சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

29 April 2011

Power இப்போ Cut..!!திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல
எல்லாம் பவர் கட்டானா என்ன
பண்ணுவாங்க...

அமெரிக்கா : எதாவது Terrorist Attack-ஆ
இருக்குமோன்னு பயந்து போயிடுவாங்க.
Friends-க்கு போன் பண்ணி என்ன
மேட்டர்னு கேப்பாங்க..

ஜப்பான் : வீட்டுக்கு வெளியே ஓடி
வந்து எட்டி பார்ப்பாங்க.. சுனாமியா
இருக்குமோன்னு..

இங்கிலாந்து : வீட்ல எதாவது Fuse
போயிடுச்சான்னு Check பண்ணுவாங்க.

பிரான்ஸ் : EB Office-க்கு போன் போட்டு
என்னாச்சுன்னு கேட்டு, கன்னா பின்னான்னு
சத்தம் போடுவாங்க..

நம்ம இந்தியாவுல.,
அதுவும் நம்ம தங்கத் தமிழ்நாட்ல
எப்படின்னா..

நிகழ்ச்சி 1 :

EB Office முன் ஒரு பெரும் கூட்டம்..

ஆபீஸர் : யோவ் என்னாய்யா இது..!
கரண்ட் கம்பம் சாஞ்சி ஒரு வாரமாகுது
இப்பதான் வந்து Complaint குடுக்கறீங்க..
இவ்ளோ நாள் கரண்ட் இல்லாம
என்னய்யா பண்ணிட்டிருந்தீங்க..?

மக்கள் : ஹி., ஹி., ஹி.. பவர் கட்னு
நினைச்சோம்ங்க..

நிகழ்ச்சி 2 :

" என்னடா மாப்ள இன்னிக்கு
கரண்ட் கட் ஆகவே இல்ல..? "

" ஊருக்குள்ள எதாவது Function-க்கு
எம்.எல்.ஏ , மந்திரின்னு யாராச்சும்
வந்திருப்பாங்கடா..!! "

டிஸ்கி 1 : காலைல 10 மணிக்கே போட்டு
இருக்க வேண்டிய பதிவு இது., ஆனா
எழுதி முடிக்கறதுக்குள்ள நாலு தடவை
பவர் கட் ஆனதால் 5 மணிக்கு தான்
போட முடிஞ்சது..!! :(

டிஸ்கி 2 : தமிழ்நாட்டின் மின்தேவையை
பூர்த்தி செய்ய முன்கூட்டியே பல திட்டங்கள்
போடாத முன்னாள் ஆட்சியாளர்களான

வீரபாண்டிய கட்டபொம்மன்.,
ராஜ ராஜ சோழன் போன்றோரை
நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
.
.

26 April 2011

அவங்ககிட்ட Opinion கேட்டா இப்படிதான்..!

சில சமயம் நான் பதிவு எழுதி
முடிச்சிட்டா.. என் Wife-கிட்ட
Opinion கேப்பேன்..!

அன்னிக்கும் அப்படிதான் Opinion
கேக்கறதுக்காக என் Wife-ஐ
கூப்பிட்டேன்.. 

காலை 7 மணி :

" மாலா..! வந்து இந்த Draft-ஐ
கொஞ்சம் பாரேன்..! "

" நீங்க Post போடுங்க.. நான் அப்ப
படிச்சிக்கிறேன்..!!  "

( பதிவு போட்டா.. Damage எவ்ளோ
ஆகும்னு ஒரு Trial பார்க்கலாம்னா.. )

மதியம் 1.30 மணி :

" மாலா..! Post போட்டுட்டேன்
பார்க்கறியா..?  "

" கமெண்ட்ஸ் வரட்டும்ங்க.,
சேர்த்து படிச்சிக்கிறேன்..!! "

( பார்ரா.. நாம கேவலப்படறதை
பார்க்க எவ்ளோ ஆசைன்னு..! )

மாலை 4 மணி :

" மாலா.. 15 Comments வந்திருச்சு..! "

" நீங்க Comments-க்கு Reply பண்ணுங்க..
நான் Night படிச்சிக்கிறேன்..!! " 

( ஆஹா., மறுபடியும் எகிறி குதிச்சு
எஸ்கேப்...!!  )

இரவு 9 மணி :

நான் எல்லா Comments-க்கும் Reply
போட்டு முடிச்சிட்டேன்..

