சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

27 February 2012

குறுக்குவழி Vs ஷார்ட் கட்..!

அப்ப என் பையன் 2nd Std
படிச்சிட்டு இருந்தான்..

அவனுக்கு Quarterly Exams
நடந்துட்டு இருந்தது..

அடுத்த நாள் SOCIAL Exam.
அதுக்கு சொல்லி குடுக்க
சொல்லி என்கிட்ட வந்தான்.

" ஆண்டவா என் பையனை நீதான்
காப்பாத்தணும்னு " வேண்டிகிட்டு
பாடத்தை சொல்லி குடுத்துட்டு
இருந்தேன்..!

அதுல ஒரு கேள்வி..

" Which Animal is called as
Ship of the Desert..? "

Ans : CAMEL

இந்த " CAMEL " ங்குற வார்த்தை
அவனுக்கு தகராறாவே இருந்தது..
" டக்னு " ஞாபகம் வராம தடுமாறினான்..

உடனே எனக்கு ஒரு யோசனை..
இதுக்கு ஒரு ஷார்ட் - கட் சொல்லி
குடுத்தா என்னான்னு..

( Camel-க்கு எல்லாமா ஷார்ட் கட்டானு
தானே யோசிக்கறீங்க..?

ஹி., ஹி., ஹி... நாங்கல்லாம் படிக்கிற
காலத்துல எலி போட்டுக்குற Pant = Elephant-னு
ஷார்ட் கட்ல படிச்சவங்களாக்கும்..!!! )


உடனே அவனை கடைக்கு கூட்டிட்டு
போயி ஒரு Camlin பென்சில் வாங்கி
குடுத்தேன்..

அதுல சின்னதா ஒரு ஒட்டகம் படம்
போட்டு இருக்கும்.. அதை காட்டி...

" ஒரு வேளை அந்த கேள்விக்கு உனக்கு
Answer தெரியலைன்னா.. இந்த பென்சிலை
திருப்பி பாரு.. ஞாபகம் வந்துடும்னு "
சொன்னேன்..!

அவனும் சந்தோஷமா தலையை ஆட்டினான்.

அடுத்த நாள் : காலை 9.30 மணி

டிபன் சாப்பிடும் போது தான் பார்த்தேன்..
நான் வாங்கி குடுத்த அந்த Camlin பென்சில்
டேபிள் மேலயே இருந்தது..

எனக்கு " பக்னு " ஆகிடுச்சு

என் Wife-ஐ பாத்து கேட்டேன்..

" அவன் பென்சிலை மறந்துட்டு
போயிட்டானா..? "

" இல்லங்க.. இந்த பென்சில் லைட்டா
எழுதுதுன்னு சொன்னான்... அதான்
Apsara பென்சில் குடுத்து இருக்கேன்..! "

( ஐயையோ அப்ப Ship of Desert கேள்விக்கு
" Apsara "னு எழுதி வைப்பானோ..?! அவ்வ்வ்..! )

நேத்து நடந்த Short-Cut மேட்டரை
என் Wife கிட்ட சொன்னேன்..

" ஏங்க உங்க குறுக்கு புத்தியை
அவனுக்கும் கத்து தர்றீங்க..? "

" நோ குறுக்கு புத்தி., இது Short-Cut..! "

" ம்ம்ம்..! இன்னிக்கு மட்டும் அவன்
தப்பா பதில் எழுதிட்டு வரட்டும்.. அப்ப
இருக்குது உங்களுக்கு..!! "

Evening ஸ்கூல்ல இருந்து வந்ததும்.,
அவன் Question Paper-ஐ வாங்கி பாத்தா..
அந்த பாழாப்போன கேள்வி இருந்தது..

அவனை கேட்டேன்...

" டேய். அம்மா உனக்கு வேற பென்சில்
குடுத்துட்டாங்களே.. இதுக்கு எப்படிடா
பதில் எழுதின..? "

" அதனால என்னப்பா..? எனக்கு தான்
Answer நல்லா மனப்பாடம் ஆகிடுச்சே..! "

( அப்பாடா.. தப்பிச்சேன்டா..! )

" சரி என்ன பதில் எழுதின..? "

" CAMLIN "

" ?!!?!?? "

----------------------------------------------------------------


டிஸ்கி : என் மகன் ( சூர்யா வெங்கடப்பன் )
ஸ்கூல் சுதந்திர தின விழால ஸ்டேஜ்ல
பேசின " கலக்கல் " வீடியோ பார்க்க.. க்ளிக்.
.

.

13 February 2012

" பவர் கட் " ஸ்பெஷல்..!!

டிஸ்கி : Fan ஓடாத ( UPS Down ) ஒரு ராத்திரி
வேளையில் , மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ,
கொசுவோடு கபடி விளையாடிட்டு
இருக்கும் போது என் சிந்தனையில்
குதிச்சது..





10 மணி நேரம் கரண்ட் இல்லையேன்னு பீல் பண்றதை
விட்டுட்டு.. 14 மணி நேரம் கரண்ட் இருக்கேன்னு
நினைச்சி சந்தோஷப்படணும் # பவர்கட் தத்ஸ்


இலவச கிரைண்டர், மிக்ஸி எல்லாம் வேண்டாம்..
வீட்டுக்கு ஒரு UPS குடுங்கப்பா.. புண்ணியமா போகும்..!


