சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

13 November 2010

காபி வித் அனு...!!இடம் : விஜய் Tv Studio..,

தமிழ்மணம் Top 20 பதிவர்கள் லிஸ்ட்ல
நமக்கு 8வது இடம் கிடைச்சாதால
' காபி வித் அனு ' நிகழ்ச்சியில கலந்துக்க
கூப்பிட்டு இருந்தாங்க..

நடு டிஸ்கி : இங்கே ' அனு ' என்பது
VKS தலைவலி ( Sorry ) தலைவி அனுவை
குறிக்கவில்லை.. அனுஹாசன் அவர்களை
குறிக்கிறது..

அந்த நிகழ்ச்சியில் இருந்து சில துளிகள்..

நான் : எனக்கு முன்னாடி இருக்குற
7 பேரை நிகழ்ச்சிக்கு கூப்பிடாம
என்னை கூப்பிட்டு இருக்கீங்களே.. ஏன்..?
TRP Rating Increase பண்றதுக்கு தானே..?

அனு : ரொம்ப ஓவரா போகுதே உங்க
கற்பனை..?அவங்கல்லாம் நிகழ்ச்சிக்காக
போன் பண்ணி Appointment கேட்டப்ப..
" Busy "-ன்னு சொல்லிட்டாங்க.. நீங்க
ஒருத்தர் மட்டும் தான்...

நான் : போதும்., போதும்.. இதுக்கு மேல
ஒண்ணும் சொல்ல வேணாம்..
.
அனு : ஓ.கே.. வாங்க Take போயிடலாம்..

நான் : ம்ம்.. ஓ.கே..

அனு : இப்போ நீங்க பிரபல பதிவர்
ஆயிட்டீங்க.. எப்படி சார் Feel பண்றீங்க..?

" இதுக்காக அவர் ஏன் பீல் பண்ணனும்..?
தமிழ் மக்கள் தானே பீல் பண்ணனும்..!! "

நான் : ஏய்.. யாரு அது....?

" ஹி., ஹி., ஹி..!! நான் தாங்க..
கேமராமேன்.. "

நான் : உனக்கு நேரம் சரியில்லைன்னு
நினைக்கிறேன்..

" எனக்கு மட்டுமா நேரம் சரியில்ல.,
விஜய் டி.வி-க்கு கூடத் தான் நேரம் சரியில்ல.."

நான் : சரி., உன்னை நான் அப்புறமா
கவனிச்சுக்கறேன்.. அனு நீங்க
கேள்வியை Continue பண்ணுங்க..

அனு : எப்படி சார் கொஞ்சம் கூட
" பந்தா " இல்லாம இருக்கீங்க..??

நான் : இந்த " பந்தா "., " விளம்பரம் "
இந்த வார்த்தைக்கு எல்லாம் என்ன
அர்த்தம்னே எனக்கு தெரியாது..
நீங்க முதல்ல என் Profile-ஐ படிங்க..

அனு : அப்ப இந்த Minmini.com,
Tamilblogger.com இதெல்லாம் என்ன..?

நான் : உங்களை Profile மட்டும்
தானே படிக்க சொன்னேன்..
Info Board எல்லாம் ஏன் படிக்கிறீங்க..?
ஆமா.., நீங்க ஏன் VKS தலைவி அனு
மாதிரியே பேசறீங்க..?

அனு : ஹி., ஹி., ஹி..!! பெயர் ராசியோ
என்னவோ..!! ஆமா Top 20 பதிவர்கள் List-ல
உங்க பெயரை பாத்ததும்..
உங்களுக்கு எப்படி இருந்தது..?

நான் : பெருசா ஒண்ணும் சந்தோஷப்படலை..

ஆனா ரமேஷ் Blog-ம்., பெ.சொ.வி Blog-ம்
அந்த லிஸ்ட்ல இல்ல.. அதுக்கு தான்
நான் உருண்டு., புரண்டு சந்தோஷப்பட்டேன்..

Thanks 2 தமிழ்மணம்..!!

