சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

20 April 2010

Exam கீதாசாரம்எது நடந்ததோ
அது நன்றாகவே நடக்கவில்லை
( ஆறு Paper-ல அரியர் )

எது நடக்கிறதோ
அதுவும் நன்றாகவே நடக்கவில்லை
( இன்னிக்கும் Question Paper கஷ்டம் )

எது நடக்க இருக்கிறதோ
அதுவும் நன்றாகவே நடக்காது
( நாமதான் படிக்க மாட்டோமே )

உன்னுடையது எதை நீ இழந்தாய்..?
( Marks எல்லாம் டீச்சர்து..,
அதை நாம கேட்க கூடாது )

எதற்காக நீ அழுகிறாய்..?
( சும்மா சீன் காட்டத்தானே..? )

எதை நீ படித்தாய்
அது மறப்பதற்கு.,

எதை நீ கவனித்தாய்
அது புரியாமல் போவதற்கு..,

எதை நீ எழுதினாய்
Pass ஆவதற்கு..?ஹாய் வெங்கட் :
-------------------

( அனு )
நாம தலைகீழா நின்னு
யோகா பண்றோம்.
அப்போ, வௌவால் எப்படி
யோகா பண்ணும்..? ( நேரா நின்னா.?)

அதென்ன Blog-ஆ வெச்சிருக்கு.,
டென்ஷன் ஆகி யோகா Class
போறதுக்கு..?!


இன்று ஒரு தகவல் :
---------------------

எனக்கு ஒரு கோடி ரூபாய்
கிடைக்க போவுது.
So., Blog எழுதறதை
நிறுத்திடலாம்னு இருக்கேன்..

பின்லேடனை பிடிச்சா
ஒரு கோடி குடுக்கறாங்களாம்..!!
எனக்கு பின்லேடனை
" ரொம்ப பிடிக்கும்..!! "
.
.

33 Comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எனக்கு பின்லேடனை " ரொம்ப பிடிக்கும்..!! "

என்னது பின்லேடனை ரொம்ப பிடிக்குமா. இருங்க இந்த விசயத்த வருங்கால அமெரிக்க ஜனாதிபதி(ஜனா இல்ல) ஜெயலலிதாகிட்ட சொல்றேன்

Chitra said...

எதை நீ படித்தாய்
அது மறப்பதற்கு.,

எதை நீ கவனித்தாய்
அது புரியாமல் போவதற்கு..,

எதை நீ எழுதினாய்
Pass ஆவதற்கு..?


......சான்சே இல்லை. சர்வ சாதாரணமாக போட்டு உடைச்சுருக்கீங்க. சிரிச்சு முடியல.

Kavasker said...

அம correct,

நாம college-ல என்ன
பன்னமோ , அத அப்படீய
YALUTHIIRUKA.

அனு said...

வெங்கட்,

உங்க நேர்மை எனக்குப் பிடிச்சுருக்கு.. செஞ்சதை எல்லாம் ஒத்துக்குறீங்க... அது மட்டுமில்லாமல், உங்க answer paper-a வேற ஸ்கேன் பண்ணி போட்டுருக்கீங்க...

நாங்களெல்லாம் இயற்கை மீது ஆர்வம் உள்ளவர்கள்.. ஒரு செட் answer sheetகாக 15 மரங்கள் வெட்டபடுதாம்..தெரியுமா?? சோ, அதை எதிர்த்து நாங்களெல்லாம் எக்ஸாம்கே போனதில்லை..

எனக்கு ஒரு டவுட்டுங்க.. நம்ம என்ன தான் படிச்சாலும் நம்ம படிக்காத பாடத்தில இருந்தே கேள்வி வருதே.. அது எப்படி?? சரி விடுங்க.. நம்ம தான் நூறு மார்க்-கையும் choice-ல விடுற ஆளாச்சே.. நமக்கு எதுக்கு இதெல்லாம்...

//So., Blog எழுதறதை
நிறுத்திடலாம்னு இருக்கேன்..//
பின்லேடனை எப்படியும் பிடிச்சுட்டு வந்து உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்.. ஆனா, சொன்னத செய்யனும்..

ஏலே காசி, வண்டிய afgan பக்கமா விடுடா...

வெங்கட் said...

