சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

10 November 2010

ச்சோ.. ஸ்வீட்..!!


ஒரு நாள் என் Wife.,
என்கிட்ட...

" ஏங்க.. உங்க பீரோவுல ஸ்வீட்
எதாவது வெச்சிருக்கீங்களா..? "

" ஏன்..? "

" இங்கே பாருங்க.. உங்க பீரோவுக்குள்ள
நிறைய எறும்பு போகுது..!! "

" எறும்பு தானே..!! அதுக்கு ஏன் இப்படி
பதறுற..? "

" ம்ம்.. நாளைக்கு Shirt போடுபோது
எறும்பு கடிக்கும்ல.. அப்ப தெரியும்
பதறுறது யாருன்னு.. "

ஒரு Sec யோசிச்சேன்..

" ஓ மை காட்..!! இந்த விஷயம்
எறும்புகளுக்கு எப்படி தெரிஞ்சது..?
சரி சரி சீக்கிரம் என் பீரோவை
Open பண்ணு... "

" ம்ம்.. பண்ணிட்டேன்.. "

" அப்படியே அந்த Locker-ஐ Open பண்ணு.. "

" ம்ம்.. அதையும் Open பண்ணிட்டேன்.."

" ஓ.கே. அங்கே என் Passport Size Photo
ரெண்டு இருக்கும்., எடுத்து வெளியே
வெச்சிடு..!! "

" ???!! "
.
.

70 Comments:

மாலா said...

உங்க போட்டோவை கண்டா
எறும்பு விடமாட்டேங்குது.

உங்களை கண்டா நாய்
விடமாட்டேங்குது.
ஏன்?

மதுரை சரவணன் said...

நல்ல சுவிட்டுத்தான்... பார்த்து படுங்க நிசமாவே திங்க வந்திடப்போகுது.. சுவரசியமாக இருந்தது. .ரசித்தேன்.வாழ்த்துக்கள்

Chitra said...

எறும்பு "கடி" ஜோக்! ஸ்ஸ்ஸ்..... அப்பா..... நினைப்ஸ் புளைப்ஸ் கெடுக்ஸ்!

suthan said...

இது ரொம்ப ஓவர்......ரொம்பத்தான் கிண்டல் பண்ணறீங்களே

Gopi Ramamoorthy said...

பாஸ், நீங்க கடிக்கிற கடி தாங்காம அது பீரோவுக்குப் போகுது. நீங்க என்னடான்னா?

இருந்தாலும் உங்க தன்னம்பிக்கை எனக்குப் புடிச்சிருக்கு:)

மயக்கம் அடிச்சு விழுந்தவங்க எளுந்தாங்களா இல்லியா:)

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க பர்சனாலிட்டியா இருக்கறதா ஒரு பேச்சுக்குதான் சொன்னேன்,படி சீரியசா எடுத்துக்கலாம?

சி.பி.செந்தில்குமார் said...

>>>> வலைப்பதிவு உரிமையாளரின் ஒப்புதலுக்கு பின்னர் காண்பிக்கப்படும்.>>>

நாட்ல இந்த ி்உரிமையாளர்கள் தொந்தரவ் தாங்கலியே

இம்சைஅரசன் பாபு.. said...

சோ ....ஸ்வீட் மக்கா.........
பார்த்து மக்கா பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வுக்கே இந்த நிலைமை என்றால்.......உங்கள டைரக்ட் அ திங்க ஊர்ல உள்ள எறும்பு எல்லாம் உங்க வீட்டுக்கு வந்திர போகுது

Raj said...

உனக்கு வேணும் டா, உனக்கு வேணும்.. இதுவும் வேணும் இன்னமும் வேணும்.....

கடுப்பேத்துறார்(க‌டிக்குறார்) மை லார்ட்..

:-)

Madhavan said...

அவ்ளோதான.. என்ன பாஸ் மேட்டர் சப்பையாயிடுச்சி.. உங்க தெறமைக்கு இன்னும்.. இன்னும் நல்லாவே யோசிக்கலாம்.. ஜஸ்ட் கொஞ்சம் மூளைய யூஸ் பண்ணுங்க..

ரசிகன் said...

ஒரு வேளை தீவிர வாதிகள் சதியோ...?
( நமக்கு போட்டியா இன்னொருத்தர் மக்களை டார்ச்சர் பண்றதான்னு பொறாமைல)
உங்க கடிக்கு பதிலடி.. ச்சே.. பதில் கடி தர ஏவி விட்டிருப்பாங்களோ !!!?

(தீவிர வாதிகளெல்லாம் உங்க மேல concentrate பண்ணிட்டு இருந்ததாலதான்..
ஒபாமா பத்திரமா ஊரு போய் சேர்ந்திருக்கறதா நம்பத்தகுந்த வட்டாரங்கள்ல இருந்து தகவல் வந்தது... )

வெங்கட் said...

@ மாலா.,

// உங்களை கண்டா நாய்
விடமாட்டேங்குது. ஏன்? //

நான்தான் எங்க தெருவுல
இருக்கிற எல்லா நாய்க்கும்
தினமும் ஒரு ' டீ' யும்.,
ரெண்டு Biscuits-ம் வாங்கி குடுக்கறேனே..

அதான் என்னை கண்டா
எல்லா நாயும் நன்றி காட்டாம
விடமாட்டேங்குது..

வெங்கட் said...

