சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

23 August 2013

கேப்டன் Vs கேப்டன்


கேப்டன் டோனி, கேப்டன் விஜயகாந்தை
சந்திக்க வருகிறார்..

அப்போது டோனி அவரை பாத்து...

" நமஸ்தே ஜி...!! "

" எதோ எனக்கு தெரிஞ்ச இங்கிலீஸ்ல
கேக்கறேன்.. துமாரா நாம் க்யா ஹை..? "

இதை கேட்டதும் டோனி ஜெர்க் ஆகிறார்..

" Mr.விஜய்காந்த்.. எனக்கு தமிழ் தெரியும்.,
நாம தமிழ்லயே பேசலாம்.. நான் டோனி.. "

" ஓ.. நீங்கதான் டோனியா.. ஆமா நீங்க
எதோ இந்தியாவுக்கு ஓல்டு கப் வாங்கி
குடுத்தீங்கன்னு பசங்க சொன்னாங்க.. 

நம்மகிட்ட சொல்லியிருந்தா ஒரு நியூ கப்பே 
செஞ்சி குடுத்திருக்கலாம்.! "

" நீங்க மட்டும் வெள்ளக்காரன் காலத்துல
இருந்திருக்கணும் சார்.... வெள்ளக்காரன்
இங்கிலாந்தையும் நமக்கே எழுதி கொடுத்துட்டு
ஆப்பிரிக்காவுக்கு ஓடியிருப்பான்.. "

" தம்பி நீங்க என்னை ரொம்ப புகழ்றீங்க.. "

" உங்க ரேஞ்ச்க்கு இதெல்லாம் கம்மி கேப்டன்..! "

" ஹி., ஹி., ஹி... அப்படீங்கறீங்க.. சரி
என்னை பத்தி உங்களுக்கு யார் சொன்னா..? "

" இன்சமாம்-உல்-ஹக் சொன்னாரு..? "

" யாரு அது பாகிஸ்தான் தீவிரவாதியா..? "

" சே., சே., முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்.. "

" கேப்டனா.. அவரும் பாகிஸ்தான்ல நடிகரா..?
இல்ல கட்சி வெச்சி இருக்காரா..? "

" இல்ல.. அவரு கிரிக்கெட் கேப்டன்..! "

" ஆமா அவருக்கு எப்படி தெரியும்...? "

" நீங்க அடிக்கடி பாகிஸ்தான்ல ரோட்டோரமா
தீவிரவாதிகளை திருத்த கேம்ப் போடுவீங்களாம்ல..
அப்ப பார்த்து இருக்காராம்.. "

" ஓ.. நான் வேற கொஞ்ச நாளா அங்கே
போகல... இப்ப எப்படி இருக்காம் பாகிஸ்தான்..? "

" அங்கங்கே ' கேப்டன் தீவிரவாதிகள் சீர்திருத்த
பள்ளி ' ஆரம்பிச்சி இருக்காங்களாம்... அதனால
முன்ன மாதிரி பிரச்னை இல்லையாம்.., "

" அப்படியா..? "

" ஆமா.. எவனாவது சின்னதா வாலாட்டினா கூட
நீங்க மூச்சு விடாம மூணு மணி நேரம் பேசின
டிவிடி-ஐ போட்டு காட்றாங்களாம்.. அவனுங்க
அப்படியே மயக்கம் போட்டு , கோமா ஸ்டேஜ்க்கு
போயிடறாங்களாம்..! "

" ம்ம்.. ஆனா இன்னும் பார்டர்ல தகராறு
பண்ணிட்டு தான் இருக்கானுங்க போல.. "

" யெஸ் Mr.விஜய்காந்த்.. அவனுங்களுக்கும்
நாம சாவு பயத்தை காட்டணும்.. அதுக்கு தான்
உங்களை மீட் பண்ண வந்தேன்...! "

" என்ன பண்ணலாம்..? நான் வேணா என்
துப்பாக்கியை ரெடி பண்ணிக்கட்டுமா..? "

" அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..
பாகிஸ்தான் பார்டர்ல ஒரு மீட்டிங் அரெஞ்ச்
பண்ணியிருக்கு.. நீங்க வந்து பேசுங்க போதும்..! "

" ??!?!??! "




---------------------------------------------------------------------------

டிஸ்கி : திரு. வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்கள் 
Facebook-ல் நடத்திய " எழுத்தாளர் சுஜாதா நினைவு 
கற்பனைத்திறன் போட்டி - 3 "-ல் எனக்கு முதல் பரிசு 
வாங்கி தந்த என் படைப்பு தான் இது..

