சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

30 July 2010

வெச்ச குறி..!!


அப்போ நான் 9th Std.

வேற ஒரு School-ல
Drawing Competition...

அதுல கலந்துக்க
எங்க School-ல இருந்து
10 பேரை கூட்டிட்டு போனாங்க..

அதுல
9th Std A - சுதா.,
9th Std B - நான்.,

எங்களுக்கு படம் வரைய
குடுத்த Title..

" Violence and Non- Violence "

எனக்கு பக்னு ஆயிடுச்சு..

" Violence " - இதுக்கு முன்னாடி
இந்த வார்த்தையை நான்
கேள்விபட்டதே இல்லை..

இதுக்கு என்ன Meaning..?

மத்த பசங்க எல்லாம் வரைய
ஆரம்பிச்சுட்டாங்க..

எங்க English மிஸ் மேல
எனக்கு கோபம் கோபமா வந்தது..

பின்ன., நானும் ஒழுங்காதானே
Fees கட்டினேன்..!!?

எனக்கு மட்டும் Violence-ன்னு
ஒரு வார்த்தை English-ல
இருக்குன்னு சொல்லி தரலையே..
ஏன்..?
ஏன்..?? ஏன்..???

சரி.., பக்கத்தில யார்கிட்டயாவது
கேட்கலாம்னு பார்த்தா..
பக்கத்தில இந்த சுதா பொண்ணு..

அந்த பொண்ணு சும்மாவே
நம்மள மதிக்காது..
இந்த Doubt வேற கேட்டா
அவ்ளோதான்.

எல்லாம் நம்மள விட
20 மார்க் கூட எடுக்குற திமிர்...
( ஒவ்வொரு பாடத்திலயும்..)

முன்னாடி பெஞ்ச்ல இருந்தவன்கிட்ட
இந்த தலைப்புக்கு என்ன
அர்த்தம்னு கேட்டேன்...

" அஹிம்சையும் , தீவிரவாதமும்னு "
சொல்லிட்டு...

என்னை கேவலமா ஒரு லுக்
வேற விட்டான்...

( இந்த சின்ன விஷயத்துக்கு
ஏன்டா இப்படி தீவிரவாதி
மாதிரியே முறைக்குற..??!! )

அப்புறம் என் கற்பனை குதிரையை
தட்டி விட்டேன் பாருங்க...

காந்தி தாத்தா ஒரு புறாவை
பறக்க விடற மாதிரியும்..,

ஒரு வேடன் ஒரு புறாவை
அம்பு விட குறி பார்க்குற
மாதிரியும் ஒரே பக்கத்தில
ரெண்டு படம் போட்டேன்..

படம் சூப்பரா வந்திருந்தது..
Prize Guarantee-ன்னு மனசுல
நினைச்சுக்கிட்டேன்..

ஆனா Result வந்தப்போ
எனக்கு Prize கிடைக்கலை..
ரொம்பவே Feel ஆயிட்டேன்..

அப்போ என் Friend மணி
சொன்ன ஆறுதல் வார்த்தை
இருக்கே..

துவண்டு போயிருந்த என்னை
தூக்கி நிறுத்தின வார்த்தை அது...

" ரொம்ப Feel பண்ணாதடா...
சுதாவுக்கும் Prize கிடைக்கலை...!! "

" என்னாது.., சுதாவுக்கும் Prize
இல்லையா..?
ஆஹா
.. கேட்கவே எவ்ளோ
சந்தோஷமா இருக்கு...!! "


பின் குறிப்பு :

Prize வாங்க நான் வெச்ச குறி
எப்படி சொதப்பிச்சின்னா...

படமெல்லாம் நல்லா தான்
வரைஞ்சிருந்தேன்.. - ஆனா
Title-ஐ தான் மாத்தி எழுதிட்டு
வந்திட்டேன்..

காந்தி தாத்தாவுக்கு - Violence

வேடனுக்கு - Non- Violence

( காந்தி தாத்தா மன்னிக்க.. )

அது என் தப்பில்லைங்க..

Violence and Non- Violence-க்கு
Meaning கேட்டப்ப அந்த லூசுப்பய

" அஹிம்சையும் , தீவிரவாதமும்னு "
தானே சொன்னான்..

