சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

31 August 2010

ஏன்..? எதுக்கு..??



















உங்களுக்கெல்லாம் ஒரு
சந்தோஷமான விஷயம்..

எனக்கு 10 நாள் லீவ் வேணும்..

ஏன்..? எதுக்கு..??
அதை அப்புறமா சொல்றேன்..

முதல்ல
என் லீவ் லெட்டரை பிடிங்க.,

Respected Sir / Madam.,

As I'm Suffering from Fever....

( சே... Leave Letter-ன்னாலே
இப்படிதான் எழுத வருது..!! )

சரி.. Net-ல வேற எதாவது
Format கிடைக்குமான்னு
நண்பர் வசந்தை கேட்டப்ப
அவர் ஒரு மெயில் அனுப்பினார்.,

அடேங்கப்பா..!! எத்தனை Formats..!!!
பின்றாங்கப்பா..

நோட் பண்ணிக்கோங்க..
Use ஆகும்..

* குடும்பத்தோட ஊருக்கு போயி
நிலத்தை விக்கணுமா..?
அதுக்கு இப்படி எழுதணும்..

" Since I have to go to my village
to sell my land along with my Wife,
Please sanction me one-week leave."


* குலதெய்வம் கோவில்ல பையனுக்கு
மொட்டை போட...

" As I want to shave my Son's head,
Please leave me for two days.."


* துக்கமான Half Day Leave..

" Since I've to go to the cremation ground
at 10 o-clock and I may not return,
please grant me half day casual leave "


* துக்கமான 10 நாள் Leave..

"As my Mother-in-law has expired and
I am only one responsible for it,
Please grant me 10 days leave."


* மனைவிக்கு உடம்பு சரியில்லையா..

" My wife is suffering from sickness and
as I am her only husband at home
I may be granted leave ".


* Fever-க்கு லீவ்...

" I am suffering from Fever,
Please declare one day Holiday."


* தலைவலிக்கு...

" As I am studying in this school.,
I am suffering from headache.
I request you to leave me today "


* Letter எழுத பயிற்சி..

" I am in well here and
hope you are also in the same well."


* வேலைக்கு Apply பண்ண..

" This has reference to your advertisement
calling for a ' Typist and an Accountant - Male or Female'...

As I am both (!!) for the past several years and
I can handle both with good experience,
I am applying for the post. "

-----------------------------------------------------------------

நேத்து நைட் : 8 pm

என் மொபைல் Ring ஆச்சு..
எடுத்து பேசினா..,
லைன்ல நம்ம VAS சங்கத்
தளபதி டெரர் பாண்டியன்..

டெரர் : ஹலோ பாஸ்., என்ன
திடீர்னு 10 நாள் லீவ்..?

நான் : நேத்து தான் நம்ம
Blog Stats பார்த்தேன்..

டெரர் : சரி..,

நான் : அப்ப தான் ஆப்பிரிக்கா கண்டத்துல
நம்ம Blog-ஐ யாருமே படிக்கறதில்லைங்கற
விஷயம் தெரிஞ்சது..,

டெரர் : ஓ.. அதனால தான் அதை
" இருண்ட கண்டம்னு " சொல்றாங்களோ..?!!

நான் : அதான் ஆப்பிரிக்காவுக்கு
10 நாள் Tour போலாம்னு.

டெரர் : நம்ம Blog Promotional Tour -ஆ..?
என்ன பாஸ் இது..?
" நெருப்புக்கு எதுக்கு தீப்பெட்டி..? "

நான் : No., No., இது Awareness Tour..!!
.
.

28 August 2010

உள்குத்து ( ரிவர்ஸ் ஸ்விங் )

















டிஸ்கி : இந்த பதிவு
அனைத்துலக மனைவிகளின் சார்பாக..,

" கணவன் எது செஞ்சாலும்
அதுல ஒரு அர்த்தம் இருக்கும்..!! "
இப்படி எல்லாம் யாருமே
சொன்ன மாதிரி தெரியல...

அர்த்தம் வேணா இல்லாம
இருக்கலாம்.. - ஆனா
உள்குத்து இருக்குமோன்னு சந்தேகம்....


1. எப்ப பார்த்தாலும் Tvல
National Geogaraphy., Animal Planet,
இந்த மாதிரி Channel-ஐயே
பார்க்கறாங்களே...

அது..

** பொது அறிவு வளர்த்துக்கவா..?

இல்ல

** போன ஜென்ம பந்தமா..??


2. நம்மள எப்ப சினிமாவுக்கு
கூட்டிட்டு போனாலும்
English படம்., Hindi படத்துக்கே
கூட்டிட்டு போறாங்களே..

அது..

** அவங்க படம் பார்க்கவா..?

இல்ல

** நம்மக்கிட்ட படம் காட்டவா..??


3. பசங்களுக்கு Homework
சொல்லி தரும் போது..,
' நானெல்லாம் படிக்கும் போது
100 மார்க் எடுத்தேன்னு '
அடிக்கடி சொல்றாங்களே..

அது...

