சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

15 December 2010

நம்ம வழி.., குறுக்கு வழி..!?!
அப்போ நான் MCA Final Year ல
Project பண்றதுக்காக சென்னை
போனேன்..

அப்ப சென்னையில எனக்கு
தெரிஞ்சவங்க ரெண்டே பேர்தான்.

ஒண்ணு - ராதிகா ( என் Friend )
இன்னொன்னு - ரஜினிகாந்த் ( சூப்பர்ஸ்டார் )

( என்ன முறைக்கிறீங்க..?
மாதவன்., A.R.ரஹ்மான் எல்லாம்
சென்னை போயி தான் பழக்கம் )

ராதிகா அப்ப " அண்ணா யுனிவர்சிட்டியில "
M.Sc படிச்சிட்டு இருந்தாங்க..
அவங்க செம Brilliant..!!

அண்ணா யுனிவர்சிட்டி - செம Brilliant.,
அப்புறம் எப்படி எனக்கு Friend-ன்னு
தானே யோசிக்கறீங்க..?!!

நாங்க ரெண்டு பேரும் சேலம்ல
ஒரே Computer Centre-ல தான்
V.B Class போனோம்..
அப்ப Friend ஆகிட்டோம்..!!

அப்பல்லாம் Computer Class-ல
அவங்களோட பல Doubts-ஐ
நான் தான் Clear பண்ணியிருக்கேன்..
( உஷ்ஷ்..!! என்ன அங்கே சிரிப்பு சத்தம்..)

" இன்னிக்கு ஏன் V.B Class எடுக்கற
சார் வரலை..? "

" எந்த கடையில Tea நல்லா இருக்கும்..? "

" கீதாலயா தியேட்டர்ல மேட்னி ஷோ.
எத்தனை மணிக்கு போடுவாங்க..? "

இப்படி பல பல Doubts.

ஹி., ஹி., ஹி..!!

நான் சென்னை வந்ததுக்கு அப்புறம்
வாரம் ஒரு தடவை எங்க மேன்சஷன்க்கு
போன் பண்ணி என்கிட்ட பேசுவாங்க..

அப்படித்தான் ஒரு தடவை
அண்ணா யுனிவர்சிட்டியில
எதோ Function-ன்னு Invite பண்ணினாங்க..

ஆனா நான் வரலைன்னு சொல்லிட்டேன்..
( டிக்கெட் விலை 200 ரூபாயாம்ல..!! )

அப்புறம் நீங்க Function-க்கு வந்தா போதும்..
உங்களுக்கு நானே டிக்கெட் எடுத்தர்றேன்னு
சொன்னாங்க.

அப்ப 2 டிக்கெட்டா எடுத்துடுங்கன்னு
சொல்லிட்டேன்.. ( எனக்கு ஒண்ணு ,
என் Friend விஜய்க்கு ஒண்ணு )

நானும் விஜய்யும் ( விஜி )
அங்கே போனா...

" தேவா ஆர்கெஸ்ட்ரா "..,
ஆட்டம் ., பாட்டம்னு Function களைகட்டிச்சு.

Function முடிஞ்சி வரும்போது
என் Friend விஜி..

" நாமளும் நல்லா படிச்சி,
நல்ல மார்க் எடுத்திருக்கலாமோ.. "

" எதுக்கு..? "

" இங்கே சீட் கிடைச்சி இருக்கும்..
நாமளும் இந்த மாதிரி Function-ஐ
எல்லாம் ஜாலியா என்ஜாய் பண்ணி
இருக்கலாம்ல..!! "

நான் அவனை ஒரு லுக் விட்டுட்டு
சொன்னேன்..

" டேய் லூசு..!! அதுக்கு எதுக்குடா
கஷ்டப்பட்டு நல்லா படிக்கணும்..?
நல்லா படிக்கிற புள்ளங்களை
Friend பிடிச்சா போதாதா.?!! "

ஹி., ஹி., ஹி..!!
எப்புடீ..?
.
.

72 Comments:

வெங்கட் said...

@ To All.,

ஒரு Secret News..

VKS-ல இருந்து ஒருத்தர் VAS-க்கு
வர ரெடியா இருக்காங்க..
பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு..

அது யார்னு பெயர் எல்லாம்
சொல்ல மாட்டேன்.. வேணும்னா
க்ளூ தர்றேன்..

அவங்க பெயர் முதல் எழுத்து " அ "
கடைசி எழுத்து " னு ".
நடுவுல வேற எழுத்தே இல்ல..

Shalini(Me The First) said...

Me the first!

வெங்கட் said...

@ ஆல்.,

நான் பதிவு பப்ளிஷ் பண்ணும் போது
ஒரு சின்ன தவறு வந்துடுச்சி.. அதனால
அந்த பதிவை டெல் பண்ணிட்டு புதுசா
மறுபடியும் ஒரு பதிவு போட்டு இருக்கேன்.

அந்த பதிவுல சமென்ட், வோட் போட்டவக
சிரமத்திற்கு மன்னிக்க.. இந்த பதிவுல உன்க
கருத்தை சொல்லுஙக.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெங்கட் said...

@ ஆல்.,

நான் பதிவு பப்ளிஷ் பண்ணும் போது
ஒரு சின்ன தவறு வந்துடுச்சி.. அதனால
அந்த பதிவை டெல் பண்ணிட்டு புதுசா
மறுபடியும் ஒரு பதிவு போட்டு இருக்கேன்.

