சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

17 September 2012

பச்சை கலரு ஜிங்குஜா....!!!

என் மச்சான் கல்யாணம்..
மண்டபம் களை கட்டி இருந்தது..

அப்ப என் சகலை என்கிட்ட..

" சகலை.. அந்த பொண்ணு யாரு..? "

" எந்த பொண்ணு..? "


" அதோ.. பச்சை கலர் சுடிதார் போட்டிருக்குல்ல
அந்த பொண்ணு..! "

" எதுக்கு கேக்கறீங்க..? "

" ஜெனரல் நாலேட்ஜ் வளர்த்துக்க தான்..! "

நான் அந்த பொண்ணை பாத்தேன்..

சினிமா நடிகை அஞ்சலி சாயல்ல
இருந்தது.. ( ஹி., ஹி., போட்டோவுக்காக
எப்படி லாஜிக்கா ஒரு வரி சேர்த்தேன்
பார்த்தீங்களா..? )

" அது யார்னு தெரியலையே..! "

" என்னா சகலை நீங்க... என்னை விட சீனியர்,
நம்ம சொந்தக்காரங்க யார் யார்னு தெரிஞ்சி
வெச்சிக்க வேணாமா..? "

" ஓ... அப்ப நீங்க சொந்தகாரங்களை
தெரிஞ்சிக்க தான் கேக்கறீங்க..?! "

" எக்ஸாக்ட்லி..! "

" அப்ப முன் வரிசையில் வெள்ளை சட்டை
போட்டுட்டு, ஒரு தாத்தா இருக்காரே..
அவர்ல இருந்து ஆரம்பிக்கலாம் வாங்க..! "

" விளையாடாதீங்க சகலை... சொல்லுங்க..! "

" நிஜமாலுமே தெரியலை.. ஒருவேளை
பொண்ணு வீட்டு சொந்தமா இருக்கும்..! "

" சான்ஸே இல்ல.. பொண்ணோட அண்ணனை
பிடிச்சி விசாரிச்சிட்டேன்.. அவங்க சைடு
இல்லன்னு சொல்லிட்டான்..! "

( ஆஹா.. ஒரு மார்க்கமாத்தான்யா இருக்காரு..! )

" சரி அப்ப உங்க Wife-கிட்ட கேளுங்க..! "

" அவ தெரிஞ்சாலும் சொல்ல மாட்டா.. "

" அப்ப என் Wife மாலாகிட்ட கேளுங்க..,
அவளுக்கு தெரியும்.. "

" சரி இருங்க.. கேட்டுட்டு வரேன்.. "

நானும் பாத்துட்டுடே இருந்தேன்..
என் Wife-கிட்ட போயி என்னமோ
ரகசியமா பேசினாப்ல..

கொஞ்ச நேரத்துல சந்தோஷமா வந்தாரு

" சக்ஸஸ்... கண்டுபிடிச்சிட்டேன்..! "

" ஆமா.. இவரு பெரிய எடிசனு...
கரண்ட் கண்டுபிடிச்சிட்டாரு..!! "

" எப்படியோ கண்டுபிடிச்சோம்ல..! "

" ஆமா என் பொண்டாட்டிக்கிட்ட போயி
என்னான்னு சொல்லி கேட்டீங்க..? "

" அந்த பச்சை கலர் சுடிதார் போட்ட
பொண்ணு யாருன்னு சகலை உங்ககிட்ட
கேக்க சொன்னார்னு சொன்னேன்..!! "

" அடப்பாவி மனுஷா..?!!! "

டிஸ்கி : எதோ என் பொண்டாட்டிக்கு
பப்ளிக்ல புருஷனை அடிக்கிற கெட்ட பழக்கம்
இல்லாததால அன்னிக்கு நான் தப்பிச்சேன்..
.
.