சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

29 March 2011

பிரபலமானா.., Problem போல..!?!
























எங்க ஊர்ல நாளைல இருந்து
ஒரு வாரத்துக்கு திருவிழா..!
ஊரே களைகட்டும்..!

ஆனா என்னை மட்டும்
ஒரு நிமிஷம் கூட Free-ஆ
இருக்க விட மாட்டாங்க..

மாரியம்மன் கோவில்ல பூர்ண கும்பம்.,
காளியம்மன் கோவில்ல முதல் மரியாதை.,
சௌண்டம்மன் கோவில்ல பரிவட்டம்னு
எல்லாமே உங்களுக்கு தான்னு
3 கோவில்காரங்களும் ஒரே அன்பு தொல்லை..

இது மட்டுமா..

திருவிழால 2வது நாள் தேரோட்டம்
நடக்கும்..

அப்ப நான் தான் தேர்ச் சங்கிலியை
தொட்டு கும்பிட்டு.., தேர் ஓட்டத்தை
துவக்கி வைக்கணும்..!!

இதை வேடிக்கை பார்க்க..,
சுத்து பத்து 18 பட்டியில இருந்தும்
மக்கள் வருவாங்க..

இவ்ளோ ஏன்.. போன வருஷம்
சேலம் கலெக்டரும்.,எம்.எல்.ஏ வுமே
வந்தாங்கன்னா பாருங்களேன்..!!

சரி., இதை விடுங்க..,
இது திருவிழா பிரச்சினை
சிம்பிள் மேட்டரு.. சரி பண்ணிக்கலாம்..

அட அரசியல் மேட்டரெல்லாம்
நம்மகிட்ட வருதுப்பா..

நாம என்ன ஆளுங்கட்சியா.?
எதிர்கட்சியா.? இல்ல
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி தான்
தாவறோமா..?

அரசியல் பத்தியெல்லாம் நாம எதுக்கு
பேசணும்னு ஒதுங்கி இருந்தாலும்
நம்மள விட மாட்டேங்குறாங்க..

" VAS ஆதரவு எங்களுக்கு வேணும்.,
எங்களுக்கு வேணும்னு" போன்ல
டார்ச்சர் பண்றாங்க.,

வீட்டுக்கும் வந்து..
" Atleast எங்களுக்காக வாய்ஸாவது
குடுங்கன்னு " கெஞ்சறாங்க..

( " வாய்ஸ் குடுக்க " நாங்க என்ன
டப்பிங் கம்பெனியா வெச்சு
நடத்திட்டு இருக்கோம்..?! )

ஆங்.. சொல்ல மறந்துட்டேனே..
தலைவர் கார்த்திக் கூட VKS-தலைவியை
சந்திச்சு அவர் கட்சிக்கு ஆதரவு கேட்டதா..
ஒரு ரகசிய தகவல்..

சரி.,சரி., சம பலம் பொருந்திய
ரெண்டு மொக்கை கட்சியும் ஒண்ணு சேருது
இதுல என்ன பெரிய ஆச்சரியம்..?

ம்ம்.. இப்ப நாம மேட்டர்க்கு வருவோம்..

இதன் மூலம் 7 கோடி VAS அன்பர்களுக்கும்
நான் சொல்லிக்கிறது என்னான்னா..

" நம்ம கட்சியில எந்த வித கட்டுப்பாடும்
இல்ல..!! வர்ற Election-ல உங்களுக்கு
பிடிச்ச கட்சிக்கு நீங்க ஓட்டு போடுங்க..
ஓ.கே.வா.?! "

" சிங்கம்.., சிங்கம்.. நீ துரை சிங்கம்.."
( ஒண்ணுமில்ல.., என் மொபைல்
Ring ஆகுது..!! )

" ஹலோ..!! யார் பேசறது..?
ஓ.. ஓபுவா..( ஹி., ஹி., நான் ஓபாமாவ
எப்பவும் அப்படி தான் கூப்பிடுவேன்..)

என்னாது... அடுத்த அமெரிக்க ஜனாதிபதி
Election-ல உங்களுக்கு Support பண்ணி
நான் வாய்ஸ் குடுக்கணுமா..?

உஸ்ஸப்பா.........!! "

டிஸ்கி : ஊர்ல திருவிழா..
So., அடுத்த பதிவு @ 6.4.2011.

.
.

25 March 2011

வாம்மா.. மின்னல்.......!!























என் Friend ஜெகன் வீடு..

நானும்., ஜெகனும் பேசிட்டு
இருந்தோம்.

அங்கே டேபிள் மேல
ஒரு Science Magazine இருந்தது..

அதை பாத்ததும் எனக்கு டென்ஷனா
போச்சு.. நான் ஜெகனை பாத்து...

" துரோகி.. இதெல்லாமா நீ படிக்கிற..?
இன்னியோட நம்ம Friendship கட்.. "

" அண்ணா.. அது என்னோடது.. "
- இது ஜெகனின் தங்கை கவிதா..

" வெங்கட்.. இந்த அரை வேக்காட்டு
Book-ஐ படிச்சிட்டு இவ NASA Scientist
Range-க்கு பண்ற பந்தா இருக்கே....
உஸ்ஸப்பா முடியலடா..! "

கவிதாவுக்கு செம கோவம்..

