சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

09 October 2010

ஜோடி No.2..!!?இது தினத்தந்தி பேப்பர்ல ( 6.10.2010 )
வந்திருந்த ஒரு செய்தி..

Hot News :

சேலம் அஸ்தம்பட்டியில்
வசித்து வருபவர் பால்ரமேஷ் ( 30 ).

இவருக்கும் ஜாஸ்மின்ரூத் ( 29 )
என்ற பெண்ணுக்கும் 6 ஆண்டுகளுக்கு
முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு ஒரு மகன்,
ஒரு மகள் உள்ளனர்.

சேலம் சாரதா கல்லூரி ரோட்டில்
உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில்
பால்ரமேஷ் வேலை பார்த்து வந்தார்.

அதே ஹோட்டலில் Receptionist-ஆக
வேலை பார்த்த லக்ஷ்மி என்ற பெண்ணுக்கும்.,
பால்ரமேஷுக்கும் காதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக பால்ரமேஷ்
தனது வீட்டிற்கு வராமல்.,
லக்ஷ்மியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் ஜாஸ்மீன்ரூத்
தன் கணவரை சந்தித்து., தன்னோடு
வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால் பால்ரமேஷ்.. " நான் லக்ஷ்மியை
விட்டு வரமாட்டேன் " என்று கூறி
மனைவியை விரட்டினாராம்.

இது குறித்து ஜாஸ்மின்ரூத்,
சேலம் மாநகர போலீஸ்
துணை கமிஷனர் பாஸ்கரனிடம்
புகார் மனு ஒன்றை குடுத்தார்..

அதை தொடர்ந்து அம்மாபேட்டை
மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகேஸ்வரி
வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி
பால்ரமேஷை கைது செய்தார்..

பின்னர் அவர் நேற்று சேலம் கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார்..

சபாஷ் போலீஸ்..!!

Top News :

@ Lux Sandal South Scope Cine Awards 2010.

Best " Close-Up Super Jodi ( Couple ??! ) " Award
Goes tooooooooooo...

என்ன கொடுமை சிம்பு இது..?!!

இந்த Function நடந்தது HyderaBad-ல

Very Bad.., Very Bad..

-------------------------------------------------------------

நீதி 1 : சட்டம் தன் கடமையை
ஒழுங்காய் தான் செய்கிறது..
( சாமானியர்களுக்கு மட்டும் )

நீதி 2 : பிரபலம்.. So., No Problem..!!
.
.

68 Comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஏதோ கருத்தெல்லாம் சொல்ல வர்றாப்ல தெரியுது, இது ஆவுறதில்ல வெங்கட்!

இம்சைஅரசன் பாபு.. said...

உண்மை வெங்கட் பணம் இருப்வருக்கும் ப்ர்பலதிர்க்கும் ஒரு நீதி .ச்மணிர்களுக்கு ஒரு நீதி .............
நிறைய உதாரணம் சொல்லலாம் ..நீங்கள் கூறியது சிலதே ..............நெத்தி அடி வெங்கட் சூப்பர் ........

//ஏதோ கருத்தெல்லாம் சொல்ல வர்றாப்ல தெரியுது, இது ஆவுறதில்ல வெங்கட்!//

கருதும் சொல்லட்டுமே அப்பா தானே நல்ல இருக்கும் ......எப்போதும் ஜாலி எ போட்டுக்கிட்டு இந்த மாதிரி அவர் நல்ல பதிவ போட்ட எல்லோருக்கும் ரீச் ஆகும்

கும்மி said...

நல்ல பதிவு! வாழ்த்துகள்!

அனு said...

பதிவுல எந்த விதமான உள்குத்தும் இல்லன்னு காரமடை ஜோசியர் மேல சத்தியம் பண்ணினா தான் நான் கமெண்ட் போடுவேன்..

chitti said...

heii anu enna ulkuthu adhu??

hi venkat
first i thought sometng hpd 2 u :-)
later i found tat somehw u gave a connection between t two news!!

in simple words u told t truth abt india :-)

gud attempt!!

எஸ்.கே said...

பிரபலமானா பிரச்சினையில்லைதான்!
(ஆமா நீங்க ஒரு ‘பிரபல’ பதிவர்தானே?)

சௌந்தர் said...

நீதி 2 : பிரபலம்.. So., No Problem..!////

நிதி கொடுத்தா எல்லாம் சரி ஆகிடும்

அனு said...

@chitti

//heii anu enna ulkuthu adhu??//

ஹிஹி.. அது சீக்ரெட் ;)

ஆமா லேகா, இன்னும் எத்தனை பெயர்கள்-ல வர்ற மாதிரி ஐடியா?? எல்லா மொழியிலயும் உங்க பேரை எழுதி பாக்குறீங்களா??

Madhavan said...

@ Venkat
தப்பு பண்ணா பிரச்சனை வருமா வராதா ?..
பிரபலம் ஆனவன் , பிரபலம் ஆகாதவன் -- யாராக இருந்தாலும் கேள்வி கேட்பதே தவறு என்பது என்னுடைய எண்ணம்.

