சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

25 December 2014

வித்துவானும் - கத்துவானும்..!!


ஒருத்தரு அவர் ப்ரெண்ட்டை பார்க்க
அவர் வீட்டுக்கு போறாரு..

நைட் லேட் ஆகிட்டதால அங்கயே
தங்கிடறாரு..

அந்த வீட்ல ஒரு வயலின் மட்டும்
தான் இருக்கு..

" ஏன்டா.. டைம்பாஸ்க்கு ஃபேஸ்புக்காவது
வரலாம்ல.. "

" டைம்பாஸா.. அதான் வயலின் இருக்கே..! "

" வீட்ல ஒரு டி.வி கூட இல்ல.. Bore
அடிச்சா என்ன பண்ணுவே..? "

" Bore அடிச்சாவா.. அதான் வயலின் இருக்கே... "

" அது சரி.. வீட்ல ஒரு Wall Clock கூட இல்ல..
டைம் எப்படி கண்டுபிடிப்பே..? "

" டைம்மா..? அதான் வயலின் இருக்கே.. "

அவருக்கு ஆச்சரியம்..

" வயலின் வெச்சி எப்படிடா டைம்
கண்டுபிடிப்பே..?! "

" இப்ப பாரேன்னு " சொல்லிட்டு அவர்
வயலின் எடுத்து வாசிக்க...

.
.
.

" நைட் 1 மணிக்கு கூட நிம்மதியா
தூங்க விட மாட்டியாடா...!! "

- பக்கத்து வீட்டில் இருந்து வந்தது குரல்..
.
.

23 December 2014

மைண்ட் வாய்ஸ்


நேத்து நைட் என் ப்ரெண்ட் மணிக்கு
போன் பண்ணினேன்..

" டேய்., நாளைக்கு கோயம்புத்தூர் பங்சனுக்கு
நாங்களும் வர்றோம்.. எங்களை பிக் அப் 
பண்ணிக்கோ.. "

" ஓ.கே.. காலைல 5.30 மணிக்கு ரெடியா
இரு.. கெளம்பிடலாம்.. "

" டன்..!! "

மை Wife மைண்ட் வாய்ஸ் :

" 5.30 மணி சொல்றாங்க.. நாம 4 மணிக்கே
எழுந்து 5 மணிக்கே ரெடி ஆகிடணும்.. "

மை மைண்ட் வாய்ஸ் :

" இந்த நாயி எங்கே 5.30 மணிக்கு ரெடியாகி
வரப்போவுது.. நாம 6 மணிக்கு எந்திரிச்சு
6.30க்கு ரெடியான போதும்.. "

மணிஸ் மைண்ட் வாய்ஸ் :

" இந்த பன்னாடகிட்ட 5.30-னு சொன்னாத்தான்
6.30க்கு ரெடி ஆகும்.. நாம 7 மணிக்கு போனா
சரியா இருக்கும்.. "
.
.

14 December 2014

மை Wife வெரி ஹேப்பி மச்சி..!!


என் Wife பர்த்டே அன்னிக்கு அதை 
பத்தி நான் FB-ல ஸ்டேடஸ் போட்டு 
இருந்தேன்.. 

அதை பாத்துட்டு நம்ம மங்குகிட்ட இருந்து 
போன்...

" மச்சி இன்னிக்கு உன் Wife-க்கு பர்த்டேவா..? "

" ஆமா மச்சி..!! "

" ஓ... சரி., சரி... எதை நீ பண்ணினா உன் Wife
ரொம்ப சந்தோஷப்படுவாங்களோ.. அதை 
இன்னிக்கு பூரா பண்ணு..!! " 

" அப்ப மொதல்ல போனை கட் பண்ணு..! "

" ஏன் மச்சி..??!!! "

" உன் கூட பேசாம இருந்தா தான் அவ 
ரொம்ப சந்தோஷப்படுவா.. "

" கிர்ர்ர்ர்ர்...!!!! "

# நண்பேன்டா
.
.

06 December 2014

ஏக் காவ் மே...!!!


போன வருஷம் ஒரு ஜரிகை மிஷின்
வெச்சப்ப நான் ரொம்பவே யோசிச்சேன்..

ஏன்னா அதை நார்த் இந்தியன்ஸ் தான்
பார்த்துப்பாங்க..

அவங்க பேசற ஹிந்தி நமக்கு புரியாது.
நாம பேசற தமிழ் அவங்களுக்கு புரியாது..

எப்படி சமாளிக்க போறோம்.?

ஆனா எதோ ஒரு தைரியத்துல மிஷினை
வெச்சி., அவன்கிட்ட தட்டு தடுமாறி ஹிந்தி
பேச ஆரம்பிச்சேன்..

இப்ப நல்ல முன்னேற்றம்..

ஒரு வருஷம் ஆகிடுச்சில்ல..

# " ஹே சர்வேஸ்... கல் ஜல்தி ஆவோ
மே போல்தா., தும் கியா நஹி ஜல்தி
ஆயா..? "

" முதலாளி..!!! இனிமே நீ தமிழ்ல
சொல்லுது.. நான் தமிழ் கத்துகுது.. "

" ஙே..!!! "

டிஸ்கி : இதுக்கு எதுக்கு தமன்னா போட்டோனு
யோசிப்பீங்களே.... தெரியும்...

ஏன்னா....