இப்ப ஒரு தடவை பதிவை படிக்க
கூப்பிட்டு பார்க்கலாமா..?

வேணாம்..!! தானா வரட்டும்..

அப்புறம் " என்னை கொடுமை பண்றார்னு "
போலீஸ்ல போயி Complaint பண்ணிட்டா
வம்பா போயிடும்..

10 நிமிஷம் கழிச்சு..!!

" என்னங்க.. Comments Reply எல்லாம்
போட்டு முடிச்சிட்டீங்களா..?! "

" ஓ.. முடிச்சிட்டேனே..!! "

" ஓ.கே., அப்படின்னா இப்ப
நான் படிக்கிறேன்.. "

( பதிவு + கமெண்ட்ஸ் படிச்சிட்டு
என் மனைவி சிரிச்சிட்டே என்கிட்ட.. )

" எப்பவும்., உங்க பதிவை விட
உங்க கமெண்ட்ஸ் படிக்கும் போது
தான்ங்க எனக்கு சிரிப்பு சிரிப்பா வரும்..!! "

( வெங்கி., பதிவு சுமாரா இருந்தாலும்.,
Comments-ல கலக்கிடறடா., Keep it Up...!! )

" Thank You., எல்லோரும் இதே தான்
சொல்றாங்க..!! " 

" ஹா., ஹா., ஹா..!!
ஓவரா கற்பனை பண்ணிக்காதீங்க...
இதெல்லாம் ஒரு கமெண்டான்னு
நினைச்சு நினைச்சு சிரிப்பேன்..! "

" அடப்பாவி..! "
.
.

22 April 2011

" சிரிப்பு போலீஸ் " மறைத்த உண்மைகள்..!!

" சிரிப்பு போலீஸ் " ரமேஷ்,
சேலம் வந்து என்னை மீட் பண்ணினதை
பத்தி அவர் பிளாக்ல எழுதி இருந்தாரு..

ஆனா.. அந்த பதிவுல அவர் சொல்லாம
மறைச்ச உண்மைகள். இதோ..

ரமேஷ் : எப்படி இருக்கீங்க வெங்கட்..

நான் : இதுவரைக்கும் நல்லா தான்
இருந்தேன்..

ரமேஷ் : வெங்கட் எனக்கு ஒரு டவுட்..

நான் : என்ன சொல்லுங்க..?

ரமேஷ் : ஒரு வாரமா என்கிட்ட
ஒரு மாற்றம் தெரியுது..!

நான் : ஏன் யார்கிட்டேயும் ஓசி சாப்பாடு
வாங்கி சாப்பிடறதில்லையா..?

ரமேஷ் : மாற்றம் தெரியுதுன்னு தான்
சொன்னேன். திருந்திட்டேன்னா சொன்னேன்..

நான் : ஓ..,சரி என்ன விஷயம் சொல்லுங்க..

ரமேஷ் : தூக்கம் வருது.. ஆனா தூங்க
முடியல..!!

நான் : சரி.,

ரமேஷ் : பசிக்குது., ஆனா சாப்பிட முடியல

நான் : அடடா.. அப்படியா..?

ரமேஷ் : Work-ல சரியா Concentrate பண்ண
முடியல..

நான் : இது வேறயா..?

ரமேஷ் : இப்ப சொல்லுங்க வெங்கட்..
இதுக்கு பேருதான் லவ்வா..?

நான் : இல்ல ரமேஷு.., இதுக்கு
பேருதான் " பன்னி காய்ச்சல்..! "

ரமேஷ் : கலாய்க்காதீங்க வெங்கட்..
இந்த போட்டோவை பாருங்க.

( ரமேஷ் என்னிடம் காட்டிய அந்த
கேவலமான போட்டோ இது தான்.. )

ரமேஷ் : எங்க ஜோடி பொருத்தம் எப்படி..?

நான் : இதான் உங்க லவ்வரா..?

ரமேஷ் : ஏன் டவுட்டா கேக்கறீங்க..?
தோள் மேல கை போட்டிருக்கேனே.
கவனிக்கலை.?!!