தப்பு பண்ணுறது தப்பு.... 'தப்ப' தப்பா பண்ணினா, 'சரி' ஆயிடும்.. அதுவேனா தப்பில்லை.. ( Double negative is positive )
//அனு said..."பதிவுல எந்த விதமான உள்குத்தும் இல்லன்னு காரமடை ஜோசியர் மேல சத்தியம் பண்ணினா தான் நான் கமெண்ட் போடுவேன்.."//

நன்புங்க மேடம்.. நம்புங்க..
அவரு திருந்திட்டதா, அவரே சொன்னாரு.. (கவுண்டமணி, செந்தில் ஜோக்கு ஞாபகம் வந்தால், நான் பொறுப்பல்ல)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிரபல பதிவர் ஒருத்தர பத்தி ஒரு கிசு கிசு சொல்றேன். அவர் சூரியனுக்கு டார்ச் அடிக்கிறவர். சேலம் தான் ஊருன்னு சொல்லிக்கிட்டு இருந்தார் . அவர் சேலம் இல்லை. சேலத்துக்கு பக்கத்துல ஒரு கிராமம்(சேலத்துல இருந்து சுமார் நூறு கிலோ மீட்டர்)

கும்மி said...

//தப்பு பண்ணுறது தப்பு.... 'தப்ப' தப்பா பண்ணினா, 'சரி' ஆயிடும்.//

தப்பை, தப்பில்லாம தப்பா பண்ணாதான் சரி. தப்பை, தப்போட தப்பா பண்ணா தப்பு. அப்பத்தான் மாட்டிக்குவாங்க

Chitra said...

சபாஷ், வெங்கட்! பாயிண்ட்டை பிடிச்சிட்டீங்க.

GSV said...

Nalla irukku ...keep on rocking.....King.

அனு said...

//தப்பு பண்ணுறது தப்பு.... 'தப்ப' தப்பா பண்ணினா, 'சரி' ஆயிடும்..//

//தப்பை, தப்பில்லாம தப்பா பண்ணாதான் சரி. தப்பை, தப்போட தப்பா பண்ணா தப்பு.//

சும்மா இருக்குறவங்க சும்மா இல்லாம சும்மா இருக்குறவங்களுக்கு சும்மா கமெண்ட் போட்டா சும்மா இருக்குறவுங்க சும்மா கமெண்ட் போடுறவங்கள சும்மா விடமாட்டாங்கன்னு போலிருக்கு. நானும் சும்மா இருக்குறதால சும்மா ஏதோ கமெண்ட் போட்டு வைக்குறேன். நீங்க சும்மா இருந்தா இந்த கமெண்ட்டுக்கு சும்மா ரிப்ளை பண்ணுங்க. இல்லன்னா சும்மா இருங்க.

இப்படிக்கு,
சும்மா இருக்க முடியாம சும்மா இருப்பவர்களுக்கு சும்மா கமெண்ட் போடுவோர் சங்கம்.

பி.கு: ஏதோ எனக்கு தெரிஞ்சது :)

வெங்கட் said...

Me Enthiran Going today..
Comment Replies after coming.
:)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அனு said...

சும்மா இருக்குறவங்க சும்மா இல்லாம சும்மா இருக்குறவங்களுக்கு சும்மா கமெண்ட் போட்டா சும்மா இருக்குறவுங்க சும்மா கமெண்ட் போடுறவங்கள சும்மா விடமாட்டாங்கன்னு போலிருக்கு. நானும் சும்மா இருக்குறதால சும்மா ஏதோ கமெண்ட் போட்டு வைக்குறேன். நீங்க சும்மா இருந்தா இந்த கமெண்ட்டுக்கு சும்மா ரிப்ளை பண்ணுங்க. இல்லன்னா சும்மா இருங்க.

இப்படிக்கு,
சும்மா இருக்க முடியாம சும்மா இருப்பவர்களுக்கு சும்மா கமெண்ட் போடுவோர் சங்கம்.

//

தலைவின்னா சும்மாவா...............சும்மா பின்னிட்டீங்க, மேடம்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//சபாஷ் போலீஸ்..!!//
நம்ம
ரமேஷையா சொன்னீங்க?

அனு said...

@பெ.சொ.வி
//தலைவின்னா சும்மாவா...............சும்மா பின்னிட்டீங்க, மேடம்!//

ஹிஹி.. சும்மாவா சொன்னாங்க பெரியவங்க.. வீட்டுல சும்மா இருந்தா இப்படி தான் சும்மா எதையாவது எழுத சொல்லும்னு..அப்படியே, முதல்ல அந்த மேடத்தைத் தூக்குங்க..

wait.. wait.. VAS மக்களே.. நான் மேடம்-ன்ற வார்த்தைய சொன்னேன்.. சான்ஸ் கிடைச்சதுன்னு என்னை தூக்கறதுக்கு ஐடியா பண்ணுறீங்களே..

கும்மி said...

//சும்மா இருக்க முடியாம சும்மா இருப்பவர்களுக்கு சும்மா கமெண்ட் போடுவோர் சங்கம்.//

கும்மியடிக்கலாம்ன்னு கும்மின்னு பேர வச்சிக்கிட்டு கும்மி அடிக்கும்போது, நேரம் ரம்மியாடி, கும்மி கம்மியாகி, இந்தக் கும்மி விம்மி பம்மியிருந்தேன். பம்மியது போதும்; கும்மியது வேண்டும்; கும்மியின் கும்மியது வேண்டும் என திம்மிகள் கேட்டதால் கம்மியான கும்மியின் கும்மி, இன்று கம்மியைக் கடந்து கும்மியோ கும்மி என்று கும்மியடிக்கின்றது. கும்மியின் கும்மி, கம்மியா? கும்மியா? என்று கும்மி ஒரு முடிவெடுங்கள்.

