சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

27 March 2014

யானைப்பால்..!!?நேத்து என் சிஷ்யபுள்ள சிவசங்கர்
போன் பண்ணியிருந்தான்...

" தல.. நாங்க ப்ரெண்ட்ஸா சேர்ந்து
புதுசா ஒரு பதிப்பகம் ஆரம்பிக்க
போறோம்..!! "

" குட்.. குட்... எப்படிடா இந்த ஐடியா
வந்துச்சு..? "

" எல்லாம் தங்களிடம் குடித்த
யானைப்பால் தான் குருவே..!! "

( ஹி., ஹி., ஹி...!!! என் சிஷ்யன்டா..!! )

" சரி.. என்ன திடீர்னு பதிப்பகம் எல்லாம்
ஆரம்பிக்கறீங்க..? "

" பதிவர்கள் நிறைய பேரு புத்தகம்
வெளியிடணும்னு ஆசைப்படறாங்க..
அவங்களுக்காக தான்...!! "

" ஏற்கனவே பதிவர்கள் ஒரு பதிப்பகம்
ஆரம்பிச்சி இருக்காங்களே.. தெரியாதா..?!! "

" தல... நீ அந்த அளவு எனக்கு யானைப்பால்
தரல..!! "

" டேய்.. அடங்குடா...!! "

" ஹி., ஹி., ஹி.. எங்க பிஸினஸ் டெவலப்
ஆகறதுக்கு உங்க சப்போர்ட் வேணும்..!! "

" புரியலையே..!!

" நீங்க எழுதின இலக்கியம், கவிதை,
மர்மக் கதை எல்லாம் ஒரு பிரிண்ட்
எடுத்து குடுங்க....!! "

" வாவ்.. சூப்பர்... அப்ப உங்க பதிப்பகத்தோட
முதல் புக் என்னோடதுதானா..?!! "

" இல்ல தல... அதை நான் ABHK பப்ளிகேஷன்ல
குடுத்து தான் போட போறேன்...!! "

" அதாரு..?!! "

" அவன் தான் தல எங்க எதிரி..!! அனேகமா
அதான் அவன் கடைசி புக்கா இருக்கும்..!! "

" அடேய்ய்....!! "

#  யானைப்பால் ஓவரா போச்சோ...!?!
.
.

14 March 2014

அலெக்சாண்டரின் குதிரை...!!!பையனை LKG அட்மிஷன் பண்ண
போனப்ப என் பொது அறிவை (?! )
சோதிச்சாங்க..

" Alexander குதிரை பேர் என்ன..? "

" தெரியாது..! "

" இது கூட தெரியலை., உங்க பையனை
எப்படி எங்க ஸ்கூல்ல சேர்த்தறது..?? "

" எங்க பக்கத்து வீட்டு நாய் பேர் தெரியுமா
உங்களுக்கு..? "

" தெரியாது.. "

" இந்த தெரியாதுக்கும்., அந்த தெரியாதுக்கும்
சரியா போச்சு.. இப்ப சேர்த்துக்கோங்க.. "

" ???!!!?? "

# ஹே.. யார்கிட்ட...
.
.

13 March 2014

கூல்.., கூல்.., கூல்...!!


நேத்து என் ப்ரெண்ட் அருண் எனக்கு
போன் பண்ணி...

வீட்டுக்கு ஒரு ப்ரிட்ஜ் எடுக்கணும்டா
கூட வர்றியானு கேட்டான்..

மொதல்ல வரலைனு சொல்லிட்டேன்.
ஆனாலும் மனசு கேக்கலை... அப்பறம்
வர்றேன்னுட்டேன்..

கெளம்பறப்பவே 30,000 ரூபாயை என்கிட்ட
குடுத்து வெச்சிக்கோனு சொல்லிட்டான்..

போறப்ப...