தமன்னாவும் ஹிந்தி புள்ளதானே.. ( லாஜிக் )
.
.

02 December 2014

ஐடியா ப்ளீஸ்..!!!



இன்னும் ரெண்டு நாள்ல விஜயதசமி..

என் ப்ரெண்டு விக்கி என்னை பார்க்க
வந்தான்.. வந்து..

" மச்சி... பாப்பாவ எந்த ஸ்கூல்ல சேர்க்கறதுனு
ஒரே கன்பியூசனா இருக்குடா..? ஐடியா குடேன்.. "

( ஐடியா தர்றதை நாங்க  ஒரு பொதுசேவையாவே
பண்ணிட்டு இருக்கோம்ல..!! )

" ஸ்கூலுக்கா பஞ்சம்.. நல்ல ஸ்கூலா பாத்து
சேர்த்துடு.. "

" அதாண்டா க்ன்பியூசனே.. ஸ்கூல் நல்லா
இருந்தா பீஸ் ஜாஸ்தியா இருக்கு.,
பீஸ் கம்மியா இருந்தா தூரமா இருக்கு... "

" மச்சி... எது நல்ல ஸ்கூல்னு கட்டடத்தை
வெச்சோ.., கட்டணத்தை வெச்சோ...
முடிவு பண்ணக்கூடாது.. ( ரைமிங்க் ரைமிங்க்..! )
சொல்லிக்குடுக்கறவங்கள வெச்சி தான்
முடிவு பண்ணனும்.. "

இப்ப அவன் கண்ணுல ஒரு தெளிவு தெரிஞ்சது..

" ஓ.கே மச்சி"-னு.. போயிட்டான்....

ரெண்டு நாள் கழிச்சு வந்தான்..

" மச்சி.. நான் பாப்பாவ.. ABC ஸ்கூல்ல
சேர்த்துட்டேன்..!! "

" வெரிகுட்... ஏன் அந்த ஸ்கூலை செலக்ட்
பண்ணினே..??! "

" அங்கே தான் மிஸ்ஸுங்க எல்லாம்
சூப்பரா இருக்காங்க..!! "

" அடப் படுபாவி....!!! "

# ஐயோ ராமா என்னை ஏன் இந்த விக்கி
மாதிரி பக்கிங்க கூட எல்லாம் கூட்டு சேர
வெக்கிறே..?!!! மொமண்ட்
.
.

20 November 2014

பாஸ்வேர்ட் சீக்ரெட்..!!!


என் ப்ரெண்ட் குமார் புது ஸ்மார்ட் போன் 
வாங்கி இருந்தான்.. 

அவன் கிட்ட WIFI கனெக்ஷன் இல்லாததால 
கேம்ஸ், ஆப்ஸ் எல்லாம் இன்ஸ்டால் 
பண்ண சொல்லி எங்கிட்ட குடுத்தான்..

நானும் எல்லாம் ரெடி பண்ணி போனை 
பாஸ்வேர்ட் போட்டு லாக் பண்ணி 
குடுத்தேன்.. 

" பாஸ்வேர்ட் என்னா மச்சி..? " 

" ஸ்கூல்ல நீ லவ் பண்ணுனியே 
அந்த பொண்ணு பேருதான்..!! '

" ஓ.கே மச்சினு " சொல்லிட்டு 
போனை வாங்கிட்டு போயிட்டான்.. 

ஒரு அரைமணி நேரம் ஆகியிருக்கும்..
மறுபடியும் வீட்டுக்கு வந்தான்.. 

" என்னடா... எதாவது டவுட்டா..?!! "

" ஆமா மச்சி.. யார் பேரை நீ பாஸ்வேர்ட்டா 
வெச்சே..? நானும் 27 பேரு டிரை பண்ணி 
பார்த்துட்டேன்..!! "

# அட பன்னாட..!!
.
.

16 November 2014

இது பாயிண்ட்டு...!!!



6HP மோட்டர் ஒரு மணி நேரம் ஓடினா 
4.47 யூனிட் செலவு ஆகும்கறது கணக்கு..

ஒரு வருஷம் முன்னே செக் பண்ணினதுக்கும் 
இப்பவும் வித்யாசம் வந்தது..

முன்னே 400 ஸ்பிண்டல் ஓடிச்சு..
இப்ப 560 ஸ்பிண்டல் ஓடுது.. ஆனா
மோட்டர் அதே தான்.. So அதே யூனிட்
தானே ஆகணும்.. - இது என் பாயிண்ட்..

லோடு ஜாஸ்தி பண்ணினா.. கரெண்ட்
ஜாஸ்தி தானே செலவு ஆகும் - இது
என் Wife பாயிண்ட்..

( அப்ப வெறும் மோட்டார் மட்டும் ஓடினா...
கரெண்டே செலவு ஆகாதா..? # டவுட்டு )

சரினு என் ப்ரெண்ட் கோபிக்கு போனை
போட்டு விளக்கம் கேட்டேன்..

எங்க க்ரூப்லயே என்ஜினியரிங்கை
8 வருஷம் படிச்சவன் அவன்தான்..

அவன் சொன்னான்...