அந்த பதிவுல சமென்ட், வோட் போட்டவக
சிரமத்திற்கு மன்னிக்க.. இந்த பதிவுல உன்க
கருத்தை சொல்லுஙக. //

இந்த பதிவெ தவறுதான. பப்லிஷ் பன்னும் பொதும் தவரா?

Madhavan Srinivasagopalan said...

நல்லதா இருக்கு.. அந்த 'மாதவன்' -- நாந்தான ?

//VKS-ல இருந்து ஒருத்தர் VAS-க்கு
வர ரெடியா இருக்காங்க..
பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு..
//

சந்தேகம் வர்றா மாதிரி பேசினது ரமேஷ் ஆச்சே ?

//அந்த பதிவுல சமென்ட், வோட் போட்டவக
சிரமத்திற்கு மன்னிக்க.. இந்த பதிவுல உன்க
கருத்தை சொல்லுஙக.//

நாங்கலாம் ஒரு தடவை சொன்னா சொன்னதுதான்.. மறுபடியும் சொல்ல மாட்டோம்.... ஏனா ? அப்புறம் மறந்து போயிடுவோம்..

மங்குனி அமைச்சர் said...

சேம் பிளட்

சி.பி.செந்தில்குமார் said...

இப்படி லஞ்சம் குடுத்து ஆள் சேர்க்கனுமா?

வட எனக்கேன்னு யாரும் சொன்னா பிடிக்கது,அதனால நீங்களே முத கமெண்ட்டா?

ஏதோ காமெடி மேட்டர் போட்டதா சொன்னீங்களே எங்கே?

கடைசி பன்ச் செம

karthikkumar said...

மறுபடியும் முதல்ல இருந்தா..
சரி ஓகே

வெங்கட் said...
@ To All.,

ஒரு Secret News..

VKS-ல இருந்து ஒருத்தர் VAS-க்கு
வர ரெடியா இருக்காங்க..
பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு..

அது யார்னு பெயர் எல்லாம்
சொல்ல மாட்டேன்.. வேணும்னா
க்ளூ தர்றேன்..

அவங்க பெயர் முதல் எழுத்து " அ "
கடைசி எழுத்து " னு ".///

ஆண்டவன் கெட்டவங்களுக்கு (VAS) நெறைய கொடுப்பான். ஆனா கை விட்ருவான். நல்லவங்கள(VKS) நெறைய சோதிப்பான். ஆனா கைவிட மாட்டான்.

karthikkumar said...

கஷ்டப்பட்டு நல்லா படிக்கணும்..?
நல்லா படிக்கிற புள்ளங்களை
Friend பிடிச்சா போதாதா.?!! "///
இந்த மாதிரி டேக்னிகெல்லாம் உங்களுக்குதான் தெரியுமாக்கும்...

ராஜி said...

அட, ஆமாம் இல்ல?!

ரசிகன் said...

//ஒரு Secret News..VKS-ல இருந்து ஒருத்தர் VAS-க்கு வர ரெடியா இருக்காங்க..
//

ம்ம்ம்.. மார்கெட் டல்லடிக்கற மாதிரி தெரிஞ்சா ஹீரோ ஹீரோன்ஸ் தான் லடாய், கடாய்ன்னு வேணும்னே வம்பிழுத்து கிசு கிசு போட வைப்பாங்க... இப்ப பதிவர்களும் கிளம்பிட்டீங்களா.. உங்க மார்க்கெட் நல்லாத்தானே போய்ட்டிருக்குன்னு நினைச்சேன்.. சரி சரி.. ஏதாவது ஏத்திவிட்டு சீக்கிறம் தூக்கி நிறுத்துங்க

ரசிகன் said...

//எனக்கு தெரிஞ்சவங்க ரெண்டே பேர்தான்.ரஜினிகாந்த(சூப்பர்ஸ்டார் )
என்ன முறைக்கிறீங்க..?//
உங்களுக்கு அவர தெரியும்னு தான சொன்னீங்க..அவ‌ருக்கு உங்க‌ள‌ தெரியும்னா சொன்னீங்க‌... நாங்க‌ ஏன் முறைக்க‌ போறோம்?

ரசிகன் said...

மாதவன்., A.R.ரஹ்மான் எல்லாம் அப்போ உங்களுக்கு தெரியாதுன்றதயும் ஒத்துக்கறோம்.. அந்த காலத்துல அவங்க fieldல‌யே இருந்திருக்க மாட்டாங்களே.. பாவம் எப்படி உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்..?

கோமாளி செல்வா said...

//ராதிகா அப்ப " அண்ணா யுனிவர்சிட்டியில "
M.Sc படிச்சிட்டு இருந்தாங்க..
அவங்க செம Brilliant..!!//

இத படிச்சிட்டு நம்ம அருண் அண்ணா REMAKE பண்ணுவாரு பாங்க
அதுல என்ன பிரச்சினை அப்படின்னா இங்க அண்ணா யுனிவர்சிட்டி அப்படின்னு நீங்க போட்டிருக்கறத நாம கொஞ்சம் அதிகமா போடணும் அப்பத்தான் VKS பவர் தெரியும் அப்படின்னு நினைச்சிகிட்டு அப்பா யுனிவர்சிட்டி அப்படின்னு போடுவார் ..!!

கோமாளி செல்வா said...

//அவங்க பெயர் முதல் எழுத்து " அ "
கடைசி எழுத்து " னு ".
நடுவுல வேற எழுத்தே இல்ல..

