சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

28 October 2010

விஜய் - The Robot..!!??!
























எந்திரன் படத்தை Remake பண்ணினா
எப்படி இருக்கும்..?

அதுவும் நம்ம இளைய தளபதி
பண்ணினா எப்படி இருக்கும்..?
( நினைச்சி பார்க்கும் போதே
புல்லரிக்குது இல்ல..!! )

இதோ அந்த எந்திரன் Remake Trailor..

Hi..! I'm Vijay the Robot..

Speed - 1 Hz

Memory - 2 KB

இந்த Robot-க்கு தமிழ் தவிர
ஒரு மொழியும் தெரியாது..

Special Skills : கபடி காமெடி ( கில்லி ).,
Swimmer ( சுறா )., Athlete ( ATM ).,
கார் Racer ( குருவி )

Records : 39 Flops out of 50 Films

Professor Bora to Robot :
' Best Actor அவார்ட் ' ( or )
உன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்..
எது உன் சாய்ஸ்..?

Vijay the Robot : Hypothetical Question..!!

மனுஷன் படைச்சதுலயே
உருப்படியான ரெண்டு விஷயம்..

ஒண்ணு - தெலுங்கு படம்
இன்னொன்னு - Remake

"என்னை யாராலயும் திருத்த முடியாது..!! "

Dot


விஜயிடம் ஒரு சின்ன கேள்வி..

" ஆமா ரஜினி சார் படத்தையும்
Remake பண்ணி கெடுக்கணும்னு
உங்களுக்கு எப்படி ஐடியா வந்தது..? "

" இதை முதல்ல அஜித்கிட்ட கேளுங்க..
அவர் பண்ணலாம்.., நான் பண்ண கூடாதா.? "

இளைய தளபதி ROCKZ.........,
.
.

23 October 2010

தொலைச்சிடுவேன்..,தொலைச்சி..!!
























" இன்னிக்காவது இந்த பென்சிலை.,
பத்திரமா வீட்டுக்கு எடுத்துட்டு வா.."

இது நான் தினமும் என் பையனுக்கு
புது Pencil குடுத்து சொல்ற டயலாக்..

அவனும் " சரி "-ன்னு சொல்லுவான்..

ஆனா - Evening அவன் Bag-ஐ பார்த்தா..
Box எப்பவும் போல காலியாதான் இருக்கும்..

( நல்லவேளை Box-ஐ பத்திரமா கொண்டு
வந்தானேன்னு சந்தோஷப்பட்டுக்குவேன்.. )

இன்னிக்கு School-க்கு கிளம்பும் முன்...

" அப்பா Pencil...!! "

" நேத்து குடுத்தது எங்கே..? "

" மிஸ் ஆயிடுச்சு.. "

" நானும் Pencil-ஐ பத்திரமா வெச்சுக்கோன்னு.,
5 வருஷமா சொல்றேனே.. ஒரு நாளாவது
சொன்ன பேச்சை கேட்டு இருக்கியா..? "

( என் Wife Entry.. )

" அவன்கிட்ட எப்படி சொல்லணும்னு
உங்களுக்கு தெரியல..!! "

" அப்படியா..? எப்படி சொல்லணும்..? "

( என் மனைவி., என் மகனை பார்த்து.. )

" டேய் கண்ணா.. இன்னிக்கு நீ Pencil-ஐ,
தொலைச்சிட்டு வரணும்.. என்ன ஓ.கேவா..? "

அவனும் சிரிச்சிட்டு ' OK-மா'-ன்னு "
சொல்லிட்டு கிளம்பிட்டான்..

( நான் என் மனைவியிடம்... )

" இப்படி சொன்னா.. அவன் Pencil-ஐ
பத்திரமா கொண்டு வந்துடுவானா..? "

" அவன் எப்படி சொன்னாலும் பத்திரமா
கொண்டு வர மாட்டான்.. Atleast நம்ம
பேச்சை கேட்டு நடந்துக்கறான்னு
சந்தோஷப்பட்டுக்கலாம்ல..!! "

அடப்பாவிகளா..?!!
கடைசில நான் தான் அவுட்டா..?!!
.
.