" உன் Wife சொல்றதை ஒத்துக்கோ..!! "

" ஏன்.. உனக்கு அதான் சரினு படுதா..?!! "

" இல்ல.. அதான் உனக்கு Safe-னு படுது..!! "

# அப்படீன்ற... ஓகே யுவர் ஆனர்..!!!
.
.

11 November 2014

என்னப்பா.. இப்டி பண்றீங்களேப்பா..!!!


" இந்த Flat 45 லட்சம் சார்.., அது 50 லட்சம்
சார் " ஒவ்வொன்னா புரோக்கர் சொல்லிட்டு
இருந்தாரு..

நானு தீவிர யோசனையில இருந்தேன்..

" என்ன யோசிக்கறீங்க..?! ரேட் வேணா
உக்காந்து பைனல் பண்ணிக்கலாம்.. "

" அட ரேட் பத்தி இல்ல.., ஒரு 20 வருஷம்
கழிச்சி வீட்டை இடிச்சி கட்டணும்னா
என்ன பண்றதுனு யோசிக்கறேன்..!! "

" அந்த கவலையே உங்களுக்கு வேணாம்..! "

" ஏன்..?!! "

" 20 வருஷம் ஆனதும் வீடு தன்னாலயே
இடிச்சிடும் சார்..?!! "

# அடப்பாவிகளா..!!!
.
.

10 November 2014

மங்குனி அமைச்சரும் இன்டர்வியூவும்..!!




மங்குனி அமைச்சர்க்கு இன்டர்வியூ..
கூட நானும் போயிருந்தேன்...
பைல் புல்லா சர்டிபிகேட்ஸ்..
( ஸ்போர்ட்ஸ் கோட்டானு நெனச்சிக்காதீங்க..
எல்லாம் கோட்டு அடிச்சி., கோட்டு அடிச்சி
பாஸ் பண்ணினது... )
இன்டர்வியூ முடிச்சி வெளியே வந்த
மங்குனிகிட்ட...
" மங்கு... என்ன ஆச்சு...?!! "
" மார்க்கெல்லாம் ரொம்ப கம்மியா
இருக்குனு சொன்னாரு.. "
" அது தெரிஞ்சது தானே... அதை விடு
நீ ஒரு பிரபல பிளாக்கர்னு சொன்னியா..?
இல்லியா..?! "
" சொன்னேன்.. பன்னிக்குட்டி ராம்சாமி,
கோகுலத்தில் சூரியன் வெங்கட் எல்லாம்
என் ப்ரெண்டுனு சொன்னேன் "
" அப்புறம்..? "
" அதை கேட்டதும் அவர் முகத்துல ஒரு
பிரகாசம் தெரிஞ்சது.. "
" சரி.. நெக்ஸ்ட்.. "
" ஃபேஸ்புக்ல ஸ்டேடஸ் எல்லாம் போடுவேன்.,
ரெண்டு க்ரூப்புக்கு அட்மினா இருக்கேனு
சொன்னேன். "
" சூப்பரு.. இதுக்கு என்ன சொன்னாரு..? "
" அந்த 3வது சிஸ்டம்ல போயி உக்காருங்கனு
சொன்னாரு..! "
" வாவ்... ட்ரீட் எப்ப மங்கு..?!! "
" அட முழுசா கேளுயா..?! "
" சொல்லு.. "
" வந்ததுக்கு அதுல அரைமணி நேரம்
Browsing பண்ணிட்டு ஓடிபோயிடுனு
சொல்லிட்டான்யா... "
" ஙே...!!! "
.
.

31 October 2014

போவோமா.., ஊர்கோலம்..!!


என் தம்பிக்கு பையன் பிறந்திருக்கான்..

நேத்து குழந்தையை பார்க்க
என் ப்ரெண்ட் மணியும் அவன் Wife
மேனகாவும் வந்திருந்தாங்க...

அப்ப...

" மணி... கூர்க் போலாமா..?!! "

" அங்கே போயி..? "

" தெரிஞ்சவங்க காட்டேஜ் இருக்கு.. "

" சரி.. "

" அங்கேயே சமைக்க ஆளும் இருக்கு..
நாம என்ன மெனுனு சொல்லிட்டா போதும்
வேளா வேளைக்கு கரெக்ட்டா வந்துடும்..
நாம சாப்பிட்டுட்டு ரெஸ்டா இருக்கலாம்... "

அப்ப மேனகா எங்க ரெண்டு பேரையும்
கேவலமா ஒரு லுக் விட்டுட்டு சொன்னாங்க...

" அல்ரெடி நீங்க ரெண்டு பேரும் இங்கேயே
இதைதானே பண்ணிட்டு இருக்கீங்க..
இதுக்கு கூர்க் வேற போகணுமா..?!! "

" ஙே..!!! "

# என்னம்மா இப்டி சொல்லிட்டீங்களேம்மா
மொமண்ட்..!!!
.
.

27 October 2014

ஓ.. பணியாரம்..!!


காலைல மழை வந்துட்டு இருந்தது..

பசங்க ஸ்கூலுக்கு ரெடி பண்ணிட்டு
இருந்தாங்க என் Wife...

அப்ப என்கிட்ட

" ஏங்க... கிச்சன்ல பணியாரம் ஊத்தி
இருக்கேன்.., கொஞ்சம் போயி ஸ்டவ்வை
சிம்ல வைங்க..! "

சரினு நானும் கிச்சனுக்கு போயி
சிம்ல வெச்சிட்டு.., பக்கத்துல இருந்த
தோசை கரண்டியை எடுத்து வெச்சி
பணியாரம் எப்படி வேகுதுனு வேடிக்கை
பாத்துட்டு இருந்தேன்..