** உண்மையான Mark-ஆ..?

இல்ல

** இவங்க Total Mark-ஆ..??


4. சிக்கலான பிரச்சினைன்னா
நம்ம கிட்ட ஐடியா கேட்கறாங்களே..

அது...

** நம்ம திறமை மேல உள்ள
நம்பிக்கையா..?

இல்ல

** அந்த விஷயம் சொதப்பிட்டா
நம்ம மேல பழி போடவா..??


5. " 2 நாள் எங்க அம்மா வீட்ல
இருந்துட்டு வர்றேன்னு ' சொன்னா..
உடனே சோகமாயிடறாங்களே..

அதுக்கு காரணம்...

** நாம ஊருக்கு போறோம்னா..?

இல்ல

** 2 நாள்ல திரும்பி வந்துடுவோம்னா..??


பின் டிஸ்கி :

பொண்ணுங்களை யார் கிண்டல்
பண்ணினாலும் எனக்கு பிடிக்காது..
அது நானாவே இருந்தாலும்..!!

அதனால தான்
என் உள்குத்து பதிவுக்கு எதிர்பதிவு இது..

ஹி., ஹி., ஹி..!!
.
.

27 August 2010

உள்குத்து...!!!















டிஸ்கி : இந்த பதிவு
அனைத்துலக கணவர்களின் சார்பாக..,

" மனைவி எது செஞ்சாலும்
அதுல ஒரு அர்த்தம் இருக்கும்..!! "
இப்படின்னு ஒரு பெரியவர்
சொல்லி இருக்காரு.. -

அது சரி..., ஆனா..,
அதுல ஒரு உள்குத்தும்
இருக்குமோன்னு நான்
சந்தேகப்படறேன்..

1. Function-க்கு கிளம்பறப்ப
எவ்ளோ அழகான Dress-ஐ
நாம போட்டு இருந்தாலும்..

' இது நல்லாவே இல்லைங்கன்னு '
சொல்லி...., நம்ம பீரோல இருந்து
வேற Dress-ஐ அவங்களே Select
பண்ணி தர்றாங்களே...

அது...

** நாம அழகா தெரியவா..?

இல்ல

** நம்மகூட வரும்போது அவங்க
Better-ஆ தெரியவா..??


2. நாம எவ்ளோ சொல்லியும்
கேட்காம.., " சுறா ", " அசல் "
இந்த மாதிரி படத்துக்கு நம்மள
கூட்டிட்டு போக சொல்றாங்களே..

அது..

** படத்தை பார்க்கவா..?!!

இல்ல

** படத்தை பார்க்க முடியாம.,
நாம படற அவஸ்தையை பார்க்கவா..?!


3. பசங்களுக்கு " Homework " சொல்லி
தர சொல்றாங்களே..

அது...

** பசங்க Homework முடிக்கவா..?

இல்ல

** பசங்ககிட்ட நம்ம Image-ஐ
முடிக்கவா..??


4. 'அடுப்புல பால் வெச்சிருக்கேன்
ஒரு நிமிஷம் பார்த்துக்கோங்கன்னு '
அப்பப்ப ஒரு பெரிய வேலை
நமக்கு தர்றாங்களே...

அது..

** பால் பொங்காம இருக்கவா..?

இல்ல

** பால் பொங்கின அப்புறம்
நம்மள பொங்கவா..??


5. ' 2 நாள் எங்க அம்மா வீட்ல
இருந்துட்டு வர்றேன்னு ' போனா..
அங்கேயிருந்து ஒரு நாளைக்கு
3 - 4 தடவை நமக்கு போன்
பண்றாங்களே..

அதுக்கு காரணம்...

** நம்ம மேல உள்ள அன்பா..?

இல்ல

** நம்ம மேல உள்ள நம்பிக்கையா..??
.
.

24 August 2010

ராக்கி...!!





















அப்ப நான் B.Com 3rd Year..,
அன்னிக்கு Raksha Bandhan..

எங்க Junior கதீஜா
எனக்கு ராக்கி கட்டி விட்டாங்க..

நான் : Thanks.,

கதீஜா : என்னண்ணா வெறும் Thanks
மட்டும் தானா..??

நான் : பின்ன..,

கதீஜா : தங்கச்சிங்க ராக்கி கட்டினா.,
அண்ணங்க 50, 100-ன்னு தரணும்..

( 5 ரூபாய்க்கு ஒரு கயித்தை கட்டிட்டு
50 ரூபாய்க்கு மேட்டர் போடறீயே...!!
இவ்ளோ புத்திசாலியா நீ..?! )

நான் : சரி., ஜனாவுக்கு ராக்கி கட்டினியா..?

கதீஜா : கட்டிட்டேன்..

நான் : என்ன குடுத்தான்..?

கதீஜா : அவருக்கு சேர்த்து உங்ககிட்ட
வாங்கிக்க சொல்லிட்டாரு..

( அடப்பாவி., நான்தான் சிக்கிட்டேனா..?!! )

ம்ம்.. வேற வழி..?!!

