சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

23 December 2010

ஷாக் ட்ரீட்மெண்ட்..!!

நேத்து காலை : 9.30 AM

அப்ப நான் ரொம்ப Busy-யா
இருந்தேன்..
( ஹி., ஹி.,ஹி.. சாப்பிட்டுட்டு
இருந்தேன்.. )

அப்ப எங்க கடை பையன்
பதட்டமா ஓடி வந்தான்..

" அண்ணே... உங்கள தேடி
போலீஸ் வந்திருக்கு.."

எனக்கு பக்-னு இருந்தது..

( ஆஹா.. நாம தான் யாருக்கும் தெரியற
மாதிரி எந்த தப்பும் பண்ணலையே..?!! )

சரின்னு அவசர அவசரமா சாப்பிட்டுட்டு
கடைக்கு போனா.. அங்கே நாலு
Lady போலீஸ் கடை வாசல்ல
நின்னுட்டு இருந்தாங்க..

( நம்மள தேடி நாலு போலீஸ்..!!
அவ்ளோ பெரிய ரவுடியா நாம..?? )

நான் அவங்க பக்கத்துல போயி..

" ஐயோ.. நான் இல்ல.. நான் இல்ல.."

" இல்ல.. நீயேதான்.., நீயேதான் "

எங்கேயோ கேட்ட குரல்..!!
சொன்னது யார்ரான்னு பாத்தா..
அட என் College Mate ரேணுகா..

" ஹாய்..ரேணு நீயா..? என்ன இவ்ளோ
தூரம்..? "

" உன்னை அரஸ்ட் பண்ணலாம்னு
தான்..!! "

" அரெஸ்டா..? எதுக்கு..? "

" நான் காலேஜ் படிச்சப்ப.. என்னை
நீ கலாட்டா பண்ணுனேயில்ல
அதுக்கு தான்.. "

" என்னது.. காலேஜா..? நான் காலேஜ்ல
படிக்கவே இல்ல.. இந்த கேஸ் செல்லாது.,
செல்லாது..! "

" நீ படிச்சேன்னு நான் சொல்லவே
இல்லயே..!! நான் காலேஜ் படிச்சப்பன்னு
தான் சொன்னேன்.. "

" சரி., சரி... பப்ளிக்.பப்ளிக்.."

Actually அவங்க வந்தது எங்க
கடையில Sarees எடுக்க..

அடுத்த வாரம் எதோ Function வருதாம்..
அதுக்கு ஒரே கலர்ல 40 Sarees கேட்டாங்க..

ஆனா எங்ககிட்ட ஒரே கலர்ல
40 Sarees இல்ல..

" வெங்கட்.. ஒரு Help பண்ண முடியுமா.? "

" என்ன ரேணு.., I.G ஆகணுமா.? நான்
வேணா ஒரு Recommendation Letter தரவா..? "

ரேணு முறைச்சாங்க..

" வேற எதாவது தெரிஞ்ச துணிகடை
இருந்தா காட்டு.. "

சரி வாங்கன்னு நான் முன்னாடி
பைக்ல கிளம்பவும்.. அவங்க நாலு
பேரும் 2 ஸ்கூட்டியில வந்தாங்க..

துணிக்கடைக்கு போற வழியில
தான் என் Friend சுரேஷ் Medical Shop..
கரெக்டா அப்ப சுரேஷூம் வெளியே
நின்னுட்டு இருந்தான்..

அட இவனை கொஞ்சம் கலாய்க்கலாமே..!!

சரின்னு வண்டியை அவன் பக்கத்துல
போயி Slow பண்ணி.. அவனை கை காட்டி..

" மேடம்.. நீங்க தேடிட்டு வந்த
ஆளு இவரு தான்..!! "

" ஓ.. இவர்தானா அது..? நாங்க திரும்பி
வர வரைக்கும் கடையிலயே இருக்கணும்..
உங்ககிட்ட ஒரு Enquiry இருக்கு.. "
இப்படி ரேணு மிரட்டவும்..

சுரேஷ் கொஞ்சம் பயந்துட்டான்..

நான் ரேணுவை பாத்து...

" என்ன மேடம் நீங்க..
சும்மா வளவளன்னு பேசிட்டு இருக்கீங்க..?
வந்தோமா..,'டக்' னு எண்கவுண்டர்
பண்ணுனோமான்னு இல்லாமா..."

சுரேஷ் என்னை பாத்து..

" ஏன்ன்ன்ன்..? எதுக்குடா இந்த கொலைவெறி..?!! "

" வாங்கின பணத்தையும்.,
வாங்கின பல்பையும் எப்பவும்
வட்டியோட திருப்பி குடுத்துதான்
நமக்கு பழக்கம்..!! "

ஹா., ஹா., ஹா..!!
( வில்லன் சிரிப்பு..! )
.
.

77 Comments:

Shalini(Me The First) said...

Me The First!

அருண் பிரசாத் said...

தப்பி தவறி முதல்ல வந்துட்டேனே படிச்சா என் உயிருக்கு சேதாரம் படிக்கலைனா மக்களுக்கு சேதாரம் என்ன பண்ணலாம்....

அருண் பிரசாத் said...

சரி அவங்க வந்தது sarees வாங்க... நீங்க ஏன் medical shopக்கு கூட்டிட்டு போனீங்க... லாஜிக் உதைக்குதே

கோமாளி செல்வா said...

/// அருண் பிரசாத் said...
சரி அவங்க வந்தது sarees வாங்க... நீங்க ஏன் medical shopக்கு கூட்டிட்டு போனீங்க... லாஜிக் உதைக்குதே///


அடடா லாஜிக் பாக்குற அளவுக்கு VKS ல ஆளுங்க இருக்காங்களா ..?

ஓ , நீங்க நம்ம SPY ல .. அப்ப சரி ..!

கோமாளி செல்வா said...

//( நம்மள தேடி நாலு போலீஸ்..
அவ்ளோ பெரிய ரவுடியா நாம..?? )/

தல நிறைய தலைவர்கள சுத்தி கூடத்தான் போலீஸ் நிக்குது ..
அப்படின்னா தலைவர்கள் எல்லாம் ரவுடிகள் கிடையாதே .?
அந்த மாதிரி ரேணு கூட ஒரு பெரிய தலைவர சந்திக்கப் போறோமே ,
அதனால பாதுகாப்புக்கு வந்திருப்பாங்க .!

அருண் பிரசாத் said...

// ஆஹா.. நாம தான் யாருக்கும் தெரியற
மாதிரி எந்த தப்பும் பண்ணலையே..?!! //
ஒரு வேளை நீங்க தான் கோகுலத்தில் சூரிய்ன் பிளாக் ஓனர்னு தெரிஞ்சிடுச்சோ?

