல திட்டங்கள் போட்டார்..

A.C-ல தூங்கறவன் மட்டுமில்ல 
ஏழை மாணவனும் படிக்கணும்னு நினைச்சார்..

அணைக்கட்டுகளே புதிய கோவில்கள்னு 
சொன்னார்..

தண்ணி இல்லாம., கரண்ட் இல்லாம 
நாம கஷ்டப்படக்கூடாதுன்னு அப்பவே 
சிந்திச்சார்..

அவர் பிறந்த நாளை தான் நாம 
" குழந்தைகள் தினமா " கொண்டாடுறோம்.

கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்றேன்..
பஞ்ச் டயலாக் எல்லாம் கடைசில தான் 
சொல்லணும்..

" நேரு மாமாவோட சட்டையும் வெள்ளை., 
அவர் மனசும் வெள்ளை., 
இதுக்கு மேல நான் என்ன சொல்ல....!! "

இரு கை கூப்பினால் வணக்கமாச்சு., 
நான் இருக்கைக்கு செல்கிறேன் நேரமாச்சு..

நன்றி..!!

டிஸ்கி : இன்னும் சில பேச்சுப்போட்டிகள்...

.
.

17 July 2012

ஆடியில அடிக்குதம்மா.....



கையில 15,000 ரூபா இருக்கு
என்ன பண்ணலாம்..?

Fridge-ஐ மாத்திட்டு புதுசு வாங்கலாமா..?

TV-ல விளம்பரம் வர்ற அந்த
புது மாடல் Fridge கூட பாக்க 
நல்லா தான் இருக்கு., 


கூடவே Offer-ல ஒரு குக்கர் வேற 
தர்றாங்கலாம்..

சரி., நாளைக்கே அதை வாங்கிடலாம்..!

இப்படி சில பேர் டக்கு டக்னு முடிவு
எடுத்துடறாங்க.. இது ரொம்ப தப்பு..!

( ஆமா.., இதுல என்ன தப்பு இருக்கு..? )

" என்ன தப்பு இருக்கா...? சொல்றேன்
நோட் பண்ணிக்கோங்க...! "

1. 15,000 ரூபா இருக்குங்கறதுக்காக
அதை செலவு பண்ண நினைக்கிறது
முதல் தப்பு.

2. பழசுங்கறதுக்காக நல்லா இருக்குற
ஒரு பொருளை மாத்த நினைக்கிறது 
ரெண்டாவது தப்பு.

3. புது Fridge வாங்கணும்னு முடிவு
பண்ணினதும்., உடனே வாங்கிடணும்னு 
துடிக்கிறது மூணாவது தப்பு.

4. " எந்த Fridge நல்லா இருக்குன்னு..? "
தெரிஞ்சவங்க நாலு பேர்கிட்ட Opinion
கேக்காதது நாலாவது தப்பு.

5. Free-யா வருதேன்னு தேவையில்லாத
குக்கர்க்கு ஆசைப்படறது அஞ்சாவது தப்பு..!

6. Offer-ன்னு சொல்லி தரமில்லாத
Fridge-ஐ வாங்க நினைக்கிறது
ஆறாவது தப்பு..!

இப்படிக்கு..,

வீட்டில் சொல்ல முடியாததை எல்லாம் 
தைரியமாக Blog-ல் சொல்லுவோர் சங்கம்..

சேலம் கிளை.

( அவ்வ்வ்வ்....!!! )
.
.

10 July 2012

ஒரு ஊர்ல, ஒரு கம்பியூட்டர் இஞ்ஜினியர்..!


நேத்து Evening என் கூட +2-ல படிச்ச
என் Friend கணேஷ் போன்
பண்ணியிருந்தான்..

" ஹலோ..! "

" டேய்.. நீ என்ன படிச்சி இருக்க..? "

எடுத்தவுடனே இப்படி ஒரு கேள்வியை
அவன் கேட்டதும் எனக்கு தூக்கி வாரி
போட்டது..,

( பொதுவா என் படிப்பு சம்பந்தமா
யாராச்சும் கேட்டா எனக்கு அப்படிதான்
ஆகும்...! ஹி., ஹி., ஹி.. )

" ஏன்டா.. என்ன விஷயம்..? "

" நீ மொதல்ல சொல்லு..! "

" நான் இந்த உலக இலக்கியம்.,
இந்திய இலக்கியம் எல்லாம்
படிச்சி இருக்கேன்..! "

" டேய்... போதும்.. நான் கேட்டது
அதில்ல. நீ காலேஜ்ல என்ன
டிகிரி படிச்ச..? "

" ஓ.. அதை கேக்கறியா..? நான் MCA
படிச்சி இருக்கேன்..! "

" அது கம்பியூட்டர் சம்பந்தமான படிப்பா..?! "

" ஆமா...! "

" டிகிரி வாங்கிட்டியா. இல்ல எதாச்சும்
அரியர் இருக்கா..? "

" ஹேய்... யாரை பாத்து... நான் தான்
MCA-ல காலேஜ் First..! "

" அப்ப உன் திறமையை Use பண்ணவேண்டிய
நேரம் வந்துடுச்சி மச்சி...! "

" நேரம் வந்துடிச்சா...? அப்படின்னா..."

( ஐய்யயோ... சாப்ட்வேர் எதாச்சும்
டெவலப் பண்ண சொல்லுவானோ..! )


( கொஞ்சம் ஓவராதான் போயிட்டோமோ..!! ) 

" என் பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல.... " 

" ஸ்கூல்ல..... " 

" தெர்மோகோல்ல கம்பியூட்டர் 
பண்ணிட்டு வர சொல்லி இருக்காங்க... 
கொஞ்சம் வந்து பண்ணி குடேன்..! " 

" அடி செருப்பால... புல்லு புடுங்க 
பில்கேட்ஸ் வேணுமாடா உனக்கு...? " 

" டென்ஷன் ஆகாதடா.. உன் படிப்பை மதிச்சி 
எவனாவது உனக்கு வேலை குடுத்தானா..? 
நானாவது இந்த வேலை குடுத்தேன்னு 
சந்தோஷப்படுவியா.. அதை விட்டுட்டு..!! " 

" ஹி., ஹி., ஹி.., தெர்மோகோல் எல்லாம் 
ரெடியா இருக்கா மச்சி...! "
.
.

11 June 2012

வி.ஐ.பி வீட்டுக் கல்யாணம்..!