அனு : ஆமா 1st Rank பக்கம் தான்னு
போட்டு இருக்கீங்களே..? இது
கொஞ்சம் ஓவரா இல்ல..

நான் : ஏன் அப்படி சொல்றீங்க..?

அனு : அதான் மங்குனி 2வது இடத்துல
இருக்காரே அவரை உங்களால
Overtake பண்ண முடியுமா..?

நான் : இதென்னங்க பிஸ்கோத்து மேட்டரு..

நாளைக்கே " ரஜினி தான் சூப்பர் ஸ்டாரா..? "

* " ஆமாம்" என்பவர்கள் " பாசிடிவ் "
ஓட்டு போடுங்க.

* " இல்லை" என்பவர்கள் " நெகடிவ் "
ஓட்டு போடுங்க

இப்படி கால்ல விழாத குறையா கெஞ்சி
ஒரு பதிவு போட்டா போதும்..

அதுல ஒரு 1500 ஓட்டு அள்ளிடலாம்..

அப்புறம் அடுத்த வாரம் நாம தான் No.1

அனு : கலக்குங்க வெங்கட்..

-----------------------------------------------

டிஸ்கி : மீதியை விஜய் Tvல இன்னிக்கு ( Sat )
நைட் 9 மணிக்கு பாருங்க..
.
.

46 Comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட்டின் மனைவி: சரி தூங்கினது போதும். எந்திரிச்சு வாசல் தொளிச்சு கோலம் போட்டுட்டு காபி போடுங்க. எப்ப பாரு தூக்கத்துல ஏதாச்சும் கனவு கண்டுகிட்டு உளற வேண்டியது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//டிஸ்கி : மீதியை விஜய் Tvல இன்னிக்கு ( Sat )
நைட் 9மணிக்கு பாருங்க..//

சரி இவ்ளோ நாள் விஜய் படத்தை அவாய்ட் பண்ணினோம். இனி விஜய் டிவியவா? ரைட்டு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆனா ரமேஷ் Blog., பெ.சொ.வி Blog
எல்லாம் அந்த லிஸ்ட்ல இல்ல..
அதுக்கு தான் நான் உருண்டு.,
புரண்டு சந்தோஷப்பட்டேன்..//

கண்ணா பதவி புகழ் இதல்லாம் நாங்க தேடி போறதில்லை. உங்களை மாதிரி காசு கொடுத்து வாங்குற ஆளுங்க நாங்க இல்லை..

சி.பி.செந்தில்குமார் said...

கலக்கல் காமெடி.நகைச்சுவை பதிவு போட்ட மாதிரியும் ஆச்சு,விளம்பரம் பண்ணியது மாதிரியும் ஆச்சு.உம்ம சமயோசிதம் எனக்கு வர்லையே...

எனக்கு என்ன வருத்தம்னா நீங்க என்னை விட 2 ஸ்டெப் முன்னால இருக்கீங்களே...

சி.பி.செந்தில்குமார் said...

>>>நாளைக்கே " ரஜினி தான் சூப்பர் ஸ்டாரா..? "

* " ஆமாம்" என்பவர்கள் " பாசிடிவ் "
ஓட்டு போடுங்க.

* " இல்லை" என்பவர்கள் " நெகடிவ் "
ஓட்டு போடுங்க>>>>


என்னதான் இருந்தாலும் மங்குனி அமைச்சரை இப்படி நக்கல் அடித்திருக்கக்கூடாது.(கோர்த்து விட்டாச்சு)

அருண் பிரசாத் said...

கலாய்கலாம்னு வந்தேங்க.... உங்களை நீங்களே கலாய்ச்சிகிட்டு இருக்கீங்க....

அதுக்காக உங்களை பாராட்ட முடியாது. சங்க கொள்கை ஒத்துக்காது...

அதனால,
மங்குனிய நக்கல் அடித்ததால் அதை கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும்... இறுதியில் மங்குனி தீக்குளிப்பார்... சே... குளிப்பார் இந்த வருஷத்துல 2 முறையா!

