சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

07 October 2010

" எந்திரன் " - செம Speeeed....!


என் பையன் ஒரு ரஜினி Fan..

LKG படிக்கும் போதே
" சந்திரமுகி " படத்தை DVD
தேய தேய பார்த்திருக்கான்..

அதுல Highlight என்னான்னா..

அப்பல்லாம் அவன் பெயரை
யாராவது கேட்டாலே..
" சூர்யான்னு சொல்லாம..,
சரவணன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டான்...! "

இப்பேர்பட்ட ஒரு ரஜினி ரசிகனை
நான் இன்னும் " எந்திரன் "கூட்டிட்டு
போகலை...

ஏன்னா..

" எந்திரன் படத்தை சேலத்துல போயி
தான் பார்க்கணும்., அதுவும் என்னை
கூட்டிட்டு போயி தான் பார்க்கணும்.. "

என் மனைவி இப்படி
அதட்டி., மிரட்டி., அன்பா சொன்னதால
வேற வழி இல்லாம Sunday வரை Waiting..

ஒவ்வொரு தடவை " எந்திரன் "
போஸ்டரை பார்க்கும் போதும்
ஒரே பீலிங்கா இருக்கு..

என் பையன் வேற தினமும்..,
" அப்பா.., நம்ம ஊர்லயே ஒரு தரம்
பார்க்கலாம்பான்னு கெஞ்சறான்.. "

( ஒரு தரம் பார்க்கலாம் தான்..
ஆனா தாரம் ஒத்துக்கலையே.. )

" நம்ம ஊர்ல டிக்கெட் கிடைக்காதுடான்னு "
சொல்லி அவனை சமாதானம் பண்ணி
வெச்சி இருந்தேன்.

நேத்து என் பையன்கூட ஒரு கடைக்கு
போயி இருந்தேன்..

அங்கே வந்தான் என் Friend ஒருத்தன்..
நல்லா வத்தி வெக்கறதுக்குன்னே..

என் பையனை பாத்து..

" என்ன எந்திரன் பாத்தாச்சா..? "

" இல்லை.. "

" இன்னுமா பார்க்கலை..?
உங்கப்பா கூட்டிட்டு போக
மாட்டேங்குறாரா.? "

" ஆமாம்., நம்ம ஊர்ல டிக்கெட்
கிடைக்காதுன்னு சொல்றாரு.. "

" நம்பாதே..!! பொய்.. சுத்த பொய்..,"

" அப்படியா..? "

" ஆமா.., ரெண்டு தியேட்டர்ல ஓடுது..,
அதுவும் 4 Show-க்கு பதிலா 5 Show ஓடுது..!
எப்படி டிக்கெட் கிடைக்காம போகும்..? "

உடனே என் பையன்
" நம்ம ஊர்லயே படம் பார்க்கலாம்பான்னு "
நச்சரிக்க ஆரம்பிச்சுட்டான்..

என் Friend-க்கு ரொம்ப சந்தோஷம்..

இனிமே வீட்டுக்கு போயி..,
நல்லா சாப்பிட்டுட்டு., நிம்மதியா தூங்குவான்..,
அதான் வந்த வேலை திருப்தியா முடிஞ்சுதே..!!

நான் என் பையனை பார்த்து..

" இந்த மாமா என்ன சொன்னாரு..
4 Show-க்கு பதிலா 5 Show ஓடுதுன்னு
சொன்னாருல்ல.. "

" ஆமா.. "

" அப்படின்னா அந்த படத்தை
ரொம்ப Speed-ஆ ( Fast Forward-ல )
ஓட்றாங்கன்னு அர்த்தம்..
அப்படி பார்த்தா படம் நமக்கு புரியுமா "

" புரியாது..!! "

" அப்ப சேலத்துல போயி பார்க்கலாம்.. ஓ.கே.. "

அவனும் அரை மனசா தலை ஆட்டினான்..

