சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

29 August 2012

தேங்காய் எடு.. திண்டாடு..!!

ராத்திரி 9 மணிக்கு கூட ரோட்ல தேங்காவை 
டமார், டமார்னு போட்டு உடைக்கறாங்க.. 
( பாவம் அவங்களுக்கு இப்பதான் மெசேஜ் 
வந்ததுச்சி போல..! )

என்ன புரியாம பார்க்கறீங்க...? 
ஓ..! உங்களுக்கு மேட்டரே தெரியாதா..?  

அட., கிருஷ்ணகிரில ஒரு குழந்தை பிறந்த 
அரைமணி நேரத்துல பேசிச்சாம்.. 

அதுவும் " 4000 குழந்தைகளை காவு 
வாங்குவேன்னு " சபதம் வேற போட்டுச்சாம்.. 
( பெரிய ரவுடி குழந்தையா இருக்குமோ..! )

அதுக்கு " வீட்ல இருக்குற குழந்தைளுக்கு 
திருஷ்டி கழிச்சி தேங்கா வெச்சி உடைக்கணும்..! " 
இதான் பரிகாரம்.




ஏன் சிரிக்கறீங்க..? நம்ப முடியலையா..? 

என்னா பாஸ் நீங்க.. 
" பிள்ளையார் சிலை பால் குடிக்குதுன்னு " 
சொன்னப்ப பால் டம்பளரை எடுத்துட்டு 
ஓடினோம்.. 

அப்ப உங்களுக்கு சிரிப்பு வரலை.. 

" அக்கா , தங்கச்சிகளுக்கு பச்சை கலர்ல 
சேலை எடுத்து தரணும்னு " சொன்னப்ப.. 
எடுத்து தந்தோமே.. 

அப்ப சிரிப்பு வரலை..

இப்ப மட்டும் உங்களுக்கு சிரிப்பு வருதாக்கும்..?!

ஆனா ஒண்ணு பாஸு.. 

நல்லவேளையா பரிகாரம் சொன்னவன் 
தேங்காயை உடைங்கன்னு மட்டும் சொன்னான்.. 

தப்பி தவறி அவங்க அவங்க புருஷன் 
தலையில உடைங்கன்னு சொல்லி இருந்தா 
என்ன ஆவறது..?!! 

அவ்வ்வ்..!!

டிஸ்கி 1 : இது நம்ம ப்ளாக் வெர்சன்.. 

டிஸ்கி 2 : கொஞ்சம் டெவலப் செய்து 
விகடனுக்கு எழுதியது படிக்க க்ளிக்.... 

நான் தான் அப்பவே சொன்னேன்ல.. 
.
.

28 August 2012

ரெடி., ஸ்டார்ட், ஆக்சன்..!!



நான் ப்ளாக் ஆரம்பிச்சப்ப எனக்கு 
இவ்ளோ பெரிய  ரீச் இருக்கும்னு 
நினைக்கவே இல்ல..

Lions Club-ல பேச கூப்பிட்டாங்க..

Shortfilm எடுக்கலாம் வாங்கன்னு 
ரெண்டு பேர் கூப்பிட்டாங்க...

சினிமாவுக்கு Screenplay எழுத 
ரெண்டு பேர் கூப்பிட்டாங்க...

ஆனா.. அவங்க அழைப்பை என்னால 
Use பண்ணிக்க முடியாம போச்சு..

சாரிபா...!!

ஆனா... 

இந்த வாரம் என் விகடன்-ல ( கோவை ) 
என் ப்ளாக் வந்ததை பாத்துட்டு, 
விகடன் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி...

" உங்க காமெடி நல்லா இருக்கு.., 
விகடனுக்கு ரெகுலரா எழுதி தர 
முடியுமா.? " ன்னு கேட்டாங்க.. 

நானும் " நீங்க நினைக்கிற மாதிரி நான் 
ஒண்ணும் பெரிய ஆள் இல்ல சார்..
நான் ஒரு டம்மி பீஸ்" னு சொன்னேன்..

( வெங்கி., பெரிய எழுத்தாளர் (?!) ஆனதும் 
உனக்கு தன்னடக்கம் தானா வந்துடுச்சிடோய்..! ) 

ஆனா அவங்க விடறதா இல்ல.. 

அப்புறம் நான் " ஓ.கே " சொல்லிட்டேன்..


( விகடன்ல எழுத சொல்லி கேட்டப்ப 
என் ரியாக்சன்..! )

இதுக்கு மட்டும் எப்படி " ஓ.கே "
சொன்னேன்னு பார்க்கறீங்களா..?!

" மாசம் ஒண்ணோ , ரெண்டோ 
எழுதி குடுத்தா கூட போதும் "னு 
அவங்க எனக்கு சுதந்திரம் குடுத்து 
இருக்காங்க...

அதே மாதிரி நானும் அவங்களுக்கு 
சுதந்திரம் குடுத்து இருக்கேன்..

" எழுதி அனுப்பற எல்லாத்தையும் 
போடணும்னு கட்டாயமில்ல.., உங்களுக்கு 
பிடிச்சதை மட்டும் போடுங்கன்னு... "

ஹி., ஹி., ஹி..., எங்கே போனாலும் 
அடங்க மாட்டோம்ல...!!
.
.

13 August 2012

என் ப்ளாக்கும் , என் விகடனும்..!!!




இந்த " என் விகடன் " இருக்குல்ல..
அட அதாங்க ஆனந்த விகடனோட
இணைப்பு...

அதுல வாரம் ஒரு ப்ளாக்கை
" வலையோசை " பகுதியில Intro
பண்ணிட்டு வர்றாங்க..

ஆனா அதுல இதுவரை என் ப்ளாக்
வரவே இல்ல..