நேத்து என் Wife-வோட
அத்தை பையனுக்கு கல்யாணம்..

7.15 PM :

நானும் , என் Wife-ம் கல்யாண
மண்டபத்துக்குள்ள போனோம்..

7.20 PM :

என் Wife அவங்க சொந்தகாரங்ககிட்ட
எல்லாம் பேசிட்டு இருந்தாங்க..

7.30 PM :

Dinner ரெடி... உடனே ஒட்டுமொத்த
கூட்டமும் Dining Hall-ஐ நோக்கி
படை எடுத்தது..

7.32 PM :

டைனிங் ஹால் Full..!  :(

7.35 PM :

நான் உள்ளே லேசா எட்டி பார்த்தேன்..
ஹூம்...! மெனு எனக்கு திருப்தியா
இருக்குற மாதிரி தெரியல

7.37 PM :

என் மொபைலை எடுத்து....

" ஹலோ...
.
.
.

" ஓ.. அப்படியா...? இதோ வந்துட்டேன்..! "

7.39 PM :

என் Wife-கிட்ட திரும்பி..

" இன்னொரு வி.ஐ.பி கல்யாணத்துக்கு
போகணும்..! சீக்கிரம் கிளம்பு... "

" யார்ங்க அந்த வி.ஐ.பி..? "

" வந்து பாரு தெரியும்...! "

" சரி.., சாப்பிட்டுட்டு போலாம்க..! "

" வேணாம்...வேணாம்.. லேட் ஆகிடும்..
அந்த கல்யாணத்துல சாப்பிட்டுக்கலாம்..! "

7.55 PM :

இடம் : பொன்னா கவுண்டர் மண்டபம்.

வெளியே நின்ன எல்லோருக்கும்
வணக்கம் வெச்சிட்டு உள்ளே போனோம்.
நேரா டின்னர் ஹாலுக்கு போயிட்டோம்...

7.58 PM :

பிஸ்தா ரோல், ரசகுல்லா,
வெஜிடபுள் மஞ்சூரியன்.,
காலிப்ளவர் சில்லி.,
ரோமாலி ரொட்டி - பன்னீர் மசாலா
பொடி இட்லி - 3 வகை சட்னி
மசால் தோசை, ஆனியன் தோசை
குழிப்பணியாரம், காளான் பிரியாணி,
சாம்பார் சாதம், தயிர் சாதம்,

சூப்பர் டின்னர்.. நான் புல் கட்டு
கட்டிட்டி இருந்தேன்..

ஆனா என் Wife மட்டும் என்னை
சந்தேக பார்வை பாத்துகிட்டு
கொஞ்சம் பதட்டமா இருந்தாங்க...

8.15 PM :

ஐஸ்கிரீம் சாப்பிடும் போது.,
என் Wife..

" ஏங்க உண்மையை சொல்லுங்க...
இந்த கல்யாணத்துக்கு உங்களை
யாருமே கூப்பிடலை தானே..? "

" ஏன் கூப்பிடலை.. அதோ மேடையில
இருக்கறவரு கூப்பிட்டாரே..! "

" யாரு..? மாப்பிள்ளையா..? "

" மாப்பிள்ளை இல்ல.. அவருக்கு
பக்கத்துல டார்க் புளூ சட்டை போட்டுட்டு
உசரமா இருக்கறாருல்ல.. அவரு... "

நான் கைகாட்டின இடத்துல

பொண்ணு மாப்பிள்ளையை சிரிக்க சொல்லி
போட்டோ எடுத்துட்டு இருந்தாரு
போட்டோகிராபர் சேலம் தேவா..!

" ??!!??!!!? "

( இவ்ளோ Grand-ஆ கல்யாணம் பண்றார்னா
கண்டிப்பா அவர் ஒரு பெரிய வி.ஐ.பியா 
தானே இருப்பாரு. - லாஜிக் பாயிண்ட். )


டிஸ்கி : இந்த பதிவுக்கு எதுக்கு
சினேகா கல்யாண போட்டோ
போட்டிருக்கேன்னு பார்க்கறீங்களா..?

இந்த கல்யாணத்துக்கும் வர சொல்லி
என்னை கூப்பிட்டாங்களே...

என்னது யாரா...?

அதாங்க... மண்டபத்துல சேர் எல்லாம்
எடுத்து... சரி, சரி.., இப்ப அந்த டீடெய்ல்ஸ்
எதுக்கு..?  லூஸ்ல விடுங்க..
.
.

22 May 2012

கருப்பு ஆடு..!!


அமாவாசை நைட்டு....

கும் இருட்டு....

" க்ரீச்....! "

( கேட் திறக்குற சத்தம்... )

" சொத்...! சொத்....! "

காலையில எந்திரிச்சி பாத்தா...

எங்க ஆபீஸ் ஜன்னல் கண்ணாடி
மேல யாரோ ரெண்டு முட்டையை
வீசி எறிஞ்சிட்டு போயிருக்காங்க..

அதை பாத்ததும் நானும் முதல்ல..

" ப்ளாக்ல நம்ம பாப்புலாரிட்டியை
தடுக்க யாரோ பண்ணுன வேலையா
இருக்குமோன்னு " நினைச்சேன்...

ஆனா அப்புறம் தான் தெரிஞ்து..

பிஸினஸ் பொறாமையில எங்களுக்கு
ரொம்ப வேண்டப்பட்ட " கருப்பு " ஆடுகள்
செஞ்ச வேலையிதுன்னு..

இதை எப்படி டீல் பண்றதுன்னு
தெரியாம எங்கப்பா கொஞ்சம்
குழம்பி போயிருந்தாரு...

அப்ப நான் சொன்னேன்..

" Don't Worry Daddy.. இதை டீல் பண்ண
என்கிட்ட சரியான ஒரு ஆள் இருக்கு..
நான் பாத்துக்கறேன்னு " சொல்லிட்டு
மங்குனிக்கு போனை போட்டேன்..

என்ன அப்படி பார்க்கறீங்க..?
நம்ம மங்குனியே தான்..

இந்த மாதிரி விஷயத்துல அவர்
ஒரு எக்ஸ்பர்ட்.

( ஒரு தடவை இவரை நேர்ல பாத்தப்ப
குட்டிசாத்தானே கதறி கதறி அழுததாம்ல..!! )

மங்குனிகிட்ட விஷயத்தை சொன்னேன்..

