சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

29 September 2010

காணவில்லை..!!?
இடம் : London போலீஸ் Station.,
Time : 11.AM

ஒரு பொண்ணு ரொம்ப பீலிங்கா
போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்றா..
நேரா Inspector-கிட்ட போறா..

பெண் : சார்.., சார்., என் Husband-ஐ
காலையில இருந்து காணோம்..

இன்ஸ் : பதட்டப்படாதீங்க.. பொறுமையா
என்ன நடந்ததுன்னு சொல்லுங்க..

பெண் : காலையில 6 மணிக்கு ஜாக்கிங்
போனார் சார்., இன்னும் வீட்டுக்கு வரல..

இன்ஸ் : அவரோட பெயர் என்ன..?

பெண் : மைக்கேல்

இன்ஸ் : என்ன வயசு..?

பெண் : ம்ம்..42.. இல்ல.., 40...
இல்ல 41 வெச்சுக்கலாம்..

இன்ஸ் : சரி அவரோட போட்டோ இருக்கா..?

பெண் : வீட்ல இருக்கே.. வர்ற அவசரத்தில
எடுத்திட்டு வரலை..

இன்ஸ் : சரி.. அவர் Height என்ன..?

பெண் : Height-ஆ..? சரியா கவனிச்சது இல்ல..

இன்ஸ் : என்ன Weight இருப்பாரு..?

பெண் : ம்ம்.. Weight..!!?
ரொம்ப ஒல்லியும் இல்ல.,
ரொம்ப குண்டும் இல்ல., நடுத்தரமா இருப்பார்..?

இன்ஸ் : அவர் Hair கலர்..?

பெண் : Hair Colour-ஐ அடிக்கடி Change பண்ணிப்பார்.
இப்ப Recent-ஆ என்ன கலர் போட்டிருந்தார்னு
சரியா ஞாபகம் இல்லையே..

இன்ஸ் : என்ன Dress போட்டு இருந்தார்..

பெண் : சரியா தெரியல சார்..
அனேகமா ஜாக்கிங் போறப்ப போடுற
T-Shirt & Trouser தான் போட்டு இருப்பார்..

இன்ஸ் : சரி அவர் காணாம போனப்ப
அவர் கூட யாராவது இருந்தாங்களா..?

பெண் : ஆமாம் சார்.. கூட கெவின் இருந்தான்..

இன்ஸ் : அது யாரு கெவின்..?

பெண் : அது என் செல்ல Labrador நாய்குட்டி சார்.,
கருப்பு கலர்., ஒன்றை வயசு., உயரம் 30 Inches.,
சரியா குரைக்காது., ரொம்ப சாது.,
அது கழுத்துல ஒரு Golden Chain இருக்கும்,
அதுக்கு Non-Veg ரொம்ப பிடிக்கும்.,
நான் சாப்பாடு போட்டாத்தான் சாப்பிடும்..
அதோட வலது கால்ல ஒரு நகம்
உடைஞ்சி போயி இருக்கும்.,

இப்படி அழுதுட்டே அந்த பொண்ணு
சொல்லவும்..

இன்ஸ் : சரி ஒரு Complaint எழுதி
குடுத்துட்டு போங்க.. சீக்கிரமே
உங்க நாயை கண்டுபிடிச்சிடறோம்..

பெண் : அப்ப என் Husband..?

இன்ஸ் : மேடம்.., அவரு காணாமல்லா
போயிருக்க மாட்டார்.. அனேகமா
வீட்டை விட்டு ஓடி போயிருப்பார்னு
நினைக்கிறேன்....


டிஸ்கி : என்னதான் சொல்லுங்க..
Husband மேல அக்கறையா இருக்கறதுல
நம்ம பொண்ணுங்க மாதிரி இருக்க இந்த
English -கார பொண்ணுங்களால முடியாது..
.

.

33 Comments:

GSV said...