உஸ்ஸ்ஸப்பா.....
.
.

60 Comments:

TERROR-PANDIYAN(VAS) said...

@venkat

//அப்படின்னா அந்த படத்தை
ரொம்ப வேகமா ( Fast Forward-ல )
ஓட்றாங்கன்னு அர்த்தம்..//

thala ennnale mudiyala.... avvv

Shalini(Me The First) said...

@ terror

//
thala ennnale mudiyala.... avvv//

enna senior ipdi solliteenga?!

இம்சைஅரசன் பாபு.. said...

ஹ ஹா......... நல்ல இருக்கு வெங்கட் .எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியது இருக்கு ..........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//" அப்படின்னா அந்த படத்தை
ரொம்ப வேகமா ( Fast Forward-ல )
ஓட்றாங்கன்னு அர்த்தம்..
அப்படி பார்த்தா படம் நமக்கு புரியுமா "
///

இந்த மாதிரி அதி புத்திசாலிகளை நான் பார்த்ததே இல்லை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//" எந்திரன் " - செம Speeeed....! //

நோ நோ " எந்திரன் " - செம ரீலு!!!!!!!!!

TERROR-PANDIYAN(VAS) said...

@Shalini

//enna senior ipdi solliteenga?! //

நம்ம தல அறிவுக்கு முன்னாடி நாம எல்லாம் ஒரு தூசிமா... அவ்வ்வ்

அருண் பிரசாத் said...

// சூர்யான்னு சொல்லாம..,
சரவணன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டான்...!//
நல்லவேளை அப்பா பேரை கேட்கல... கேட்டு இருந்தா “வேட்டையன்”னு சொல்லி இருப்பான்

//இப்பேர்பட்ட ஒரு ரஜினி ரசிகனை
நான் இன்னும் " எந்திரன் "கூட்டிட்டு
போகலை... //
இது வெங்கட் தமிழகத்திற்கே செஞ்சதுரோகம்... இதை கண்டித்து சேலத்துல கடை அடைப்பு செய்யலாம்.

//" எந்திரன் படத்தை சேலத்துல போயி
தான் பார்க்கணும்., அதுவும் என்னை
கூட்டிட்டு போயி தான் பார்க்கணும்.. "
என் மனைவி இப்படி
அதட்டி., மிரட்டி., அன்பா சொன்னதால
வேற வழி இல்லாம Sunday வரை Waiting..//
அய்யய்யோ... இதை கவனிக்கலையே... போராட்டம் வாபஸ் வாபஸ்

//எந்திரன் படத்தை சேலத்துல போயி
தான் பார்க்கணும்.,//
பின்ன உங்க கிராம டெண்ட்டு கொட்டாய்ல போய்யா எந்திரன் படம் பாக்குறது!
என்னை மாதிரி சிட்டில போய் இப்படி பார்க்கனும்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

அருண் பிரசாத் said...

//அப்படின்னா அந்த படத்தை
ரொம்ப வேகமா ( Fast Forward-ல )
ஓட்றாங்கன்னு அர்த்தம்..//
//" இந்த மாமா என்ன சொன்னாரு..
4 Show-க்கு பதிலா 5 Show ஓடுதுன்னு
சொன்னாருல்ல.. "//
fast forward க்கு அர்த்தம் தெரியர பையனுக்கு, 4 showக்கும் 5 showக்கும் அர்த்தம் தெரியாதா?

எந்திரன் படம் மாதிரியே லாஜிக் ஓவரா உதைக்குதே!

//உதைக்குதே! //
@ டெரர், தள்ளி உட்காருங்க அதான் உதைக்குதுனு சொல்லுறேன்ல

எஸ்.கே said...

என்ன ஒரு கற்பனை வளம்! :-) வாழ்த்துக்கள்!