இப்படிக்கு,
கம்மியா கும்மியடிக்க முடியாமல் விம்மி விம்மி கும்மியடிப்போர் சங்கம்.

leka said...

anu ;-)
arivu neenga!!

(sathyama pa)

chumma dhaan!@! ore nick na bore adikkume tats y :-)

venkat next post abt endhirana? ;-)

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// ஏதோ கருத்தெல்லாம் சொல்ல வர்றாப்ல தெரியுது,
இது ஆவுறதில்ல வெங்கட்! //

நான் நிறைய பதிவுல கருத்து
சொல்லியிருக்கேன்..

For Eg..

1. ஒரு கிக் பதிவு
2.மன்னிச்சுக்கோங்கஜி
3. சம்சாரமும்,மின்சாரமும்
4. நேதாஜி
5. To வைரமுத்து
6. ஹார்லிக்ஸ் V/s காம்பிளான்
7. காந்தி ஜெயந்தி

அப்பல்லாம் இப்படி சொல்லாத நீங்க..
இப்ப மட்டும் இப்படி சொல்றது ஏன்னு
தெரிஞ்சிக்கலாமா
" அகில உலக நயன்தாரா ரசிகர் மன்ற தலைவர் "
அவர்களே..!!

வெங்கட் said...

@ பாபு.,

// நீங்கள் கூறியது சிலதே.,
நெத்தி அடி வெங்கட் சூப்பர் //

நன்றி பாபு..!!

உங்களுக்கு இன்னொரு News தெரியுமா..?

இந்த சம்பவம் நடக்கறதுக்கு
ஒரு நாள் முன்னாடி ( 5.10.2010)
பிரபுதேவா Wife ரமலத் அவர்களும்
போலீஸ்ல ஒரு Complaint குடுத்து இருக்காங்க..!!

போலீஸ்., போலீஸ்..,
எந்திரிங்க போலீஸ்..!!

வெங்கட் said...

@ Chitti @ Lekha.,

// hi venkat
first i thought sometng hpd 2 u :-) //

ஐயோ.., என்னா இது..?
இப்படியெல்லாமா நினைப்பீங்க..?

" If U want to see a Gentleman..
Then.. Pls open my Blog & See
My Profile Photo.. "


// in simple words u told t truth abt india :-)
gud attempt!! //

ரொம்ப நன்றிங்க..

வெங்கட் said...

@ அனு.,

// பதிவுல எந்த விதமான உள்குத்தும் இல்லன்னு
காரமடை ஜோசியர் மேல சத்தியம் பண்ணினா
தான் நான் கமெண்ட் போடுவேன்.. //

எந்த உள்குத்தும் இல்ல..

ஆமா காரமடை ஜோசியர் மேல
உங்களுக்கு என்ன கோபம்..?!!

அனு said...

//இப்படிக்கு,
கம்மியா கும்மியடிக்க முடியாமல் விம்மி விம்மி கும்மியடிப்போர் சங்கம்//

ஏங்க.. சும்மா ஒரு இதுக்காக அது போட்டேன்னா, நீங்க அதை ஒரு இதா எடுத்துட்டு இப்படி அது இதுன்னு ஒரு இது போட்டீங்கன்னா என்ன பன்றது? அதுக்கு பதிலா அதை இதை எல்லாம் விட்டுட்டு இதாவே பேசுவோமே..

ஸ்ஸ்ஸ்.. யப்பா..இப்பவே கண்ணைக் கட்டுதே...

அனு said...

@leka

//anu ;-)
arivu neenga!!

(sathyama pa)//

இதை அப்படியே கொஞ்சம் சத்தமா எல்லோருக்கும் கேக்குற மாதிரி சொல்லுங்க.. VAS மக்களுக்கு எதையும் நாலு தடவை சொன்னா தான் புரியும்..

வெங்கட் said...

@ மாதவன்.,

// தப்பு பண்ணுறது தப்பு....
'தப்ப' தப்பா பண்ணினா, 'சரி' ஆயிடும்.. //

இதென்ன Madavan's Law-ஆ..?

இப்ப ஒருத்தன் கள்ள நோட்டு அடிக்கறான்..
(அது தப்பு )

அதுவும் 1500 ரூபா கள்ள நோட்டு
அடிக்கறான். ( தப்பை தப்பா பண்றது )

இப்ப அது நல்ல நோட்டு ஆயிடுமா.?!!

அனு said...

@வெங்கட்

//" அகில உலக நயன்தாரா ரசிகர் மன்ற தலைவர் "
அவர்களே..!!//

Copyright Violation!! நான் போட்ட கமெண்ட் எங்கே??

அனு said...