அவரும் நான் என்ன பண்ணனும்னு
சொன்னாரு...

அதுப்படி.. இன்னிக்கு அதை நானும்
கரெக்ட்டா பண்ணிட்டேன்...


.
.
.
.
.
.

( தயவு செய்து அவித்த முட்டை வைக்கவும்..! )




மங்குவின் மில்லியன் டாலர் ஐடியா :

" யோவ்.. கண்ட கண்ட இடத்துல 
முட்டையை உடைச்சா Waste-ஆ 
போயிடும்யா.. நீயே உன் ஆபீஸ்ல 
தனியா ஒரு இடம் ஒதுக்கி Board 
போட்டு வெச்சிடு... " 
.

18 April 2012

ஒரு ஆட்டோகிராப்.. ப்ளீஸ்..!

என் Birthday அன்னிக்கு பிள்ளையாரை
இம்சை பண்ணியே ஆகணும்கற
கொள்கையில உறுதியா இருக்கறதால
இந்த வருஷம் நான் அவரை மீட்
பண்ணினது பிள்ளையார்பட்டில.

அப்படியே வழக்கம் போல சின்னதா
ஒரு லிஸ்ட் ஒப்பிச்சிட்டு லஞ்ச்க்கு
தஞ்சாவூர் போயிட்டோம்..

அங்கே ஹோட்டல்ல ஆர்டர்
சொல்லிட்டு உக்காந்துட்டு இருக்கோம்...
அப்ப என் Wife மாலா என்கிட்ட...

" என்னங்க என்னங்க... அங்கே
பாருங்க.. காயத்ரி ப்ரியா..! "

" எந்த காயத்ரி..? " ( ஹி., ஹி., ஹி..
எனக்கு நாலு காயத்ரி தெரியும்ல..! )

" அட நடிகை காயத்ரி ப்ரியாங்க..! "

" நடிகையா...!!? " ( நான் லைட்டா திரும்பி
பார்த்தேன்.. ரெண்டு டேபிள் தள்ளி
காயத்ரி ப்ரியா அவங்க குடும்பத்தோட
உக்காந்து இருந்தாங்க.. )


" ஓ.. மெகா சீரியல்ல வந்து நல்லா 
அழுவாங்களே அவங்க தானே..?! " 

" இந்த ஜோக்குக்கு நான் வீட்டுக்கு போயி 
சிரிக்கிறேங்க.. இங்கே சிரிச்சா அடிபட்டுடும்.." 
( விழுந்து விழுந்து சிரிப்பாங்களாமாம்..! )

" சரி., சரி.. இப்ப என்ன பண்ணனும்கற..? " 

" அவங்ககிட்ட போயி ஆட்டோகிராப் 
வாங்கிட்டு வர்றேங்க..! "

" நோ., நோ.. அதெல்லாம் ஒண்ணும் 
வேணாம்..! " 

" அவங்க ஒரு செலிபிரிட்டீங்க., இப்படி  
அடிக்கடியா பார்க்க முடியும்..?! " 

" செலிபிரிட்டின்னாலும் அவங்களும் 
ஒரு சாதாரண மனுஷி தான்..! அவங்க 
Privacy-ஐ கெடுக்க கூடாது.. " - இப்படி 
நான் Strict-ஆ சொல்லிட்டேன்.. 

அதனால என் Wife-க்கு கொஞ்சம் 
வருத்தம்.. உம்முன்னு இருந்தாங்க..

கொஞ்ச நேரம் கழிச்சி.. 

Van-ல இருக்குற Water Bottle எடுக்க 
என் Wife போனாங்க.. அவங்க திரும்பி 
வரும்போது...

Reception-ல நானும் ., காயத்ரி ப்ரியாவும் 
பேசிட்டு இருந்தோம்.. 

இதை பாத்த என் Wife கண்ணுல 
கொலவெறி தெரிஞ்சது. வேகமா 
பக்கத்துல வந்தாங்க.. 

அப்ப காயத்ரி ப்ரியா என்கிட்ட...

" நீங்க ' கோகுலத்தில் சூரியன் ' வெங்கட் 
தானே..? நான் உங்க ரசிகை சார்.. 
ஒரு ஆட்டோகிராப்.. ப்ளீஸ்..! " 

" பொத்...!! " 

மாலா..! மாலா..! என்னாச்சி..! 


டிஸ்கி : காயத்ரி ப்ரியா என்கூட நின்னு 
ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு ரொம்ப 
ஆசைப்பட்டாங்க.. ஆனா " தமன்னா " 
பீல் பண்ணுவாங்களேன்னு " No " சொல்லிட்டேன்..

ஹி., ஹி., ஹி... சென்னை போனப்ப 
தமன்னாவும் என்கூட நின்னு போட்டோ 
எடுத்துக்க ஆசை பட்டாங்கல்ல.. 
அவுங்களுக்கும் " No " சொன்னோம்ல..!
.
.

03 April 2012

சகலை vs ரகளை..!!


" ஒரு மனுஷனுக்கு எந்த கஷ்டம்
வேணாலும் வரலாம்.. - ஆனா...

பொங்கி வர்ற சந்தோஷத்தை
Control பண்ணிட்டு சோகமா
இருக்குற மாதிரி ஆக்ட் குடுக்குற
நிலைமை மட்டும் வரவே கூடாது...! "

சரி., நாம மேட்டர்க்கு போவோம்..

எங்க மாமனார் வீட்ல நானும் ,
என் சகலையும் ஒரு கோடு கிழிச்சா...
அதை யாரும் தாண்ட மாட்டாங்க..

( அது மேலயே நடந்து போவாங்க..
அது வேற விஷயம்..)

போன வாரம் என் மச்சானுக்கு
பொண்ணு பார்க்க போயிருந்தோம்..

பொண்ணை பாத்துட்டு.. எல்லோரும்
டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க..

ஆனா எங்க ரெண்டு பேரையும்
கண்டுக்கவே ஆள் இல்ல.. நாங்களும்
என்ன தான் பண்றாங்கன்னு வேடிக்கை
பாத்துட்டு இருந்தோம்.. ( வேற வழி..?! )

கொஞ்ச நேரம் கழிச்சி., என் மச்சான்,
என் சகலை Wife,  என் Wife மூணு பேரும்
எங்க கிட்ட வந்து..