நான் என்ன பண்றது..??
.
.

28 July 2010

தில்லாலங்கடி ( ஒரிஜினல் )


டிஸ்கி : இது " தில்லாலங்கடி "
பட விமர்சனம் அல்ல..

இந்த போட்டோல இருக்கறது
யார்னு தெரியுதா பாருங்க..

தெரியலயா..??
பரவாயில்ல..
Feel பண்ணாதீங்க...

எப்பவும் தெரியாம இருக்கறது
தப்பில்ல..
தெரிஞ்சிக்காம இருக்கறது
தான் தப்பு..

சரி வாங்க இவரை பத்தி
தெரிஞ்சிக்கலாம்..

முதல்ல இவரு போட்டோவை
நல்லா ஒரு தடவை தொட்டு
கும்பிட்டுக்கோங்க..

இவர் பெயர் : Victor Lustig.

மிகப்பெரிய Genius..

Simple-ஆ ஒரு வரியில
சொல்லணும்னா...
இவரு No.1 ஒரிஜினல்
தில்லாலங்கடி..

ஆனா பொறாமை பிடிச்ச
இந்த உலகம்
சதி பண்ணி இவர் புகழை
மறைச்சிடுச்சு..

பின்ன..
இவ்ளோ புத்திசாலியான
உங்களுக்கே கூட
இவர் யார்னு தெரியலயே..!??

ஆனா..
" ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை.. "
Correct தானே..!!

ஆமா.., இவரு அப்படி
என்ன தான் பண்ணினாரு...??!!


ஒரு Property-ஐ
அதோட Owner-க்கே
தெரியாம வித்துட்டாரு..

( இதென்ன பெரிய விஷயம்..?? )

அது ஒரு Govt. Property..

( இருக்கட்டுமே..! )

ஒரு சின்ன துண்டு பேப்பரை
கூட கண்ணுல காட்டாம
அதை வித்துட்டாரு..

( அட.., இது ஊர்ல., உலகத்தில
நடக்காமயா இருக்கு..!!
வாங்குறவன் லூசுப்பயலா இருந்தா
எல்லாம் தான் பண்ணலாம்..!! )

அட.., வாங்கினவரும்
லேசுப்பட்ட ஆளில்ல..,

City-லயே மிக பெரிய
இரும்பு வியாபாரி..
பல Business Techniques
கரைச்சி குடிச்சவரு.,

( ஓ...., அப்படியா..??
சரிப்பா வித்தாரு.,
வித்தாருன்னு சொல்றியே..
அப்படி என்னதாம்பா வித்தாரு..?? )

அதாங்க France-ல இருக்குமே..
ஓசரமா..

" Eiffel Tower "

பின் குறிப்பு :

தாஜ்மகாலையும் விற்க
போறதா ஒரு நியூஸ் இருக்கு..

வாங்க ஆசைபடறவங்க
என்னை Contact பண்ணுங்க..
-------------------------------------

பின் டிஸ்கி :

எப்படி வித்தார்னு தெரியணுமா..?
Comment-ஐ பாருங்க..

இந்த கதையை நம்பலையா..?
இங்கே பாருங்க..
.
.

26 July 2010

ஹலோ..!! Busy-யா..? Free-யா..??!























போன வாரம் ஒரு நாள்..

எனக்கு என் Friend Mani-கிட்ட
இருந்து Phone...

" ஹலோ வெங்கி..!! "

" சொல்லுடா மங்கி..!! "
( மங்கிகள் மன்னிக்க.. )

" என்னடா பண்ணிட்டு இருக்கே..!! "

" சும்மாதான் இருக்கேன்.."

" நான் மட்டும் என்ன நீ சேலம் கலக்டரா
இருக்கேன்னா சொன்னேன்..? நீ வெட்டியா
இருக்கேன்னு தான் இப்ப உலகத்துக்கே
தெரியுமே..!! "

" கிர்ர்ர்ர்... " ( அடப்பாவி... Blog எழுதினா
இந்த கெட்ட பேர் வேற தாங்கிக்கணுமா..? )

இனிமே இவன் போன் பண்ணினா
உஷாராதான் இருக்கணும் போல...

4 நாள் கழிச்சி மறுபடியும் Mani's போன்..