// என்னது.. காலேஜா..? நான் காலேஜே
படிச்சது இல்ல.. இந்த கேஸ் செல்லாது.,
செல்லாது..! //
போலிசை பார்த்தா உண்மை தன்னால வெளிய வந்துடுது

//அடுத்த வாரம் எதோ Function வருதாம்..
அதுக்கு ஒரே கலர்ல 40 Sarees கேட்டாங்க..

ஆனா எங்ககிட்ட ஒரே கலர்ல
40 Sarees இல்ல..//

நல்லவேளை நல்ல saree வேணும்னு கேக்கல.... அப்ப்டி கேட்டு இருந்தா ஒரு saree கூட உங்க கடைல கிடைச்சி இருக்காது (உங்க wife வேற நல்ல கடைலதான் saree எடுக்கறதா கேள்வி பட்டேன்)

Shalini(Me The First) said...

கவலைப்படாதிங்க Mr.Sun`snetway உயிரை குடுத்து தொப்பி வாங்கிய உத்தமர்ன்னு பட்டம் தந்துடலாம்.. !
செல்வா என்ன சொல்றீங்க?!

அருண் பிரசாத் said...

//கோமாளி செல்வா said...

//( நம்மள தேடி நாலு போலீஸ்..
அவ்ளோ பெரிய ரவுடியா நாம..?? )/

தல நிறைய தலைவர்கள சுத்தி கூடத்தான் போலீஸ் நிக்குது ..
அப்படின்னா தலைவர்கள் எல்லாம் ரவுடிகள் கிடையாதே .?
அந்த மாதிரி ரேணு கூட ஒரு பெரிய தலைவர சந்திக்கப் போறோமே ,
அதனால பாதுகாப்புக்கு வந்திருப்பாங்க .!//
செல்வா, கூட வந்த போலிஸ் ரேணு மேடம் பாதுகாப்புக்கு

கோமாளி செல்வா said...

//நல்ல கடைலதான் saree எடுக்கறதா கேள்வி பட்டேன்)
//

நல்ல கடைல saree எடுக்குறாங்க அப்படின்னு சொல்லிருக்கீங்க ..?
சரிதான் .. ஆனா நல்ல கடைல நல்ல saree எடுக்கணும்னா மட்டும்தான் வெங்கட் அண்ணா கடைல கிடைக்கும் ..!! ஹி ஹி ஹி

அருண் பிரசாத் said...

//Shalini(Me The First) said...

கவலைப்படாதிங்க Mr.Sun`snetway உயிரை குடுத்து தொப்பி வாங்கிய உத்தமர்ன்னு பட்டம் தந்துடலாம்.. !
செல்வா என்ன சொல்றீங்க?!//
அட, நாங்களாம் நீங்க போடுற கமெண்டை கமெண்ட்டாவே மதிக்கறது இல்லை....

Me the First லாம் ஒரு கமெண்ட்டா... புதுசா ஏதாவது டிரை பண்ணுங்கப்பா

இம்சைஅரசன் பாபு.. said...

//( ஆஹா.. நாம தான் யாருக்கும் தெரியற
மாதிரி எந்த தப்பும் பண்ணலையே..?!! )//அட பாவி தெரியாம நிறையா தப்பு பண்ணுறீயா ???

விக்கி உலகம் said...

எடுத்தவுடனே முட்டிக்கி முட்டி தட்டிட்டு தானே உங்க கிட்ட அவங்க பேசி இருக்கணும்!

அது தானே ரூல்சு!

கோமாளி செல்வா said...

//செல்வா, கூட வந்த போலிஸ் ரேணு மேடம் பாதுகாப்புக்கு

///

ஐயோ அது அவுங்க பாதுகாப்புக்கு இல்ல. அவுங்கலும் பெரிய ஆளுதான் அப்படின்னு எங்க தல கிட்ட காட்டிகரதுக்காக அப்படி வந்திருக்காங்க. அப்பத்தான் நமக்கு மரியாதை அப்படின்னு தப்பா நினைச்சிட்டாங்க .. ஆனா எங்க தல அப்படி கிடையாது., எளியோர்க்கு எளியவர்.!

ம.தி.சுதா said...

ஃஃஃஃஆனா எங்ககிட்ட ஒரே கலர்ல
40 Sarees இல்ல..ஃஃஃஃ

நம்மகிட்ட கேட்டிருக்கலாமே...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)

karthikkumar said...

அவன் பக்கத்துல போயி வண்டியை
Slow பண்ணி.. அவனை கை காட்டி..

" மேடம்.. நீங்க தேடிட்டு வந்த
ஆளு இவரு தான்..!! "

" ஓ.. இவர்தானா அது..?
உங்ககிட்ட ஒரு Enquiry இருக்கு.. "
இப்படி ரேணு மிரட்டவும்..///
இதுல சுரேஷ் எங்க பல்பு வாங்குறாரு. பதிவு ஆரம்பத்துல இருந்து நல்லா உத்து படிச்சா நீங்க பல்பு வாங்கினதுதான் தெரியுது. இதுல "வாங்கின பணத்தையும்.,
வாங்கின பல்பையும்
வட்டிடோட திருப்பி குடுத்துதான்
நமக்கு பழக்கம்.." பஞ்ச் வேற அட கடவுளே....

karthikkumar said...

வட்டிடோட//
வ+ட்+டி+யோ+ட. எங்கே சொல்லுங்க வட்டியோட.

மங்குனி அமைச்சர் said...

அடுத்த வாரம் எதோ Function வருதாம்..
அதுக்கு ஒரே கலர்ல 40 Sarees கேட்டாங்க..///

பாவம் அவுங்களுக்கு என்ன வேண்டுதலோ .....ஒரு ஆளு ஒரே நாள்ல 40 சேலைய கட்டிக்கிட்டு எதுக்கு பங்க்சன்ல போயி கஷ்டப்படனும் அதுவும் ஒரே கலர் சேலைய

karthikkumar said...

நீ படிச்சேன்னு நான் சொல்லவே இல்லயே..!!
நான் காலேஜ் படிச்சப்பன்னு தான் சொன்னேன்.. "//
அதானே உங்க கூட படிச்சிருந்தா அவங்க எப்படி போலிஸ் ஆவறது....

மாணவன் said...

//சரி அவங்க வந்தது sarees வாங்க... நீங்க ஏன் medical shopக்கு கூட்டிட்டு போனீங்க... லாஜிக் உதைக்குதே//

அதானே டவுட்டா இருக்கு...

