சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

27 February 2015

பாம்பின் கால்.....!!!


இன்னிக்கு மதியம் 12.30 மணிக்கு
என் ப்ரெண்ட் ஆனந்த் போன்
பண்ணியிருந்தான்...

கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்..

அப்ப பேக்ரவுண்ட்ல ஆனந்த் அம்மா
வாய்ஸ் கேட்டது...

" டேய்.. லஞ்ச்க்கு வர்ரீயான்னு அம்மா
கேக்கறாங்க.. "

" என்னடா ஸ்பெஷல்..? "

" வஞ்சிர மீன்.. "

" இல்ல வரலைடா.. "

" தேங்க்ஸ்-டா.. சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்..
எங்கே வர்றேன்னு சொல்லிடுவியோன்னு
பயந்துட்டே இருந்தேன்... "

" ஓ.. சரி மச்சி.....!!! "

( அடுத்த 5-வது நிமிஷம் ஆனந்த் வீட்டு
முன்னாடி போயி நின்னது என் பைக்கு..

என்னை பாத்ததும் பையன் ஷாக் ஆகிட்டான்..)

" என்னடா வரலைன்னு சொன்னே..?!! "

"  நானும் ஒரு பேச்சுக்கு தான் மச்சி
வரலைனு சொன்னேன்.. "

" ஏன்டா.. ஏன்..? "

" வர்றேன்னு சொன்னா.. பெரிய பீசை
எல்லாம் நீ பதுக்கி வெச்சிடுவேல்ல...
அதான்... ஹி., ஹி., ஹி...!!! "

# பாம்பின் கால்.....!!!
.
.

03 February 2015

அதுக்கும் மேல...!!


அது சிட்டியிலயே பேமசான ஸ்கூல்..

மதன்.. பிரின்சிபால் முன்னால்
உக்காந்து இருந்தான்..

" சார்.. I Std-க்கு 51,000 ரூபா பீஸ்ங்கறது
ஜாஸ்தியா தெரியுதே..!! "

" Mr.மதன்.. மத்த ஸ்கூல்சை கம்பேர்
பண்ணாதீங்க... நம்ம Education Method வேற..."

" ம்ம்..!! "

" நாங்க வெறுமனே புக்ல இருக்கறதை
மட்டும் சொல்லி குடுத்துட்டு எங்க
வேலை முடிஞ்சதுன்னு நெனக்கறதில்ல..!! "

" ம்ம்..!! "

" பசங்களுக்கு ஒழுக்கம், நேர்மை, உண்மை,
நாட்டுப்பற்று எல்லாம் இப்ப இருந்தே
கொண்டு வர்றோம்..!! "

" ம்ம்..!! "

" இங்கே படிக்கிற பையன்.. நல்ல ஸ்டூடண்டா
மட்டுமில்ல.. நல்ல சிட்டிசனாவும் இருப்பான்..!! "

" ஓ.கே சார்.. ஆனா பீஸ் கட்டினா.. ரிசிப்ட்
பாதி அமொண்ட்க்கு தான் தர்றாங்க..!!

" ஹி., ஹி, ஹி... ஆடிட்டரு அப்படித்தான்
பில் போட சொல்லி இருக்காரு...! "

# கொய்யாலே.. நல்லா இருக்குடே
உங்க நேர்மை, உண்மை, எருமை எல்லாம்..!!
.
.