எந்த இங்கிலீஷ் கார பொண்ண பார்த்து வேன்னுனல்லும் இப்படி சொல்லலாம்.... அனா "மிஸ்.எமி" அதப்பா "சென்னை பட்டினத்துல" நடிச்ச நடிகை க்கு மட்டும் விதிவிலக்கு ன்னு சொல்லிடுங்க இல்லனா. வீட்டுக்கு ஒரு லாரி புள்ளா ஆள் அனுப்பிச்சி வெட்ட சொல்லுவேன்.

ப.செல்வக்குமார் said...

//சரி ஒரு Complaint எழுதி
குடுத்துட்டு போங்க.. சீக்கிரமே
உங்க நாயை கண்டுபிடிச்சிடறோம்..//

ஒரு வேளை நம்ம சிரிப்பு போலீசா இருப்பாரோ ..?!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// ப.செல்வக்குமார் said...

//சரி ஒரு Complaint எழுதி
குடுத்துட்டு போங்க.. சீக்கிரமே
உங்க நாயை கண்டுபிடிச்சிடறோம்..//

ஒரு வேளை நம்ம சிரிப்பு போலீசா இருப்பாரோ ..?!//

போலீஸ் னா எது காணாம போனாலும் கண்டுபிடிக்கணும்

ப.செல்வக்குமார் said...

///போலீஸ் னா எது காணாம போனாலும் கண்டுபிடிக்கணும்
//
ஓ ,அப்படியா ..? அப்படின்னா நான் தூங்கிட்டு இருக்கும் போது கனவுல ஒருத்தர் காணாம போய்ட்டார் , அவர கண்டுபிடிச்சு தருவீங்களா ..?

Madhavan said...

அதான் அல்லாத்தையும் சொல்லிப்புட்டீங்களே.. (டிஸ்கி உள்பட)
என்னாத்த, நா சொல்லுறது..?

என்னது நானு யாரா? said...

//என்னதான் சொல்லுங்க..
Husband மேல அக்கறையா இருக்கறதுல
நம்ம பொண்ணுங்க மாதிரி இருக்க இந்த
English -கார பொண்ணுங்களால முடியாது//

அப்படியாங்களா! எனக்கு தெரியாதுங்களேணா! பலரு சீரியல் நடுவில போடற விளம்பரங்கள் இடைவேலையில தான் புருஷன்காரங்களுக்கு சாப்பாடு போடறதா சொல்றாங்க. நடுவில தண்ணி வேணும்னு கேட்டா கூட அடுத்த இடைவேலை வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுங்கன்னு சொல்றாங்க

அதாகபட்டது! உலகத்தில பொண்ணுங்க எங்கேயும் ஒரே ரகம் தான் ஒரே தரம் தாம். தெரிஞ்சிக்கோங்க அண்ணா!

Prabu said...

/டிஸ்கி : என்னதான் சொல்லுங்க..
Husband மேல அக்கறையா இருக்கறதுல
நம்ம பொண்ணுங்க மாதிரி இருக்க இந்த
English -கார பொண்ணுங்களால முடியாது../

இந்த பதிவே உங்க ஹவுஸ் மினிஸ்டர ஐஸ் வைக்கத்தான் போல தெரியுதே!!!

அனு said...

இடம்: தமிழ்நாட்டு போலிஸ் ஸ்டேஷன்
நேரம்: காலை 11 மணி

ஒரு பொண்ணு ரொம்ப பீலிங்கா
போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்றாங்க..
நேரா Inspector-கிட்ட போறாங்க..

பெண் : சார்.., சார்., ஜாக்கிங் போன என் husband இன்னும் வீட்டுக்கு வரல..

இன்ஸ் : அவரோட பெயர் என்ன..?

பெண் : வெங்கட்..

இன்ஸ் : எப்போதிலிருந்து காணும்?

பெண் : சுமார் ஒரு மாசமா..

இன்ஸ் : ஒரு மாசமாவா? இவ்வளவு நாள் என்ன பண்ணிட்டு இருந்தீங்க??