@ மதுரை சரவணன்.,

// பார்த்து படுங்க நிசமாவே
திங்க வந்திடப்போகுது.. //

கரெக்ட்டு.. அதுக்குதான் என் ரூம்
கதவுல VKS Members போட்டோவை
ஓட்டி வெச்சி இருக்கேன்..

அதை பாத்து பயந்து எறும்பு.,
பல்லி., கரப்பான்பூச்சி எதுவுமே
என் ரூம் பக்கம் வர்றதே இல்ல..

ஹி., ஹி., ஹி..!!

ரசிகன் said...

போட்டோவ பாத்தா எல்லாம் காட்டுவாசி எறும்புங்க போல தெரியுதே..
கொட்டு வாசிக்கற சந்தோஷத்த பாத்தா இனிப்புக்கு ஏமாந்து வந்த மாதிரி தெரியல..
ஏதோ ப்ளான் பண்ணி வந்த மாதிரியே இருக்கு... உஷாரய்யா உஷாரு...

வெங்கட் said...

@ சுதன்.,

// இது ரொம்ப ஓவர்., ரொம்பத்தான்
கிண்டல் பண்ணறீங்களே //

கிண்டலா..? நடந்த விஷயத்தை
அப்படியே எழுதி இருக்கேன்பா..

அதுக்கு அப்புறம் என்ன நடந்ததுன்னு
எல்லாம் கேக்கப்படாது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கரெக்ட்டு.. அதுக்குதான் என் ரூம் கதவுல VKS Members போட்டோவை ஓட்டி வெச்சி இருக்கேன்..

அதை பாத்து பயந்து எறும்பு., பல்லி., கரப்பான்பூச்சி எதுவுமே என் ரூம் பக்கம் வர்றதே இல்ல..

ஹி., ஹி., ஹி..!!///

அது சரிதான். ஓவர் இனிப்பு உடம்புக்கு ஆகாதுல்ல. அதனாலதான் எங்க போட்டோ பாத்து எறும்பு வீட்டுக்குள்ளயே வர்றதில்லை. ஏன்னா நாங்க(VKS) ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்வீட். ஆனா வெங்கட் போட்டோ பீரோக்குள்ள ஏன் அவங்க மனைவி வச்சிருக்காங்கன்னா, அவங்க வீட்டுல எறும்பு பொடி காலியாம். பீரோவுக்குள்ள எறும்பு நிறைய வர்றதால எறும்பு பொடிக்கு பதிலா வெங்கட் போட்டோ வச்சிட்டாங்க. எறும்பு அவர் போட்டோ பாத்ததும் தானா செத்துடும். இல்லைனா தற்கொலை பண்ணிக்கும். ஹிஹி

Arun Prasath said...

எறும்பு கடிகுதோ இல்லையோ, நீங்க மரண கடி கடிகறீங்க...

அருண் பிரசாத் said...

@ அருண் (எனக்கேதான்)
எத்தனை முறை சொன்னாலும் திருந்தமாட்டியா?

இந்த கடி கடிச்சாலும் வந்து வாங்கிட்டுதான் போவேன்னு சொன்னா, அது உன் தலைவிதி

அனுபவி

ப.செல்வக்குமார் said...

இன்னொன்னு மறந்துட்டீங்களே ..?
அன்னிக்கு ஒரு தடவ ஒரு குழந்தை மிட்டாய் கேட்டு ரொம்ப அழும்போது
அவுங்க அம்மா வந்து உங்களை பேச சொன்னாங்கள்ல, பேசினதும் குழந்தை அழுறத விட்டுட்டு சிரிச்சுதுள்ள..!! அப்புறம் நீங்க போயிட்டீங்க ..
நான் கேட்டேன் " எதுக்கு அவர பேச சொன்னீங்க ..? " அப்படின்னு.
அதுக்கு அவுங்க சொன்னாங்க " அவரு பேசுறது அவ்ளோ இனிமையா இருக்கும்னு..!! "

ப.செல்வக்குமார் said...

///அது சரிதான். ஓவர் இனிப்பு உடம்புக்கு ஆகாதுல்ல. அதனாலதான் எங்க போட்டோ பாத்து எறும்பு வீட்டுக்குள்ளயே வர்றதில்லை. ஏன்னா நாங்க(VKS) ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்வீட்.///

உங்க போட்டோ பார்த்துட்டு எறும்பு உள்ள வராததுக்கு இன்னொரு காரணம் இருக்கு .. வாசல்ல இருக்குற போட்டோவே இவ்ளோ இனிப்பா இருக்கே , உள்ள இருக்குறவுங்க எவ்ளோ இனிப்பா இருப்பாங்க ..? அப்படின்னு நினைச்சுட்டுப் போய்டும் ..

ஆதிமூலகிருஷ்ணன் said...

உங்கள் பகிர்வுகள் எளிமையாகவும், ரசனையாகவும் இருக்கின்றன. துணுக்குகள் அனைத்தும் உங்களுடைய படைப்புகளே எனில் உண்மையில் இது பிரமிப்பான விஷயமே. தொடர்க உங்கள் சேவை. வாழ்த்துகள்.

முனைவர்.இரா.குணசீலன் said...

ஓஓஓஓகோ

அவ்வ்வ்வ்வ்வளவு இனிப்ப்ப்ப்பா


நீங்ங்ங்ங்க??????????????

வெங்கட் said...

@ கோபி.,

// மயக்கம் அடிச்சு விழுந்தவங்க
எளுந்தாங்களா இல்லியா.. :) //

நீங்க என் Wife -ஐ கேக்கறீங்களா..?