Madhavan said...

//சரி இவ்ளோ நாள் விஜய் படத்தை அவாய்ட் பண்ணினோம். இனி விஜய் டிவியவா? ரைட்டு... //

கோகுலத்துல சூரியன் இருக்குறதால, 'கோகுலம்', 'சூரியன்' ரெண்டையுமே அவாய்ட் பண்ணிக்கிட்டு இருக்கும் நம்மளலாம், .. விட்டா, அவரு 'சன்-டிவி' கூட அவாய்ட் பண்ண விட்டுடுவாரு போல இருக்கு..

மாணவன் said...

செம கலக்கல்...
" இதுக்காக அவர் ஏன் பீல் பண்ணனும்..?
தமிழ் மக்கள் தானே பீல் பண்ணனும்..!! "
சரவெடி கலாட்டா...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

நாகராஜசோழன் MA said...

//சி.பி.செந்தில்குமார் said...

கலக்கல் காமெடி.நகைச்சுவை பதிவு போட்ட மாதிரியும் ஆச்சு,விளம்பரம் பண்ணியது மாதிரியும் ஆச்சு.உம்ம சமயோசிதம் எனக்கு வர்லையே...//

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.

சேலம் தேவா said...

விஜய்டிவி இந்தமாதிரி வித்தியாசமா ஏதாவது பண்ணியே பேர் வாங்கிடறாங்க..!!
சன்டிவிய முந்திட்டாங்க பாருங்க..!!ஹி.ஹி..ஹி...

lekha said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வெங்கட்டின் மனைவி: சரி தூங்கினது போதும். எந்திரிச்சு வாசல் தொளிச்சு கோலம் போட்டுட்டு காபி போடுங்க//

ha ha ha nice comedy yaar

venkat so sweet of u!!
u were kidding urself!!!
u hav got good comedy sense ;)
keep it up :)

Arun said...

//அனு : ரொம்ப ஓவரா போகுதே உங்க
கற்பனை..?அவங்கல்லாம் நிகழ்ச்சிக்காக
போன் பண்ணி Appointment கேட்டப்ப..
" Busy "-ன்னு சொல்லிட்டாங்க.. நீங்க
ஒருத்தர் மட்டும் தான்...//

என்ன ஒரு தன்னடக்கம் !!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// வெங்கட்டின் மனைவி: சரி தூங்கினது
போதும். எப்ப பாரு தூக்கத்துல ஏதாச்சும்
கனவு கண்டுகிட்டு உளற வேண்டியது.. //

வெங்கட் : இரும்மா இன்னும் கொஞ்சம்
தூங்கிட்டு வர்றேன்..

மனைவி : எதுக்கு..?

வெங்கட் : ரமேஷூம் பிரபல பதிவர்
ஆகற மாதிரி கனவு எதாவது வருதான்னு
பாக்கறேன்..

மனைவி : ரமேஷா..? பிரபல பதிவரா..?
ஹி., ஹி., ஹி..!! முதல்ல அவரை
பதிவு எழுத சொல்லுங்க..

வெங்கட் : அவர் பிளாக்ல இருக்கறதெல்லாம்
பதிவு இல்லையா..?

மனைவி : ஓ.. அதெல்லாம் பதிவா..?
நான் " ஆல்பம்னு " நினைச்சேன்..

நான் : ஓ.. முதல்ல அவர் பதிவர் ஆகட்டும்..
பிரபல பதிவர் ஆகறதை பத்தி அப்புறம்
யோசிக்கலாம்கிற..

மனைவி : அதே.. அதே..!!

சிங்கப்பூர் ஆல்பம்
தூத்துக்குடி ஆல்பம்

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// கண்ணா பதவி புகழ் இதல்லாம் நாங்க
தேடி போறதில்லை. //

பதவி, புகழ் மட்டுமா உங்கள
தேடி வருது..?

தர்ம அடி உங்கள
தேடி வருது..

லஞ்ச ஒழிப்பு போலீஸ் உங்கள
தேடி வருது..

