சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

30 January 2012

உஸ்ஸப்பா.. இப்பவே கண்ணை கட்டுதே.!



போன சனிக்கிழமை என் பையன்
ஸ்கூல்ல Parents Meeting..

ஓவ்வொரு Parents Meeting-மே
ஒரு கண்டம் தான்..

ஸ்கூலுக்கு போன உடனே
எங்க பையனோட க்ளாஸ் மிஸ்ஸு
கண்ணுல சிக்கிட்டோம்..

உடனே அவங்களும் என் பையனோட
அருமை ( ?! )., பெருமைகளை (?! )
மூச்சு விடாம பேச ஆரம்பிச்சிட்டாங்க..

" உங்க பையனை என்னால Control
பண்ணவே முடியல சார்..! "

" ஏன் மேடம்..?! என்ன ஆச்சி "

" 1. க்ளாஸ்ல ஒழுங்கா ஒரு இடத்துல
உக்கார்றதே இல்ல.. அங்கே , இங்கே
தாவிட்டே இருக்கான்..

2. பக்கத்துல இருக்குற பசங்களை
க்ளாஸ் கவனிக்க விடாம சும்மா
தொண தொணன்னு பேசிட்டே இருக்கான்...

3. திடீர்னு எந்திரிச்சு " டவுட் மிஸ்னு "
Subject-க்கு சம்பந்தமே இல்லாம
எடக்கு மடக்கா கேள்வி கேக்கறான்..

4. மிரட்டினாலும் பயப்பட மாட்டேங்குறான்.!

5.அடிச்சாலும் அடங்க மாட்டேங்குறான்..!

நான் என்னதான் சார் பண்றது..?!! "

" உஸ்ஸப்பா.. Same Complaint..! "

" Same Complaint-ஆ..? என்ன சார்
சொல்றீங்க..?! "

" டீச்சர் மாறிட்டாங்க.. ஆனா
Complaint மட்டும் மாறலைன்னு சொல்ல
வந்தேன்..! "

" ஓ.. போன வருஷம் 3rd Std மிஸ்ஸும்
இதே தான் சொன்னாங்களா..?! "

" ஹி., ஹி., ஹி... இல்லங்க மேடம்..
நான் படிக்கிறப்ப., எங்க க்ளாஸ் மிஸ்ஸும்
இதே Complaint தான் எங்கப்பாகிட்ட
சொல்லுவாங்க..! "

" ??!?!?!!! "
.
.

18 January 2012

இந்தியன் கிரிக்கெட் டீம் Dictionary..!!

,


Trophy : போட்டோவுக்கு போஸ் கொடுக்கறப்ப
நைசா தொட்டு பார்க்கறது.

டெஸ்ட் மேட்ச் : அவங்க ஒரு தடவையும்,
நாம 2 தடவையும் Batting பண்ற ஆட்டம்.

கேப்டன் : தோத்ததுக்கு காரணம் சொல்றவர்..

துணை கேப்டன் : அடுத்த பலிகடா..

Opening Batsman : முதல் 2 ஓவர் விளையாடறவர்.

Middle Order Batsman : டிவி விளம்பரத்துல
நடிக்கிறவிங்க..

விக்கெட் கீப்பர் : எப்பவாவது பந்தை
பிடிக்கிறவரு..!

Fast பவுலர் : எதிர் டீமை தாக்கி பேட்டி
கொடுக்கறவரு.!

Spin  பவுலர்  : Pitch ஐ திட்றவரு..!

ஸ்லிப் பீல்டர் : தத்தி ப்ளேயர்.

பீல்டிங் : Catch-ஐ விட்டு பந்தை துரத்தறது.

ரன் : மெதுவாக நடந்து எடுக்கறது.

Four : Edge பட்டு போறது.

டிரா : மழை வந்தா ஏற்படறது.

Win : Toss பண்ணும்போது மட்டும்
சில சமயம் கிடைக்கறது.

லஞ்ச் பிரேக் : இந்தியாவோட முதல் இன்னிங்ஸ்
முடியற நேரம்.

செஞ்சுரி : எதிர் டீம் வீரர்கள் அடிக்கறது.

டபுள் செஞ்சுரி : நம்ம ரெண்டு இன்னிங்ஸ்
Scores-யும் கூட்டினால் வர்றது.
.
.

12 January 2012

நண்பன் ( Behind the Scenes )



சீன் 1 : நேத்து., இரவு 8 மணி.

நான் டிவி பார்த்துட்டு இருந்தேன்..
அப்போ என் Wife...

" ஏங்க... நாளைக்கு " நண்பன் " படம்
போலாங்க.. "

" ரெண்டு நாள் வெயிட் பண்ணு..
ரிசல்ட் தெரிஞ்சிகிட்டு போலாம்.. "

" அது ஷங்கர் படம்ங்க.. நம்பி போலாம்..! "

" அது விஜய் படம்மா.. அப்படி எல்லாம்
ரிஸ்க் எடுக்க முடியாது..! "

" ?!!?!!? "

---------------------------------------------------------------

சீன் 2 : நேத்து., 11.1.2012, இரவு 10 மணி.