சரின்னு மனசை தேத்திட்டு
என் பாக்கெட்ல கையை விட்டு..

ரெண்டு 50 பைசா எடுத்து
கதீஜா கையில குடுத்துட்டு
சொன்னேன்..

" Happy Raksha Bandhan.. "


டிஸ்கி : வேற யாராவது எனக்கு
ராக்கி கட்டணுமா..?!! அப்ப
ராக்கியும்., Gift-ம் அனுப்புங்க..

என்கிட்ட நிறைய " 50's " இருக்கு..
.
.

21 August 2010

மெகா Offer...!!!
















1st Half :

டிஸ்கி : இது நம்ம 134-வது Follower
சந்தோஷ் எனக்கு அனுப்பின மெயில்.
இதுல Spelling Correction & Alignment
மட்டும் நான் பண்ணி இருக்கேன்..

ஹாய் வெங்கட்.,

என்ன மனுசன்யா நீங்க..?
பயங்கரமா எழுதுறீங்க.

நான் சினிமாவுல இருக்கேன்
என் வேலையே இந்த மாதிரி
எழுதுறதுதான். - ஆனா
உங்ககிட்ட பத்து வருஷம்
பயிற்சி எடுத்தாலும் என்னால
இப்பிடி எழுத முடியாது.

எல்லா பதிவும் செம கலக்கலா இருக்கு
எல்லா பதிவுலயும் ஒரு கலர் இருக்கு

இதை யார் காப்பி பண்ணி
எங்க போட்டாலும்..,
இந்த கலரை வச்சி ஈஸியா
கண்டு புடிச்சிடலாம்

'' உங்க அளவுக்கு திறமை இருந்திருந்தா
நான் வெற்றி இயக்குனர் லிஸ்ட்ல
எப்பவோ சேர்ந்து இருப்பேன்.. "

இப்ப கூட இப்பிடியே நீங்க எழுதுறத
படிச்சுகிட்டு இருந்தா சீக்கிரம்
இயக்குனர் ஆயிடுவேன்.

முக்கியமா ஒரு விஷயம்
எப்புடி உருவாக்குனீங்க
VAS., VKS -ன்னு ரெண்டு சங்கம்..?

ம்ம்.., ரெண்டு சங்கம்.,
உங்களையே எதிர் பார்த்துக்கிட்டு
இருக்க ரசிகர் கூட்டம்..

கலக்குங்க.. வாழ்த்துக்கள் பல

அன்புடன்
R.சந்தோஷ்
cinemakkaaran.blogspot.com


இதபாருங்க சந்தோஷ்..
இப்படி ( கம்மியா ) புகழ்ந்தா
எனக்கு எப்பவுமே பிடிக்காது..

ஹி., ஹி., ஹி..!!

-------------- I N T E R V A L ------------------

























2nd Half :

நேத்து நைட் : 8 pm

என் மொபைல் Ring ஆச்சு..
எடுத்து பேசினா..,

லைன்ல Steven Spielberg.
( " ஜுராசிக் பார்க் " படம்
எடுத்தாரே அவரே தான்.. )

Steven : ஹலோ வெங்கட்..,
எப்படி இருக்கீங்க..

நான் : நல்லா இருக்கேன்..

Spielberg : நம்ம Company-க்கு
நீங்க ஒரு படம் பண்ணி தரணும்..

நான் : என்ன நானா..?

Spielberg : பட்ஜெட் 2000 கோடி..
Story Discuss-ஐ எப்ப வெச்சுக்கலாம்..??

நான் : அது வந்து...

Spielberg : என்ன யோசிக்கறீங்க..??

நான் : நம்மள பத்தி யாரோ உங்ககிட்ட
தப்பா சொல்லி இருக்காங்கன்னு
நினைக்கிறேன்..

Spielberg : இல்ல வெங்கட்..,
எனக்கே உங்க திறமையை
பத்தி நல்லா தெரியும்..

நான் : ம்ம்... இப்ப Matter அதில்ல..,
இந்த மாதிரி Low Budget படமெல்லாம்
நான் பண்ண மாட்டேனே..!!
So.., I'm Very Sorry Spielberg..!!

உடனே Spielberg..
"Feeling" berg ஆயிட்டாரு..

இப்படிதான் Spielberg-க்கு
ஒரு மெகா Offer கை நழுவி போச்சு..!!

-------------------- THE END ---------------------
.
.

19 August 2010

சூப்பர் Captain..!!

















ஒரு அமெரிக்க Navy கப்பல்
கடல்ல போயிட்டிருந்தது..

அந்த கப்பலோட Captain
ரொம்ப புத்திசாலி..

( அதனால தானே அவ்ளோ
பெரிய கப்பலுக்கு Captain-ஆ
போட்டிருக்காங்க.. )

கப்பலோட மேல் தளத்துக்கு
வந்த அவரு பைனாகுலர் எடுத்து
கடலை ஒரு Look விடறாரு..

அப்படியே Shock ஆயிடறார்..

எதிர் திசையில இன்னொரு
கப்பல் வர்ற வெளிச்சம்
தெரியுது..