20 October 2010

ஐ..! ' மெட்ராஸ் ஐ '..!!

















என்கிட்ட 2 கூலிங் கிளாஸ் இருக்கு..,
ரெண்டுமே Rayban.. ஆனா
நான் அதை Use பண்றதே இல்ல..

( தங்கச்சிலைக்கு எதுக்கு
வெள்ளி கொலுசு..?!! )

" மெட்ராஸ் ஐ " வந்ததால வேற
வழி இல்லாம என் Rayban Glass-ஐ
போட்டுக்க வேண்டியதா போச்சு..

எனக்கு " மெட்ராஸ் ஐ"-ன்னு தெரிஞ்சதும்..,
என்னை சுத்தி இருந்தவங்க எல்லாம்
எப்படி பீலீங் ஆனாங்க தெரியுமா..?

இதோ அவங்க பீலிங் ........


" வீட்டுக்கு உள்ளகூட கூலிங்கிளாஸோட
தான் சுத்தறியாமா..?!! என்ன எதாவது
தெலுங்கு படத்துல ஹூரோவா Commit ஆகிட்டியா..? "

- நண்பன் சுரேஷ்
---------------------------------------------------------

" எனக்கு ' மெட்ராஸ் ஐ-டா ' ..! "

" ' டெல்லி ஐ ' ., ' லண்டன் ஐ '.,
' நியூயார்க் ஐ '-ன்னு மேன்மேலும்
வளர என் Advance வாழ்த்துக்கள்..!! "

- நண்பன் ஜெகன்..
---------------------------------------------------------

" என்ன மெட்ராஸா..? "

" ஆமா..!! "

" அப்ப முதல்ல இடத்தை காலி பண்ணு.,
நாங்க வெளியூர்காரங்ககிட்ட எல்லாம்
பேச்சு வெச்சிக்கிறதில்ல.. "

- நண்பன் சண்முகம்
---------------------------------------------------------

" கூலிங்கிளாஸ் சூப்பரா இருக்கு..!! "

" Thanks..!! "

" Unfortunately உனக்கு சூட் ஆகலை.."

- நண்பன் சரவணன்
---------------------------------------------------------

" சேலம்ல இருந்துட்டு ' மெட்ராஸ் ஐ '-ன்னு
சொல்லி சென்னை மேல ஏன் பழி போடறீங்க..? "

( Facebook-ல் VKS தலைவி அனு)
---------------------------------------------------------

" என்ன சார் திடீர்னு ' மெட்ராஸ் ஐ '-ன்னு
சொல்லிட்டீங்க..? எனக்கு வேற
ஆயுதபூஜைக்கு 3 நாள் லீவ் விட்டுட்டாங்க..
நான் அதுக்கு சந்தோஷப்படறதா..?
இல்ல இதுக்கு சந்தோஷப்படறதா..? "

( போனில் பெ.சொ.வி )
---------------------------------------------------------

" கண்கெட்ட பிறகு சூர்யநமஸ்காரமான்னு

கேப்பாங்க..!! ஆனா இங்கே சூரியனுக்கே
கண்ணு கெட்டு போச்சே..!!
ஹா., ஹா., ஹா..!! "

( சிரிப்பு போலீஸ் Blog-ல் - ரமேஷ் )
---------------------------------------------------------

" Computer முன்னால உக்கார்ந்து

Work பண்ணினா கண்ணு வலிக்குது..!!

அப்ப நின்னுகிட்டு Try பண்ணி பாருங்க தல..! "

( டெரரின் Smart ஐடியா )
---------------------------------------------------------

டிஸ்கி : மேல Photo-ல கூலிங்கிளாஸ்
போட்டுட்டு இருக்கறது நான் இல்லபா....!!

ஹி., ஹி., ஹி..!!
.
.

16 October 2010

வாம்மா துரையம்மா..!!



பொண்ணுங்க Exam-க்கு Prepare
ஆகற அழகே தனி..