திருட்டு கேஸ்ல போலீஸ் நாய்
உங்கள தேடி வருது..

இவ்ளோ ஏன்...

பிளாக்கை இழுத்து மூடப் போறியா..?
இல்லையான்னு கூட கொலை மிரட்டல்
உங்கள தேடி வருது..

வெங்கட் said...

@ சி.பி.செந்தில்.,

// எனக்கு என்ன வருத்தம்னா நீங்க என்னை
விட 2 ஸ்டெப் முன்னால இருக்கீங்களே... //

இதுக்கெல்லாம் பொறாமை படக்கூடாது..
பெருந்தன்மையா இருக்க கத்துக்கணும்.

இப்ப மங்குனி கூடத்தான் என்னை விட
6 Step முன்னாடி இருக்காரு..

அதை பாத்து எனக்கு பொறாமையா
இருந்ததே.. அதை நான் என்னிக்காவது
வெளியே சொல்லி இருப்பேனா..?

Never..!!

வெங்கட் said...

@ அருண்.,

// மங்குனிய நக்கல் அடித்ததால் அதை கண்டித்து
மாபெரும் போராட்டம் நடத்தப்படும்...
இறுதியில் மங்குனி தீக்குளிப்பார்...
சே... குளிப்பார் இந்த வருஷத்துல 2 முறையா!
//

யாராவது இதை ஒரு தடவை நல்லா
படிச்சி பாத்து மங்குனியை நக்க்க்க்க்க்கல்
அடிச்சது யாருன்னு சரியா தீர்ப்பு சொல்லுங்கப்பா..

மாலா said...

@ வெங்கட்

// நாளைக்கே " ரஜினி தான் சூப்பர் ஸ்டாரா..? "

* " ஆமாம்" என்பவர்கள் " பாசிடிவ் "
ஓட்டு போடுங்க.

* " இல்லை" என்பவர்கள் " நெகடிவ் "
ஓட்டு போடுங்க //

இதுக்கு ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க..

" என் பிளாக் மொக்கையாவா இருக்கு? "

* " ஆமாம்" என்பவர்கள் " பாசிடிவ் "
ஓட்டு போடுங்க.

* " இல்லை" என்பவர்கள் " நெகடிவ் "
ஓட்டு போடுங்க அப்படின்னு ஒரு
பதிவு போட்டா.

பதிவுலகமே.( ஏன் உலகமே ) திரண்டு வந்து
" ஆமாம்னு " ஓட்டு போட்டுடும்ல.

ஓட்டை எல்லாம் எண்ணி முடிக்க முடியாது.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

haiyyo haiyyooo

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ஆனா ரமேஷ் Blog., பெ.சொ.வி Blog
எல்லாம் அந்த லிஸ்ட்ல இல்ல..
அதுக்கு தான் நான் உருண்டு.,
புரண்டு சந்தோஷப்பட்டேன்..//

ரமேஷ், விடறதில்லை, ஆமா!
ஆரம்பிக்கறோம், உடனே ஆரம்பிக்கறோம் English Scent.
இதில முதல் ரெண்டு இடம் நமக்குதான்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//டிஸ்கி : மீதியை விஜய் Tvல இன்னிக்கு ( Sat )
நைட் 9 மணிக்கு பாருங்க..//

நல்ல வேளை, நான் அந்த நேரத்துல பஸ்ல இருந்தேன். தப்பிச்சேன்.

philosophy prabhakaran said...

ம்ம்ம்... கூடிய விரைவில் முதலிடம் பிடிக்க வாழ்த்துக்கள்...

ரசிகன் said...

@venkat

தமிழ்மணம் Toப் 20 ல் இடம் பெற்றதற்க்கு வாழ்த்துக்கள்..

Hearty congrats..

(வெற்றி மீது வெற்றி வந்து
உங்களைச் சேரும்..
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம்
எங்களைச்(VKS) சேரும்.. )

வெங்கட் said...