டக்னு பின்வாசல் வழியா என்ட்ரி
குடுத்தாங்க.. எங்க பக்கத்துவீட்டு அண்ணி..

நான் கிச்சன்ல பணியாரம் சுடறதை(?!)
பாத்து அப்படியே ஷாக் ஆகிட்டாங்க..

" இங்கே என்ன பண்றே..? "

" என் பொண்டாட்டிக்கு ஹெல்ப் பண்றேன்..
எல்லா வேலையும் அவளே செஞ்சா
அவ கை வலிக்கும்.. அப்புறம் எனக்கு
மனசு வலிக்கும்ல.. ஹி., ஹி., ஹி..!!! "

எங்க அண்ணி ஒரு நிமிஷம் என்னமோ
யோசிச்சாங்க... அப்படியே அவங்க
வீட்டுக்கு போயிட்டாங்க..

அப்புறம் காலையில ஆபிஸ் கெளம்பும்போது
அண்ணன் என்னை பாத்து மொறைச்சாரு....

# நாம சிம்ல தானே வெச்சோம்...!!!
ஹி., ஹி., ஹி..
.
.

07 October 2014

ஐ(யோ) - போன்...!!!!


டிஸ்கி : இது ஐ-போன் பத்தின பதிவு இல்ல..

லீவ்க்கு அம்மா வீட்டுக்கு போயிருந்த 
Wife காலைல போன் பண்ணினா...

" நைட் ஏங்க போன் பண்ணல..?! "

" ரொம்ப டயர்ட்டா இருந்துச்சின்னு 
தூங்கிட்டேன்..!! "

" அப்ப ஏன் Whatsapp-ல Last Seen 1.28 A.M-னு 
காட்டிச்சு..??!! "

( ஒரு செகண்ட் ஜெர்க் ஆனாலும்.. உடனே 
சுதாரிச்சிட்டு சொன்னேன் பாருங்க... )

" நீ எதுனா மெசேஜ் அனுப்பி இருக்கியானு 
செக் பண்ணினேன்மா..!! "

# பொண்டாட்டிக்கு ஐ-போன் வாங்கி தர்றது 
மேட்டர் இல்ல பாஸ்...

அது நமக்கு ஸ்பை போனா மாறிட்டு இருக்கு..

பீ கேர்புல்.. ( நான் என்னைய சொன்னேன்..! )
.
.

25 September 2014

திரிஷாஆஆஆஆஆஆ..!!!




காலேஜ் படிச்சிட்டு இருந்தப்ப...

அன்னிக்கு எங்க ஜூனியர் பொண்ணு
மீனாவுக்கு Birthday போல... எல்லோருக்கும்
சாக்லெட் குடுத்துட்டு இருந்தாங்க..

அப்ப என் ப்ரெண்ட் பிரகாஷ் என்கிட்ட..

" மச்சி.. இன்னிக்கு பாரேன்.. மீனாகிட்ட
எப்படி Score பண்றேன்னு..!! "

" என்னடா பண்ண போற...?! "

" உஷ்.. நடக்கறதை பாரு...!! "

மீனா.. பிரகாஷ்க்கு சாக்லெட் குடுக்கும்
போது அவன் சொன்னான்..

" மீனா இன்னிக்கு உன்னை பாத்தா அசப்புல
நடிகை திரிஷா மாதிரியே இருக்கே..!! "

( அடப்பாவி...!!! )

மீனாவுக்கு உடனே வெட்கம் வந்துடுச்சு..
சிரிச்சிக்கிட்டே...

" ஹேய்.. பொய் சொல்றீங்க..! " சொல்லிச்சு..

உடனே நானு..

" ஆமா பிரகாஷு... எதுக்கு இப்ப பொய்
சொல்றே.. திரிஷா என்ன நம்ம மீனா
அளவுக்கு அம்புட்டு அழகாவா இருக்குனு "
கேட்டேனா...

இப்ப மீனாவுக்கு டபுள் வெட்கம்..
எனக்கு டபுள் சாக்லெட்..

நான் அப்படியே திரும்பி பிரகாஷை பார்த்தா...

பையன் கண்ணுல கொலவெறில தெரிஞ்சது..

" ஹி., ஹி., நானும் ரெண்டு ரன் எடுக்கலாம்னு... "

# நீ ஆணியே புடுங்க வேணாம் மொமண்ட்..!!
.
.

17 September 2014

என்ன அங்கே சத்தம்..?!!!