1. எப்பவும் Group Study தான்
இவங்க Choice..

( அப்ப தான் " அந்த Fan Switch-ஐ போடு..! "
" குடிக்க ஒரு டம்ளர் தண்ணி குடு..! "
இப்படி கஷ்டமான வேலைகளை
அம்மா கொடுக்க மாட்டாங்க.. )

2. அப்பாவி Parents இருக்கிற வீடு ( or )
Parents வேலைக்கு போற வீடு.,
அது தான் இவங்க Group Study-க்கு
Spot-ஆ இருக்கும்.

3. Group Study-ல என்ன பண்ணுவாங்கன்னா..

9.00 - 12.00 : Sun Music

12.00 - 1.00 : Lunch Break

1.00 - 5.00 : இப்பதான் Book-ஐ கையில
எடுப்பாங்க.. ஆரம்பிக்கும் போதே
சந்தேகம் வந்துடும்..

" இது என்னான்னே புரியலைப்பா..? "

" என்ன விளையாடறீயா..? இதுவரைக்கும்
எதை நாம புரிஞ்சி படிச்சி இருக்கோம்..
அப்படியே மனப்பாடம் பண்ணு.."

4. சும்மா சொல்லக்கூடாது.., எவ்ளோ
கஷ்டமான பாடமா இருந்தாலும் படிச்சிடுவாங்க..
( Sorry மனப்பாடம் பண்ணிடுவாங்க.. )

5. Exam-ல நல்ல மார்க் வேணும்னு கிட்டதட்ட
உலகத்தில உள்ள எல்லா சாமிகிட்டேயும்
வேண்டிகிட்டு இருப்பாங்க.. ஒவ்வொரு சாமி
ஒரு மார்க் போட்டா கூட 107 மார்க் வரும்..

6. Exam-க்கு போறப்ப கையில சின்னதா
ஒரு Watch கட்டியிருப்பாங்க.. அதையும்
உள்பக்கம் திருப்பி கட்டியிருப்பாங்க..
( அந்த வாட்சே நம்ம கண்ணுக்கு தெரியாது..
அதுல எப்படிதான் Time பார்க்கறாங்களோ.?!! )

7. Exam-ல 3 மணி நேரம் இவங்களுக்கு
பத்தவே பத்தாது.. கடைசி பெல் அடிக்கிற
வரை எழுதிட்டே இருப்பாங்க..

8. Exam முடிந்து Professor மாணவியிடம்..

" Exam நல்லா எழுதியிருக்கேம்மா.. ஆமா
ஒவ்வொரு Answer-க்கு கீழேயும் 78 , 54 , 117
இப்படி எதோ ஒரு நம்பர் எழுதி இருக்கியே
என்னம்மா அது..?

" அப்படிதான் சார் இந்த Book-ல இருக்கு..
நீங்களே பாருங்க..!! "

" ஏம்மா.. அது Page நம்பர்மா. அதையும்
சேர்த்தா மனப்பாடம் பண்ணுவே..???!! "

டிஸ்கி : இந்த பதிவு எழுத தூண்டி விட்டு.,
ஊக்கப்படுத்திய VKS Member ரசிகனுக்கு நன்றி..
.
.

13 October 2010

வாடா மாப்ளே..!!
























நீங்க College-ல மாப்ளே Bench
மாணவரா..??!

Semester Exam-ல என்ன பண்றதுன்னு
தெரியாம முழிப்பவரா..??!

அப்ப உங்க வாழ்க்கையில
விளக்கு ஏற்ற போகும் பதிவு இது..
( அரிகேன் விளக்கு..?!! )

Exam Hall-ல 3 மணி நேரத்தை
எப்படி கரெக்டா Use பண்றதுன்னு
Tips தர்றேன்.. Note பண்ணிக்கோங்க..

10.00 - 10.20 : Box-ல இருந்து பேனா.,
பென்சில்., ரப்பர்., ஸ்கேல்.. இதெல்லாம்
ஒன்னொன்னா Neat-ஆ எடுத்து Table மேல
வைங்க..

