சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

29 September 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம்


நேத்து " வருத்தப்படாத வாலிபர் சங்கம் "
படம் போயிருந்தேன்...

டைம் போனதே தெரியல...
அவ்ளோ சூப்பர்..

ஆரம்பத்துல ஒரு 5 நிமிஷம் தான்...
அப்புறம் நான் ஸ்கிரீன்ல வெச்ச
கண்ணை எடுக்கவே இல்ல...

இண்டர்வெல் விட்டப்ப கூட
" உங்களை யார்ரா இப்ப இண்டர்வெல்
விட சொன்னதுனு " எந்திரிச்சி சவுண்ட்
விடலாமான்னு நினைச்சேன்...

அப்புறம் தியேட்டர்ல வேற கூட்டம்
நிறைய இருந்துச்சா.... வாசல் கேட் வேற
பூட்டி இருந்துச்சா.. அதனால வந்த
கோவத்தை கன்ட்ரோல் பண்ணிகிட்டேன்..
ஹி., ஹி., ஹி.....

இண்டர்வெல்க்கு அப்புறம் இன்னும் சூப்பர்...

ரெண்டு பாட்டு.. ஆஹா அழகோ.. அழகு...!!

சும்மா சொல்லக்கூடாது பாத்துட்டே
இருக்கலாம் போல இருந்துச்சு..

செம மாஸு.., செம க்ளாஸு..!!

அப்புறம்..
படம் கூட நல்லா இருந்துச்சின்னு
என் Wife சொன்னாங்க...

( "என்னது அப்ப இவ்ளோ நேரம் நான்
எதை பத்தி பேசிட்டு இருந்தேனா..?!! ")

ஹி., ஹி., ஹி...

அது...

ரெண்டரை மணி நேரம் நான் யாரை
மட்டுமே பாத்துட்டு இருந்தேனோ..
அவிங்கள பத்தி தான்...

இப்புடு சூடு..........

லதாபாண்டி ( ஸ்ரீதிவ்யா )

.
.

20 September 2013

மின்சார கனவு..!!


நேத்து நைட் எனக்கு ஒரு
கொடுமையான கனவு..

அந்த கனவு இதான்..

அது 10th Result வர்ற நாள்..
மணி அப்ப சரியா 9.10 AM

நான்.,மத்த Students கூட Result-க்காக
ஸ்கூல் வராண்டால Wait பண்ணிட்டு
இருக்கேன்..!

அப்ப எங்க ஸ்கூல் Correspondent
வேக வேகமா எங்களை பாத்து
வர்றாரு.. வந்து...

" இங்கே யாருப்பா வெங்கட்..? "

( எனக்கு பக்னு இருக்கு.. இவரு எதுக்கு
நம்மள கேக்கறாரு..? ஒருவேள நாம
மட்டும் தான் அவுட்டா..?!! )

" சார்ர்ர்... நான் தான் வெங்கட்..! "

" ஓ.. நீதானா அது..? Congrats..! "

" எதுக்கு சார்..?! "

" நீதான்பா State 1st.."

எனக்கு தூக்கி வாரி போட்டது..

" சார்.. என்ன சார் சொல்றீங்க..?
எதுக்கும் நல்லா பாருங்க சார்..! "

( நேத்து வரைக்கும் இவர் நல்லாதானே
இருந்தாரு..!?!! )

" 437854 - இது உன் நம்பர் தானே..?! "

" ஆமா சார்..! "

" அப்ப நீதான் State 1st.. உன் மார்க் 496..! "

( அடங்கொன்னியா... நாம மொத்தமாவே
அவ்ளோ மார்க்குக்கு எழுதி இருக்க
மாட்டோமே..! )

" நல்லா கூட்டி பார்க்க சொல்லுங்க
சார்..! "

" அதெல்லாம் நல்லா கூட்டி பார்த்து
தான்பா போட்டு இருப்பாங்க..! "

" சார்.. நீங்க என்னை வெச்சி காமெடி.,
கீமெடி பண்ணலையே..! "

" அட.. என் குலதெய்வம் மேல சத்தியமா
நீதான் State 1st..! "

" பாத்து சார்.. உங்க குலதெய்வத்துக்கு
எதாவது ஆயிடபோகுது..!! "

" அட.. நம்புப்பா..! "

எனக்கு செம குஷி ஆயிடுச்சு..