நான் பொண்ணு பாக்க போனப்ப
என் Personality-ஐ பாத்து அவங்க
அன்னிக்கி மயங்கின மயக்கமே
இன்னும் தெளியல..

ஹி., ஹி., ஹி..!!!

ராஜ நடராஜன் said...

எறும்பு க(ப)டிச்சதா:)

ப.செல்வக்குமார் said...

//(தீவிர வாதிகளெல்லாம் உங்க மேல concentrate பண்ணிட்டு இருந்ததாலதான்..
ஒபாமா பத்திரமா ஊரு போய் சேர்ந்திருக்கறதா நம்பத்தகுந்த வட்டாரங்கள்ல இருந்து தகவல் வந்தது... )

//

நீங்க சொல்லுறது சரிதாங்க ., வெங்கட் இருக்கும் போது நம்மால எப்படி தாக்குதல் நடத்த முடியும் .. அதனால வெங்கட்ட கவனிங்க , கவனிசுட்டே இருங்க , அவரு எப்ப கொஞ்சம் அசருராரோ அப்ப என்ன தாக்குதல் வேணா வச்சுக்கலாம் அப்படின்னுதான் அவுங்க எங்க மேல concentrate
பண்ணிட்டு இருந்தாங்க ..

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//தீவிர வாதிகளெல்லாம் உங்க மேல concentrate பண்ணிட்டு இருந்ததாலதான்..//

தீவிரவாதினா வெறும் அஞ்சி பேர் மட்டும் இருக்க மாட்டாங்க. அவங்க குழு தலைவி தீபாவளிக்கு எல்லாம் லீவ் போட மாட்டாங்க.

//ஒபாமா பத்திரமா ஊரு போய் சேர்ந்திருக்கறதா நம்பத்தகுந்த வட்டாரங்கள்ல இருந்து தகவல் வந்தது...//

அப்பொ அவரும் எங்களை நம்பி தான் வந்தாரா??

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//போட்டோவ பாத்தா எல்லாம் காட்டுவாசி எறும்புங்க போல தெரியுதே..//

ஆமாம். காட்டுல தேன் தீர்ந்து போச்சாம்.

//கொட்டு வாசிக்கற சந்தோஷத்த பாத்தா இனிப்புக்கு ஏமாந்து வந்த மாதிரி தெரியல..//

2000 மைல் தேடி இப்பொதான் தேன் கண்டு பிடிச்சி இருக்கு அதான் சந்தோஷம்.. :))

//ஏதோ ப்ளான் பண்ணி வந்த மாதிரியே இருக்கு... உஷாரய்யா உஷாரு...//

வழியில் இருக்க VKS எப்படி தாண்டி போறது ப்ளான் பண்ணுது... பாத்து கடிச்சி வைக்க போகுது.

Anonymous said...

***"உங்களை கண்டா நாய்
விடமாட்டேங்குது.
ஏன்?"

nice mala

*** "நான் பொண்ணு பாக்க போனப்ப
என் Personality-ஐ பாத்து அவங்க
அன்னிக்கி மயங்கின மயக்கமே
இன்னும் தெளியல.."

:O venkat
over confidence udambukku aagadhu ;)

எஸ்.கே said...

உங்க ஃபோட்டோவ ஸ்வீட்டுட்னா... அப்ப நீங்க...

Gayathri said...

என்ன கொடுமை இது?? ஏன் இப்படி ஆய்டீங்க..வெயில்ல போகாதீங்க... ஹாஹா

சமயா இருக்கு ப்ரோ சிறி சிறி ன்னு சிரிச்சேன்..எப்படித்தான் இப்படில்லாம் யோசிக்கரீன்களோ

TERROR-PANDIYAN(VAS) said...

@காயத்ரி

//ஏன் இப்படி ஆய்டீங்க..வெயில்ல போகாதீங்க... ஹாஹா

சமயா இருக்கு ப்ரோ சிறி சிறி ன்னு சிரிச்சேன்..//

சகோ அங்க விட இங்க தான் வெயில் அதிகம். நீங்க வேற சிரி சிரி சிரிச்சேன் சொல்றிங்க... பாத்து.. :))

Gayathri said...

@ terror : நான் வெயில்ல சுத்தி சுத்தி எப்படி லூசாய்டேன்..அதான் வேங்கடாவது நல்லா இருக்கட்டும் என்கிற நல்ல எண்ணத்துல சொன்னேன்..

யார் புருஞ்சுகுறாங்க???

வெங்கட் said...

@ டெரர்.,

// சகோ அங்க விட இங்க தான்
வெயில் அதிகம். நீங்க வேற சிரி சிரி
சிரிச்சேன் சொல்றிங்க... பாத்து.. //

காயத்திரியை கலாய்க்காதீங்க..
அப்படியே நைசா பேசி VAS-ல
சேத்துக்கலாம்..

Gayathri said...

@ venkat : நான் ஏற்கனவே வி யே எஸ் மெம்பர் தான் ப்ரோ..

வெங்கட் said...

@ சி.பி.செந்தில்.,

// நீங்க பர்சனாலிட்டியா இருக்கறதா
ஒரு பேச்சுக்குதான் சொன்னேன், படி
சீரியசா எடுத்துக்கலாம? //

என் பேச்சை வெச்சிகிட்டாலும் சரி.,
வெச்சிக்கலைன்னாலும் சரி
நான் சீரியஸாதான் சொல்றேன்..