" ஹலோ வெங்கி..!! "

" சொல்லுடா மணி... "
( பட்டதே போதும்டா சாமி.. )

" என்னடா பண்ணிட்டு இருக்கே..!! "

( ஆஹா மறுபடியும் Same Question..!!
உஷார்.. உஷார்...!! )

" ரொம்ப Busy-யா இருக்கேன்டா.."

" ஓ.. அப்படியா... சரி சாப்பிட்டு முடி..
அப்புறமா கூப்புடுறேன்..! "

டொக்...

அட., அட., அடப்பாவி...!!

கால் வெக்கிற இடமெல்லாம்
கண்ணிவெடி வெக்குறாங்களே..!!

ஆமா இவன் போன வாரம் வரை
நம்ம கூட தானே இருந்தான்..!!
எப்ப கட்சி மாறினான்..??!


இன்று ஒரு தகவல் :
------------------------

" ஊரார் பதிவுக்கு Vote போட்டால்.,
நம் பதிவு தானே Popular ஆகும்..!! "

- Blog அறிஞர் வெங்கட்.
.
.

22 July 2010

To ---> கவிஞர் வைரமுத்து...,





















" அவர்கள் மூளையில்
விதையை போல்
தூவப்பட வேண்டிய அறிவு
ஆணியை போல்
அறையப்படுகிறது...!! "

இது நம்ம குழந்தைகளின்
Education System-ஐ பத்தி
18 வருஷத்துக்கு முன்னாடி
நீங்க எழுதினது தான்..

ஒருவேளை அப்ப வேணா
அப்படி இருந்திருக்கலாம்..

இப்பல்லாம் அப்படி இல்லையே..!

நம்ம Education System-ல
இன்னிக்கு எவ்ளவோ மாற்றம்..!

Computer., Abacus-ன்னு
நிறைய Improvement..!!

இதையெல்லாம் யோசிக்காம
சும்மா பழைய பல்லவியே
பாடிட்டு இருந்தா எப்படி..??

அதனால நான் என்ன
சொல்ல வர்றேன்னா....

காலத்துக்கு தகுந்த மாதிரி
மாற்றம் வேணும் எங்களுக்கு..

அந்த மாற்றம் உங்க
கவிதையிலையும்
வேணும்னு தான்
ஆசைப்படறோம்..

So.., உங்க அனுமதியோட

அந்த கவிதையில
" ஆணிக்கு "
பதிலா
" கடப்பாரை "
போட்டுக்கறோமே..!!


இன்று ஒரு தகவல் :
---------------------

" ஓடி விளையாடு பாப்பா..!! " - அது
அந்தக் காலம்...

" ஓடு.., ஓடு.., ஓடு பாப்பா...!! " - இது
இந்தக் காலம்...

பாவம் நம்ம குழந்தைகள்..
.
.

20 July 2010

யார்..?
























அமெரிக்கா., துபாய்., ஜெர்மனி...

இப்படி உலகம் முழுக்க இருந்து
நேத்து எனக்கு மக்கள் போன்
பண்ணிட்டே இருக்காங்க...

ஆனா எல்லோரும்
கேக்கறதென்னவோ
ஒரே கேள்வி தான்...

" யார் அந்த அதிர்ஷ்டசாலி...? "

சும்மா சொல்லக்கூடாது..

இன்னிக்கு உலக தமிழர்கள்
எல்லோரும் ஆவலா
எதிர்பார்த்திட்டு இருக்கறது
இந்த விஷயத்தை தான்..

" எந்த விஷயம்..?? "

" என்ன இப்படி கேட்டுபுட்டீங்க..?? "

இந்த ஒரு Diamond Chance-காக
உலகம் முழுக்க எத்தனை எத்தனை
பேர் Wait பண்ணிட்டு இருக்காங்க
தெரியுமா...??

அதுவும் தெரியாதா..??

என்னங்க நீங்க...
எது கேட்டாலும்
தெரியாது.,தெரியாதுன்னு
சொல்றீங்களே..!!

சரி அப்படியே நம்ம Follwers
List-ஐ கொஞ்சம் பாருங்க...

99 Followers இருக்காங்களா..??

ம்ம்... இப்ப புரியுதா...?!