" அருணு.. இப்ப நான் எதுக்கு தெரியுமா
உங்கூட வரேன்..?!! "

" பிரிட்ஜ் வாங்கி குடுக்க...!! "

" ஹி., ஹி., ஹி,, அதான் இல்ல.. இப்பவே
மணி 12 ஆச்சு... எப்படியும் பிரியாணி
வாங்கிக்குடுப்பேல்ல..!! "

" ஓ... அப்படியா..?! அது சரி... நான் உன்னை
எதுக்கு கூட்டிட்டு போறேன் தெரியுமா..? "

" எதுக்கு..? "

" எலெக்ஷன் வர்றதால வழில போலீஸ் செக்கிங்
இருக்காம்.. Cash கொண்டு போறவங்களை
பிடிக்கறாங்களாம்..?!! "

" அடப்பாவி...!!!?? "
.
.

05 March 2014

ஆஹா.. என்ன ஒரு சிந்தனை..?!!!


இன்னிக்கு காலையில நான் தீவிரமான
சிந்தனையில இருந்தேன்..

அதை பாத்த என் Wife..

" என்னங்க யோசனை..? "

" புதுசா ஒரு பிஸினஸ் பண்ணலாம்னு..!! "

" அப்படியா சொல்லவே இல்ல.. "

" ஒரு 30 கோடி ரூபா Shortage-ஆ இருக்கு
அதான் எப்படி ரெடி பண்ணலாம்னு
யோசிச்சிட்டு இருக்கேன்..... "

" என்னாது 30 கோடியா..? ஆமா கோடிக்கு
எத்தனை சைபர்னு தெரியுமா உங்களுக்கு..? "

" ஹி., ஹி., ஹி... அதெல்லாம் ஆடிட்டர்
பாத்துப்பாரு.. "

" இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல..
சரி.. ஆமா அவ்ளோ பணத்தை வெச்சி
ஐயா என்ன பிஸினஸ் பண்ண போறிங்க..? "

" புதுசா ஒரு பவுடர் கம்பெனி ஆரம்பிக்க
போறேன்..! "

" என்னாது பவுடர் கம்பெனியா..? "

" ம்ம்ம்... இப்ப... நம்ம வீட்ல என்ன
பவுடர் யூஸ் பண்றோம்..? "

" கோகுல் சாண்டால் "

" ஆங்... பாத்தியா நம்ம சின்ன பையன் பேர்ல
ஒரு பவுடர் கம்பெனி இருக்கு... ஆனா
பெரிய பையன் பெயர்ல ஒரு கம்பெனி
இல்லையேன்னு......... ஒரே பீலிங்கா இருக்கு... "

" அதுக்கு..? "

" யார்ட்லி மாதிரி சூப்பரா ஒரு கம்பெனி
ஆரம்பிச்சி., அதுக்கு " சூர்யா பவுடர் "-னு
பெயர் வைக்க போறேன்..! "

" நான் ஒரு ஐடியா சொல்லவா..? "

" சொல்லு..! "

" பேசாம அவன் பெயரை யார்ட்லின்னு
மாத்திடுங்க.. செலவு மிச்சம்..! "

" ?!?!!?!? "
.
.

04 March 2014

இந்த பக்கம் நானு.. அந்த பக்கம்..?!!" ஏங்க நீங்க Fake Id தானே..!! "

" ஐய்யய்யோ... இல்லங்க... நான்
நிஜமாலுமே பொண்ணு தான்..! "

" எப்படிங்க நம்பறது..?! "

" இருங்க என் போட்டோ அனுப்பறேன்..!! "

( போட்டோ வருகிறது...!! அதில் ஒரு பெண்
சிரித்து கொண்டு இருக்கிறார்.. )

" இது யார் போட்டோங்க..?!! "

" ஏன்..? என் போட்டோ தான்..! "

" இப்படி எல்லாம் என்னை ஏமாத்த
முடியாது..?!! "

" அப்ப உங்க மொபைல் நம்பர் குடுங்க
கால் பண்றேன்..!! "

நம்பர் தரப்படுகிறது... உடனே காலும்
வருகிறது...

" ஹலோ...!!! " ( பெண்குரல் )

" ஹலோ..!! "

" இப்பவாச்சும் நான் பொண்ணுன்னு
நம்பறீங்களா..!? "

" ஐ.. உங்களுக்கு மிமிக்ரி கூட தெரியுமோ..?

" போய்யா யோவ்...!!! "

( கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ..!?!! )

டிஸ்கி : " நீங்க Fake Id-யானு " கேட்டா நிஜமான
பொண்ணுகளுக்கு கோவம் வரும்..!!
.
.