இதுவரைக்கும் கனவு நல்லா தான்
போயிட்டு இருந்தது..

அதுக்கு அப்புறம் அவர்கிட்ட நான்
ஒண்ணு சொன்னேன் பாருங்க...

" ஓ.கே சார்.. அப்படியே என் Wife-க்கு
போன் பண்ணி இந்த விஷயத்தை
நீங்களே சொல்லிடுங்க.. நான் சொன்னா
அவ நம்பமாட்டா..! "

ஹும்ம்ம்.... State 1st எடுத்ததுக்காக நான்
சந்தோஷப்படறதா..? இல்ல கல்யாணமாகி
இத்தனை வருஷம் கழிச்சு தான் 10th Pass
பண்ணியிருக்கேன்னு பீல் பண்றதா..?!

அவ்வ்வ்வ்..!
.
.

17 September 2013

என்ன தப்பு பண்ணினான் என் கட்சிக்காரன்..?!!
என் ப்ரெண்ட் கடையில நின்னு பேசிட்டு
இருக்கும் போது.. பக்கத்துல இருந்த
ஒருத்தரு அவர் பையனை சரமரியா
திட்டிட்டு இருந்தாரு...

ஒட்டு கேட்டதுல அவனுக்கு மார்க்
கம்மியா  போச்சாம்..

அதான் பிரச்னை...

அப்படி எவ்ளோ கம்மி மார்க்யா
எடுத்துட்டான் என் கட்சிக்காரன்னு
களத்துல குதிச்சேன்....

அவங்க அப்பாவை பாத்து...

" எத்தனை மார்க்ணே எடுத்து இருக்கான்..! "

" 465 மார்க்...! "

" ஏண்ணே இது போயி கம்மியா..?
நானெல்லாம் 442 மார்க் தான் எடுத்தேன்..
இப்ப என்ன கெட்டு போச்சி..! "

" அட நீ வேற தம்பி... நான் சொன்னது
+2 மார்க்கு...! "

" ஹி., ஹி., ஹி..... நான் சொன்னதும்
+2 மார்க் தான்ணே..! "

" ??!??!?!?!?!?! "
.
.

10 September 2013

டீ கடை பெஞ்ச்..!!" ராமன் ஆண்டாலும்.,
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்ல..!!! "

ஹி., ஹி., ஹி.. ஒண்ணுமில்ல
டீ குடிக்கலாம்னு கடைக்கு போனப்ப
அங்கே டிவில இந்த பாட்டு ஓடிட்டு
இருந்தது..

டீயை வாங்கிட்டு பாத்தா..
பக்கத்து பெஞ்ச்ல தெரிஞ்சவரு ஒருத்தரு...

அவரு எப்ப பாத்தாலும் கட்சி., கட்சின்னே
சுத்திட்டு இருப்பாரு.. கட்சி பொறுப்புல
எல்லாம் இருந்தாரு..

அப்படியே நைசா அவர்கிட்ட பேச்சு
குடுத்தேன்...

" வணக்கம்ணே..!! "

" வணக்கம் தம்பி..! நல்லா இருக்கியா..? "

"  நல்லா இருக்கேன்ணே.. ஆமா இப்பவும்
கட்சில பொறுப்பு எதாவது குடுத்து
இருக்காங்களா..? "

" இல்லப்பா..! " ரொம்ப பீலிங்கா சொன்னாரு...

" அப்ப பொறுப்பில்லாம சுத்திட்டு
இருக்கீங்கன்னு சொல்லுங்க "னு
சொன்னேன்..

இதுக்கு போயி மொறைக்கிறரு...!!
.
.