Shalini(Me The First) said...

@அருண்
//லாஜிக் உதைக்குதே//
பாவம் வீட்டுல வாங்கி வாங்கி அதான் நினைவு வருது உங்களுக்கு ;)

// புதுசா ஏதாவது டிரை பண்ணுங்கப்பா//

பார்த்து, இந்தியாவின் முதல் பிரதமர் யார்னு கேட்டா புதுசா ட்ரை பண்றேன்னுட்டு “அருண் பிரசாத்”ன்னு சொல்லிடாதிங்க!:)


@கார்த்தி
//
அதானே உங்க கூட படிச்சிருந்தா அவங்க எப்படி போலிஸ் ஆவறது....//
அதானே, கூட படிச்சுருந்தா இன்னேரம் அவங்க ஒரு ஐ.ஜி.யாவொ இல்ல ஒரு ஐ.பி.எஸ்ஸாவோ ஆகியிருக்கணும் ப்ச் மிஸ் பண்ணீட்டாங்க! :(

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்குனி அமைச்சர் said...

அடுத்த வாரம் எதோ Function வருதாம்..
அதுக்கு ஒரே கலர்ல 40 Sarees கேட்டாங்க..///

பாவம் அவுங்களுக்கு என்ன வேண்டுதலோ .....ஒரு ஆளு ஒரே நாள்ல 40 சேலைய கட்டிக்கிட்டு எதுக்கு பங்க்சன்ல போயி கஷ்டப்படனும் அதுவும் ஒரே கலர் சேலைய ///


மங்கு வெங்கட்க்கு விவரம் பத்தலை. ஒரு சேலையை 40 xerox போட்டிருக்கலாம்ல

அருண் பிரசாத் said...

// வாங்கின பணத்தையும்.,
வாங்கின பல்பையும்
வட்டியோட திருப்பி குடுத்துதான்
நமக்கு பழக்கம்..!! //

அது சரி... ஆனா VKS கிட்ட வாங்குற பல்பை மட்டும் திருப்பிகொடுக்கவே முடியறது இல்ல...

சரி, எலக்டிரிகல் கடைல பல்பு வாங்கினா திருப்பி குத்துடுவீங்களா # டவுட்டு

நாகராஜசோழன் MA said...

:))

Arun Prasath said...

கிரிமினல் மைன்ட் சார் உங்களுக்கு

karthikkumar said...

Shalini(Me The First) said...///
@கார்த்தி
//
அதானே உங்க கூட படிச்சிருந்தா அவங்க எப்படி போலிஸ் ஆவறது....//
அதானே, கூட படிச்சுருந்தா இன்னேரம் அவங்க ஒரு ஐ.ஜி.யாவொ இல்ல ஒரு ஐ.பி.எஸ்ஸாவோ ஆகியிருக்கணும் ப்ச் மிஸ் பண்ணீட்டாங்க! :(///

ஹா ஹா ஹா எதவது லாஜிக்கா பேசுறீங்களா... நீங்க சொல்றமாதிரி கூட படிச்சவங்களே ஐ ஜி ஆகும்போது இவர் அட்லீஸ்ட் இந்திய பிரதமராவது வந்திருக்கனும்ல .... ஏதோ பதில் சொல்லணுமே அப்டின்னு சொல்லாதீங்க.. me the first போட்டா மட்டும் பத்தாது... லாஜிக்கா பதில் சொல்லணும் அதெல்லாம் தெரிஞ்சா நீங்க அந்த கட்சில இருந்திருக்கமாட்டீங்க.. :)

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைச்சர் said... //அட என் College Mate ரேணுகா..//
///நான் காலேஜே படிச்சது இல்ல///
///" நீ படிச்சேன்னு நான் சொல்லவே இல்லயே..!!//

ஹி.ஹி.ஹி......உங்கள் பதிவில் கருத்துப்பிழை உள்ளது

இப்படிக்கு
குற்றம் கண்டுபிடித்தே பிழைப்பு நடத்துவோர் சங்கம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Arun Prasath said...

கிரிமினல் மைன்ட் சார் உங்களுக்கு//

கிரிமினலுக்கு கிரிமினல் மைன்ட் தான் வரும். புத்தர் ஏசுநாதர் மைன்டா வரும்?

சி.பி.செந்தில்குமார் said...

both of my 2 coments not published so i get an idea,

venkat yr post is super,marvellous,sema comedy

Shalini(Me The First) said...

@கார்த்தி
//
ஹா ஹா ஹா எதவது லாஜிக்கா பேசுறீங்களா... நீங்க சொல்றமாதிரி கூட படிச்சவங்களே ஐ ஜி ஆகும்போது இவர் அட்லீஸ்ட் இந்திய பிரதமராவது வந்திருக்கனும்ல ....//

ஓகே, லாஜிக்கா கேக்குறேன் ;) ஐஜி கூட படிச்சவங்க எல்லாம் அட்லீஸ்ட் இந்திய பிரதமர் ஆகனும்னா எத்தனை இந்திய பிரதமர்கள் ஐஜீக்களோட படிச்சுருக்காங்க?
ஐஜீ கூட படிச்சவங்க எல்லாம் இந்திய பிரதமர்னா நம்ம நாட்டுல இப்ப எத்தனை பிரதமர்கள்னு கொஞ்சம் சொல்றீங்களா?!

வெங்கட் said...

@ அருண்.,

// தப்பி தவறி முதல்ல வந்துட்டேனே
படிச்சா என் உயிருக்கு சேதாரம் //

அப்படியா..? அப்ப முதல்ல பதிவை
படிங்க.. நீங்க சொன்ன மாதிரி எதாவது
நடந்தா.. எனக்கு " பரம்வீர் சக்ரா " அவார்ட்
எதாவது தர்றாங்களான்னு பாக்கலாம்..!!

வெங்கட் said...

@ அருண்.,

// சரி அவங்க வந்தது sarees வாங்க...
நீங்க ஏன் medical shopக்கு கூட்டிட்டு
போனீங்க... லாஜிக் உதைக்குதே //

இப்ப கொஞ்சம் Alter பண்ணிட்டேன்..

// துணிக்கடைக்கு போற வழியில
தான் என் Friend சுரேஷ் Medical Shop..//

மணிரத்னம் ஸ்டைல்ல சுருக்கமா
சொன்னா உங்களுக்கு விளங்காதோ..?!!

வெங்கட் said...