நான் : அந்த பொண்ணு துப்பாக்கி
மேல கை வெச்சிருக்கே.. அதை
நீங்க கவனிக்கலை..?!!

ரமேஷ் : அதுவா..? அந்த பொண்ணுக்கு
தைரியம் ஜாஸ்தி..

நான் : அதான் இப்படி ஒரு Risk எடுக்குதா..?

ரமேஷ் : விளையாடாதீங்க..!!

நான் : நானா விளையாடுறேன்..?
நீங்க தான் ஒரு பொண்ணோட
வாழ்க்கையில விளையாடுறீங்க..

ரமேஷ் : சரி., இப்ப எனக்கு Help
பண்ண முடியுமா.? முடியாதா..?

நான் : ஓ.கே.. Cool., Cool..!!
சிங்கப்பூர்ல என் பிரண்ட் ஒருத்தன்
இருக்கான்.. உடனே அவனை போயி
பாருங்க.. அவன் உங்களுக்கு நிச்சயம்
Help பண்ணுவான்..

ரமேஷ் : அவர் பெயர் என்ன..? அங்கே
அவரு என்னவா இருக்காரு..?

நான் : அவன் பேரு ஹரிபிரசாத்.,
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில
டாக்டரா இருக்கான்..

டிஸ்கி : இப்ப தெரியுதா.. சிரிப்பு போலீஸ்
எதுக்காக சிங்கப்பூர் போனார்னு..
.
.

18 April 2011

துப்பு., துப்பு.. சே.. துப்பறியும் சிங்கம்..!!


காலேஜ் படிச்சிட்டு இருந்தப்ப
ஒரு நாள் என் Friend கிச்சா
எனக்கு போன் பண்ணி..

" டேய்..!! ஒரு வாரமா ஒரு பொண்ணு
என்கிட்ட போன் பண்ணி பேசுதுடா..
என்னடா பண்றது..? "

" நீயும் பேசு.. இதுக்கெல்லாமா
என்கிட்ட Permission கேப்பே..?!
அவ்ளோ பாசக்கார பையனாடா நீ..?!! "

" மண்ணாங்கட்டி..!! அந்த பொண்ணு
பெயர்., போன் நம்பர் எல்லாம் சொல்ல
மாட்டேங்குது.. எப்படி கண்டுபிடிக்கறது..?!! "

( அடடா.., கொஞ்ச நேரம் கூட
இந்த " வெங்கட் பாண்ட் 007-ஐ "
( ஹி., ஹி., ஹி.!! ) Free-ஆ விட
மாட்டாங்க போல இருக்கே..! )

" சரி.. நாளைக்கு நான் உங்க வீட்டுக்கு
வர்றேன்.. அப்ப பேசிக்கலாம்..! "

இடம் : கிச்சா வீடு

நான் இருக்கும் போது மறுபடியும்
அதே போன் கால் வந்தது..

இந்த தடவை Attend பண்ணினது நான்.

நானும் எவ்ளோ நைசா கேட்டு பாத்துட்டேன்..
அந்த பொண்ணு கடைசி வரை தன்னோட
பெயரை சொல்லவே இல்ல.. ஆனா
ஒரே ஒரு க்ளூ மட்டும் குடுத்தது..

" 9 2 3 1 4 7 " இதுல தான்
என் போன் நம்பர் ஒளிஞ்சிட்டு இருக்கு
முடிஞ்சா கண்டுபிடிங்கன்னு சவால்.

கிச்சா டென்ஷன் ஆயிட்டான்..

" டேய் இதுக்கு என்ன Formula-ன்னு
தெரியலையே.. நான் வேணா என் தங்கச்சி
Logarithm Book எடுத்துட்டு வரட்டுமா.. ? "

" ஏன்..? உன் அண்ணன் பையன்
Tables Book எடுத்துட்டு வாயேன்..!!! "

" டென்ஷன் ஆகாதடா.. சும்மா Help-க்கு... "

" ஒண்ணும் வேணாம்.. கொஞ்சம்
பொறுமையா இரு... நான் யோசிக்கணும்..!! "

( டுடுங்க்.. டுடுங்க்.. டுடுங்க்..
ஹி., ஹி., ஹி.. ஜோம்ஸ்பாண்ட் மியூசிக்.. )

அந்த நம்பர்ல " 4 9 1 " எங்க ஊர்ல
எல்லா நம்பரும் இப்படி தான்
Start ஆகும்.. So., மீதி இருக்கறது " 2 3 7 " .