" ஏங்க பொண்ணு ஓ.கேவா..? "

" மாப்ள பக்கத்துல தானே இருக்கான்..
அவனை கேளுங்க...! "

" இந்த லூசு.. நீங்க ரெண்டு பேரும்
ஓ.கே சொன்னாதான் ஓ.கேன்னு
சொல்லிடுச்சு..! "

( ஆஹா.. தெய்வ மச்சான்..! )

இதை கேட்டதும் நான்...

" இப்படி டக்னு கேட்டால்லாம் எங்களால
பதில் சொல்ல முடியாது.. ஒரு வாரம்
டைம் வேணும்..! இல்லியா சகலை.."

" என்னாது ஒரு வாரமா..? " எங்க மச்சான்
டென்ஷன் ஆகிட்டான்..

இப்ப என் சகலை திருவாய் மலர்ந்தாரு..

" ஒரே நாள்ல முடிவு பண்ணி., எங்களை
மாதிரி நீயும் மாட்டிக்க கூடாதுல்ல..
அதுக்குதான் ஒரு வாரம் டைம் கேக்கறோம்..
அப்படித்தானே சகலை...?! "

( ஆஹா.. கோத்து விட்டுட்டான்யா..! )




ஹும்ம்.., இப்ப பதிவோட
முதல் ரெண்டு வரியை
மறுபடியும் படிச்சிக்கோங்க..
.
.

26 March 2012

இது எந்த ஊரு Dictionary..?? Part - 3


* மூட நம்பிக்கை : " Allout " போட்டால் கொசு
வராது என்று நம்புவது.


* Beauty Parlour : அழகான பெண்களை.,
சுமாரானவர்களாக மாற்றும் இடம்..!


* பிளாக்கர் : பதிவு போடும் அன்னிக்கு ( மட்டும் )
மற்றவர் பிளாக்குக்கும் போயி கமெண்ட் ,
ஓட்டு போடுபவர்.!


* கூட்டணி கட்சி : தேர்தலுக்கு பிறகு முதல் எதிரி


* இடைதேர்தல் : கம்மியா கரண்ட் போகும்
தொகுதியில் நடப்பது.


* சிகப்பழகு க்ரீம் : சிகப்பான பொண்ணுக்கு
கருப்பான மேக்கப் போட்டு விளம்பர படம்
எடுக்கும் கம்பெனி.



பின் டிஸ்கி :  நம்ம ப்ளாக்ல 400வது பாலோயராத்தான்
சேரணும்னு 6 மாசம் வெயிட் பண்ணி இன்னிக்கு
கரெக்ட்டா 400வது Follower-ஆ Join பண்ணின
கஸ்தூரி அவர்களின் கடமை உணர்ச்சியை
பாராட்ட வார்த்தைகளே இல்லை..

.
.

20 March 2012

சச்சின் 100-வது சதம் ( Behind the Scene )

சச்சின் 100வது செஞ்சுரி
அடிக்காத வரை " இப்ப அடிப்பாரா.? " ,
"அப்ப அடிப்பாரான்னு.? "
அதை பத்தியே பேசிட்டு இருந்தாங்க..

ஆனா அடிச்சப்புறம்..

" ப்பூ.., போயும் போயும்
பங்களாதேஷ்கிட்ட தானே அடிச்சார்னு "
இளக்காராம பேசறாங்க..

என்ன பண்றது.. அந்த மேட்ச்க்கு
முன்னாடி தானே அவரு எனக்கு
போன் பண்ணி Tips கேட்டாரு..
நானும் குடுத்தேன்..!

அந்த Tips-ஐ ஏன் அதை ஆஸ்திரேலியாவுல
இருக்கும் போது குடுக்கலைன்னு
நீங்க குறுக்கால பூந்து கேக்க வர்றது
எனக்கு புரியுது..

என்ன பண்றது.. அப்ப என் போன்ல
Balance இல்லயே..

" Incoming Attend பண்றதுக்கு எதுக்கு
Balance-னு.? " அடுத்த கேள்வி
கேப்பீங்களே.. தெரியும்..!!

சச்சின் எப்பவும் எனக்கு
மிஸ்டு கால் தான் குடுப்பாரு..
நான் தான் திருப்பி கூப்பிடுவேன்..
போதுமா.. உஸ்ஸப்பா....

ம்ம்.. அப்புறம் சச்சினுக்கு நான் குடுத்த
Tips ரொம்ப ரகசியமானது. வெளில
சொல்லக்கூடாது.. அதனால இங்கே
Bracket-ல போடறேன்..

( " உங்க ஹெல்மெட்ல BCCI Logo
முக்கால் இஞ்ச் தள்ளி இருக்கு.. அதை
ஒரு இஞ்ச் தள்ளி ஒட்டிக்கோங்க..! " )

ஏன் எல்லோரும் என்னை முறைக்கற
மாதிரியே பார்க்கறீங்க..?

ஓ... சந்தேகமா இருக்கா...?

அப்ப சச்சின் செஞ்சுரி அடிச்சப்புறம்
என்ன பண்ணார்னு நீங்களே பாருங்க...






அப்புறம் முந்தா நேத்து நம்ம
கோலி கூட போன் பண்ணியிந்தாப்ல..
( ஹி., ஹி., ஹி..!)
.
.

12 March 2012

தடுப்பூசி... நடுக்கமூட்டும் உண்மைகள்..!!


டிஸ்கி : ஜூனியர் விகடனில் ( 4.5.2008 )
வெளிவந்த டாக்டர் புகழேந்தி அவர்களின் பேட்டி..

தட்டம்மை தடுப்பூசி விநியோகம் இந்தியா முழுவதும்
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில்,
உண்மையில் இந்த தடுப்பூசிகள் நோயை தடுக்கின்றனவா..?
இல்லை உண்டு பண்ணுகின்றனவா என்ற திடுக்கிடும்
கேள்வி மக்களின் மனங்களை கலவரப்படுத்தி இருக்கிறது

" மக்களின் சந்தேகம் 100% நியாயமானது. இன்றைய
சூழலில் தடுப்பூசிகள் நோயை தடுக்கும் என்பதே மாயை.
அதற்கு உலக அளவிலான உதாரணங்களே சாட்சி.
மருந்து சந்தையின் பணம் காய்க்கும் மரமாக இருக்கும்
தடுப்பூசிகள் பற்றி இப்போதாவது மக்கள் விழிப்புணர்வு
பெறவேண்டும்" என்று எச்சரிக்கை குரலில் பேசுகிறார்
மருத்துவர் புகழேந்தி.