" டேய்.. நானா பந்தா பண்றேன்..?!
உன் மரமண்டைக்கு இந்த Book-ல
இருக்குறது புரியலன்னு சொல்லு.. "

" டேய் ஜெகா.. எனக்கென்னமோ
உன் தங்கச்சி உன்னை விட
புத்திசாலின்னு தோணுது. "

( சண்டை நடக்கும் போது நாம சும்மா
இருக்க கூடாது., இப்படிதான் எதாவது
கோத்து விடணும்.. அப்ப தான் Interesting-ஆ
இருக்கும்.. ஹி.,ஹி.,ஹி..! )

" புரியாம பேசாதடா.. நீயே இந்த Article-ஐ
பாரு.. இந்த Book லட்சணம் என்னான்னு
அப்ப உனக்கு தெரியும்.. "

அந்த Article-ல இருந்து..

மழை பெய்யும் போது., ஒரு பஸ் மேல
கரெண்ட் கம்பி கட் ஆகி விழுந்தா..
பஸ்ஸுக்குள்ள இருக்கறவங்களுக்கு
ஷாக் அடிக்கும்..!!

" கரெக்ட்டுதானே..! ஷாக் அடிக்கும்ல.!! "

" டேய்.. பஸ் டயர் ரப்பர்டா.. அப்புறம்
எப்படிடா ஷாக் அடிக்கும்..? " ( இது சரி..! )

" அண்ணா.. டயர்தான் மழையில் நனைஞ்சி
ஈரமா இருக்குல்ல.. அப்ப ஷாக் அடிக்கும்ல..!
( அட இதுவும் சரி மாதிரி தெரியுது..!?! )

" டேய்.., நம்ம Physics மாஸ்டர்
என்னடா சொன்னாரு..? "

" நம்ம Physics மாஸ்ட்ரா..? அவரு
என்கிட்ட ஒண்ணும் சொல்லலையே..?!! "

' டேய்..Rubber is a Bad Conductor ' -ன்னு
சொல்லி குடுத்து இருக்கார்ல."

( இதெல்லாமா சொல்லி குடுத்தாரு..?!! )

" ஆமா., ஆமா அப்படி தான் சொல்லி
குடுத்தாரு..! "

" என்னண்ணா நீங்க..? அவன் தான்
அறிவில்லாம உளர்றான்னா..,
நீங்களுமா.? "

" ஹி., ஹி., ஹி..!! ரொம்ப Thanks மா.. ! "

" எதுக்குண்ணா Thanks.? "

" இவ்ளோ நாளா எனக்கு அறிவு
இருக்குன்னு நினைச்சிட்டு இருந்த
பாரு அதுக்கு..!! "

" விளையாடாதீங்கண்ணா.. Correct-ஆ
சொல்லுங்க Rubber Semi Conductor-ஆ.?
Bad Conductor-ஆ.? "

" அதெல்லாம் எனக்கு தெரியாதுமா..
எனக்கு தெரிஞ்ச ஒரே Conductor
என் Friend பழனிசாமி தான்..

அவன் ஒரு Good Conductor..!! "

அதுக்கு அப்புறம் கவிதா எங்களை
திட்டிட்டே உள்ளே போனதெல்லாம்
இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாதவை..

ஹி., ஹி., ஹி..!!
.
.

23 March 2011

" உலக கோப்பை சவால் - 2 " - Points Table

சொன்ன மாதிரியே இந்தியா கப்பை
ஜெயிச்சாச்சு..!

இந்த போட்டி Result Comment-ல இருக்கு.
போயி பார்த்துக்கோங்க..!!  

Enjoy.......!!!!!

" உலக கோப்பை சவால் -2 " - பரிசு போட்டி..! 
Point's Table : 

After Match No. 7

Soundar
2

       Animaa
1
Vaigai
9

      Jeeva Bala
5
Srivatsan
2

      Aananda
7
Rajagopal
7
      S.K
10
Jey
7

      The Boss
4
Arun Prasath
5

      Bharathy
1
Naveen Kumar
7

      Sirpi
5
P.S.V
10

      Akbhar
10
Thuninthu Solbavan
9

      Aru (Su) vai-raj
10
Zero to Infinity
1

      Dhayalan
6
Bala 
10

      Rajan Leaks
5
Ashok Kumar
7

      Royal Ranger
7
Prabhu
7

      Uma
12
Subo
8

      Pranav
10
T-Mart
5

     Jana
6
Sitaraman
10

     Sasi
4
Shamhitha
4

     Rasigan
10
Visvam Tech  
10

     Sabapathi
7
Johny 
7

     Nedun
7
Vanthiyadevan
2

     Vetrivel
2
Aadava
10

     Karikalan
5
Sen 22
7

     Anu
4
Madavan .S
5

    Selva
5



    Venkat
7

Match Result :

 1. Pak
 2. Ind
 3. N.Z
 4. Sri

 5. Sri
 6. Ind

 7. Ind                  
.
.

21 March 2011

" உலக கோப்பை சவால் " பரிசு போட்டி - 2

அப்பாடி.! VAS & VKS இணைந்து நடத்துன
" உலக கோப்பை சவால் பரிசு போட்டி "
நல்லபடியா நடந்து முடிஞ்சது.
ரொம்ப சந்தோஷம்..!