உடனே அவர் Master Brain
Quick-ஆ Calculation போடுது..

" Oh.. My God...!!
இப்படியே போனா
ரெண்டு கப்பலும் மோதிக்குமே..!! "

உடனே ரேடியோ மைக்கை எடுத்து
எதிர் திசையில இருக்கவங்க கூட
பேச ஆரம்பிக்கறாரு..

" ஹலோ Mike Testing... 1.,2.,3.. "

" ஹலோ..!! இங்கே என்ன
பொதுக்கூட்டமா நடக்குது..?
சொல்ல வந்ததை சொல்லுங்க சார்.."

" ம்ம்.. உங்க Direction-ஐ North பக்கமா
15 Degree Change பண்ணிக்கோங்க..
அப்பதான் மோதலை தவிர்க்க முடியும்..!! "

" முடியாது.., நீங்க உங்க Direction-ஐ
South பக்கமா 15 Degree Change
பண்ணிக்கோங்க.. "

" நீங்க யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்க
தெரியுமா..?!! "

" யாரா இருந்தாலும் இதுதாங்க
பதிலு..!! "

" நான் அமெரிக்க Navy Ship
Captain.., இப்ப சொல்லுங்க..,
உங்களால North பக்கம் 15 Degree
தள்ளி போக முடியுமா..? முடியாதா..?? "

" ஏய்.. லூசாப்பா நீ..?!!
சும்மா தள்ளிப்போ.,
தள்ளிப்போன்னு
சொல்லிட்டே இருக்கே..

நல்லா பாரு..
இது Light House..!! "


டிஸ்கி : 1995-ல U.S Navy Ship .,
Canada கரையோரமா போனப்ப
நடந்த உண்மை சம்பவம் இது..

அமெரிக்காகாரங்க இவ்ளோ
அதி புத்திசாலிகளா..??!!

சொல்லவே இல்ல....!!

( அது என்னமோ தெரியல..
அமெரிக்காகாரங்கள கலாய்ச்சா
மனசுக்கு சந்தோஷமா இருக்கு..!! )

ஹி., ஹி., ஹி..!!
.
.

16 August 2010

சுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3


இது சுதந்திர தின விழா
பேச்சுப்போட்டியில்
3rd Std படிக்கும் என் மகன் பேசியது..

தலைப்பு : சுதந்திர இந்தியாவின் சாதனைகள்..

இந்தியா - ஒரு மிகப்பெரிய
ஜனநாயக நாடு...
அதுவே ஒரு சாதனை தான்..

குண்டூசி முதல் ராக்கெட் வரை
நாம தயாரிக்காத பொருளே இல்ல..

விளையாட்டு முதல் விண்வெளி வரை
நாம சாதிக்காத Area-வே இல்ல..

ஆஸ்கார் முதல் நோபல் வரை
நாம வாங்காத அவார்டே இல்ல..

இது மாதிரி
இந்தியாவோட சாதனைகளை
வரிசையா அடுக்கினா
சீனப்பெருஞ்சுவரே
சிறுசா போயிடும்...

நிலாவுல கால் வெச்ச அமெரிக்காகாரங்க
இன்னிக்கு நம்மள பாத்து
மூக்கு மேல விரலை வெக்கிறாங்க..

ஏன்னா..
நிலாவுல தண்ணி இருக்குங்கறதை
கண்டுபிடிச்சதே நம்ம இந்தியா தான்..

இப்ப நாம எல்லா துறையிலயும்
எவ்ளோ முன்னேறி இருக்கோம்னு
பார்க்கலாம்...

முதல்ல கல்வி துறை :

எல்லோரும் படிக்கணும்னு
ஆசைப்பட்டார் மகாகவி பாரதி.,
அவர் ஆசையை நிறைவேத்திட்டு
இருக்கு நம்ம வித்யா பாரதி...

நாம சுதந்திரம் வாங்கினப்ப
இந்தியாவுல படிச்சவங்க
வெறும் 12%.. ஆனா இப்ப
அது 80% எட்டி பார்க்குது..

அமெரிக்காவுல
நாசா விஞ்ஞானிகள்ல 36 % இந்தியர்கள்.,

Bill Gates கம்பியூட்டர் கம்பெனியில
Work பண்றவங்கல்ல 34% இந்தியர்கள்..

ஒரு தடவை Bill Gates-கிட்ட
Tv-காரங்க கேட்டாங்களாம்...

" உங்க கம்பெனியில இருந்து
இந்தியாகாரங்களை எல்லாம்
வேலையை விட்டு தூக்ககுங்கன்னு
சொன்னா என்ன பண்ணுவீங்கன்னு..? "

அதுக்கு Bill Gates சொன்னாராம்..,

" இந்தியாகாரங்களை தூக்க மாட்டேன்.,
என் கம்பெனியை தூக்கிட்டு
இந்தியாவுக்கு போயிடுவேன்னு..!! "
சொன்னாராம்...