நீங்களும் பார்க்க பர்சனாலிட்டியா
தான் இருக்கீங்க ( என்னை மாதிரியே )

// நாட்ல இந்த ி்உரிமையாளர்கள்
தொந்தரவ் தாங்கலியே //

நான் ரொம்ப நல்லவங்க..
( ரமேஷ் மாதிரின்னு நினைச்சி
காறி துப்பிடாதீங்க. )

இந்த Moderation எதுக்குன்னா..
என்னை கலாய்ச்சி வர்ற Comments-ஐ
எல்லாம் முதல்ல நான் பாத்து., படிச்சி.,
ரசிச்சி., நடுநிலையா பரிசீலனை
பண்ணி Reject பண்ணத்தான்...

ஹி., ஹி., ஹி..!!

ராஜகோபால் said...

உங்க போட்டோவ கடிச்ச எறும்புக்கு சுகர் வந்துருக்குமே எந்த ஆஸ்பிட்டல்ல சேத்திங்க.

வெங்கட் said...

@ பாபு..,

// பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்கே
இந்த நிலைமை... உங்கள டைரக்ட்-அ
திங்க ஊர்ல உள்ள எறும்பு எல்லாம்
உங்க வீட்டுக்கு வந்திர போகுது //

இப்பல்லாம் அந்த கவலையே இல்ல..

என்கிட்ட ஒரு சூப்பர் Spray இருக்கு..
ஒரு வாளி தண்ணியில ரெண்டு சொட்டு
கலந்து தெளிச்சா போதும்..அதுக்கபுறம்
எறும்பு பரம்பரையே வீட்டுப்பக்கம்
தலை வெச்சி படுக்காது..

அது என்ன Spray-ஆ..?

நம்ம ரமேஷ் Use பண்ற
Body Spray..

ரசிகன் said...

@terror.
//தீவிரவாதினா வெறும் அஞ்சி பேர் மட்டும் இருக்க மாட்டாங்க. அவங்க குழு தலைவி தீபாவளிக்கு எல்லாம் லீவ் போட மாட்டாங்க.

VKS members தீவிரவாதிகள் அல்லர்.. அவர்கள் உலக மகா நல்லவர்கள் என்று வெளிப்படையான ஆதவை வழங்கி இருக்கும் எதிரணி தோழர் டெரர்... வாழ்க வாழ்க... VKS எல்லாரும் Terror sirக்கு ஒரு ஓ போடுங்கப்பா...

ரசிகன் said...

@terror. (sorry for lengthy reply)
//ஆமாம். காட்டுல தேன் தீர்ந்து போச்சாம்.

காட்டில் தேன் தீர்ந்தது எப்படி...? நடந்தது என்ன...?


சிட்டி : ஏ தேனீ'ஸ்.. உண்மைய சொல்லுங்க.. சனாவ கொட்டினது யாரு.?

தேனீஸ் : சொல்ல மாட்டோம்..

சிட்டி : அப்படியா.. அப்ப உங்க எல்லாரயும் அழிச்சிடறேன்..

(இந்தblogன் எல்லா postsஐயும் தேனீக்களுக்கு படித்துக் காட்டுகிறது.)

கடி தாங்காத தேனீக்கள் ஒன்றை ஒன்று கடித்து சாகின்றன..

ப்ரதி பலனாக அவை சேர்த்திருந்த எல்லா தேனையும் இவரின் lockerல் வைக்கிறது சிட்டி..

சிட்டி வரும் வழியில் சொட்டவிட்ட தேனை தொடர்ந்து வந்த எறும்பு குலமும், லாக்கரில் இருந்த photoவை பார்க்க நேர்ந்ததால் அழியும் அபாயம்.. காப்பாற்றும் உபாயம் அறிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலகம் . VKS

ரசிகன் said...

@Gayathri

1. ப‌திவ‌ரின் Notice Board :
VAS = Venkat-ஐ ஆதரிப்போர் சங்கம்
Members : உலகத் தமிழர்கள் அனைவரும் ( அந்த 5 பேரை தவிர )

2. ப‌திவ‌ரின் comment
காயத்திரியை கலாய்க்காதீங்க..
அப்படியே நைசா பேசி VAS-ல
சேத்துக்கலாம்..

1+2 => நீங்க‌ த‌மிழ் ம‌க்க‌ள்ல‌யே சேர்த்தி இல்ல‌
இப்ப‌டி பகிர‌ங்க‌மா அறிக்க‌ விடுற‌வ‌ர‌ கூட‌ ஆத‌ரிக்க‌ற‌ அப்பாவியா இருக்கீங்க‌ளே... ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ங்க‌ நீங்க‌ :-(

வெங்கட் said...

@ ராஜ்.,

// கடுப்பேத்துறார்(க‌டிக்குறார்) மை லார்ட்.. //

சொல்ற பேச்சை கேக்காம
VKS ஆளுங்க Blog போயி படிக்க.,
( சாரி.. அங்கே படிக்க என்ன இருக்கு..?? )
பார்க்க வேண்டியது.. அப்புறம்
என்கிட்ட வந்து....

" கடுப்பேத்துறார் (க‌டிக்குறார்) மை லார்ட்.."
புலம்ப வேண்டியது..!! இதே வேலையா
போச்சு உங்களுக்கு..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// ஏன்னா நாங்க(VKS) ரொம்ப ரொம்ப
ரொம்ப ரொம்ப ஸ்வீட். //

இடம் : அடையார் ஆனந்தபவன்

Sweet Master : முதலாளி நான் புதுசா
ஒரு ஸ்வீட் கண்டுபிடிச்சி இருக்கேன்..
அதுக்கு பேரு VKS ஸ்வீட்..

