சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

28 October 2010

விஜய் - The Robot..!!??!
எந்திரன் படத்தை Remake பண்ணினா
எப்படி இருக்கும்..?

அதுவும் நம்ம இளைய தளபதி
பண்ணினா எப்படி இருக்கும்..?
( நினைச்சி பார்க்கும் போதே
புல்லரிக்குது இல்ல..!! )

இதோ அந்த எந்திரன் Remake Trailor..

Hi..! I'm Vijay the Robot..

Speed - 1 Hz

Memory - 2 KB

இந்த Robot-க்கு தமிழ் தவிர
ஒரு மொழியும் தெரியாது..

Special Skills : கபடி காமெடி ( கில்லி ).,
Swimmer ( சுறா )., Athlete ( ATM ).,
கார் Racer ( குருவி )

Records : 39 Flops out of 50 Films

Professor Bora to Robot :
' Best Actor அவார்ட் ' ( or )
உன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்..
எது உன் சாய்ஸ்..?

Vijay the Robot : Hypothetical Question..!!

மனுஷன் படைச்சதுலயே
உருப்படியான ரெண்டு விஷயம்..

ஒண்ணு - தெலுங்கு படம்
இன்னொன்னு - Remake

"என்னை யாராலயும் திருத்த முடியாது..!! "

Dot


விஜயிடம் ஒரு சின்ன கேள்வி..

" ஆமா ரஜினி சார் படத்தையும்
Remake பண்ணி கெடுக்கணும்னு
உங்களுக்கு எப்படி ஐடியா வந்தது..? "

" இதை முதல்ல அஜித்கிட்ட கேளுங்க..
அவர் பண்ணலாம்.., நான் பண்ண கூடாதா.? "

இளைய தளபதி ROCKZ.........,
.
.

57 Comments:

ராஜகோபால் said...

good one... come here

விஜய் - ன் வி.மு.க

http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/10/blog-post_28.html

Madhavan said...

//Speed - 1 KB

Memory - 2 KB //

'டாட்' காணுமே ?

வெங்கட் said...

@ ராஜகோபால்.,

ஹி., ஹி., ஹி.,
உங்க பதிவு சூப்பர்..

ஏன் எங்களுக்கு மட்டும்
நம்ம இளைய தளபதி மேல
அன்பில்லையா..? பாசமில்லையா..?

இது அவரை புகழ்ந்து நான் போடுற
நாலாவது Posting..

1.விஜய்க்கு ஒரு ஐடியா
2.' சுறா ' அசலா..?
3.சினிமா to அரசியல்

வெங்கட் said...

@ மாதவன்.,

// டாட்' காணுமே ? //

இதோ வெச்சுடறேன்..!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

விஜய்ய விடறதா இல்லையா?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இதுக்கு மேலயும் விஜய்ய கலாய்ச்சீங்கன்னா............................காவலன் டிவிடி வீடு தேடி வரும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீங்களுமா?

அருண் பிரசாத் said...

எந்திரன் படத்தை Remake பண்ணினா
எப்படி இருக்கும்..?

அதுவும் நம்ம பதிவுலக தளபதி (எல்லாம் எங்க சோதனை காலம்) வெங்கட் பண்ணினா எப்படி இருக்கும்..?
( நினைச்சி பார்க்கும் போதே
புல்லரிக்குது இல்ல..!! )

இதோ அந்த எந்திரன் Remake Trailor..

Hi..! I'm Venkat the Robot..

Speed - வாரம் 2 மொக்கை போஸ்ட்

Memory - பழைய மெயில்னு தெரியாமலயே போஸ்ட் போட்டு வாங்கி கட்டிகிறது

இந்த Robot-க்கு மொக்கை தவிர
ஒரு மொழியும் தெரியாது..

Special Skills : பையன்கிட்ட அவுட் ( தொலைச்சிடுவேன்..,தொலைச்சி..!! ).,
போட்டு தருவது ( ரிவர்ஸ் ஸ்விங் ).,

(contd....)

அருண் பிரசாத் said...