இதுக்கு மொத்தமே 6 Combinations தான்..
( 237, 273, 372, 327, 723, 732 )

மூணாவது Atempt-லயே அந்த பொண்ணு
நம்பரை கண்டுபிடிச்சிட்டோம்..

( நாங்கல்லாம் LKG-ல இருந்து
UKG படிக்காமலே Straight-ஆ 1st Std
போனவங்களாக்கும்..!! எங்க கிட்டயேவா..?!! )

ரெண்டு மாசம் கழிச்சு.. ஒரு நாள்..

நான் கிச்சா வீட்டுக்கு போயிருந்தேன்..
அப்ப ஒரு மிஸ்டு கால் வந்தது..

கிச்சாவோட அப்பா., அம்மா., தங்கச்சி
எல்லாம் என்னை ஒரு மாதிரி பாத்தாங்க..
கிச்சாவும் செம டென்ஷனா இருந்தான்..

" என்னடா நடக்குது இங்கே..? "

" அந்த பொண்ணு தான் மிஸ்டு கால்
குடுக்குது..!! "

" அதுக்கு ஏன்டா உங்க வீட்ல எல்லோரும்
என்னை தீவிரவாதியை பாக்கற மாதிரி
பார்க்கறாங்க..? "

" இந்த மாதிரி மிஸ்டு கால் வரும்போதெல்லாம்... "

" வரும்போதெல்லாம்.. "

" அது நீதான் சொல்லி வெச்சிருந்தேன்..!! "

" ?!?!?!!!? "
.
.

14 April 2011

நாலு பேர் சந்தோஷமா இருக்கணும்னா..!


டிஸ்கி : இது ஒரு ஸ்பெஷல் பதிவு.

நான் வருஷம் தவறாம சித்திரை 1
அன்னிக்கு விநாயகர் கோவிலுக்கு
போறது என் வழக்கம்..

விநாயகர் எனக்கு கடவுள் மட்டுமல்ல.,
அவர் என் குரு., என் Friend..

இந்த வருஷம் என்ன நடந்ததுன்னா..

" ஹாய் விநாயகா.. எப்படி இருக்க.? "

" வந்துட்டியா.? சித்திரை 1 வர்றதுக்கில்ல..
உன் தொல்லையும்., சன் டிவிக்காரன்
தொல்லையும் தாங்க முடியல.. "

" ரொம்ப சலிச்சிக்கறியே.. நான் என்ன
தினமுமா உன்னை தொந்தரவு பண்றேன்..?
வருஷம் ஒரு தடவை. அதுவும்
என் Birthday அன்னிக்கு மட்டும் தானே..!! "

" ஆமாண்டா.. ஆனா அந்த ஒரு நாள்லயே
வருஷத்துக்கு ஆகற மாதிரி லிஸ்ட்
ஒப்பிச்சிட்டு போயிடறியே.. "

"ஏதோ என்னோட சின்ன சின்ன ஆசைகள்
உன்கிட்ட சொல்றேன்...அதை போயி... "

" போன வருஷம் " என்னை அமெரிக்க
ஜனாதிபதியாக்குன்னு " கேட்டியே அது
சின்ன ஆசையாடா..? "

" ஹி., ஹி., அது கொஞ்சூண்டு பெரிய
ஆசைதான்.. ஏன்.. நான் ஆகக்கூடாதா..? "

" நீதான் ஒரு வார்டு மெம்பர் Election-ல
கூட நிக்க மாட்டேங்குற... அப்புறம்
ஏன்டா என்னை தொந்தரவு பண்ற..? "

" சரி., சரி., அதை விடு.. போன வருஷம்
என் பிளாக்குக்கு 500 Followers வேணும்னு
சொன்னேனே.. ஏன் சேர்த்து விடல..? "