இந்த வார தலைப்பு : இவர்கள் சந்தித்தால்...!

.
.

22 August 2013

இம்சை அரசனும், Facebook-ம்..!!!


" மன்னா.. ஆபத்து.., ஆபத்து.... "

" என்னய்யா ஆபத்து... என் அக்கவுண்ட்டை 
யாராவது ஹேக் செய்து விட்டார்களா..? "

" இல்லை மன்னா.. பக்கத்து நாட்டு மன்னன் 
நம்மீது போர் தொடுக்க போகிறானாம்..
ஸ்டேடஸ் போட்டு இருக்கிறான்... "

" என்னாது போரா..? நாம் தான் அவன் 

போடும் எல்லா மொக்கை ஸ்டேடசுக்கும் 
லைக் போடுகிறோமே... பிறகு எதற்கய்யா 
போருக்கு வருகிறான்.. "

" அவர் அந்தபுரத்தில் இருக்கும் இரண்டு

 ராணிகளுக்கு நீங்கள் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் 
அனுப்பினீர்களாமே... "

" ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினதுக்கு 

எல்லாமா போர்.. பெரிய அக்கப்போராய் 
அல்லவா இருக்கிறது..
அவ்வ்வ்..!! "
.
.

20 August 2013

ராக்கி கட்டுங்க ப்ளீஸ்..!!


நாள் : Raksha Bandhan

நான் காலேஜ் படிக்கும்போது
என் ப்ரெண்ட்ஸ் எல்லோர் கையிலயும்
ஏழெட்டு ராக்கி இருக்கும்..

ஆனா நம்ம கையில ஒண்ணு கூட
இருக்காது.... ஆச்சரியமா கேப்பானுங்க...

" மச்சி.. எப்படிடா உன்னால மட்டும்
முடியுது.? "

" அது வெரி சிம்பிள் டெக்னிக்.. "

" அதை கொஞ்சம் எங்களுக்கும் சொல்லி
குடேன்.."

" அட இப்ப ராக்கி கட்டணும்னு பொண்ணுங்க
வந்தாங்கன்னு வையி..

அவங்களை பாத்து...

ராக்கி கட்றேன்., அண்ணா., நொண்ணான்னு 
யாராச்சும் இன்னிக்கு வந்தீங்க பிச்சிபுடுவேன் 
பிச்சி... 

உங்க எல்லாரையும் விட நான் ரொம்ப 
சின்னபையன்... அதனால.. 

நல்லாருக்கியா தம்பி.?னு கேட்டுட்டு.. 
ஆளுக்கு 100 ரூபா செலவுக்கு குடுத்துட்டு 
போங்கனு சொல்லுவேன்..

உடனே ஓடி போயிடுவாங்க.. "

ஹி., ஹி., ஹி...!!
.
.

17 August 2013

டாலர் vs ரூபா.. ( ஒரு பலே ஐடியா )




மக்கள் தங்ககாசு வாங்கறதை நிறுத்தினா
டாலருக்கு நிகரான இந்தியா ருபா மதிப்பு
சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு இறங்கி 10 ரூபாய்க்கு
போய்டும்னு கொஞ்ச நாள் முன்னாடி
சொன்னாருங்க..

அவரு பெரிய அறிவாளியாச்சே..
( அட கண்ணாடி எல்லாம் போட்டிருக்காருபா.. )
நானும் ஒரு மாசமா தங்ககாசு எதுவும்
வாங்கலை..