10.20 - 10.40 : Reg Number., Exam., Date
இதெல்லாம் அழகா எழுதுங்க..
( ரொம்ப அழகா )

10.40 - 11.00 : Answer Sheet-ல Lines
போடுங்க..

11.00 - 11.20 : Answer Sheet-ல இருக்கிற
Instructions எல்லாம் ரொம்ப Careful-ஆ
படிங்க.. ( இது ரொம்ப முக்கியம் )

11.20 - 11.40 : Questions ஒரு தடவை படிங்க..
( அதுக்கு தானே Question Paper தர்றாங்க )

11.40 - 12.00 : Questions-ஐ Correct-ஆ
படிச்சிருக்கோமான்னு Check பண்ணுங்க..
( Check பண்றது நல்ல பழக்கம்.. )

12.00 - 12.20 : Class-ல எத்தனை Students
இருக்காங்கன்னு Count பண்ணுங்க..
( பொறுமையா எண்ணுங்க.. என்ன அவசரம்..?!! )

12.20 - 12.40 : தண்ணி குடிக்கணும்னு
Supervisor -கிட்ட Permission கேட்டு
தண்ணி குடிங்க..

கடைசி 20 நிமிஷம் : Rest.. ரிலாக்ஸா இருங்க..

Exam முடிச்சி வெளியே வரும்போது..,
" Question Paper ரொம்ப Tough"-ன்னு
எவனாவது சொன்னான்..

அவனை துரத்தி துரத்தி அடிங்க..

பின்ன..,
அந்த Question Paper படிக்க
எவ்ளோ Easy-ஆ இருந்தது..?!!
.
.

09 October 2010

ஜோடி No.2..!!?











இது தினத்தந்தி பேப்பர்ல ( 6.10.2010 )
வந்திருந்த ஒரு செய்தி..

Hot News :

சேலம் அஸ்தம்பட்டியில்
வசித்து வருபவர் பால்ரமேஷ் ( 30 ).

இவருக்கும் ஜாஸ்மின்ரூத் ( 29 )
என்ற பெண்ணுக்கும் 6 ஆண்டுகளுக்கு
முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு ஒரு மகன்,
ஒரு மகள் உள்ளனர்.

சேலம் சாரதா கல்லூரி ரோட்டில்
உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில்
பால்ரமேஷ் வேலை பார்த்து வந்தார்.

அதே ஹோட்டலில் Receptionist-ஆக
வேலை பார்த்த லக்ஷ்மி என்ற பெண்ணுக்கும்.,
பால்ரமேஷுக்கும் காதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக பால்ரமேஷ்
தனது வீட்டிற்கு வராமல்.,
லக்ஷ்மியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் ஜாஸ்மீன்ரூத்
தன் கணவரை சந்தித்து., தன்னோடு
வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால் பால்ரமேஷ்.. " நான் லக்ஷ்மியை
விட்டு வரமாட்டேன் " என்று கூறி
மனைவியை விரட்டினாராம்.

இது குறித்து ஜாஸ்மின்ரூத்,
சேலம் மாநகர போலீஸ்
துணை கமிஷனர் பாஸ்கரனிடம்
புகார் மனு ஒன்றை குடுத்தார்..

அதை தொடர்ந்து அம்மாபேட்டை
மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகேஸ்வரி
வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி
பால்ரமேஷை கைது செய்தார்..

பின்னர் அவர் நேற்று சேலம் கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார்..

சபாஷ் போலீஸ்..!!

Top News :

@ Lux Sandal South Scope Cine Awards 2010.

Best " Close-Up Super Jodi ( Couple ??! ) " Award
Goes tooooooooooo...









என்ன கொடுமை சிம்பு இது..?!!

இந்த Function நடந்தது HyderaBad-ல

Very Bad.., Very Bad..

-------------------------------------------------------------

நீதி 1 : சட்டம் தன் கடமையை
ஒழுங்காய் தான் செய்கிறது..
( சாமானியர்களுக்கு மட்டும் )

நீதி 2 : பிரபலம்.. So., No Problem..!!
.
.