@ மாதவன்.,

// ' சன்-டிவி' கூட அவாய்ட் பண்ண
விட்டுடுவாரு போல இருக்கு.. //

ஓ.. நீங்க இன்னும் ' சன் டி.வி '
பாக்கறதை நிறுத்தலையா..?!!
ஐய்யோ பாவம்..!!

என்னால மக்கள் ' சன் டி.வி '
பாக்கற கொடுமையில இருந்து
மீள்றாங்கன்னா.. நான் தொடந்து
இந்த சேவையை செஞ்சிட்டே இருப்பேன்..

வெங்கட் said...

@ தேவா.,

// விஜய்டிவி இந்தமாதிரி வித்தியாசமா
ஏதாவது பண்ணியே பேர் வாங்கிடறாங்க..!! //

ஏதோ விஜய் டி.வியை முன்னுக்கு
கொண்டு வர நம்மாள ஆன முயற்சி..!!

ஹி., ஹி., ஹி...!!

இம்சைஅரசன் பாபு.. said...

நானும் உண்மைன்னு நம்பி நேத்து VIJAY T V பார்க்க இருந்துட்டேன் .......பல்பு ......

வெங்கட் said...

@ லேகா.,

// venkat so sweet of u!!
u were kidding urself!!!
u hav got good comedy sense ;)
keep it up :) //

ஹி., ஹி., ஹி..!!
ரொம்ப நன்றிங்க..

உங்களுக்கு ரொம்ப நல்ல மனசுங்க.
அதான் மனசு விட்டு பாராட்டுறீங்க..
ஆனா ரொமப் சுருக்கமா பாராட்டுறீங்க..

அடுத்த தடவை கரெக்ட் பண்ணிக்கோங்க..

( நான் எழுதி குடுத்த அந்த பேப்பர்
இருக்குல்ல.. )

வெங்கட் said...

@ Arun.,

// என்ன ஒரு தன்னடக்கம் !! //

அது நம்ம Nature..

AVM சரவணன் சாருக்கு அடுத்தபடியா
தன்னடக்கமா பேசுறது யாருன்னா..
எல்லோரும் என்னை தான் சொல்றாங்க..

ஆனா நான் இதையெல்லாம் வெளியே
சொல்லிக்கிறது இல்ல..

வெங்கட் said...

@ மாலா.,

// பதிவுலகமே.( ஏன் உலகமே ) திரண்டு வந்து
" ஆமாம்னு " ஓட்டு போட்டுடும்ல. //

ரொம்ப கற்பனை வளம் ஜாஸ்தி
உங்களுக்கு..

அப்படி நான் ஒரு பதிவு போட்டா
அது ஒரு சாதனை பதிவா இருக்கும்..

பின்ன 5 பாசிடிவ் ஓட்டும்.,
5,00,000 நெகடிவ் ஓட்டும் இருக்கும்ல..

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// ரமேஷ், விடறதில்லை,
உடனே ஆரம்பிக்கறோம் English Scent.
இதில முதல் ரெண்டு இடம் நமக்குதான்! //

@ ரமேசு..,

அவர் என்ன சொல்றார் புரியுதா..?
புரியலையா..? இதோ விளக்கம்..
( அது எங்க கடமையாச்சே.. )

அவர் பிளாக் மாதிரியே உங்களுதும்
மொக்கையாம்.. இந்த ஜென்மத்துல
உங்க பிளாக் தமிழ்மணம் Top 20 Blogs
லிஸ்ட்ல வராதாம்..

' English Scent ' இந்த மாதிரி எதாவது
ஆரம்பிச்சி முதல் ரெண்டு இடம்
வந்தாத்தான் உண்டுன்னு அவர்
சிம்பாளிக்கா சொன்னதை..
நாங்க உங்களுக்கு தெளிவா
எடுத்து ( போட்டு ) குடுக்கறோம்..