இது என் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாவும்,
எனக்கு ஆச்சரியமாவும் இருக்கு..

பின்ன.., கொங்கு மண்டலத்துல
விரல் விட்டு எண்ணக்கூடிய
பிரபல பதிவர்கள்ல நானும் ஒருத்தன்ல...

அட.. இப்ப எதுக்கு மொறைக்கிறீங்க..?!

அவ்ளோ டவுட்டா இருந்தா
என் ப்ளாக்ல இருக்காங்களே
420 Followers அவங்ககிட்ட கேளுங்க...
அப்ப தெரியும்...

என்னாது கேட்டுடீங்களா...?!!

Follower-ஆ சேர சொல்லி நான்
கெஞ்சி , கதறினதை பத்தி யாரும்
எதுவும் உளறலையே..!! ( ஹப்பா..! )

சரி.. மேட்டர்க்கு வருவோம்..

ரெண்டு நாள் முன்னாடி தான்
என் Friend தம்பி ஆனந்த விகடன்ல
வேலையில இருக்காங்கிற மேட்டர்
எனக்கு தெரிஞ்சது.

உடனே அவனுக்கு போன் பண்ணி...

என் ப்ளாக் Details குடுத்து,
அதை பத்தி ஆஹா., ஓஹோன்னு
எடுத்து சொல்லி ' என் விகடன் 'ல
போட சொல்லி கேட்டோம்..

அவனும்..

" அவ்ளோ தானே.. அடுத்த வாரம்
போட்டுட்டா போச்சு..! "

" நிசமாவா..?! "

" ம்ம்.. இருங்க எதுக்கும் எடிட்டர்கிட்ட
ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்னு "
சொல்லிட்டு போனை வெச்சிட்டான்..

அப்பவே நான் " வலையோசை "ல
நம்ம ப்ளாக் வந்ததும், அதை பத்தி
எப்படி பதிவு போடறதுன்னு யோசிக்க
ஆரம்பிச்சிட்டேன்..

10 நிமிஷம் கழிச்சி அவனே கூப்பிட்டான்..

" ஹலோ வெங்கட் அண்ணா... "

" சொல்லு தம்பி... "

" எடிட்டர்கிட்ட பேசிட்டேன்.. "

( ஐ.. வொர்க் அவுட் ஆகிடுச்சி போல..)

" வர்ற வாரத்துல... "

" என் ப்ளாக்கை போட்டுடலாம்னு
சொல்லிட்டாரா..? "

" இல்ல..., வர்ற வாரத்துல இருந்து
' என் விகடன் ' புக்கை நிறுத்திடலாம்னு
சொல்லிட்டாரு.. "

அடப்பாவிகளா...?!!

( என்ன வாழ்க்கைடா இது..?!! )
.

.

03 August 2012

சுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 6

டிஸ்கி : என் மகன் 1st Std படிக்கும் போது 
ஸ்கூல் சுதந்திர தின விழாவில் பேசியது...

தலைப்பு : " நான் விரும்பும் தலைவர்.. "

நான் விரும்பும் தலைவர்..
அவர் குழந்தைகளின் ராஜா.,
இந்தியாவில் பூத்த ரோஜா..
அவர் தான் நம்ம நேரு மாமா...




எல்லோரும் பணக்காரர்களாக 
பிறப்பதில்லை..,
எல்லா பணக்காரங்களும் 
நேருவை போல இருப்பதில்லை..

நேரு லண்டனில் படித்தவர்.,
அவர் நெனச்சிருந்தா..

வக்கீல் தொழில் செஞ்சிகிட்டு 
வசதியா இருந்து இருக்கலாம்.. 

ஆனா.... 
அவர் நம்ம நாட்டு விடுதலைக்காக 
கஷ்டப்பட்டும் போராடினார்., 
இஷ்டப்பட்டும் போராடினார்..

அரண்மனை அறையிலே 
இருக்க வேண்டியவர் 
அகமத் சிறையிலே இருந்தார்..

மொத்தம் 3262 நாள் சிறையிலே 
கஷ்டப்பட்டார்.

கத்திக்கு பயப்படாத இங்கிலீஷ்காரன் 
அவர் புத்திக்கு பயப்பட்டான்...

சிங்கத்துக்கே தண்ணி காட்ன 
சிறுத்தைக் குட்டி நம்ம நேரு.. 

இந்தியா விடுதலை அடைந்ததும்
அவர் பிரதமர் ஆனார்..

இந்திய நாடு வளம் பெறவும்., 
இந்திய மக்கள் நலம் பெறவும் 
பல நல்ல திட்டங்கள் போட்டார்..

A.C-ல தூங்கறவன் மட்டுமில்ல 
ஏழை மாணவனும் படிக்கணும்னு நினைச்சார்..

அணைக்கட்டுகளே புதிய கோவில்கள்னு 
சொன்னார்..

தண்ணி இல்லாம., கரண்ட் இல்லாம 
நாம கஷ்டப்படக்கூடாதுன்னு அப்பவே 
சிந்திச்சார்..

அவர் பிறந்த நாளை தான் நாம 
" குழந்தைகள் தினமா " கொண்டாடுறோம்.

கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்றேன்..
பஞ்ச் டயலாக் எல்லாம் கடைசில தான் 
சொல்லணும்..

" நேரு மாமாவோட சட்டையும் வெள்ளை., 
அவர் மனசும் வெள்ளை., 
இதுக்கு மேல நான் என்ன சொல்ல....!! "

இரு கை கூப்பினால் வணக்கமாச்சு., 
நான் இருக்கைக்கு செல்கிறேன் நேரமாச்சு..

நன்றி..!!

டிஸ்கி : இன்னும் சில பேச்சுப்போட்டிகள்...

.
.