Owner : அதுல என்ன SPl.?

S.Mas : அது ரொம்ப ரொம்ப ஸ்வீட்..
இது நம்ம கடையில இருந்தா
ஒரு எறும்பு கூட கடைக்குள்ள வராது..

எங்கே குடு பாக்கலாம்..
( சாப்பிட்டு பார்க்கிறார்.. )

Owner : தப்பா சொல்றியே...,
இது நம்ம கடையில இருந்தா
ஒரு ' ஈ.,காக்கா' கூட கடைக்குள்ள
வராதுன்னு சொல்லு அதான்
சரியான வார்த்தை....

S.Mas : ??!!

வெங்கட் said...

@ ஆதிமூலக்கிருஷ்ணன்.,

// உங்கள் பகிர்வுகள் எளிமையாகவும்,
ரசனையாகவும் இருக்கின்றன. துணுக்குகள்
அனைத்தும் உங்களுடைய படைப்புகளே
எனில் உண்மையில் இது பிரமிப்பான விஷயமே.
தொடர்க உங்கள் சேவை. வாழ்த்துகள். //

உங்க மாதிரி சீனியர் நம்மள வந்து
வாழ்த்தறது மனசுக்கு உற்சாகமாவும்.,
சந்தோஷமாவும் இருக்கு...!!

உங்க Blog-ல விஜய்சாரதி சூப்பர்ஸ்டாரை
பேட்டி எடுத்த அழகை பத்தி போட்டு
இருக்கீங்களே.. அது A-Class.. சூப்பர்..

இன்னுமொரு சூப்பர் பேட்டி

Shalini(Me The First) said...

@வெங்கட்
பாஸ் நீங்களும் உங்க போஸ்ட்டும்
ச்சோ...ச்ச்வீட்...!!!

@காயத்ரி
வெல்கம் வெல்கம் வெல்கம் டு VAS
:)

@ரசிகன்
//
1+2 => நீங்க‌ த‌மிழ் ம‌க்க‌ள்ல‌யே சேர்த்தி இல்ல‌
இப்ப‌டி பகிர‌ங்க‌மா அறிக்க‌ விடுற‌வ‌ர‌ கூட‌ ஆத‌ரிக்க‌ற‌ அப்பாவியா இருக்கீங்க‌ளே... ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ங்க‌ நீங்க‌ //

அட அட உங்க கணித திறமை?!
நம்ம காயத்ரி தமிழ் கொஞ்சம் அப்படி இப்படி தான் அதுக்காக நீங்க எப்படி அவங்கள இப்படி சொல்லலாம்?

சர்ஹூன் said...

ஐயோ!!!!!!!!! ஐயோ........ என்னால முடியலியே!!!!!!!

ரசிகன் said...

//@shalini

@ரசிகன்
//
1+2 => நீங்க‌ த‌மிழ் ம‌க்க‌ள்ல‌யே சேர்த்தி இல்ல‌
இப்ப‌டி பகிர‌ங்க‌மா அறிக்க‌ விடுற‌வ‌ர‌ கூட‌ ஆத‌ரிக்க‌ற‌ அப்பாவியா இருக்கீங்க‌ளே... ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ங்க‌ நீங்க‌ //

அட அட உங்க கணித திறமை?!
நம்ம காயத்ரி தமிழ் கொஞ்சம் அப்படி இப்படி தான் அதுக்காக நீங்க எப்படி அவங்கள இப்படி சொல்லலாம்?//

ப்ளாக்கை தான் முழுசா படிக்க மாட்டீங்க ... சரி.. கமெண்டையுமா...? எங்க எழுத்து கூட்டி கடைசி எழுத்து வரை படிங்க பார்க்கலாம்... ம்ம்.. இப்பவாவது புரியுதா... தன்னோட இருவேறு கருத்துக்கள் மூலமா அவங்கள இப்படி சொல்லி இருக்கற உங்க பாஸின் அருமை பெருமைகளை எடுத்து சொல்லி இருக்கேன்.. (1 + 2 வந்துட்டதாலயே இது கணிதம் இல்ல.. 1+2=3 ந்னு போட்டா தான் அது கணிதம்.. Here it means 1st point along with second point concludes that.. )

வெங்கட் said...

@ ரசிகன்.,

// VKS members தீவிரவாதிகள் அல்லர்..
அவர்கள் உலக மகா நல்லவர்கள் என்று
வெளிப்படையான ஆதவை வழங்கி இருக்கும்
எதிரணி தோழர் டெரர்... வாழ்க வாழ்க...//

( நான்., டெரர்க்கு போன்.. )

நான் : என்ன டெரர்.., VKS - ஐ
மகா நல்லவங்கன்னு சொன்னீங்களா..?

டெரர் : இல்லையே தல.., அவங்கள
" தீவிரவாதிங்க இல்லை"-ன்னு
மட்டும் தான் சொன்னேன்..

நான் : அப்படின்னா..?

டெரர் : இவங்களுக்கு ' தீவிரவாதி பட்டம்'
எல்லாம் கொஞ்சம் ஓவர் தல..