//

தல VATE எக்ஸாம்ல பயங்கர ஸ்ட்ரிக்ட் அப்படின்னு சொல்லிட்டீங்கள்ள .,
இல்லனா பிரிப்பர் பண்ணாம வந்திடுவாங்க ..!! இல்ல VKS தலைவர் அப்படிங்கறதால எதுவது சலுகைகள் இருக்கா ..? அதெல்லாம் நமக்கு பிடிக்காதே ..?! பாவம் அவுங்க ..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது ஷார்ட்க் கட் இல்லீங்கோ, இதுதான் நேர்வழி....புரிஞ்சதா?

கோமாளி செல்வா said...

/// ரசிகன் said...
மாதவன்., A.R.ரஹ்மான் எல்லாம் அப்போ உங்களுக்கு தெரியாதுன்றதயும் ஒத்துக்கறோம்.. அந்த காலத்துல அவங்க fieldல‌யே இருந்திருக்க மாட்டாங்களே.. பாவம் எப்படி உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்..?

//

உங்க அறிவுத்திரமையப் பாராட்டுறோம் . நாங்க எப்பவுமே அடுத்தவங்கள தூக்கி விட்டுத்தான் பழக்கம். அவுங்க பிரபலம் ஆனதுக்கு அப்புறம் பழக்கம் வச்சிக்களை எங்க தலைவர் .. அவுங்க பிரபலம் ஆகுறது எப்படின்னு ட்ரைனிங் கொடுத்ததே எங்க தல தான். அதுல ஏற்ப்பட்ட பழக்கம் தாங்க இது ..!!

Gayathri said...

இது நல்லா இருக்கே ப்ரோ

LEKHA said...

venkat
//
" டேய் லூசு..!! அதுக்கு எதுக்குடா
கஷ்டப்பட்டு நல்லா படிக்கணும்..?
நல்லா படிக்கிற புள்ளங்களை
Friend பிடிச்சா போதாதா.?!! "
//
வெரி குட்!!
நல்ல கருத்து !!
பெரிய போஸ்ட் போட்டு இருக்கீங்க!!
என்ன ஆச்சு உங்களுக்கு!! ;)

அனு said...

//VKS-ல இருந்து ஒருத்தர் VAS-க்கு
வர ரெடியா இருக்காங்க..
பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு..//

@All
ஆமா. வெங்கட் சொன்னது உண்மை தான்..
Behind the scenes தெரியனும்னா மேல (கீழ) படிங்க..

Flashback... நேத்து ஈவ்னிங் வெங்கட் எனக்கு கால் பண்ணினாரு..

அனு: ஹலோ வெங்கட்.. சொல்லுங்க.. எப்படி இருக்கீங்க?
வெங்கட்: (no சத்தம் coming)
அ: ஹலோ.. வெங்கட் லைன்ல இருக்கீங்களா??
வெ: (லேசான விசும்பல் சத்தம் கேக்குது)
அ: வெங்கட்.. என்னாச்சு? எதுக்கு அழறீங்க?
வெ: (விசும்பலுடன்) நான் ப்ளாக் எழுதுறத நிறுத்திட போறேன்...
அ: (மகிழ்ச்சி inside, acting like வருத்தம் outside) ஏன்??
-வெ: ஆமா, எல்லோரும் என்னை ரொம்ப கலாய்க்குறாங்க.. என்னால தாங்க முடியல..
அ: சரி விடுங்க.. எங்க கட்சிக்காரங்க கிட்ட சொல்லி கொஞ்சம் கம்மி பண்ண சொல்றேன்.. இதெல்லாம் ஒரு மேட்டரா?
வெ: கலாய்க்குறது உங்க கட்சிக்காரங்க இல்ல..
???
--------INTERVAL ------------

அனு said...

வெ: கலாய்க்கிறது எங்க கட்சிக்காரங்க..
அ: என்னது?
வெ: ம்ம்ம்.. எல்லாம் உள்கட்சி பூசல்.. என்னால இவங்க எல்லோரையும் கட்டி மேய்க்க முடியல.. அதான் ப்ளாக்க டெலிட் பண்ணிட்டு இமயமலைக்கு போக போறேன்..
அ: சேச்சே.. கரப்பான்பூச்சிகளுக்கு பயந்து வீட்டை கொளுத்தக் கூடாது..
வெ: ம்ம்ம்.. என்ன பண்ணுறது.. எங்க கட்சிக்கு தலைமை சரியில்ல.. அதான் பிரச்சனை..
அ: அப்படின்னா, டெரர், செல்வா, ஷாலினி யாரையாவது தலைவர் ஆக்கிட வேண்டியது தானே..
வெ: அதுக்கு நீங்க கட்சியை கலைச்சுடுங்கன்னு நேராவே சொல்லியிருக்கலாம்..
அ: சரி, இப்போ என்ன தான் பண்ணுறது?
வெ: தப்பா நினைக்கலன்ன நீங்க எங்க கட்சிக்கும் தலைவி ஆகிடுங்களேன். நீங்க தான் இவங்களை சமாளிக்க முடியும்..
அ: நீங்க இவ்வளவு கெஞ்சி கேக்கும் போது நட்புக்காக இதைக் கூட பண்ண மாட்டேனா??
------- THE END ------------

அனு said...

@All VAS Members

உங்களுக்கு ஒரு திறமையான தலைவர் கிடைத்ததை ஒட்டி பெரிய விழா எடுக்க ஆர்வமா இருப்பீங்க.. ஆனா, officialல declare ஆகுற வரைக்கும் உங்க ஆர்வத்துக்கு கொஞ்சம் அணைப் போடுங்க..

@All VKS Members
இது நமக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி. இதை ஒட்டி சீக்கிரமே எல்லோருடைய அக்கவுண்ட்லயும் ஒரு பெரிய அமவுண்ட் டெபாசிட் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

Gopi Ramamoorthy said...