@வெங்கட்

//எந்த உள்குத்தும் இல்ல..//
அது தெரிஞ்சதால தானே கமெண்ட் போட்டேன் :)

//ஆமா காரமடை ஜோசியர் மேல
உங்களுக்கு என்ன கோபம்..?!//

அவர் சொல்லி தான் உங்க ப்ளாக்-கை பார்க்க ஆரம்பிச்சேன் :-P

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// சேலம் தான் ஊருன்னு சொல்லிக்கிட்டு இருந்தார்.
அவர் சேலம் இல்லை. சேலத்துக்கு பக்கத்துல
ஒரு கிராமம் (சேலத்துல இருந்து சுமார் நூறு கிலோ மீட்டர்) //

ஹி., ஹி., ஹி..!!

நீங்க சொன்ன மாதிரி சேலம்ல
இருந்து 100 கீ.மீ தள்ளின்னா..
அப்ப எங்க ஊர் எதுன்னு கண்டுபிடிங்க..

1. திருச்சி
2. கோயம்பத்தூர்
3. பெங்களூர்
4. திருப்பதி

( எங்க ஊர் சேலம்ல இருந்து 25 கி.மீ
தான்பா தள்ளி இருக்கு..)

வெங்கட் said...

@ அனு.,

// சும்மா இருக்க முடியாம
சும்மா இருப்பவர்களுக்கு
சும்மா கமெண்ட் போடுவோர் சங்கம். //

இதென்ன புதுசா..?

பொதுவா நாங்க கும்முற கும்முல
" அம்மா., அம்மா"-ன்னு தானே
அலறுவீங்க..?

இன்னிக்கு என்ன " சும்மா., சும்மா ".
சும்மா ஒரு பில்-டப்பா..?

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// தலைவின்னா சும்மாவா.....
சும்மா பின்னிட்டீங்க, மேடம்! //

அவங்க Comment-ல என்ன உங்களுக்கு
புரிஞ்சதுன்னு இப்படி ஒரு Comment
போட்டு இருக்கீங்க..?

ஓ.. சும்மா ஒரு Comment போட்டீங்களா..?!!


// சபாஷ் போலீஸ்..!!

நம்ம ரமேஷையா சொன்னீங்க? //

At a Time-ல
ரமேஷையும் கேவலப்படுத்திடீங்க..
தமிழ் நாடு போலீஷையும்
கேவலப்படுத்திடீங்க..

ஒரே கல்லுல ரெண்டு மாங்க..

Madhavan said...

//அதுவும் 1500 ரூபா கள்ள நோட்டு அடிக்கறான். //

நோட்டடிக்கறது - தப்பு # 1
கள்ள(த் தனமா.அதாவது யாருக்கும் தெரியாம ) நோட்டடிக்குறது - தப்பு # 2
1500 denomination - தப்பு # 3
தப்ப(#1), தப்பு(2) தப்பா(#3) செய்ஞ்சா தப்புத்தான் வாத்தியாரே.....

அப்ப 1000 / 500 / 100 / 20 / 10 / 5 / 2 / 1 -- denomination அடிக்குறது சரியானு நீங்க கேக்கவறது புரியுது.......
இருங்க சொல்லுறேன்.. 'அடிச்சித்தான் பாருங்களேன்' நம்ம ரமேஷோச(சிப்பு போலீசு) ஆளுங்க சொல்லுவாங்க'.

டிஸ்கி : கண்டிப்பா 'VKS ' இத ரசிப்பாங்க.. (அட கமெண்டுல கூட டிஸ்கி போட சான்ஸா ? )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அப்ப 1000 / 500 / 100 / 20 / 10 / 5 / 2 / 1 -- denomination அடிக்குறது சரியானு நீங்க கேக்கவறது புரியுது.......
இருங்க சொல்லுறேன்.. 'அடிச்சித்தான் பாருங்களேன்' நம்ம ரமேஷோச(சிப்பு போலீசு) ஆளுங்க சொல்லுவாங்க'.//

அட விடுங்க பாஸ். வெங்கட்க்கு ஏற்கனவே கள்ள நோட்டு அடிச்ச அனுபவம் உண்டு. அதான் துருவி துருவி கேக்குறார். நான் போலீசா இருந்த ஜெயில்ல அவர்தான் விசாரணைகைதி...

lekha said...

venkat
unga profile photo paarthen (u asked me na tats y ;-))
indha poonai paal kudikkuma nu irukeenga but beer-e adikkudhe !!!

adhu 18 vayasu photo nu solraangale ;-)

@@@@@@@@@@@@

anu solitennnn
but yaarukkum kadhu kekaliyaam ;-)

@@@@@@@@@@@@@

y all r kidding ramesh??
he seems 2 b very calm n his profile photo (actingo??)

வெங்கட் said...

@ கும்மி.,

// கும்மியின் கும்மி, கம்மியா? கும்மியா?
என்று கும்மி ஒரு முடிவெடுங்கள். //

இப்படி பேசிட்டே இருந்தா எப்படி..?
சட்டுபுட்டுன்னு கும்ம ஆரம்பிங்க VKS-ஐ..

நாங்க ஒரு முடிவுக்கு வர வேணாமா..?
கும்மி கம்மியா.? கும்மி கும்மியான்னு..

வெங்கட் said...

@ Lekha.,

// anu ;-)
arivu neenga!! (sathyama pa) //

இப்படி பொய் சத்தியமெல்லாம்
பண்ணுனீங்க.. அப்புறம் சாமி கனவுல
வந்து கண்ணை குத்தும்..