வேணும்னா இவங்க உங்க Range-க்கு
தகுந்த மாதிரி பிக்பாக்கெட்.,
பித்தளை பாத்தரத்தை திருடறது.,
செயினை அத்துட்டு ஓடுறது
இதுல ஏதாவது ஒண்ணு வெச்சிக்கலாம்..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// 1+2 => நீங்க‌ த‌மிழ் ம‌க்க‌ள்ல‌யே சேர்த்தி
இல்ல‌ இப்ப‌டி பகிர‌ங்க‌மா அறிக்க‌ விடுற‌வ‌ர‌
கூட‌ ஆத‌ரிக்க‌ற‌ அப்பாவியா இருக்கீங்க‌ளே...//

( BCCI Office )

ஸ்ரீகாந்த் : முரளி விஜய் நல்லா ஆடுறாரு..
அவரை இந்தியன் டீம்க்கு Select பண்ணலாம்..

டோனி : யெஸ்., அவர் நல்ல Choice..

ரசிகன் : 2 + 9 x ( 4a+ 5b ) => முரளி விஜய்

ஸ்ரீகாந்த் : ஏ.. யாருப்பா நீயி...? என்ன இது
கணக்கு..?

ரசிகன் : நீங்க தப்பு கணக்கு போடறீங்கனு
சிம்பாளிக்கா சொல்றேன்..

ஸ்ரீகாந்த் : என்ன தப்பு கணக்கு..?

ரசிகன் : இப்ப தான் முரளி விஜய்யை
இந்தியன் டீமுக்கு செலக்ட் பண்ணி இருக்கீங்க..
அப்ப இவ்ளோ நாளா அவரு இந்திய மக்கள்ல
சேர்த்தி இல்லயா..?

ஸ்ரீகாந்த் : நீங்க VKS தானே..?

ரசிகன் : எப்படி கண்டுபிடிச்சீங்க..?

ஸ்ரீகாந்த் : பின்ன அவங்கள விட்டா
இப்படி லூசுத்தனமா வேற யாரு
யோசிக்க முடியும்..?!!

ரசிகன் said...

@venkat

2 + 9 x ( 4a+ 5b ) => வெங்கட்.

என்ன‌ தான் சொல்ல‌ வ்ர்றீங்க‌
இந்தியர்கள் = உலக தமிழர்கள்.
இந்தியன் டீம் = VAS

அதாவ‌து உல‌க‌த்த‌மிழ‌ர்க‌ள் VAS ஆத‌ர‌வாள‌ர்க‌ளே த‌விர‌ VAS members இல்லைன்னா..? அப்போ ஏன் notice boardil membersன்னு போட்டு இருகீங்க‌..??

அப்ப ஒண்ணு notice board i
மாத்திட்டு, members நாங்க 4 பேரு தான்.. உலகத்தமிழர்கள் அனைவரும் எங்கள் ஆதரவாளர்களேன்னு போடுங்க‌..

இல்ல இந்தியன் டீம் ல என் பேரை சேர்த்துட்டு ஒவ்வொரு match winningலயும் பங்கு தர சொல்லுங்க‌

பதிவுலகில் பாபு said...

:-)))

வெங்கட் said...

@ ரசிகன்.,

// 2 + 9 x ( 4a+ 5b ) => வெங்கட்.

என்ன‌ தான் சொல்ல‌ வ்ர்றீங்க‌
இந்தியர்கள் = உலக தமிழர்கள்.
இந்தியன் டீம் = VAS //

2 + 9 x ( 4a+ 5b ) => ரசிகன்.

இந்தியன் கிரிக்கெட் டீம் Squad-ல
எத்தனை பேர் இருந்தாலும்.,
Match ஆடப்போறது என்னமோ
11 பேர் மட்டும் தான்..

அதே மாதிரி உலக தமிழர்கள்
அனைவரும் VAS -ல இருந்தாலும்
Comment போட போறது என்னமோ
ஒரு சில லட்சம் பேரு தான்..

இங்கே
இந்தியன் Squad = Total VAS Members
இந்தியன் Team = Comment போடும் VAS Members

// காயத்திரியை கலாய்க்காதீங்க..
அப்படியே நைசா பேசி VAS-ல
சேத்துக்கலாம்.. //

இது எங்களுக்குள்ள ( VAS )
நாங்க Pass பண்ணிகிட்ட மெசேஜ்..
இதுக்குள்ள 1000 அர்த்தம் இருக்கு..
அதெல்லாம் உங்களுக்கு புரியாது..!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// பாஸ் நீங்களும் உங்க போஸ்ட்டும்
ச்சோ...ச்ச்வீட்...!!! //

ஹி., ஹி., ஹி..!!

ஆமா Exams முடிஞ்சிதா..?
வழக்கம் போல இந்த தடவையும்
" University First " தானே..?!!

பாஸ்கர் said...

பாஸ், தீபாவளி நேரத்தில் அக்கம் பக்கம் வீடுகளுக்கு உங்கள் புகைபடத்தைதான் (ஒரு டஜன்) அனுப்பி வைத்தீர்கள், இல்லையா?

ராஜி said...

எதுக்கும் இனி தினமும் சாப்பாட்டுல எறும்பு பொடி ஒரு spoon சேர்த்துக்கங்க. ஏன்னா, வருமுன் காப்பது நல்லதில்லையா? நானும்தான் blogla எழுதுறேன் ஆனால் உங்களை மாதிரி நச்சுன்னு சிம்பிளா வரமாட்டேங்குதே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// வெங்கட் said...

@ ஷாலினி.,

// பாஸ் நீங்களும் உங்க போஸ்ட்டும்
ச்சோ...ச்ச்வீட்...!!! //

ஹி., ஹி., ஹி..!!