அருண் பிரசாத் said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@Shalini

//enna senior ipdi solliteenga?! //

நம்ம தல அறிவுக்கு முன்னாடி நாம எல்லாம் ஒரு தூசிமா... அவ்வ்வ்//
அச்... அச்... அச்.... இந்த தூசி சாரி கொசு தொல்லை தாங்கலைடா சாமி

சௌந்தர் said...

( ஒரு தரம் பார்க்கலாம் தான்..
ஆனா தாரம் ஒத்துக்கலையே.. )//

அட இது சூப்பரா இருக்கே

அங்கே வந்தான் என் Friend ஒருத்தன்..
நல்லா வத்தி வெக்கறதுக்குன்னே..////

அது அருண் தானே?

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//அச்... அச்... அச்.... இந்த தூசி சாரி கொசு தொல்லை தாங்கலைடா சாமி //

எலேய்!! அமிபா!! ஒரு செல் உயிரி... என்ன அங்க சத்தம்??

(வேலை இருக்க அன்னைக்கு தான் ஓவரா அட்டகாசம் பண்றிங்க....)

பாசகி said...

ஹி ஹீ :)

ப.செல்வக்குமார் said...

///( ஒரு தரம் பார்க்கலாம் தான்..
ஆனா தாரம் ஒத்துக்கலையே.. )//

எப்படி எதுகை மோனைல விளையாடுறாரு பாருங்க .!!
இதுதான் எங்க தலைவரோட திறமை ..!!

Barathy said...

@வெங்கட்
//" சூர்யான்னு சொல்லாம..,
சரவணன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டான்...! "//

"தளபதி" பட DVD வாங்கிக்கொடுங்க. நீங்க வைத்த பெயரயே உங்க பையன் சொல்லுவான்.

அருண் பிரசாத் said...

@ டெரர்
//எலேய்!! அமிபா!! ஒரு செல் உயிரி... என்ன அங்க சத்தம்??

(வேலை இருக்க அன்னைக்கு தான் ஓவரா அட்டகாசம் பண்றிங்க....)//
அட என்ன ஒரு கண்டுபிடிப்பு. அமீபா ஒரு செல் உயிரின்னு.... அந்த சத்ததுக்கே இப்படி வேலை இருக்குனு சொல்லி ஓடினா எப்படி?

ப.செல்வக்குமார் said...

///இந்த மாதிரி அதி புத்திசாலிகளை நான் பார்த்ததே இல்லை...
///

அதிபுத்திசாலி அப்படின்னு தெரிஞ்சும் கலாய்க்க வந்திருக்கீங்களே உங்களை நினைச்சா எனக்கு சிப்பு சிப்பா வருது ..!

Barathy said...

@ TERROR-PANDIYAN(VAS)
//எலேய்!! அமிபா!! ஒரு செல் உயிரி... என்ன அங்க சத்தம்??
//
அமீபா போடுற சத்தம் கூடவா உங்களிற்கு கேட்குது? இருக்காதே!!
அப்படீன்னா எங்கேயோ உங்களிற்கு பிரச்சனை இருக்குது.

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//அட என்ன ஒரு கண்டுபிடிப்பு. அமீபா ஒரு செல் உயிரின்னு....//

அட பாவிகளா!! அது கூட தெரியாத?? சரி விடுங்க. நீங்க VKS மெம்பர் மறந்துடேன்...

//அந்த சத்ததுக்கே இப்படி வேலை இருக்குனு சொல்லி ஓடினா எப்படி? //

அமீபா, அட்டை பூச்சி இது கூட எல்லாம் சண்டை போட்டு இருந்தா ஆபிஸ்ல யாரு ஆணி .....து?

TERROR-PANDIYAN(VAS) said...

@Barathy

//அமீபா போடுற சத்தம் கூடவா உங்களிற்கு கேட்குது? இருக்காதே!!
அப்படீன்னா எங்கேயோ உங்களிற்கு பிரச்சனை இருக்குது//

VAS மெம்பர்பா... அகில உலகத்துல ஒரு அணு (அனு) அசஞ்சா கூட எங்களுகு தெரியும்... இதுல செல் போடர சத்தமா கேக்காம போய்டும்...