07 October 2010

" எந்திரன் " - செம Speeeed....!


















என் பையன் ஒரு ரஜினி Fan..

LKG படிக்கும் போதே
" சந்திரமுகி " படத்தை DVD
தேய தேய பார்த்திருக்கான்..

அதுல Highlight என்னான்னா..

அப்பல்லாம் அவன் பெயரை
யாராவது கேட்டாலே..
" சூர்யான்னு சொல்லாம..,
சரவணன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டான்...! "

இப்பேர்பட்ட ஒரு ரஜினி ரசிகனை
நான் இன்னும் " எந்திரன் "கூட்டிட்டு
போகலை...

ஏன்னா..

" எந்திரன் படத்தை சேலத்துல போயி
தான் பார்க்கணும்., அதுவும் என்னை
கூட்டிட்டு போயி தான் பார்க்கணும்.. "

என் மனைவி இப்படி
அதட்டி., மிரட்டி., அன்பா சொன்னதால
வேற வழி இல்லாம Sunday வரை Waiting..

ஒவ்வொரு தடவை " எந்திரன் "
போஸ்டரை பார்க்கும் போதும்
ஒரே பீலிங்கா இருக்கு..

என் பையன் வேற தினமும்..,
" அப்பா.., நம்ம ஊர்லயே ஒரு தரம்
பார்க்கலாம்பான்னு கெஞ்சறான்.. "

( ஒரு தரம் பார்க்கலாம் தான்..
ஆனா தாரம் ஒத்துக்கலையே.. )

" நம்ம ஊர்ல டிக்கெட் கிடைக்காதுடான்னு "
சொல்லி அவனை சமாதானம் பண்ணி
வெச்சி இருந்தேன்.

நேத்து என் பையன்கூட ஒரு கடைக்கு
போயி இருந்தேன்..

அங்கே வந்தான் என் Friend ஒருத்தன்..
நல்லா வத்தி வெக்கறதுக்குன்னே..

என் பையனை பாத்து..

" என்ன எந்திரன் பாத்தாச்சா..? "

" இல்லை.. "

" இன்னுமா பார்க்கலை..?
உங்கப்பா கூட்டிட்டு போக
மாட்டேங்குறாரா.? "

" ஆமாம்., நம்ம ஊர்ல டிக்கெட்
கிடைக்காதுன்னு சொல்றாரு.. "

" நம்பாதே..!! பொய்.. சுத்த பொய்..,"

" அப்படியா..? "

" ஆமா.., ரெண்டு தியேட்டர்ல ஓடுது..,
அதுவும் 4 Show-க்கு பதிலா 5 Show ஓடுது..!
எப்படி டிக்கெட் கிடைக்காம போகும்..? "

உடனே என் பையன்
" நம்ம ஊர்லயே படம் பார்க்கலாம்பான்னு "
நச்சரிக்க ஆரம்பிச்சுட்டான்..

என் Friend-க்கு ரொம்ப சந்தோஷம்..

இனிமே வீட்டுக்கு போயி..,
நல்லா சாப்பிட்டுட்டு., நிம்மதியா தூங்குவான்..,
அதான் வந்த வேலை திருப்தியா முடிஞ்சுதே..!!

நான் என் பையனை பார்த்து..

" இந்த மாமா என்ன சொன்னாரு..
4 Show-க்கு பதிலா 5 Show ஓடுதுன்னு
சொன்னாருல்ல.. "

" ஆமா.. "

" அப்படின்னா அந்த படத்தை
ரொம்ப Speed-ஆ ( Fast Forward-ல )
ஓட்றாங்கன்னு அர்த்தம்..
அப்படி பார்த்தா படம் நமக்கு புரியுமா "

" புரியாது..!! "

" அப்ப சேலத்துல போயி பார்க்கலாம்.. ஓ.கே.. "

அவனும் அரை மனசா தலை ஆட்டினான்..

உஸ்ஸ்ஸப்பா.....
.
.

