சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

13 October 2012

ஹலோ மிஸ்டர் அரிச்சந்திரன்..!

இன்னிக்கு என் Wife-க்கு Birthday.

அவங்களுக்கு இந்த வருஷ Birthday-க்கு
நான் வாங்கி குடுத்த தங்க மோதிரம்
இதுதான்..அட என்னாத்துக்கு அப்படி உத்து
உத்து பார்க்கறீங்க...?

எங்க குலதெய்வம் மேல சத்தியமா
இது தங்க மோதிரம் தாங்க..

2.5 கிராம்.. ஒன்ன்ன்ன்பதாயிரம் ரூபா.
"தங்கமயில்"ல வாங்கினது.

பார்ரா.. மறுபடியும் டவுட்டா பார்க்கறாங்க..?

இருங்க பில்லை ஸ்கேன் பண்ணி
போடறேன்...

" மாலா.. அந்த பில்லை எடுத்துட்டு வா.. "

" எந்த பில்லுங்க..? "

" அதான் உன் பர்த்டேக்கு நான் வாங்கி
குடுத்தேனே.. தங்க மோதிரம்.. அந்த பில்.. "

" என்ன.. நீங்க வாங்கி குடுத்தீங்களா..? "

" இல்லையா பின்ன..? "

" ஏங்க இப்படி அநியாயத்துக்கு
பொய் சொல்றீங்க..? "

" என்னாது பொய்யா..? யாரை பாத்து
என்ன வார்த்தை சொல்லிட்டே மாலா..
அரிசந்திரனை பார்க்கணும்னு ஆசையாயிருந்தா
நான் கண்ணாடி எடுத்து பாத்துப்பேன்..
தெரியுமா..? "

" ம்க்கும்.. இதுக்கு ஒன்னும் கொறைச்சல்
இல்ல.. என் பழைய மோதிரத்தை போட்டுட்டு
தானே இதை வாங்கினோம்.. "

" ஆமா.. "

" பின்ன நீங்க வாங்கி குடுத்ததா சொல்றீங்க..? "

ஹி., ஹி., ஹி..! அது வந்து.. கடைக்காரரு
மோதிரத்தை Pack பண்ணி என்கிட்ட
குடுத்தாரா.. நான் அதை வாங்கி உன்கிட்ட
குடுத்தேனா.. அதான்....

நான் " வாங்கி., குடுத்த மோதிரம்.."

" கிர்ர்ர்ர்.... சரி., ஒரு நிமிஷம் கிச்சனுக்கு
வாங்க... பில்லு அங்கே தான் இருக்குது.. "

" நோ... அது மட்டும் நடக்காது..
அங்கே கரண்டி எல்லாம் இருக்குது....."

மீ எஸ்கேப்.....!!

டிஸ்கி : போன வருஷ பர்த்டே கொண்டாட்டம்
பார்க்க.. க்ளிக்..