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// இந்த மாதிரி அதி புத்திசாலிகளை
நான் பார்த்ததே இல்லை. //

நாங்க அதி புத்திசாலிகள்னு
தெரிஞ்சிக்கிற அளவுக்கு தேறிட்டீங்க..

Very Good.. நல்ல Improvement..!!

யப்பா.. அந்த டாக்டர்க்கு அப்படியே
Fees-ஐ Settle பண்ணிடுங்கப்பா..

வெங்கட் said...

@ டெரர்.,

// நம்ம தல அறிவுக்கு முன்னாடி
நாம எல்லாம் ஒரு தூசிமா... அவ்வ்வ்//

No., No.. இப்படியெல்லாம்
உணர்ச்சி வசப்படக்கூடாது..

நான் என் கடமையை தானே
செஞ்சேன்..

வெங்கட் said...

@ அருண்..,

// பின்ன உங்க கிராம டெண்ட்டு கொட்டாய்ல
போய்யா எந்திரன் படம் பாக்குறது! //

தியேட்டர்ல ஒத்தை ஆளா படம்
பார்த்ததுக்கே இவ்ளோ Scene-ஆ..?

டெண்ட் கொட்டாயா இருந்தாலும்
நாங்கல்லாம் ரசிகர்கள் கூட்டத்தோட
உக்கார்ந்து படம் பார்த்துட்டு வருவோமல்...

வெங்கட் said...

@ அருண்.,

// fast forward க்கு அர்த்தம் தெரியர
பையனுக்கு, 4 showக்கும் 5 showக்கும்
அர்த்தம் தெரியாதா? //

அவனே நான் சொன்னதை ஒத்துகிட்டான்..
நீங்க என்ன குறுக்க குறுக்க சந்தேகம்
கேட்டுகிட்டு..

இந்த மாதிரி ஸ்கூல்ல படிச்சப்ப
மிஸ்கிட்ட சந்தேகம் கேட்டிருந்தா
Atleast +2-வாவது பாஸ் பண்ணி இருக்கலாம்..

வெங்கட் said...

@ சௌந்தர்.,

// அங்கே வந்தான் என் Friend ஒருத்தன்..
நல்லா வத்தி வெக்கறதுக்குன்னே.. //

// அது அருண் தானே? //

இல்ல இல்ல..
அவனுக்கும் ., அருணுக்கும்
6 வித்தியாசங்கள் இருக்கு..

1. அவன் ரொம்ப நல்லவன்.
2. வத்தி வெக்கிறது அவன் தொழில் இல்ல.
3. +2 பாஸ் பண்ணிட்டான்.
4. Wife-கிட்ட அடி வாங்க மாட்டான்..
5. ஊரை விட்டு யாரும் அவனை அடிச்சி
துரத்தலை.
6. ஓப்பி அடிக்காம., ஆபிஸ்ல வேலை
Correct-ஆ செய்வான்..

வெங்கட் said...

@ பாரதி.,

// "தளபதி" பட DVD வாங்கிக்கொடுங்க.
நீங்க வைத்த பெயரயே உங்க பையன்
சொல்லுவான். //

ஓ.. நல்ல ஐடியாவா இருக்கே..

அப்புறம் அந்த படத்துல கலக்டரா
வர்றவரை பாத்து..
" அப்பா நீங்ககூட இந்த படத்துல
நடிச்சிருக்கீங்களான்னு " கேட்டா
என்ன பண்றது..?

// அமீபா போடுற சத்தம் கூடவா உங்களிற்கு
கேட்குது? இருக்காதே!! //

கேக்குங்க.. எங்ககிட்ட தான்
Microscope-ன்னு ஒரு கருவி இருக்கே...

Barathy said...