நாராயணா.!! நாராயணா..!!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// வெற்றி மீது வெற்றி வந்து
உங்களைச் சேரும்.. அதை வாங்கித் தந்த
பெருமை எல்லாம் எங்களைச்(VKS) சேரும். //

எழுந்திரிங்க ரசிகன்.,
எழுந்திரிங்க ரசிகன்.,
இன்னும் என்ன கனவு..?
இன்னும் என்ன தூக்கம்...??


நான் முழிச்சிக்கிட்டேன்..
நீங்க இன்னும் முழிக்கலை..?

ஹி., ஹி., ஹி..!!

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//கண்ணா பதவி புகழ் இதல்லாம் நாங்க தேடி போறதில்லை.//

ஏன்னா நீங்க தேடி போனா அதுங்க ஓடி போறது..

//உங்களை மாதிரி காசு கொடுத்து வாங்குற ஆளுங்க நாங்க இல்லை.//

நீங்க காசு கொடுத்தாலும் உங்களுக்கு தர ஆள் இல்லை.

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//வெற்றி மீது வெற்றி வந்து
உங்களைச் சேரும்..
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம்
எங்களைச்(VKS) சேரும்..//

ஒரு ஊர்ல ஒரு வைரஸ் இருந்துச்சாம் அது ஊர்ல இருக்க எல்லாரையும் தாக்கி உடம்பு சரி இல்லாம போக வச்சிதாம். ஒரு விஞ்ஞானி அதை கொல்ல மருந்து கண்டு பிடிச்சாரம். அதானல உலகமே அவரை பாராட்டி நோபல் பரிசு கொடுக்க ஏற்ப்பாடு செய்தாங்களாம். அப்போ அங்க வந்த ஐந்து பேர் இந்த மருந்து கண்டு பிடிக்க காரணமா இருந்த கிருமிக்கு தான் நோபல் பரிசு தரணும் வாதாடினாங்களாம். அந்த ஐந்து பேர் தான் இப்பொ VKS மெம்பர்ஸ் அப்படினு நான் சொல்ல மாட்டேன்பா...

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்

//ரொம்ப கற்பனை வளம் ஜாஸ்தி
உங்களுக்கு..

அப்படி நான் ஒரு பதிவு போட்டா
அது ஒரு சாதனை பதிவா இருக்கும்.. //

பாஸ் கற்பனை எல்லாம் இல்லை. அவங்க ரைட்டா தான் சொல்றாங்க. உலகத்துல இருக்க எல்லாரும் VAS சப்போர்ட்.. அதனால நீங்க எது சொன்னாலும் ஆமாம் மட்டும் தான் சொல்லுவாங். அதுவும் இல்லாம அவங்களுக்கு தெரியும் சூரியனை பார்த்து சந்திரன்னு சொன்னாலும் சந்திரன் சூரியன் ஆகதுன்னு.

lekha said...

***terror

OMG
wt a story man!!!
it suites all situations !!!
grttttt
did u copy this story frm somewhere?
bcoz seems to b a short story heared from JJ or rajini ;)


***venkat

hmmm u r all super seniors
i m ur junior
just now learning from u ;)

"அவர் என்ன சொல்றார் புரியுதா..?
புரியலையா..? இதோ விளக்கம்..
( அது எங்க கடமையாச்சே.. )"

vazhgha um thondu!!!

i m getting goosebumps after seeing ur service ha ha ha

வெங்கட் said...

@ டெரர்.,

// அந்த ஐந்து பேர் தான் இப்பொ VKS மெம்பர்ஸ்
அப்படினு நான் சொல்ல மாட்டேன்பா... //

ஹா., ஹா., ஹா..!!
இது சூப்பரு..!!

ஆமா VKS-ல அஞ்சு பேரா இருக்காங்க..??!

நமக்கு பயந்து தலைமறைவா இருக்கிற
அவங்க தலைவியையும் கணக்குல
சேர்த்துகிட்டீங்களோ..?!!

வெங்கட் said...

@ இம்சை..,

// நானும் உண்மைன்னு நம்பி நேத்து
VIJAY T V பார்க்க இருந்துட்டேன்..
பல்பு...... //

ஹி., ஹி., ஹி..!!