06 September 2013

சாட்ல ஒரு பொண்ணு...!!!சாட்ல ஒரு பொண்ணு... 

" ஏங்க உங்க தாத்தாவோட தாத்தா பேரு
தெரியுமா..? " 

" ஓ.. தெரியுமே.. பாலகிருஷ்ணன்..! "

" அவரோட அப்பா பேரு..? "

" வெங்கடாஜலபதி "

" சரி., அவரோட அப்பா பேரு..? "

" அது வந்து... வந்து.. ஆங்.. கந்தசாமி "

அந்த பொண்ணுக்கு ஆச்சரியம் தாங்கல..

" எப்படிங்க.. உங்களுக்கு இதெல்லாம்
தெரியுது..? "

" வெரி சிம்பிள்.. உங்களுக்கு தான்
அவங்க பேரு தெரியாதே..!! "

" ஙே...! "

நன்றி - காயத்ரி ,
Fan of மங்குனி அமைச்சர் ( ரொம்ப முக்கியம்.! )

.
.

04 September 2013

சென்னை பதிவர் திருவிழா " N " அலப்பறைகள் - (பைனல்ஸ்)

டிபன் சாப்பிடறதுக்காக நடந்து ஒவ்வொரு
ஹோட்டலா பாத்துட்டே வந்தோம்..
திடீர்னு ஒரு ஹோட்டலை பாத்ததும்
ஷாக் ஆகிட்டேன்..

அது...


" அச்சச்சோ... பேசிட்டே அடையார் வரை 
வந்துட்டோம் போல இருக்கே தேவா..! " 

" சார்.. அது ஹோட்டல் பேரு..! " 

" அப்படியா...? வடபழனில வந்து 
' அடையார் '-னு பேரு வெச்சி இருக்காங்க..
சுத்த லூசுப்பசங்களா இருப்பாங்களோ..?!! " 

இதை கேட்டு தேவா ஒருமாதிரி சிரிச்சாரு...
ஏன் அப்படி சிரிச்சாருன்னு தான் தெரியல..

அப்புறம் மீட்டிங் ஹாலுக்கு போனோம்..


அங்கே KRP செந்தில்., பிரபு கிருஷ்ணா, 
ப்ளாக்கர் நண்பன், ரஹீம் கஸாலி, 
கோவை நேரம் எல்லோரும் என்னை 
அடையாளம் கண்டுகிட்டு அன்பா பேசினாங்க..

ஆனா..... 

வந்தவங்களுக்கு Fanta குடுத்த 
" காணாமல் போன கனவுகள் " ராஜி 
மட்டும் எனக்கு பக்கத்தில் இருந்தவர் 
வரை குடுத்துட்டு அப்புறம் காணாம 
போயிட்டாங்க..

எனக்கு செம டென்ஷனா போச்சு.. 

அவங்களை தேடி பிடிச்சி.. 

" ஏங்க எனக்கு மட்டும் Fanta குடுக்கலை..! " 

" உங்களுக்கு ஏன் குடுக்கணும்..? நீங்க மட்டும் 
என் ப்ளாக்ல வந்து லைக்., கமெண்ட்டா 
போடறீங்க..? "

எனக்கு வந்துச்சே கோவம்..

அது ஒரு மொக்கை ப்ளாக் ( என் ப்ளாக்கே
பரவாயில்ல.. ) அதுல கமெண்ட் போட்டா தான் 
Fanta கிடைக்கும்னா.. நான் Coca Cola கம்பெனியவே 
இந்தியாவ விட்டு தள்ளி வெக்கிறேன்டா..

இதான்டா என்ர தீர்ப்பு..!!

மதியம் வரை நான் பயங்கர கோவத்துல 
தான் இருந்தேன்.. 

ஆனா லஞ்ச் டைம்ல பிரியாணி பரிமாறும் போது.. 
எல்லோருக்கும் ரெண்டு சிக்கன் பீஸ் வெச்ச 
கேபிள் சங்கர்... எனக்கு மட்டும் மூனு பீஸ் 
வெச்சாரா...