குறுக்கு வழி என்று சொன்னதற்குக் கண்டனங்கள்:)

புத்திசாலித்தனமான வழி என்று சொல்லுங்கள்:)

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// இந்த பதிவெ தவறுதான. பப்லிஷ் பன்னும் பொதும் தவரா? //

தவற பத்தி நீங்க பேசறீங்க.
என்ன கொடுமை இது..?

எழுதி இருக்குறது ஒரு லைன்
கமெண்ட்.. அதுல எத்தனை தவறு
இருக்குன்னு முதல்ல பாருங்க..

இந்த பதிவெ தவறுதான. பப்லிஷ் பன்னும் பொதும் தவரா?

வெங்கட் said...

@ ஷாலினி.,

// Me the first! //

சுறுசுறுப்புன்னா இப்படில்ல
இருக்கணும்.. கலக்குங்க..!!

வெங்கட் said...

@ மாதவன்.,

// சந்தேகம் வர்றா மாதிரி பேசினது
ரமேஷ் ஆச்சே ? //

ஹி., ஹி., ஹி..!!!

என்னங்க நீங்க..?
Match Fixing பன்ணும்போது
Captain-கிட்ட " டீல் " பேசுவாங்களா..?
இல்ல பந்து பொறுக்கி போடற
பையன் கிட்ட " டீல் " பேசுவாங்களா..?!!

வெங்கட் said...

@ மங்குனி.,

// சேம் பிளட் //

ஓ.. உங்களுதும் AB+...?!

வெங்கட் said...

@ சி.பி.செந்தில்.,

// இப்படி லஞ்சம் குடுத்து ஆள்
சேர்க்கனுமா? //

நாங்கல்லாம் அரசியல்
ராஜதந்திரங்களை கரைச்சி குடிச்சவங்க..

இது கட்சிக்கு ஆள் சேர்க்கிற
மேட்டர் இல்ல.. எதிர்கட்சியை
பூண்டோட கலைக்கிறதை பத்தின மேட்டர்..

// ஏதோ காமெடி மேட்டர் போட்டதா
சொன்னீங்களே எங்கே? //

காமெடியா..? நாங்கல்லாம் எவ்ளோ
சீரியஸா பேசிட்டு இருக்கோம்..
வந்து தமாஷ் பண்றீங்க..?

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// ஆண்டவன் கெட்டவங்களுக்கு (VAS)
நெறைய கொடுப்பான். ஆனா கை விட்ருவான்.
நல்லவங்கள(VKS) நெறைய சோதிப்பான்.
ஆனா கைவிட மாட்டான். //

டயலாக் எல்லாம் நல்லா தான்
சொல்றீங்க.. ஆனா நல்லவங்க யாரு.,
கெட்டவங்க யாருன்னு தான் Confuse
ஆகிட்டீங்க..!!

வெங்கட் said...

@ ராஜி.,

// அட, ஆமாம் இல்ல?! //

" ஆமாவா.. " , " இல்லையா "
எதோ ஒண்ணை சொல்லுங்க..

தெளிவா குழப்பறீங்களே..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// உங்களுக்கு அவர தெரியும்னு தான
சொன்னீங்க..அவ‌ருக்கு உங்க‌ள‌ தெரியும்னா
சொன்னீங்க‌... நாங்க‌ ஏன் முறைக்க‌ போறோம்? //

ஓ.. அப்ப நீங்க லிங்க் கிளிக் பண்ணி
படிக்கலை போல..

சரி., சரி.. இனிமே இப்படியெல்லாம்
தப்பு தப்பா பேசப்படாது.. அப்புறம்
டென்ஷன் ஆயிடுவாரு சூப்பர்ஸ்டார்..

TERROR-PANDIYAN(VAS) said...

@Karthikumar

//ஆண்டவன் கெட்டவங்களுக்கு (VAS) நெறைய கொடுப்பான். ஆனா கை விட்ருவான். நல்லவங்கள(VKS) நெறைய சோதிப்பான். ஆனா கைவிட மாட்டான்.//

மச்சி!! என் பேருக்கு பின்னாடி பாரு - VAS இருக்கா?? அப்பொ நீ எதுக்கு எதிர்கட்சிக்கு சப்போர்ட் பண்ற? சொந்தம எதாவது தத்துவம் சொல்றியா? இப்படியே காப்பி அடிச்ச நீ பெரிய VKS ஆகிடலாம்... :))

வெங்கட் said...

@ செல்வா.,

// தல VATE எக்ஸாம்ல பயங்கர ஸ்ட்ரிக்ட்
அப்படின்னு சொல்லிட்டீங்கள்ள., //

இது அவங்களுக்கு நல்லா தெரியுமே..
ஏற்கனவே VATE ( Venkatai Atharippor Talent Exam )
4 தடவை எழுதி பெயில் ஆனவங்க தானே..!!

// VKS தலைவர் அப்படிங்கறதால எதுவது
சலுகைகள் இருக்கா ..? //

No., No.., நமக்கு இந்த Recommendation,
சலுகை எல்லாம் பிடிக்காது..
We R Strict Officers..!!

நம்மள புகழ்ந்து ஒரு கவிதை
பாடணும்.. அது தான் அவங்களுக்கு
இப்ப குடுத்திருக்கிற Assignment..!!