இதுல கலந்துகிட்ட VKS Members
யாருமே பரிசு வாங்கலை.
அது Extra சந்தோஷம்.!!


















படம் : எஸ்.கே

1st Prize பெற்ற Pranav &
2nd Prize பெற்ற Sasi & T-Mart
ஆகியோருக்கு வாழ்த்துக்கள்..

Pranav-க்கு Rs 500 மதிப்புள்ள புத்தகமும்.,
Sasi & T-Mart-க்கு தலா Rs 250 மதிப்புள்ள
புத்தகமும் அனுப்பி வைக்கப்படும்.

மற்றும் போட்டியில ஆர்வமா
கலந்துகிட்ட 52 பேருக்கும் நன்றி..!

ஓ.கே..! நாம இப்ப அடுத்த போட்டிக்கு
போலாமா..?

QF, SF & Final-ல யார் Win பண்ணுவான்னு
நீங்க கணிச்சு எங்களுக்கு கமெண்ட்ல
போடணும். கூடவே ஒரு Tie Break கேள்விக்கும்
பதில் சொல்லணும்..

* Semi Final-க்கு இரண்டு விதமான
அட்டவணை இருக்கு.. எது சரின்னு
தெரியல. ஒரே குழப்பமாக இருக்கு..!

So., நாம் இரண்டு அட்டவணைப்படியும்
கணிப்பு சொல்வோம். எந்த அட்டவணை
படி போட்டி நடக்கிறதோ. அதை நாம்
இந்த போட்டிக்கு வெச்சுக்கலாம்..!!

நண்பர்களே..! Kindly Adjust

Quarter Final :

1. Mar 23 - Pakistan Vs West Indies

2. Mar 24 - India Vs Australia

3. Mar 25 - New Zealand Vs South Africa

4. Mar 26 - Sri Lanka Vs England


Semi Final A :

5 A. Mar 29 - 1st QF Winner Vs 3rd QF Winner

6 A. Mar 30 - 2nd QF Winner Vs 4th QF Winner

Final A:

7 A. April 2 - 5 A SF Winner Vs 6 A SF Winner


Semi Final B :

5 B. Mar 29 - 3rd QF Winner Vs 4th QF Winner

6 B. Mar 30 - 1st QF Winner Vs 2nd QF Winner


Final B :

7 B. April 2 - 5 B SF Winner Vs 6 B SF Winner

Tie Break கேள்வி : Final-ல ஜெயிக்கிற டீம்
அடிக்க போகும் ரன் எத்தனை.?


நிறைய பேர் சமமான Points எடுக்கும்
பட்சத்தில் மட்டுமே இந்த Tie Break பதிலை
வெச்சு யார் Nearest-ஆ ரன் சொல்லி
இருக்காங்கன்னு பாத்து Winners-ஐ
முடிவு பண்ணுவோம்.!

For Eg : Final-ல் ஜெயிக்கும் அணி 300 ரன்
எடுத்தா.. 305 ரன் என்று குறிப்பிட்டவரும்.,
295 ரன் என்று குறிப்பிட்டவரும் ஒன்று தான்.

விதிமுறைகள் :

1.Quarter Finals-ல் ஒரு சரியான விடைக்கு
One Point. நான்கு விடைகளும் சரியாக
இருந்தால் Extra ஒரு Bonus Point ( 4+1).

2.Semi Finals-ல் ஒரு சரியான விடைக்கு
Two Points. இரண்டு விடைகளும் சரியாக
இருந்தால் Extra ஒரு Bonus Point ( 4+1).

3. Final-ல் சரியான விடைக்கு Two Points.
So., மொத்தம் ( 5+5+2 = 12 Points )

4. அதிக Points எடுத்தவர் Winner.
அவருக்கு Rs 2250 மதிப்புள்ள பரிசு
VAS & VKS சார்பா வழங்கப்படும்...!!

( Rs 1000 Sponsor பண்ணின
நண்பன் ஜனாவுக்கு நன்றி..

@ VKS..
உங்களுக்கு வெக்கமாயில்ல...?! )

5. Last Date : MAR 23 , 2.15 PM IST.

6. அதிகமானவர்கள் சமமான Points எடுத்து
இருந்தா Tie Break பதிலை வைத்து Winners-ஐ
முடிவு செய்து Prize பகிர்ந்து அளிக்க படும்.

7. கணிப்பு Comment-போடுவோர்.,
அவர்கள் Mail ID-ஐ அடுத்த Comment-ஆக
கட்டாயம் போட வேண்டும். ( கணிப்பு Comment
மட்டும் Publish செய்யப்படும்.. )

8. இந்தியாவுக்குள் மட்டுமே Prize அனுப்படும்.
வெளிநாட்டில் இருப்பவர் வெற்றி பெற்றால்
அவர் சுட்டிகாட்டும் இந்தியாவில் இருக்கும்
நபருக்கு பரிசு அனுப்படும்.!!

9. ஒரு ID-க்கு ஒரு கணிப்பு மட்டுமே
ஏற்றுக்கொள்ளப்படும். ( ஒரு கணிப்புக்கு
மேல் அனுப்பினால்.. கடைசியாக வரும்
கணிப்பை எடுத்துக்கொள்வோம் )

10. தயவு செய்து ஒருவரே பல ID-ல்
இருந்து கமெண்ட் அனுப்ப வேண்டாம்.