@ ரமேஷ்..,

// வருங்கால அமெரிக்க ஜனாதிபதி
ஜெயலலிதாகிட்ட சொல்றேன் //

போச்சுடா..
இனிமே அவங்க ஓபாமாவுக்கு
எதிராவும் ஆர்ப்பாட்டம் பண்ண
ஆரம்பிச்சுடுவாங்களே..!
( கொடாநாடுல Rest எடுத்துகிட்டே )

வெங்கட் said...

@ சித்ரா..,
ரொம்ப நன்றிங்க..,
நாங்க படிச்ச காலத்தை
நினைச்சா இதெல்லாம்
தானா வருதுங்க..

வெங்கட் said...

@ கவாஸ்கர்..,
என்னடா மச்சான்
இப்படி காலை வாரிட்ட..,
இதுக்காகவா சிங்கப்பூர்க்கு
போன் பண்ணி Comment போட
சொல்லி குத்தேன்..

அப்படியே சைக்கிள் Gap-ல
நான் தான் ( வெங்கட் ) MCA-ல
காலேஜ் First-கிற உண்மைய
சொல்லுவியேன்னு பார்த்தா..!

சரி., சரி.., விடு
Feel பண்ணாதே..!
அடுத்த Comment-லயாவது
நான் நாலு Centum எடுத்ததை
சொல்லு..

வெங்கட் said...

@ அனு..,
ஹா. ஹா., ஹா..,
Nice Comment

// ஒரு செட் Answer Sheetகாக
15 மரங்கள் வெட்டபடுதாம்..
சோ, அதை எதிர்த்து
நாங்களெல்லாம் எக்ஸாம்கே போனதில்லை //

ஏன் இப்படி..?
School-க்கே போனதில்லைன்னு
நேரடியா சொல்லுங்களேன்..

// நம்ம என்ன தான் படிச்சாலும்
நம்ம படிக்காத பாடத்தில
இருந்தே கேள்வி வருதே.. அது எப்படி..?? //

நீங்க குமுதம்., ஆனந்த விகடனெல்லாம்
படிச்சிட்டு., அதிலிருந்தெல்லாம்
கேள்வி வரலைன்னு Feel பண்றது
நியாயமா..?

Anonymous said...

இது தான்.. இதுக்கு தான் உங்க பக்கம் எட்டியே பாக்கல. சுனாமிகாவோட கொம்ன்ட்டும் உங்க பதிலும் க்ளாஸ். அடிக்கடி கொமன்ட்ஸ் பார்க்க ஒன்லைன்ல வருகிறேனு தான் கொமன்ற் போடாம, வோட் மட்டும் போட்டுட்டு ஓடிடிறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ அனு

//எனக்கு ஒரு டவுட்டுங்க..
நம்ம என்ன தான் படிச்சாலும்
நம்ம படிக்காத பாடத்தில இருந்தே
கேள்வி வருதே.. அது எப்படி?? //

எக்ஸாம் ஹால்:
அனு: (தோழியிடம்) என்னடி எந்த கேள்வியும்
கேள்விப்பட்ட மாதிரியே இல்ல.
நேத்து படிச்சது ஒன்னு கூட வரல?

தோழி: இன்னிக்கு சயின்ஸ் எக்ஸாம்.
நேத்து நீ படிச்சது சோசியல் சயின்ஸ் புக்.

அனு: அய்யயோ இப்படிதான் ஏமாந்துடறேனா..?

ரசிகன் said...

எப்போதெல்லாம் லொல்ளு அதிகமாகிறதோ அப்போது குட்டவும், எப்போதெல்லாம் காமெடி கரை புரண்டு ஓடுகிறதோ அப்போது கைதட்டவும், பதிவுகள் தோறும் நான் தோன்றுவேன். இப்போ தோன்றியிருக்கறது கைத்தட்ட.. பிரமாதம், யதார்த்தம்...

எற்கனவே வீரப்பனை ரொம்ப பிடிக்கும்னு சொன்னவர்க்கே இன்னும் பரிசுப்பணம் கிடைக்கலயாம்.. அவசரப்பட்டு bloh எழுதறத நிறுத்திடாதீங்க...

( நிறைய பேர் ஆளுக்கு ஒரு கோடி தர முன்வருவாங்க.. சில பல கோடிகள் சம்பாதிச்சிடலாம்ன்னு தானே Plan??..)

ரசிகன் said...

நல்லவரே... காமெடி சொல்லலாம்.. பொய் சொல்லலாமா..? அனுவாவது.. சோசியல் சயின்ஸ் படிக்கறதாவது..

வெங்கட் said...