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//ம்ம்ம்.. மார்கெட் டல்லடிக்கற மாதிரி தெரிஞ்சா ஹீரோ ஹீரோன்ஸ் தான் லடாய், கடாய்ன்னு வேணும்னே வம்பிழுத்து கிசு கிசு போட வைப்பாங்க... //

ச்ச.. எங்க தல ஏன் தான் போட்டோ இங்க போட்டாரு தெரியலை பாக்கரவங்க எல்லாம் ஹீரோ கூடவே கம்பர் பண்ணி பேசராங்க.. இப்பொ இவங்களுக்கும் வேற எடுத்துகாட்டு கிடைக்கல பாரு.... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//அவ‌ருக்கு உங்க‌ள‌ தெரியும்னா சொன்னீங்க‌... //

அதை தான் (வெங்கட் என் நண்பர் அப்படினு) ரஜினி பெருமையா ஊர் பூரா சொல்லிட்டு திறியராரே அப்புறம் நாங்க வேற தனியா சொல்லனுமா? :))

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//பாவம் எப்படி உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்..? //

பாவம் எங்க தல இல்லை. அவங்க தான் பாவம். இல்லைன கொஞ்சம் சீக்கிரம் பாப்புலர் ஆகி இருக்கலாம்.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//Behind the scenes
Flashback...
--------INTERVAL ------------
------- THE END ------------
//

அனு!! நீங்க கதை கட்டி விடறதுல எக்ஸ்பர்ட் சொல்லி ஊருக்கே தெரியும். அதுக்கா இப்படியா எழுதினா ஸ்கிரிப்ட இண்டர்வல், எண்டு எல்லாம் போட்டு அப்படியே பப்ளிஷ் பண்ணுவிங்க... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//உங்களுக்கு ஒரு திறமையான தலைவர் கிடைத்ததை ஒட்டி பெரிய விழா எடுக்க ஆர்வமா இருப்பீங்க.. //

வெங்கட் திறமையான தலைவர் சொல்லி நீங்களே ஒத்துகிட்டிங்க.

// இதை ஒட்டி சீக்கிரமே எல்லோருடைய அக்கவுண்ட்லயும் ஒரு பெரிய அமவுண்ட் டெபாசிட் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.. //

இன்னைக்கு ஏன் எல்லா விஷயத்தையும் இப்படி உங்க வாயாலே உளறி கொட்டறிங்க? காசு கொடுத்து தான் அந்த ஐந்து பேர உங்களை தலைவி சொல்ல வச்சி இருக்கிங்க ஊருக்கே தெரியும் நீங்க வேற ஏன் தனியா சொல்லிட்டு.. :))

பலே பாண்டியா said...

எப்படியோ MCA வரைக்கும் நீங்க படிச்சிங்க(?!?!?!?!) அப்டிங்கரத்தை நாங்க நம்பிட்டோம்!!!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// இது ஷார்ட்க் கட் இல்லீங்கோ,
இதுதான் நேர்வழி....புரிஞ்சதா? //

ஓ.. நீங்க அப்டிக்கா வர்றீங்க..
ரைட்டு..

வெங்கட் said...

@ லேகா.,

// பெரிய போஸ்ட் போட்டு இருக்கீங்க!!
என்ன ஆச்சு உங்களுக்கு!! ;) //

ஆஹா.. கொஞ்சம் பெருசா
எழுதினா கூட கேள்வி கேக்கறாங்களே..!!

கரெக்ட் பண்ணிக்கிறேன்..
இனிமே இவ்ளோ பெரிய Post வந்தா
நாலா கட் பண்ணி " தொடரும் " போட்டு
4 பதிவா போட்டுடறேன்..

என்ன ஓ.கே தானே..!!?

வெங்கட் said...

@ அனு.,

// @All VKS Members
இது நமக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி. //

அப்ப ஜெயலலிதா மேடம் DMK-ல போயி
சேர்ந்துட்டா.. அது ADMK-க்கு கிடைச்ச
வெற்றி.. அப்படித்தானே..?!!

என்ன மக்களே எல்லோருக்கும்
விளங்கிடுச்சா..?!

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு தந்த சுவராஸ்யத்தை விட பின்னூட்டத்துல உங்க பதில்களும் ,காமெடி கலாய்த்தல்களும் கலக்கல்

வெங்கட் said...

@ அனு.,

// ஆமா. வெங்கட் சொன்னது உண்மை
தான்.. Behind the scenes தெரியனும்னா மேல
(கீழ) படிங்க.. //

நான் சொன்னது உண்மைன்னு
அவங்களே சொல்லிட்டாங்க..
ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்...

இப்ப உண்மையா நடந்த Behind the Scenes
நான் சொல்றேன் கேளுங்க..

நேத்து மதியம் அனு எனக்கு போன்
பண்ணியிருந்தாங்க..

வெங்கட் : ஹலோ.. அனு சொல்லுங்க..

அனு : ( No சத்தம் Coming )

வெ : ஹலோ.. அனு லைன்ல இருக்கீங்களா??

அ : ( லேசான விசும்பல் சத்தம் கேக்குது )

வெ : போச்சுடா.., அழ ஆரம்பிச்சுட்டாங்க..
தினமும் இப்படி அரைமணி நேரம் போன்
பண்ணி., முக்கால் மணி நேரம் அழுதா
நான் என்ன தான் பண்றது..?!!

அ : நான் கமெண்ட் எழுதுறத நிறுத்திட்டு
ஆப்பிரிக்காவுக்கு அந்தாண்ட உகாண்டாவுக்கு
ஓடிடலாம்னு இருக்கேன்..

வெ : (மகிழ்ச்சி Inside, Acting like வருத்தம் Outside) ஏன்??