// venkat next post abt endhirana? ;-) //

No., No.,

அதான் எல்லோரும் எழுதிட்டாங்களே..

எந்திரன் பார்க்கறதுக்கு முன்னாடி
நான் எத்தனை தடவை வேணாலும்
பார்க்க ரெடியா இருக்குற

ரஜினி படம் - தில்லு முல்லு, பாட்ஷா, படையப்பா.
சங்கர் படம் - முதல்வன்

ஆனா எந்திரன் பார்த்ததுக்கு
அப்புறமும் மேல இருக்கிற லிஸ்ட் மாறல..

I Like 1st Half than 2nd Half..

வெங்கட் said...

@ அனு.,

// Copyright Violation!! நான் போட்ட கமெண்ட் எங்கே?? //

ஹி., ஹி., ஹி..!!

அதுல நீங்க என்னை " அகில உலக
நயன்தாரா ரசிகர் மன்ற தலைவர் "-ன்னு
சொல்லி இருந்தீங்க..

அப்புறம் ஒரிஜினல் தலைவர் பெ.சொ.வி
உங்க மேல கேஸ் போட்டுட்டா என்ன
பண்றதுன்னு தான் அந்த Comment Cut..

// அவர் சொல்லி தான் உங்க ப்ளாக்-கை
பார்க்க ஆரம்பிச்சேன் :-P //

இத்தனைக்கும் காரணம் அவர் தானா..?

எடுங்கடா அருவாளை.,
ஓட்டுங்கடா வண்டியை காரமடைக்கு..

வெங்கட் said...

@ மாதவன்.,

// நோட்டடிக்கறது - தப்பு # 1 //

அப்படியா..? அப்ப ஏன் நம்ம Govt
நோட்டடிக்குது..?!!

ரசிகன் said...

@venkat
//என்ன கொடுமை சிம்பு இது..?!!

சிம்பு இப்போதான் உருப்படலாம்னு முடிவு கட்டி pickup ஆக try பண்ணறார்.. அவரை ஏன் வம்பிழுக்கறீங்க..

@madhavan
//நோட்டடிக்கறது - தப்பு # 1
கள்ள(த் தனமா.அதாவது யாருக்கும் தெரியாம ) நோட்டடிக்குறது - தப்பு # 2
1500 denomination - தப்பு # 3
தப்ப(#1), தப்பு(2) தப்பா(#3) செய்ஞ்சா தப்புத்தான் வாத்தியாரே.....//

அப்போ இதுல ஒரு தப்ப விட்டுட்டா அது சரி ஆகிடுமா..?

நோட்டடிக்கறது - தப்பு # 1
நல்ல(த் தனமா.. அதாவது எல்லாருக்கும் தெரிய ) 1500 ரூ நோட்டு அடிக்கறது.. தப்பு # 2

தப்ப எல்லாருக்கும் தெரிய தப்பா செஞ்சா அது சரியா தப்பா?

சும்மா G.K வளர்த்துக்கலாமேன்னு....

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// நான் போலீசா இருந்த ஜெயில்ல
அவர்தான் விசாரணைகைதி... //

எங்கயோ இடிக்கலை..?!!

பொதுவா போலீஸ்காரங்க இப்படி
சொல்லும் போது..

நான் வார்டனா இருந்த ஜெயில்ல..,
நான் இன்ஸ்பெக்டரா இருந்த ஸ்டேஷன்ல..,
நான் ஏட்டா இருந்த ஸ்டேஷன்ல..,

இப்படி தான் சொல்லுவாங்க..

போலி போலீசுன்னு இவரை அரஸ்ட்
பண்ணி வெச்சிருந்தாங்க.. இவர்கிட்ட
என் போன் நம்பர் இருந்ததால என்னையும்
விசாரணக்கு கூப்பிட்டாங்க.. That's it..!!

நாகராஜசோழன் MA said...

பணம் இருந்தா எதையும் விலை கொடுத்து வாங்கலாம் நம்ம நாட்டில்.

வெங்கட் said...

@ Lekha.,

// adhu 18 vayasu photo nu solraangale ;-) //

அட.., எப்படி கண்டுபிடிச்சீங்க..?
அது 18 வயசுல எடுத்த போட்டோ தான்..

போட்டோ எடுத்து ரெண்டு வருஷம் ஆகுது..!! :-)

// y all r kidding ramesh??
he seems 2 b very calm n his
profile photo (actingo??) //

Acting..? No., No..
அதெல்லாம் அவருக்கு தெரியாது..

Actually போட்டோ எடுக்கும் போது
அவரு சுயநினைவு இல்லாம இருந்தாரு.

வெங்கட் said...

@ ரசிகன்.,

// சிம்பு இப்போதான் உருப்படலாம்னு
முடிவு கட்டி pickup ஆக try பண்ணறார்..
அவரை ஏன் வம்பிழுக்கறீங்க.. //

வம்புக்கு இழுத்தது நானா..? நீங்களா..?

உருப்படலாம்னு இருக்கார்னு சொல்றீங்க..

அப்ப இத்தனை நாளும் அவரு
பொறுக்கி தனமா., தறுதலையா,
வீட்டுக்கு அடங்காம, ரவுடித்தனம்
பண்ணிட்டு இருந்தார்னு சொல்றீங்களா.?!!