11. Anony Comment & Email குறிப்பிடாத
Comment ஏற்றுக்கொள்ளபடாது.

12. போட்டியில் VAS & VKS சேர்ந்தவர்களும்
கலந்து கொள்ளலாம்.

13. VAS & VKS முடிவே இறுதியானது.

14. இந்த பதிவில் கும்மி Avoid செய்யவும்.
வேறு சந்தேகங்கள் இருப்பின் கேட்கலாம்.

Sample Comment :

1. Pak
2. Ind
3. S.A
4. Sri

5 A . S.A ( 1 vs 3 )
6 A . Ind ( 2 vs 4 )

7 A . Ind

Tie Break : 300
---------------------
5 B. Sri ( 3 vs 4 )
6 B. Ind ( 1 vs 2 )

7 B . Ind

Tie Break : 305
.
.

17 March 2011

டன்டனக்கா டன் *
























டிஸ்கி :
டன் ( Ton ) = 100 Runs
டன்டனக்கா டன் = 200 Runs தானே..?!!
( ஆஹா என்ன ஒரு சிந்தனை..!! )

இது என்னோட 200th Post..!!

என்னோட 100வது பதிவு மாதிரியே
இதுவும் ஒரு FAQ Type பதிவு :

FAQ : ( Frequently Asked Questions )

1. " டோனி என் Friend "-ன்னு சொன்னீங்க..
அப்புறம் சச்சின், A.R.ரஹ்மான், மாதவன்,
ஹரிஹரன்னு உங்க Friend's ரீல் லிஸ்ட்
பெரிசாயிட்டே போகுதே.. இதுல ஒருத்தர் கூட
" வெங்கட் என் Friend-ன்னு " சொல்லலையே..?

" வெங்கட் என் Friend இல்லைன்னு "
யாராச்சும்., எங்கயாச்சும் சொன்னாங்களா..?


2. S.A-வை ஜெயிக்க தோனியும்.,நானும்
ஒரு ரகசிய பிளான் வெச்சி இருக்கோம்னு
பீலா விட்டீங்க..? அப்ப எப்படி S.A ஜெயிச்சது..?

அது ரொம்ப ரகசியமான பிளான்னு
தோனிகிட்ட சொல்லியிருந்தேன்.. அதான்
அவர் டீம்ல மத்த Players-கிட்ட கூட
சொல்லாம ரொம்ப ரகசியமாவே
வெச்சிட்டார் போல.. ஹி., ஹி., ஹி..!!


3. உங்க பதிவு Popular ஆக ரெண்டு மூணு
ஓட்டு கம்மியா இருந்தா.. நீங்களே நைசா
2 கள்ள ஓட்டு போட்டுக்குவீங்களாமே..?
உண்மையா..?!!

ஹி., ஹி., ஹி.!! இதுக்கு பேரு தாங்க
" நமக்கு நாமே திட்டம்.! "


4. நீங்க பாத்து பயப்படும் பதிவர் யாரு..?

வேற யாரு..? எல்லாம் நம்ம
சிரிப்பு போலீஸ் ரமேஷ் தான்..

நேர்ல பாத்தப்ப.." ஐயோ.. பூச்சாண்டின்னு.! "
கத்தி மயக்கமாயிட்டேன்னா பாருங்க.
அவ்ளோ பயம் அவர் மேல..!


5.நீங்க ஏன் சினிமா விமர்சனம் எழுதறது
இல்ல.?

நான் அதிகமா சினிமா பார்க்கறதில்ல..,

எப்பவாச்சும் சினிமா பார்க்கணும்னு
ஆசை வந்தா... விஜய் படத்தை தான்
DVD-ல போட்டு பார்ப்பேன்..

அப்புறம் சினிமா பாக்குற ஆசை போயிடும்..!!


6. விஜய்யை கலாய்ச்சு அடிக்கடி Post
போடறீங்களே.. நீங்க அஜித் ரசிகரா..?

ஒருத்தர் தான் " அரை லூசு "
இல்லன்னு சொன்னா.. அப்ப
அவரு " முழு லூசுன்னு " அர்த்தமா..?!!

நான் விஜய் படத்தை திருட்டு DVD-ல
பார்ப்பேன்.. - அஜித் படத்தை அதுல கூட
பார்க்க மாட்டேன்.. போதுமா..?


7. இப்பல்லாம் உங்க பதிவுக்கு
Indli-ல 30 Votes ஈஸியா வந்துடுது
போல இருக்கே..?

எங்க ஈஸியா வருது..?!

ஒவ்வொருத்தரையும் Chat-லயும்.,
Phone-லயும் விரட்டி பிடிச்சு.,
மிரட்டி கொண்டு வந்து Vote போட
வெக்கறதுக்குள்ள நான் படற கஷ்டம்
இருக்கே.. அப்பப்பா...


8. எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு..?

ஹி., ஹி., ஹி..!!
30 Votes வாங்கற என்னையே இப்படி
திட்றீங்களே..! அப்ப 45 Votes வாங்கற
மங்குனியை என்னா சொல்லி திட்டுவீங்க.?!!

ஐ..! கற்பனை பண்ணி பார்க்கு போதே
சந்தோஷமா இருக்கே..!!