பெண் : அவர் காணாமல் போனதைக் குடும்பத்தோட கொண்டாடிட்டு இருந்தோம் சார்..

இன்ஸ் : ஆஹா. இப்போ எதுக்கு Complaint குடுக்க வந்தீங்க??

பெண் : என்ன பண்றது? துணியெல்லாம் துவைக்காம அப்படியே கிடக்குது.. வேலைக்காரம்மா வேற நாளைல இருந்து லீவு..

இன்ஸ் : ???!!!

------------------------------

(டிஸ்கி for வெங்கட் மனைவி: என்னை மன்னிச்சிருங்க..)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//போலீஸ் னா எது காணாம போனாலும் கண்டுபிடிக்கணும்//

உங்க மூளை கானாம போய் ரொம்ப நாள் ஆச்சி அதை மட்டும் கண்டு பிடிக்க மாட்டறிங்க??

vaasagi said...

boss, idhukku Hugh Laurie photo dhana kedachudhu, House M.D serial hero-va paathadhum interesting matter-nu nenachen, emathiteengale venkat!

வெங்கட் said...

@ GSV.,

// எந்த இங்கிலீஷ் கார பொண்ண பார்த்து
வேன்னுனல்லும் இப்படி சொல்லலாம்....
அனா "மிஸ்.எமி" அதப்பா "சென்னை பட்டினத்துல"
நடிச்ச நடிகை க்கு மட்டும் விதிவிலக்கு ன்னு சொல்லிடுங்க //

நான் சொன்னது அவங்களுக்கு பொருந்தாது..
ஏன்னா அவங்க Miss.எமி தானே..
" Mrs " இல்லையே..

அப்பாடா.. எப்படியெல்லாம் சமாளிக்க
வேண்டி இருக்கு..!!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// போலீஸ் னா எது காணாம போனாலும்
கண்டுபிடிக்கணும் //

போலீஸ்., போலீஸ் எங்க வீட்ல
ஒரு எவர்சில்வட் பிளேட் காணோம்..

அது எங்க நாய்க்கு சாப்பாடு வெக்கிற பிளேட்..
அது இல்லாம எங்க நாய் சரியாவே
சாப்பிட மாட்டேங்குது..

அதை கண்டுபிடிச்சி குடுங்கன்னு
உங்ககிட்ட கேக்க மாட்டேன்.. ஏன்னா..
அதை தூக்கிட்டு போனதே
நீங்க தான்னு எனக்கு தெரியும்..

So.., திருப்பி குடுங்க.. ப்ளீஸ்..

இம்சைஅரசன் பாபு.. said...

//டிஸ்கி : என்னதான் சொல்லுங்க..
Husband மேல அக்கறையா இருக்கறதுல
நம்ம பொண்ணுங்க மாதிரி இருக்க இந்த
English -கார பொண்ணுங்களால முடியாது..//
உண்மை தான் வெங்கட் மணம் முடிந்தவர்களுக்கு தான் அது புரியும் .

வெங்கட் said...

@ மாதவன்.,

// அதான் அல்லாத்தையும் சொல்லிப்புட்டீங்களே..
(டிஸ்கி உள்பட) என்னாத்த, நா சொல்லுறது..? //

எதோ இங்கிலீஸ்கார பொண்ணை
கிண்டல் பண்ணின ஜோக்குங்கறதால
இந்த ஜோக் எழுதினவனை சும்மா விட்டேன்..

நம்ம பொண்ணுகளை இது மாதிரி
எதாவது கிண்டல் பண்ணியிருந்தான்
அவனை பிச்சி இருப்பேன்.. பிச்சி..!!

தப்பிச்சுக்கிட்டான்..!!

வெங்கட் said...