என் கோவம் பறந்து போச்சு...

ம்ம்.. நெக்ஸ்ட்...

பெரியவங்ககிட்ட மரியாதையா இருக்கோணும்னு 
என் சிஷ்யபுள்ள சிவசங்கருக்கு அட்வைஸ்
பண்ணியிருந்தேன்...

( குரு பேச்சை தட்டாத என் சிஷ்யன் 
சிறப்பு விருந்தினர் திரு.பாமரனுடன் )

டிஸ்கி 1 : அடையாளம் தெரியக்கூடாதுன்னு 
பன்னிக்குட்டி ராம்சாமி வேற பதிவர் பெயர்ல 
வந்திருந்தாரு.. அவரை யாருக்கும் அடையாளம் 
தெரியல.. 

டிஸ்கி 2 : மங்குனி அமைச்சரும் கூலிங்கிளாஸ் 
போட்டுட்டு , கன்னத்துல மச்சம் வெச்சிட்டு
மாறுவேஷத்துல வந்திருந்தாரு.. ஆனா 
அவரை எல்லோரும் மண்டப வாட்ச்மேன்னு 
நினைச்சிட்டாங்க..
.
.

03 September 2013

சென்னை பதிவர் திருவிழா " N " அலப்பறைகள் - 2
நேரா போயி AVM ஸ்டுடியோ வாசல்ல
இறங்கினோம்...

அங்கே பக்கத்துல இருந்த மரத்துல 
தொங்கிட்டு இருந்தது இந்த நோட்டீஸ்...

( நல்லவேளை இதையெல்லாம் பார்க்க 
வாலி இல்ல... )

Mr.A.R.முருகதாஸ்., Mr.கௌதம் மேனன் 
இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீங்க..
ரொம்பவே பீல் பண்ணுவீங்க.., அம்புட்டுதான் 
சொல்லுவேன்..

அப்புறம்.. 

" அப்படியே எதிர்ல இருக்குற சந்துல 
வாங்க.. அங்கே MAKAFI-னு ஒரு லாட்ஜ்ல 
ரூம் போட்டிருக்கு "-னு சொன்னாங்க.. 

நான் அங்கே இருந்த பீடா கடையில 

" அண்ணே... இது முட்டு சந்தா..? " 

" இல்லதம்பி... ஏன் கேக்கறீங்க..? " 

" ஒண்ணுமில்லண்ணே.., சும்மா 
கேட்டேன்..! "

( நான் எப்பவுமே இப்படித்தான் உஷாரா
இருப்பேன்.. )

அப்படியே லாட்ஜை கண்டுபிடிச்சி 
போனோம்..

அங்கே ப்ளாக்கர்ஸ் ஸ்கூல்பையன்,
கோகுல், குடந்தை சரவணன் , ஜோதிஜி
எல்லோரும் இருந்தாங்க.. 

அன்பா வரவேற்று பேசி.. 

" இந்த ரூம் எடுத்துக்கோங்கனு " ஒரு ரூம் 
காட்டினாங்க..

அங்கே ஏற்கனவே திண்டுக்கல் தனபாலன் 
இருந்தாரு... 

நான் அவர்கிட்ட போயி..

" ஹாய்.. ஐயம் கோகுலத்தில் சூரியன் 
வெங்கட் " -னு கை குடுத்தேன்...

ஒரு பிரபல ப்ளாக்கர் நம்ம ரூம்க்கு 
வந்து இருக்காரேன்னு நினைச்சாரோ 
என்னவோ என்னை பார்த்ததும்.. 

அவருக்கு கை, கால் எல்லாம் நடுங்கி 
வேர்த்து ஊத்த ஆரம்பிச்சிடுச்சு..

கர்சீப் எடுத்து துடைக்கிறாரு, துண்டு எடுத்து 
துடைக்கிறாரு.... வேர்வை ஆறா ஓடுது..

சரி நாமளே அவரை கூல் பண்ணலாம்னு.. 