@ அனாமிகா துவாரகன்..,
நீங்க சொல்லுறது உங்களுக்கே
நியாயம்னு பட்டா சரி..
AD எங்கே..? AD எங்கே..?
உங்க ரசிகர்கள் என்னை
கேள்வி கேட்டு தொந்தரவு
பண்றாங்கப்பா..!!

வெங்கட் said...

@ ரமேஷ் & ரசிகன்

// காமெடி சொல்லலாம்..
பொய் சொல்லலாமா..? அனுவாவது..
சோசியல் சயின்ஸ் படிக்கறதாவது.. //

I am Very HAPPY..!
Start Music..

வெங்கட் said...

@ ரசிகன்
உங்களை பத்தி தான் தெரியுமே..!
நீங்க ஒரு
" கலியுக கிருஷ்ணபரமாத்மா "

// நிறைய பேர் ஆளுக்கு ஒரு கோடி
தர முன்வருவாங்க.. சில பல கோடிகள்
சம்பாதிச்சிடலாம்ன்னு தானே Plan.. ?? //

ஆஹா.., கண்டுபிச்சிட்டாங்களே..!!

மாலா said...

// எனக்கு ஒரு கோடி ரூபாய்
கிடைக்க போவுது.
So., Blog எழுதறதை நிறுத்திடலாம்னு
இருக்கேன.. //

நான் எப்படியாவது கஷ்டப்பட்டு
அந்த ஒரு கோடிய உங்களுக்கு
வாங்கி குடுத்துடறேன்..
ஆனா சொன்ன பேச்சை காப்பாத்தணும்..?

வெங்கட் said...

@ மாலா..,
நல்லா யோசிச்சி பார்த்தேன்..
Afterall ஒரு கோடிக்காக
Blog எழுதறதை நிறுத்தறதா..?

அப்புறம் மக்களுக்கு
கஷ்டம்னா என்னான்னு
தெரியாம போயிடுமே..?

மேலே ஒரு பத்தாயிரம் போட்டு
குடுத்தீங்கன்னா மறுபடியும்
Consider பண்றேன்..

அனு said...

நேற்று மாலை..
ரமெஷ் & ரசிகன் on phone...

ரசி: வெங்கட் எனக்கு போன் பண்ணி அனுவுக்கு எதிரா கமெண்ட் போட சொல்லி அழாத குறையா கெஞ்சி கேக்குறார்...

ரமே: எனக்கும் போன் வந்துச்சு.. ஆனா, எனக்கு தான் பொய் சொல்ல மனசே வரல.. ஏன்னா, நான் ரொம்ப நல்லவனாச்சே..
அதுவும் அனு ஒரு பெரிய புத்திசாலி.. எல்லாமே ஒரு படி better-ஆ தான் செய்வாங்க.. சயின்ஸ் எக்ஸாம் அப்பவே சோஷியல் சயின்ஸ் பாடம் வரைக்கும் படிச்சு முடிச்சுடுவாங்க.. அவங்கள பத்தி எப்படி தப்பா சொல்றது??

ரசி: ம்ம்ம்.. அவங்களுக்கு இருக்குற அறிவுக்கு படிக்கனும்-ன்ற அவசியமே இல்ல..அசால்டா university first வாங்கிடுவாங்க..
சரி, வெங்கடோட நட்புக்காக எதையாவது எழுதி வைப்போம்.. ஆனா, அனு தப்பா நினைச்சுக்க மாட்டாங்களே??

ரமே: நான் ஏற்கனவே அவங்க கிட்ட பேசிட்டேன்.. நட்புக்காக கொஞ்சம் விட்டு கொடுக்கலாம்னு சொல்லிட்டாங்க..அவங்களுக்கு ரொம்ப தாராள மனசுனங்க...

ரசி: நீங்க சொல்றது 100% கரெக்ட்.. ஆனாலும், இந்த வெங்கட்-க்கு இவ்வளவு பொறாமை ஆகாது

---------------

இது தாங்க நடந்தது...

@வெங்கட்:
கண்ணால் பார்ப்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரிப்பதே மெய்..

jana said...

இது கதையல்ல நிஜம்...