அந்த அதிர்ஷ்டசாலி
100வது Follower யாரு..??

பின்ன கோகுலத்தின் சூரியன்
Blog-ன் 100வது Folower-ன்னா
சும்மாவா..??

அமெரிக்க ஜனாதிபதியோட
Special Guest-ஆ போகணும்,

ஐ.நா.சபையில போயி
சிறப்புரை வேற ஆற்றணும்..

இன்னும் இது மாதிரி
எவ்ளோவோ இருக்கே...!!

OK.. OK. இதோட நிறுத்திக்கறேன்..
கை வேற வலிக்குது.. ( சுத்தி.., சுத்தி..)
.
.

18 July 2010

குற்றம்... நடந்தது என்ன..??















July 11th 2010 முதல்..

என் Blog, என் Gmail
இதெல்லாம் திடீர்ன்னு
என் System-ல Open ஆகலை...

( வேற Websites எல்லாம்
Open ஆச்சு.. )

இதுல எதாவது சதி
இருக்குமோன்னு ஒரு
சின்ன Doubt..

சரின்னு CBI-க்கு ஒரு
போன் போட்டு..,

" இந்த Matter-ஐ கொஞ்சம் பாருங்கன்னு "
சொல்லி வெச்சேன்...

நேத்து Evening CBI-ல
இருந்து போன்..

CBI : வெங்கட்.., உங்க Doubt உண்மைதான்..

நான் : அப்ப அது சதி வேலை தானா..??

CBI : 100% சதிவேலை..

நான் : யாரு..??

CBI : சொல்றேன்... நீங்க Use பண்ற
Browser எது..?

நான் : Google Chrome..

CBI : உங்க Blog எதுல இருக்கு..?

நான் : Blogger-ல

CBI : நீங்க Use பண்ற Mail..?

நான் : G-Mail..

CBI : நீங்க Use பண்றது
Orkut-ஆ..? Facebook-ஆ..?

நான் : Orkut..

CBI : ம்ம்.. சந்தேகமேயில்லாம
இது Google வளர்ச்சியை தடுக்க
நடந்த சதி..

நான் : அப்படியா..? அப்ப எதுக்கு
என்னை Target பண்ணனும்..??

CBI : ஏன்னா... நீங்க Google Use
பண்றதால இந்த 6 மாசத்துல
கிட்டதட்ட 6.5 கோடி பேர் Google
Use பண்றதா ஒரு சர்வே
சொல்லுது...

நான் : ( தப்பான சர்வேயா இருக்கும் போல..,
ரொம்ப கம்மியா சொல்லுது..!! )
சரி அதனால..??

CBI : உங்க வளர்ச்சியை தடுத்தா.,
அது Google வளர்ச்சியை தடுத்த மாதிரி..

நான் : ஓ.. இப்ப புரியுது..!
சரி இதையெல்லாம்
பண்ணினது யாரு..??

CBI : பில் கேட்ஸ் ( Microsoft )

நான் : இந்த பில் கேட்ஸ்க்கு கட்டம்
சரியில்லைன்னு நினைக்கிறேன்..
நம்ம கூட விளையாடறதே
வேலையா போச்சு..!!

CBI : சரி இந்த பில் கேட்ஸ்-ஐ
என்ன பண்ண போறீங்க..?

நான் : பஞ்ச் டயலாக் சொல்லி
Warning குடுக்க வேண்டியது தான்..

@ பில் கேட்ஸ்.,

" எங்க கப்பல் மூழ்கினா கூட
நாங்க Feel பண்ண மாட்டோம்லே..
ஏன்னா..., எங்களுது எல்லாமே
நீர் மூழ்கி கப்பல்..!! "



ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( டெரர் பாண்டியன் )
இந்த சதி வேலையில VKS-ம்
உடந்தையா இருப்பாங்களோ..??

ஹி., ஹி., ஹி...
காமெடி பண்ணாதீங்க..!!

System Hang ஆயிட்டாலே
என்ன பண்ணனும்னு கூட
அவங்களுக்கு தெரியாது..
.
.

16 July 2010

நான் வந்துட்டேடேடேன்ன்ன்...!!!