@TERROR-PANDIYAN(VAS)
//VAS மெம்பர்பா... அகில உலகத்துல ஒரு அணு (அனு) அசஞ்சா கூட எங்களுகு தெரியும்... இதுல செல் போடர சத்தமா கேக்காம போய்டும்...
//
ஏங்க இப்படி VAS உடய மானத்தை வாங்குறீங்க. செல் என்கிறது செல்போன் கிடையாது.அது வேற இது வேற..

Barathy said...

@வெங்கட்
//" அப்பா நீங்ககூட இந்த படத்துல
நடிச்சிருக்கீங்களான்னு " கேட்டா
என்ன பண்றது..?//
ஜஜயோ.. அப்படி கேட்டான்னா உடனடியா உங்க பையனை நல்ல ஒரு கண் டாக்டரிட்ட கொண்டுபோங்க.சின்னப்பையந்தானே உடனடியாக கண்ணை குணப்படுத்திடலாம்..
//கேக்குங்க.. எங்ககிட்ட தான்
Microscope-ன்னு ஒரு கருவி இருக்கே...//
பொறுப்பான பதவியில இருக்கிற
நீங்க ( VAS தலைவர்) இப்படி தவறான தகவலை வழங்கலாமா?
(நிறைய அதிபுத்திசாலிகள் உங்களுடய Blogஜத்தான் வாசித்து தங்களின் பொதுஅறிவை வழக்கிறார்கள் என்பதை எப்பவும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்..

Chitra said...

பொய் ...பொய்.... பொய்..... சின்ன பிள்ளையை இப்படியா ஏமாத்துறது?

வெங்கட் said...

@ பாரதி.,

// கேக்குங்க.. எங்ககிட்ட தான்
Microscope-ன்னு ஒரு கருவி இருக்கே... //

// பொறுப்பான பதவியில இருக்கிற
நீங்க ( VAS தலைவர்) இப்படி தவறான
தகவலை வழங்கலாமா? //

என்ன பொசுக்குன்னு இப்படி
சொல்லிட்டீங்க..?!!

அப்புறம் எங்ககிட்ட Telescope-ன்னு
ஒரு கருவி இருக்கு.. அதை வெச்சி
நாங்க Aliens பேசறதை எல்லாம்
கேப்போமே..!!

TERROR-PANDIYAN(VAS) said...

@Bharathy

//ஏங்க இப்படி VAS உடய மானத்தை வாங்குறீங்க. செல் என்கிறது செல்போன் கிடையாது.அது வேற இது வேற.. //

போங்க பாஸ்!! விட்டா அமீபாவும் அர்ணால்ட் ஸ்வாஸ்னேகரும் அண்ணன் தம்பி சொல்லுவிங்க போல!!! நீங்க இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கிங்க. அய்யோ அய்யோ!!

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்

//அப்புறம் எங்ககிட்ட Telescope-ன்னு
ஒரு கருவி இருக்கு.. அதை வெச்சி
நாங்க Aliens பேசறதை எல்லாம்
கேப்போமே..!!//

தல! அப்புறம் stethascope வச்சி இதயத்த பார்ப்பமே அதை சொல்ல மறந்துட்டிங்க!!

GSV said...

@ வெங்கட்
எல்லாம் புண்ணியமும் "repeatuu " ஆகும்...மக்கா

அப்பறம் சின புள்ளைய ஏமாத்துன இரவு கனவுல டெர்ரர்(போட்டோ(பேய்)) வந்து தொல்லை கொடுப்பாரு....

鄭明宏 said...

Nice Post ...so funny...u r grt !!!

lr said...

:-( :-( this s for ur son

:X - this s 4 u...

u did forgery ...

"idharku umakku naragathil or idam vazhangapadum" ;-)

ரசிகன் said...

எந்திரன் பார்க்க விடாம
தந்திரம் செய்து தடுத்த‌
கிங்கரன் திரு.வெங்கட்டை சபிக்க‌
மந்திரம் யாருக்காவது தெரியுமா..?
Atleast
ஒரு கோஷமாவது போடுவோம்..
Venkat... Down.. Down..