" என்னங்க.. இங்கே பாருங்க உங்க
சின்ன பையன் பண்ணின வேலையை.. "

" என்ன பண்ணினான்...?!! "

" School Diary-ல என் Sign-ஐ அவனே
போட்டுகிட்டான்...!! "

( அடப்பாவி...!!! )

" சரி.., சரி விடு... சொல்லி திருத்திக்கலாம்..!! "

" என்னங்க இவ்ளோ சாதாரணமா சொல்லிடீங்க..?! "

" பின்ன என்ன பண்ணனும்கிற..?!! "

" நாளைக்கு பெரியவனாயி.. போர்ஜெரி
எதுனா பண்ண ஆரம்பிச்சிட்டான்னா...!! "

" ஹேய்.. ரொம்ப ஓவரா கற்பனை பண்ணாதே...
இப்ப நானெல்லாம் போர்ஜெரி பண்ணிட்டா
இருக்கேன்..?! "

" அப்படின்னா..?!!! "

" ஹி., ஹி., ஹி... நானும்... 7th Std படிக்கும்
போது... எங்க அம்மா..... "

" ஆ...!!! "

" களவும் கற்று மற -னு பெரியவங்களே
சொல்லி இருக்காங்கல்ல...!! "

" எக்கேடோ கெட்டு போங்க...!!! "

# பெண்களால் புரிந்துகொள்ள முடியாது
ஆண்களின் அந்த அற்புதமான உலகத்தை..!!!
.
.

12 September 2014

மங்குனியும் இலக்கியமும்...!!



மங்குனி அமைச்சரையும்., என்னையும் பாத்து...

" என் பதிவுல குருக்கள் நீங்க 2 பேரும்
தான் "னு அடிக்கடி எங்க சிஷ்ய பையன்
சிவசங்கர் சொல்லுவான்...

இனிமே இப்படி யார்கிட்டேயும்
சொல்லக்கூடாதுனு சொல்லி வெச்சிருக்கேன்...

( பின்ன.. ரிஸ்க்கான சிட்சுவேஷன்ல
மட்டுதான் இதை சொல்றான்.... )

காலைல மங்குனிக்கு போன் பண்ணினேன்..

" ஹலோ மங்கு... சிவசங்கர் போன்
பண்ணியிருந்தான்யா..!! "

" உனக்கும் பண்ணியிருந்தானா..?!! "

" ஆமா... எதோ இலக்கிய புத்தக வெளியீட்டு
விழாவாம்... வர சொல்றான்..?!! "

" ம்ம்.. என்னையும் கூப்பிட்டான்..!! "

" ஆமா மங்கு... இந்த இலக்கியம்னா என்ன.?!! "

" அது கெடக்குதுயா வெண்ணை... மொதல்ல
இந்த புத்தகம்னா என்ன..?!! "

# மங்கு ராக்ஸ்..!!!
.
.

02 September 2014

தங்கச்சிடா....!!!!


கல்யாணத்துல.... 

" மச்சி... அந்த ப்ளூ கலர் சுடிதார் யாரு..? "

" தங்கச்சிடா... "

" சாரி மச்சி... அப்ப பக்கத்துல இருக்கற 
பிங்க் சுடிதார்...? "

" தங்கச்சிடா.. "

" மறுபடியும் சாரி மச்சி... அப்ப... மேடையில 
நிக்குதே... கிரீன் சுடிதார்..? "

" அதுவும் தங்கச்சிடா... " 

" அடேய்... உனக்கு மொத்தம் எத்தனை 
தங்கச்சிடா..? "

" ஹி., ஹி., ஹி.. இவ்ளோ நேரம் நான் 
தங்கச்சினு சொன்னது எனக்கில்ல மச்சி.. 
உனக்கு...!! "

" அட நாயே...! "
.
.

30 August 2014

மேத்ஸ் டிரைனிங்..!



என் சின்ன பையன் கோகுல்கிட்ட..

" இப்ப உன்கிட்ட 10 சாக்லேட் இருக்கு..
அண்ணனுக்கு 5 சாக்லேட் குடுன்னு
நான் சொல்றேன்.. அப்படின்னா... உன்கிட்ட
மீதி எத்தனை சாக்லேட் இருக்கும்..?! "

" 10 சாக்லேட் பா..!! "

" எப்படிரா..?!! "

" நான் தான் அண்ணனுக்கு 5 சாக்லேட்
குடுக்க மாட்டேனே..!! "

# கோகுல் ராக்ஸ்...  பாதர் ஷாக்ஸ்...!!
.
.

13 August 2014

அந்த பயம் இருக்கோணும்.. ஆங்..!!!


எனக்கு 10 நாளா இருமலு...

தேங்கா சாப்பிட்டா சரியா போகும்னு
ப்ரெண்ட் சொன்னான்...

சரி இதை என் Wife நிர்மலாகிட்ட சொல்லலாம்னு
வீட்டுக்கு வந்தா...

டைனிங் டேபிள்ல தேங்கா துருவி வெச்சிருந்தது..

அட அட அட...

" எள்ளுன்னு சொல்றதுக்குள்ள எண்ணையா
நிக்கற " என் பொண்டாட்டியை நினைச்சா...
எனக்கு பெருமையா இருந்தது.

அப்படியே அந்த தேங்கா துருவலை அள்ளி
காலி பண்ணிட்டு தண்ணி குடிச்சிட்டு ரூம்க்கு
போயி டி.வி பாத்துட்டு இருந்தேன்....

ஒரு 10 நிமிஷம் இருக்கும்...

" எவன்டா அது... இங்கே பொறியலுக்காக
துருவி வெச்சிருந்த தேங்காயை எல்லாம்
தின்னது..?!! "

கோபமான என் Wife குரல் கேட்டது...

( இது பசங்க வேலைனு நெனச்சிட்டா போல
 அதான்.....

என்கிட்ட எல்லாம் எப்பவும் மரியாதையாத்தான்
பேசுவா..!! )

" அம்மா... நான் இல்லம்மா.."-னு பசங்க
கெஞ்சிட்டு இருந்தாங்க...