Records : 170 Flop post out of 155!?!? (எப்படியும் இதுக்கு மேல வர்ற போஸ்ட்டும் மொக்கையாதான் இருக்கும்... அதான் அட்வான்சாவே சொல்லிட்டேன்)

Professor Bora to Robot :
' Best மொக்கை பிளாக் அவார்ட் ' ( or )
உன் பதிவு எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்..
எது உன் சாய்ஸ்..?

Venkat the Robot : Hypothetical Question..!!

உங்க பிளாக்லயே
உருப்படியான ரெண்டு விஷயம்..

ஒண்ணு - VKS
இன்னொன்னு - அதுவும் VKS தான்
Dot

சிரிப்பு போலிஸ் ரமெஷிடம் ஒரு சின்ன கேள்வி..

" ஆமா மொக்கை பதிவு
போடனும்னு
உங்களுக்கு எப்படி ஐடியா வந்தது..? "

" இதை முதல்ல வெங்கட்கிட்ட கேளுங்க..
அவர் பண்ணலாம்.., நான் பண்ண கூடாதா.? "

இளைய தளபதி (எல்லாம் எங்க சோதனை காலம்) ROCKZ.........,
.
.

அருண் பிரசாத் said...

அது என்னவோ தெரியலைங்க... உங்க போஸ்ட் பார்த்தா மட்டும் கற்பனை அருவியா கொட்டுது... அபிராமி... அபிராமி...

தேவா said...

//இளைய தளபதி ROCKZ........//

என்ன பாஸ் ஓட்டரதையும் ஓட்டிட்டு கடைசில இப்படியா? டாக்குடரு பாவமில்ல

Anonymous said...

ரஜினி படத்த ரீமேக் பண்ற அளவுக்கு விஜய் ஒன்னும் கேவலமா போகல. அஜித் தான் மேல சொன்ன ஸ்க்ரிப்ட்கு சரியான ஆளு

Sen22 said...

Venkat Rocking......!!!!

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு போட்டா சொல்றதில்லை?இதோ வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

மனுஷன் படைச்சதுலயே
உருப்படியான ரெண்டு விஷயம்..

ஒண்ணு - தெலுங்கு படம்
இன்னொன்னு - Remake


இது மேட்டரு

சி.பி.செந்தில்குமார் said...

Professor Bora to Robot :
' Best Actor அவார்ட் ' ( or )
உன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்..
எது உன் சாய்ஸ்..?Professor Bora to Robot :
' Best Actor அவார்ட் ' ( or )
உன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்..
எது உன் சாய்ஸ்..?

யோவ் யாருய்யா அது என் தலைவனை மரியாதை இல்லாம பெசறது?

ரசிகன் said...

இப்படியே விஜய்ய கலாய்ச்சு கலாய்ச்சு post போடுங்க..
"எதிரிக்கு எதிரி நண்பன்"ற Formula apply பண்ணி,
நாம கலாய்க்க வேண்டியவர் யார கலாய்க்கறாரோ அவர நாம கலாய்க்க கூடாதுன்னு மக்கள் முடிவுக்கு வரப்போறாங்க..
அப்புறம் விஜய் ஆதரவாளர்களை உருவாக்கிய பாவம் உங்களை ஜென்ம ஜென்மத்துக்கும் துரத்தும்....

Anonymous said...

good one.
speed 1hz, not KB.

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// விஜய்ய விடறதா இல்லையா? //

ஹி., ஹி., ஹி...!!

அப்ப முதல்ல அவரை மொக்கை
படத்துல நடிக்கிறதை விட்டுட்டு
சூர்யா., ஆர்யா., மாதிரி நல்ல படமா
நடிக்க சொல்லுங்க..

நாமளும் அவரை கலாய்க்கிறதை
நிப்பாட்டிக்கலாம்.

// இதுக்கு மேலயும் விஜய்ய கலாய்ச்சீங்கன்னா
காவலன் டிவிடி வீடு தேடி வரும் //

வரட்டும் வரட்டும்.,
வாங்கி வீட்டுக்கு முன்னாடி
கட்டி தொங்கவிட்டுடறேன்.

வெங்கட் said...