ஹி., ஹி., ஹி..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//y all r kidding ramesh??
he seems 2 b very calm n his profile photo (actingo??)//

hehe thanks

Shalini(Me The First) said...

@வெங்கட்

//எடுங்கடா அருவாளை.,
ஓட்டுங்கடா வண்டியை காரமடைக்கு.//

Boss, அவரே இவங்கள்டருந்து தப்பிக்கத்தான் சொன்னாரு. கேளுங்க அந்த கதையை...

அனு: ஜோசியரே, நான் எப்பல்லருந்து பதிவெழுத ஆரம்பிப்பேன்?

ஜோசியர்: (கடவுளே, இன்னிக்கு நான் யார் முகத்துல முழிச்சேன்!)உங்க ஜாதகப்படி உங்களுக்கு பதிவு தோசம் இருக்கு

அனு:ஏதாச்சும் பரிகாரம் இருக்கா?

ஜோசியர்: ”கோகுலத்தில் சூரியன்”ங்கற ப்ளாக் படிங்க. வெங்கட்ங்ர ஜீனியஸ் எழுதுறார் (அப்பயாச்சும் சொந்தமா சிந்திச்சு நம்மால பதிவெல்லாம் எழுத முடியாது மொக்கையா கமெண்ட் மட்டும் தான் போட முடியும்னு இந்த பொண்ணுக்கு புரியட்டும்)

Shalini(Me The First) said...

@வெங்கட்
/At a Time-ல
ரமேஷையும் கேவலப்படுத்திடீங்க..
தமிழ் நாடு போலீஷையும்
கேவலப்படுத்திடீங்க..

ஒரே கல்லுல ரெண்டு மாங்க..//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
செம செம பாஸ்!
போலீஸ் போலீஸ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!

@
//
y all r kidding ramesh??
he seems 2 b very calm n his profile photo (actingo??)//

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க லேகா நம்ம போலீசே வருவாரு அவர பத்தி சொல்ல..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// y all r kidding ramesh??
he seems 2 b very calm n his profile photo (actingo??)//

// hehe thanks //

இவரு ஒலிம்பிக்ல ஓடி
Gold Medal வாங்கிட்டாரு..
அதான் பாராட்றவங்களுக்கு
Thanks சொல்றாரு Thanks..!!

நல்லா பாருங்க போலீஸ்..
Lekha உங்களை கலாய்ச்சி இருக்காங்க..

Madhavan said...

//அப்படியா..? அப்ப ஏன் நம்ம Govt
நோட்டடிக்குது..?!! //

நம்ம கவர்ன்மெண்டு .. எது 'தமிழ்நாடு கவர்மெண்டா ?' -- அது அடிச்சா தப்புதான்..

சரி.. சரி.. மத்திய அரசா?
நல்லாப் பாருங்க.. அது அடிக்குற நோட்டுல அரசு அங்கீகாரம் இருக்கும்..
நாமளே, அரசு அங்கீகாரம் இல்லாம அடிக்குறதுதான் தப்பு..

கும்மி said...

//இப்படி பேசிட்டே இருந்தா எப்படி..?
சட்டுபுட்டுன்னு கும்ம ஆரம்பிங்க VKS-ஐ..//

ஓ. VAS க்கு ஆள் சேத்துக்கிட்டு இருக்கீங்களா? நான் வரலே இந்த ஆட்டைக்கு

ப.செல்வக்குமார் said...

அடடா , கொஞ்சம் தாமதமா வந்திட்டேன் போலேயே..!
எப்படி இருந்தாலும் நாங்களும்(VAS) நாட்டுல நடக்குற விசயத்த சொல்லுவோம் ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//// y all r kidding ramesh??
he seems 2 b very calm n his
profile photo (actingo??) //

Acting..? No., No..
அதெல்லாம் அவருக்கு தெரியாது..

Actually போட்டோ எடுக்கும் போது
அவரு சுயநினைவு இல்லாம இருந்தாரு.//

உங்க பதிவை படிச்ச பிறகுன்னு நேரடியா சொல்ல வேண்டியதுதான?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//@
//
y all r kidding ramesh??
he seems 2 b very calm n his profile photo (actingo??)//

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க லேகா நம்ம போலீசே வருவாரு அவர பத்தி சொல்ல..//


இப்பதான் தெரியுது VAS ல எல்லோரும் பொறாமை பிடிச்ச ஆளுங்கன்னு

Anonymous said...

@ வெங்கட்
வெங்கட். நீங்கள் இந்த பதிவு எழுதியதன் நோக்கத்தை நான் உங்களுக்காக நிவர்த்திசெய்கிறேன். நான் திருமணம் முடித்திருக்கும் காலத்தில் இப்படி திரிஷவோ இல்லை ஹலிவூட் நடிகை Emma Watsonனோ என்னிடம் அவர்களை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினால் நிச்சயமாக் மறுத்துவிடுவேன்.என்னுடய முடிவுக்கு காரணமாக உஙக்ளுடய இந்த பதிவினையே காண்பிப்பேன். இதற்காக உங்களின் சேலத்திற்கு பக்கத்திலுள்ள கிராமத்தில் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தால் நான் அதற்கு பொறுப்பாளியல்ல.

Anonymous said...