" நிர்மலா.. பசங்கள ஏன் திட்ற... அதை
நான் தான் சாப்பிட்டேன் ...!! "

" ஓ.. நீங்கதான் சாப்பிட்டீங்களா மாமா...!! "

" ம்ம்...!! "

" அப்ப மரியாதையா வந்து தேங்காயை துருவி
குடுத்துட்டு போங்க...!! "

ஹி., ஹி., ஹி.. நான் சொல்லல...

என் பொண்டாட்டி எப்பவும் மரியாதையாத்தான்
பேசுவானு...!!!
.
.

30 July 2014

ஓ... ப்ரியா.. ப்ரியா..!!!


காலைல என் ப்ரெண்ட் ஆனந்து போன் 
பண்ணியிருந்தான்.. 

பேசிட்டு இருக்கும் போது....

" டேய்... ஸ்கூல் படிக்கறப்ப நானும், ப்ரியாவும் 
லவ் பண்ணினோமே.. உனக்கு தெரியாதா..?!! "

" அடப்பாவி.. இது எப்படா நடந்துச்சு..?!! "

" ஹி., ஹி., ஹி.. நான் ப்ரியாவை லவ்
பண்ணினேன்.., 


ப்ரியா பிரகாஷை லவ் பண்ணிச்சு..!! "

" த்த்தூ..!! "

.
.

24 July 2014

தி லிட்டில் மாஸ்டர்...!!!!


என் சின்ன பையன் கோகுல் ( 2nd Std )
ஸ்கூல்ல இருந்து வந்ததும் சின்சியரா
ஹோம் வொர்க் எடுத்து வெச்சி எழுத
ஆரம்பிச்சிடுவான்...

ஆனா பெரியவன் சூர்யா ( 7th Std )
அவ்ளோ லேசுல உக்கார மாட்டான்..

அங்கே போவான்.. இங்கே வருவான்..,
பேனாவை எடுப்பான்., பென்சிலை சீவுவான்..
7 மணிக்கு அப்புறம் தான் மெதுவா
ஆரம்பிப்பான்...

அதனால ஒரு ஐடியா பண்ணினேன்...
ரெண்டு பேரையும் கூப்பிட்டேன்...

" கோகுல்.. இனிமே நீ தான் அண்ணனுக்கு
ஹோம் வொர்க் மாஸ்டர்...!! "

" சூர்யா.. இனிமே நீ தம்பி சொல்றபடி தான்
கேக்கணும்.. சரியா..?! "

ரெண்டு பேரும் தலையை தலையை ஆட்டினானுங்க..

அப்படியே...

" நீ சொல்ற பேச்சை அண்ணன் கேக்கலன்னா
உடனே எனக்கு ஒரு போன் பண்ணுடா கோகுல்..
வந்து கவனிச்சிக்கறேனு " ஒரு எக்ஸ்ட்ரா பிட்டு
போட்டுட்டு வந்தேன்...

ஒரு 10 நிமிஷம் ஆனதும்..

வீட்ல இருந்து கால் வந்தது..

" அப்பா.. அண்ணன் நான் சொல்ற பேச்சை
கேக்க மாட்டேங்குறான்பா.. "

ஆஹா ஆரம்பிச்சிட்டானுங்களா...

" சரி.. போனை அண்ணன்கிட்ட குடு..!! "

" ஹலோ அப்பா... "

" சூர்யா.. நான்தான் அவன் சொல்றபடி கேளுனு
சொல்லிட்டு வந்தேன்ல.. "

" அவன் என்ன சொன்னான் தெரியுமாப்பா..?! "

" என்னடா சொன்னான்..?! "

" அவனோட ஹோம் வொர்க்கை எல்லாம்
என்னை எழுதி குடுக்க சொல்றான்பா..!! "

# அடங்கொன்னியா
.
.

18 July 2014

கருப்பு ஆடா..? வெள்ளை ஆடா..?!!


டி.வில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கறாங்க... 

" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..? "

" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?! "

" வெள்ளைக்கு..! " 

" புல்லு..! " 

" அப்ப கருப்புக்கு..?! "

" அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..! " 

" இதை எங்கே கட்டி போடறீங்க..? "

" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "

" வெள்ளையை..! "

" வெளில இருக்குற ரூம்ல..! "

" அப்ப கருப்பு ஆட்டை..?! "

" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!! "

" எப்படி குளிப்பாட்டுவீங்க..? "

" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "

" கருப்பு ஆட்டை..! "

" தண்ணில தான்...! "

" அப்ப வெள்ளையை..?! "

" அதையும் தண்ணிலதான்..! "

பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பாகிடறார்..

" லூசாய்யா நீ... ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே 
செய்யுறே... அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப 
வெள்ளையா..? கருப்பானு.? கேட்டுட்டே இருக்கே..?!! "

" ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..!! "

" அப்ப கருப்பு ஆடு..?!! "

" அதுவும் என்னுதுதான்..!! "

" டேய்ய்ய்ய்ய்ய்ய்....!!! "
.

09 July 2014

ஐ கேன் டாக் இன் இங்கிலீஷ், ஐ கேன் வாக் இன் இங்கிலீஷ்..!!


10th Std இங்கிலீஸ் கிளாஸ்.. 