05 October 2010

நாசூக்கா சொல்லணும்..!!





எதையுமே நாசூக்கா சொல்ல
கத்துக்கணும்..!!

இப்ப நீங்க ஒரு Employee.

' என் Salary-ஐ Increase
பண்ணுங்கன்னு ' - இதை
உங்க Boss-கிட்ட எப்படி
நாசூக்கா கேக்கணும்னா..

இவர் மாதிரி ஒரு லெட்டர் எழுதுங்க..



Dear Bo$$.,

In thi$ life., We all need $ome thing
mo$t de$perately.
I think you $hould be
under$tanding of the need$ of u$.


Worker$ who have given $o much
$upport including
$weat and $ervice
to your company.


I am $ure you will gue$$ what I mean
and re$pond $oon
..

Your$ $incerely,
Norman $mith

------------------------------------------------------

இப்ப நீங்க ஒரு Boss..

இப்படி லெட்டர் எழுதற Employee-க்கு
எப்படி நாசூக்கா பதில் எழுதணும்னா..

Dear NOrman.,

I kNOw you have been working very hard.
NOwadays, NOthing much has changed.
You must have NOticed that our company
is NOt doing NOticeably well as yet.

NOw the newspaper are saying that
the
world`s leading ecoNOmists are
NO
t sure
if the United States may go into
aNOther recession.
After the NOvember
things may turn bad.


I have NOthing more to add NOw.
You kNOw what I mean.


Yours truly,
Boss
.
.

03 October 2010

அனு பிறந்தநாள் ( ஒரு விளம்பரம் )..!!
















இடம் : அனு வீடு

( அனுவும்., அனு கணவரும்..)

அனு : ஏங்க எனக்கு எதாவது போன் வந்ததா..?

கணவர் : ஆமா.., இந்த மாச போன் பில் கட்ட
சொல்லி போன் வந்தது..

அனு : விளையாடாதீங்க.. எனக்கு Birthday Wish
பண்ணி யாராவது போன் பண்ணினாங்களா..?

கணவர் : இப்ப விளையாடறது நானா..? நீயா.?
போன வருஷமே நான் மட்டும் தானே
Birthday Wish பண்ணினேன்..

அனு : அது போன வருஷம்., நான் சொல்றது
இந்த வருஷம்..

கணவர் : ( இந்த பஞ்ச் டயலாக்குக்கு
ஒண்ணும் குறைச்சல் இல்ல..)
இந்த வருஷம் மட்டும் என்ன Special..?

அனு : போன வருஷம் என் Birthday யாருக்கும்
தெரியாது.. அதனால யாரும் Wish பண்ணலை..

கணவர் : இந்த வருஷம் மட்டும் எப்படி தெரியும்..?

அனு : அதான் சொந்த காசை செலவு பண்ணி
ஊர் பூரா எனக்கு Birthday-ன்னு Poster அடிச்சி
ஒட்ட சொல்லி இருக்கேனே..

கணவர் : A/c-ல 20,000 குறையும் போதே
நினைச்சேன்.. இப்படி தான் எதாவது வெட்டி
செலவு ஆயிருக்கும்னு..

அனு : இதெல்லாம் ஒரு விளம்பரம்ங்க..

கணவர் : சரி Poster அடிச்சி ஒட்டினது யாரு..?

அனு : ரசிகன்..

கணவர் : என்ன..? அனு ரசிகனா..?
அது உன்னை புகழ்ந்து Comment போட
நீ Create பண்ணின Fake ID இல்ல..?

அனு : அது வேற.. இவரு ரசிகன்.. VKS Member..
எங்க கட்சியிலயே இவர் தான் புத்திசாலி..

கணவர் : ஓஹோ..?!!

அனு : சரி., சரி., போன் வந்தா
Attend பண்ணுங்க.. இதோ வந்துடறேன்..

( அனு வீட்டிற்கு உள்ளே போகிறார்.. )

அப்போ நான் அனு வீட்டிற்கு போகிறேன்..