@ செல்வா.,

// அடடா லாஜிக் பாக்குற அளவுக்கு
VKS ல ஆளுங்க இருக்காங்களா ..? //

அதை விட எனக்கு ஒரு பெரிய டவுட்டு..
முதல்ல VKS-ல ஆளுங்க இருக்காங்களா.?!!

வெங்கட் said...

@ செல்வா.,

// தல நிறைய தலைவர்கள சுத்தி
கூடத்தான் போலீஸ் நிக்குது.. //

இது பாயிண்ட்..

@ ரமேஷ்.,

என்னிக்காவது போலி போலீஸ்ன்னு
ஒரிஜினல் போலீஸ் உங்களை அரெஸ்ட்
பண்ணி கூட்டிட்டு போகும் போது..
" நானும் தலைவர்தான்னு சொன்னீங்க..!! "
முட்டிக்கு முட்டி தட்டிடுவாங்க..

ஜாக்ரதை..!!

வெங்கட் said...

@ அருண்.,

// Me the First லாம் ஒரு கமெண்ட்டா...
புதுசா ஏதாவது டிரை பண்ணுங்கப்பா //

ரொம்ப நாளா சாப்பிடும் போது
கையில எடுத்து வாயால
சாப்பிடுறீங்களாமே..

எங்கே புதுசா டிரை பண்றேன்னு
சொல்லி..

காலால எடுத்து மூக்கால சாப்பிடுங்க
பாக்கலாம்..!!

பாரதசாரி said...

அடுத்து சுரேஷ் அவர்களின் பதிலடி பல்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

வெங்கட் said...

@ இம்சை பாபு.,

// அட பாவி தெரியாம நிறையா
தப்பு பண்ணுறீயா ??? //

தப்பா.? அது எப்படி இருக்கும்க..?
கருப்பா..? சிகப்பா..?

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ விக்கி.,

// எடுத்தவுடனே முட்டிக்கி முட்டி
தட்டிட்டு தானே உங்க கிட்ட
அவங்க பேசி இருக்கணும்!
அது தானே ரூல்சு! //

என்னாது... ஒரு மேலதிகாரிகிட்ட
இப்படியா நடந்துக்குவாங்க..?!!
நாங்கல்லாம் மப்டியில இருக்கிற
C.I.D Officer..

நாங்க C.I.D Officer-ன்னு எங்கேயுமே
சொல்லிக்க மாட்டோம்.. ஏன்னா
அது ரொம்ப ரகசியமா இருக்கணும்னு
எங்க C.I.D Rules List-ல இருக்கு..

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// இதுல சுரேஷ் எங்க பல்பு வாங்குறாரு.
பதிவு ஆரம்பத்துல இருந்து நல்லா உத்து
படிச்சா நீங்க பல்பு வாங்கினதுதான் தெரியுது. //

அப்படியா.? ரொம்ப உத்து படிச்சிட்டீங்க
போல.. எதுக்கும் கொஞ்சம் தள்ளி
நின்னு படிச்சி பாருங்க..

அப்ப சுரேஷ் " டியூப் லைட் " வாங்கின
மேட்டரே புரியும்..!!

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// வட்டிடோட //

// வ+ட்+டி+யோ+ட. எங்கே சொல்லுங்க
வட்டியோட. //

இங்கே என்ன தமிழ் கிளாஸா நடக்குது.?
ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் கண்டுபிடிச்சி
விளையாடிகிட்டு இருக்கீங்க..

தம்பி போங்க தம்பி..
கத்தி எதாவது பட்டுட போகுது..

வெங்கட் said...

@ அருண்.,

// அது சரி... ஆனா VKS கிட்ட வாங்குற
பல்பை மட்டும் திருப்பி கொடுக்கவே
முடியறது இல்ல... //

ஆமா... அந்த பியூஸ் போன பல்பை
திருப்பி வேற தரணுமா..?!!

LEKHA said...

வெங்கட்
உங்கள பத்தின நிறைய உண்மைகள் வெளிய வந்துடுச்சு போல ;) !!!

//உங்ககிட்ட ஒரு Enquiry இருக்கு.. "
இப்படி ரேணு மிரட்டவும்..//

உங்க நண்பர்கள் எல்லோரும் நக்கல் பேர்வழிகள் தானா?

பாவம் சுரேஷ் !!!

எப்போவும் முழிசிகிட்டே இருக்கணும் போல நீங்க கிட்ட இருந்தா?? :)

வெங்கட் said...

@ ஷாலினி.,

// அதானே, கூட படிச்சுருந்தா இன்னேரம்
அவங்க ஒரு ஐ.ஜி.யாவொ இல்ல ஒரு
ஐ.பி.எஸ்ஸாவோ ஆகியிருக்கணும்
ப்ச் மிஸ் பண்ணீட்டாங்க! :( //

ஹி., ஹி., ஹி..!!!

சரி விடுங்க " லத்திகா சரண்னை "
தூக்கிட்டு நம்ம ரேணுவை DGP-ஆ
போட்டுடலாம்..

ரேணு DGP ஆனதும் முதல் கேஸ்..
நம்ம போலி போலீஸ் மேல தான்..

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// நீங்க சொல்றமாதிரி கூட படிச்சவங்களே
ஐ ஜி ஆகும்போது இவர் அட்லீஸ்ட்
இந்திய பிரதமராவது வந்திருக்கனும்ல.... //

ஆமா தம்பி நீங்க எங்கே படிச்சீங்க..
இப்படி தத்துபித்து உளர்றதுக்கு..?

வெங்கட் said...

@ மங்குனி.,

// மங்குனி அமைச்சர் said...

//அட என் College Mate ரேணுகா.. //
// நான் காலேஜ்ல படிக்கவே இல்ல.. //

// ஹி.ஹி.ஹி......உங்கள் பதிவில்
கருத்துப்பிழை உள்ளது //

ஹி., ஹி., ஹி... உங்க கமெண்ட்ல
கருத்து பிழை உள்ளது...

இப்பவும் சொல்றேன்.. நான் தினமும்
காலேஜ் போவேன்..ஆனா அங்கே
படிச்சதே இல்ல..

இப்படிக்கு
குற்றம் கண்டுபிடிப்போரை சமாளிப்போர் சங்கம்

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// கிரிமினலுக்கு கிரிமினல் மைன்ட் தான்
வரும். புத்தர் ஏசுநாதர் மைன்டா வரும்? //

ஆஹா.. என்னா ஒரு அனுவப மொழி..?!!
நோட் பண்ணுங்கப்பா..!!
நோட் பண்ணுங்கப்பா..!!

ஆமா ரமேஷு இந்த
" கிரிமினல் லாயர்"னு சொல்றாங்களே..
அவங்கல்லாம் கிரிமினலா..?!! # டவுட்டு

வெங்கட் said...