சென்னை அருகேயுள்ள கல்பாக்கத்தை சேர்ந்த புகழேந்தி,
சூழல் பாதுகாப்புக்கான மருத்துவர்கள் குழுவின் உறுப்பினர்.
மருத்துவ உலகில் நடக்கும் தில்லுமுல்லுகளை அந்த துறைக்குள்
இருந்துகொண்டே துணிச்சலாக வெளிப்படுத்தி வருபவர்.
அவரை சந்தித்தோம்..

" தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம் நிச்சயம் தவறாக
இருக்கப் போவதில்லை. ஆனால், இப்போது தவறான
நோக்கத்துடன் முன்னிலைப்படுத்தபடுகிறது. தடுப்பூசி
போட்டுக்கொள்வது ஒன்றுதான் இந்த பூமியில் பாதுகாப்பாக
வாழ்வதற்கான ஒரே வழி என்ற எண்ணம் மக்கள் மனதில்
திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்,
தடுப்பூசிக்கான சந்தையை உலக அளவில் விஸ்தரித்துள்ளனர்.

சுகாதாரமான உணவு, வசிப்பிடம், தண்ணீர் போன்றவையும்,
நல்ல நோய் எதிர்ப்பு சக்தியும்தான் எந்த ஒரு நோயையும்
தடுக்க முடியும். அதுதான் இயற்கையின் விதி. செயற்கையாக
உருவாக்கப்படும் மருந்துகள் அதை செய்ய முடியாது.

இதுவரைக்கும் தடுப்பூசிகள் எந்த நாட்டிலும்,
எந்த காலகட்டதிலும் முற்றுமுதலாக எந்த ஒரு நோயையும்
தடுத்ததில்லை. உலக அளவில் அதிகமாக போடப்படும்
போலியோ, அம்மை ,மஞ்சள் காமாலை தடுப்பூசிகளிலும்
இதுதான் உண்மை நிலவரம்.

அம்மை நோய்க்கான தடுப்பூசியை 1796-ல் எட்வர்ட் ஜென்னர்
என்பவர் கண்டறிந்தார். அந்த ஊசியை தன்னுடைய மகனுக்கும்,
இன்னொருவருக்கும் கொடுத்து சோதித்து பார்த்தார்.
தன் மகனென்றும் பாராமல் அந்த கொள்ளை நோய்க்கு
ஒரு மருந்து கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற
தியாக உணர்வில் அதை செய்தார்.

அந்த மருந்து, மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் மருந்தின் வீரியத்தால் சில வருடங்களில் அவர் மகன்
உள்பட இருவருமே இறந்து போனார்கள். இதனால்
எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய இரண்டாவது மகனுக்கு
அம்மை தடுப்பூசி போடவில்லை.. ஆரம்பம் மட்டுமில்ல..
அதன்பிறகான வரலாறும் இப்படித்தான் உள்ளது.

1989-ம் ஆண்டில் அமெரிக்க பள்ளிக்குழந்தைகள் அனைவருக்கும்
அம்மை தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.ஊசி போட்ட
பிறகு C.D.C ( Centre for Desease Control ) எனப்படும்
அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பு நடத்திய
ஆய்வில் 98% குழந்தைகளை அம்மை நோய் தாக்கியிருந்தது.
இது, ஊசி போட்டதற்கு முன்பு இருந்த சதவிகிதத்தை விட
மிக அதிகம். உலகின் பல நாடுகளில் இதே நிலைதான்.

அம்மை தடுப்பூசியால் அந்த நோய் வருவதை தடுக்க
முடியவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, அது மூட்டுவலி,
வலிப்பு போன்ற வேறு சில நோய்களையும் தூண்டிவிடுகிறது
என்ற தகவல் இன்னும் அதிர்ச்சியானது.

இங்கிலாந்தில் வருடம் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேர்
வலிப்பு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 10 ஆயிரம் பேர்
அம்மை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். இதை நான்
சொல்லவில்லை , " பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் " சொல்கிறது.

உடலுக்குள் இருக்கும் நோய்க்கிருமிகளுக்கு எதிரான புரதத்தை
தூண்டிவிடுவதற்காக, அதே கிருமியை அதை நோய் தாக்கும்
திறனை குறைத்து உடம்புக்குள் செலுத்துவது தான் அம்மை
தடுப்பூசி. உடலுக்குள் செலுத்தப்படும் அந்த கிருமியை
எல்லோருடைய உடலும் ஏற்றுக்கொள்வதில்லை. அது
ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தது.

இந்தியா போன்ற வளர்ந்துவரும் மற்றும் ஏழை நாடுகளின்
சிறுவர்கள் சத்து குறைப்பாட்டுடன்தான் இருக்கிறார்கள்.
அவர்களின் உடம்பு இந்த தடுப்பூசியின் கிருமிகளை
தாங்கும் சக்தி படைத்ததாக இருப்பதில்லை. அத்தகைய
சூழலில்தான் , தடுப்பூசி போடப்பட்ட நோக்கத்தின்
எதிர்திசையில் அம்மை நோயும், வேறு நோய்களும்
வருகின்றன.

அதேபோல மத்திய மற்றும் தமிழக அரசுகளால்
மஞ்சள் காமாலை தடுப்பூசிக்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்கப்படுகிறது. இந்த நோய் 100 பேரை தாக்குகிறது
என்றால், அதில் 95 பேருக்கு நோய் தாக்கியிருப்பது
உடனடியாக தெரிந்துவிடுகிறது. மீதி 5 பேருக்கு மட்டுமே
தாமதமான அறிகுறிகள் தென்படுகிறது.

அந்த 95 பேரிலும் 94 பேர், சராசரியான உணவுக் கட்டுப்பாடுகள்
மூலமாகவே இயல்பு நிலைக்கு திரும்பிவிடுகின்றனர். மீதமுள்ள
ஒரு சதவிகிதம் பேருக்கு மட்டுமே இறப்பு ஏற்படுகிறது.
ஆனால் அரசோ இது ஒரு ஆட்கொல்லி நோய் என்ற தோற்றம்
உருவாகும் வகையில் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை வாரி
இறைக்கிறது.

அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும்
மஞ்சள் காமாலை தடுப்பூசி போடுவது கட்டாயம் என்ற
சட்டம் 1997-ல் நீக்கப்பட்டுவிட்டது.கர்ப்பிணிப் பெண்களுக்கு
மஞ்சள் காமாலை இருந்தால் மட்டுமே, பிறக்கும் குழந்தைக்கு
அந்த தடுப்பூசி போடவேண்டும் என்பதாக அது மாற்றியமைக்கப்பட்டது.

தேவைக்கதிகமான உற்பத்தி செய்திருந்த மருந்துகளை
என்ன செய்வது எனத் தெரியாமல் அந்நாட்டு மருந்து கம்பெனிகள்
திணறி நின்ற சமயத்தில்தான், பில்கேட்ஸின் கரிசனம்
இந்தியாவின் மீது திரும்பியது. ஆந்திர மாநிலத்தின்
4.5 லட்சம் குழந்தைகளுக்கு, பில்கேட்ஸ் தனது ஃபவுண்டேஷன்
மூலமாக மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டார்.

அதற்கான மருந்து அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டது.
உண்மையில் மஞ்சள் காமாலைக்கு அமெரிக்காவை விட
தரமான, விலை குறைந்த மருந்து இந்தியாவிலேயே கிடைக்கிறது.

மஞ்சள் காமாலை பற்றி இந்த அளவு பூதாகாரப்படுத்தி,
ஏன் மக்களின் மனதில் பீதியை ஏற்படுத்த வேண்டும்.?
அம்மை தடுப்பூசி போலவே மஞ்சள் காமாலை தடுப்பூசியையும்
எல்லோருடைய உடல்நிலையும் ஏற்றுக்கொள்வதில்லை.

அப்படி தேவையில்லாமல் கொடுக்கப்படுவதால் வலிப்பு, ஜன்னி,
கண்பார்வை பாதிப்பு, மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட 13 வகையான
நோய்கள் வருகிறது என்கிறது 1997-ல் அமெரிக்க அரசால்
நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

முக்கியமாக குறைப்பிரசவத்தில் பிறக்கிற , சத்து மற்றும்
எடைக் குறைவால் பாதிக்கப்பட்ட, ரத்தசோகை தாக்கிய,
அதிக சளித்தொல்லை இருக்கிற குழந்தைகளுக்கு
மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டால்.. அது
எதிரான விளைவுகளையே அதிகம் ஏற்ப்படுத்தும்.

ஆனால் நமது அரசோ, மஞ்சள் காமாலை தடுப்பூசியை
ஏதோ காம்ப்ளான் கொடுப்பதுபோல எல்லோருக்கும்
கொடுத்து கொண்டிருக்கிறது. இதற்க்குப் பதிலாக
கருவுற்ற அனைத்து பெண்களுக்கும் இலவச
மஞ்சள் காமாலை சோதனையை செய்யலாம்.
அதில் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைக்கு மட்டுமே
தடுப்பூசி போடலாம்.

போலியோ தடுப்பு மருந்துக்கும் இதே போன்ற அதிர்ச்சி
வரலாறு இருக்கிறது. இதில் ஊசி, சொட்டு மருந்து என
இரு வகை உள்ளது. ஊசியில் உயிரற்ற கிருமிகள் இருக்கும்.
சொட்டு மருந்தில் உயிரோடு உள்ள கிருமிகள் இருக்கும்.

உயிரற்ற கிருமிகளைக் கொண்ட ஊசியால் பெரும்பாலும்
பிரச்னை வருவதில்லை.அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில்
இது தான் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் நம் ஊரில் அரசு
முழுக்க முழுக்க சொட்டு மருந்தை மட்டுமே வழங்குகிறது.
இது ஆபத்தானது. சம்பந்தப்பட்ட உடம்பு அந்த மருந்தை
ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அது போலியோவை
ஏற்படுத்தும், உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும்.

போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்.
" அமெரிக்காவில் 1961-க்குப் பிறகு ஏற்ப்பட்ட அனைத்து
போலியோவுக்கும் போலியோ சொட்டு மருந்துதான் காரணம்"
என்று அமெரிக்க செனட் கமிட்டியில் வாக்குமூலம்
அளித்திருப்பதே இதற்கு சாட்சி.


டாக்டர் புகழேந்தி முன்வைக்கும் உதாரணங்கள் :

1. 1995-ம் வருடம் அமெரிக்க அழகி பட்டம் வென்றவர்
Heather Whitestone. சில ஆண்டுகளில் காது கேளாமை
நோயால் பாதிக்கப்பட்டார். அதற்கு மருத்துவர்களால்
சொல்லப்பட்ட காரணம் DPT எனப்படும் முத்தடுப்பூசி.

2. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி ,
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்த
கறுப்பின மற்றும் லத்தின் அமெரிக்க குழந்தைகள்
1500 பேருக்கு 1989-க்கும், 91-க்கும் இடைப்பட்ட
ஆண்டுகளில் அம்மை நோய் த்டுப்பூசி செலுத்தப்பட்டது.

இதே ஊசி, இதே காலகட்டத்தில் பல ஆப்பிரிக்க நாட்டு
குழந்தைகளுக்கும் போடப்பட்டது. இது அந்தக் குழந்தைகளின்
பெற்றோருக்கே தெரியாமல் நடத்தப்பட்டது. அதுவரைக்கும்
அம்மைத் தாக்குதலையே கண்டிராத அவர்கள், அந்த ஊசியின்
விளைவால் பலவிதமான உடல் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
பலர் இறந்தும் போனார்கள். பலத்த எதிர்ப்புக்கு பிறகு
உலக சுகாதார நிறுவனம் அந்த மருந்தை சந்தையிலிருந்து
விலக்கிக் கொண்டது.

3. போலியோ சொட்டு மருந்தானது, குறிப்பிட்ட ஒரு வைரஸை
குரங்கின் சிறுநீரகத்தில் வைத்து வளர்த்து எடுத்து, பின்னர்
நோய் தடுப்பு மருந்தாக உருவாக்கப்படுகிறது.

குரங்குகள் உரிய சோதனைகளுக்கு பிறகு தான்
தேர்தெடுக்கப்படுகின்றன என்றாலும்.,1950-களில் ,
இந்த மருந்து தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட குரங்குளை
சிமியன் வைரஸ் 40 ( SV 40 ) என்ற வைரஸ் கிருமி
பாதித்திருந்தது. இந்த வைரஸ் , பல வருடங்கள் கழித்து
மூளை, ஈரல், நுரையீரல் போன்ற இடங்களில் புற்றுநோயை
ஏற்ப்படுத்தும் திறன் கொண்டது. இதனால் இந்த மருந்து
செலுத்தப்பட்டவர்கள் பெரியவர்களான போது அவர்களில்
பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.