இங்கிலீஸ் சார் நம்ம மங்குனி அமைச்சரை 
பாத்து... 

" ஏய் மங்கு.. English Book எடுத்துட்டு வா..

" இந்தாங்க சார்.. "

Book-ஐ பார்த்து., சார் ஷாக் ஆகிறார்..

" என்ன்னா இது.. இங்கிலீஸ் புக் கேட்டா.. 
தமிழ் புக் கொண்டு வர்ற..? "

" சாரி சார்.. நான் அப்பவே நினைச்சேன் 
என்னடா இது இங்கிலீஸ் புக் மேல தமிழ்னு 
எழுதி இருக்கேன்னு..?! "

" என்னடா உளர்ற..? "

" வெளிச்சம் கம்மியா இருந்ததால கலர் சரியா 
தெரியல சார்... "

" என்ன கலரா..? "

" ஆமா சார்.. இங்கிலீஸ் புக் புளு கலர்ல 
இருக்கும்.. தமிழ் புக் பச்சை கலர்ல இருக்கும்.. "

" ஏன்டா.. அப்ப இவ்ளோ நாளும் கலரை 
வெச்சு தான் எந்த புக்னு அடையாளம் 
கண்டுபிடிச்சிட்டு இருந்தியா..? படிக்க எல்லாம் 
தெரியாதா..? "

" ஹி., ஹி., ஹி... "

" எழுத படிக்க தெரியாம எப்படிடா 10th வரை 
வந்தே..? "

மங்குனி ( சற்று கோபமாக ) 

" யாருக்கு சார் எழுத படிக்க தெரியாது.. 
வேணுமனா மங்குனிங்கிற என் பெயரை 
Spelling Mistake இல்லாம எழுதி காட்டடுமா..?! "

" எங்கே எழுதி காட்டு பார்க்கலாம்.. "

மங்கு பேப்பரை எடுத்து எழுதுகிறார்,,,

" W A N G U

என்னடா இது " M " போடறதுக்கு பதிலா 
" W " போட்டு இருக்கே..?!

" அப்ப இது " எம் " இல்லியா..?!! "

இதுக்கு பிறகு இங்கிலீஸ் சார், அவர் 
வேலையை ராஜினாமா பண்ணிட்டு., 
கல்லு உடைக்க போயிட்டதா தகவல்..

.
.

26 June 2014

" மிஸ்டர் வெங்கி.. யூ ஆர் லுக்கிங் வெரி ஸ்மார்ட்..!!! "


புதுசா ஒரு பிலிப்ஸ் ஷேவர் வாங்கினேன்...

ஆர்டர் போட போறேனு சொன்னப்பவே
என் ப்ரெண்ட் ஜெகன்

" அதெல்லாம் சரி வராதுடானு " திட்டினான்..

ஆனா நான் காதுலயே வாங்கிக்கலையே..

" மிஸ்டர் வெங்கி.. யூ ஆர் லுக்கிங் வெரி
ஸ்மார்ட்னு " நம்மள பாத்து யாராவது
சொல்லிடுவாங்களோனு பொறாமை..

ஆதனால ஆர்டர் போட்டுட்டேன்...
950 ரூபா..

ஷேவரும் வந்தது. ப்ர்ஸ்ட் டைம் யூஸ்
பண்ணினப்ப...

கிழி.. கிழி..!!

உஸ்ஸப்பா.. என்னடா இது...

" பெருமைக்கு எருமை மேய்ச்ச கதையா
போச்சே... " ஃபீலிங்கா இருந்தது...

இதை ஜெகன்கிட்ட சொன்னா அவன் வேற
கேவலமா திட்டுவானேனு யோசிச்சாலும்..
அப்புறம் சொல்லிட்டேன்..

அவனும்..

" கவலைப்படாதடா... அது செட்டில் ஆகறதுக்கு
ரெண்டு வாரம் ஆகும்னு " சொன்னான்..

ஓஹோ... அப்படியானு User Manual-ஐ எடுத்து
பாத்தேன்.... அதுலயும்...

" செட் ஆகறதுக்கு ரெண்டு வாரம் ஆகும்னு
குடுத்து இருந்தாங்க... "

சரி ஓ.கேனு ரெண்டு வாரம் தொடர்ந்து
அதுலயே ஷேவ் பண்ணிட்டு வந்தேன்..

ரெண்டு வாரம் போனதும் நல்ல இம்ப்ரூவ்மெண்ட்..

இப்ப..

கிழி.., கிழி.., கிழி.., கிழி..!!

இது ஆவற வேலை இல்ல... 950 ரூபாய்க்கு
பாத்தா.. என் அழகான கன்னம் என்ன
ஆவறதுனு அந்த ஷேவரை தூக்கி
என் பீரோல வெச்சிட்டேன்..

இப்ப என் கோவம் ஜெகன் மேல திரும்பிச்சு..
( பின்ன ஃபிலிப்ஸ் கம்பெனிகாரன்கிட்டயா
கோவப்பட முடியும்..!?! )

" ஏன்டா நாயே... ரெண்டு வாரத்துல செட்டில்
ஆகிடும்னு சொன்னே.. இப்பவும் அதே
மாதிரிதான்டா இருக்கு.. "

" ஹி., ஹி., ஹி.. நான் சொன்னது.. ரெண்டு வாரத்துல
அது உன் பீரோல செட்டில் ஆகிடும்டா..!! "

" அடப்பாவி..!! "
.
.