@ சி.பி.செந்தில்.,

// both of my 2 coments not published
so i get an idea,
venkat yr post is super, marvellous,
sema comedy //

இப்படி வேறயா..? அடங்க மாட்டீரா..?!

அந்த 2 கமெண்ட்டும் பப்ளிஷ்
பண்ணியாச்சு.. அது போன பதிவுல
இருக்கு போயி செக் பண்ணிக்கோங்க..

வெங்கட் said...

@ ஷாலினி.,

// ஓகே, லாஜிக்கா கேக்குறேன் ;)
ஐஜீ கூட படிச்சவங்க எல்லாம்
இந்திய பிரதமர்னா நம்ம நாட்டுல
இப்ப எத்தனை பிரதமர்கள்னு கொஞ்சம்
சொல்றீங்களா?! //

:)

இப்படியெல்லாம் கேட்டா கார்த்தி
என்ன பண்ணுவாரு பாவம்..?

தம்பி.. எங்கே மம்மி, டாடிகிட்ட
கேட்டு பதில் சொல்லு பாக்கலாம்..!!

வெங்கட் said...

@ பாரதசாரி.,

// அடுத்து சுரேஷ் அவர்களின் பதிலடி
பல்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் //

இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா..
ஹி., ஹி., ஹி..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெங்கட் said...

@ ரமேஷ்.,

// கிரிமினலுக்கு கிரிமினல் மைன்ட் தான்
வரும். புத்தர் ஏசுநாதர் மைன்டா வரும்? //

ஆஹா.. என்னா ஒரு அனுவப மொழி..?!!
நோட் பண்ணுங்கப்பா..!!
நோட் பண்ணுங்கப்பா..!!

ஆமா ரமேஷு இந்த
" கிரிமினல் லாயர்"னு சொல்றாங்களே..
அவங்கல்லாம் கிரிமினலா..?!! # டவுட்டு//

கிரிமினல் லையர் உங்களை பத்தி பேசும்போது எதுக்கு சம்மந்தம் இல்லாம கிரிமினல் லாயரை பத்தி பேசுறீங்க?

karthikkumar said...

@ ஷாலினி /
ஓகே, லாஜிக்கா கேக்குறேன் ;) ஐஜி கூட படிச்சவங்க எல்லாம் அட்லீஸ்ட் இந்திய பிரதமர் ஆகனும்னா எத்தனை இந்திய பிரதமர்கள் ஐஜீக்களோட படிச்சுருக்காங்க?
ஐஜீ கூட படிச்சவங்க எல்லாம் இந்திய பிரதமர்னா நம்ம நாட்டுல இப்ப எத்தனை பிரதமர்கள்னு கொஞ்சம் சொல்றீங்களா?//

ஐ .ஜிக்களோட படிச்சவங்க எல்லாம் பிரதமர்னு நான் சொல்ல வரல.. நீங்கதானே சொன்னீங்க அந்த ரேணு மேடம் உங்க தலைவர் வெங்கட் கூட படிச்சிருந்தா இந்நேரம் ஐ ஜி யா வந்திருப்பாங்க அப்டின்னு... அதனாலதான் சொன்னேன். அப்போ உங்க தலைவர் ஏன் பிரதமர் வேண்டாம், ஒரு வார்டு கவுன்சிலராவது வந்திருக்கனும்ல... ஏன் துணிக்கடை வெச்சிருக்காரு... பிரதமர் கொஞ்சம் அதிகமா தெரியுது இல்ல... அது ஏன்னா நான் அட்லீஸ்ட் ஒரு எம்.எல்.ஏ - வாவது வந்திருக்கணும்னு சொன்னா நீங்க " எங்க தலைவர் ரேஞ்சுக்கு எம்.எல்.ஏ சாதாரணம் முதல் அமைச்சர் ஆயிருப்போம் சொல்லுவீங்க.. சரி எதுக்கு வம்பு அப்டின்னுதான் நானே பிரதமர் சொன்னேன்.... மொதல்ல கமென்ட முழுசா புரிஞ்சு படிங்க... ஏதோ கமென்ட் போடணுமே அப்டின்னு வர்றத டைப் பண்றீங்க.... :)//

karthikkumar said...

@ வெங்கட் /
///ஆமா தம்பி நீங்க எங்கே படிச்சீங்க.. இப்படி தத்துபித்து உளர்றதுக்கு..///

சத்தியமா உங்க கூட இல்லைங்க... உங்க கூட படிச்சிருந்தா நான் இந்நேரம் ஐ ஜி ஆயிருப்பேன்.... (கொடுமைடா சாமீ)


///இப்படியெல்லாம் கேட்டா கார்த்தி என்ன பண்ணுவாரு பாவம்..? தம்பி.. எங்கே மம்மி, டாடிகிட்ட கேட்டு பதில் சொல்லு பாக்கலாம்..///

அப்போ நீங்க எல்லாம் உங்க மம்மி டாடிட்ட கேட்டுதான் பதில் சொல்லுவீங்களா... அதானே பார்த்தேன்... என்னடா கமென்ட் போட ரொம்ப லேட் பண்றாங்களே அப்டின்னு...

வெங்கட் said...

@ லேகா.,

// வெங்கட் உங்கள பத்தின நிறைய
உண்மைகள் வெளிய வந்துடுச்சு போல ;) !!!

என்ன நிறைய உண்மைகள்
வெளியே வந்துடிச்சா..?
அப்ப நான்...

1.India - Pak அமைதி பேச்சு
வார்த்தையில ஈடுபட்டது..

2. ராக்கெட் விட நாசா விஞ்ஞானிகளுக்கு
ரெண்டு ., மூணு டிப்ஸ் குடுத்தது..

3. 2G ஸ்பெக்ரம் ஊழலை கண்டுபிடிச்சது..

இதெல்லாம் கூட வெளியே வந்துடுச்சா..?!!

// உங்க நண்பர்கள் எல்லோரும் நக்கல்
பேர்வழிகள் தானா? //

நம்ம Friend-ல.. பின்ன
அப்படித்தான் இருப்பாங்க..
:)

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// அப்போ உங்க தலைவர் ஏன் பிரதமர்
வேண்டாம், ஒரு வார்டு கவுன்சிலராவது
வந்திருக்கனும்ல... //

இப்படி உலகம் தெரியாத சின்ன பையனா
இருக்கீங்களே தம்பி..!!

நம்மள தான் அமெரிக்க ஜனாதிபதியா
வாங்க.. வாங்கன்னு அங்கே இருக்கிற
மக்கள் கெஞ்சி கெஞ்சி கூப்பிட்டுட்டு
இருக்காங்க..