அனு : நீங்க ( VAS ) என்னை கலாய்க்கும் போது
எங்க கட்சிக்காரங்களே எனக்கு Support பண்ணி
ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்குறாங்க..
வேணும்னா இந்த பதிவு கமெண்ட்ஸ்ல பாருங்க..

---------- INTERVAL ------------

வெங்கட் said...

வெ : ஆமா.. ஏன் அப்படி..?

அனு : ஒரு அஞ்சு மாசமா சரியா Payment
தரலை அதான்..

வெ : சரி விடுங்க.. எங்க கட்சிக்காரங்க கிட்ட
சொல்லி உங்களை கம்மிய கலாய்க்க சொல்றேன்..

அ : அதெல்லாம் வேணாம்.. நான் உங்க கட்சிக்கு
வந்துடறேனே..!!

வெ : கட்சிக்கு தாராளமா வரலாம்.. ஆனா
செயற்குழுல எல்லாம் இடம் கேக்க கூடாது..

அ : தெரியுமே.. அதுக்கெல்லாம் VATE ( Venkatai Atharippor Talent Exam )
Exam எழுதணும்.. Exam வெக்கிறாங்கன்னு சொல்லிதான்
நான் ஸ்கூலுக்கே ஒழுங்கா போனதில்ல.. எனக்கு
ஒரு ஓரமா சீட் குடுங்க போதும்..

வெ: நீங்க இவ்வளவு கெஞ்சி கேட்டாலும் நட்புக்காக
எதையும் பண்ண எங்களால முடியாது.. நாங்க
பொதுக்குழு கூட்டி இதுபத்தி விவாதம் நடத்தி.,
ரிசல்ட் சொல்றோம்...

---------- The End --------------

அனு said...

//அப்ப ஜெயலலிதா மேடம் DMK-ல போயி
சேர்ந்துட்டா.. அது ADMK-க்கு கிடைச்ச
வெற்றி.. அப்படித்தானே..?!! //

கருணாநிதி சார் ஜெயலலிதா மேடம்க்கு போன் பண்ணி என்னால எங்க கட்சிய சமாளிக்க முடியல, எங்க கட்சியையும் சேர்த்து நீங்களே பாத்துக்கோங்கன்னு சொன்னா.. அது நிச்சயமா ADMK-க்கு கிடைச்ச
வெற்றி தான்...

சரண்டர் ஆனாலும் சமாளிக்குறீங்களே..

karthikkumar said...

வெங்கட் said...

டயலாக் எல்லாம் நல்லா தான்
சொல்றீங்க.. ஆனா நல்லவங்க யாரு.,
கெட்டவங்க யாருன்னு தான் Confuse
ஆகிட்டீங்க..!//

அது மக்களுக்கு தெரியும்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

குறுக்கு வழில போறது உங்களுக்குப் பிடிக்கும்னு எங்களுக்குத் தெரியாதா? அது ஏதோ, புதுசா செஞ்சா மாதிரி எதுக்கு இந்த பில்டப்?

வெங்கட் said...

@ அனு.,

// அது நிச்சயமா ADMK-க்கு கிடைச்ச
வெற்றி தான்... //

ஓ.. உங்களுக்கு அரசியல் உதாரணம்
சொன்னா புரியாதோ..?!..

சரி சரி விளையாட்டுலயாவது
சொன்னாலாவது புரியுதான்னு பாப்போம்..

" சென்னை சூப்பர் கிங்ஸ் " -ல இருந்து
கேப்டன் டோனி " கொல்கத்தா டீம்க்கு "
போயிட்டா.. அது...
" சென்னை சூப்பர் கிங்ஸ்" க்கு கிடைச்ச
வெற்றியா..?!!

// சரண்டர் ஆனாலும் சமாளிக்குறீங்களே.. //

சரண்டரா..? இது எங்க மாஸ்டர் பிளான்..

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// அது மக்களுக்கு தெரியும். //

என்னங்க இப்படி சொல்றீங்க..?
அப்ப நீங்க மக்கள் இல்லையா.?

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// குறுக்கு வழில போறது உங்களுக்குப்
பிடிக்கும்னு எங்களுக்குத் தெரியாதா?
அது ஏதோ, புதுசா செஞ்சா மாதிரி
எதுக்கு இந்த பில்டப்? //

ஹி., ஹி., ஹி...!!
என்னை பத்தி நல்லா புரிஞ்சி
வெச்சி இருக்கீங்களே..

புதுசா ஒண்ணு பண்ணி இருக்கேன்..
See the INFO BOARD..

ரசிகன் said...

@terror
//ச்ச.. எங்க தல ஏன் தான் போட்டோ இங்க போட்டாரு தெரியலை பாக்கரவங்க எல்லாம் ஹீரோ கூடவே கம்பர் பண்ணி பேசராங்க.. இப்பொ இவங்களுக்கும் வேற எடுத்துகாட்டு கிடைக்கல பாரு.... :))//

என்ன பண்ண.. அம்பாசமுத்திரம் அம்பானி, இந்திரலோகத்தில் அழகப்பன்னு காமெடி பீஸஸ்ஸையும் ஹீரோஸ் ஆக்கி அழகு பாக்குற பூமில பிறந்ததன் விளைவு...

பாரதசாரி said...

soooooooper....பட் அந்த டீலிங்க் எனக்கு புடிச்சிருக்கு :-)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//புதுசா ஒண்ணு பண்ணி இருக்கேன்..
See the INFO BOARD..//

பார்த்தேன்.
//VKS = Venkat-ஐ கலாய்போர் சங்கம்
( சரியான அக்கப்போர் சங்கம் )

Members : அனு, ரமேஷ், ரசிகன்,
அருண் & பெ.சொ.வி
( Admission Closed )//

உங்களை நினைச்சா பாவமா இருக்கு.
VKS-க்கு admission close பண்ணினாதான் VAS-க்கு ஆளு செரும்கற நிலைமையில இருக்கீங்களோ?

karthikkumar said...