" நீ ஈஸியா சொல்லிட்டு போயிட்ட.,
நான் யாராவது பிளாக்கர் கனவுல போயி
உனக்கு Follower-ஆ சேர சொன்னா..
அடுத்த நாள்ல இருந்து என் கோவிலுக்கு
அவங்க வர மாட்டேங்குறாங்கடா.. "

" அப்ப நீ ஒருத்தரை கூட சேர்த்து விடலையா..?
உன் கூட " கா "... "

" என்னடா இப்படி சொல்லிட்ட.,
அந்த 300 Followers-ல நான் தான்டா
100 டம்மி ஐ.டில உனக்கு Follower-ஆ
சேர்ந்து இருக்கேன்..!! "

" உஷ்..!! இதெல்லாம் சத்தம் போட்டு
சொல்லக்கூடாது..!! என் இமேஜ் பாதிக்கும்..!! "

" டேய் அடங்குடா..!! சரி., இந்த வருஷம்
என்னடா லிஸ்ட் வெச்சு இருக்க..? "

" இந்த வருஷம் லிஸ்ட் எதுவும் இல்ல.. "

" பின்ன..? "

" எல்லா மக்களையும் சந்தோஷமா
வெச்சுக்க.. அது போதும்.. "

" அது என்னால முடியாது.. உன்னால
தான் முடியும்.. "

" புரியலையே.. "

" நீ பிளாக் எழுதறதை நிறுத்து.. அது போதும்..! "

" கிர்ர்ர்ர்ர்ர்ர்..!! "

பின் டிஸ்கி : 300வது Follower-ஆ சேரணும்னு
இவ்ளோ நாளா Wait பண்ணி 300வது Follower-ஆ
Join பண்ணின Samhitha-க்கு வாழ்த்துக்கள்..!!
.
.

09 April 2011

" அந்தர் பல்டி " ஐயா..!!
டிஸ்கி : இந்த பதிவில் இருக்கறது எல்லாம்
கடந்த 5 ஆண்டுகளாக திரு.ராமதாஸ் ஐயாவின்
வரலாற்று சிறப்புமிக்க., தஞ்சாவூர் கல்வெட்டில்
பதித்து பாதுகாக்க வேண்டிய உளறல்கள்..
சே.. உரைகள்..!!

திமுக அரசின் செயல்பாடுகள் படுதோல்வி
அடைந்துவிட்டன. 'தேர்வு பெறவில்லை'

முதல்வர் உச்சநீதிமன்ற கண்டனத் துக்கு
ஆளான விவகாரம் அரசின் நிர்வாக சீர்கேடு
சம்பந்தப்பட்டதாகும். இது தமிழகத்திற்கும்,
தமிழர்களுக்கும் பெரும் அவமானமாகும்.

முதல்வர் கருணாநிதி இந்த இரண்டரை ஆண்டுகாலத்தில்
சினிமா பார்ப்பதிலும், சின்ன சின்ன சினிமா விழாக்களை
பலமணி நேரம் அமர்ந்து கண்டு களிப்பதிலும் பொழுதைக்
கழித்திருக்கிறார்.

கோட்டையில் கோப்புகள் ஒரு லட்சத்துக்கும் மேலாக
தேங்கிக் கிடப்பதாக என்னிடம் ஒரு அதிகாரி தெரிவித்தார்.

அமைச்சர்கள் சென்னையில் இருந்தாலும்,
கோட்டைக்கு செல்வதில்லை. கோட்டைக்கு
சென்றாலும் கோப்புகள் பார்ப்பதில்லை.

திராவிடக்கட்சிகளின் ஆட்சியில் குறிப்பாக
கருணாநிதியின் ஆட்சியில் மண்ணையும்,
நீர் உரிமையையும் இழந்து நிற்கிறோம்.

எந்த மாநிலத்தினுடனான பிரச்சனையிலும்
தமிழகத்தின் உரிமையை கருணாநிதி
நிலைநாட்டியது கிடையாது.

இத்தனை அமைச்சர்களை வைத்துக் கொண்டு
அரசு திறம்பட செயல்பட வில்லை.

ஆட்சியைத் தக்கவைக்க, காங்கிரசின் தயவு
வேண்டும் என்பதால், இலங்கைத் தமிழர்களுக்கு
கருணாநிதி துரோகம் செய்துவிட்டார்.