( இல்லன்னா டெய்லி நாலஞ்சு வாங்கி
பாக்கெட்ல போட்டுட்டு தான் மறுவேலை...! )

ஆனா இப்ப என்னடான்னா

1 டாலர் = 63 ரூபாயாம்...!!!

இதை கேள்விப்பட்டதும்..

ஷேர் மார்கெட் விழுவுதாம்...,
கப்பல் மிதக்குதாம்..
ஏரோப்ளேன் எல்லாம் பறக்குதாம்.,

ஆத்தாடி...!! இப்ப என்ன தான் சார் பண்றது..?!!

நாம வேணா மக்கள்கிட்ட...

" இனிமே எல்லோரும் இட்லிக்கு
தேங்கா சட்னி சாப்பிடறதை நிறுத்திட்டு.,
தக்காளி சட்னி சாப்பிடுங்க "-னு சொல்லி
எதாவது இம்ப்ரூவ்மெண்ட் தெரியுதான்னு
டிரை பண்ணி பாக்கலாமா சார்..?!!
.
.

16 August 2013

எழுத்தாளனும், பிரியாணியும்..!!


இன்னிக்கு என் ரசிகை (?!) ஒருந்தவங்க
சாட்ல என் நம்பர் கேட்டு போன்
பண்ணியிருந்தாங்க..

இப்ப எதுக்கு அப்படி டவுட்டா பார்க்கறீங்க..?!

ஒரு பிரபல எழுத்தாளரா இருந்தா
ரசிகைகள் கடிதம் எழுதறதும்,
போன் பண்றதும் சகஜம் தானே...!!

சரி மேட்டர்க்கு வரேன்...

பேசும் போது... " வெங்கட் நீங்க சூப்பரா
எழுதறீங்க., சான்ஸே இல்ல., உங்க பதிவை
படிச்சிட்டு ஆபீஸ்ல சிரிச்சிட்டே இருப்பேன்...... "
இப்படி பேசிட்டே இருந்தாங்க..

நான் அமைதியா கேட்டுட்டு இருந்தேன்...

( குறுக்க குறுக்க பேசினா.. புகழ்றது
கம்மியா போயிடும்ல.. ஹி., ஹி., ஹி...! )

அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி நான்
கேட்டேன்...

" ஏங்க... நீங்க எந்த ஊரு..? "

" பொள்ளாச்சி...! "

எனக்கு பொள்ளாச்சின்னு பெயரை
கேட்டதும் பல்ப் எரிய ஆரம்பிச்சிடுச்சு...

" ஏங்க உங்க ஊர்ல ' அசோக் ஹோட்டல் 'னு
ஒண்ணு இருக்காமே..! "

" ம்ம்.. இருக்கு..! "

" அதுல பிரியாணி சூப்பரா இருக்கும்னு
கேள்விப்பட்டேனே..! "

" ஆமாங்க.. செம டேஸ்டா இருக்கும்..! "

" அப்படின்னா.. நான் உங்க ஊருக்கு வந்தா
எனக்கு பிரியாணி வாங்கி தருவீங்களாம்..! "

" ஓ... தாராளமா...! "

"அப்ப அந்த பிரியாணிக்காகவே ஒரு நாள்
நான் பொள்ளாச்சி வர்றேங்க...! "

" வாங்க.., வரும்போது கண்டிப்பா சொல்லிட்டு
வாங்க.. "

" சரிங்க..! "

" உங்களை பார்க்க என் ப்ரெண்ட்ஸ் நாலு
பேர் ஆவலா இருக்காங்க.."

" ஓஹோ அவங்களும் என் ரசிகைகளா..?
ஆட்டோகிராப் எதாச்சும் போட்டு தரணுமா..?!! "

" சே., சே... 150 ரூபா பிரியாணிக்கு,
500 ரூபா செலவு பண்ணிட்டு வர்ற
ஆளை பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க..
அவ்ளோ தான்..! "

" ஙே..! "

சே... பொள்ளாச்சியிலயும் ஒரு எழுத்தாளனுக்கு(?!)
மரியாதை இல்லயா..?!!!