"சிங்கம் Rest எடுத்திட்டு இருந்தா..,
சிறு நரிங்க Film காட்டுதே..!!?? "


1. இது மொரீசியஸ் Fox

2. இது சிங்கப்பூர் Fox
.
.

11 July 2010

தில்லுதுர..?!!

















Year : 1997..
இடம் : எங்க காலேஜ்..

அன்னிக்கு என் Friend பாலு
ரொம்ப சோகமா இருந்தான்..

Because., அவன் Lover
மூணு நாளா காலேஜ் வரலை..
என்ன காரணம்னு தெரியல..

நான் : அவங்க வீட்டுக்கு
ஒரு போன் பண்ணி பாருடா..

பாலு : 4 தடவை போன் பண்ணிட்டேன்..
4 தடவையும் அவ அண்ணன் Ashok தான்
போனை எடுத்தான்.. கட் பண்ணிட்டேன்..

நான் : தப்பு பண்ணிட்டியே...

பாலு : போன் பண்ணினது தப்பா..?

நான் : அது தப்பில்ல.. ஆனா எதுவும்
பேசாம லைனை கட் பண்ணினது தப்பு..
அப்படி பண்ணினா தான் அவங்க
அண்ணனுக்கு Doubt வரும்..

பாலு : பின்ன என்ன பண்ணனும்..?

நான் : " அவன் இருக்கானா..? "
" இவன் இருக்கானா..? " இப்படி
சம்பந்தம் இல்லாம எதாவது கேட்கணும்..

" இல்லைங்க.. இது Wrong நம்பர்னு "
அவனே சொல்லிடுவான்..
அப்பதான் நாம கட் பண்ணனும்..

( நாங்கல்லாம் எத்தனை லவ்க்கு
Help பண்ணி இருப்போம்..)

பாலு : ஓ.. இதுல இவ்ளோ விஷயம்
இருக்கா..?

நான் : Yes.., Theory Class புரிஞ்சதா..?
வா இப்போ Practicals பார்க்கலாம்..

----------------------------------------

இடம் : Phone Booth..

இந்த தடவை Dial பண்ணினது
The One & Only..,
Uncomparable Mr.Venkat...

But Balu's Bad Luck Continues..
மறுபடியும் லைன்ல Mr.Ashok..

" ஹலோ...! "

" அது முருகன் வீடா..? "

" ஆமா..! "

( என்னாது ஆமாவா..??!! )
ஒரு Second ஆடி போயிட்டேன்..

" முருகன் இருக்கானா..? "

" நான் முருகன் தான் பேசறேன்.."

( ஓ.. நம்மகிட்டயே Game-ஆ..??
நாங்கல்லாம் கேடிங்க.. இப்ப பாரு...)

" டேய் முருகா.. என்னை தியேட்டர்க்கு
வர சொல்லிட்டு.., நீ இன்னும் வீட்ல
என்னடா பண்ணிட்டு இருக்கே..??! "

" ஹலோ.. உங்களுக்கு எந்த
முருகன் வேணும்..?? "

" ம்ம்.. பழனிமலை முருகன்..! "

" நான் யார் தெரியுமா..? "

" நீ ஒரு மாங்கான்னு இங்கே
எலோருக்கும் தெரியும்.., சீக்கிரம்
கிளம்பி வாடா வெண்ணை..! "

டொக்...

நான் பாலுவை பார்த்து..

" எப்புடி..?? "

" கலக்கிட்ட.. "

" ஆமா எதுக்கு உன் மச்சான்
" நான் யார் தெரியுமான்னு..? "
பஞ்ச் டயலாக்கெல்லாம் பேசறான்..? "

" விட்றா மச்சி.. எல்லாம் Inspector-ஆ
இருக்கோம்கிற திமிரு.."

" என்னாது Inspector-ஆ..?!! அப்ப
நீ லவ் பண்ணறது Inspector தங்கச்சியா..? "

" ஹி., ஹி., ஹி... ஆமாம்.."

" Excuse Me Gentleman..!! நீங்க யாரு..?
இதுக்கு முன்னாடி உங்களை
நான் பார்த்ததே இல்லையே...!! "

" அடப்பாவி...?!! "
.
.

08 July 2010

காதல்., காதல்., காதல்...!!














( படித்ததில் பிடித்தது...)