அனுவோட "comment"க்கு அப்புறம்
நடந்தது என்ன...
விஜய் TV யிலிருந்து ஒரு நேரடி report

(அனு & ரசிகன் போன்ல பேசியது)

அனு : ரசிகன் நான் உங்களபத்தி எழுதியிருக்கேன்
தயவு செஞ்சி மன்னிடுங்க...
உங்களுக்கு எப்படியோ என்ன பத்தி தெரிஞ்சிருக்கு...
நான் ஒரு வெத்துவேட்டு...
உட்டாலக்கடி...
தில்லாலங்கடி...
தத்தி...
அதனால இனிமே எதுவும் சொல்லி என்னோட "image" Damage ஆக்க வேண்டாம்...(என்னமோ இப்ப மட்டும் ஒழுங்கா இருக்கற மாதிரி)
எதுவா இருந்தாலும் நமக்குள்ள பேசி தீத்துக்கலாம்...

ரசிகன் : பரவாயில்ல விடுங்க...இதெல்லாம் சகஜம்...
இனிமேலாவது ஒழுங்கா Comment போடுங்க...
ஆனா ஜனா கேட்டா நான் நடந்தத சொல்லிடுவேன்...
ஏன்னா அவரு என்னோட நல்ல நண்பர்...

போன் கட்...

( ரமேஷ் அனுவோட போன்ல பேசியது)

ரமேஷ் : என்னங்க அனு இப்படி பண்ணீட்டிங்க..
நீங்க கெஞ்சி கேட்டதுக்கு அப்புறம்
நான் உங்கள பத்தி எதுவும் தப்பா எழுதாமத்தானே
இருக்கேன்...அப்புறம் ஏன் இப்படி...
வெங்கட்டும், ஜனாவும் எனக்கு ரெண்டு கண்ணு மாதிரிங்க
அவங்களூக்கு போயி நான் எப்படிங்க துரோகம் பண்ண் முடியும்...
இனிமே இப்படி பண்ணாதீங்க...பொழச்சி போங்க...

போன் கட்...

அனு : (எதுவும் சொல்லாமல் விசும்பல் மட்டும் கேக்குது)

முனைவர்.இரா.குணசீலன் said...

பின்லாடனை பிடிக்குறதுக்கு இப்படியொரு வழி இருக்கா??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ரசிகன்:

இங்க என்ன நடக்குது? இப்ப அனுவ கலாய்க்கிறாங்களா, இல்ல நம்மள கலாய்க்கிறாங்களா?

மங்குனி அமைச்சர் said...

ஏம்பா நீ மேத்ஸா , ரைட்டு கலக்கு , இரு கீதா உபசாரத்த கிண்டல் பன்றியா , நம்ம ராம கோபாலன்ட்ட போட்டு குடுக்கிறேன்

அனு said...

ஜனா & அனு on phone after jana's comment

ஜனா(பாதி அழுகையுடன்): அனு, என்னை மன்னிச்சுடுங்க.. இல்ல, நான் பண்ணின இந்த தப்புக்கு மன்னிப்பே கிடையாது.. ஆனா, இதை நானா பண்ணல.. வெங்கட் தான் இப்படியெல்லாம் கமெண்ட் போட சொன்னார்.. நான் இப்படி கமெண்ட் போடலைன்னா, அவர் எழுதிய எல்லா போஸ்ட்-டையும் ஒரு நாள் full-ஆ என்னை படிக்க வைப்பேன்னு சொன்னார்.. இப்போ சொல்லுங்க, என்னால என்ன பண்ண முடியும்.. என் உயிர் எனக்கு முக்கியமில்லையா...

உங்களுக்கு நம்பிக்கை இல்லன்னா, அவரே சிங்கப்பூருக்கு போன் பண்ணி ஒருத்தரை கமெண்ட் போட சொன்னதை ஒத்துக்கிட்டு இருக்கிறார், பாருங்க..

அனு: சரி சரி.. விடுங்க..அதுக்காக இப்படியா.. சின்ன குழந்தை மாதிரி அழுதுட்டு.. கண்ணை துடைச்சுக்கோங்க.. உங்க கஷ்டம் எனக்கு புரியுது.. சோ, dont worry.. நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன்..

ஜனா: ரொம்ப நன்றிங்க.. இனி மேல் இந்த மாதிரி பண்ணமாட்டேன்..

அனு(மிதப்பலாக): ம்..ம்...

போன் கட்...

வெங்கட் said...

ஜனா., ரமேஷ்., ரசிகன் & All.,

தயவு செஞ்சி
அனுவை யாரும் கலாய்க்காதீங்கப்பா..
அவங்க ரொம்ப நல்ல பொண்ணு.,
அப்பப்ப நம்மல கலாய்ச்சாலும்
அவங்க நல்ல மனசு
எனக்கு மட்டும் தான் தெரியும்..!