@ அருண்.,

// அது என்னவோ தெரியலைங்க...
உங்க போஸ்ட் பார்த்தா மட்டும் கற்பனை
அருவியா கொட்டுது... //

அப்படியே என் Posting-ஐ
Remake பண்ணி Comment போட்டுட்டு..,
சொந்தமா சிந்திச்ச ஒரு மாதிரி பில்-டப்
தர்றீங்களே..

நீங்கதாங்க உண்மயான விஜய் ரசிகர்..

@ To Mrs.அருண்.,

// அபிராமி... அபிராமி... //

நாலு அடி பலமா பட்டாலும்
பரவாயில்ல.. இந்த அபிராமி
யார்னு கொஞ்சம் விசாரிங்க..

அடிக்கடி என்கிட்ட Chat பண்ணும்போது
கூட இந்த பெயரை சொல்றாரு..

நாராயணா..!! நாராயணா..!!

வெங்கட் said...

@ அனானி.,

// ரஜினி படத்த ரீமேக் பண்ற அளவுக்கு
விஜய் ஒன்னும் கேவலமா போகல. //

ஓ.. இன்னும் அந்த அளவுக்கு
போகலையா..?
அமீர்கான் படத்தை ரீமேக் பண்ற
அளவு தான் போயிருக்காரா..?!

அப்ப சரி..!!

அருண் பிரசாத் said...

//அமீர்கான் படத்தை ரீமேக் பண்ற
அளவு தான் போயிருக்காரா..?!//

அது சரி... அமீர்கான்னே chethan bagat எழுதின FIVE POINT SOMEONE நாவலை காப்பி அடிச்சுதான் படத்தை எடுத்தார்...

இப்போ திருடனும் திருடனும் ஒண்ணு சேர்ந்து இருக்காங்க அவ்வளவுதான்

jeevitha said...

JEEVTHA
SEMA SUPER VENKAT
NEXT KAVALAN- KU WAITING
I AM NEW IN SITE

மங்குனி அமைசர் said...

Records : 39 Flops out of 50 Films ///

வெங்கட் உங்களுக்கு மனசாட்ச்சியே இல்லையா ? ஏன் இப்படி போயி சொல்றிங்க 50 பத்துக்கு 39 படம் பிளாப் ஆச்சா , எதிரிகளிடம் எவ்வளவு லஞ்சம் வாங்கினீர்கள் 51 பில்லாப் ஆஃப் 50 என்ற உண்மையை மறைக்க ???

Anonymous said...

Very good!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விஜய் அடுத்த முதல்வர் ஆயிட்டா வெங்கட் வீட்டுக்கு கரென்ட் கிடையாதாம்(இப்ப மட்டும் என்ன வாழுதாம்னு கேக்க கூடாது). நாமளும் வெங்கட்டோட மொக்கைல இருந்து தப்பிக்கலாம். அதனால டாக்டர் விஜய் அவர்களை சீக்கிரம் cm ஆகிடுங்க.

ப.செல்வக்குமார் said...

@ அருண்
எங்க தல போட்ட பதிவுல இருந்து மேட்டர் எடுத்து அவர கிண்டல் பண்ணிட்டேன் அப்படின்னு VKS ல சொல்லி அவுங்க குடுக்குற ஒரு டீ க்கு இவ்வளவு போராட்டமா ..? அன்னிக்கு என்னடான்னா எங்க தல ரொம்ப கஷ்டப்பட்டு பசங்களுக்கு எப்படி பரீட்சை எழுதுறது அப்படின்னு இந்தப்பதிவுல  சொன்னாரு.. அதுலயும் இப்படித்தான் வெங்கட் ப்ளாக் எப்படி படிக்கிறது அப்படின்னு சொன்னீங்க .. சரி சரி .. நான் சொல்ல வந்ததே வேற . தல கலக்கிட்டீங்க ..!!

ப.செல்வக்குமார் said...

//விஜய் அடுத்த முதல்வர் ஆயிட்டா வெங்கட் வீட்டுக்கு கரென்ட் கிடையாதாம்(இப்ப மட்டும் என்ன வாழுதாம்னு கேக்க கூடாது). நாமளும் வெங்கட்டோட மொக்கைல இருந்து தப்பிக்கலாம். அதனால டாக்டர் விஜய் அவர்களை சீக்கிரம் cm ஆகிடுங்க.
//

VKS ல இருக்குற அஞ்சு பேரோட சாரி நாலு பேரோட ஓட்டுல எப்படி அவரு முதலமைச்சர் ஆக முடியும் ..?