@ என்னது நானு யாரா.,

// அதாகபட்டது! உலகத்தில பொண்ணுங்க
எங்கேயும் ஒரே ரகம் தான் ஒரே தரம் தாம்.
தெரிஞ்சிக்கோங்க அண்ணா! //

இந்த ஜோக்ல வர்ற மாதிரி
கணவரோட Height., Weight, etc..
தெரியாம தான் நம்ம பொண்ணுங்க
இருப்பாங்கன்னு நினைச்சீங்கன்னா..

உங்க கருத்தை நான் மறுக்கிறேன்..

கணவரோட மீசை வழக்கத்தை விட
அரை Inch நீளமா இருந்தா கூட
நம்ம பொண்ணுங்க கண்டுபிடிச்சிடுவாங்க..

" என்னங்க இது ரவுடி மாதிரி..
முதல்ல அதை Cut பண்ணுங்க" ன்னு
சொல்லுவாங்க..

வெங்கட் said...

@ பிரபு.,

// இந்த பதிவே உங்க ஹவுஸ் மினிஸ்டர
ஐஸ் வைக்கத்தான் போல தெரியுதே!!! //

கில்லாடிங்க நீங்க..!!

அவ்ளோ நுணுக்கமா படிச்சி இருக்கீங்க..
Very Good..!!

வெங்கட் said...

@ அனு.,

// பெண் : சார்.., சார்., ஜாக்கிங் போன என்
Husband இன்னும் வீட்டுக்கு வரல..

இன்ஸ் : அவரோட பெயர் என்ன..?

பெண் : வெங்கட்.. //

இன்ஸ் : ஓ.. வெங்கட்டா..? நீங்க கவலைபடாம
வீட்டுக்கு போங்க.. அவரே வந்துடுவார்..

பெண் : என்ன சார் சொல்றீங்க..

இன்ஸ் : அனுவோட Husband வீட்டை விட்டு
ஓடிட்டாராம்.. அவரை தேடி கண்டுபிடிக்க தான்
போயிருக்காரு..

பெண் : அதுக்காக ஒரு மாசமா..?

இன்ஸ் : என்னம்மா பண்றது..?
அனு Husband இமயமலைகில்ல
ஓடி போயிட்டாரு..!!

------------------------------

(டிஸ்கி for அனு Husband என்னை மன்னிச்சிருங்க..)

வெங்கட் said...

@ டெரர்.,

// உங்க மூளை கானாம போய் ரொம்ப நாள் ஆச்சி
அதை மட்டும் கண்டு பிடிக்க மாட்டறிங்க?? //

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

ரெண்டு நாள் முன்னாடி மட்டும் ரமேஷ்க்கு
" மூளை " இருந்ததா என்பதை தெரிந்து கொள்ள
CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறேன்..

வெங்கட் said...

@ வாசகி.,

// boss, idhukku Hugh Laurie photo dhana kedachudhu,
House M.D serial hero-va paathadhum interesting matter-nu
nenachen, emathiteengale venkat //

Sorry-ங்க...!!
இவர் யார்னே சத்தியமா
எனக்கு தெரியாது..

கருப்பு நாயோட ஒருத்தர் ஜாக்கிங்
போற மாதிரி Photo தேடினப்ப..
இவர் Photo தான் எனக்கு பிடிச்சது..
வந்து மாட்டிகிட்டாரு..

சரி விடுங்க...
நம்ம Blog Posting-க்கு Model-ஆ
இருந்துட்டார்ல..
இனிமோ ரொம்ப Famous ஆயிடுவாரு..!!

ஹி., ஹி., ஹி..!!

Shalini(Me The First) said...

@வெங்கட்
//ரெண்டு நாள் முன்னாடி மட்டும் ரமேஷ்க்கு
" மூளை " இருந்ததா என்பதை தெரிந்து கொள்ள
CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறேன்..
//

இருந்துச்சாம் அவர் தட்டுல சமைத்த ஆட்டு மூளை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//@ ரமேஷ்.,

அதை கண்டுபிடிச்சி குடுங்கன்னு
உங்ககிட்ட கேக்க மாட்டேன்.. ஏன்னா..
அதை தூக்கிட்டு போனதே
நீங்க தான்னு எனக்கு தெரியும்..