பி.கு..
@டெரர்..

கிங்கரனுக்கு பதிலா இந்திரன், சுந்தரன்னு replace செய்தல் தடை செய்யப்படுகிறது...

Shalini(Me The First) said...

@ ramesh
//
இந்த மாதிரி அதி புத்திசாலிகளை நான் பார்த்ததே இல்லை..

போலீஸ், அதுக்கெல்லாம் மூளை மூளைன்னு ஒன்னு வேனுமாம் நான் சட்டீல சமைக்கிற மூளையை சொல்லலப்பா


@arun
//அச்... அச்... அச்.... இந்த தூசி சாரி கொசு தொல்லை தாங்கலைடா சாமி//

அதுக்குத்தான் ஒழுங்கா ஒட்டடை அடிங்கன்னு உங்க மிஸ்ஸஸ் திட்டுனாங்களா?

@ டெரர்
//
தல! அப்புறம் stethascope வச்சி இதயத்த பார்ப்பமே அதை சொல்ல மறந்துட்டிங்க!//

அப்புரம் periscopeனு ஒன்னு வச்சு தொலைனோக்கு பார்வை பார்ப்பமே அதைசொல்லல

Shalini(Me The First) said...

// Nice Post ...so funny...u r grt !!!//

boss chinese ponnuku english solli kuduthuteenga pola

//
எந்திரன் பார்க்க விடாம
தந்திரம் செய்து தடுத்த‌
கிங்கரன் திரு.வெங்கட்டை சபிக்க‌
மந்திரம் யாருக்காவது தெரியுமா..?//

boss rasiGUN romba critical stage la irukar pola so mannuchudunga

ரசிகன் said...

சேலத்துல எந்திரன் பார்க்கணும்னு தானே உங்க மனைவி சொன்னாங்க..
ஊர்ல பார்க்கக்கூடாதுன்னு சொல்லலைல்ல..
ஊர்ல ரெண்டு தியேட்டர்லயும்
ரெண்டு ரெண்டு தடவை பார்த்துட்டு,
அவங்களோட போய் சேலத்துலயும் பாருங்க...
அதை விட்டுட்டு, ஒரு ரஜினி ரசிகனை,
படம் பார்க்க விடாம தடுத்து வைக்கறது அநியாயம்..

அருண் பிரசாத் said...

@ Shalini
//
//
தல! அப்புறம் stethascope வச்சி இதயத்த பார்ப்பமே அதை சொல்ல மறந்துட்டிங்க!//

அப்புரம் periscopeனு ஒன்னு வச்சு தொலைனோக்கு பார்வை பார்ப்பமே அதைசொல்லல//
அப்புறம் அந்த Bioscopeனு ஒன்னுத்த வெச்சி படம் காட்டுறாரே அதையும் சொல்லிடுங்க

ரசிகன் said...

@shalini
//boss rasiGUN romba critical stage la irukar pola so mannuchudunga

எங்க தமிழை பார்த்து தடுமாறி..
Englishல‌ comment போட்டு இருக்கீங்களா?
ப‌ய‌ப்ப‌டாதீங்க‌..
நான் தூக்க‌ க‌ல‌க்க‌த்துல‌ இருந்தா ம‌ட்டும் தான் த‌மிழ் பொங்கும்..

ப.செல்வக்குமார் said...

//அதை விட்டுட்டு, ஒரு ரஜினி ரசிகனை,
படம் பார்க்க விடாம தடுத்து வைக்கறது அநியாயம்.//

படம் பார்க்க விடாம தடுக்குரதுக்காக அப்படி சொல்லலைங்க..
நல்ல தியேட்டர்ல படம் பாக்கணும்ல அதுக்காக அப்படி சொன்னாரு ..
ஏன்னா ரஜினி படத்தோட எபெக்ட்ட ஒரு நல்ல தியேட்டராலதான் கொடுக்க முடியும் .!!