@ வெங்கட்.
ஏங்க எனக்கொரு சந்தேகம்.அனு சொன்னமாதிரி நீங்க ஒரு நயந்தாரா அதிதீவிர ரசிகரா? ஏனெண்டால் இதுவே இப்போது பரபுதேவா, நயந்தாராவிலும் பார்க்க மிகவும் பரபலமாக உள்ள பலர் பல ஆண்டுகளுக்கு முன்னர் செய்துள்ளனர். இப்போதும் செய்து வருகிறனர். நீங்கள் அவர்களை கண்டிக்கவில்லை. அத்தோடு இப்பவும் அவர்களையே ஆதரிக்கிறீர்கள். இது பக்கச்சார்பானது. கண்டிக்கத்தக்கது. ஆகவே பிரபுதேவா நயந்தாரா படம் மற்றும் பெயர் வரும் இடத்தில் வேறு யாருடயதாவது பெயர் மற்றும் படத்தை பிரதியீடு செய்க.

lekha said...

****ramesh ****

" உங்க பதிவை படிச்ச பிறகுன்னு நேரடியா சொல்ல வேண்டியதுதான? "

nice joke ;-) adhaan mandhirichi vitta kozhi madhiri irukkeengala? LOL

**** venkat****

"இவரு ஒலிம்பிக்ல ஓடி
Gold Medal வாங்கிட்டாரு..
அதான் பாராட்றவங்களுக்கு
Thanks சொல்றாரு Thanks..!!

நல்லா பாருங்க போலீஸ்..
Lekha உங்களை கலாய்ச்சி இருக்காங்க."

ha ha ha,mm apdiyum sollalaam

k venkat lets keep this issue aside
now its ur turn
as u said u r now 20 yrs old right?
ur son s n 3rd std
which means he s 8 yrs old
appo child marriage-a ungalukku
police note this point ;-)

"ellam samuga sevai dhaan"

**** shalu****

"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க லேகா நம்ம போலீசே வருவாரு அவர பத்தி சொல்ல."

hii shalini
onnum solla matengarare? yennnn?
;-)

;-) said...

" அப்ப இத்தனை நாளும் அவரு
பொறுக்கி தனமா., தறுதலையா,
வீட்டுக்கு அடங்காம, ரவுடித்தனம்
பண்ணிட்டு இருந்தார்னு சொல்றீங்களா.?!! "

venkatttttt
epdi pa idhellam?
chance less
pottu vaanguradhu na idhu dhaana ;-)

வெங்கட் said...

@ ஷாலினி.,

// அனு: ஜோசியரே, நான் எப்பல்லருந்து பதிவெழுத ஆரம்பிப்பேன்?

ஜோசியர்: (கடவுளே, இன்னிக்கு நான் யார் முகத்துல முழிச்சேன்!)
உங்க ஜாதகப்படி உங்களுக்கு பதிவு தோசம் இருக்கு //

ஹா., ஹா., ஹா..!!
இது சூப்பரு....!!

VAS மகளீர் அணி தலைவின்னா சும்மாவா.?

அந்த ஜோசியர் மேல எனக்கு
என்ன கோபம்னா..
" பதிவு தோஷம்னு " எதுக்கு சொல்லணும்..?!!

ஒரேடியா " பதிவுலக தோஷம்னு "
சொல்லியிருந்தா..
அப்பாவி பதிவர்கள் சந்தோஷமா
இருந்து இருப்பாங்களே..!!

வெங்கட் said...

@ பாரதி.,

// நான் திருமணம் முடித்திருக்கும் காலத்தில்
இப்படி திரிஷவோ இல்லை ஹலிவூட் நடிகை
Emma Watsonனோ என்னிடம் அவர்களை திருமணம்
செய்துகொள்ளும்படி வற்புறுத்தினால்
நிச்சயமாக் மறுத்துவிடுவேன். //

அட., அட., அட..

உங்க நல்ல மனசுக்கு நீங்க திரிஷாவையே
கல்யாணம் ( 1st Marriage ) பண்ணிட்டு
சந்தோஷமா இருப்பீங்க..
வாழ்த்துக்கள்..

And.. Emma Watson உங்க கல்யாண
வாழ்க்கையில எதாவது தொந்தரவு
குடுத்தாலோ இல்ல உண்ணாவிரதம்
இருந்தாலோ.., Don't Worry..

நான் அவங்களுக்கு பக்கம் பக்கமா
அட்வைஸ் மழை பொழிஞ்சி..,
அவங்களை சாமியாரா போக வெச்சிடறேன்..

And.. Last but not Least..

Emma Watson-ஐ கட்டிக்கறதுக்காக
திரிஷாவுக்கு நீங்க எதாவது
தொல்லை குடுக்கறதா எனக்கு
நியூஸ் வந்தது.....

அப்புறம் நான் உங்க மேல சட்டப்படி
Action எடுக்க வேண்டி இருக்கும்..
Be Careful..

வெங்கட் said...

@ பாரதி.,

// இப்போது பரபுதேவா, நயந்தாராவிலும் பார்க்க
மிகவும் பரபலமாக உள்ள பலர் பல ஆண்டுகளுக்கு
முன்னர் செய்துள்ளனர். இப்போதும் செய்து வருகிறனர்.
நீங்கள் அவர்களை கண்டிக்கவில்லை. //

பதிவின் நோக்கத்தை சரியாக புரிஞ்சிக்கோங்க..