இவற்றை எல்லாம் வைத்துக்கொண்டு தடுப்பூசிகளே
வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அது ஒரு
எல்லை வரைக்குமே நோய் வராமல் தடுக்கிறது.
மருந்து கம்பெனிகளும், அரசும் சொல்வது போல
அது ஒன்றும் சர்வரோக நிவாரணி அல்ல.

ஒரு நபருக்கு தடுப்பூசியைப் போடலாமா? வேண்டாமா.?
என்பதை அவருடைய உடல்நிலையைக் கருத்தில்
கொண்டு முடிவு செய்ய வேண்டும். அதே போல
ஒரு தடுப்பூசியை ஒரு நபருக்கு போடுவதற்கு முன்பு,
அதன் சாதக பாதகங்களை சம்பந்தப்பட்டவருக்கு
சொல்வது மருத்துவரின் கடமை.

இதையெல்லாம்விட சிறந்த வழி, சுகாதாரமான,
சுத்தமான வாழ்க்கை முறையை பின்பற்றி,
தடுப்பூசிகள் தேவைப்படாத ஒரு சூழ்நிலையை
உருவாக்கிக்கொள்வது தான்.

ஆபத்துக்கள் நிறந்த தடுப்பூசிகளா.? ஆபத்தில்லா
சுகாதாரமான வாழ்க்கை முறையா.? எதற்கு
முன்னுரிமை என்பதை மக்கள் தான் முடிவு
செய்ய வேண்டும்.அதற்கேற்ற விழிப்பு உணர்வை
அரசாங்கம் அவர்களுக்கு உருவாக்க வேண்டும்.
என்றார் புகழேந்தி..

எச்சரிக்கை விடுபவர் பொறுப்பான ஒரு மருத்துவர்.
கோடிக்கணக்கில் பணத்தையும் பல ஆயிக்கணக்கான
சுகாதாரத்துறை ஊழியர்களையும் வைத்து நடத்தும்
தடுப்பூசி முகாம்கள் குறித்து மறுபரிசீலனை செய்யும்
நேரம் வந்துவிட்டதா..?

நன்றி : டாக்டர் புகழேந்தி MBBS, ஜூனியர் விகடன்.

மேலும் அதிக தகவலுக்கு :




Read More @ :

27 February 2012

குறுக்குவழி Vs ஷார்ட் கட்..!

அப்ப என் பையன் 2nd Std
படிச்சிட்டு இருந்தான்..

அவனுக்கு Quarterly Exams
நடந்துட்டு இருந்தது..

அடுத்த நாள் SOCIAL Exam.
அதுக்கு சொல்லி குடுக்க
சொல்லி என்கிட்ட வந்தான்.

" ஆண்டவா என் பையனை நீதான்
காப்பாத்தணும்னு " வேண்டிகிட்டு
பாடத்தை சொல்லி குடுத்துட்டு
இருந்தேன்..!

அதுல ஒரு கேள்வி..

" Which Animal is called as
Ship of the Desert..? "

Ans : CAMEL

இந்த " CAMEL " ங்குற வார்த்தை
அவனுக்கு தகராறாவே இருந்தது..
" டக்னு " ஞாபகம் வராம தடுமாறினான்..

உடனே எனக்கு ஒரு யோசனை..
இதுக்கு ஒரு ஷார்ட் - கட் சொல்லி
குடுத்தா என்னான்னு..

( Camel-க்கு எல்லாமா ஷார்ட் கட்டானு
தானே யோசிக்கறீங்க..?

ஹி., ஹி., ஹி... நாங்கல்லாம் படிக்கிற
காலத்துல எலி போட்டுக்குற Pant = Elephant-னு
ஷார்ட் கட்ல படிச்சவங்களாக்கும்..!!! )


உடனே அவனை கடைக்கு கூட்டிட்டு
போயி ஒரு Camlin பென்சில் வாங்கி
குடுத்தேன்..

அதுல சின்னதா ஒரு ஒட்டகம் படம்
போட்டு இருக்கும்.. அதை காட்டி...

" ஒரு வேளை அந்த கேள்விக்கு உனக்கு
Answer தெரியலைன்னா.. இந்த பென்சிலை
திருப்பி பாரு.. ஞாபகம் வந்துடும்னு "
சொன்னேன்..!

அவனும் சந்தோஷமா தலையை ஆட்டினான்.

அடுத்த நாள் : காலை 9.30 மணி

டிபன் சாப்பிடும் போது தான் பார்த்தேன்..
நான் வாங்கி குடுத்த அந்த Camlin பென்சில்
டேபிள் மேலயே இருந்தது..

எனக்கு " பக்னு " ஆகிடுச்சு

என் Wife-ஐ பாத்து கேட்டேன்..

" அவன் பென்சிலை மறந்துட்டு
போயிட்டானா..? "

" இல்லங்க.. இந்த பென்சில் லைட்டா
எழுதுதுன்னு சொன்னான்... அதான்
Apsara பென்சில் குடுத்து இருக்கேன்..! "

( ஐயையோ அப்ப Ship of Desert கேள்விக்கு
" Apsara "னு எழுதி வைப்பானோ..?! அவ்வ்வ்..! )

நேத்து நடந்த Short-Cut மேட்டரை
என் Wife கிட்ட சொன்னேன்..

" ஏங்க உங்க குறுக்கு புத்தியை
அவனுக்கும் கத்து தர்றீங்க..? "

" நோ குறுக்கு புத்தி., இது Short-Cut..! "

" ம்ம்ம்..! இன்னிக்கு மட்டும் அவன்
தப்பா பதில் எழுதிட்டு வரட்டும்.. அப்ப
இருக்குது உங்களுக்கு..!! "

Evening ஸ்கூல்ல இருந்து வந்ததும்.,
அவன் Question Paper-ஐ வாங்கி பாத்தா..
அந்த பாழாப்போன கேள்வி இருந்தது..

அவனை கேட்டேன்...