தி.மு.க-தான் எங்களது முதல் எதிரி.

இலவசங்களை காட்டி இனியும் திமுகவால்
மக்களை ஏமாற்ற முடியாது, எத்தனை கோடி
செலவு செய்தாலும் இந்த தேர்தலில் மக்கள்
தெளிவாக நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்.

குடிசை மாற்று வாரியம் என்பது, குடிசைகளை
ஒழித்து, அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள்
கட்டுவதற்காக, 1967ம் ஆண்டு தி.மு.க., அரசால்
உருவாக்கப்பட்டது. ஆனால், சென்னை இன்னமும்
குடிசைகளின் நகரமாகத் தான் இருக்கிறது.

5 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தலில்
திமுக கூட்டணி இப்போதே வெற்றி பெற்றதாக
அறிவிக்கலாம். அந்த அளவுக்கு முறைகேடுகள்
நடப்பது உறுதி

மக்கள் சக்தி முழுமையாக அதிமுக கூட்டணிக்கு
உள்ளதால் நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி
பெறுவோம். இது ஹேஸ்யமோ, ஜோதிடமோ அல்ல.
மக்களின் மனநிலையை அறிந்து சொல்கிறேன்.

லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி,
40க்கு, 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும்.
தேர்தல் முடிந்ததும், தமிழக அரசியலிலும்,
தி.மு.க., ஆட்சியிலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்

வாக்காளர்களுக்கு இலவச வேட்டி, சேலை
வினியோகிக்கும்போது தி.மு.க.,வினர் கையும்,
களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர். அப்படியும்
அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்.

பஸ் கட்டணக் குறைப்பு என்பது, இதற்கு முன்
கேள்விப்பட்டிராதது. லோக்சபா தேர்தலை ஒட்டி
இந்த நடவடிக்கையை எடுத்துள்ள முதல்வர் கருணாநிதியும்,
போக்குவரத்து அமைச்சர் நேருவும் தங்கள் பதவியை
ராஜினாமா செய்ய வேண்டும்.

வரும் 2011ல் ஆட்சி அமைப்போம் என நாங்கள்
கோஷம் எழுப்பியதால், பயந்து, கடந்த லோக்சபா
தேர்தலில் தி.மு.க.,வும், - அ.தி.மு.க.,வும் ரகசிய கூட்டணி
அமைத்து, நாங்கள் போட்டியிட்ட ஏழு இடங்களிலும்
எங்களை தோற்கடித்தனர்.

தி.மு.க.வும் பல்வேறு கட்சிகளுடன் மாறி மாறி
கூட்டணி வைத்துள்ளது. அவர்களுக்கு பா.ம.க.வை
பற்றி விமர்சிக்க தகுதி இல்லை.

தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களாலும்
மதிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜரையே
தரக்குறைவாக விமர்சித்தது திமுக-தான்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய
போது தமிழர் படை என்ற பெயரில் இங்குள்ள
கேரளத்து மக்களை அடித்துத் துரத்தியதும்,
திமுக செயற்குழுவுக்கு வருகை தந்த
நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனை அடித்துக்
காயப்படுத்தியது திமுக-வினர்தான்

Last.. But Not Least...!!

படி படி என்பவன் நான். ஆனால், உங்களைக்
குடி குடி என்று கெடுத்தது கருணாநிதிதான்

உஷ்..!! இதெல்லாம் போன மாசம்..

இப்புடு ச்சூடு.. இந்த மாசம்..
அந்த அந்தர் பல்டி..

தமிழகம் முழுவதும் தி.மு.க. அணிக்கு
ஆதரவாக அலை வீசத் தொடங்கியுள்ளது.

தி.மு.க. ஆட்சியின் சாதனைகள்
மிகச் சாதாரண மக்களால்கூட பாராட்டப்படுகின்றன.

கலைஞர் எத்தனையோ சாதனைகள் செய்துள்ளார்.
ஜெயலலிதா 2 முறை முதல் அமைச்சராக இருந்தார்.
ஒரு துரும்பை கிள்ளி போட்டதுண்டா?
அவரது ஆட்சியில் வேதனை தான் அதிகம்.