கணவர் : வாங்க வெங்கட்.. எப்படி இருக்கீங்க..?

வெங்கட் : Fine.. அனு இருக்காங்களா..?
Birthday Wish பண்ணனும்..

கணவர் : அப்பாடா.. 3 மணி நேரமா
ஒருத்தரும் Wish பண்ணலையேன்னு
பீலிங்ல இருந்தாங்க.. இருங்க கூப்பிடறேன்..

( அனு வருகிறார்.. )

நான் : Happy Birthday-ங்க..

அனு : எதிர்கட்சியா இருந்தாலும்.,
வாழ்த்து சொன்னதுக்கு நன்றி..

நான் : அப்புறம் உங்க Birthday Poster
மாதிரி ஒரு Poster நான் பாத்ததே இல்ல..

அனு : அப்படியா..? அது ரசிகன் Design பண்ணினது..
நானே இன்னும் பார்க்கலை..

நான் : இதோ நானே கையோட ஒண்ணு
கொண்டு வந்து இருக்கேன் பாருங்க..



அனு : ஐ...!! சூப்பரா இருக்குல்ல..!!??
.
.

02 October 2010

காந்தி ஜெயந்தியும், சிறப்பு நிகழ்ச்சிகளும்..!!




















இன்னிக்கு காந்தி ஜெயந்தி..
சரி Tv-ல என்ன சிறப்பு நிகழ்ச்சிகள்னு
பார்க்கலாம்னு News Paper-ஐ திறந்தேன்..

ஏறக்குறைய எல்லா Tv-லயும் ஒரே
மாதிரி நிகழ்ச்சிகள் தான்..

So ஒரே ஒரு Tv-ஐ மட்டும் இப்ப பார்ப்போம்..

காந்தி ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள்..

காலை 8 மணி :

தண்டி யாத்திரையில் மகாத்மா காந்தியோடு
உப்பு காய்ச்சிய நடிகை தமன்னா
அந்த உப்பு சத்தியாகிரக நிகழ்ச்சியை
விளக்குகிறார்..

காலை 9 மணி :

" தேசிய கீதத்திற்கு " இசையமக்கப்பட்ட போது
உடன் பணியாற்றிய தன் அனுபவத்தை
விவரிக்கிறார் இசையமைப்பாளர் தேவி.ஸ்ரீபிரசாத்.

காலை 10 மணி :

தனக்கும்., " கொடி காத்த " குமரனுக்கும்
இருந்த ஆழமான நட்பை
நினைவு கூர்கிறார் நடிகர் விஜய் .

காலை 11 மணி :

மேடையெங்கும் " சுதந்திர போராட்ட "
பாடல்கள் பாடி மக்களிடையே ஒரு எழுச்சியை
உருவாக்கிய தன் அனுபவத்தை சொல்கிறார்
பின்னனி பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதி.

மதியம் 12 மணி :

முழுக்க முழுக்க சுதேசி தொழில்நுட்பத்தில்
தயாரான " எந்திரன் " படம் தயாரான விதம்..
Behind the Scenes காட்சிகள்..

மதியம் 1 மணி :

சுதந்திர போராட்டத்தின் போது
சிறையில் வா.ஊ.சி. யோடு தானும்
செக்கிழுத்த அனுபவத்தை நம்மோடு
பகிர்ந்து கொள்கிறார் நடிகை ஸ்ரேயா..

மதியம் 2 மணி :

மகாகவி பாரதியோடு இணைந்து
மக்களுக்கு சுதந்திர உணர்வு
ஊட்டக் கூடிய பாடல்களை எழுதியதை
மெய்சிலிர்க்க விவரிக்கிறார் கவிஞர் வைரமுத்து..

மதியம் 3 மணி :

நாம் அடிமைப்பட்டிருந்த காலத்தில்
நம் முன்னோர் சுதந்திரம் பெற அனுபவித்த
கஷ்டங்களை இன்றை இளைய தலைமுறைக்கு
கொண்டு சேர்க்கும் விதமாகவும்.,
நாட்டுபற்றை வளர்ப்பதற்காகவும்


" கந்தசாமி " திரைப்படம் ஒளிப்பரப்பாகும்..