9. VKS-காரங்க Comments பார்த்தா நீங்க
டென்ஷன் ஆயிடுவீங்களாமே.. ஏன்..?

இதெல்லாம் ஒரு கமெண்டான்னு தான்..!


10. பதிவுலக பிரச்சினையில நீங்க அதிகமா
தலையிடறதில்லையே ஏன்..?

ஆரம்பிச்சு வெச்சதுக்கு அப்புறம்
நமக்கு அங்கே என்ன வேலை..?!

( நாராயணா..! நாராயணா..! )


11. உங்க Blog-ல ஏன் Comment Moderation
வெச்சு இருக்கீங்க..?

என்ன பண்றது..? நான் Post போட்டா..,
என்னை பாராட்டி லட்சக் கணக்கான
Comments வந்துட்டே இருக்கு., அதனால
Google Server Jam ஆயிடுதாம்..

அதனால Google-காரங்க நம்ம Blog-ல
Comment Moderation வைக்க சொல்லி
என் கால்ல விழுந்து கெஞ்சுனாங்க..

அதான் வேற வழியில்லாம Moderation
வெச்சு இருக்கேன்.!

( ஹி., ஹி., ஹி..!! அடங்க மாட்டோம்ல.. )


12. உங்க 287 Followers-க்கு எதாவது
அட்வைஸ்..?

இந்த 287 பேருக்கு மட்டுமில்ல..
நம்ம Blog-ஐ சீக்ரெட்டா Follow பண்ற
அந்த 5692 பேருக்குமே சேர்த்து
ஒரு அட்வைஸ்...

" யார் சொல்ற அட்வைஸையும்
கேக்காதீங்க..!! "

( எப்புடி..? )
.
.

14 March 2011

சே.. சச்சின் செஞ்சுரி அடிச்சா இந்தியா தோத்துடுது..!!

அப்படியா..?


( அடப்பாவிகளா..?! கஷ்டப்பட்டு Century அடிச்சா..
எப்படி எல்லாம் கிளப்பி விடறாங்க..?!! )

சச்சின் Oneday Match-ல
இதுவரைக்கும் அடிச்ச Centuries : 49

அதுல 14 times இந்தியா தோத்து இருக்கு..
ஆனா வெறும் 33 times தான் ஜெயிச்சி
இருக்கு..!!

ஒரு மேட்ச் " டை " .
ஒரு மேட்ச் மழைனால Cancel.

( மழை வந்ததுக்கு கூட சச்சின் Century
அடிச்சது தான் காரணமா..? # டவுட்டு..! )

அன்னிக்கு ( 12.3.2011 ) S.A Match-ல
ஒரு கட்டத்துல 267/2 ( 39.3 ) இருந்தோம்..
ஆனா அப்புறம் 29 ரன்னுக்கு 8 Wickets
விழுந்தது.. அதுக்கு என்ன காரணம்.?

அதே மாதிரி

" இந்தியன் ஷேன் வார்னே " பியூஷ் சாவ்லா.,

" லாஸ்ட் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் " நெஹ்ரா.,

" எமோஷனல் ஏகாம்பரம் " ஸ்ரீ சாந்த்.,

" சூப்பர் பாஸ்ட் ஜெட் பீல்டர் " முனாப்..

இவங்கல்லாம் நம்ம டீம்ல இருந்தும்
நாம தோக்குறோமே... என்ன காரணம்..?

அட போங்க...
இதுக்கெல்லாம் காரணம் தேவையா..?
அதான் அன்னிக்கு சச்சின் Century அடிச்சார்ல
எல்லாத்துக்கும் அதையே சொல்லிக்கோங்க..

இது மட்டுமா..?

ஒலிம்பிக்ல இந்திய ஆக்கி டீம் தோத்ததுக்கு.,
சானியா மிர்சா விம்பிள்டன்ல தோத்ததுக்கு.,
உலகபோப்பை Football Match-ல ஜெர்மனி
தோத்ததுக்கு.. இவ்ளோ ஏன்..
ஜப்பான்ல சுனாமி வந்ததே.. அதுக்கு கூட
இவர் Century அடிச்சதுதான் காரணம்..

போதுமா.?!

சச்சின் Century அடிச்சு இந்தியா தோத்து
போன Oneday Matches:

Date           Against     Runs    S/R      Venue   
02-Mar-96    S.L           137    100        Delhi   
05-Apr-96    Pak           100     90.09    Singapore   
28-Aug-96    S.L           110     79.71    Colombo   
22-Apr-98    Aus           143    109.16    Sharjah   
20-Oct-00    S.L            101     72.14    Sharjah   
08-Dec-00    Zim           146     95.42    Jodhpur   
05-Oct-01    S.A           101     78.29    Johannesburg   
16-Mar-04    Pak          141    104.44    Rawalpindi   
12-Apr-05    Pak           123     94.61    Ahmedabad   
06-Feb-06    Pak           100     88.49    Peshawar   
14-Sep-06    W.I           141*   95.27    Kuala Lumpur   
05-Nov-09    Aus          175    124.11    Hyderabad   
12-Mar-11    S.A          111    109.9      Nagpur   
16-Mar -12  Bangds      114    77.55      Dhaka

( * 4 Match தவிர மத்த எல்லா Match-லயும்
Strike Rate Above 90 )

1st Batting-ல அடிச்சது : 33 Centuries ( 11 Lost )
Chasing-ல அடிச்சது : 16 Centuries ( 3 Lost )

இப்படி அவர் 137, 143, 146, 141, 141, 175 Runs
எடுத்தும் நாம தோத்தோம்னா.. அதுக்கு
காரணம் அவர் Century போட்டதா..?