ஜெகதீஸ்வரன். said...

பையன் பதிவை படிச்சிடப்போறான். அப்புறம் எந்திரன் என்ன எவனாலையும் உங்கள காப்பாத்த முடியாது,

அனு said...

நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்!!

என்ன நடக்குது இங்க?? இருங்க,படிச்சுட்டு வர்றேன்..

வெங்கட் said...

@ GSV.,

// அப்பறம் சின்ன புள்ளைய ஏமாத்துன
இரவு கனவுல டெர்ரர்(போட்டோ(பேய்))
வந்து தொல்லை கொடுப்பாரு.... //

உண்மையை சொன்னா
என் பையன் தொல்லை குடுப்பானே..?!!
அதுக்கு டெரர் கனவு பரவாயில்ல.,

வெங்கட் said...

@ 9120.....,

// Nice Post ...so funny...u r grt !! //

திருப்பதி வெங்கடாஜலபதி தான்
எங்க குல தெய்வம்...!!

அவர் மேல சத்தியமா..
இந்த Profile நான் Create பண்ணலை..

வெங்கட் said...

@ lr @ Lekha.,

// u did forgery ...
"idharku umakku naragathil or idam vazhangapadum" ;-) //

ஓ.. Forgery பண்ணினா அங்கே ( நரகத்தில் )
இடம் குடுப்பீங்களா..?!!

சரி சரி அனுவோட Palace-க்கு
பக்கத்திலேயே எனக்கும் ஒரு குடிசை
போட இடம் குடுங்க..!!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// சேலத்துல எந்திரன் பார்க்கணும்னு தானே
உங்க மனைவி சொன்னாங்க.. ஊர்ல
பார்க்கக்கூடாதுன்னு சொல்லலைல்ல.. //

பதிவை சரியா படிக்கலை நீங்க..

" எந்திரன் படத்தை சேலத்துல போயி
தான் பார்க்கணும்., அதுவும் என்னை
கூட்டிட்டு போயி தான் பார்க்கணும்.. "


இதுக்கு நீங்க சொன்னது தான்
அர்த்தங்களா..?!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// போலீஸ், அதுக்கெல்லாம் மூளை மூளைன்னு
ஒன்னு வேனுமாம் நான் சட்டீல சமைக்கிற
மூளையை சொல்லலப்பா //

அவருக்கு தெரிஞ்ச ஒரே மூளை
சட்டியில சமைக்கிற மூளை தான்..

அந்த மூளையை சொல்லலைன்னு வேற
சொல்லிட்டீங்க..

பாவம் நம்ம ரமேஷ்..
ரொம்ப குழம்பி போயிருப்பாரு.,

வெங்கட் said...

// @ அருண்.,

அதுக்குத்தான் ஒழுங்கா ஒட்டடை
அடிங்கன்னு உங்க மிஸ்ஸஸ் திட்டுனாங்களா? //

அவரு ஒட்டடை அடிச்சிட்டே தான்
இங்கே Comment போட்டாரு..
அதான் அந்த அச்... அச்... அச்....!!

ம்ம்.. இன்னொரு விஷயம்..
நம்ம அருண் எப்பவுமே
அவர் மிஸ்ஸஸ்கிட்ட
திட்டு வாங்க மாட்டாரு..

( அப்ப அடி.? உதை..?
ஷ்ஷ்ஷ்..!! அதைபத்தி நாம
இன்னொரு நாள் பேசலாம். )

வெங்கட் said...

@ அனு.,

// நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்!!
என்ன நடக்குது இங்க??
இருங்க,படிச்சுட்டு வர்றேன்.. //

இன்னுமா எழுத்து கூட்டி படிச்சி முடிக்கலை..?

அனு Comment : 7.12 PM.,
This Comment : 10.13 PM..