ஆமா Exams முடிஞ்சிதா..?
வழக்கம் போல இந்த தடவையும்
" University First " தானே..?!!///

University ல சுண்டல் தர்றாங்கன்னு சொன்னா ஷாலினு மீ தி first அப்டின்னு சொல்லிட்டு ஓடிடுவாங்க. சொல்லி பாருங்க..

lekha said...

venkat
cant ctrl my laugh
cho chweet!!!

may b it came bcoz of ur wife's and babies photos !!

u took it in another way ;)

ரசிகன் said...

@venkat

ஐ ஐ விட மாட்டோம்ல..

//ரசிகன் : இப்ப தான் முரளி விஜய்யை
இந்தியன் டீமுக்கு செலக்ட் பண்ணி இருக்கீங்க..
அப்ப இவ்ளோ நாளா அவரு இந்திய மக்கள்ல
சேர்த்தி இல்லயா..?

இதை என் dialogueஆ போட்டு கமெண்ட் போட்டு Total VAS Members ஐ இந்திய மக்கள்க்கு பண்ணிணதே நீங்கதாங்க.. அப்புறம் என் பதிலை படிச்சுட்டு.. அவசர அவசரமா இந்திய மக்கள இந்தியன் squadஆ ஏன் ஆக்கினீங்க..?

சரி உங்க பேச்சுக்கே வந்தாலும்... இப்ப dialogueஐ பாருங்க..

ரசிகன் : இப்ப தான் முரளி விஜய்யை
இந்தியன் டீமுக்கு செலக்ட் பண்ணி இருக்கீங்களா..
அப்ப இவ்ளோ நாளா அவரு இந்தியsquadla
சேர்த்தி இல்லயா..?

இது எப்படி லூசுத்தனமான கேள்வி ஆகும்..??

ரசிகன் said...

//
இது எங்களுக்குள்ள ( VAS )
நாங்க Pass பண்ணிகிட்ட மெசேஜ்..
இதுக்குள்ள 1000 அர்த்தம் இருக்கு..
அதெல்லாம் உங்களுக்கு புரியாது..!!

ஒத்துக்கறேன்.. நீங்க Pass பண்ணிகிட்ட msgsக்கு அர்த்தம் இருக்கும்னு எதிர் பார்க்குறதே அதிகப் படி.. இதுல புரிய வேற செய்யணும்னு எதிர் பார்க்கறது... ரொம்ப overதான்.. Next meet பண்றேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்

ஐய்!! நானும் வந்துட்டேன்!!

//இது எங்களுக்குள்ள ( VAS )
நாங்க Pass பண்ணிகிட்ட மெசேஜ்..
இதுக்குள்ள 1000 அர்த்தம் இருக்கு..
அதெல்லாம் உங்களுக்கு புரியாது..!!//

போங்க பாஸ் நாலு லைன்ல சென்னாலே VKSக்கு புரியது நீங்க இவ்வளோ பெரிய விளக்கம் கொடுத்தா பாருங்க ரசிகன் காதல் படத்துல கிளைமாக்ஸ்ல வர பரத் மாதிரி தலை சொறிஞ்சிட்டு நிக்கிறாரு.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//(இந்தblogன் எல்லா postsஐயும் தேனீக்களுக்கு படித்துக் காட்டுகிறது.)

கடி தாங்காத தேனீக்கள் ஒன்றை ஒன்று கடித்து சாகின்றன..//

நடுவுல இரண்டு லைன் மிஸ் பண்ணிட்டிங்களே!!

(Post கேட்ட பின்பு)

ராணி தேனி : இவ்வளோ இனிமையான விஷயம் ஒரே இடத்துல கிடைக்கற அப்பொ நாம ஏன் தேன தேடி பூ பூவா அலையனும்?

சிட்டி : ஹா..ஹா.. அவசர படாதிங்க ராணி. சாகபோர உங்களுக்கு நான் கொடுத்த கடைசி சந்தோஷம் பதிவு படிச்சது. இப்பொ வருது பாருங்க மரண வலி..

(சிட்டி VKS கமெண்ட்ஸ் படிக்கிறது..)

// எறும்பு குலமும், லாக்கரில் இருந்த photoவை பார்க்க நேர்ந்ததால் அழியும் அபாயம்.. //

ஆமாம் பாஸ். அளவுக்கு மீறினால அமுர்தமும் நஞ்சி!! தேனை அதிகம் சுவைத்து மலருக்குள் மயங்கி விழுந்த வண்டு அப்படினு புலவர்களே சொல்லி இருக்காங்க. புல் டைமா தேன் குடிக்கிற வண்டுக்கே அப்படி.

//தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலகம் . VKS//

உலகத்துல இருக்க கடிக்கிற ஜீவன் எல்லாம் காப்பாத்த ரொம்ப ட்ரை பண்றிங்க. அது சரி இனம் இனத்தோடதான சேரும்..

(எறும்புகள் மண்ணிக்க உங்கள் கடிக்கும் குனம் மட்டும் VKSக்கு உவமை..)