நான் தான் அரசியல்ல இப்போதைக்கு
Interest இல்லைன்னு சொல்லிட்டேன்..

இப்ப போன மாசம் ஓபாமா இந்தியா
வந்துட்டு போனாரே.. அது எதுக்குன்னு
நினைக்கிறீங்க..?

எல்லாம் என்னை Convience பண்ணத்தான்..
அவருக்கும் " NO " தான் சொன்னேனுங்கோ..

samhitha said...

//வாங்கின பணத்தை
வட்டியோட திருப்பி குடுத்துதான்
நமக்கு பழக்கம்..!! "//

venkat
என் கிட்ட போன வாரம் 2 lakh வாங்கினது ஞாபகம் இருக்கா ?

எப்போ வட்டியோட தருவீங்க?? ;)

ரசிகன் said...

@shalini
//அதானே, கூட படிச்சுருந்தா இன்னேரம் அவங்க ஒரு ஐ.ஜி.யாவொ இல்ல ஒரு ஐ.பி.எஸ்ஸாவோ ஆகியிருக்கணும் ப்ச் மிஸ் பண்ணீட்டாங்க! :(//

இதை நான் வழி மொழிகின்றேன்..
ம‌யில் சும்மாவே அழ‌குதான்னாலும் அண்ட‌ங்காக்கா ப‌க்க‌த்துல‌ நிக்கும் போது பேர‌ழ‌கா தான் தெரியும். அந்த‌ மாதிரி உங்க‌ பாஸ் கூட‌ யார் ப‌டிச்சிருன்தாலும் அவ‌ங்க‌ ப‌ய‌ங்க‌ர‌ அறிவாளியா தெரிஞ்சிருப்பாங்க‌.. பிர‌மாதமா மார்க் போட‌ப்ப‌ட்டு (இவ‌ரு பேப்ப‌ருக்கு அது the bestஆ தெரியும்ல‌) ஐ.ஜியாவோ ஐ.பி.எஸ் ஆவோ க‌ண்டிப்பா ஆகி இருப்பாங்க‌..

karthikkumar said...

@ வெங்கட் //
நம்மள தான் அமெரிக்க ஜனாதிபதியா வாங்க.. வாங்கன்னு அங்கே இருக்கிற
மக்கள் கெஞ்சி கெஞ்சி கூப்பிட்டுட்டு இருக்காங்க.. இப்ப போன மாசம் ஓபாமா இந்தியா வந்துட்டு போனாரே..
அது எதுக்குன்னு நினைக்கிறீங்க..?
எல்லாம் என்னை Convience பண்ணத்தான்.. அவருக்கும் " NO " தான் சொன்னேனுங்கோ.//


சனி பகவானுக்கும் சனி புடிக்கும் அப்டிங்கறது இந்த ஒபாமா மூலமா எனக்கு தெரிஞ்சிருச்சு... தன்னோட தலைல மட்டுமில்லாம மொத்த அமெரிக்காவோட தலைலையும் மண்ணை போட உங்கள கூபிட்ருக்கார்.... நல்லவேள அமெரிக்கா தப்பிச்சிருச்சு....

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// கிரிமினல் லையர் உங்களை பத்தி
பேசும்போது //

புலியை பாத்து " அம்மாடி..
எவ்ளோ பெரிரிரிய பூனைன்னு.!! "
சொல்லுற ஆளு நீங்க..

உங்களுக்கு போயி கிரிமினலுக்கும்.,
கிரிமினல் லாயருக்கும் எங்கே
வித்தியாசம் தெரிய போகுது..?!!

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// உங்க கூட படிச்சிருந்தா நான் இந்நேரம்
ஐ ஜி ஆயிருப்பேன்.... (கொடுமைடா சாமீ) //

இதுக்கு ஏன் நீங்க பீல் பண்றீங்க..?
அந்த மாதிரி ஒரு கொடுமை நடந்தா
நாங்கல்ல பீல் பண்ணனும்..!!?

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// அப்போ நீங்க எல்லாம் உங்க மம்மி
டாடிட்ட கேட்டுதான் பதில் சொல்லுவீங்களா...? //

கார்த்திக் அப்பா போனில்..

கா.அ : " வெங்கட் கூட படிச்சிருந்தா
ஐ.ஜி ஆகியிருப்பேன்னு " கார்த்தி
புலம்பிட்டே இருக்கான்பா..

நான் : அப்படியா..? சரி விடுங்க..

கா.அ : எனக்கு கோவம் வந்து நாலு
சாத்து சாத்தி புட்டேன்..

நான் : ஏன்.. சின்ன பையனை போயி..

கா.அ : பின்ன என்னங்க..
" வெங்கட் கூட படிச்சிருந்தா ஐ.ஜி
ஆகியிருப்பேன்னு " இப்ப புலம்பறானே..
அட்லீஸ்ட் படிச்சிருந்தா ஒரு
கான்ஸ்டபிளாவது ஆகியிருக்கலாம்ல..

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// என் கிட்ட போன வாரம்
2 lakh வாங்கினது ஞாபகம் இருக்கா ?
எப்போ வட்டியோட தருவீங்க?? ;) //

லேகாவுக்கு 5 லட்ச ரூபா கடன் குடுத்து
இருக்கேன்.. அவங்க திருப்பி குடுத்த
உடனே குடுத்தர்றேன்.. :)

Madhavan Srinivasagopalan said...

// " வாங்கின பணத்தையும்.,
வாங்கின பல்பையும் எப்பவும்
வட்டியோட திருப்பி குடுத்துதான்
நமக்கு பழக்கம்..!! " //

ஆனா நீ வேற யாருக்கோ தரீங்களே..
யாரு கொடுத்தாங்களோ அவங்களுக்குத்தான திருப்பித் தரணும் ?

அனு said...

லேட்டா வந்தா விளையாட்டுல சேர்த்துபீங்களா??

எனக்கு என்னவோ நீங்க கொடுத்தது ப்யூஸ் போன பல்ப் மாதிரி தான் தெரியுது.. நல்லா ட்ரை பண்ணியிருக்கீங்க.. இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணினா எங்க அளவுக்கு பெரிய ஆளா வர வாய்ப்பிருக்கு..

அனு said...

போன பதிவில் நீங்க எங்க கட்சிக்கு எதிரா ஒரு தலைபட்சமா தீர்ப்பு சொன்னதால, உங்களை ஒரு நாலு நாளைக்கு ப்ளாகுலகத்தில் இருந்து தள்ளி வைக்கலாமான்னு ஆலோசனை நடந்துட்டு இருக்கு..