VKS = Venkat-ஐ கலாய்போர் சங்கம்
( சரியான அக்கப்போர் சங்கம் )

Members : அனு, ரமேஷ், ரசிகன்,
அருண் & பெ.சொ.வி
( Admission Closed )///
பரவாயில்லைங்க இதையெல்லாம் பாத்தா முடியுமா.

அனு said...

@வெங்கட்

//" சென்னை சூப்பர் கிங்ஸ்" க்கு கிடைச்ச வெற்றியா..?!!//

நீங்க குடுத்த உதாரணம் தப்புங்க.. IPLல இரண்டு டீம்க்கு ஒரே காப்டன் இருக்க முடியாது. ஆனா, இங்க நீங்க என்னை உங்க டீமுக்கும் (நல்லா கவனிங்க.. டீமுக்கு அல்ல.. note that ம்!!) கேப்டனா இருக்க சொன்னீங்கன்னா.. அது யாருடைய திறமையைக் காட்டுது??

முடியல.. இதுக்கு மேலயும் விளக்குனும்னா Vim Bar தான் வாங்கனும்...

பி.கு: எங்களை சென்னை சூப்பர் கிங்ஸ்ன்னும், உங்களை கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ன்னும் ஒத்துக்கிட்டதுக்கு ஸ்பேஷல் தேங்க்ஸ்..

அனு said...

@வெங்கட்
//See the INFO BOARD..//

அசத்தல் கட்சியை அழிக்க ஆசைப்பட்ட ஒரு அரைகுறை கட்சி செய்த அட்டகாசச் செயல் அது.. அநியாயத்தை கண்டு அசரமாட்டோம், அடக்குமுறையை அடக்குவோம் (அட அட.. எத்தனை 'அ')

உங்களாலயும் தான் என்ன பண்ண முடியும்..இப்படியெல்லாம் பண்ணி தான் உங்க கட்சியை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் உங்களுக்கு..

ஆனா, ஒண்ணு நியாபகம் வச்சுக்கோங்க.. Quality Matters, not quantity..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// karthikkumar said...
VKS = Venkat-ஐ கலாய்போர் சங்கம்
( சரியான அக்கப்போர் சங்கம் )

Members : அனு, ரமேஷ், ரசிகன்,
அருண் & பெ.சொ.வி
( Admission Closed )///
பரவாயில்லைங்க இதையெல்லாம் பாத்தா முடியுமா//

அப்படி சொல்லுங்க கார்த்திக். நீங்க வெளிய இருந்து ஆதரவு கொடுங்க, அது போதும்!

சுபத்ரா said...

//நாங்கலாம் ஒரு தடவை சொன்னா சொன்னதுதான்.. மறுபடியும் சொல்ல மாட்டோம்.... ஏனா ? அப்புறம் மறந்து போயிடுவோம்..//

Ha...Ha..Ha.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பெ.சொ.வி

//அப்படி சொல்லுங்க கார்த்திக். நீங்க வெளிய இருந்து ஆதரவு கொடுங்க, அது போதும்!//

எங்க தல தனியா ரிப்ளை பண்ற அப்பவே சமாளிக்கவே முடியலை இல்லை. வெளிய இருந்து எல்லாம் ஆதரவு கேக்கறிங்க.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//ஆனா, ஒண்ணு நியாபகம் வச்சுக்கோங்க.. Quality Matters, not quantity..//

நூத்துல ஒரு வார்த்தை. ஆனா பருங்க உங்க கட்சில Qualityயும் இல்லை Quantityயும்ம் இல்லை.. :(

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//ஆனா, இங்க நீங்க என்னை உங்க டீமுக்கும் (நல்லா கவனிங்க.. டீமுக்கு அல்ல.. note that ம்!!)//

நான் நல்லா கவனிச்சிடேன். இதான் சாக்னு சொல்லி உங்க கட்சில(?) வேறை யாராவது தலைவர் ஆகிட போறாங்க சொல்லி. நான் இன்னும் போகலை, போகலை சொல்லி நீங்க ம் போட்டு அலர்ர சத்தம் கேக்குது... :)) அப்புறம் இரண்டு கட்சியும் இல்லாம நடு ப்ளாக்ல நிக்கனும்.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பெ.சொ.வி

//உங்களை நினைச்சா பாவமா இருக்கு.
VKS-க்கு admission close பண்ணினாதான் VAS-க்கு ஆளு செரும்கற நிலைமையில இருக்கீங்களோ?//

யாருமே ஈஸியா சேர முடியாத இடம் VAS யார் வேணும்னா ஈஸியா சேர கூடிய இடம் VKS. கலாய்க்கரது ஈஸி கவுண்டர் பண்றது தான் கஷ்ட்டம். வேகமா வளருது சொல்லி காலான் எல்லாம் காளிப்ளவர் ஆகிடுமா என்ன?.. :))

(தல என்ன சொல்றேன் எனக்கே புரியலை கண்டுகாதிங்க.. )

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//என்ன பண்ண.. அம்பாசமுத்திரம் அம்பானி, இந்திரலோகத்தில் அழகப்பன்னு காமெடி பீஸஸ்ஸையும் ஹீரோஸ் ஆக்கி அழகு பாக்குற பூமில பிறந்ததன் விளைவு..//

அதுக்காக காமெடி பண்ற ரஜினி, விஜய் எல்லாரையும் காமெடி பீஸாவே பாக்கறிங்களே.. :)

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
@பெ.சொ.வி

//அப்படி சொல்லுங்க கார்த்திக். நீங்க வெளிய இருந்து ஆதரவு கொடுங்க, அது போதும்!//

எங்க தல தனியா ரிப்ளை பண்ற அப்பவே சமாளிக்கவே முடியலை இல்லை. வெளிய இருந்து எல்லாம் ஆதரவு கேக்கறிங்க.. :)//

@ PSV //
THANKS SIR

@ TERROR //
சரி மச்சி அடுத்த பதிவில பாப்போம்.