நம்மள அடிமையா வெச்சிருந்த
இங்கிலீஸ்காரங்ககிட்டயே
இங்கிலீஸை கத்துகிட்டு
இன்னிக்கு நாம உலகம்
முழுக்க கலக்கிட்டு இருக்கோம்..



அடுத்து மருத்துவ துறை:

பெரியம்மை - போயிந்தே...,
காலரா - போயே போச்சு...,
போலியோ - It's Gone...

இந்த மாதிரி நோய்ல இருந்தெல்லாம்
நம்ம இளைய தலைமுறைய காப்பத்திட்டாங்க..

அது மட்டுமா
32 வயசா இருந்த நம்ம இந்தியரின்
சராசரி ஆயுள் இப்போ 65 வயசா
மாறி இருக்கு..

Treatment-காக வெளிநாடு போன
காலம் எல்லாம் மாறி.,
இப்ப வெளிநாட்டுக்காரங்க தான்
Treatment-க்காக இங்கே வர்றாங்க..

அதுக்கு காரணம் நம்ம
மருத்துவ வளர்ச்சி..


அடுத்து விவசாயத் துறை :

நம்ம நாட்ல 100 கோடி மக்கள் இருக்காங்க.
அதனால உணவு உற்பத்தியை பெருக்க
பல புரட்சிகள் நடந்திருக்கு..

விவசாயத்தில - பசுமை புரட்சி
பாலுக்கு - வெண்மை புரட்சி
எண்ணைக்கு - மஞ்சள் புரட்சி
மீன் வளத்துக்கு - நீலப் புரட்சி

இப்படி நாம கலர், கலரா
புரட்சி பண்ணி இருக்கோம்..


அடுத்து ராணுவத் துறை :

உலகத்திலேயே 4வது பெரிய ராணுவம்
நம்ம ராணுவம் தான்

நாம யார் கூடவும் சண்டைக்கு
போனதும் இல்ல..
நம்ம கூட சண்டைக்கு வந்தவங்கள
சும்மா விட்டதும் இல்ல..

நம்மகிட்ட
சமாதான புறாவும் உண்டு - எதிரியை
சமாளிக்க பலமான படையும் உண்டு..,

நாம நல்லவங்களுக்கு நல்லவங்க.

கார்கில் ஆனாலும் சரி.,
காஷ்மீர் ஆனாலும் சரி.,

அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம்
தர்மம் தர்ம அடி போடும்..
இது தான் நம்ம ராணுவ ரகசியம்..

இவ்ளோ சாதனைகள் செஞ்சும்
நாம இன்னும் பொருளாதார வளர்ச்சியில
ரெண்டாவது இடத்தில தான் இருக்கோம்..

சுற்றும் வரை பூமி.,
சுடும் வரை நெருப்பு.,
போராடும் வரை இந்தியன்..

இந்தியாவை முதல் இடத்துக்கு
கொண்டு வர போராடிட்டே இருப்போம்..

ஜெய் ஹிந்த்..


டிஸ்கி : இந்த Speech-க்கு
1st Prize குடுத்து., நேத்து விழா
மேடையிலயும் பேச வெச்சாங்க.
I'm Very Happy..

உங்க திறமைய சோதிக்க
ஒரு சின்ன கேள்வி...

இந்த Speech-லயும் Prize வாங்க
ஒரே ஒரு தில்லாலங்கடி
வேலை நான் பண்ணியிருக்கேன்..

கண்டுபிடிக்க முடியுதா..??!!


பேச்சுப்போட்டி - 1
பேச்சுப்போட்டி -2
பேச்சுப்போட்டி - 4
பேச்சுப்போட்டி - 5
பேச்சுப்போட்டி - 6
.
.

15 August 2010

வாவ்...!























கஷ்டப்பட்டு

இங்கிலீஷ்காரனை
துரத்திவிட்டு சொன்னோம்..,

" Happy Independence Day..!! "

-------------------------------------

டிஸ்கி : இது என் Friend ஜெகன்
இன்னிக்கு காலையில எனக்கு
Phone-ல சொன்னது..!!
.
.

13 August 2010

ஜாவா + +...!!!
























டிஸ்கி : இது ஜாவா பத்தின
Technical பதிவு அல்ல..

1st Part படிக்க இங்கே Click பண்ணுங்க..
------------------------------------------------

நான் Feelings of India ஆயிட்டேன்..

" வாழ்க்கையில் ஆயிரம் தடைகல்லப்பா.,
தடைகல்லும் உனக்கொரு படி கல்லப்பா..,
வெற்றிகொடி கட்டு...!! "

Backround-ல " படையப்பா " பாட்டு..

அப்பதான் ஒரு விஷயம்
எனக்கு Strike ஆச்சு...

எங்களுக்கு Project-ஐ Demo
காட்ட வேண்டியதில்ல..
Project Report-ஐ வெச்சி
Explain பண்ணினா போதும்..

இது போதாதா...!!

சோகத்தை ஓரம் கட்டிட்டு..,
என் Friend சுரேஷோட Project-ஐயே
நானும் Printout எடுத்துட்டேன்..