12 June 2014

நாங்கல்லாம் கணக்குல டைனோசரு..!!

என் Wife ஒரு கணித புலி..

எவ்ளோ பெரிய கணக்கா இருந்தாலும் 
டக்னு போட்டு Answer சொல்லிடுவாங்க..

கணக்கு சரியா இருக்கான்னு கால்குலேட்டரை 
வெச்சி Check பண்றவன் நான்..

கால்குலேட்டர் போட்ட கணக்கு சரியா 
இருக்கான்னு Check பண்றவங்க என் Wife.. 

இப்படித்தான் ஒரு தடவை துணிக்கடையில..

கடைக்காரர் கொடுத்த பில்லை வாங்கி 
நான் கால்குலேட்டர்ல போட்டு 3400 ரூபா 
வருதுன்னு சொன்னேன்..

அதுக்கு என் Wife Manual-ஆ கணக்கு போட்டு  
3200 ரூபா தாங்க வருதுன்னு சொன்னாங்க..

எனக்கு ஒரே சிரிப்பு..!! 

" கால்குலேட்டர் போட்ட கணக்கே தப்பா..? 
இது கொஞ்சம் ஓவரா இல்ல..?!! "

" ரொம்ப சிரிக்காதீங்க..!! கால்குலேட்டர் 
சரியா தான் சொல்லும்.. நீங்க தான் தப்பு தப்பா 
Enter பண்ணியிருப்பீங்க..

மறுபடியும் அதே பில்லை கூட்டி பாத்தா..
அந்த பாழா போன கால்குலேட்டர் இப்ப 
3200 ரூபா காட்டுது..

200 ரூபா கம்மியா வருதேங்கிற சந்தோஷத்தை விட., 
நான் போட்ட கணக்கு தப்பா போச்சேன்னு தான் 
எனக்கு பீலிங்கா இருந்தது..

அப்ப ஒரு முடிவு பண்ணினேன்.. 

என் மனைவியோட கணக்கு கர்வத்தை 
அடக்கணும்னு.. 

ஆனா இனிமே நான் போயி Tables., Formulas 
எல்லாம் மனப்பாடம் பண்ணி என் மனைவியை 
Overtake பண்றது.. இதெல்லாம் ஆவற வேலையா..?!!

அதனால நல்ல குறுக்கு வழிக்காக ரொம்ப நாளா 
Waiting.. அந்த நல்ல நாளும் வந்தது.. 

அப்ப இந்த Book என் கைக்கு கிடைச்சது..



அதுல எவ்ளோ பெரிய கணக்கா இருந்தாலும் ஈஸியா, 
வேகமா போடறது எப்படின்னு எகப்பட்ட 
Tricks & Techniques இருந்தது..

அதுல ஒரே ஒரு Trick-ஐ மட்டும் நான் 
நல்லா Training எடுத்துகிட்டேன்..

என் Wife கிட்ட போயி ஒரு 15 Digit Number சொல்லு 
அதை எவ்ளோ வேகமா " 9 " ஆல  Multiply 
பண்ணி Answer சொல்றேன்னு பாருன்னு 
சேலஞ்ச் பண்ணினேன்..

அவங்களும் ஒரு நம்பர் சொன்னாங்க.. 

568745269856325 x 9 

ANS = 5119707428706925..

வெறும் 15 Secs இந்த Answer-ஐ சொல்லிட்டு  
" எப்புடீ..? "-ன்னு காலரை தூக்கி விட்டுகிட்டேன்..

என் Wife சிரிச்சாங்க..

எங்கே குடுங்கன்னு சரியான்னு பாக்கலாம்னு 
வாங்கி Answer Check பண்ணிட்டு... 

" இந்த Answer தப்புங்க "-னு சொன்னானங்க... 
வெறும் 10 Secs-ல..!!

எனக்கு தூக்கு வாரி போட்டது.. 

" ஆ..!!! என் கணக்கில் குற்றமா..? "

( நெற்றிக்கண்ணை தொறக்கலாம்னு 
ஒரு செகண்ட் யோசிச்சேன்.... அப்புறம் 
இருக்குற ரெண்டு கண்ணுக்கும் எதாவது 
பாதிப்பு வந்துடுமோனு வந்த கோவத்தை 
அடக்கிக்கிட்டேன்..!! )

ஒரு ஓரமா உக்காந்து அதே கணக்கை 
பொறுமையா போட்டு பாத்தா...,

அட... 5118...-க்கு பதிலா 5119 போட்டு இருக்கேன்...

என் பொண்டாட்டி கணக்கு திறமையை 
நினைச்சி ஆச்சரியமா இருந்தது.. 

" எப்படி நிர்மலா.. இவ்ளோ பெரிய கணக்கை 
டக்னு போட்டு Answer தப்புனு கண்டுபிடிச்சே..?!! " 

" நான் கணக்கே போடலைங்க.. எப்படியும் 
நீங்க தப்பாதான் போட்டு இருப்பீங்கனு 
ஒரு குத்து மதிப்பா தான் சொன்னேன்..!! 
ஹி., ஹி., ஹி... " 

" என்னாது குத்து மதிப்பா சொன்னியா..?!! 
அவ்வ்வ்வ்..!!! " 
.
.