அனு said...

//இன்னுமா எழுத்து கூட்டி படிச்சி முடிக்கலை..?//

அதெல்லாம் ஆச்சு.. இருக்குறது நாலு லைன்.. அதைப் படிக்குறது ஒரு பெரிய விஷயமா??

ஆனா,நடுவுல சூர்யா ஃபோன் பண்ணி உங்க General Knowledge-ஐ பத்தி ஒரே புலம்பல்.. அதான், அவனை சமாதான படுத்த இவ்வளவு நேரம் ஆகிடுச்சு.. :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெங்கட் said...

@ 9120.....,

// Nice Post ...so funny...u r grt !! //

திருப்பதி வெங்கடாஜலபதி தான்
எங்க குல தெய்வம்...!!

அவர் மேல சத்தியமா..
இந்த Profile நான் Create பண்ணலை..//


எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை அப்டின்னு சொல்றீங்களே. மகா ஜனங்கள் இனியும் ஏமாற மாட்டாங்க..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// நான் தூக்க‌ க‌ல‌க்க‌த்துல‌ இருந்தா
ம‌ட்டும் தான் த‌மிழ் பொங்கும்.. //

புரியுது.. புரியுது..

நீங்க பொங்கும் தமிழ்ல Comment போட்டா
ஆபீஸ்ல Busy-ஆ இருக்கீங்கன்னு
அர்த்தம்.. அப்படித்தானே..!!?

lekha said...

venkat
che!! epdi potalum
kandupidikireenga :-)!!

othukaren unagalukku konjam brain irukku nu othukaren!!
next meet panren ;-)!!

வெங்கட் said...

@ அனு.,

// சூர்யா ஃபோன் பண்ணி உங்க
General Knowledge-ஐ பத்தி ஒரே புலம்பல்.. //

ஏன் இந்த சூர்யா எவ்ளோ சொன்னாலும்
கேக்க மாட்டேங்குறான்..

" General Knowledge " இப்படிபட்ட
உங்களுக்கு தெரியாத, புரியாத
வார்த்தையை எல்லாம் சொன்னா
நீங்க என்ன பண்ணுவீங்க பாவம்..?!!

So Sad..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை அப்டின்னு சொல்றீங்களே.
மகா ஜனங்கள் இனியும் ஏமாற மாட்டாங்க.. //

அந்த Profile நான் Create
பண்ணலைன்னு தான் சொன்னேன்..

அந்த சைனா பொண்ணு
யார்னு தெரியாதுன்னு சொன்னேனா..?!!

என்ன ரமேஷு.., அதுக்குள்ள
மறந்து போச்சா..?!!

அந்த பொண்ணு யார்னு தெரிஞ்சிக்க
விரும்பறவங்க இங்கிட்டு போயி என்னோட 4 Comments-ஐ
படிங்க..

நாகராஜசோழன் MA said...

பதிவை ஏன் ஒவ்வொரு வரியா எழுதரீங்க வெங்கட்? எக்ஸாம் ஹால் எப்பக்ட் இன்னும் போகலையா?

ரசிகன் said...

@venkat
// நான் தூக்க‌ க‌ல‌க்க‌த்துல‌ இருந்தா
ம‌ட்டும் தான் த‌மிழ் பொங்கும்.. //

புரியுது.. புரியுது..

நீங்க பொங்கும் தமிழ்ல Comment போட்டா
ஆபீஸ்ல Busy-ஆ இருக்கீங்கன்னு
அர்த்தம்.. அப்படித்தானே..!!? //

U.. U for mistake..

நான் தூக்கக் கலக்கத்துல இருந்தாதான் தமிழ் பொங்கும்னு சொன்னேன்.. 'தூக்கத்துல இருந்தா ' ன்னா சொன்னேன்... தப்பு தப்பா explanation போட்டுகிட்டு...

Gopi Ramamoorthy said...

super