இல்ல

மத்த Players சரியா விளையாடாததா.?

யோசிங்க..!!

Test Match Sachin's Centuries :

No. of Centuries : 51
Won : 20 , Draw : 20 , Lost : 11

இதுக்கு மேலயும் " சச்சின் செஞ்சுரி
அடிச்சா இந்தியா தோத்துடுதுன்னு.. "
யாராவது எனக்கு போன் பண்ணி அழுது...
என் செல்போனை ஈரம் பண்ணினீங்க..

பிச்சிபுடுவேன் பிச்சி..!!


( இனிமே யாராவது தப்பா பேசினா..
இந்த Bat-லயே அடிப்பேன்..!! )

( விடு மச்சி..! " முடிஞ்சவன் சிக்சர் அடிக்கிறான்..
முடியாதவன் லெக்சர் அடிக்கிறான்..!! " )

( Thank God..!! வெங்கட் மாதிரி ஒரு
நல்ல Friend-ஐ எனக்கு குடுத்ததுக்கு..!! )

( நீ வேணா Venkat-கிட்ட ஒரு வாரம்
Batting Practice போயிட்டு வாயேன்...! )

( ஹி., ஹி., ஹி..!! ஒண்ணு வெங்கட்டுக்கு...!! )
.
.

11 March 2011

புரியாத புதிர்..!!























இந்த உலகத்துல எனக்கு புரியாத
ஒரே ஒரு விஷயம் நடந்திருக்கு..!!

( " நடமாடும் என்சைக்ளோபீடியா.,
டான்ஸ் ஆடும் விக்கிபீடியா.. "
உங்களுக்கே தெரியாத ஒரு விஷயமான்னு
நீங்க ஆச்சரியப்படறது எனக்கு தெரியுது... )

என்ன பண்றது..?!
" டைனோசர்க்கும் அடி சறுக்கும்ல..!! "

சரி.. அந்த சந்தேகம் என்னான்னு
பாக்கறதுக்கு முன்னாடி ஒரு
சின்ன Flashback போலாம்...

எல்லோரும் அவங்கவங்க
சீட் பெல்டை நல்லா போட்டுக்கோங்கோ..

அப்ப நான் 10th படிச்சிட்டு இருந்தேன்..

நான் படிச்ச ஸ்கூல் இருக்கே..
அப்பப்பா.. ரொம்ப மோசம்..!!

அதை படிச்சிட்டு வா.!
இதை எழுதிட்டு வான்னு
தினமும் எதாவது சொல்லிட்டே
இருப்பாங்க..

அவங்க சொல்ற எதையுமே நான்
செய்ய மாட்டேன்.. ஆனாலும்
அவங்க திருந்தின பாடு இல்ல.

கிளாஸ்க்கு வெளியே நில்லு.,
இம்போசிஷன் எழுதிட்டு வா.,
உங்கப்பாவை கூட்டிட்டு வான்னு
தினமும் எனக்கு டார்ச்சர் குடுத்திட்டே
இருப்பாங்க..

சே...! இதெல்லாம் ஒரு ஸ்கூலான்னு
இருக்கும் எனக்கு..

பின்ன.,
சரஸ்வதி தேவியோட நேரடி அருள்
பெற்ற எனக்கே இந்த நிலைமைன்னா
VKS மாதிரியான மத்த மக்கு பசங்க
நிலைமையை நினைச்சு பாருங்க..

பாவம்ல..!!

ஒரு வழியா 10th Result-ம் வந்தது..

( என்னாது..? நான் 10th-ல எத்தனை
Mark-ஆ.? அதெல்லாம் இப்ப எதுக்கு..?
அது இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத
மேட்டர் ஆச்சே..!! )

சரி.., அதை தெரிஞ்சிக்க ஆர்வமா
இருக்கறவங்க இங்கே போயி
தெரிஞ்சிக்கோங்க..

( ஹலோ... ஹலோ... எங்கே எல்லாம்
பாதியிலயே ஓடறீங்க..?!
நடு வழியில லிங்க் குடுக்க கூடாதுன்னு
சொல்றது சரியாதான்பா இருக்கு.. )

+1-க்கு வேற நல்ல ஸ்கூலுக்கு
போலாம்னு முடிவு பண்ணிட்டு இருந்தேன்..

திடீர்னு என் வீட்டு முன்னாடி பெரிய க்யூ...

அத்தனையும் SALEM-ல இருக்குற
பெரிய ஸ்கூல் Principals, Correspondents..

அட.. அந்த க்யூல ஒரு வெள்ளக்காரர்
வேற இருந்தாரு.. ( ஆக்ஸ்போர்ட்
யுனிவர்சிட்டி பிரின்சிபாலாம்.! )

என்னை அவங்க யுனிவர்சிட்டியில
படிக்க சேர சொல்லி ஒரே டார்ச்சர்..

" +2 முடிக்காம நான் எப்படிங்க Degree
படிக்க முடியும்னு ஒரு லாஜிக்கான
கேள்வி கேட்டேன் பாருங்க... "

அப்படியே என் I.Q-வ பாத்து
ஆடிபோயிட்டாரு மனுஷன்..