இப்பவே நீங்க சொன்னதையெல்லாம் வாபஸ் வாங்கிகிட்டா, மன்னிச்சு விட்டுட்றோம்.. இல்லைன்னா, அதன் விளைவுகளை நீங்க சந்திக்க வேண்டியிருக்கும்.. :-)

Shalini(Me The First) said...

@கார்த்தி
//ஐ .ஜிக்களோட படிச்சவங்க எல்லாம் பிரதமர்னு நான் சொல்ல வரல.. நீங்கதானே சொன்னீங்க அந்த ரேணு மேடம் உங்க தலைவர் வெங்கட் கூட படிச்சிருந்தா இந்நேரம் ஐ ஜி யா வந்திருப்பாங்க அப்டின்னு... அதனாலதான் சொன்னேன். அப்போ உங்க தலைவர் ஏன் பிரதமர் வேண்டாம், ஒரு வார்டு கவுன்சிலராவது வந்திருக்கனும்ல... ஏன் துணிக்கடை வெச்சிருக்காரு... பிரதமர் கொஞ்சம் அதிகமா தெரியுது இல்ல... அது ஏன்னா நான் அட்லீஸ்ட் ஒரு எம்.எல்.ஏ - வாவது வந்திருக்கணும்னு சொன்னா நீங்க " எங்க தலைவர் ரேஞ்சுக்கு எம்.எல்.ஏ சாதாரணம் முதல் அமைச்சர் ஆயிருப்போம் சொல்லுவீங்க.. சரி எதுக்கு வம்பு அப்டின்னுதான் நானே பிரதமர் சொன்னேன்.... மொதல்ல கமென்ட முழுசா புரிஞ்சு படிங்க... ஏதோ கமென்ட் போடணுமே அப்டின்னு வர்றத டைப் பண்றீங்க....//

இந்தாங்க சோடா!... :) கஷ்டபட்டு மூச்சு விடாம மனப்பாடம் பண்ணி ஒப்புச்சுட்டீங்க! ;)

Shalini(Me The First) said...

@ரசிகன்
//இதை நான் வழி மொழிகின்றேன்..
ம‌யில் சும்மாவே அழ‌குதான்னாலும் அண்ட‌ங்காக்கா ப‌க்க‌த்துல‌ நிக்கும் போது பேர‌ழ‌கா தான் தெரியும்.//

ஏங்க வழில நின்னுட்டு மொழியுறீங்க ஓஹ் உங்க ஆஃபீஸை இழுத்து மூடிட்டாங்கல்ல :(

ஆமா என்னமோ மயில், காக்காங்குறீங்க
சிங்கம் புலிய விட்டுட்டு இப்ப மயில் காக்காக்கு வந்தாச்சு அப்புறம் பல்லி பூரானா ?
என்னமோ போங்க ரசிகன் மனுஷனா மாறுவீங்களோ?!

Shalini(Me The First) said...

@அனு
//எனக்கு என்னவோ நீங்க கொடுத்தது ப்யூஸ் போன பல்ப் மாதிரி தான் தெரியுது.. நல்லா ட்ரை பண்ணியிருக்கீங்க.. இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணினா எங்க அளவுக்கு பெரிய ஆளா வர வாய்ப்பிருக்கு...//

எப்புடி எப்புடி,உங்கள மாதிரி?!
வேண்டாம்ப்பா வேண்டவே வேண்டாம்
பெரிய ஆளா?
ஆமா நீங்க எவ்ளொ பெரிய ஆள்? ஒரு ஏழடி இல்ல எட்டடி இருப்பீங்களா?

Shalini(Me The First) said...

@அனு
//
இப்பவே நீங்க சொன்னதையெல்லாம் வாபஸ் வாங்கிகிட்டா, மன்னிச்சு விட்டுட்றோம்.. இல்லைன்னா, அதன் விளைவுகளை நீங்க சந்திக்க வேண்டியிருக்கும்.. :-//
சரிடா செல்லம் சாரி டா செல்லம் அதுக்காக இப்படி அழ கூடாதுடா
வாங்க வாங்க உங்களை விளையாட்டுல சேத்துக்குறோம்...!

கார்த்தி, அதோ அந்த மண்ணுல அழுக்கு பண்ணிக்காம இவங்க கூட கொஞ்ச நேரம் விளையாடுங்க மம்மி டாடி கூப்ட்டப்புறம் போகலாம் :)

வெங்கட் said...

@ ரசிகன்.,

// ம‌யில் சும்மாவே அழ‌குதான்னாலும்
அண்ட‌ங்காக்கா ப‌க்க‌த்துல‌ நிக்கும்
போது பேர‌ழ‌கா தான் தெரியும். //

" ஆஹா..!! காகங்கள்
எவ்வளவு அழகு..!!
பகிர்ந்து
பசியாறும் போது..!! "

எப்பவும் வெளி அழகை
பாக்க கூடாதுங்க..
உள் அழகை தான் பாக்கணும்..

ஆன்ஸர் பேப்பர் அழகா இருந்தா
மட்டும் போதுமா.? உள்ளே
மேட்டர் இருக்கணும்ங்க..

ரேணு பேப்பரை விட
என் பேப்பரைல தான் மேட்டர்
அதிகம்..

இதை ரேணு மறுத்தா..
அப்புறம் போலீஸ் ஸ்டெஷன்
புகுந்து கலாட்டா பண்ணுவேன்..

நானும் ரவுடிதான்...
நானும் ரவுடிதான்...

karthikkumar said...

@ வெங்கட்
வெங்கட் கூட படிச்சிருந்தா ஐ.ஜி
ஆகியிருப்பேன்னு " இப்ப புலம்பறானே..
அட்லீஸ்ட் படிச்சிருந்தா ஒரு
கான்ஸ்டபிளாவது ஆகியிருக்கலாம்ல.///
சரி நான் படிக்கிறேன் படிக்கல அத விடுங்க. உங்க கூட படிச்சா ஐ ஜி எல்லாம் இப்போ எப்படி இருக்காங்க. ( இருக்காங்களா?)

karthikkumar said...

@ ஷாலினி
இந்தாங்க சோடா!... :) கஷ்டபட்டு மூச்சு விடாம மனப்பாடம் பண்ணி ஒப்புச்சுட்டீங்க! ;)///
ஹல்லோ எச்சூஸ்மி அந்த சோடாவ நீங்களே குடிச்சிட்டு பதில சொல்லுங்க.. உண்மைய யாரும் மனப்பாடம் பண்ணமாட்டாங்க அதுவா வரும்...பாவம் உங்களுக்குத்தான் பதில் வரமாட்டீங்குது...

karthikkumar said...