அதுக்காக ரெண்டு Project-ம்
ஒண்ணுன்னு நினைக்காதீங்க..,

அவன் Project Report-ல
" Suresh-னு " இருக்கும்..

என்னுதுல " Venkat-னு " இருக்கும்..
( எப்புடி..!! Difference இருக்குல்ல.. )

ரெண்டு Project-ம் ஒண்ணுதான்னு
எங்க H.O.D கண்டுபிடிச்சிடுவாரோன்னு
சுரேஷ் தான் ரொம்ப பயந்தான்..

" டேய்.., எனக்கு Java தான்
அரைகுறையா தெரியும் - ஆனா
நம்ம H.O.D பத்தி முழுசா தெரியும்..
அதனால Don't Worry-ன்னு..! "
சொல்லிட்டேன்..

Project Report-ஐ பைண்டிங் பண்றதுக்கு
முன்னாடி H.O.D கிட்ட காட்டி
" O.K " வாங்கணும்...

அதுக்காக நான் காலேஜ் போனப்ப..

என் Friend ஹரி H.O.D Room-ல
இருந்து சோகமா வெளியே வந்தான்..
( அவன் Java-ல சொந்தமா Project
பண்ணி இருந்தான்.. )

நான் : என்னடா ஒரு மாதிரி இருக்கே..?

ஹரி : H.O.D கடுப்படிக்கிறார்டா..
என் Project Screen Shots பார்க்க
Look-ஆ இல்லையாம்..

( ஒரிஜினல் Project-க்கே இந்த கதியா..? )

ஹரி : ஜாவால Design பண்றது
எவ்ளோ கஷ்டம்..?
ஒரு கோடு போட கூட
ஒரு பக்கம் Code எழுதணும்..
உனக்கே தெரியும் தானே..!!

( எனக்கு..?? ஓ.. நல்லா தெரியுமே..!! )

ஹரி : இவருக்கு Java-ன்னா என்னான்னே
தெரியல., நம்மள போட்டு இம்சை
பண்ணிட்டு இருக்காரு...

ஆஹா... அவன் சொன்னதை கேட்டதும்
எனக்கு பல்ப் எரிய ஆரம்பிச்சிடுச்சு..

நான் Project Report-ஐ அன்னிக்கு காட்டலை..
ரெண்டு நாள் கழிச்சி தான் காட்டினேன்..

என் Project Report-ஐ பார்த்து
சுரேஷ் Stun ஆயிட்டான்..

பின்ன என்னோட Screen Shots தான்
எங்க H.O.D கேட்ட மாதிரி
Design., Design-ஆ இருந்ததே..!!

சுரேஷ் : என்னடா பண்ணினே..?

நான் : Microsoft Power Point
Use பண்ணி இந்த Screen Shots
Design பண்ணினேன்..

சுரேஷ் : அப்ப Project Report-ல
இருக்கிற Java Code..??

நான் : அதுக்கும்., இந்த
Screen Shots-க்கும் 5% கூட
சம்பந்தம் கிடையாது..

சுரேஷ் : எங்க Screen Shots எல்லாம்
ரொம்ப சாதாரணமா இருக்கு..,
உன்னுது மட்டும் ஜிகுஜிகுன்னு
இருக்கே.. ஒருவேளை H.O.D-க்கு
சந்தேகம் வந்துட்டா என்ன பண்ணுவே..??

நான் : ரொம்ப Simple..!
அவங்க பண்ணினது ஜாவா.,
நான் பண்ணினது ஜாவா++
சொல்லுவேன்...!!

சுரேஷ் : அடப்பாவி..!!

பின்குறிப்பு :

Project Result வந்தது..
ஹரி - 83 Marks.,
சுரேஷ் - 85 Marks..,
நான் - ??

அதை ஏன் கேட்கறீங்க..??
எனக்கு இப்ப அதை பத்தி
நினைச்சா கூட Feeling ஆகுது...

பின்ன..,
2 Mark-ல Centum-ஐ
மிஸ் பண்ணினா..
Feeling-ஆ இருக்காதா. .??
.
.

10 August 2010

ஜாவா...!!!

























டிஸ்கி : இது ஜாவா பத்தின Technical
பதிவு அல்ல.. காரணம்..??

1.இது Indli-ல நகைச்சுவை Categary-ல
தான் இணைக்கப்பட்டு இருக்கு..

2. தலைப்பை நல்லா பாருங்க
" ஜாவா..!!! " ( 3 ஆச்சரியக்குறி )

-----------------------------------------

அது எனக்கு MCA-ல கடைசி செமஸ்டர்..
இன்னும் ஒரே ஒரு Project மட்டும் தான்
பாக்கி..

Project Duration 5 மாசம்..

MCA-ல என்னோட Overall Percentage 80%
வரணும்னா...  அந்த Project-ல
நான் Centum அடிச்சே ஆகணும்..

அதுக்கு என்ன பண்ணனும்..?

சிங்கம் ( நான் தான் ) ஒரு Master Plan
போட்டது..

அது Java வந்த புதுசு..