" மாலா.. நாளைக்கு என்னை சீக்கிரம்
எழுப்பி விடு..! "

" சீக்கிரம் எழுந்து என்ன பண்ண போறீங்க.? "

" நண்பன் பத்தி ஒரு Posting போடணும்..! "

" சும்மா எதையாச்சும் உளறி வெக்காதீங்க..
படம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சிகிட்டு
போடுங்க.. "

" ஹி., ஹி., ஹி.. உனக்கு ஒரு தொழில் ரகசியம்
சொல்லட்டுமா.? "

" ம்ம்..! "

" விஜயை வெச்சி படம் எடுத்தா ஹிட்
ஆகுதோ இல்லையோ.. Posting போட்டா
கண்டிப்பா ஹிட் ஆகிடும்..! "

என்ன மக்களே.. நான் சொல்றது கரெக்ட் தானே.?!


@ Dear விஜய்...


நீங்க இன்னும் நிறைய படம் நடிக்கணும்.
எங்க ஆசை அதான்.. ( நாங்களும் ப்ளாக்
நடத்தணும்ல.. ஹி., ஹி., ஹி... )

.
.

09 January 2012

தனுஷூக்கு கண்டனம்...!

















" Why this கொலைவெறி " பாட்டுக்கு
பெண்கள் பலர் பயங்கர எதிர்ப்பு..

Why..? Why..?

பின்ன...,

அவங்களை கேவலப்படுத்தினா.,
பாத்துட்டு சும்மாவா இருப்பாங்க..

நிக்க வெச்சி நாக்கை பிடுங்கிக்கிற
மாதிரி கேப்பாங்கல்ல..

அந்த கோவத்துல ஒரு நியாயம்
இருக்குங்க..

அதனால தனுஷூக்கு என் கண்டனத்தை
தெரிவிச்சிக்கிறேன். ( ஐஸ்வர்யா.,
ஸ்ருதி அவங்கெல்லாம் விதிவிலக்கு )

பாட்டு எழுத தூண்டிவிட்டது.,
பாடும் போது கைதட்டினது..,
இதை தவிர அவங்க என்ன தப்பு
செஞ்சாங்க..? பாவம்..!

ஆனா..., இதுக்கு வெறும் கண்டனம்
மட்டும் போதுமா...?

இல்ல....

வீதில எறங்கி போராடி.., பஸ், கடை
மேல எல்லாம் கல்லு விட்டு எறிஞ்சி.,
கொடும்பாவி எதாச்சும் எரிக்கணுமான்னு..?
தீவிரமா யோசிச்சிட்டு இருக்கேன்..

ஆனா அதுக்கு முன்னாடி..

தினம் தினம் " பெண்களினின் பெருமையை "
உலகத்துக்கு பறைசாத்துதே.. இந்த
மெகா சீரியல்கள்..

அட அதாங்க...

" நாத்தனாரின் கணவனை கொலை
செய்ய கூலிப்படைய அனுப்பும் அண்ணி..! "

" தோழியின் கணவனை அடைய
துடிக்கும் தோழி..! "

" சொத்துக்காக மகளாக நடித்து.,
ஏமாற்றும் பெண்..! "

" பணத்திற்க்காக மருமகளை
கொடுமைப்படுத்தும் மாமியார்..! "

" நாத்தனாரின் குழந்தையை கடத்தி.,
மறைத்து வைக்கும் அண்ணி.! "

" ஒரு வயதானவருக்கு சின்னவீடாக
இருக்கும் பெண்..! ( அவர் குடும்பத்தை
பழிவாங்கவாம்.) "

" சொத்துக்காக அண்ணியின் கருவில்
இருக்கும் குழந்தையை அழிக்கும்
நாத்தனார்.! "

இப்படி பல " மங்கையர் திலகங்களை "
நம்ம வீட்டு வரவேற்பு அறைக்கே
கூட்டிட்டு வருதே மெகா சீரியல்கள்...

அதையெல்லாம் ஒண்ணு விடாம
பாத்து., ரசிச்சி., அதை சூப்பர் ஹிட்
ஆக்கறது யாருங்க..??!

02 January 2012

லொள்ளு அவார்ட்ஸ் - 2011



















Mr.பன்னிகுட்டி ராமசாமியின் பரிந்துரையின்
பேரில்... ஸ்பெஷல் அவார்ட் goes to...


டிஸ்கி 1 : 
சிந்தனை & ஆக்கம் : நான் தானுங்கோ.
உதவி : சேலம் தேவா & எஸ்.கே.
( ஒருவேளை உதை விழுந்தா தனியா 
நான் மட்டும் வாங்க கூடாதுல்ல...
ஹி., ஹி., ஹி..!! )

டிஸ்கி 2 : 

போன வருஷம் குடுத்த அவார்ட் 
வாங்கினவங்களை பார்க்க...

.
.