WE WILL MEET

WILL MEET

MEET. :)

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
@பெ.சொ.வி

//உங்களை நினைச்சா பாவமா இருக்கு.
VKS-க்கு admission close பண்ணினாதான் VAS-க்கு ஆளு செரும்கற நிலைமையில இருக்கீங்களோ?//

யாருமே ஈஸியா சேர முடியாத இடம் VAS யார் வேணும்னா ஈஸியா சேர கூடிய இடம் VKS. கலாய்க்கரது ஈஸி கவுண்டர் பண்றது தான் கஷ்ட்டம். வேகமா வளருது சொல்லி காலான் எல்லாம் காளிப்ளவர் ஆகிடுமா என்ன?.. :))

(தல என்ன சொல்றேன் எனக்கே புரியலை கண்டுகாதிங்க.. )//

யாருக்குமே புரியல.. ஏன் உங்க தலைக்கு கூட புரியுமா தெரில. :))

அனு said...

//உங்க கட்சில Qualityயும் இல்லை Quantityயும்ம் இல்லை//

எங்களுக்கு பயந்து Admission Closedன்னு போர்ட் போட்ட உங்க தலைவர் கிட்ட சொல்லி பாருங்க.. அவரே இதை கேட்டு சிரிப்பாரு..

என்ன தான் காலிஃப்ளவர் பார்க்க ஆழகா இருந்தாலும் எடுத்து தலைலயா வைக்க முடியும்.. வெட்டி குழம்புல தான் போடனும்..

(சே.. இவிய்ங்க கூட சேர்ந்து நானும்ல புரியாத மாதிரி பேச ஆரம்பிச்சுட்டேன்..)

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//எங்களுக்கு பயந்து Admission Closedன்னு போர்ட் போட்ட உங்க தலைவர் கிட்ட சொல்லி பாருங்க.. அவரே இதை கேட்டு சிரிப்பாரு.. //

ஆமாம். கொசு அதிகாமா வருது சொல்லி கூடதான் வலை போடறோம். அதுக்கா கொசு எல்லாம் IAS ஆபிஸர் ரேஞ்சிக்கி பேசினா சிரிப்பு வராதா? :))


//என்ன தான் காலிஃப்ளவர் பார்க்க ஆழகா இருந்தாலும் எடுத்து தலைலயா வைக்க முடியும்.. வெட்டி குழம்புல தான் போடனும்..//

என்னதான் குழம்புல போட்டாலும் காலிப்ளவர் காலான் ப்ளவர் ஆகிடாது.. :))

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...


//என்ன தான் காலிஃப்ளவர் பார்க்க ஆழகா இருந்தாலும் எடுத்து தலைலயா வைக்க முடியும்.. வெட்டி குழம்புல தான் போடனும்..//

என்னதான் குழம்புல போட்டாலும் காலிப்ளவர் காலான் ப்ளவர் ஆகிடாது.. :))//

எட்டு மணிக்கு போற பஸ்சு எட்டு மணிக்கு முன்னாடியே போச்சாம். ஒன்பது மணிக்கு போற பஸ்சு ஒன்பது மணிக்கு அதுக்கு பின்னாடியே போச்சாம். அந்த மாதிரி இருக்கு நீங்க சொல்றது. :)//

( ச்சே இன்னும் எவ்வளவு இருக்கோ...)

அனு said...

//ஆமாம். கொசு அதிகாமா வருது சொல்லி கூடதான் வலை போடறோம். அதுக்கா கொசு எல்லாம் IAS ஆபிஸர் ரேஞ்சிக்கி பேசினா சிரிப்பு வராதா? //

கொசுவுக்கு வலை போட்டா ஓகே.. ஆனா, நீங்க கொழுந்து விட்டு எரியுற எரிமலை மேல இல்ல கொசுவலைய போட பார்க்குறீங்க..எரிமலை அடங்காது.. அழிச்சுடும்..

//என்னதான் குழம்புல போட்டாலும் காலிப்ளவர் காலான் ப்ளவர் ஆகிடாது..//

என்ன தான் காளான் குடை மாதிரி இருந்தாலும் அதை மடக்கி வைக்க முடியாது..

[வெங்கட். இதுக்கு மேல தாங்காது.. சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க :-) ]

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//குடை மாதிரி இருந்தாலும் அதை மடக்கி வைக்க முடியாது..//

என்னதான் நீங்க மடக்கி வைக்கலனாலும்.. அதை மழைக்கு தலை நனையாம பிடிச்சிட்டு போக முடியாது... :))

அனு said...

@டெரர்
//அதை மழைக்கு தலை நனையாம பிடிச்சிட்டு போக முடியாது...//

எண்ணெய்ல போட்டு எடுக்காலாம் வடைய..
மழை பெஞ்சா பிடிக்கலாம் இந்த குடைய
புது போஸ்ட்டு போட்டாச்சு, கட்டலாம் நடைய...

[கவித.. கவித.. :-) ]