வணக்கம் சொல்லி
சந்திக்கையிலும்..,

வருகிறேன் என
விடைபெறுகையிலும்..,

இயல்பாய் பேசி
விலகுகிறாய் நீ..

இயக்கமே தடைப்பட்டு
நிற்கிறேன் நான்..

------------------------------------

" நீதான் " என்று சொல்ல
உனக்கு தைரியம் இல்லை..

" நானா..? " என்று கேட்க
எனக்கும் தெம்பில்லை..

உன் கவிதைப் பெண் யாரடா..??!!

------------------------------------

இருபது நிமிடம்
தாமதமாய் வந்த
என்னை
திட்டுகிறாய் நீ..,

இருபத்தியொரு வருடம்
தாமதமாய் வந்த
உன்னை
எதுவுமே சொல்லாமல்
அனுசரித்துக் கொள்கிறது
என் காதல்..!

------------------------------------

நீ கேட்டுக் கொண்டதால்
இந்த கவிதையைக் கூட
அழகாகவே எழுத
ஆசைப்படுகிறேன்..

ஆனாலும்
எழுதப்போவதில்லை..

காதலை விடவும்
அழகான ஒன்று
நமக்கெதற்கு..??!!

------------------------------------

பிரிந்து போன நாளில்
எல்லோரும் கொடுத்தார்கள்
நினைவு பரிசு..

நீ மட்டும் கொடுத்தாய்
உன் நினைவுகளை பரிசாக..

------------------------------------

விக்கலில் நான்
தண்ணீர் குடிப்பதில்லை..,
நினைப்பது நீயாக
இருந்தால் நீடிக்கட்டுமே..!!

------------------------------------

பின் குறிப்பு : உங்களுக்கு பிடிச்ச
காதல் கவிதைகளையும்
Comment Section-ல எழுதலாமே...!!
.
.

04 July 2010

ஒரு சின்ன Info...! அவ்ளோதான்..!!

என் இனிய தமிழ் மக்களே..!!

உங்க எல்லோருக்கும்
நான் சொல்லிக்கிறது
என்னான்னா..

நாளைக்கு ( 05.07.2010 - Monday )
ஒரு நாள் நம்ம Blog-க்கு லீவ்..

இன்னிக்கு Night
நம்ம Best Friend-க்கு கல்யாணம்..

அந்த கல்யாணத்துக்கு
நான் அவசர அவசரமா
இப்ப கிளம்பிட்டு இருக்கேன்..

So.., நாளைக்கு ஒரு நாள்
Kindly Adjust..

என்ன இது..?!
ஒரு நாள் லீவுக்கெல்லாம்
இப்படி Feel பண்றீங்க..?

கண்ணை துடைச்சுக்கோங்க..
இதெல்லாம் All in the Game..!!

ஓ.கே.. Bye..

ஆங்.. சொல்ல மறந்துட்டேனே..,
நம்ம Friend பேரு..

" மஹேந்திர சிங் டோனி "

-----------------------------------

டிஸ்கி : இந்த பதிவு Number - 111
.
.

03 July 2010

நாராயணா..! அல்வா ரெடி..!!


டிஸ்கி : இது போன பதிவோட
Comment Section-ல வர வேண்டியது..
நான் பதிவு போட 3 - 4 நாள்
ஆகுதுன்னு மக்கள் ரொம்ப
Feel பண்றதால.,
இதை பதிவா போடுறேன்..

--------------------------------------

2012-ல உலகம் அழிஞ்சிடும்னு
சொல்றாங்க.

எனக்கென்னவோ அதுக்கான
அறிகுறி இப்பவே தெரிய
ஆரம்பிச்சுடுச்சு..

OK.. Matter-க்கு வருவோம்..

இடம் : பிரம்மலோகம்..
நரதர் வருகை...

நாரதர் : நாராயணா.,நாராயணா..!!

பிரம்மா: வாருங்கள் நாரதரே..!
என்ன இவ்வளவு தூரம்..?

நாரதர் : எனக்கு ஆறு மாதம் லீவ்
வேணும் பிரம்மதேவா..!!