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்

//வேணும்னா இவங்க உங்க Range-க்கு
தகுந்த மாதிரி பிக்பாக்கெட்.,
பித்தளை பாத்தரத்தை திருடறது.,
செயினை அத்துட்டு ஓடுறது
இதுல ஏதாவது ஒண்ணு வெச்சிக்கலாம்..//

தல உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு அவங்க மனசு கஷ்ட்டபட கூடாது சொல்லி கொஞ்சம் அதிகமா சொல்லி இருக்கிங்க.. நான் சொன்னது

1.Pre.K.G பசங்கள மிரட்டி மாமுல் கேட்டு அடி வாங்கரது.
2. ஸ்கூல் போற அவர் பொண்ணு கிட்ட இருந்து லாலி பாப் பிடிங்கிட்டு ஆபிஸ் ஓடி போறது.
3. பெயரை கூட மறந்துட்டு. பெயர் சொல்ல விருப்பம் இல்லை பில்டப் கொடுக்கறது.
4. டைனோசர் பார்த்து தும்பிக்கை இல்லாத யானை எவ்வளோ அழகு ரசிக்கிறாது.
5. ஹோம் வொர்க் கொடுத்தா பக்கத்துல இருக்க பொண்ணு நோட்ட பாத்து காப்பி அடிக்கிறேன் சொல்லி டெய்லி அந்த பொண்ணு நேம் சேர்த்து எழுதரது.

வெங்கட் said...

@ பாஸ்கரன்.,

//தீபாவளி நேரத்தில் அக்கம் பக்கம் வீடுகளுக்கு
உங்கள் புகைபடத்தைதான் (ஒரு டஜன்) அனுப்பி
வைத்தீர்கள், இல்லையா? //

ஹி., ஹி., ஹி...!!!

இந்த நியூஸ் உங்க வரைக்கும்
வந்துடுச்சா..?

வெங்கட் said...

@ ராஜி.,

// நானும்தான் blogla எழுதுறேன் ஆனால்
உங்களை மாதிரி நச்சுன்னு சிம்பிளா
வரமாட்டேங்குதே //

இது ரொம்ப சிம்பிள் மேட்டர்..

எழுதாளர் சுஜாதா சொன்ன
Technique Follow பண்ணினா போதும்..

" 10 வரியில சொல்ல வந்ததை
4 வரியில சொல்ல முடியுமான்னு பாருங்க..

அந்த 4 வரில கூட எதாவது
ஒரு வரியை Cut பண்ணினாலும்
அர்த்தம் மாறலைன்னு நீங்க
Feel பண்ணினா..

3 வரியே O.K.. "

சிம்பிள் தானே..!!

மங்குனி அமைச்சர் said...

பாவம் சுகர் கம்ளைன்ட் இருந்தா அப்படித்தான் எறும்பு மொய்க்கும்ன்னு என் டாக்டர் பிரண்டு சொன்னான் , சுத்தி எறும்பு பவுடர் போட்டுகங்க .

Shalini(Me The First) said...

@ரசிகன்
//
(1 + 2 வந்துட்டதாலயே இது கணிதம் இல்ல.. 1+2=3ன்னு போட்டா தான் அது கணிதம்.. Here it means 1st point along with second point concludes that.. )//

1+2 ன்னு வந்தா அது மாத்ஸ் இல்லியா?
அப்போ அது சிவிக்ஸா?
சே எங்க மாஸ்டர் ரொம்ப மோசம் :(
தப்பு தப்பா சொல்லி தந்துர்கார்

@ரமேஷ்
//
University ல சுண்டல் தர்றாங்கன்னு சொன்னா ஷாலினு மீ தி first அப்டின்னு சொல்லிட்டு ஓடிடுவாங்க. சொல்லி பாருங்க..//
ஆமா போலீஸ் இல்லைனா உங்க மாதிரி வரிசைல வராம இடைல வர்ர ஆளுங்கள எப்படி நிர்வாகம் சமாளிக்கும் எங்கள மாதிரி வாலண்டியர்ஸ் இல்லாம?!

Shalini(Me The First) said...

@வெங்கட்
//
ஆமா Exams முடிஞ்சிதா..?
வழக்கம் போல இந்த தடவையும்
" University First " தானே.//

ஹா ஹா ஹா எக்ஸாம் போர்டுக்கு வேற வழி இல்ல பாஸ்...

வெங்கட் said...

@ To All.,

ஆஹா.., இதை கவனிக்காம
விட்டுடேனே..

தமிழ்மணம்-ல இந்த வாரத்துக்கான
Top 20 பதிவர்கள் List வெளியிட்டு
இருக்காங்க..

அதுல நமக்கு 8th Place..

Top 20 Blogs

அனு said...

@rasigan

//members நாங்க 4 பேரு தான்//

rendu vaaram leave potta vudane ennai marandhutteengale?? :(

@venkat

//அதுல நமக்கு 8th Place.//

Congrats.. kalla vote potte periya aal aagitteenga pola irukku :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எறும்பையும் விடலியா? அடக்கடவுளே அதுவே பாவம் இப்போதான் தப்பிக்க வழி கண்டுபிடிச்சி எஸ்கேப்பு ஆகுது!

ரசிகன் said...

@anu

//rendu vaaram leave potta vudane ennai marandhutteengale?? :(

அனு.... நான் என்ன போட்டிருக்கேன் பாருங்க..

"அப்ப ஒண்ணு notice board i
மாத்திட்டு, members நாங்க 4 பேரு தான்.. உலகத்தமிழர்கள் அனைவரும் எங்கள் ஆதரவாளர்களேன்னு போடுங்க‌.. "

This suggestion is for replacing the members column of VAS in notice board.

4 = வெங்கட், டெர்ரர்,ஷாலினி, செல்வா.. (இவங்க 4 பேருதானே playing members of the squad.. hihi)

இவங்கள ஒரு பொருட்டாவே நீங்க கருதலன்னு உங்க reply மூலமா confirm பண்ணிட்டீங்க.. Welcome back.