" டேய். அம்மா உனக்கு வேற பென்சில்
குடுத்துட்டாங்களே.. இதுக்கு எப்படிடா
பதில் எழுதின..? "

" அதனால என்னப்பா..? எனக்கு தான்
Answer நல்லா மனப்பாடம் ஆகிடுச்சே..! "

( அப்பாடா.. தப்பிச்சேன்டா..! )

" சரி என்ன பதில் எழுதின..? "

" CAMLIN "

" ?!!?!?? "

----------------------------------------------------------------


டிஸ்கி : என் மகன் ( சூர்யா வெங்கடப்பன் )
ஸ்கூல் சுதந்திர தின விழால ஸ்டேஜ்ல
பேசின " கலக்கல் " வீடியோ பார்க்க.. க்ளிக்.
.

.

13 February 2012

" பவர் கட் " ஸ்பெஷல்..!!

டிஸ்கி : Fan ஓடாத ( UPS Down ) ஒரு ராத்திரி
வேளையில் , மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ,
கொசுவோடு கபடி விளையாடிட்டு
இருக்கும் போது என் சிந்தனையில்
குதிச்சது..





10 மணி நேரம் கரண்ட் இல்லையேன்னு பீல் பண்றதை
விட்டுட்டு.. 14 மணி நேரம் கரண்ட் இருக்கேன்னு
நினைச்சி சந்தோஷப்படணும் # பவர்கட் தத்ஸ்


இலவச கிரைண்டர், மிக்ஸி எல்லாம் வேண்டாம்..
வீட்டுக்கு ஒரு UPS குடுங்கப்பா.. புண்ணியமா போகும்..!


அறிஞர் அண்ணா தெரு விளக்கு வெளிச்சத்தில தான்
படிச்சாராம். கொடுத்து வெச்சவரு. நம்ம புள்ளங்களுக்கு
இப்ப அதுக்கு கூட வழியில்லையே..!


" நாங்கல்லாம் அந்த காலத்துல.. " " அட., கொஞ்சம்
கம்முன்னு இருங்க தாத்தா. நாங்களும் இப்ப
அந்த காலத்துல தான் இருக்கோம் " # 10 மணி நேர பவர்கட்


" பவர் கட் " - முன்னே ஆற்காட்டாரை திட்டினாங்க,
இப்ப ஜெ.வை திட்றாங்க. நல்லவேளை இலவசத்துக்கு
ஆசைப்பட்டு ஓட்டு போட்ட நம்மள யாரும் திட்டலை.!


தினமும் குறிப்பிட்ட டைம்ல கரண்ட் கட் - கலைஞர் ஆட்சி.,
எப்ப வேணாலும் கரண்ட் கட் - அம்மா ஆட்சி # வெளங்கிரும்.!


தமிழ்நாட்ல கரண்ட் பில்லை ஆன்லைன்ல கட்டலாம்.,
ஆனா கம்பியூட்டர் " ON " செய்ய கரண்ட் இல்ல.!
# என்ன கொடுமை சார் இது.?


ஒவ்வொரு தடவையும் ஓட்டை மாத்தி போட்டு
" யாரை விட யார் மோசம்"-னு நாம தெரிஞ்சிக்கிறோம்.!


பின் டிஸ்கி :

Power Cut-னால என்னென்ன
நல்ல விஷயங்கள் இருக்கு..
படிக்க க்ளிக்...
.
.

06 February 2012

சிங்கத்தை சிரிக்க சொல்லி....

நாங்க ஏற்காடு போனப்ப..
அங்கே இருக்குற Forest-ஐ சுத்தி
பார்க்கலாம்னு ஆசையா போனா

அங்கே ஒரு போர்டு வெச்சி இருந்தது..

" அபாயம்..! காட்டு விலங்குகள்
நடமாடும் பகுதி "

அதை பாத்ததும் என் Wife..

" வேணாங்க.. ரிஸ்க் எடுக்காதீங்க..! "

" ஹேய்...நாங்கல்லாம் புலிக்கு பக்கத்துல
உக்காந்து புல் மீல்ஸ் சாப்பிடறவிங்க..! "

" பாத்துங்க.. அந்த புலிக்கும் உங்களை
பாத்ததும் மீல்ஸ் சாப்பிட ஆசை வந்துட
போகுது..!? "

" இப்படி சொன்னா.. நாங்க பயந்துடுவோமா..?!! "

" இல்லையா பின்ன..?!! "

" நோ சான்ஸ்.! "

" சரி.., திடீர்னு நம்ம முன்னாடி ஒரு
சிங்கம் வந்துட்டா.. அப்ப என்ன
பண்ணுவீங்க..?! "

" சிங்கத்தை சிரிக்க சொல்லி ஒரு
போட்டோ எடுப்பேன்..! "


" அப்ப நிஜமாவே சிங்கம், புலியை
எல்லாம் நேருக்கு நேரா பாத்தா
பயப்பட மாட்டீங்க..?! "

" நமக்கு எப்ப கல்யாணம் ஆச்சோ..
அப்ப இருந்தே அதுக்கெல்லாம்
நான் பயப்படறது இல்ல..! "

" என்னா சொன்னீங்க... கிர்ர்ர்ர்ர்...."
( ஐயோ.. புலி மாதிரியே உறுமறாளே...! )

" கூல்.. கூல்... கல்யாணத்துக்கு அப்புறம்
நீ என்னை மாவீரனா மாத்திட்டேன்னு
சொல்ல வந்தேன்..! "

" ம்ம்.. அந்த பயம் இருக்கணும்..! "

( உஸ்ஸப்பா.. உசுரை காப்பாத்திக்க
எப்படி எல்லாம் டிரிக்ஸ் பண்ண
வேண்டி இருக்கு..!! )

-----------------------------------------------------------------------------

" நன்றி.., நன்றி.. நன்றி..! "

எதுக்கு இப்ப " நன்றி " னு பார்க்கறீங்களா..?!!

எப்படியும் கீழே இருக்குற மேட்டரை
படிச்சிட்டு நீங்கல்லாம் எனக்கு வாழ்த்து
சொல்ல போறீங்க...

அதான் அட்வான்சா இருக்கட்டுமேன்னு....
ஹி., ஹி., ஹி...

இந்த வார " என் விகடன் "ல ( 8.2.2012 )
நான் எடுத்த போட்டோ ஒண்ணு
பிரசுரமாகி இருக்கு...






































( கரடியை வீரவேசத்துடன் அடக்க துடிக்கும்
என் குட்டி பையன் கோகுல்.! )
.
.