அப்ப எங்க Class-ல யாருக்குமே
Java தெரியாது..

Step 1 : Java கத்துகறது..
( C++ தெரியும்கறதால அது
நமக்கு Easy-ஆ இருக்கும்.. )

Step 2 : Java-லயே Project பண்றது..

இது தான் அந்த Master Plan.

இதை நம்பி நாங்க 4 பேர்
சென்னைக்கு போயி Java Course
சேர்ந்தோம்..

4 மாசத்திலயே நாங்க நல்லா
தெரிஞ்சிக்கிட்டோம்..

Java கத்துக்கறதே கஷ்டம்..
அதுல Project பண்றது
கஷ்டமோ கஷ்டம்னு..

Project Submit பண்ண சொல்லி
College-ல இருந்து Letter வேற
வந்துடுச்சி..

இது ஆகற வேலை இல்ல..,
வேற எதாவது ரூட் இருக்கான்னு
தேடினோம்..

வேற ஒரு Computer Centre-ல
4000 ரூபாய்க்கு Java Project
தர்றதா ஒரு ரகசிய நியூஸ்..

என் Friends மனசு மாறிட்டாங்க..
நான்தான் ஒத்துக்கல..

4000 ரூபா குடுத்து ஒரு Dummy Project-ஐ
வாங்கிட்டு போனா.., இந்த உலகம்
நம்மள பத்தி என்ன நினைக்கும்..??

முடியவே முடியாது..

3000 ரூபாய்க்கு பேசிப் பார்க்கலாம்னு
சொல்லிட்டேன்..

அடுத்த நாள்..

3000 ரூபா Deal ஓ.கே..

அவங்க ஆளுக்கு ஒரு Project
Floppy-யும்.,

"சாமி சத்தியமா இந்த Project-ஐ
இவன் தான் பண்ணினான்னு..! "
ஒரு Certificate-ம் குடுத்தாங்க..

சந்தோஷமா ஊருக்கு வந்தாச்சு..

Print Out எடுக்கலாம்னு Floppy-ஐ போட்டா...

என்னோட Floppy மட்டும் புஸ்...

என் வளர்ச்சியை தடுக்க
மறுபடியும் ஒரு தடைகல்..

( தொடரும்...)

2nd Part " ஜாவா++ " படிக்க க்ளிக்..
.
.

07 August 2010

எந்திரன் - பஞ்ச் டயலாக்



















எந்திரன் படத்துல நம்ம Super Star
Software Engineer-ஆ நடிக்கிறார்..
படத்துல அவரோட Punch Dialogues
இதோ...

1. நான் ஆபீஸ்க்கு லேட்டா வந்தாலும்
Latest Software-வோட தான் வருவேன்..

2. J to the A to the V to the A ---> JAVA

3. கண்ணா...,
Virus தான் கூட்டமா வரும்.,
Anti-Virus எப்பவும் Single-ஆ தான் வரும்..

4. C-க்கு அப்புறம் C++.,
எனக்கு அப்புறம் No ++..

5. நான் பார்க்கத்தான் Hardware மாதிரி.,
ஆனா மனசு Software மாதிரி..

6. சிங்கத்தை கொஞ்ச முடியாது..,
JAVA-வை மிஞ்ச முடியாது...!!


டிஸ்கி : இதெல்லாம் எனக்கு எப்படி
தெரியும்னு பார்க்கறீங்களா...?!!

காலையில ரஜினி சார் தான்
எனக்கு போன் பண்ணி..

" வெங்கட்.., எந்திரன் படத்துக்கு
கொஞ்சம் Publicity பண்ணி
குடுப்பான்னு " கேட்டாரு....

ரஜினி சார் கேட்டு
நாம பண்ணாம இருப்போமா..??!!

Visiters Stat Counter-ஐ பாருங்க
அம்மாடி... எவ்வ்வ்வ்ளோ
பெரிய Publicity..!!!

ஹி., ஹி., ஹி..!!
.
.

04 August 2010

ஏன் இந்த மனமாற்றம்..??!!

டிஸ்கி : இது எனக்கு மெயில்ல
வந்தது..

நம்ம முதல்வர் கலைஞரோட
திடீர் மனமாற்றத்துக்கு
காரணம் ஒரு Letter தான்னு
நம்ம உளவுத்துறை சொல்லுது...

Blog வரலாற்றிலேயே
முதன் முறையாக...,

அந்த Letter உங்கள்
பார்வைக்கு..


To
முதல்வர் கலைஞர்.,
தலைமை செயலகம்.,
சென்னை

ஐயா.,
செம்மொழி மாநாடு நடத்துனீங்க..
எங்கும் தமிழ்., எதிலும் தமிழ்னு
சொன்னீங்க...

ஆனா ஒரு இடத்துல மட்டும்
சுத்தமா தமிழ் இல்லைங்களே..
அங்கிட்டு எல்லாமே இங்கிலீஷ்ல
தாங்க இருக்கு..

அதை நினைக்க நினைக்க
செம பீலிங் ஆவுதுங்க..