எதுக்கும் அடுத்த வாரம் வருதான்னு
Wait பண்ணி பாருங்களேன்..

வெங்கட் said...

@ லேகா.,

// did u copy this story frm somewhere?
bcoz seems to b a short story heared from JJ or rajini ;) //

Good Question..!! - ஆனா
ஆள் மாத்தி கேட்டுட்டீங்க..?

" இது டெரர் சொன்ன கதை மாதிரி
இருக்கே.. காப்பி அடிச்சீங்களான்னு..? "

ஜெ.ஜெ.கிட்டயோ., ரஜினிகிட்டயோ
போயில்ல கேட்கணும்.."

நாங்கல்லாம் Class Room-ல டீச்சர்
Board-ல எழுதி போடுறதையே
எங்க நோட்ல எழுத மாட்டோம்..

அப்புறம் டீச்சரை பாத்து காப்பி அடிச்ச
மாதிரி ஆயிடும்ல..

Mohamed Faaique said...

intha pathivula enakku romba pudichcha aalu antha "camera man" thaanunga...

ப.செல்வக்குமார் said...

//நடு டிஸ்கி : இங்கே ' அனு ' என்பது
VKS தலைவலி ( Sorry ) தலைவி அனுவை
குறிக்கவில்லை.. அனுஹாசன் அவர்களை
குறிக்கிறது..//

பதிவுலக வரலாற்றில் போடப்பட்ட டிஸ்கிகளில் இந்த டிஸ்கிதான் என்னை மிகவும் கவர்ந்தது ..

ப.செல்வக்குமார் said...

//ஆனா ரமேஷ் Blog-ம்., பெ.சொ.வி Blog-ம்
அந்த லிஸ்ட்ல இல்ல.. அதுக்கு தான்
நான் உருண்டு., புரண்டு சந்தோஷப்பட்டேன்..//

கலக்கிட்டீங்க தல ., எனக்கும் இதே சந்தோசம் தான் ..!! ஆனா ரமேஷ் அடிக்கடி நானும் பிரபல பதிவர் அப்படின்னு சொல்லிக்கரதுதான் என்னால தங்க முடியல ..

பிரியமுடன் ரமேஷ் said...

//அவங்கல்லாம் நிகழ்ச்சிக்காக
போன் பண்ணி Appointment கேட்டப்ப..
" Busy "-ன்னு சொல்லிட்டாங்க.. நீங்க
ஒருத்தர் மட்டும் தான்...

நான் : போதும்., போதும்.. இதுக்கு மேல
ஒண்ணும் சொல்ல வேணாம்..

ha ha ha

ஆர்.கே.சதீஷ்குமார் said...

SUPER...SUPER...SUPER...

கே.ஆர்.பி.செந்தில் said...

கலக்குங்க...

polurdhayanithi said...

parattugal
polurdhayanithi

அனு said...

@ப.செல்வக்குமார்

//பதிவுலக வரலாற்றில் போடப்பட்ட டிஸ்கிகளில் இந்த டிஸ்கிதான் என்னை மிகவும் கவர்ந்தது //

தம்பி,நான் இல்லைன்ற தைரியத்துல இந்த கமெண்ட்டை போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன்.. நான் வந்துட்டேன்!!! சீக்கிரம் ரப்பர் போட்டு அழிச்சுடுங்க..

To All,
சிங்கம் is Back.. சீண்டாதீங்க!!!

வெங்கட் said...

@ அனு.,

// சிங்கம் is Back.. சீண்டாதீங்க!!! //

போன பதிவுலயும் கடைசி Comment
இந்த பதிவுலயும் கடைசி Comment..

நடுவுல Comment போட்டா
கும்மிடுவாங்கன்னு., வேணும்னே
கடைசியா Comment போட வேண்டியது..

அப்புறம்..
" நானும் ரவுடி தான்..!
நானும் ரவுடி தான்னு..!! "
சவுண்ட் விட வேண்டியது..