So.., திருப்பி குடுங்க.. ப்ளீஸ்..///

கொடுத்த பொருளையும் ச்சீ எடுத்த பொருளையும் எடுத்த வாக்கையும் திருப்பி கொடுத்ததா என் சரித்திரத்துல இடமே இல்லை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// Shalini(Me The First) said...

@வெங்கட்
//ரெண்டு நாள் முன்னாடி மட்டும் ரமேஷ்க்கு
" மூளை " இருந்ததா என்பதை தெரிந்து கொள்ள
CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறேன்..
//

இருந்துச்சாம் அவர் தட்டுல சமைத்த ஆட்டு மூளை...//

நீங்க தட்டுல சமைப்பீங்களா? நாங்கெல்லாம் சட்டிலதான் சமைப்போம்.

மங்குனி அமைசர் said...

சரி , சரி உங்க வீட்டுக்காரமா நாய கண்டுபுடுச்சுட்டான்களா ?

Anonymous said...

@ வெங்கட்
//Husband மேல அக்கறையா இருக்கறதுல
நம்ம பொண்ணுங்க மாதிரி இருக்க இந்த
English -கார பொண்ணுங்களால முடியாது..//
அதுசரி..உங்க ஊரு பெண்கள் மாதிரி English -கார பொண்ணுங்க இல்லை எண்டது உங்களிற்கு எப்படித்தெரியும். நீங்கள் ஒரு நல்லவர், வல்லவர்.. நீங்கள் எப்பொழுதும் சொந்த அனுபவம் இல்லாமல் யாரையும் குற்றம் சொல்லமாட்டீர்கள் எனபது எல்லோருக்கும் தெரிந்தபடியால்தான் கேட்கிறேன்.

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// கொடுத்த பொருளையும் ச்சீ எடுத்த பொருளையும்
எடுத்த வாக்கையும் திருப்பி கொடுத்ததா
என் சரித்திரத்துல இடமே இல்லை.. //

இந்த கேவலமான விஷயத்துக்கு கூட
ஒரு சரித்திரம் இருக்குதுன்னா..
இனிமே நான் சரித்திரமே படிக்க போறதில்ல..

I Hate History..!!

// நீங்க தட்டுல சமைப்பீங்களா?
நாங்கெல்லாம் சட்டிலதான் சமைப்போம். //

ஓ.. அப்படியா..?!!
நாங்கல்லாம் Kitchen-ல தான் சமைப்போம்..!!

வெங்கட் said...

@ மங்குனி..,

// சரி , சரி உங்க வீட்டுக்காரமா நாய
கண்டுபுடுச்சுட்டான்களா..? //

ஹி., ஹி., ஹி..!!

எங்க வீட்டு நாய் காணாம போனா
எதுக்கு London போலீஸ் ஸ்டேஷன்ல
போயி Complait குடுக்கணும்..?!!

Shalini(Me The First) said...

@ramesh

//நீங்க தட்டுல சமைப்பீங்களா? நாங்கெல்லாம் சட்டிலதான் சமைப்போம்.
//
சமைக்கத்தெரியும் , துவைக்கத்தெரியும்னு சொன்னாப்ல, உங்களை கல்யாணம் பண்ணிக்க பொண்ணுங்க சரின்னுடுவாங்களா....?
நெவர் போலீஸ் நெவர் பொண்ணுங்க செம ப்ரில்லியண்ட்ஸ்

Shalini(Me The First) said...

@வெங்கட்
//இன்ஸ் : அனுவோட Husband வீட்டை விட்டு
ஓடிட்டாராம்.. அவரை தேடி கண்டுபிடிக்க தான்
போயிருக்காரு..

பெண் : அதுக்காக ஒரு மாசமா..?

இன்ஸ் : என்னம்மா பண்றது..?
அனு Husband இமயமலைகில்ல
ஓடி போயிட்டாரு..!!