நீங்கதான் சீக்கிரம் இதுக்கு
ஒரு நல்ல முடிவா எடுக்கணும்..

அந்த இடம் - நம்ம டாஸ்மாக்

அங்கே இருக்கிற சரக்குக்கு
எல்லாம் தமிழ்ல பேர் வெச்சி
தமிழை வளர்க்கணும்க..

நானே சில பேர் யோசிச்சி
வெச்சிருக்கேன்..

உங்களுக்கு திருப்தி இல்லைன்னா
ஒரு குழு அமைச்சி நல்ல., நல்ல
பேரா வைங்க..

மிடாஸ் கோல்ட் - தங்க மகன்

நெப்போலியன் - ராஜராஜ சோழன்

கோல்கொண்டா - கங்கைகொண்டான்

வின்டேஜ் - அறுவடை தீர்த்தம்

ஆபீஸ்ர்ஸ் சாய்ஸ் - அலுவலர் தேர்வு

சிக்னேச்சர் - கையெழுத்து

ஓல்டு மாங்க் - மகா முனி

ஜானி வாக்கர் - வெளிநடப்பு

கார்டினல் - பொதுக் குழு

மானிட்டர் - உளவுத் துறை

மேன்சன் ஹவுஸ் - உறுப்பினர் விடுதி

ஹோவர்ட்ஸ் 5000 - ஓட்டுக்கு 5000

ராயல் சேலஞ்ச் - நாற்பதும் நமதே

இப்படிக்கு

தமிழ் " குடி " மகன்,
டாஸ்மாக்,
தமிழ்நாடு

செய்தி : தமிழ்நாட்டில் மதுவிலக்கை
அமல் படுத்த தமிழக அரசு பரிசீலனை.


இன்று ஒரு தகவல் :
---------------------------

பால் லிட்டர் 28 ரூபாதான்.,
குவாட்டரோ 80 ரூபா.. - அதுக்காக
பால் குடிக்கிறவன் மதிப்பு
குறைஞ்சி போயிடாது..,
குவாட்டர் அடிக்கிறவன் மதிப்பு
ஏறிப்போயிடாது...
.
.

01 August 2010

நான் ரெடி.., நீங்க ரெடியா..??

உங்க எல்லோருக்கும்
என்னோட Friendship Day
வாழ்த்துக்கள்...

அப்படியே உங்ககிட்ட
ஒரு சின்ன Help...

( முதல்ல விஷயம் என்னான்னு
சொல்லுப்பா.., அது சின்னதா.,
பெருசான்னு அப்புறம் பேசிக்கலாம்... )

" சுதந்திர இந்தியாவின் சாதனைகள்.. "

இந்த Topic-ல தான் என் பையன்
Speech Competition-ல பேச போறான்..

( சரி.., நாங்க போயி கைதட்டணுமா..?!! )

இனிமே தான் அந்த Topic-ல
நான் Speech ரெடி பண்ணனும்..

( ஓ.. அதுவே இன்னும் ரெடி
பண்ணலையா..?! )

இங்கே தான் உங்க Help
எனக்கு தேவைப்படுது..

( என்ன Help..?? )

இந்த Topic சம்பந்தமா
உங்களுக்கு என்ன தோணினாலும்

For Ex..

ஒண்ணு ரெண்டு Points .,
சின்ன கவிதை.,
பஞ்ச் டயலாக்.,
ஜோக்.,
புள்ளிவிபரம்.,

இப்படி உங்களுக்கு
எது தெரிஞ்சாலும்
அதை Comment-ல எழுதுங்க...

( அடப்பாவி.., கடைசியில எங்களை
யோசிக்க சொல்றியா..!!! )

முக்கியமான விஷயம்..
அதெல்லாம் இந்தியாவை புகழ்ற
மாதிரி இருக்கணும்..
இல்லைன்னா Prize கிடைக்காது..

( இதுல இதுவேறயா.., அப்ப எல்லா
உண்மையையும் சொல்லக்கூடாது..!! )

இதை ஏன் நான் உங்ககிட்ட
கேட்கறேன்னா...

நீங்கல்லாம் என்னை மாதிரியே
புத்திசாலிங்க...
சரி., சரி.. Tension ஆகாதீங்க..
என்னைவிட புத்திசாலிங்க...

( முடிஞ்சதா.., இன்னும் இருக்கா..?
ICE-ஐ சொன்னோம்.. )

எனக்காக இந்த சின்ன உதவி
பண்ணுவீங்க தானே..?!

( உனக்காக இந்த Blog-ஐ
தினமும் படிக்கறோமே
அதெல்லாம் உதவி இல்லையா..??!! )

O.K..

நான் ரெடி - Notes எடுக்க..

நீங்க ரெடியா - Points குடுக்க...?

( அட., இருப்பா யோசிக்கணும்ல.. )

பின் குறிப்பு :

இதுக்கு முன்னாடி என் பையன்
பேசின 2 Speech பார்க்க..
( For Your Reference )

1. சுதந்திர தின விழா - 2009
2. ஆண்டு விழா - 2009
.
.