# என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்.!!?
.
.

05 August 2013

இதெல்லாம் டூ மச்..!!


அப்போ நான் எட்டாவது படிச்சிட்டு
இருந்தேன்...

ஒரு நாள் எங்க வீதியில நடந்து வந்துட்டு
இருக்கேன்...

அப்போ எதிர்ல ஒரு பொண்ணு
தாறுமாறா சைக்கிளை ஓட்டிட்டு வந்தது..

புதுசா பழகிக்கிட்டு இருக்கு போலன்னு
நானும் ஒதுங்கி ஒதுங்கி நிக்கறேன்..
அப்பயும் சைக்கிள் என் மேல மோதற
மாதிரியே வந்தது...

நான் டக்னு நகந்துட்டேன்.. சைக்கிள்
என் மேல இடிக்கல.. ஜஸ்ட் மிஸ்..

அப்புறம் நான் அந்த பொண்ண பாத்து..
" ஏய்... பாத்து போ புள்ள "-னு சவுண்ட்
விட்டேன்..

அந்த பொண்ணு என்னை பாத்து
முறைச்சிட்டே போச்சு...

சீன் ஓவர்...

அடுத்த நாள்... ஸ்கூலுக்கு போயிட்டு
வந்த என் தங்கச்சி ஒரே அழுகை...

என்ன மேட்டர்னு எங்கம்மா விசாரிக்க...

" அண்ணன் என் ப்ரெண்ட் வனிதாமணியை
கிண்டல் பண்ணிட்டானாம்.... ரவுடி மாதிரி
நடந்துக்கறானாம் "னு போட்டு கொடுக்க..

அம்மா செம திட்டு...

பெண்களை தெய்வமா மதிக்கிற நமக்கே
இந்த நிலைமையான்னு ரொம்ப ஃபீல் பண்ணி
அப்ப நான் முடிவு பண்ணினேன்...

இனிமே இந்த பொண்ணுங்ககிட்ட மட்டும்
பேச்சு வெச்சிக்க கூடாதுன்னு..

சீன் ஓவர்...

அப்புறம் நான் +1 ஜாயின் பண்ணினேன்..
எங்க க்ளாஸ்ல 14 பொண்ணுங்களும்,
பக்கத்து க்ளாஸ்ல 18 பொண்ணுங்களும்
படிச்சாங்க..

ஒரு மாசம் நல்லாத்தான் போயிட்டு
இருந்தது... ஆனா அதுக்கப்புறம் என்ன
ஆச்சுன்னே தெரியல பொண்ணுங்க
என்னைய பாத்தா மொறைக்க ஆரம்பிச்சாங்க..

இதென்னடா வம்பா இருக்கேன்னு
ஒரு பொண்ணுகிட்ட லைட்டா விசாரிச்சேன்...

" நீ வனிதாமணியை கையை புடிச்சி
இழுத்தியாம்ல"-னு சொல்லிச்சு..

" எந்த வனிதாமணி..? " ( எனக்கு மறந்து போச்சு.. )

" நம்ம க்ளாஸ்ல படிக்கிற மேனகாவோட
சித்தப்பா பொண்ணு...! "

அடப்பாவிகளா...  இப்ப இந்த அளவுக்கு
டெவலப் பண்ணிட்டீங்களா...??!

சீன் ஓவர்..

அப்புறம் நான் B.Com + MCA படிச்சேன்..
எனக்கு கல்யாண வேலைகள் நடந்தது...
பொண்ணு பக்கத்து ஊரு..

வழக்கம் போல ஒரு நாள்
என் ( வருங்கால ) மனைவிகிட்ட
போன்ல பேசிட்டு இருக்கும் போது...
திடீர்னு ஒரு கேள்வி கேட்டா பாருங்க...

நான் அப்படியே ஆடிப்போயிட்டேன்...
.
.
.
.

" ஏங்க... உங்களுக்கு வனிதாமணி தெரியுமா..? "

( மறுபடியும் வனிதாமணியா..? அவ்வ்வ்...!!! )