@ ஷாலினி
சரிடா செல்லம் சாரி டா செல்லம் அதுக்காக இப்படி அழ கூடாதுடா வாங்க வாங்க உங்களை விளையாட்டுல சேத்துக்குறோம்...!கார்த்தி, அதோ அந்த மண்ணுல அழுக்கு பண்ணிக்காம இவங்க கூட கொஞ்ச நேரம் விளையாடுங்க மம்மி டாடி கூப்ட்டப்புறம் போகலாம் :)///

கார்த்திக் : அம்மா, அப்பா அங்க ஒரு அக்கா அழுதுட்டு இருக்காங்க.

கா MOM & DAD: என்னாச்சு எதுக்கு அழுவுறாங்க.

கார்த்திக் : அந்த அக்காவ எல்லோரும் கலாய்க்கிராங்கலம். பாவம் அந்த அக்கா திருப்பி பேச கூட தெரியாம போங்க போய் விளையாடுங்க, விளையாடுங்க சொல்லி அழுதுகிட்டே இருக்காங்க.

கா MOM : கண்ணா இது ஒன்னும் அவங்களுக்கு புதுசு இல்ல.. அந்த அக்கா எப்பவுமே இப்படிதான்... ME THE FIRST அப்டின்னு கமென்ட் போட்டுட்டு அதுக்கப்புறம் என்ன பேசறது தெரியாம
இப்படிதான் அழுதுகிட்டு இருப்பாங்க.. மத்தவங்க கலாய்ச்சா பரவாயில்ல. நீ இனிமேல் கலாய்க்காதே...

கார்த்திக் : இல்லம்மா அவங்க கேள்வியெல்லாம் கேட்பாங்க... ஆனா மத்தவங்க கேட்டா இப்படிதான் பண்றாங்க....:)

கோமாளி செல்வா said...

//சரி நான் படிக்கிறேன் படிக்கல அத விடுங்க. உங்க கூட படிச்சா ஐ ஜி எல்லாம் இப்போ எப்படி இருக்காங்க. ( இருக்காங்களா?)
///

அவர் கூட படிக்கும் போது அவுங்க ஐ,ஜி கிடையாதுங்க ., அவுங்க ஜஸ்ட் ஸ்டுடண்ட்ஸ் தான் .. படிச்சதுக்கு அப்புறம் தான் ஐ,ஜி , கான்ச்டபெல் எல்லாமே.!
இப்ப இந்தியாவுல எங்க தல வயசுக்கு இருக்குற எல்லா ஐ.ஜி யுமே எங்க தல கூட படிச்சவங்கதான் .. நீங்க வேணா போய் கேட்டு பாருங்க .!

கோமாளி செல்வா said...

///உண்மைய யாரும் மனப்பாடம் பண்ணமாட்டாங்க அதுவா வரும்...பாவம் உங்களுக்குத்தான் பதில் வரமாட்டீங்குது...
//

அப்படின்னா பலிக்கூடத்துல புத்தகத்துல இருக்குறது எல்லாமே பொய்யா .?
இல்ல அத கூட நீங்க அப்படியே மனப்பாடம் தானே பண்ணுறீங்க அதுக்காக கேட்டேன் .! அடச்சே .. மறுபடியும் .. நீங்கதான் பள்ளிக்கூடம் போனதில்லையே !

கோமாளி செல்வா said...

//கார்த்திக் : இல்லம்மா அவங்க கேள்வியெல்லாம் கேட்பாங்க... ஆனா மத்தவங்க கேட்டா இப்படிதான் பண்றாங்க....:)
//

இதுக்கு அப்புறம் நடந்தது ..

கார்த்திக் MOM : டேய் , தம்பி எழுந்திருடா . மணி ஏழு ஆகிபோச்சு பாரு ,
போ போய் குளிச்சிட்டு வா.!

கார்த்திக் : ஐயோ இது வரைக்கும் கண்டது கனவா ..?

கார்த்திக் mind : பின்ன VAS ல இருக்குறவங்கள அடிக்கறதுக்கு நீ இன்னும் வளரணும் ., அனுவே தலைவி சொல்லிட்டு இருந்தாங்க , இப்ப கட்சி மாறிட்டாங்க .!

வெங்கட் said...

@ அனு.,

// லேட்டா வந்தா விளையாட்டுல
சேர்த்துபீங்களா??//

ஒரு தடவை State Level Football Match..

அதுல அனு 6 Goals போட்டாங்க..
ஆனா அதை கணக்குல சேர்க்கலை..
இவங்க Refree கூட சண்டைக்கு
போயிட்டாங்க..

" ஏன் நான் போட்ட 6 Goals-ஐ கணக்குல
சேர்க்கலை..? "

" மேட்ச் முடிஞ்சப்புறம் போடுற Goals
எல்லாம் கணக்குல சேர்க்க மாட்டோம்.. "

" ஓ.. அதானா.. என்னடா தடுக்கறதுக்கு
ஒருத்தரை கூட காணோமே.. Atleast
Goal Keeper கூட இல்லையேன்னு
யோசிச்சேன்.. "

" மேடம்.. அப்படி கொஞ்சம் ஓரமா
போயி யோசிங்க.. Stadium-ஐ பூட்டணும்..!! "

karthikkumar said...

@ செல்வா
பின்ன VAS ல இருக்குறவங்கள அடிக்கறதுக்கு நீ இன்னும் வளரணும் ., ///

இன்னும் வளரனும்னா ஒரு 16 அடி வளந்தா போதுமா.. ஒருவேள 16 அடி ஓகேனா அப்போ VAS ல இருக்குறவங்க எல்லாம் 16 அடியா... அப்போ நீங்க நார்மலா மனுசங்க மாதிரி இருக்கமாட்டீங்களா... டவுட்டு

karthikkumar said...

அப்படின்னா பலிக்கூடத்துல புத்தகத்துல இருக்குறது எல்லாமே பொய்யா .?
இல்ல அத கூட நீங்க அப்படியே மனப்பாடம் தானே பண்ணுறீங்க அதுக்காக கேட்டேன் .! அடச்சே .. மறுபடியும் .. நீங்கதான் பள்ளிக்கூடம் போனதில்லையே !//
உண்மைதான் மச்சி ஏன்னா பள்ளிக்கூடம் மொக்க படமாம், அந்த படத்த பாத்த சில பேரு சொன்னாங்க... அதுனாலதான் நான் பள்ளிக்கூடம் போகல...