" சார் நானும் ஒரு சாதாரண ப்ளாக்கர் 
தான் ( தன்னடக்கம்... ப்ளீஸ் நோட் திஸ் ) 
என்னை பாத்து ஏன் இப்படி டென்ஷனாகறீங்க..? " 

ஒரு தடவை என்னை மேலயும் கீழயும் 
பார்த்தாரு...

" ஏய் வெண்ணை.. கரண்ட் போயி Fan ஓடல...!! " 

( ஹி., ஹி., ஹி.. கொஞ்சம் ஓவராத்தான் 
போயிட்டோமோ..?!! ) 

( தொடரும்... )
.
.

02 September 2013

சென்னை பதிவர் திருவிழா " N " அலப்பறைகள் - 1

பதிவர் திருவிழால கலந்துக்க நானும்., 
சேலம் தேவாவும் சென்னை கிளம்பினோம்.. 

டிரைன் சென்னைக்கு காலைல 5 மணிக்கு 
ரீச் ஆகும்.. அங்கே போயி எப்படி போறதுன்னு 
எந்த டீடெய்லும் தெரியாது.. 

உடனே தேவா..

" இருங்க சார்.. சங்கவிக்கு போன் பண்ணி 
தர்றேன்னு " போன் போட்டு குடுத்தாரு..!! 

" ஹலோ நான் வெங்கட் பேசறேன்..! "

" சொல்லுங்க.. நான் சங்கவி பேசறேன்..! " 

" என்ன சங்கவி திடீர்னு ஆம்பள வாய்ஸ்ல 
பேசறீங்க..?? " 

" யோவ்.. நான் ப்ளாக்கர் சதீஷ் சங்கவியா..? " 

" ஹி., ஹி., ஹி.. நான் நடிகை சங்கவியோன்னு 
நெனச்சேன்... " 

" நெனப்பீரு..! "

( வாட்..?!! என் நம்பர் உங்ககிட்ட இல்லையா 
வெங்கட்..??!!! ) 

" சரி.. எங்களை பிக்-அப் பண்ண கார் எதுனா 
அரேஞ்ச் பண்ணியிருக்கீங்களா..? " 

" கார் என்ன பஸ்சே அரேஞ்ச் பண்ணியிருக்கோம்..! "

" என்னாது பஸ்ஸா..? " 

" ஆமா.. ஸ்டேஷனுக்கு வெளியே 17E-னு 
ஒரு பஸ் நிக்கும் ஏறி வந்துடுங்க.. டிப்ஸ் கேட்டா 
12 ரூபா மட்டும் குடுங்க போதும்..!! "

( ம்ம்ம்ம்.. நல்லா சொல்றாங்கய்யா டீடெயிலு...!! )

" சரி எங்கே வரணும்..? "

" AVM ஸ்டுடியோ ஸ்டாப்பிங்..!! " 

ஓ.. AVM ஸ்டுடியோ முன்னாடிதான் 
பளாக்கர்ஸ்க்கு ரூம் போட்டிருக்கீங்களா.??

அப்ப காலைல முதல் வேலையா 
தமன்னா., அனுஷ்கா, சமந்தா 
யாராச்சும் வர்றாங்களான்னு 
பார்க்கணும்..

வந்தா... உடனே ஓடி போய் ஒரு போட்டோ 
எடுத்துகிட்டு, நம்ம ஆட்டோகிராப் ஒன்னு 
போட்டு குடுத்துட்டு வந்திடணும்.... 

ஆங்ங்...!!
( ஹி., ஹி., ஹி... அடங்க மாட்டோமில்ல.. )

( தொடரும்..)

டிஸ்கி :  மீட்டிங்குக்கு சங்கவி வராங்கன்னு 
என்னை ஏமாற்றி சென்னை வரவழைத்த 
ப்ளாக்கர் சங்கவி இவர்தான்... 


ஏமாத்திட்டீர்ல.. போட்டோ சின்னதாதான் போடுவேன்..
.
.