அப்புறம் சுதாரிச்சிட்டு...

" வெங்கட்.. நீங்க யானைப்பால்..
சே.. ஞானப்பால் குடிச்சி வளர்ந்த
நவீன திருஞானசம்பந்தன்.. உங்க அறிவுக்கும்.,
திறமைக்கும் இப்பவே கூட நீங்க Phd
பண்ணலாம்ன்னு " சொன்னாரு..

இது மட்டுமா..? நாசால இருந்து கூட
ரெண்டு மூணு தடவை ராக்கெட்
விடறதை பத்தி சந்தேகம் கேட்டாங்கன்னு..
அதையும் தீர்த்து வெச்சிருக்கேன்..

இப்படி ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரின்சிபால்.,
நாசா விஞ்ஞானிங்க எல்லாம் பாத்து
ஆச்சரியப்பட்ட என் 7வது அறிவுக்கு
புரியாத அந்த ஒரே ஒரு Matter....

" இன்னிக்கு எனக்கு Wedding Anniversary-ங்கறதை
நீங்கல்லாம் எப்படிதான் கண்டுபிடிச்சீங்களோ..?!! "

அதான் எனக்கு விளங்கவேயில்ல..!!
( ஹி., ஹி., ஹி..! )
.
.

08 March 2011

பொண்ணுங்க சொல்ற பேச்சை கேளுங்க..!!















கல்யாணம் ஆனவங்க - அவங்க Wife
சொல்ற பேச்சை கேளுங்க..,

லவ் பண்ற பசங்க - அவங்க லவ்வர்
சொல்ற பேச்சை கேளுங்க..

கல்யாணமும் ஆகல.. லவ்வரும்
இல்லையா..? No Problem..!!

எதிர்வீட்டு பொண்ணு.,
பக்கத்து வீட்டு பொண்ணு..
இப்படி எதாவது ஒரு பொண்ணு
இருக்கும்ல.. அவங்க சொல்ற
பேச்சை கேளுங்க..

ஏன்னா..
பொண்ணுங்க எது சொன்னாலும்.,
செஞ்சாலும் அது கரெக்டா இருக்கும்..!!

( அட., இந்த பொண்ணு ' நியூட்டன் '
கணக்கா இன்னாமா யோசிக்குது..?!! )

நான் சொல்லலே.. பொண்ணுங்க
தொலை நோக்கு பார்வை உடைய
சிறந்த சிந்தனைவாதிகள்னு..

அதனால தான் சொல்றேன்..
பொண்ணுங்க சொல்ற பேச்சை
நாமெல்லாம் கேக்கணும்னு..

" கேக்க மாட்டேன்"னு பிடிவாதம்
பிடிச்சா.. நஷ்டம் நமக்கு மட்டுமில்ல
இந்த உலகத்துக்கே கூட இருக்கலாம்..

அட நானும் அப்படி பிடிவாதமா
இருந்தவன் தான். இந்த SMS வர்ற
வரைக்கும்..

என் அறிவுக்கண்ணை திறந்து வெச்ச
அந்த SMS இதோ...

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்க
கிளம்பும் போது அவருக்கு கல்யாணம்
ஆகியிருந்தா.. அவரோட Wife என்ன
சொல்லி இருப்பாங்க..?!!

" எங்கே போறீங்க..? "

" யாரெல்லாம் உங்க கூட வர்றா..? "

" எப்போ வருவீங்க..? "

" எங்கே தங்குவீங்க..? "

" என்ன கண்டுபிடிக்க போறீங்க..? "

" எப்படி கண்டுபிடிப்பீங்க..? "

" உங்களால முடியுமா.? "

" உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.? "

" நீங்க போயிட்டா.., நான் என்ன பண்ணுவேன்.? "

" என்னை மறந்துட மாட்டீங்கள்ல..? "

" நானும் உங்க கூட வரட்டுமா.? "

கொலம்பஸ் : " ஆணியே புடுங்க வேணாம்..
நான் எங்கேயும் போகல..!! "

இப்ப புரியுதா...? கொலம்பஸ்க்கு
ஒரு Wife இருந்திருந்து., அவரும்
Mrs.கொலம்பஸ் சொல்ற பேச்சை
கேட்டிருந்தா.. இன்னிக்கு..

1. அமெரிக்கா இப்படி எல்லோரையும்
நாட்டாமை பண்ணிட்டு இருக்காது..

2. ஹிரோஷிமா., நாகசாகி அழிஞ்சி
போயிருக்காது.

3. Twin Towers இடிஞ்சி இருக்காது..

4. பொருளாதார நெருக்கடி வந்திருக்காது..

இதை எல்லாம் விட முக்கியமா..

5. எனக்கும்., Bill Gates-க்கும் சண்டையோ
& Ego Problem-மோ வந்தே வந்திருக்காது..!!

ஹி., ஹி., ஹி..!!

என்ன.., நான் கரெக்டா பேசறனா.?!!


ஆங்.. மறந்துட்டேனே..!!

" Wish You Happy Women's Day..!! "

டிஸ்கி : போன வருஷ மகளீர் தின Spl பதிவு
" ஆண்கள் Vs பெண்கள்..! " படிக்க..
.
.