//

இடம்: இமயமலை

வெங்கட்: நீங்க தானே அனுவோட ஹஸ்பண்ட்? பாவங்க அனு , நீங்க இல்லாம உடைஞ்சுபோய்ட்டாங்க. வாங்க வீட்டுக்கு போகலாம்

அனுஹஸ்பண்ட்: ஏன்? ஏன்? வீட்ல உடைக்க ஒன்னுமில்லைன்னு என்னை உடைக்கவா?போய்யா போ

வெங்கட் said...

@ பாரதி.,

// உங்க ஊரு பெண்கள் மாதிரி English -கார
பொண்ணுங்க இல்லை எண்டது உங்களிற்கு
எப்படித் தெரியும்.? நீங்கள் ஒரு நல்லவர், வல்லவர்..
நீங்கள் எப்பொழுதும் சொந்த அனுபவம் இல்லாமல்
யாரையும் குற்றம் சொல்லமாட்டீர்கள் //

" மாடியில இருந்து குதிச்சா
கை., கால் உடைஞ்சி போயிடும்.. "

இதை மாடியில இருந்து குதிச்சி
கை., கால் உடைச்சிக்கிட்டவன் தான்
சொல்லணுமா..?!!

வேடிக்கை பார்த்தவன் சொல்ல கூடாதா.?!!

அதுமாதிரிதான் இதெல்லாம்
கேள்வி ஞானம்பா., கேள்வி ஞானம்..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இடம் போலீஸ் ஸ்டேஷன்:

சூர்யா(வெங்கட்டின் மகன்): சார் எங்கப்பாவ காணோம்.
போலீஸ்: சரி இப்ப கண்டு பிடிச்சு தரணுமா?
சூர்யா: வேணாம் சார். வந்தா தீயா இருக்கணும்னு படிக்க சொல்லி உயிரை எடுப்பாரு.
போலீஸ்: அப்ப நான் என்ன பண்ணனும்?
சூர்யா: போகும்போது சூரியனை தேடணும்னு டார்ச் எடுத்துட்டு போயிட்டாரு. நம்ம ஊர்லதான் கரண்ட் பாதி நேரம் இருக்க மாட்டேன்குது. இருட்டுல ரொம்ப கஷ்டமா இருக்கு. தயவு செய்து டார்ச்ச மட்டும் கண்டு பிடிச்சு கொடுத்துடுங்க சார்.ப்ளீஸ்.

ராஜி said...

பெண்களை கிண்டல் அடிக்காமல் ஒருஜோக்சொல்ல முடியாதா?என் ப்ளாக் raajiynkanavugal.blogspot.com ஒரு முறை வந்து செல்லவும்.
நன்றி

வெங்கட் said...

@ ராஜி.,

// பெண்களை கிண்டல் அடிக்காமல்
ஒரு ஜோக் சொல்ல முடியாதா?//

அவ்ளோதானே..!!
சொல்லிட்டா போச்சு..!!

// என் ப்ளாக் raajiynkanavugal.blogspot.com
ஒரு முறை வந்து செல்லவும். //

இது Open ஆகலைங்க..
Spelling எதாவது தப்பா இருக்கான்னு
Check பண்ணுங்க..

Anonymous said...

@வெங்கட்
// மாடியில இருந்து குதிச்சா
கை., கால் உடைஞ்சி போயிடும்.. "

இதை மாடியில இருந்து குதிச்சி
கை., கால் உடைச்சிக்கிட்டவன் தான்
சொல்லணுமா..?!!எனக்கென்னமோ உங்களுடய பதில் வேறமாதிரி புரியுது.
பதிவில் உங்கள் வீட்டுக்காரஅம்மாவை புகழ்ந்து எழுதீட்டு
Comment இல் மிரட்டல் விடுகிற மாதிரி இருக்கு.அது சரி
உங்கள் வீடு எத்தனைமாடி வீடு? குதிச்சா கை கால் மட்டுமா உடையும்?