அறிஞர் அண்ணா தெரு விளக்கு வெளிச்சத்தில தான்
படிச்சாராம். கொடுத்து வெச்சவரு. நம்ம புள்ளங்களுக்கு
இப்ப அதுக்கு கூட வழியில்லையே..!


" நாங்கல்லாம் அந்த காலத்துல.. " " அட., கொஞ்சம்
கம்முன்னு இருங்க தாத்தா. நாங்களும் இப்ப
அந்த காலத்துல தான் இருக்கோம் " # 10 மணி நேர பவர்கட்


" பவர் கட் " - முன்னே ஆற்காட்டாரை திட்டினாங்க,
இப்ப ஜெ.வை திட்றாங்க. நல்லவேளை இலவசத்துக்கு
ஆசைப்பட்டு ஓட்டு போட்ட நம்மள யாரும் திட்டலை.!


தினமும் குறிப்பிட்ட டைம்ல கரண்ட் கட் - கலைஞர் ஆட்சி.,
எப்ப வேணாலும் கரண்ட் கட் - அம்மா ஆட்சி # வெளங்கிரும்.!


தமிழ்நாட்ல கரண்ட் பில்லை ஆன்லைன்ல கட்டலாம்.,
ஆனா கம்பியூட்டர் " ON " செய்ய கரண்ட் இல்ல.!
# என்ன கொடுமை சார் இது.?


ஒவ்வொரு தடவையும் ஓட்டை மாத்தி போட்டு
" யாரை விட யார் மோசம்"-னு நாம தெரிஞ்சிக்கிறோம்.!


பின் டிஸ்கி :

Power Cut-னால என்னென்ன
நல்ல விஷயங்கள் இருக்கு..
படிக்க க்ளிக்...
.
.

06 February 2012

சிங்கத்தை சிரிக்க சொல்லி....

நாங்க ஏற்காடு போனப்ப..
அங்கே இருக்குற Forest-ஐ சுத்தி
பார்க்கலாம்னு ஆசையா போனா

அங்கே ஒரு போர்டு வெச்சி இருந்தது..

" அபாயம்..! காட்டு விலங்குகள்
நடமாடும் பகுதி "

அதை பாத்ததும் என் Wife..

" வேணாங்க.. ரிஸ்க் எடுக்காதீங்க..! "

" ஹேய்...நாங்கல்லாம் புலிக்கு பக்கத்துல
உக்காந்து புல் மீல்ஸ் சாப்பிடறவிங்க..! "

" பாத்துங்க.. அந்த புலிக்கும் உங்களை
பாத்ததும் மீல்ஸ் சாப்பிட ஆசை வந்துட
போகுது..!? "

" இப்படி சொன்னா.. நாங்க பயந்துடுவோமா..?!! "

" இல்லையா பின்ன..?!! "

" நோ சான்ஸ்.! "

" சரி.., திடீர்னு நம்ம முன்னாடி ஒரு
சிங்கம் வந்துட்டா.. அப்ப என்ன
பண்ணுவீங்க..?! "

" சிங்கத்தை சிரிக்க சொல்லி ஒரு
போட்டோ எடுப்பேன்..! "


" அப்ப நிஜமாவே சிங்கம், புலியை
எல்லாம் நேருக்கு நேரா பாத்தா
பயப்பட மாட்டீங்க..?! "

" நமக்கு எப்ப கல்யாணம் ஆச்சோ..
அப்ப இருந்தே அதுக்கெல்லாம்
நான் பயப்படறது இல்ல..! "

" என்னா சொன்னீங்க... கிர்ர்ர்ர்ர்...."
( ஐயோ.. புலி மாதிரியே உறுமறாளே...! )

" கூல்.. கூல்... கல்யாணத்துக்கு அப்புறம்
நீ என்னை மாவீரனா மாத்திட்டேன்னு
சொல்ல வந்தேன்..! "

" ம்ம்.. அந்த பயம் இருக்கணும்..! "

( உஸ்ஸப்பா.. உசுரை காப்பாத்திக்க
எப்படி எல்லாம் டிரிக்ஸ் பண்ண
வேண்டி இருக்கு..!! )

-----------------------------------------------------------------------------

" நன்றி.., நன்றி.. நன்றி..! "

எதுக்கு இப்ப " நன்றி " னு பார்க்கறீங்களா..?!!

எப்படியும் கீழே இருக்குற மேட்டரை
படிச்சிட்டு நீங்கல்லாம் எனக்கு வாழ்த்து
சொல்ல போறீங்க...

அதான் அட்வான்சா இருக்கட்டுமேன்னு....
ஹி., ஹி., ஹி...

இந்த வார " என் விகடன் "ல ( 8.2.2012 )
நான் எடுத்த போட்டோ ஒண்ணு
பிரசுரமாகி இருக்கு...






































( கரடியை வீரவேசத்துடன் அடக்க துடிக்கும்
என் குட்டி பையன் கோகுல்.! )
.
.