பிரம்மா: என்ன விளையாடுகிறீரா..?
நீங்கள் லீவில் போய்விட்டால்
பூலோகத்தில் கலகமே இருக்காது.,
மானிடன் சந்தோஷமாக இருந்தால்.,
எங்களை நினைக்ககூட மாட்டானே.?!

நாரதர் : கவலை வேண்டாம் பிரம்மதேவா..,
நான் பூலோகத்தில் எனக்கு Substitute-ஆக
ஒருவரை நியமித்து உள்ளேன்..
அவர் பெயர் - ' அனு '

பிரம்மா: என்ன ஒரு சாதாரண மானிடப் பெண்
உங்களுக்கு Substitute-ஆ..?

நாரதர் : அப்படியெல்லாம் அவர் திறமையை
குறைத்து மதிப்பிடாதீர்கள்..
அவர் ஒரு " நா.போ.நா. "

பிரம்மா: அப்படியென்றால்..??

நாரதர் : " நாரதர் போற்றும் நாரதர்.."
அவர் திறமையை கொஞ்சம்
இங்கே பாருங்கள்..

( "கோகுலத்தில் சூரியன் " Blog-ல்
Comment Section-ஐ பிரம்மா பார்க்கிறார்.. )

பிரம்மா: ஆஹா.., பிரமாதம்., அற்புதம்..!!
4 வரியில் 40 கலகம் பண்ணுகிறாரே..!!

நாரதர் : நான் தான் சொன்னேனே..

பிரம்மா: மிகவும் திறமைசாலியான
பெண்ணாய் இருக்கிறாரே..
Fees அதிகமோ..??

நாரதர் : இல்லவே இல்லை..
இதை அவர் தன் ஆத்மதிருப்திக்காக.,
ஒரு பொதுசேவையாக செய்து வருகிறார்..

பிரம்மா: அப்படியா..!! பேஷ்.., பேஷ்..!!
சரி நாரதரே.., நீங்கள் எத்தனை
நாள் லீவ் கேட்டீர்..??

நாரதர் : ஆறு மாசம்..

பிரம்மா: ஒரு வருடம்...
வேண்டாம்., வேண்டாம்
VRS வாங்கிக்கொள்கிறீரா..??

"ஆஹா.. இந்த அனு நம்ம வேலைய
நம்மகிட்டயே ஆரம்பிச்சுட்டாங்களே.."

-------------------------------------------

டிஸ்கி: ஹி.,ஹி..ஹி..!
அனுவின் பரம்பரையே என்னை
மன்னிப்பார்களாக..
.
.

01 July 2010

பிடிச்சிருக்கு..!!























நானும், என் Wife-ம்..
துணிகடையில Saree
எடுத்திட்டு இருந்தோம்..

அப்போ Monki என்கிட்ட
சொல்லிச்சி..
( Monki = என் மனசு )

ஹி.,ஹி., ஹி..!
மனம் ஒரு குரங்குன்னு
சொல்லுவாங்கல்ல..

" வெங்கி., இப்படி சும்மா இருந்தா
எப்படி..? உன் ஏழாவது அறிவை
Use பண்ணி சீக்கிரம் ஒரு Saree
Select பண்ண வை...! "

" OK.. பண்ணிடவேண்டியது தான்..!! "

என் Wife-கிட்ட திரும்பி...

" ஏதோ ஒரு Saree சீக்கிரம் எடு..,
எப்படி இருந்தாலும் Exchange பண்ண
வருவோம்ல.., அப்ப நல்லதா
பார்த்து எடுத்துக்கலாம்.. ! "

Wife முறைச்சி-ing..

( சரி எதாவது தமிழ் Sentiment முயற்சி
பண்ணலாம்.. )

" நிர்மலா.. இந்த Blue கலர் Saree எனக்கு
ரொம்ப பிடிச்சிருக்கு..! "

" ஐயே.. நல்லாவே இல்ல.. "

" நம்ம தமிழ் பண்பாடு என்ன சொல்லுது
தெரியுமா..? "

" என்ன சொல்லுது..?? "

" புருஷனுக்கு எது பிடிச்சாலும்.,
அது பொண்டாட்டிக்கும் பிடிக்கணும்..! "

" பைத்தியம் பிடிச்சா கூடவா..??!! "

" ????....!!!!!..?!.. "
.
.