நாகராஜசோழன் MA said...

//
இளைய தளபதி ROCKZ.........,//

டாகுடரு பாவம்ங்க வெங்கட்.

Arun Prasath said...

சுறா படம் பாத்துட்டு, நான் யோசிச்சேன், நாமளும் விஜய் அண்ணா மாறி படம் எப்டியாச்சும் கஷ்டப்பட்டு நடிச்சா, நமக்கும் டாக்டர் பட்டம் குடுப்பாங்களா?

வெங்கட் said...

@ சி.பி.செந்தில்.,

// யோவ் யாருய்யா அது என் தலைவனை
மரியாதை இல்லாம பெசறது? //

உங்க தலைவருக்கு நல்ல மரியாதை
தர்றீங்க.., நாங்க தேவலாம் போல
இருக்கே,..!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// "எதிரிக்கு எதிரி நண்பன்"ற Formula
apply பண்ணி, நாம கலாய்க்க வேண்டியவர்
யார கலாய்க்கறாரோ அவர நாம கலாய்க்க
கூடாதுன்னு மக்கள் முடிவுக்கு வரப்போறாங்க.. //

மக்களா..? வெறும் 5 பேரை மக்கள்னு
எல்லாம் சொல்லகூடாது..
வேணும்னா கும்பல்னு சொல்லிக்கோங்க..

வெங்கட் said...

@ அனானி.,

// good one.
speed 1hz, not KB. //

சரி பண்ணியாச்சுங்க..
Thanks..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெங்கட் said...

@ ரசிகன்.,

// "எதிரிக்கு எதிரி நண்பன்"ற Formula
apply பண்ணி, நாம கலாய்க்க வேண்டியவர்
யார கலாய்க்கறாரோ அவர நாம கலாய்க்க
கூடாதுன்னு மக்கள் முடிவுக்கு வரப்போறாங்க.. //

மக்களா..? வெறும் 5 பேரை மக்கள்னு
எல்லாம் சொல்லகூடாது..
வேணும்னா கும்பல்னு சொல்லிக்கோங்க..//


எத்தனை பேருங்குறது முக்கியமில்லை. எவ்ளோ பவர் அப்டிங்கிறதுதான் முக்கியம். நாங்கெல்லாம் பவர்புல் டீம்

இம்சைஅரசன் பாபு.. said...

ஒரு அப்பாவி விஜய பதிவுலகத்துல இருந்து காப்பதுனும் .நானும் டெர்ரர் உம் சேர்ந்து விஜய காப்பத்த சங்கம் கூடிய விரைவில் ஆரம்பிக்க படும் ..............ரொம்ப லேட்.....சாரி ரெண்டு நாள் லீவ் ..............

தேன் கூடு said...

வேர வேலை இல்லையா.........
உருப்படியான எதாவது நல்ல வசியம் இருத்தல் போடுயங்க அண்ணா................?
மொக்கை போடதிங்க..........
இவன்
வீரன் விஜி

கார்க்கி said...

:))))

நா.மணிவண்ணன் said...

விஜய் rocks

வெங்கட் said...

@ அருண்.,

// அது சரி... அமீர்கான்னே chethan bagat
எழுதின FIVE POINT SOMEONE நாவலை
காப்பி அடிச்சுதான் படத்தை எடுத்தார்... //

ஓ.. அவர் காப்பி அடிச்சி
படத்தை எடுப்பார்..
இவர் அதை காப்பி அடிச்சி
படத்தை கெடுப்பார்..

அதான் ஒரே வித்தியாசம்..!!

வெங்கட் said...

@ ஜீவிதா.,

// SEMA SUPER VENKAT
NEXT KAVALAN- KU WAITING
I AM NEW IN SITE //

வாங்க ஜீவிதா..!!

' காவலன் ' படம் வரட்டும்..,
அப்ப இருக்கு கச்சேரி..