மாலை 7 மணி முதல் வழக்கம் போல
நாட்டுக்கும்., நாட்டு மக்களுக்கும்
நல்ல நல்ல விஷயங்களை சொல்லும்
மெகா சீரியல்கள் தொடரும்..

டிஸ்கி : தமன்னா & ஸ்ரேயா பற்றிய Points
" தமிழ் பேச்சு எங்கள் மூச்சு " நிகழ்ச்சியில்
நெல்சன் பேசியது., அதுதான் இந்த Posting-ல்
இருக்கும் மற்ற Points-க்கு Inspiration..
.
.

01 October 2010

இது தான் Surprise..!!?




















ஒரு நாள் காலையில Husband
அவசரமா Office கிளம்பிட்டு
இருக்கும் போது Wife கேக்குறா..

" டார்லிங்.., இன்னிக்கு என்ன நாள்னு
ஞாபகம் இருக்கா..?!! "

( ஒரு Sec டக்னு யோசிக்கிறான்...
" இது June மாசம்..!! ஓ.. என் Anniversary..!!
எப்படி மறந்தேன்..?!! சரி., சரி., சமாளிப்போம்.." )

" என்ன டார்லிங்.. நான் மறப்பேனா..?!!
Evening 5 மணிக்கு ரெடியா இரு..,
வெளியே Dinner-க்கு போலாம்.. "

Husband Office கிளம்பி போயாச்சு..

11.AM : Door Bell அடிக்குது..
கதவை திறந்தா..

அங்கே ஒரு ஆள் கையில
ஒரு Bouquet வெச்சிட்டு நிக்கிறார்..

" மேடம்.. இதை உங்க Husband
உங்களுக்காக அனுப்பினார்.. !! "

அவளுக்கு அதை பார்த்ததும்
சந்தோஷம்..

1PM : மறுபடியும் Door Bell அடிக்குது..
கதவை திறந்தா..

அங்கே ஒரு ஆள் கையில
ஒரு Gift Box வெச்சிட்டு நிக்கிறார்..

" மேடம்.. இதை உங்க Husband
உங்களுக்காக அனுப்பினார்.. !! "

அதை Open பண்ணினா..,
எல்லாமே அவளுக்கு பிடிச்ச Choclates..
இப்ப அவ ரொம்ப சந்தோஷமாயிடுறா..

3.PM : மறுபடியும் Door Bell அடிக்குது..
கதவை திறந்தா..

அங்கே ஒரு ஆள் கையில
ஒரு Gift Box வெச்சிட்டு நிக்கிறார்..

" மேடம்.. இதை உங்க Husband
உங்களுக்காக அனுப்பினார்.. !! "

அதை Open பண்ணினா
ஒரு அழகான Diamond Necklace..

இப்ப அவ இன்னும் ரொம்ப
சந்தோஷமாயிடுறா..

Husband எப்ப வருவார்னு ரொம்ப
ஆவலா Wait பண்ணிட்டு இருக்கா..

5PM.. அவர் Car வர்ற சத்தம் கேக்குது..

அப்படியே ஓடி போயி அவரை
கட்டி பிடிச்சிக்கிறா..

" என்ன டார்லிங்.. நான் அனுப்பின
Gifts எல்லாம் பிடிச்சிருக்கா..? "

" ரொம்ப பிடிச்சிருக்குங்க.. "

" காலையில என்னமோ.. நான்
மறந்துட்டேன்னு சொன்னியே..
எப்படி நம்ம Surprise..?!! "

" சூப்பர்ங்க.., World Environment Day-கே
இப்படி கலக்கிட்டீங்களே.. அப்ப
அடுத்த வாரம் நம்ம Anniversary-க்கு
எப்படியெல்லாம் அசத்த போறீங்களோ..!!! "

" ??!!!!! "

டிஸ்கி : அப்பாடா போன பதிவுக்கு
இப்ப கணக்கு நேர்...!!
.
.