மனைவியை விவாகரத்து செய்யாமல்.,
மனைவியின் சம்மதம் இல்லாமல்.,
காதலியுடன் குடும்பம் நடத்திய

ஒருவருக்கு ஜெயில் தண்டனை.
இன்னொருவருக்கு சிறந்த தம்பதி விருது..

ஏன்.......????!!!!!!!

வெங்கட் said...

@ Lekha.,

// adhaan mandhirichi vitta kozhi
madhiri irukkeengala? LOL //

கொஞ்சம் Wait பண்ணுங்க Pls..
இதுக்கும் நம்ம போலீஸ் வந்து
Thanks சொல்லுவாரு..!!

// as u said u r now 20 yrs old right?
ur son s n 3rd std., which means he s 8 yrs old
appo child marriage-a ungalukku
police note this point ;-) //

ஆஹா.., நிஜமாலுமே இதுக்கு
பேரு தான் போட்டு வாங்கறது..!!

நான் மேல சொன்ன என் வயசை
ரப்பர் போட்டு அழிச்சிடுங்க..
My age is 28.. ( 28 - ( 8 + 1 ) = 19 )..

ஹி., ஹி., ஹி..!!

கும்மி said...

//My age is 28.. ( 28 - ( 8 + 1 ) = 19 ).. //

VKS மக்களே நல்லா நோட் பண்ணுங்க. இவர் 1994 ல் +2 தேர்வு எழுதியிருக்கின்றார். அப்படியானால், அப்பொழுது இவருக்கு (குறைந்தபட்சம்) 17 வயது; பிறந்த வருடம் 1977. அப்போ கூட்டி கழிச்சிப் பார்த்தா இப்ப, இவருக்கு 63 வயசு சரியா?

Shalini(Me The First) said...

@ leka
//
**** shalu****

"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க லேகா நம்ம போலீசே வருவாரு அவர பத்தி சொல்ல."

hii shalini
onnum solla matengarare? yennnn?
;-)//

அது வேர ஒன்னும் இல்ல லேகா. நம்ம போலீஸ் ப்ளாக் போய் பார்த்த என்ன ரீஸன்னு உங்களுக்கு புரிஞ்சுடும்
(அய்யா ஐஸ் பக்கத்துல நிக்கிற ஜோர்ல இருக்கார் ஹா ஹா ஹா)

@venkat

//
ஹா., ஹா., ஹா..!!
இது சூப்பரு....!!
//
உங்க சிஷ்யை பாஸ் :)))

Shalini(Me The First) said...

@கும்மி

//
VKS மக்களே நல்லா நோட் பண்ணுங்க. இவர் 1994 ல் +2 தேர்வு எழுதியிருக்கின்றார். அப்படியானால், அப்பொழுது இவருக்கு (குறைந்தபட்சம்) 17 வயது; பிறந்த வருடம் 1977. அப்போ கூட்டி கழிச்சிப் பார்த்தா இப்ப, இவருக்கு 63 வயசு சரியா//

சாரிங்க என்ன தான் நீங்க தப்பு தப்பா கணக்கு போட்டு காமிச்சு அதை பார்த்து உலக மக்கள் அறிவுக்கண்ணை திறக்க உதித்த எங்க பாஸ் உங்க அறிவுக்கண்ணையும் திறக்க ஆர்வமாயிருந்தாலும் அவருக்கு டைம் இல்ல சாரி உங்களுக்கு ட்யூசன் எடுக்க முடியாது. அவர் ரொம்ம்ம்ம்ம்ம்ப பிஸி

lekha said...

****venkat**** ;-)

"கொஞ்சம் Wait பண்ணுங்க Pls..
இதுக்கும் நம்ம போலீஸ் வந்து
Thanks சொல்லுவாரு..!!"

avlo confidenta ramesh mela( yaaru petha pullaiyo ;-))? aana idhu over nakkal pa

"ஆஹா.., நிஜமாலுமே இதுக்கு
பேரு தான் போட்டு வாங்கறது..!!"

ellam unga asirvadham dhaan ;-)

"நான் மேல சொன்ன என் வயசை
ரப்பர் போட்டு அழிச்சிடுங்க..
My age is 28.. ( 28 - ( 8 + 1 ) = 19 ).. "

gud escapism ;-) aanalum idikkudhe!!!

c kummi's post

**** kummi****

"பிறந்த வருடம் 1977. அப்போ கூட்டி கழிச்சிப் பார்த்தா இப்ப, இவருக்கு 63 வயசு சரியா??"

adhu epdinga 63 varum?
who was ur maths teacher?

"unga ariva paarthu apdiye naan off aiten";-)

சி.பி.செந்தில்குமார் said...

உங்கள் 2 நீதிகளும் அருமை.

சி.பி.செந்தில்குமார் said...

கருத்து ஓக்கே,உங்க காமெடி சென்ஸ் ஆப்சென்ட்

பிரியமுடன் ரமேஷ் said...

என்னடா நம்மூரு நியூசெல்லாம் வருதேன்னு பார்த்தேன்..நீங்களும் நம்ம ஊருதானா...

சரியா கோத்துவிட்டீங்க...போங்க...