' சுறா ' , ' வேட்டைக்காரன் ' படத்துக்கு
நாம போட்ட பதிவையே பெயர் மாத்தி
' காவலனுக்கும் ' போட்டுடலாம்..

அவரு படமே அப்படித்தானே நடிக்கிறாரு..
நாம பதிவு போடக்கூடாதா..?!!

வெங்கட் said...

@ மங்குனி.,

// எதிரிகளிடம் எவ்வளவு லஞ்சம்
வாங்கினீர்கள் 51 பில்லாப் ஆஃப் 50
என்ற உண்மையை மறைக்க ??? //

ஹி., ஹி., ஹி..!!

நீங்கல்லாம் அலார்டா இருக்கீங்களான்னு
Check பண்ணினேன்..

அந்த 51 ' காவலன் '. அதுவும் Flop-ஆ..?!!

இப்படி சொல்ல எதிரிகளிடம்
எவ்ளோ லஞ்சம் வாங்கினீர்..?!!

அப்ப 52 ' வேலாயுதம் ' மட்டும் ஹிட்டா..?

52 Flops out of 50..!! ஓ.கே..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// அதனால டாக்டர் விஜய் அவர்களை
சீக்கிரம் cm ஆகிடுங்க. //

எங்க வீட்ல கரெண்ட்
இல்லைன்னாலும் பரவாயில்ல..

நானும் இதை வழிமொழிகிறேன்..

ஆமா CM ஆயிட்டா..
அவரு சினிமாவுல நடிக்கிறதை
நிப்பாட்டிக்குவாரு தானே..!!?!

வெங்கட் said...

@ Arun Prasath.,

// சுறா படம் பாத்துட்டு, நான் யோசிச்சேன், //

ஓ.. யோசிக்கிற அளவு சுயநினைவோட
இருந்திருக்கீங்க.. உண்மையை சொல்லுங்க
பாதி படத்துல ' எஸ் ' ஆயிடீங்க தானே..?!!

வெங்கட் said...

@ பாபு.,

// நானும் டெர்ரர் உம் சேர்ந்து விஜய காப்பத்த
சங்கம் கூடிய விரைவில் ஆரம்பிக்க படும் //

இவ்ளோ அப்பவியா இருக்கீங்களே..!!
இந்த பதிவு போட ஐடியா குடுத்ததே
நம்ம டெரர் தானுங்கோ..!!

வெங்கட் said...

@ தேன் கூடு.,

// மொக்கை போடதிங்க.. //

என்னாது இது மொக்கை பதிவா..?!!
ஆஹா.., இவரு நம்ம விஜய்யை
காலாய்க்கறார்பா..

எல்லோரும் சீக்கிரம் ஓடிவந்து
என்னான்னு கேளுங்க..

மாலா said...

இதோ நான் ஓடி வந்துட்டேன்ன்ன்ன்...

ம்ம்.. " என்னா? "

வெங்கட் said...

@ மாலா.,

// ம்ம்.. " என்னா? " //

எப்பவாவது ஒரு தடவை தான்
வர்றீங்க.. அப்படி வந்தாலும் இப்படியா..?

இதுக்கு அவரே தேவலாம் போல இருக்கே..!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//
எத்தனை பேருங்குறது முக்கியமில்லை. எவ்ளோ பவர் அப்டிங்கிறதுதான் முக்கியம். நாங்கெல்லாம் பவர்புல் டீம்
//

அப்படி சொல்லுங்க ரமேஷ். பஞ்ச பாண்டவர்கள் அஞ்சு பேருதான். ஆனா கௌரவர்கள் நூறு பேரையும் ஜெயிச்சது ஞாபகம் இருக்கா?

ரசிகன் said...

@பெ.சொ.வி.

//பஞ்ச பாண்டவர்கள் அஞ்சு பேருதான். ஆனா கௌரவர்கள் நூறு பேரையும் ஜெயிச்சது ஞாபகம் இருக்கா?

அப்ப்ப்படி போடுங்க அருவாளை....

ரசிகன் said...