( " வெங்கட்., எல்லாரும் என்னை
கலாய்க்கறாங்க..!
Please நிறுத்த சொல்லுங்கன்னு "
அனு என் கையை., காலா நினைச்சி
கெஞ்சி கேட்கும்போது
நான் என்ன செய்ய..?
இப்படி தான் எதாவது எழுதணும்..
வேற வழி..? )

romba thimuru said...

வெங்கட், கலக்கல்

Sorry I dont know how to write in Tamil. So just copy & paste from previous comments.

I read most of your blog and laughing. But I become Anu fan instead of you.

Anu, Super comments... Keep rocking.

அனு said...

@romba thimuru

Thanks Chap..ஆனா, எல்லோருமே initial-ஆ உங்கள மாதிரி தான் சொல்றாங்க.. அப்புறம், வெங்கட் என்ன பன்றார்-னு தெரியல.. எல்லாரும் அவர் side-க்கு மாறிடுறாங்க.. நீங்களாவது எனக்கு கடைசி வரை support பண்ணுவீங்கன்னு நம்புறேன்.. :(

Try "http://www.google.com/transliterate/indic" to type in tamil...

@வெங்கட்
உங்கள support பண்ணி வர்ற கமெண்ட்டுக்கு என்ன ரேட் குடுக்குறீங்க??

cheena (சீனா) said...

ஹாய் வெங்கட்

நல்லா இருக்கியாப்பா

எக்ச ஒரு வழியாக்கண்டு பிடிச்சிட்டியா -பலே பலே

கீதோபதேசம் சூப்பர்

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா

வெங்கட் said...

@ மங்குனி.,

// இரு கீதா உபசாரத்த கிண்டல் பன்றியா ,
நம்ம ராம கோபாலன்ட்ட போட்டு குடுக்கிறேன் //

இப்படியெல்லாம் மிரட்டினா
அழுதுடுவேன்..!

வெங்கட் said...

@ ரொம்ப திமிரு..,

என்னங்க இப்படி பேரு
வெச்சி இருக்கீங்க..?
உங்க பேர சொன்னாக்கூட
திட்றேன்னு நினைச்சுக்க
போறாங்க..

அனுவை நீங்க பாராட்டினதுல
எனக்கு ரொம்ப சந்தோஷம்..
அது அவங்க திறமைக்கு
கிடைச்ச பரிசு..

வெங்கட் said...

@ அனு..,

நான் சொன்னப்ப
நம்பமாட்டேன்னு
சொன்னீங்க இல்ல..
இப்ப பாருங்க..
உங்களுக்கு நிஜமாவே
ரசிகர்கள் இருக்காங்க.

இனிமேலாவது
பினாமி பேர்ல ( அனு ரசிகன் )
உங்கள புகழ்ந்து நீங்களே
Comment போடுறதை
நிறுத்திக்கோங்க..!

ஜெகன் said...

@வெங்கட்,
உனக்கு விளம்பரம் பிடிக்காதா..
இல்ல (உன்னோடது தவிர) வேற
விளம்பரம் பிடிக்காதா?

//நான் தான் ( வெங்கட் ) MCA-ல
காலேஜ் First-கிற உண்மை..//.

எதுல firstனு சொல்லவே இல்ல..
9 மணி காலேஜ்க்கு 8.30 மணிக்கே
போயிடுவியே.. அதை சொன்னியா..?

// நான் Centum எடுத்ததை சொல்லு.//

கட் அடிச்சிட்டு காதலுக்கு மரியாதை,
மின்சார கனவுல ஆரம்பிச்சு 100 படம்
complete பண்ணதைத் தானே
Centum-னு சொல்ற?

வெங்கட் said...

@ சீனா சார்..,

ரொம்ப நன்றி சார்..
எங்கே ரொம்ப நாளா
காணோம்..?
நம்ம ரசிகன் உங்களை
தேடிட்டே இருந்தாரு..

வெங்கட் said...

@ ஜெகன்.,

// எதுல firstனு சொல்லவே இல்ல..
9 மணி காலேஜ்க்கு 8.30 மணிக்கே
போயிடுவியே..//

எப்படியோ நான் College First தானே..!!

அப்புறம் அபாண்டமா பழி
போடக்கூடாது..
நான் கட் அடிச்சிட்டு 100
படத்துக்கெல்லாம் போனதில்ல.
( 82 படம் தான் )