07 March 2011

காலையில 7 மணிக்கு ஒரு போன்..

 















நேத்து காலையில 7 மணிக்கு
என் Friend Mani-க்கு போன்
பண்ணியிருந்தேன்..

" ஹலோ..!! "- ( இது அவன் Wife குரல்.. )

" தங்கச்சி...!! என்னை மன்னிச்சிடுமா..!! "

" ஹா., ஹா., ஹா.. இவ்ளோ நாள் கழிச்சு
இப்பதான் மன்னிப்பு கேக்கணும்னு
தோணிச்சாண்ணா..?!! "

" என்னம்மா இப்படி கேக்குற..?
நான் பீல் பண்ணாத நாள் இல்ல
தெரியுமா.?! "

" ஆமா இப்ப பீல் பண்ணுங்க..!! அப்பவே
ஒரு சின்ன க்ளூ குடுத்திருந்தா கூட
நான் தப்பிச்சு இருந்திருப்பேன்ல..! "

" Correct தான்மா.. ஆனா அன்னிக்கு
இருந்த சூழ்நிலைல என்னால உனக்கு
Help பண்ண முடியல...!! "

( " யாரு போன்ல..? " - இது Mani-ன் குரல்..

" வெங்கட் அண்ணா லைன்ல இருக்காரு.."
- இது Mani's Wife.. )

" அண்ணா.. உங்க Friend வந்துட்டாரு..
அவர்கிட்ட போனை குடுக்கறேன்..!! "

( போன்.. கை மாறுகிறது.. )

" டேய்.. என்னடா சொன்ன அவ கிட்ட..?
என்னை பாத்து கேவலமா சிரிக்கிறா.!! "

" பாவ மன்னிப்பு கேட்டேன்..! "

" அட பாவி... என் Anniversary-க்கு Wish
பண்ற அழகாடா இது..? "

" ஹி., ஹி., ஹி... Different-ஆ பண்ணுவோம்ல..! "

" இரு.. இரு.. March 11 வரட்டும்
அன்னிக்கு உன்னை கவனிச்சுக்கறேன்..! " 


" ஓ...!! அன்னிக்கு நீயும் போன் பண்ணி
என் Wife-கிட்ட ' பாவ மன்னிப்பு ' கேக்க
போறீயா..? அது மட்டும் நடக்காது.. "

" அது எனக்கே தெரியும்..!! "

" எப்படி தெரியும்..? "

" உன் கல்யாணத்துக்கு Help பண்ணின
எனக்கெல்லாம் எங்கடா பாவ மன்னிப்பு
கிடைக்கும்..? Straight-ஆ Encounter தான்..!!
ஹி., ஹி.,ஹி..!! "

" அடப்பாவி..?!!!!!  "

டிஸ்கி : இவர் Birthday-க்கு நான் அனுப்புன
Different-ஆன வாழ்த்தை பார்க்க
இங்கே க்ளிக் பண்ணுங்க..
.
.

03 March 2011

ஆடுகளம்..!! ( கிரிக்கெட் Ground )


( இந்த World Cup நமக்கு தான் )

சுமித் ( S.A ) : டேய்.. அண்ணன் வேற
எந்த Cup-ஐ பார்த்தாலும் இப்படி OFF
ஆனது இல்லடா..

அப்ரிடி ( Pak ) : ஹே.. ஹேய்.. பயமா..?
எனக்கா..? நாங்கல்லாம் சுனாமியிலயே
Sixer அடிக்கிறவிங்க..

ஸ்டிராஸ் ( Eng ) : இம்புட்டு நாளா
பெரிய டீம் கிட்ட தான் தோப்போம்.
இப்ப சப்பை டீம் கிட்டயும் தோக்குறோமே..!!

டேரன் சேமி ( W.Ind ): " Go to your Home " -ன்னு
சொல்லி அசிங்கப் படுத்திட்டாய்கடா மாப்ள..!

கமாண்டே ( Kenya ) : கெளப்பு டா.,
கெளப்பு டா வீட்டுக்கு.., என்சாய்..

பாண்டிங் ( Aus ) : நம்ம பசங்க Bat-ஐ
தூக்கிட்டு Ground-குள்ள போறோம்.,
மள மளன்னு ரன்னை குவிக்கிறோம்.,
Cup-ஐ தூக்கறோம்..

டோனி ( Ind ) : Cup மேல கைய கிய
வெச்சாண்டு வை.., கொன்ன்டே புடுவேன்..

India Rockz....

நான் தான் சொன்னேன்ல..
மத்த டீம் எல்லாம் நம்மள கண்டு
மிரண்டு போயி கெடக்கானுங்கன்னு..

ஹி., ஹி., ஹி..!!

டிஸ்கி 1 :

இந்த SMS-ஐ எனக்கு அனுப்பின
அந்த நல்ல உள்ளத்துக்கு தான்..
( ஹி., ஹி., ஹி..!! )

டிஸ்கி 2 : தனுஷ் நடிச்ச " ஆடுகளம்" படத்துல
கோழி சண்டையை தானே காட்றாங்க..

அப்ப ஏன் " கோழி களம் " னு பெயர்
வைக்காம " ஆடு களம்" னு பெயர் வெச்சு
இருக்காங்க..? # டவுட்டு
.
.