விஜயீபவ.....!! 50

Gayathri said...

omg epdi ipdilam thonuthu ungalukku supera irukku athulayum dot vera super ponga

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//எத்தனை பேருங்குறது முக்கியமில்லை. எவ்ளோ பவர் அப்டிங்கிறதுதான் முக்கியம். நாங்கெல்லாம் பவர்புல் டீம் //

நைட்டு எல்லாம் லைட்டு போட்டு பவர் வேஸ்டு பண்ணிட்டு புல்லா புல் அடிச்சி கவுந்து கிடந்தா நீங்க பவர்புல் டீமா??

TERROR-PANDIYAN(VAS) said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை

//அப்படி சொல்லுங்க ரமேஷ். பஞ்ச பாண்டவர்கள் அஞ்சு பேருதான். ஆனா கௌரவர்கள் நூறு பேரையும் ஜெயிச்சது ஞாபகம் இருக்கா?//

ஓ!! நல்லா ஞபகம் இருக்கே... ஆனா அவங்க சொந்தமா ஜெய்ச்சாங்களா?? இல்லை கிருஷ்ண பகவான் ஐடியா கொடுத்து ஜெய்ச்சதா ஊருக்குள்ள பேசிக்கறாங்க சார்!! ஆமா கிருஷ்னண் சொன்னா நாரயணன், நாரயனண் சொன்னா வெங்கடாஜலபதி... அட எங்க தல வந்துட்டாரு... கடைசில அவரு கிட்ட தான் ஐடியா கேக்கறிங்களா!!!

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//அப்ப்ப்படி போடுங்க அருவாளை....//

ஆமாம். அருவாளை அப்படி போட்டு சமாதானமா போங்க.. எதுக்கு வீனா சண்டை போட்டு அடி வாங்கறிங்க...

Anonymous said...

nice post.
visit my site www.thambi.tk

பரமார்த்தகுரு said...

வருங்கால முதல்வர்/ பிரதமர் ( ஓ அமெரிக்க ஜனாதிபதி??!!) டாக்டர் விஜய் அவர்களே...

உங்களை பல நாள் காணாது உங்கள் ரசிகர்கள் தூக்கம் மறந்து துறவறம் போக எத்ானித்து விட்டார்கள். தங்களின் கலை சேவை நாட்டுக்கு இந்த சமயத்தில் மிகவும் தேவை. அநியாயத்தை கண்டால் பொங்கி பிரவகமே எடுக்கும் உங்களின் தன்மையை நினைத்தால் அடடா இத்தனை வருடம் தமிழ் சினிமாவில் தான் இருந்தீர்களா என்று ஆங்கில பட தயாரிப்பபளர்கள் உங்கள் வீட்டின் முன்னால் ஆஜர் !!!!!

தீபாவளி நல்வாழ்த்து சொல்ல கூட கொஞ்சமாவது சிரித்தபடி சொல்ல கூடாதா??? இத்தனை வருசம் நடிச்சு என்னதான் கிழிச்சீங்க?? மொகத்தை சும்மா கில்லி மாதிரி வெரப்பா வச்சுக்கிட்டு " இந்த தீபாவளி திருநாளில் இன்பம் பொங்கட்டும்" சரிங்கன்ணா!!! னு சொன்னா எப்படி???

தங்களது முட்டாள் படத்தை எதிர் பார்த்து எல்லோரும் காத்து கொண்டிருக்கிறோம்!!!

சரக்கு தீர்ந்த சங்கரண்னா ... சீக்கிரம் ஒரு முடிவு கட்டுங்க!!!!

suganthiny said...

ஹலோ ஒரு நிமிஷம் ப்ளீஸ் அட ஒரு நிமிஷம் அட ஒரு
செக்கனாவது நில்லுங்க. ம்ம் இப்படி இருந்து பொறுமையா
நான் சொல்லுறதை கொஞ்சம் படியுங்கள்.
அதுக்கு பிறகு மற்றதை பற்றி ஜோசிங்க.
தயவு செய்து ஒரு பொய்யாவது உண்மையா சொல்லுங்க
உங்களுக்கு எந்த நடிகரை பிடிக்(காது)கும்?
அடி வாங்காம இருந்தா சரி தான்.