கருணாநிதி சொன்னதையும் செய்வார்.,
சொல்லாததையும் செய்வார். அவரை
6-வது முறையாக முதல்வராக்க
தி.மு.க கூட்டணியை ஆதரியுங்கள்..

( இன்னுமா இந்த ஊர் உங்களை நம்மள நம்புது..?! )

( கலைஞர் : அடுத்த தேர்தல்ல விஜயகாந்த் கூட
கூட்டணி வைக்க போறீங்களாமே..?! )

( உங்களை எல்லாம் பாத்தா..
எனக்கு பாவமா இருக்கு..!! )

ஆட்சி மாற்றம் எப்படி வரும்?
தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல.
அதி புத்திசாலிகள். அரசியல் விழிப்புணர்வு
பெற்றவர்கள் - ராமதாஸ்
.
.

06 April 2011

உலககோப்பை ( Behind the Scenes )
India Vs South Africa Match..

இந்தியா Batting Power Play-ல
தடுமாறிட்டு இருந்தது..

எனக்கு செம டென்ஷன்..

நான் என் Wife-ஐ பாத்து..

" என்ன இப்படி சொதப்பறாங்க..? "

" நீங்க சொல்லி குடுத்த மாதிரி
ஆடறாங்களோ என்னமோ...?!! "

" என்ன நக்கலா.? நாங்கல்லாம்
விளையாட Ground-ல இறங்கிட்டா..
சும்மா சிக்ஸ்., சிக்ஸா பறக்கும்.. "

" ஹி., ஹி., அப்ப நீங்க Bowling தானே
போடுவீங்க..? "

" கிர்ர்ர்ர்ர்ர்ர்...! "

-------------------------------------------------------------------------------

அந்த மேட்சல கடைசி ஓவர் நெஹ்ராவுக்கு
குடுத்து.., அவர் ரன் வாரி வழங்கினதால
S.A அந்த மேட்ச்ல ஜெயிச்சுடுச்சு..

அதை பாத்து ஒரு நண்பர் அடிச்ச Tweet..

" ஓரம்னு ( Oram ) பேரு வெச்சிருக்கிறவன்
நேரா போடறான்.. நேரா-ன்னு( Nehra ) பேரு
வெச்சிருக்கிறவன் ஓரமா போடறான்...!
என்ன கொடுமை சரவணா இது..? "

-------------------------------------------------------------------------------

இந்தியா World Cup-ஐ ஜெயிச்சதும்
பக்கத்துல இருந்த Friend-கிட்ட...

" நான் தான் முன்னாடியே சொன்னேன்ல..!
இந்தியா தான் World Cup வாங்கும்னு..! "

" எப்ப சொன்னே..? Dhoni கடைசி சிக்ஸ்
அடிக்கும் போதா..? "

" அட.., ஆரம்பத்துலயே சொன்னேனே.. "

" ஆரம்பத்துலன்னா..? Finals ஆரம்பிக்கும்
போதா..? "

" World Cup ஆரம்பிக்கும் போதே.. "

" World Cup ஆரம்பிக்கும் போதேன்னா..
அது 1975-ல ஆரம்பிச்சாங்க.. அப்பவேவா
நீ இதை சொன்ன..?? "

" கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......! "

-------------------------------------------------------------------------------

World Cup Special :

ஸ்ரீசாந்த்., முனாப் படேல்கிட்ட.

ஸ்ரீசாந்த் : நான் 10 ஓவர் பவுலிங் போடணும்.,
ஆனா ஒரு ரன் கூட குடுக்க கூடாது..

முனாப் : அப்ப நீ எனக்கு தான் பவுலிங்
போடணும்..!!

-------------------------------------------------------------------------------

ஒரு ரகசியம் : உஷ்..!! சத்தம் போட கூடாது..
அதான் ரகசியம்னு சொல்றோம்ல..

ம்ம்.. இந்தியாவுக்கு குடுத்த World Cup
ஒரிஜினல் தான்.. சந்தேகமேயில்ல..!!

" ஒரு வாரம் இந்த World Cup-ஐ
உங்க வீட்ல வெச்சிருங்கன்னு..! "
தோனி குடுத்து அனுப்பினாரு.,
அப்ப Check பண்ணினேன்.!!
.
.